பலராம் அவனை கண்களை சுருக்கி பார்க்க, ஜீவிதா அதிர்ந்து பார்த்தாள்.

எனக்கு தெரியும் தாரணி விஷயத்துல உங்களுக்கு என்மேல கோவம்ன்னு. அது சரியும் கூடஎன்றவனை பலராம் சந்தேகமாக பார்த்தார்.

ஜீவிதாவிற்காக இப்படி சொல்கிறானா?

அஜய் அதை புரிந்து மறுப்பாய் தலையசைத்தவன், “நான் சொல்றது இத்தனை வருஷ அனுபவத்துல உணர்ந்து சொல்றது அங்கிள். தாரணி மேல.. உங்க பொண்ணு மேல உங்களுக்கு இல்லாத உரிமை எனக்கு கிடையாது. ஆனாலும்  நான் அவளுக்காக சில விஷயங்களை செஞ்சேன். அது மறுக்கவே முடியாத தப்புன்னு அப்போ விட இப்போ இன்னும் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்என்றான்.

கூடவே வளர்த்ததுனால அவ ஏதோ என்னோட பொறுப்புங்கிற  எண்ணம். ப்ரெண்ட். நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணாம வேற யார் சப்போர்ட் பண்ணுவாங்கிறது கூட

இப்போவும், இனியும் அப்படி ஒரு சூழ்நிலை வந்தா அவளுக்காக நான் நிப்பேன் தான். ஆனா அன்னைக்கு மாதிரி இல்லை. உங்களை கஷ்டபடுத்திகிட்டு இல்லை

தாரணிக்கு இவர் தான் வேணும்ன்னா உங்களோட சம்மதம் கிடைக்கிற வரை காத்திருந்து கை பிடிச்சுக்கோன்னு தான் சொல்லியிருப்பேன். அதை முன்ன பண்ணலை. ஆனா இன்னைக்கு பண்ணலாம்.”

ஜீவிதாக்கு நான் வேணும்ன்னா உங்க முழு சம்மதத்தோட வரட்டும். நான் காத்திருப்பேன். அது எத்தனை வருஷம் ஆனாலும்என்றுவிட, ஜீவிதா கண்கள் பெரிதாக விரிந்து கொண்டது.

அஜய் அவளை அழுத்தமாக பார்த்தவன், “என்ன சரி தானே?” என்று கேட்க, அவள் வேகமாக இல்லை என்று தலையசைத்தாள்.

இவனோ. “ஆமா தான்என்றவன், பலராமிடம் வந்தான்.

முதல்ல இருந்தே உங்களுக்கு என்மேல நம்பிக்கை அதிகம், அது எனக்கும் தெரியும். ஆனாலும் என்னால உங்களுக்கு துணை நிக்க முடியல. இனி அந்த வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் சந்தோஷ படுவேன்

ஜீவிதாக்காக நான் இதை சொல்லலை. நான் கத்துகிட்ட பாடம் என்னை சொல்ல வைக்குதுஎன்றவன், “உடம்பை பார்த்துக்கோங்க. ஏதா இருந்தாலும் போன் பண்ணுங்க. நான் ஏத்துப்பேன்என்றவன் வெளியே வந்துவிட்டான்.

சங்கர் மகனை கேள்வியாக பார்க்க, சகுந்தலா வந்தவர் உள்ளே நடந்ததை கணவருக்கு சொன்னார்.

நல்லதுஎன்று முடித்து கொண்டார் சங்கர்.

அவருக்கு ஜீவிதா மருமகளா வேண்டும், வேண்டாம் என்பது எல்லாம் இல்லை. பலராமின் இரு பெண்களும் அவரை கஷ்டப்படுத்துவது அவருக்கு பிடிக்கவில்லை. வருத்தமே.

உடனே மருத்துவமனையில் இருந்து கிளம்பாமல் பலராமை அன்றே வீடு கிளம்பிய சொல்லியபின் தான் இவர்களும் கிளம்பினர்.

அஜய் தனியே ஜீவிதாவிடம் சொல்லி கொள்ள, அவளோநீங்க வேணும்ன்னே தான் என்னை அப்பாகிட்ட சிக்க வைச்சிருக்கீங்க. உங்களுக்கு என்மேல அந்த மாதிரி விருப்பம் இல்லை அஜு. அதான்என்று குற்றம் சாட்டி விசும்பல்.

அஜய் கை கட்டி அவளை அமைதியாக பார்த்திருக்க, “என்ன?” என்றாள் கண்கள் துடைத்தபடி.

அதெப்படி உனக்கும், உன் அக்காக்கும் கடைசி நேரத்துல தான் கழுத்தை பிடிக்க தோணுமா?” என்று கடினமாக கேட்க, ஜீவிதா திகைத்து நின்றுவிட்டாள்.

