முகூர்த்தம் 3
இமைக்காதே
இதயத்தை
பறிக்கிறது
காதல்…
“ஹாய் ப்யூட்டி…” என்றபடி துள்ளலாய் வந்து நின்றான் அவன்.
”வாட்ட்ட்ட்…” தன் வழக்கமான லுக்கைவிட்டது நம் மைவிழி.
“ஹே ஸ்வீட்டி உன்னைத்தான்”
“வாட்ட்ட்ட்ட்”
“என் பேரு வாட்ட்ட்ட்ட் இல்லை டார்லிங், அது பிசிக்ஸ்ல வர்ற ஒரு அறிவாளி பேரு, ஐ அம் ராஜா…. சே ஹாய் டு மீ டார்லிங்”
“ஏய்ய்ய்ய்ய் என்ன விளையாடுறியா இதெல்லாம் உன்கிட்ட சிரிச்சு சிரிச்சு சுத்தி வராளுகளே அந்த லூசுங்க கிட்ட சொல்லு, “
“ஓ அது தான் உன் கோபமா, நான் என்ன டார்லிங் பண்ணட்டும், ராஜா ராஜான்னு எப்ப பாரு என் கிட்டயே வந்து பேசுறாங்க, இனிமே அவங்க வந்தா என் ப்யூட்டி சொல்லீட்டா, நான் இனி உங்கிட்ட பேசமாட்டேன்னு சொல்லிடவா”
”உனக்கு என்ன பிரச்சனை, யார்கிட்டயாவது பெட் கட்டியிருக்கியா, எனிதிங்க் ராங்க் வித் யூ”
“நோ டியர்”
“அப்ப இந்த ப்யூட்டி, ஸ்வீட்டி, டார்லிங் டியர் இதையெல்லாம் கட் பண்ணீட்டு நார்மலா பேசு பாப்போம்”
“ஆல்ரைட் பேபி, ஒரு முக்கியமான விசயம் உன்கிட்ட பேசலாம்னு வந்தேன்”
“எஸ் சொல்லு”
“இத்தணை நாளா ஒரே கிளாஸ்ல டெய்லி பாத்துகுறோம், உனக்கு இதுவரைக்கும் எந்த மாற்றமுமே வரலையா”
“என்ன மாற்றம் வரணும்னு எதிர்பாக்குற”
“எனக்கு வந்த அதே மாற்றம்”
“நீயும் நானும் ஒண்ணில்லை”
”ஒண்ணா ஆகணும்னு சொல்றேன்”
”அதுக்கு பதில் என்னன்னு உனக்கே தெரியும்”
“ஒத்தை கேள்வியை கேட்டுட்டு இப்படி மூணு வருசமா காக்க வைக்கிறது பாவம் பேபி”
“நான் காத்திருக்க சொல்லலையே”
“உன் கேள்விக்கு பதில் சொல்ல தான் காத்திருக்கேன்”
“கண்டுபிடிச்சிட்டியா”
“தெரிஞ்சதை தேடி கண்டுபிடிக்க அவசியமில்லை”
”அஹான் அப்படியா”
“என்னோட முடிவுல மாற்றம் வரும்னு நீ எதிர்பாத்தியோ”
“இன்னும் வரலையா”
“முடிவு பண்ணதுக்கு அப்புறம் மாற்றம் வந்தா அது முடிவே இல்லை பேபி”
“இப்ப என்னதான் சொல்ல வர்ற”
“ஐ லவ் யூ”
“என்னை பத்தி உனக்கு என்ன தெரியும் “
“உன்னை பத்தி முழுசா தெரிஞ்சிகிட்டு வர்றது காதல் இல்லை”
“நான் சொல்றேன் இது காதலே இல்லை”
“தென்”
“ஜஸ்ட் இன்பாக்சுவேசன்”
“இத நீ பர்ஸ்ட் இயர் ல சொன்ன, என்னோடது காதல் தான்னு ப்ரூவ் பண்றதுக்காகவே இந்த மூணுவருசமும் முழுசா காத்திருந்தேன்”
“காத்திருந்து என்ன சாதிச்ச”
“இவ்வளவு நாளாகியும் உன்மேல எனக்கு வந்த காதல் துளி கூட குறைய, அதிகமாதான் ஆகீட்டு இருக்கு”
“யூ ஆர் ஸ்டில் சில்லி”
“யாரு நானா”
“அப்சல்யூட்லி”
“உனக்கு நீயே ஒரு வட்டத்தை போட்டுகிட்டு உன்ன நீயே கண்ட்ரோல்ல வச்சிருக்க”
“நீ தான் வந்து பாத்தியா”
”நான் தான் டெய்லி பாக்குறேனே”
“இங்க பாரு ராஜா, என்கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ணாத, போய் பொழைக்கிற வழிய பாரு, கிளம்பு”
