இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. நிலாவும் உண்ணா விரதத்தை கை விட்டிருந்தாள்.
கண்விழித்த நிலாவிடம் “உன் முட்டாள் தனமான முடிவால் உன்னையே! நீ வருத்திக்கொள்கிறாயே! ஒழிய அது என்னை ஒன்றும் செய்யாது. நான் கேட்டது கிடைக்கும்வரை நீ இங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டாய். முட்டாள் தனமாக யோசித்து உயிரை மாய்த்துக்கொள்ள நினைக்காதே! நீ செத்தால் உன்னை பற்றி தேடிப் பார்க்க யாருமில்லை. எனக்கும் கவலை இல்லை. இங்கயே! உன்னை புதைத்து விட்டு என் வேலைகளை பார்த்துக் கொண்டு போய் விடுவேன்” மிகத் தெளிவாக புரிய வைத்திருந்தான் வாணன்.
உண்மைதான் தன்னை போன்ற ஒரு ஏழைப்பெண் காணாமல் போனால் யார் தேடுவார்கள்? ஆசிரமத்தில் இருப்பவர்களும் தன்னை போன்றவர்கள்தான். அவர்களுக்கு அவர்களின் கஷ்டங்களையும், துன்பங்களையும் தீர்க்கவே! நேரம் பத்தவில்லை. இதில் நிலா என்ற ஒருத்தியை பற்றி யோசிப்பார்களா?
பலநாள் பட்டனிக் கிடந்தவள் போல் அகோர பசிவேறு வயிற்றைக் கிள்ளிக்கொண்டே இருக்க, வாணன் வைத்து விட்டு செல்லும் எல்லா உணவுகளையும் மூன்று வேலையும் உண்ட நிலா. கேட்டு வேறு சாப்பிடலானாள்.
“ஆமா அப்பொறம் சாப்பிடக் கொடுக்கலைனு மயங்கி விழுந்துடாத” வாணனும் கிண்டல் செய்தாலும் அறையில் பழங்களை நிரப்பி வைத்து அவள் வயிறு வாடாமல் பார்த்துக்கொண்டான்.
சரியாக சாப்பிடாமல் உடல் மட்டும் சோர்ந்திருக்கவில்லை போலும், மனமும் சோர்ந்து இருந்திருக்கும் ஒழுங்கான உணவு கிடைத்ததால் என்னவோ! நிலாவின் மூளையும் சரியாக செயல்பட ஆரம்பித்தது.
வாணன் அவளிடம் பேசியவைகளை ஓட்டிப் பார்த்ததில் “நீயாக ஒரே ஒரு தடவை வா. அதன் பின் உன்னை விட்டு விடுகிறேன்” என்றானே! வாணன். நிலாவுக்கு என்னமோ! அவன் அவளுக்கு பூஞ்சாண்டி காட்டுவதாக தோன்றியது.
வாணன் நினைத்திருந்தால் அன்று அவளிடம் நடந்து கொண்டது போல் மிருகத்தமாய் நடந்துகொள்ளவும் முடியும், அவளுக்கு கொடுக்கும் உணவில் மயக்க மருந்தோ! அல்லது போதை மருந்தோ! கொடுத்து அவளை அடைந்திருக்கவும் முடியும்.
“அட கொஞ்சம் நல்லவன் தான் போலும் அவன் நல்லவன் என்று நம்பி அவனோடு வாழ்ந்த நாட்களை வீடியோ எடுத்திருந்தாலாவது அதைக் காட்டி மிரட்டிக் கூட இருக்கலாம். அப்படி எதையும் அவன் செய்ய வில்லை. அப்படியாயின் அவன் நோக்கம் என்னை அடைவதல்ல மனதளவில் வீழ்த்த மட்டுமே! நான் சரி என்று இப்பொழுது கூறினாலும் சீ.. போ… என்று துரத்தி விடுவான். ஆம் அவனுக்கு தெரிந்திருக்கு எக்காரணத்தைக் கொண்டும் உண்மையை அறிந்த பின் நான் அவனோடு இருக்க மாட்டேன் என்று. அதனால்தான் இப்படியொரு விஷயத்தை கேட்டிருக்கின்றான். ஹக்.. எப்படி பட்ட வில்லன் இவன்? இவன் மூளையை சரியான முறையில் பாவித்திருந்தால் நிறைய பேர் பயனடைந்திருப்பார்கள்” வாணனை மெச்சியவள். இந்த நொடியிலும் அவனை அவளால் புரிந்துகொள்ள மட்டும் முடியவில்லை.
