முகம் சிவக்க அஜயை அவ்வளவு கோவமாக பார்த்தாள் ஜீவிதா. “இனி இப்படி பேசாத அஜு” என்றாள் மிரட்டலாக.
“என்ன பேசாத? நீ இன்னும் சின்ன பிள்ளை இல்லை. வளர கத்துக்கோ. நான் உன்கூடவே இருக்க முடியுமா? இப்போ கிளம்பினா திரும்ப நான் எப்போ உன்னை பார்ப்பேன்னு கூட சொல்ல முடியாது. தாரணியும் கல்யாண் வீட்டுக்கு வீட்டுக்கு போயிட்டா நான் உங்க வீட்டுக்கு வரவும் என்ன இருக்கு சொல்லு. இதை எல்லாம் நீயே சமாளிக்க கத்துக்கோன்னா என்னை கேட்டுகிட்டு இருக்க” அஜய் பேசி கொண்டிருக்க,
ஜீவிதா கண்களில் இருந்து கண்ணீர் இறங்க ஆரம்பித்தது. “ஹேய்” அஜய் அதிர, பெண் அதற்கு மேல் அங்கு, அவனிடம் நிற்கவே இல்லை.நடையேஓட்டமாகஓடிவிட்டாள்.