தூரல் – 11
வென்பஞ்சு மேகமென மிதந்து வந்த பெண்ணே,
காற்றாய் உன்னில் கலந்திட வந்தேன்;
ஏனோ பாலாய் போன காற்றாய் பிறந்ததால்,
கலக்காது கலைத்து செல்வதே நான் ஆனேனே!!
“ஹலோ… ம்ம் சொல்லுங்க சார்…. இன்னும் ஒரு ஒன் ஹவர்வல கிளம்பி வரேன் சார். நான் நீங்க சொல்ற இடத்துக்கே வரேன்… ம்ம் ஓகே சார்” என கௌதம் போனில் பேசிக் கொண்டு இருந்தான்.
அந்த மாலை நேரம் கௌதம் தன் அலுவலகத்தில் இருந்து நேராக கிளம்பி சென்றான் தனக்கு போன் செய்தவறை காண. மனதின் குழப்பம் பல இருக்க அதற்கான விடை காண சென்றான்.
வண்டியின் அவன் சென்ற வேகத்தில் மாலை நேர காற்று முகத்தில் மோதியது. சில நிமிடத்தில் அவன் மனம் லேசானது. எது வந்தாலும் பார்த்து கொள்வோம் என்ற உறுதி அதிகரித்தது.
அவன் செல்வது தான் தகவல் கேட்டிருந்த அந்த ரகசிய உளவாளியை காண தான். இன்று அவர் அழைத்து வர சொல்லவும், கண்டிப்பாக நல்ல தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிளம்பி செல்கிறான்.
அவர் கௌதமை எப்போதும் கூட்டம் அலைமோதும் ஒரு ஹோட்டலில் சந்திக்க வர சொல்லி இருக்கிறார். அங்கே தனக்காக காத்திருக்க சொன்னார்.
கௌதமும் சென்று சிறிது நேரம் காத்திருந்தான். அப்போது உணவு ஆர்டர் எடுக்க வந்த சர்வர் கௌதமிடம் எதையோ கையில் தினித்து சென்றார். அதை என்னவென்று பார்த்தான் கௌதம்.
அது ஒரு துண்டு காகிதம். அதில் அந்த ஹோட்டலின் ஒரு அறை எண் குறிப்பிட்டு இருந்தது. அதில் தன்னை வந்து காணவும் என்ற செய்தியோடு.
கௌதம் இதை அந்த உளவாளி ஜார்ஜ் தான் அனுப்பி இருக்க கூடும் என எண்ணி அந்த அறையை சென்று அடைந்தான். அவன் நினைத்தது சரியே அங்கே இருந்தது அவர் தான்.
“வாங்க கௌதம். எப்படி இருக்கீங்க” என வரவேற்றார் அங்கிருந்த ரகசிய உளவாளி ஜார்ஜ். “பைன் ஜார்ஜ் சார். நீங்க எப்படி இருக்கீங்க” என்றான் சம்பிரதாயமாக.
பின் “சொல்லுங்க ஜார்ஜ் உங்களுக்கு எதாவது யூஸ்புல் நியூஸ் கிடைச்சிதா. வர சொன்னீங்க” என்றான் கௌதம் பதட்டத்துடன்.
“ரிலாக்ஸ் கௌதம். எனக்கு கொஞ்சம் இன்பர்மேஷன் கிடைச்சிருக்கு. அன்ட் அது உங்களுக்கு எந்த அளவுக்கு யூஸ்புல்னு நீங்க கேட்டா தான் தெரியும்” என்றார் அந்த ஜார்ஜ்.
மூச்சை இழுத்து வெளியே விட்ட கௌதம் “யாஹ் ஜார்ஜ் நீங்க சொல்லுங்க . நான் பாத்துக்கிறேன். அப்புறம் நான் சொன்ன விஷயத்தை பத்தி விசாரிச்சு பாத்தீங்களா.
அது எந்த அளவு உண்மைனு எதாவது ஹிண்ட் கிடைச்சுதா சொல்லுங்க” என்றான் கௌதம். “நீங்க சொன்னத பத்தி நான் முடிஞ்ச அளவு விசாரிச்சு பாத்தேன்.