“ஹா ஹா ஹா கண்டிப்பா ஸ்வீட்டி, நம்ம லைஃப் ஆச்சே, விட்ருவேனா, என்னிக்கு இருந்தாலும் நீ தான் என் பொண்டாட்டி”
“ஸ்டுபிட்”
“இதெல்லாம் எனக்கு தெரிஞ்சு, வெரி ஓல்ட் பிலிம் ல இருந்தே, இப்படிதான் ஸ்டுபிட் சொல்றாங்க, சோ புதுசா எதாவது சொல்லி திட்ட ட்ரை பண்ணு பேபி, பிகாஸ் நீயும் நானும் ரொம்ப ஸ்பெஷல் பேர்(pair)”
“உன்னை பார்த்து சிரிக்கத்தான் முடியுது, ”
”கூடிய சீக்கிரம் என்னைப் பாத்து இன்னும் என்னென்ன ஃபீல் பண்ண வைக்குறேன்னு பாரு டார்லிங்”
“வேஸ்ட் ஆப் டைம்”(waste of time)
“வித் அவுட் யூ”(with out u) என்று விட்டு அவன் நகர இதுவரை அவன் கட்டுபாட்டில் நின்றா பேசிக்கொண்டிருந்தோம் என்று நினைத்தவள் தன்னையே திட்டிக் கொண்டு நகர்ந்தாள்.
”வாங்க வாங்க மைவிழி மேடம்” என்று ஹாஸ்டல் ரூம் வாயிலில் நின்று பவி வரவேற்க,
“என்னடி நக்கலா” என்றவாறு நுழைந்தாள் மைவிழி.
”இல்லடி சொக்கல்”
” வாட்ட்ட்ட்ட்”
“இன்னிக்கு என்ன வாட்ட்ட் சொல்லணும்னு வேண்டுதலா”
“அட ஏன் டி நீ வேற புரியாத மாதிரியே பேசவேண்டியது வாட்ட் னு கேட்டா நக்கல் பண்ண வேண்டியது என்னடி அது சொக்கல்”
“ஹான் அந்த ராஜா சொக்கி கிடக்குறானே அதை சொன்னேன்”
“அசிங்கமா பேசாத டி, அவன் எதோ புரியாம பேசீட்டு இருக்கான், கொஞ்ச நாள்ல அவனே புரிஞ்சுட்டு போய்ருவான் பாரு”
“எப்படி இந்தா ஃபைனல் இயர் வரைக்கும் உன்னையே நெனச்சிட்டு இருக்கானே அப்படியா”
“அடியே இப்ப காலேஜ் சோ டெய்லி பாக்குறோம், அதான் இப்படி, இதே அவன் காலேஜ் முடிச்சிட்டு போகட்டும், வேலை சாம்பாத்தியம் லைஃப் ல செட்டில் ஆகுறதுன்னு அவன் மைண்ட் செட் மாறும் போது அதுல கண்டிப்பா நான் இருக்க மாட்டேன்”
“ஓ இதெல்லாம் எந்த சித்தர் சொன்னதோ”
“சித்தர் சொல்லலை டி, புத்தர் சொன்னது”
“புத்தர் என்ன சொன்னார்”
“ஆசையே துன்பத்திற்கு காரணம்னு சொன்னார், அட ஏன் டி நீ வேற அவன் இவ்வளவு நேரம் போட்டு படுத்துனான்னா அவனுக்கு மேல நீ போட்டு படுத்துற”
“நான் பேசுறது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கோ”
“ஆமா என்ன பண்ணப் போற கோசுக்க போறியா, கோச்சுக்க கோச்சுக்கோ”
“இதுக்கெலாம் அசந்தா முடியுமா, நீ எப்படி தூங்குறன்னு பாக்குறேன்”
“அடியே பவி வேணா பில்லோவ குடு”
“முடியாது என்ன பண்ணுவ” என்று அறைவாசல் வரை ஓடி நின்று கொண்டு அவள் பழிப்பு காட்ட,
“ஹா ஹா ஹா பில்லோ இல்லாமையே நான் தூங்குவேன்”
“அடியே அடியே உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும் டி”
“பில்லோவ சொண்டு வா அப்போதான் கேப்பேன்”
“ம்ம்ம்ம் இந்தா”
“அப்படி வா வழிக்கு, இப்ப சொல்லு என்ன விசயம்”
“அம்மா போன் பண்ணாக”
“நல்ல விசயம்…. என்ன சொன்னாங்க, ஊர்ல அனைவரும் நலமா…..”