“அவனை புரிந்துகொண்ட, அறிந்துகொண்டு, தெரிந்துகொண்டு நீ அவனோடு குடும்பம் நடாத்தவா போகிறாய்? சீ… இங்கிருந்து எஸ்கேப் ஆகும் வழியப்பாரு டி..” என்று அவள் மனம் அவளை தூற்ற வாணனின் அலைபேசி அழைப்புக்காக காத்திருக்கலானாள்.
“நிலா அவசரப்படாத… அவன் ஒரு சைக்கோ! நீ அவன் கேட்டதுக்கு சரியென்றால், வேறொன்றை கேட்கக் கூடும், அல்லது அதை நிறைவேற்றக் கூடும், அல்லது நிறைவேற்றியும், நிறைவேற்றாமலும் உன்னை மீண்டும் இங்கே! சிறை வைக்கக் கூடும்” நிலாவின் மூளை எச்சரிக்கை செய்ய,
“ஆ… வாய்ப்பிருக்கு. அவனிடம் சரியாக பேசணும். பொறுமையாக, அவன் என்ன பேசினாலும், நிதானம் தவறாம” தனக்குத் தானே! நிலா உறுதிமொழி எடுத்துக் கொண்டாள்.
வளமை போல் வாணனும் பேசினான். சாப்டியா? என்ன பண்ணுற? என்ற கேள்விகளோடு அலைபேசி தொடர்பை ஏற்படுத்தி இருந்தான்.
நேற்றுவரை நிலா “அதான் கேமரா வழியா பாத்துகிட்டு தானே! இருக்க? எதுக்கு இந்த அக்கறையான கேள்வி? பக்கத்துல யாராவது இருக்காங்களா? நடிக்கிறியா?” என்று எரிந்து விழுவாள்.
ஆனால் இன்றோ! மிகவும் நிதானமாக. “ஆ ஆ… சாப்பிட்டேன். முடிஞ்சா எர்லியா வா.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” தெனாவட்டாக பதில் சொல்ல வாணானின் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன.
என்னதான் நிலா பொறுமையாக பேச வேண்டும் என்று நினைத்தாலும், வாணனிடம் மரியாதையாக பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்றவுமில்லை. அவன் மீதிருந்த வெறுப்பால் வார்த்தைகளும் ஒருமையிலையிலையே! வந்து விழுந்தன.
“என்னாச்சு இவளுக்கு?” என்ற முணுமுணுப்போடு வாணன் அலைபேசியினூடாக நிலா என்ன செய்கிறாள் என்று பார்க்க ஆப்பிளை கொரித்தவாறு டீவி பார்த்துக்கொண்டிருந்தாள். “எதோ! முடிவு பண்ணிட்டா போல” என்றவன் வேலையில் கவனமானான்.
டீவி பார்த்துக்கொண்டிருந்தாலும் நிலாவின் சிந்தனை முழுக்க, வாணனிடம் எவ்வாறு பேச வேண்டும் என்பதில்தான் இருந்தது.
வாணன் ஒரு தடவையாவது அவன் குடும்பத்தை பற்றி கூறி இருக்கவில்லை. ஆனால் அவன் ஒரே ஒரு தடவை அவன் அன்னையை பற்றி அவள் அவன் மீது வைத்திருக்கும் பாசத்தை பற்றி கூறி இருந்தது நிலாவின் நியாபகத்தில் வந்தது.
“அப்போ வாணனின் அப்பா என்ன ஆனார்?”