அன்ட் நீங்க சொன்ன எல்லாமே டுரூ. நான் கேள்விப்பட்ட வரைக்கும் உங்க ஃபிரண்ட் சத்யா யாரையோ ஹெல்ப்க்கு கடைசியா மீட் பண்ணி இருக்கார்.
அன்ட் அவர் மீட் பண்ண ஆள் யார்னு கண்பார்மா எனக்கு தெரியல. பிகாஸ் எங்க ஆளுங்கனா எங்களுக்கு தெரிஞ்சுருக்கும். பட் எங்களுக்கு தெரியாத ஆளுனா,
அவர் அன்டர்கவர்ல இருக்க ஆபிஸரா கூட இருக்கலாம். ஏனா அவங்களாம் யாருனு கூட எங்களால கெஸ் பண்ண முடியாது. அந்த அளவு சீக்ரெசி மெய்டெய்ன் பண்ணுவாங்க. ஒரு வேளை அப்படி யாராவது கூட இருக்கலாம்” என்றார் ஜார்ஜ்.
மீண்டும் அவரே தொடர்ந்தார் “உங்க ஃபிரண்ட்க்கு தெரிஞ்ச யாராவது ஐ.பி.எஸ் ஆபிசரா இல்லை இன்டலிஜன்ஸ்ல இருக்காங்களா. உங்களுக்கு தெரியுமா” என்ற ஜார்ஜின் கேள்விக்கு
“எனக்கு தெரியலை ஜார்ஜ். கொஞ்சம் யோசிக்கனும் ஏனா நான் அவனோட காலேஜ் மேட். ஸ்கூல்ல கூட படிச்ச யாராவது இருக்கலாம்.
ஏன் ஜார்ஜ் அவன் மீட் பண்ணினது அவன் ஃபிரண்ட் தான்னு கண்பார்மா சொல்றீங்களா” என்றான் கௌதம். “தெரியலை கௌதம். பட் அஸ் ஆஃப் மீ மோர் சான்சஸ் ஆர் தேர்” என்றார் ஜார்ஜ்.
பின் “அவன் எதை பத்தி டீல் செஞ்சான்னு எதாவது சின்ன ஹின்டாவது கிடைச்சிதா ஜார்ஜ்” என்றான் கௌதம் எதிர்ப்பார்ப்புடன்.
“அதை நான் பல விதத்தில மறைமுகமா விசாரிச்சு பார்த்துட்டேன் கௌதம். பட் நோ யூஸ். எந்த விதத்துலையும் என்னால நெருங்க முடியல” என்றார் பெருமூச்சுடன் ஜார்ஜ். “ம்ம் புரியுது ஜார்ஜ்.
நானும் என் சைட் அப்படி அவன் கான்டாக்டுல இருக்க யாராவது டிபார்ட்மெண்ட்ல இருக்காங்கலான்ற டீடெயில் கிடைக்குமானு பாக்குறேன் ஜார்ஜ்” என்ற கௌதம் எழுந்தான்.
“ஓகே ஜார்ஜ் தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப். வேற டீடெயில்ஸ் கிடைச்சாலும் எந்த டைம்லையும் தயங்காம எனக்கு கால் பண்ணுங்க. ஓகே நௌவ் ஐ டேக் லீவ்” என்று கிளம்பி விட்டான் கௌதம்.
வெளியே வந்த கௌதமிற்கோ ஒன்றும் முன்னேற்றம் இல்லாத நிலையில் மனம் வெகுவாய் சோர்ந்தது. யாரை பார்த்தான் என தெரியாமல் எங்கிருந்து ஆரம்பிப்பது என மண்டை காய்ந்தது.
அந்த ஹோட்டலிலே ஒரு காஃபியை வாங்கி அமர்ந்து விட்டான். அதை குடித்து விட்டு வெளியே வந்தும் மனம் ஏதோ செய்தது.