“அதெல்லாம்ம் நலம் தான்”
“ஏன் இழுக்குற என்ன விசயம்”
“மாப்பிள்ளை பாத்திருக்காங்களாம்”
“பார்டா”
“அதான் பார்த்துட்டாங்களே நீ வேற எதுக்கு பாக்க சொல்ற”
“மறுபடியும் பார்டா”
“டென்சன் பண்ணாத டி”
“நீ தான் முழுசா சொல்லாம டென்ஷன் பண்ற”
“அத்தை பையன் தான் மாப்பிள்ளையாம்”
“அதுக்கு ஏண்டி மூஞ்சிய இப்படி வச்சிருக்க”
“இல்லை படிச்சு முடிச்சிட்டு ரெண்டு பேரும் சென்னை போய் ஒண்ணா தங்கி ஒரு வருசமாச்சும் வேலை பாக்கணும்னு ப்ளான் பண்ணோம் ல அது நடக்காது போல”
“இப்ப புரியுதா நம்ம நெனச்சது எல்லாமே நடக்காதுன்னு நான் சொன்னது”
“வெறுப்பேத்தாத டி”
“வெறுப்பேத்தலை டி உண்மைய சொல்றேன், டோண்ட் வொர்ரி பேபி, ஜஸ்ட் ரிலாக்ஸ், இருக்குற நாட்களை ஆனந்தமா எண்ஜா பண்ணுவோம், நடக்குறது நடக்கட்டும், நாம ப்ளான் பண்ணதை நாம செய்வோம், நம்மளை வச்சு, இந்த லைஃப் என்ன ப்ளான் பண்ணுச்சோ அது செய்யட்டும்”
“ம்ம்ம்ம்ம்”
“அதெல்லாம் விடு மாப்பிள்ளை பேர் என்ன”
“ஜெகன் அத்தான் டி”
“ஜெகன்குறது அவரோட பேரு, அப்ப அத்தான்ங்குறது அவர் படிச்சு வாங்குன பட்டமா பட்டமா பட்டமா”
“அய்யோ வர வர அந்த ராஜா பேச்சை கேட்டு கேட்டு, நீயும் அவனை மாதிரியே பேச ஆரம்பிச்சுட்ட மைவிழி, காதுல இரத்தம் வருது”
“வொய் ப்ளட், சேம் ப்ளட்”
“ஹா ஹா அப்படியே உண்மையை சொல்லு பாப்போம்”
“என்ன உண்மை பவி”
“ராஜாவைப் பத்தி உண்மையிலயே நீ என்ன நினைக்கிற, அவனை பாத்தா பாவமா இல்லையா”
“ஹா ஹா ஹா ராஜா, நல்ல பையன், பாஸிட்டிவ் பாயிண்ட்ஸ் இருக்கோ, இல்லையோ, நெகட்டிவ்வா இதுவரைக்கும் எதுவும் தோணலை, எதோ கண்டதும் காதல்னு சொல்லீட்டு திரியுறான், அந்த வியாதி கொஞ்ச நாள்ல சரியா போயிடும்,”
“சத்தியமா சொல்றேன் டி, மனசாட்சியை தொட்டு சொல்றேன்,….”