அஜுஎன்றாள் வலியுடன். அஜய்க்கு அவளின் கண்ணீர் உறுத்த, தலை கோதி கொண்டான்

அக்கா எனக்கு தெரியல அஜு. அந்த டைம்ல நான் அப்பா பத்தி பெருசா யோசிக்கல தான். ஒத்துகிறேன். ஆனா. ஆனா இப்போ நான் அப்படி இல்லை அஜு. அவரை கஷ்டப்படுத்திட்டு பண்ணனும்ன்னு நான் நினைக்கலை. அங்க. கடலூர்ல திடீர்ன்னு பொண்ணு பார்க்க வராங்கன்னு தான் நான் உங்களுக்கு என்னை சொன்னேன்

பொண்ணு பார்க்க இல்லை மாப்பிள்ளை பார்க்க தான் அவங்க வந்ததுஅஜய் சொல்ல,

ஏதோ ஒன்னு ஏன் என்னை அப்படி கேட்ட?” ஜீவிதா ரோஷமாக கேட்டாள்.

அஜய் அவளை கொட்ட கை ஓங்கி முறைக்க, “நீங்க என்னை சொன்னது விட, மரியாதை கொடுக்காதது ஒன்னும் பெரிய தப்பில்லைஎன்றாள் இன்னும் இன்னும் பெருகும் கண்ணீரில்.

அஜய் கை இறக்கி அவள் கை பிடித்து தட்டி கொடுத்தவன், “அப்பா.. அவர் நம்மோட இல்லைங்கிற நிலை வரும் போது  நம்ம உடம்போடு சேர்ந்து நம்ம உயிரும் அடங்கி துடிக்கும். அதை என் அப்பா விஷயத்துல நான் பட்டிருக்கேன். உயிர் அடங்குற அந்த ஒரு செகண்ட் போதும் அப்பான்னா நமக்கு யாருன்னு சொல்றதுக்கு. என்னால அவரை கஷ்டப்படுத்த முடியாது. நீயும் படுத்தாதஎன்றான்

அப்புறம் நீ சொன்ன அந்த மாதிரி விருப்பம் எனக்கு உன்மேல இல்லை தான். இனி எப்படின்னு எனக்கு ஐடியா இல்லை. ஆனாலும் எனக்கு யோசிக்கவே நேரம் கிடைக்காமல் நம்ம இரண்டு பேரோட பேரும் ஒன்னு சேர்ந்திருச்சு

அது தான் உங்களுக்கு கோவம்ன்னு எனக்கு தெரியும்என்றாள் பெண்.

இப்போ நீ என்ன சொல்ல வர?” அஜய் கூர்மையாக கேட்க,

நீங்க யோசிச்சு எனக்கு நோ சொல்ல பிளான் பண்ணது,  இனி பண்ண முடியாது இல்லை

ஏன் பண்ண முடியாது. நான் நோ சொன்னா உன் அப்பா டேன்ஸே ஆடுவார் பார்க்கிறியா?”

அப்போ அவருக்காக எனக்கு நோ சொல்ல போறீங்களா?” அதிர்ந்து கேட்டாள் ஜீவிதா.

ஹாஹா.. சொல்லலாம் தானே?” என்றான் சிரித்து.

ஜீவிதாவிற்கு அப்படி ஒரு கோவம், ரோஷமும் சீறி கொண்டு வர, “நோ சொல்லிக்கோங்க. போங்க. நான் ஒன்னும் உங்கஎஸ்க்காக ஏங்கிட்டு இல்லைஎன்று வெடித்தாள்.

நீ ஏன் ஏங்க போற? நான் உன்னை நினைச்சு ஏங்கணும்ங்கிறது தானே உன்னோட  ஆசைஎன,

இது கொஞ்சம் உண்மை தான்என்றாள் உடனே.

நிஜமாவே உன்னை கொட்ட கை பரபரக்குதுஅஜய் பல்லை கடித்து சொன்னான்.

நீங்க கொட்டி கொட்டி தான் நான் வளரவே இல்லைஜீவிதா உர்ரென்று சொல்ல.

அடேங்கப்பா இல்லன்னா மட்டும் ஆறடி வளர்ந்திருப்ப, என்ன கதை அடிக்கிறஎன்றவன், அவளை முழுதும் அளந்து,  “போதும் இந்த ஹைட்டேஎன்றான்

உங்க நெஞ்சுக்கு தான் இருக்கேன். உங்க ஷோல்டருக்கு இருந்தா நல்லா இருந்திருக்கும் அஜுஎன்றாள் கண்களை சுருக்கி.

என்ன நடந்துட்டிருக்கு. உனக்கு இந்த கவலை தேவை தானாஎன்று அவள் தலை பிடித்து ஆட்டினான்.

அதெல்லாம் நான் அப்பாவை எஸ் சொல்ல வைச்சிருவேன்என்றாள் பெண்.

எப்படி சாப்பிடாம. பேசாமவா?”