“இவன மாதிரி ஒருத்தன பெத்ததுக்கு தூக்குல தொங்கி இருப்பாரு” இப்போ அவரை பற்றி யோசிப்பது ரொம்ப முக்கியமா? தன்னையே! கடிந்தவள் வாணனின் அன்னை சென்டிமென்டை வைத்து அவனை எவ்வாறு வீழ்த்தலாம் என்று சிந்திக்கலானாள்.
அவள் கூறியது போல் வாணன் அன்று நேரங் காலத்தோடுதான் குடிலுக்கு வந்திருந்தான்.
“சொல்லு என்ன பேசணும்?” வந்த உடனே! கேட்டான்.
“என்ன அவசரம் டின்னர் சாப்பிட்டுட்டே! பேசலாமே! இன்னக்கி நான் சமைக்கிறேன்” நிலா இன்முகமாக சொல்ல
“சாப்பாட்டுல விஷம் ஏதும் கலக்க திட்டம் போட்டிருக்கியா? ” என்று விட்டு வாணன் சத்தமாக சிரிக்க,
அவனை முறைத்தவள் “ரெண்டு பேரும் ஒன்றாகத்தான் சாப்பிடப் போறோம். நான் வேணும்னா முதல்லயே! எல்லா உணவையும் டேஸ்ட் பண்ணுறேன் அப்போ டவுட் போயிடும்ல”
“ஆனா பேபி சமைக்க சமயலறைக்கு போகணும். வெளிய போற சாக்குல நீ ஓட கூட பார்க்கலாம் இல்ல” வாணன் தாடையை தடவியவாறு யோசிப்பது போல் பாவனை செய்ய
“அதற்காக கால்ல சங்கிலியா போட முடியும்? சாப்பிட்டுட்டு பேசலாம்னு தானே! சொன்னேன்” என்றவள் கையை கட்டிக்கொண்டு அமர்ந்து விட
அவளை ஒரு மார்க்கமாக பார்த்து “ஓகே கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு குளிச்சிட்டு வரேன். என்றவன் குளியலறைக்குள் புகுந்துகொள்ள நிலா அவனுக்காக காத்திருந்தாள்.
சுதந்திரம் கிடைத்தது போல் பதினெட்டு நாட்களுக்கு பிறகு அன்றுதான் நிலா அந்த குடிலை விட்டு வெளியேறினாள்.
நிலா சமைக்கும் பொழுது வாணன் ஒரு இடத்தில் அமர்ந்து அவளையே! பாத்திருக்க, அவனை முறைத்தவாறே சமைக்கலானாள்.
“இப்படி முறைச்சிகிட்டே சமைச்சா… காரமே! போட வேண்டி இருக்காது. சக்கரைக்கு பதிலா உப்ப போடு” என்று ஒவ்வொன்னத்தையும் சொல்ல
“கொஞ்சம் நேரம் அமைதியா இருக்கீங்களா?” கத்தியவள் வாயில் விரலை வைத்து மிரட்ட வாணன் அமைதியானான்.
அவள் கத்தியை கையில் எடுக்கும் ஒவ்வொரு தடவையும் அவன் வலது கை இடுப்பை நோக்கி செல்வதைக் கண்டவள் என்ன என்று கேக்க
இடுப்பில் சொருகி இருந்த துப்பாக்கியை எடுத்துக் காட்டியவன். “சமைக்கிறேன்னு கூட்டிட்டு வந்து என்ன போட்டு தள்ள பிளான் பண்ணிடீன்னா? அதான் எதற்கும் யூஸ் ஆகும்னு கொண்டு வந்தேன்” என்றவன் அதை இடுப்பில் சொருகிக்கொண்டான்.
“அடப்பாவி உன் நம்பிக்கைல தீய வைக்க” நிலா முணுமுணுப்போடு சமையலை முடிக்க எல்லாவற்றையும் சுமந்துகொண்டு கல்பெஞ்சில் கொண்டு போய் வைத்து நிலவொளியில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்கள்.