“சொல்லு டி”
“உனக்கு போய் காதல் வரும்னு கனவு கண்டுகிட்டு இருக்கானே ஒரு ஜீவன் , அவனை நினைச்சா ரொம்பப் பாவமா இருக்கு”
“வொய் திஸ் திடீர் சிம்பதி”
”திடீர்னு இல்லை, உன்கிட்ட என்னைக்கு அவன் ப்ரப்போஸ் பண்ணுனானோ, அன்னையில இருந்து தான் இந்த பரிதாபக்கோலம் அய்யோ பாவம் ”
”நீ நெனக்குற அளவுக்கு நான் ஒண்ணும் கொடுமைக்காரி இல்லையே, நீ எதுக்கு இவ்வளவு பில்டப் குடுக்குற”
”சரி குடுக்கலை, நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”
“நான் சொல்றது ஒரு சிம்பிளான விசயம் தான், அது அது அந்த அந்த நேரத்தில நடக்கணும் அவ்வளவு தான், தட் தட் டைம் தட் தட் வொர்க்”
“க்கும் எங்களுக்கு தெரியாதுன்னு ட்ராண்ஸ்லேசன் வேறையா”
“இல்லைடி பவி, இப்ப படிக்க வந்திருக்கோம், சோ நல்ல படியா படிப்போம், ப்ரெண்ட்ஸ் கூட நல்லா என்ஜாய் பண்ணுவோம், இந்த டைம் கோல்டன் டைம், நீ எவ்வளவு தேடுனாலும் லைஃப்ல இந்த பார்ட் மட்டும் திரும்ப கிடைக்காது, இப்ப போய் காதல்னு விழுந்து அவன் கூடயே டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு தோணும், அடிக்கடி பாக்கணும் பேசனும், காதல் வர்றது ஈசி அதை மெயிண்டெயின் பண்ணுறது கஷ்டம், அதை காப்பாத்தப் போய் நல்ல டைமெல்லாம் தொலைச்சிட்டு, படிச்சு முடிச்சு பிள்ளை வேலைக்கு போகும்னு நெனச்சிகிட்டு இருக்க பெத்தவங்க கிட்ட போயி, நான் லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைங்கன்னு கெஞ்சி, அவங்க மனசையும் கஷ்டப்படுத்தி”
“போது போதும் நிப்பாட்டு”
“அதுக்கில்லை டி, உன்னையும் என்னையும் படிக்க அனுப்புறாங்கன்னா அது நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கை, அதே நம்பிக்கைய நாமும் அவங்க மேல வைக்கணும்”
”காதலிச்சா அவங்க மேல நம்பிக்கை இல்லைன்னு அர்த்தமா”
“கண்டிப்பா டி, நமக்கு எது நல்லதுன்னு பார்த்து பார்த்து செய்யுற அவங்க நமக்கு நல்ல வாழ்க்கையை குடுப்பாங்க அப்படீங்குற நம்பிக்கை குறைஞ்சா தான் நீயா வாழ்க்கைய தேடிக்கணும்னு நெனப்பாய் அதுவும் படிக்கும் போதே”
“அப்படி பாத்தா யாருமே காதல் பண்ணக்கூடாதுன்னு சொல்றியா”
“அதை நான் சொல்ல முடியாதே டி, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து, இதை எல்லாரும் ஒத்துக்கணும்னு அவசியம் இல்லை, மாறுபட்ட கருத்துக்களும் மனிதர்களும் நிறைஞ்சது தான் சமுதாயம், இந்த சமுதாயத்தில நம்மளால ஒரு கெட்ட பேர் எந்த காலத்திலயும் நம்ம அம்மா அப்பாவுக்கு வரக்கூடாது”
“சரி உன் விசயத்தையே எடுத்துக்குவோமே, நீ இப்ப ராஜாவுக்கு ஓ கே சொன்னா அது எப்படி கெட்ட பேர் எடுத்ததா ஆகும், நீ மனசுக்குள்ளதான வச்சிருப்ப”
“அது தான் தப்பு”
“தப்பா….???”
“ஆமா என் மனசுல காதல் வரும் போது அதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இருக்கக்கூடாது, யாரும் பாத்து என்ன நெனப்பாங்களோன்னு பயம் வரக்கூடாது, நானும் அவரும் சேர்ந்து போகும் போது, ‘யாரு பெத்த புள்ளைங்க இது இப்படி சுத்துது பாருன்னு சொல்ல கூடாது, எனக்கு பிடிச்சவனோட கைய பிடிச்சு நடக்க சகல உரிமையும் எனக்கு வேணும், லைஃப் லாங், சண்டையோ சந்தோசமோ அவனோட தோள் சாஞ்சுகணும், நெனைக்கும் போது என் கண்ணுக்குள்ள வரணும் கண்ணை திறக்கும் போது எதிர்ல இருக்கணும், ஆசையோ கோவமோ துக்கமோ ஆச்சர்யமோ நான் பகிர்ந்துக்க முதல் ஆளா அவன் வேணும், குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம, ஊடல் பாதி கூடல் பாதீன்னு திகட்ட திகட்ட காதல் செய்யணும் “
“யாரு மைவிழியா இது, சத்தியமா உனக்குள்ள இப்படி ஒரு ஜூலியட் இருப்பான்னு நான் நெனக்கலை டி”
“ஹா ஹா ஹா நான் இப்படித்தான் யோசிப்பேன்னு நீ முடிவு பண்ணீட்டா, நான் மைவிழியே இல்லையே,”
“உனக்குள்ள நான் இருக்கேன்னு கன்பார்ம் ஆயிட்டு டார்லிங், நான் ராஜா தானே”