தமிழினியன் தன் காரை அவன் வீட்டின் முன் நிறுத்தி கீழே இறங்கினான். பின் கதவை திறந்து கொண்டு மிருளாலினி இறங்கினாள். வீட்டினுள் நட்சத்திரா, அன்னம், பரிதி, தமிழினியன் பெற்றோர்கள் இருந்தனர்.
அதோ அதான் அவளோட வீடு. பூட்டி தான இருக்கு. அவ உள்ள தான் இருக்கா. “வாங்க” என்று மிருளாலினியை பார்த்தான்.
ஏதும் கூறாமல் அவள் நகர, அவனும் அவளுடன் சேர்ந்து வீட்டிற்குள் நுழைந்தான்.
“என்னாச்சுப்பா? பிரச்சனை முடிந்ததா? என்ன தான் நடக்குது?” தெளிவா சொல்லுங்களேன் என்று பரிதி கேட்டார்.
“ஸ்டார் அவங்கள உள்ள அழைச்சிட்டு போ” என்று நட்சத்திராவிடம் கண்ணை காட்டினான்.
“மாமாவும், அர்சுவும் வரலையா?” அவள் கேட்க, வருவாங்க. நீங்க போங்க என்று அவன் சொல்ல, அவன் அம்மா வேல்விழி அவனை முறைத்து பார்த்தார்.
உட்கார்ந்து, நடந்த அனைத்தையும் சொல்லி விட்டு தமிழினியனும் மிருளாலினியும் திருமணம் கண்டிப்பா செய்யணும் என்று சுபிதன் ஆன்மா கூறியதை சொன்னான்.
“அதுக்காக நீ எதுக்கு அவளை கல்யாணம் பண்ணனும்?” வேல்விழி கேட்க, அம்மா..நான் படிக்கும் போது காதலித்த பொண்ணு இவ தான் என்றான் தமிழினியன்.
“என்னது மிருவை காதலித்தாயா?” அன்னம் கேட்க, அவன் தாய் தந்தையை பார்த்தான். அவன் அம்மாவும் அப்பாவும் கோபமாக எழுந்து உள்ளே சென்றனர்.
“அம்மா” என்று அவன் அழைக்க, அவனை திரும்பி பார்த்து விட்டு அறைக்குள் சென்றனர். அவன் சோகமாக அன்னம் பரிதியை பார்த்தான்.
ஏம்ப்பா, “உனக்கு இன்னும் மிருவை பிடிக்குமா?” என்று அன்னம் ஆர்வமாக கேட்க, ஆமா ஆன்ட்டி. அதான் திருமணத்தை தள்ளி போட்டுக் கொண்டே இருந்தேன். அதான் இருவரும் கோபமாக போறாங்க என்று அவர்கள் சென்ற அறையை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதெல்லாம் கவலைப்படாத. அவளையும் உன் பெற்றோரையும் நாங்க ஒத்துக் கொள்ள வைக்கிறோம் என்று அன்னம் பரிதியை பார்த்துக் கொண்டே சென்னார். அவர் எதையோ சிந்தித்து கொண்டிருக்க, அவரை இடித்தார் அன்னம். அவன் இருவரையும் பார்த்து “நீங்களும் ஓய்வெடுங்க” என்று ஓர் அறைக்கு அனுப்பினான்.
உள்ளே சென்ற மிருளாலினி தன் தோழி நட்சத்திராவை அணைத்து சுபி ஆன்மா பேசியதை கூறி அழுதாள்.
நட்சு, “அவன் என்னை மறுமணம் செய்து கொள்ள சொல்கிறான். இருவரும் என்னை வைத்து விளையாடி இருக்காங்க” என்று அழுதாள். நட்சத்திரா ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டாள்.
நட்சத்திரா அமைதியாக இருக்க, தமிழினியன் சொன்னதை எண்ணி, நட்சு என்னால தானே நீயும் ரொம்ப கஷ்டப்பட்ட. என்னால தான் எல்லாமே என்று அழுதாள் மிருளாலினி.