நிலாவுக்கு உணவை பரிமாறியவாறே “சொல்லு என்ன பேச வேண்டும்?” என்று வாணன் ஆரம்பிக்க
“இவன் கண்ணு முன்னால தானே! சமைச்சேன். அதுவும் சந்தேகம் போகல விஷம் வச்சிருப்பேனோன்னு எனக்கு முதல்ல பரிமாறுறான்” என்று வாணனை திட்டியவள் அவன் கேட்ட கேள்விக்கு பதிலாக “கேக்குறான் பாரு கேள்வி பதில் என்னனு தெரிஞ்சிகிட்டே. லூசு” கண்டமேனிக்கு அவனை வசைபாட
“இதெல்லாம் ஓவர் பா…” என்று முணுமுணுக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டது. இவ்வளவு நேரமும் டீவி பார்த்துக்கொண்டே! கனவு கண்டேனா? தலையில் அடித்துக் கொண்டவள் வாணன் உள்ளே! வரவும் “சாப்பிட்டுட்டே! பேசலாம்” என்று விட
அவனும் “ஓகே” என்று வெளியே இருந்து வாங்கி வந்திருந்ததை அவள் கையில் கொடுக்க சப்பென்றானது அவளுக்கு.
“நீ பேசுறத கேட்டு அவன் உன்ன இங்கிருந்து அனுப்ப போறான். உன் கையாள கடைசியா அவனுக்குத்தான் சாப்பிட கொடுத்து வைக்கல நிலா” என்றது அவள் மனம். தான் என்ன நினைக்கின்றோம் என்று கூட உணராமல் மனம் சுணங்கினாள் நிலா.
வாணன் குளித்து விட்டு வரும் பொழுது நிலா சாப்பிடுவதற்காக எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தாள். தலையை துவட்டியவாறு அதையும் ஆராய்ச்சியாகத்தான் பார்த்தான் வாணன்.
உண்மை தெரிந்த பின் உண்ணா விரத போராட்டம். உண்ண ஆரம்பித்த பின் ஒரு நாளாவது வாணன் உண்டானா? என்று கேட்டதில்லை. அவளோடு சேர்ந்து சாப்பிடலாம் என்று வந்தாலும் அவள் சாப்பிட்டு விட்டு டிவியின் முன் அமர்ந்து விடுவாள். அவன் இருமினால் கூட திரும்பியும் பார்க்கமாட்டாள். பழைய நிலாவாக இருந்தால் தலையை தட்டி தண்ணீரை புகட்டியும் இருப்பாள் என்று வாணன் பெருமூச்சு விட்டுக்கொள்வான்.
இன்று அதிசயத்திலும் அதிசயம் எல்லாவற்றையும் எடுத்து வைத்து அவனுக்காக காத்துக்கொண்டு வேறு நிற்கின்றாள். “மழை சோவென கொட்டப் போகிறது” தனக்குள் சொல்லிக்கொண்டவன் டவலை இருக்கையில் போட்டு விட்டு “வெளில போய் சாப்பிடலாம் வா” என்று அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு செல்ல நிலாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
நிலாவும் சிலவற்றை சுமந்துக்கொண்டு வந்தமர்ந்து பறிமாற வாணன் அமைதியாக உண்ணலானான்.
“வாயத் தொறந்து கேக்குறானான்னு பாரு. சரியான கல்லூளிமங்கன்” அதற்கும் அவனை திட்டியவள் முறைத்தவாறே சாப்பிட, எதுவாக இருந்தாலும் அவளே! சொல்லட்டும் என்று நினைத்த வாணன் நிலாவை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
நிலாவும் சாப்பிட்டு முடிக்கும்வரை எதுவும் பேசவில்லை. அமைதியாக சாப்பிட்டவள் எல்லாவற்றையும் ஒதுங்க வைக்க வாணன் அவளுக்கு உதவாமல் கையை கட்டிக்கொண்டு பாத்திருந்தான்.
நிலா பொறுமையாக எல்லா வேலையையும் செய்து முடித்து விட்டு மீண்டும் கல்பெஞ்சில் வந்தமர்ந்தவள் நேராக விசயத்துக்கு வராமல் “வாணன் உங்க அம்மா? அப்பா? எங்க இருக்காங்க?” என்று கேட்டாள்.
