அவனின்நம்பிக்கையைகாப்பாற்றதந்தைக்குஆவல்தான். ஆனாபலராம்? “சரிஉங்களுக்காகமட்டும் பேசி பார்க்கிறேன். ஆனா அவர் ஓர் அளவுக்கு மேல் கிராக்கி பண்ணா என் லைனுக்கு தான் நீங்க வரணும். பார்த்துக்கோங்க” என்றுஒத்துக்கொண்டுமகனுடன்கிளம்பினார்.
“சார்.. ஒளிச்சுமறைச்சுபேசமுடியாது. உங்கபொண்ணுக்குஇந்தபையன்மேலஇஷ்டம்ன்னு தெரிஞ்சு தான் நாங்க வேறு வழி இல்லாமல் இந்த மீட்டிங்குக்கு ஒத்துக்கிட்டோம்” என்றார் MP.
உண்மையை சொல்ல போனால் MPக்கு கடுப்பு. பெண்ணுக்கு அந்த பையன் மேல் விருப்பம் என்பதை இதுவரை பெற்றவர் சொல்லவே இல்லை. அஜய் மூலம் தெரிய வந்தது. இல்லையென்றால் இவரை நம்பி சேனாதிபதி போன்று ஆட்களிடம் என்னவென்று பஞ்சாயத்து பண்ணுவது?