மிரு, இங்க பாரு. அவன் சொல்வது ஒன்றும் தவறில்லை. இனியன் சார், ரொம்ப நல்லவர். அவருக்கு எல்லாமே அம்மா, அப்பா தான். அவர் திருமணம் செய்யாமல் இருப்பது உன்னால் தான்னு எனக்கு தோணுது.
“என்ன சொல்ற?” மிருளாலினி கேட்க, ஆமா அவருக்கு நிறைய பொண்ணுங்க வீட்ல மாப்பிள்ளை கேட்டு வந்தாங்க. ஆனால் அவரால் தான் ஏத்துக்க முடியலை. ஏதாவது சொல்லி தட்டிக் கழித்து வந்தார். அதனால் அந்த பொண்ணு.. அதான் உன் மீது அவரோட அம்மா, அப்பா கோபமா இருக்காங்க. அது நீதான்னா அவங்க என்ன முடிவெடுப்பாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால் அவர் உன்னை காதலித்து இருக்கார். நன்றாக பார்த்துக் கொள்வார். தனியே வாழ்வது அவ்வளவு சாதாரணமில்லை என்று நட்சத்திரா கண்கலங்கினாள்.
“நீ சிம்மாவிடம் உண்மையை சொல்லவில்லையா?” மிருளாலினி கேட்க, “உண்மையா? என்ன உண்மை?” நட்சத்திரா கேட்டாள்.
“சார்” என்று அவனிடம் ஓடி வந்தாள் மிருளாலினி. அவன் எழுந்து அவளை பார்த்தான்
சார், “நட்சுக்கு என்னாச்சு?” என்று கேட்டாள்.
“என்ன? என்னாச்சு? ஏதும் பிரச்சனையா?” என்று அவன் நட்சத்திரா இருக்கும் அறைப்பக்கம் நகர, அவன் கையை பிடித்து நிறுத்தினாள் மிருளாலினி. வெளியே வந்த அவன் அம்மா வேல்விழி அவள் தன் மகன் கையை பிடித்து இருப்பதை பார்த்து கோபமாக, “இனியா” என்று சத்தமிட்டார். எல்லாரும் வெளியே வந்தனர்.
மிருளாலினியிடம் வந்து, “என்னடி பண்ணீட்டி இருக்க?” என்று கத்தினார். அவள் புரியாமல் தமிழினியனை பார்த்தாள். அவன் அவள் பிடித்திருந்த கையை பார்த்தான்.
அதை பார்த்து பதறி பட்டென விலகினாள். பின் அமைதியாகி, ஆன்ட்டி நான் எதுக்குன்னா என்று அவள் சொல்லத் தொடங்க, அவளை அடிக்க கையை ஓங்கினார் வேல்விழி. அவரை தடுக்க தமிழினியன் வருவதற்குள் அன்னம் வேல்விழி கையை பிடித்து தடுத்தார்.
“கையை விடுங்க” என்று அன்னத்தின் கையை உதறிய வேல்விழி, “வெளிய போ” என்று மிருளாலினியிடம் கத்தினார். அவள் கண்ணீருடன் அவர்களை பார்த்தார்.
வெளிய போக சொல்லி உங்க பையன் சொல்லட்டும். அவளை நாங்க எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறோம் என்றார் பரிதி.
ஆன்ட்டி, “நான் நட்சு வீட்டிற்கு போறேன்னு தான் சொன்னேன்” என்று தமிழினியனை பார்த்தாள் மிருளாலினி.
நட்சத்திராவும் அவர்களிடம் வந்து, சரி தான் மிரு. நீ இங்கே இருப்பது சரியாக இருக்காது. வா நாம போகலாம் என்று மிருளாலினி கையை நட்சத்திரா பிடித்தாள்.
பாப்பா, “இரு” என்று அன்னம் சொல்ல, அத்தை வேண்டாம். எதையும் சொல்லி புரிய வைக்க சாரோட அம்மா, அப்பா ஒன்றும் சிறியவர்கள் இல்லை.
மிரு மேலுள்ள காதலில் தான் அவங்க பையன் கல்யாணமே பண்ணிக்கலன்னு அவங்களுக்கு தெரியும். அவங்க கோபம் எனக்கு புரியுது. அவள் இங்கிருந்து கஷ்டப்படுவதை விட என் வீட்டில் என்னுடன் இருக்கட்டும் என்றாள்.