திடுமென நிலா கேட்டதில் அதிர்ந்தவன் நொடியில் சுதாரித்து கோபமாக “இப்போ எதற்கு என் பேரன்ட்ஸ் பத்தி கேக்குற?” என்று கடித்துத் துப்ப
“நீங்க அன்னக்கி கேட்டதுக்கு நான் பதில் சொல்லனும்னா இப்போ நான் கேக்குற கேள்விக்கும் நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும். இல்லையா? போய் தூங்குங்க, எப்போ பதில் சொல்ல தோணுதோ! அப்போ பேசலாம்” என்றவள் அவனை தீர்க்கமாக பார்க்க
அவள் அமர்ந்திருந்த விதம் அவனை யோசனைக்குள்ளாக்க “ஒரு முடிவோடுதான் இருக்க போல” என்றவன் “அப்பா உயிரோடல இல்ல. அம்மா உன் கூட பேசுற நிலைமையிலும் இல்ல” என்றவன் கசந்த புன்னகையை சிந்தினான்.
“எதுக்கு இப்போ இந்த கேள்வியை கேக்குற?” பல்லைக் கடித்தான் வாணன்.
“இந்த கேள்வியை சாப்பாடுக்கு அப்பொறம் கேக்கணும்னு வேண்டுதல் பாருங்க” நக்கலாக பதில் சொன்னவள் “நீ பதில் சொல்லித்தான் ஆகணும்” எனும் விதமாக அவனை முறைக்க
“உனக்கு உன் அம்மாவ எவ்வளவு பிடிக்குமோ! அதைவிட எனக்கு என் அம்மாவ பிடிக்கும்” நிலாவுக்கு குட்டு வைக்க வேண்டியே! வாணன் அவ்வாறு சொல்லி இருக்க நிலாவின் முகத்தில் வெற்றிப் புன்னகை.
“இப்போ எதுக்கு இவ லூசு மாதிரி சிரிக்கிறா?” என்று வாணன் யோசிக்கையில் “இது போதும் வாணன். நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்ல தயார். கேக்க நீங்க தயாரா?” என்று நிமிர்ந்து அமர்ந்தாள் நிலா.
“அம்மா பாசத்துக்கும், இவ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்கும் என்ன சம்பந்தம்” என்று நொடியில் குழம்பிய வாணனுக்கு சட்டென்று ஒன்றும் புரியவில்லை. அவனை யோசிக்க நிலா இடமளிக்காமல் தொடர்ந்து பேசினாள்.
“உங்க கூட நானா வந்து ஒரே ஒரு தடவ படுத்தா என்ன வெளிய விடுறதா சொன்னீங்கள்ள, உங்க அம்மா மேல சத்தியம் பண்ணிக் கொடுங்க. நான் வந்தா உங்க அம்மா மேல சத்தியமா என்ன விட்டுடறதா சத்தியம் பண்ணி கொடுங்க. நான் வரேன்” என்றவள் வாணனின் முகம் பார்க்க சத்தமாக சிரிக்கலானான் வாணன்.
சத்தியம் பண்ணிக் கொடுத்து விட்டு அதை மீற எவ்வளவு நேரமாகும். என்ன சிறுபிள்ளை தனம் இது. இவ்வளவு முட்டாளா நீ? வயித்தை பிடித்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தவன், நிலாவை கைகாட்டி வேறு சிரித்து வெறுப்பேத்த நிலா அசையாது அமர்ந்திருக்க, அவள் அமர்ந்திருந்த தோரணை வாணனுக்கு அவள் சத்தியத்தை மட்டும் நம்பி இல்லை என்று புரிய சட்டென்று சிரிப்பதை நிறுத்தியவன்.
“அப்போ நான் சத்தியத்தை மீறினா, அடுத்து நீ எதோ! திட்டம் வச்சிருக்க, அது?” என்று யோசனையாக நிலாவின் முகம் பார்த்தான் வாணன்.