வேறெப்படி பண்ணனும்என்று தெரியாமல் கேட்டாள்.

ஆமா அஜய் அவ்வளவு கெட்டவன் தானே. அவனை பத்தி நல்ல விதமா சொல்லி எஸ் வாங்க முடியாது தான்என்றான் நக்கலாக.

ஏன் அப்படி சொல்றீங்க அஜு. நீங்க டூ குட் தெரியுமா?”

க்கும். இதை உன் அப்பா சொல்லணும். அவரை பொறுத்தவரை நான் டூ பேட்

நானும், அக்காவும் பண்ணதுக்கு அவர் உங்கமேல கோவப்படுறது நியாயமே இல்லை

அதென்னமோ உண்மை தான். இப்படி ஒரு அக்கா, தங்கச்சிகிட்ட நான் மாட்டிகிட்டு படுற பாடு அவருக்கு எங்க புரியுது?” என்றான் பெரு மூச்சுடன்

அஜு

என்ன அஜு. உண்மை தானே?”

கொஞ்சூண்டு உண்மை தான். விடுங்க. நான் இந்த முறை அப்படி எல்லாம் பண்ணாம அப்பாகிட்ட பொறுமையா பேசுறேன்என்றாள்.

அஜய்க்கு திருப்தி. “பேசு. உன் மனசை சொல்லு. அவசர படுத்த எல்லாம் ஒன்னுமில்லை. பார்த்துக்கலாம்என்றான்.

அஜு..  அங்கிள் என்கிட்ட பேசவே இல்லை. அவருக்கு பிடிக்கலையா?” என்று சங்கரை கேட்டாள்.

அவருக்கு பிடிக்கலைன்னா என்கிட்ட சொல்லியிருப்பார். வருத்தம் இருக்கும்என்றான்.

ம்ம்என்ற பெண்ணுக்கு அவன் கிளம்பி விடுவானே என்றிருந்தது.

நான் கிளம்புறேன்என்றான் அஜயும்.

ஜீவிதா முகம் வாடி போக, “இன்னமும் எனக்கு ஆச்சரியம் தான். நம்ப முடியலஎன்றான்.

பெண் கேள்வியாக பார்க்க, “என் அஜு தான்என்றான்.

முறைக்காத. எப்படி உனக்குள்ள இந்த மாதிரி எண்ணம் எல்லாம், அப்படியா நாம இருந்தோம்ன்னு இருக்கு” 

இதுக்கு நான் என்ன சொல்லணும்ன்னு எதிர்பார்க்கிறீங்க. நான் மோசமா பொண்ணுன்னா?” என்று கேட்டாள்.

கொஞ்சம் பேட் பொண்ணு தான். கோவப்பட்டா பட்டுக்கோ. போஎன்றுவிட்டவன், “ஒருவேளை எனக்கு இந்த விருப்பம் எல்லாம் வரலைன்னா என்ன பண்ணுவ?” என்றும் கேட்டான்.

ம்ஹ்ம். கடைசி வரை நீங்க சிங்கிளாவே சுத்த வேண்டியது தான்என்றாள்.

மிரட்டல் போல இருக்கே

நீங்க மிங்கிள் ஆகணும்ன்னா அது என்னோட மட்டும் தான், மனசுல வைச்சுக்கோங்க” 

வைச்சுக்கிறேன் வைச்சுக்கிறேன்” 

அஜு வைச்சுக்க கேட்கலை நான். கட்டிக்க தான்” 

பேச்சு, பழக்கம் எல்லாம் ரொம்ப மாறியிருக்குஎன்றான் கண்டிப்புடன்.

நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட். டாமினன்ட் அஜு தான். மாறவே மாட்டிங்களா?” என்று கேட்டாள்.

அப்புறம் என்ன என் அஜு. பிடிச்சது எல்லாம். இப்படி தானே நான். என்ன புதுசா மாறனும்ன்னு கேட்கிற

தெரியாம கேட்டுட்டேன். நீங்க இப்படியே என்னை விரட்டிட்டே இருங்க. குடும்பம் கலகலன்னு இருக்கும்என்றாள் இப்போதே கவலையாக.

ஆட்டக்காரி நீ தான் என் குழந்தைகளுக்கு அம்மான்றதுக்கு நான் தான் நெஞ்சை பிடிக்கணும். உனக்கென்ன கவலைஎன்றான் அஜய்.

அஜுஎன்றாள் பெண் உர்ரென்றுதித்திப்பும்  தான்.

கிளம்புறேன். நீ என்னை விடுற ஐடியாவிலே இல்லைன்னு தெரியுதுஎன்றான்.

அஜு. இன்னும் கொஞ்ச நேரம்என்றாள் பெண் கெஞ்சுதலாக.  

அப்பாம்மா வெய்ட் பண்றாங்க. பிடிவாதத்தை விட்டு அவர்கிட்ட பேசுஎன்று கிளம்பினான் அவன்.