தமிழினியன் அவன் பெற்றோரையும் மிருளாலினியையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆமா, எனக்கு இவளை பிடிக்கலை. நீ கூட்டிட்டு போ என்று வேல்விழி சொன்ன மறுநிமிடம் மிருளாலினி அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள்.
இருடி,” நானும் வாரேன்” என்று நட்சத்திரா செல்ல, அம்மாடி “இங்கேயே இரு” என்று கிருபாகரன் சொன்னார். இருவரும் நின்றனர்.
“அவ எதுக்கு இங்க இருக்கணும்? நீங்க பாப்பாவுக்கு நன்றி சொன்னால் கூட தகாத அளவு பார்த்துட்டு இருந்திருக்கீங்க?” அதுக்கு பாப்பா கடமை பட்டிருக்கா. அவ இங்க இருக்க மாட்டா. உங்களை மாதிரி நம்பி வந்த பொண்ணை கைவிட எங்களால் முடியாது என்று சுள்ளென அன்னம் கூறினார்.
என் பையன் தான் அழைச்சிட்டு வந்தான். புரியாம செஞ்சிட்டான். இனி அவன் அந்த பொண்ணு பக்கம் வர மாட்டான் என்றார் வேல்விழி.
அம்மா..தமிழினியன் சத்தமிட்டான். அவர் அதை கண்டுகொள்ளாமல் இதோ நட்சத்திராவும் கணவனை இழந்து தான் பையனோட தனியாக வாழ்கிறாள். அவள் பையன் கூட உங்க பையன் மாதிரி தான் இருக்கான். அவள் சொன்னது போல் உறவினால் கூட இருவரும் ஒரே மாதிரி இருக்கலாம்.
“நீங்க உங்க பையனை நட்சத்திராவிற்கு கட்டி வச்சிருவீங்களா?” என்று வேல்விழி கேட்க, இப்ப கோவிலுக்கு சிம்மாவுக்கு பொண்ணு பார்க்க தான் வந்தோம். எப்ப எங்க பாப்பாவை அதுவும் என் மகன் சிம்மா போல் இருக்கும் ஒரு மகனுடன் பார்த்தோமோ அப்பவே அவங்கள போக சொல்லிட்டோம்.
உங்க பையன் போல தான் என் மகன் சிம்மாவும். சிறுவயதிலிருந்தே நட்சத்திராவை காதலித்தான். இப்ப கூட பொண்ணு பாக்க தான் கோவிலுக்கு வந்தோம்ன்னு அவனுக்கு தெரியாது. அவன் இன்னும் எங்க பாப்பாவை மறக்கலை. அவன் கண்டிப்பா இப்ப இன்று சொன்னால் கூட திருமணம் பண்ணிப்பான். எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்ற பரிதி, நட்சத்திராவை பார்த்துக் கொண்டு, பாப்பா விருப்பப்பட்டால் நாளையே திருமணம் நடக்கும் என்றார்.
“நீங்க தானே சொல்றீங்க?” உங்க மனைவி அமைதியா இருக்காங்களே! வேல்விழி கேட்க, “என்னை உங்களை போல்ன்னு நினைச்சிட்டீங்களா?” என்னோட மருமகள் நட்சத்திராவாக இருந்தால் எனக்கு என்ன கசக்கவா செய்யும். அவ என் அண்ணன் பொண்ணு. என் மகனுக்கு பிடிக்கும் போது எனக்கு பிடிக்காமல் போகுமா? இவள் மட்டும் அன்று வயிற்றில் பிள்ளையில்லாமல் வந்திருந்தால் அன்றே திருமணம் செய்து வைத்திருப்பேன் என்றார் அன்னம்.
நட்சத்திரா கண்ணீருடன் தன் அத்தை மாமாவை பார்த்தாள்.
உன்னை பார்க்காமலே உன்னை நினைத்துக் கொண்டிருந்தான். இனி வேற பொண்ணை பார்க்க எங்களுக்கே விருப்பமில்லை. நாங்க காத்திருக்கோம்டா என்றார் அன்னம். அவரை அணைத்து அழ நினைத்தாள் நட்சத்திரா. ஆனால் கண்ணீருடன் அமைதியாக நின்றாள்.