“சிம்பல். தற்கொலை பண்ணிக்கொள்வேன். எனக்குதான் யாருமில்லையே! வாணன். நீங்க சொன்ன மாதிரி யாரும் என்ன தேடி வரவும் மாட்டாங்க” என்றவள் புன்னகைக்க,
இப்பொழுது சத்தமாக சிரிப்பது நிலாவின் முறையானது. “என்ன வாணன் சின்ன புள்ள மாதிரி பேசுறீங்க? நகரத்துல இருந்து இவ்வளவு தூரத்துல இருக்கு இந்த குடில். என்ன இருபத்தி நாலு மணிநேரமும் உங்களால கண்காணிக்கவும் முடியாது. நீங்க வர்ரதுக்குள்ள நான் பரலோகம் போய் சேர்ந்துடுவேன். அப்படியே என்ன உங்க கூட கூட்டிகிட்டு சுத்த நினைச்சீங்கன்னா நான் ஈஸியா தப்பிச்சு போய்ட மாட்டேன். இல்ல சத்தியத்தை மீறி என்ன ஒவ்வரு தடவையும் காப்பாத்திடலாம்னு முட்டாள் தனமான முடிவு எடுக்காதீங்க, ஏன்னா சாக துணிஞ்சிட்டா தற்கொலைக்கு முயற்சி செய்றத விட மாட்டேன். என்னைக்கோ! அதுல வெற்றியும் பெறுவேன். அப்பொறம் அம்மாமேல சத்தியம் பண்ணிட்டோமே! அத மீறிட்டோமே! என்ற கில்டில நீங்கதான் தினம் தினம் சாக வேண்டி இருக்கும் சோ யோசிக்க வேண்டியது நான் இல்ல. நீங்கதான்” என்று வாணனையே! லாக் செய்ய, அவளை மெச்சுதலாக பார்த்தான் வாணன்.
“சரி வா பெட்ரூம்முக்கு போலாம். பனி வேற கொட்டுது” என்றவாறு வாணன் நிலாவின் கையை பிடிக்க நிலா அசையாது நின்றாள்.
அவள் சும்மா போட்டு பார்க்கின்றாளோ! என்றுதான் வாணன் அவள் கையை பிடித்தான். அவள் நொடி முக மாறுதல் கூட அவனுக்கு சாதகமாக அமைந்திருந்திருக்கும்.
ஆனால் நிலாதான் வாணனை இந்த விஷயத்தில் சரியாக படித்திருந்தாளே! கையை உதறியவள் “முதல்ல போய் உங்க அம்மா போட்டோ எடுத்துட்டு வாங்க, போட்டோவை வச்சி சத்தியம் பண்ணி கொடுங்க நான் வரேன். எங்கயும் ஓடிப்போய்ட மாட்டேன். அதான் பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டோமே!” தெனாவட்டாகவே! பதில் சொல்ல
அவன் கேட்பதை கொடுக்க தயாராகி விட்டாள். இதற்கு மேலும் இவளை அடைத்து வைக்க முடியுமா? இவள் அம்மா உயிரோடு இருந்தாலாவது மிரட்டி வைத்திருக்கலாம். காரணமே! இல்லாமல் அடைத்து வைத்தாலும் இவள் சொல்வது போல் தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுதான் இருப்பாள். என்ன செய்வது என்று யோசித்த வாணன். பொழச்சி போகட்டும் என்று எண்ணியவனாக,
“ஒன்னும் தேவ இல்ல. நீ போலாம். உன்ன விட்டுடுறேன்” வானத்தை பார்த்தவாறு வாணன் சொல்ல நிலாவின் உதட்டோரோம் குறும் புன்னகை மலர்ந்தது. இதை தானே! அவள் எதிர் பார்த்தாள்.
நொடியும் தாமதிக்காமல் “ஓகே. அது உங்க இஷ்டம். அப்போ நான் கிளம்புறேன்” என்றவள் கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். எங்கே வாணன் “தாலியை கழட்டிக் கொடுத்து விட்டு போ” என்று கூறுவானோ! என்ற அச்சம் வேறு இதயத்தை கசக்கிப் பிழிய தாலியை இருக்க பற்றிப் பிடித்துக் கொண்டாள்.