என்ன செய்தால் மனம் ஒருநிலைப்படும் என யோசித்து நிமிர்ந்து பார்த்தான். தன் மனது சமன்பட இதுவே சரியென எண்ணி நடையை வைத்தான் கௌதம்.
“எப்படி இது நடந்துச்சு. இது முதல் தடவையா இருந்தா கூட தற்செயலா நடந்ததாக நினைக்கலாம். இது மூனாவது தடவை குமார். எதுக்குடா உங்கள எல்லாம் வேலைக்கு வச்சிருக்கேன்.
தெண்டமா இப்படி தலைய கவுந்து உக்காந்துட்டு இருக்கவா. ஒருவேளை இதுல உன் வேலை ஏதும் இருக்கா” என சரமாரியாக திட்டிக் கொண்டே தன் சந்தேகத்தை முன் வைத்தான் அவன்.
“இல்லை பாஸ் நான் எதுவும் பண்ணலை. என்னை நம்புங்க பாஸ். என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா. நம்ம வண்டி டயர் பஞ்சர் ஆயிருச்சு. அதனால வேற டயர் மாத்தலாம்னு வண்டிய நிறுத்துனேன் பாஸ்.
அது இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கவில்லை பாஸ். நம்ம எப்பவும் யூஸ் பண்ற சிட்டி அவுட்டர் ரூட்ல போனதால அங்க கேமராவும் இல்லை. நானும் நல்லா தேடி பார்த்துட்டேன் பாஸ்.
பட் நோ யூஸ். நாங்க டயர் மாத்தர நேரம், இப்படி ஆகிருச்சு பாஸ்” என்றான் குமார் மெல்ல. பின் “நல்லா சாக்கு போக்கு சொல்ல கத்து வச்சிருக்க. வண்டில இருந்த கேமரா என்ன ஆச்சு” என்றான்.
“பாஸ் அந்த கேமரால எதுவும் தெரியலை பாஸ். யாரோ லூப் செட் பண்ணிருக்காங்க” என்றான் குமார். “ஆமா மணி எங்க அவன ஏன் கூட்டிட்டு போகலை” என்றதற்கு
“இங்க ஒரு பைய தப்பிக்க பார்த்தான்ல பாஸ். அதுனால அவன் இங்கையும் நான் அங்கையும்னு பிரிச்சிட்டு வேலை பாத்தோம் பாஸ்” என்றான் குமார். அவன் கூறியதை கேட்டவன் “ச்சே” என சுவற்றில் குத்துக் கொண்டான்.
அவன் பிரசாத் அந்த குழந்தை கடத்தல் கும்பலின் தலைவன். பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் தான். அவனின் தாத்தா அந்த குடும்பத்தை நன்கு கட்டுக்கோப்பாய் வழிநடத்தினார்.
பிரசாத் பள்ளி படிக்கும் போது அவனின் தாத்தா இறந்த போக, முழு நேரமும் தொழிலில் கவனம் செலுத்தினார் அவன் தந்தை ராஜசேகர் உடன் அவரின் மனைவி ஷீலாவும்.
அதில் மகனை கவனிக்க மறந்து விட்டனர் அந்த தம்பதியர். சிறு வயதில் இருந்து பணத்தின் செழுமையில் வளர்ந்த பிரசாத், பணத்தை தண்ணீராக செலவு செய்து ஊதாரியாக சுற்றி கொண்டிருந்தான் அவன் தாத்தாவின் மறைவிற்குப் பின்.
சில வருடங்கள் ஆனது பெற்றோர்க்கு அவனை கண்டறிய. அவனின் குணம் அறிந்த உடன் அவன் தந்தை தான் முதலில் கண்டித்து பார்த்தார்.
அவரின் உபதேசம் காலம் கடந்தது என பாவம் அவர் அறியவில்லை. அவன் தன் தீய சகவாசத்தை அப்போதும் விடவில்லை. அதிகரிக்க தான் செய்தது. எனவே அவன் செலவிற்கு பணம் கொடுப்பதை முழுவதும் நிறுத்தி விட்டார்.