ஆனால் அந்த சிந்தனையெல்லாம் வாணனுக்கு தோன்றவே! இல்லை. “ஏய் நில்லு… இந்த நேரத்துல எங்க போற? மணி பத்தாக போகுது. மெய்ன் ரோட்டுக்கு எவ்வளவு தூரம் நடக்கணும்? இந்த நேரத்துல பஸ் கிடைக்கிறது வேற கஷ்டம். நைட் இங்க இரு நானே! காலைல கொண்டு போய் விடுறேன்” வழி மறித்து வாணன் பேச
“எதுக்கு உங்க மனசு மாறி மீண்டும் அடச்சீ வைக்க வா? ஒன்னும் வேணாம் நான் பாத்துக்கிறேன்” என்றவள் அவனை சுத்திக்கொண்டு போக
“சரி பஸ்ஸுக்காவது கைல காசு வச்சிருக்கியா? மாத்து துணி கூட எடுக்கல” எதற்காக கேட்கின்றோம் என்று உணராமலையே! கேட்டிருந்தான் வாணன்.
நிலாவுக்கு மாத்து துணி கூட பிரச்சினையில்லை. ஆசிரமத்தில் அவள் துணிகள் இருக்கும். இல்லையென்றாலும் யாராவது கொடுப்பார்கள். பஸ்ஸுக்கு காசுதான் என்று மனத்துக்குள்ள அலசி திணறியவளின் முக பாவனையை படித்தவன் பேர்ஸை திறந்து சில்லறையாகவே! கொடுக்க அதை எடுத்துக்கொண்டு விறு விறுவென நடக்கலானாள்.
“சரியான திமிரு புடிச்சவ. எக்கேடு கேட்டும் தொலையட்டும்” அறைக்கு வந்து கதவை அறைந்து சாத்தினான் வாணன். கட்டிலில் தொப்பென்று விழுந்தவனுக்கு அந்த குடிலில் இருக்க மனமே! இல்லை. நிலா என்ற ஒருத்தி இருக்கும்வரை அவள் வாசனை நிறைந்திருந்த அந்த குடில் அவள் சென்ற நொடி வெறுமையாக உணர தலையை உலுக்கிக் கொண்டவன் தூங்க முயற்சிக்க தூக்கம்தான் வருமா என்றது.
நிலா வேக வேகமாக அந்த கற்கள் நிறைந்த பாதையில் நடந்துகொண்டிருந்தாள். கண்களில் கண்ணீர் நிறக்காமல் ஆறாக பெருகிக் கொண்டிருந்தது. ஏன் அழுகிறோம்? எதற்காக அழுகிறோம்? என்று கூட புரியாமல் கதறி அழுதவாறு நடந்தவள் தூரத்தில் வண்டி வரும் வெளிச்சம் தெரிய கண்களை அவசரமாக துடைத்துக்கொண்டாள். இந்நேரத்தில் இந்த பக்கம் வண்டி எதுவும் வருமா? அதுவும் இந்தப் பாதையில் என்று சந்தேகமாகவே! பார்க்க அருகில் வந்து நின்றது அந்த வண்டி.
கதவை திறந்துகொண்டு இறங்கிய ஜெகன் “எங்க மேடம் போறீங்க முதல்ல வண்டில ஏறுங்க” என்று சொல்ல
“ஓஹ்… அனுப்புற மாதிரி அனுப்பிட்டு அவனோட அல்லக்கைய வர சொல்லி இருக்கானா?” வெறுப்பாக பார்த்தவள் வண்டியை தாண்டி நடக்க முற்படுக்கையில் பின்னாடி கதவை திறந்துட் கொண்டு இறங்கினாள் அவள். வாணனுக்கு பெண் வேடமிட்டது போல் இருந்தாள்.
“உன்னை பழிவாங்கத்தான் இதையெல்லாம் செய்தேன்” என்று வாணன் சொன்னது நியாபகத்தில் வரவே! அடுத்த ரவுண்டா” என்று அதிர்ச்சியில் நிலா மயங்கி சரிந்தாள்.
மனசு கேக்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு நிலாவை தேடி வந்தான் துகிலவாணன் மௌரி.