பணத்திலே புரண்டவன் ஒரு நாள் கூட பணம் இல்லாது தவித்து விட்டான். அப்போது ஒரு நாள் அவன் ஃபிரண்ட் உடன் பாரில் அமர்ந்திருந்த நேரம்,
வெளிநாட்டு தம்பதி இருவர்க்கு ஒரு குழந்தை வேலைக்கு வேண்டும் என சொல்லி இருப்பதை பேசிக் கொண்டு இருந்தனர் இருவர். முதலில் கவனிக்காத பிரசாத் சிறிது நேரத்தில் அனைத்தையும் கேட்டான்.
அதற்கு அவர்கள் தரும் பணத்தின் மதிப்பைக் கேட்டவன் மூலை அசுர வேகத்தில் வேலை செய்தது. இதை செய்து கொடுத்தால் பணம் நிச்சயம் என்பதால்,
இதை செய்து கொடுத்தால் என்ன என்ற எண்ணம் மனதில் வேர் விட்டது. அதை செயல்படுத்தவும் நினைத்து அவர்களை அணுகி விலை பேசி தன்னை இத்தொழிலில் இணைத்து கொண்டான்.
அப்படி முதல் குழந்தை கடத்தலின் போது அறிமுகம் ஆனவனே குமார். அவனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன். இன்று வரை அவனுக்கு வலது கை போல் இருந்து கொண்டு இருப்பவன்.
இவர்கள் தொழில் அவர்களை பொறுத்த வரை நன்கு தான் போய் கொண்டு இருந்தது. இதில் இப்போது சில குளறுபடிகள் நடக்கிறது. அதில் ஒன்றே இன்று நடந்ததும்.
“என்னாச்சு குமாரு. பாஸ் ஏன் கோபமா போராரு” என்றபடி வந்தான் மணி. “இன்னைக்கு கூட்டிட்டு போன புள்ளைங்க எல்லாம் தப்பிச்சு போயிருச்சுங்க மணி அண்ணே.
அதான் பாஸ் குமார் அண்ணன நல்லா புடிச்சு திட்டிட்டு போரார்” என்றான் உடன் இருந்த இன்னொருவன். “எப்படி ஆச்சு குமாரு. உனக்கு எப்பவும் பக்காவ பிளான் பண்ணி முடிச்சு தானே பழக்கம்.
எப்படி மிஸ் பண்ணுன” என்றான் மணி. “எப்படின்னு தெரியலை மணி. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் டா. நம்ம கூட இருக்க எவனோ இதை செஞ்சிருப்பானோ அப்டின்னு தோனிட்டே இருக்குடா” என்றான் குமார் குரலை தாழ்த்தி கொண்டு.
“எப்படி உனக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துச்சு டா” என்றான் மணி. “இல்லை எனக்கு தோனுது டா. இல்லைனா நாம போற ரூட்டு எவனுக்கு தெரியும்.
அது மட்டும் இல்லாம ஒரு சின்ன எவிடன்ஸ் கூட விடாம எப்படி அந்த பிள்ளைகளை கூட்டிட்டு போயிருக்க முடியும்” என்றான் தங்கள் அருகில் இருந்த மற்றவர்கள் மீது பார்வை வைத்து.
“அப்படி ஒருத்தன் நம்ம கூட்டத்தில இல்லை குமாரு. அப்படி இருந்தா அவன் இருக்கவே கூடாது டா” என்றான் மணி மற்றவர்களை பார்த்துக் கொண்டே.
இவர்களை இங்கே புலம்ப விட்ட அந்த குழந்தைகள் அரசு காப்பகம் ஒன்றில் பத்திரமாக சுதந்திரமாய் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அதை அலைபேசி வாயிலாக கேட்ட அவன்,
அங்கிருந்த குமார் மற்ற அனைவரையும் பார்த்து இகழ்ச்சியான சிரிப்புடன் ‘இனிமே பாருங்க டா என் ஆட்டத்தை. வச்சு செய்றேன் டா உங்க எல்லாரையும்’ என்று எண்ணியபடி அவர்களை குரோதத்துடன் பார்த்து நகர்ந்தான்.
-தொடரும்