தமிழினியன் மிருளாலினியிடம் வந்து அவள் கையை பிடித்தான். அவன் கையை உதறி விட்டு, நட்சு வீட்டுச்சாவியை கொடு என்று கேட்டாள்.
இனியா, “என்ன பண்ற?” இங்க வா வேல்விழி அழைத்தார். நட்சத்திரா தமிழினியனை பார்த்து, நான் ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்ய விரும்பலை.
சுபிக்கும் மிருவுக்கும் அவன் வீட்டினர் விருப்பமில்லாமல் தான் திருமணம் செய்து வைத்தேன். அது இவ்வளவு பெரிய பிரச்சனையாக முடியும்ன்னு நினைச்சு கூட பார்க்கலை. சுபியை போல் நீங்களும் மிருவை காதலிப்பீங்க, பார்த்துப்பீங்க என்றாலும் அவங்க பெற்றோர் போல தான் உங்க பெற்றோரும் பேசுறாங்க.
சுபியோட அம்மா எப்பவுமே மிருவிடம் இதே வார்த்தை தான் அடிக்கடி சொல்லுவாங்க.
உன்னை பிடிக்கலை. போயிருன்னு சொல்லி அவள் வெளியே போகணும்ன்னு அவள ரொம்ப கஷ்டப்படுத்தினாங்க. அவள் தான் சுபியை காதலித்தாலே எளிதில் விட்டு போயிருவாலா? கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று எல்லாத்தையும் தாங்கிக்கிட்டா. ஆனால் அவன் இவளை விட்டு போவான்னு நானும் நினைக்கவேயில்லை. அவள் பட்ட கஷ்டத்திற்கு அவளுக்கு வேதனை மட்டும் தான் மிஞ்சியது. போதும் அவளுக்கு நானும், எனக்கு அவளும் இருக்கோம்.
வா..மிரு என்று கண்ணீருடன் நட்சத்திரா அவள் கையை பிடிக்க, மிருளாலினி பழைய நினைவில் அழுது கொண்டே நின்றாள்.
“போதும் மிரு” என்று அவள் கண்ணை துடைத்து விட்ட நட்சத்திரா, “வா போகலாம்” என்று அவளை இழுக்க, மிருளாலினி கையை தமிழினியன் பிடித்தான். அவன் அம்மா, அப்பா கோபமாக இருந்தாலும் நட்சத்திராவின் வார்த்தையில் கலங்கி விட்டார்கள்.
சாரி சார், சுபி என்னோட பாதுகாப்பிற்காக தான் உங்களிடம் திருமணம் வரை பேசிட்டான். ஆனால் அவன் என்னை ஏமாற்றினாலும் என்னால் அவனை மறக்க முடியாது என்று அவன் கையை எடுத்து விட்டு, நீங்க தேவையில்லாமல் யோசிக்காதீங்க.
“உங்க அம்மா, அப்பா கோபமும் சரிதான?” உங்களோட காதல் கூட எனக்கு தெரியாது. திருமணம் முடிந்த என்னை காதலிக்கிறேன்னு இன்னும் காத்திருந்தால் அது சரியா? அவங்களுக்கும் ஆசை இருக்கும்ல்ல என்று அவர்களை பார்த்து விட்டு கண்ணீரை துடைத்து வெளியேறினாள். நட்சத்திராவும் வெளியே சென்றாள்.
இருங்கம்மா, நாங்களும் வாரோம் என்று அன்னமும் பரிதியும் அவர்களுடன் சென்றனர்.
தமிழினியன் கண்ணீருடன் மிருளாலினியை பார்த்து விட்டு, அவள் சென்றவுடன் கோபமாக அவன் அம்மாவை முறைத்து விட்டு அறைக்கு சென்றான்.
நட்சத்திரா அவள் வீட்டிற்கு முதல் முறையாக வரும் அவளது தோழி, அத்தை, மாமாவை வரவேற்றாள். மூவரும் அவளுடன் உள்ளே சென்றனர்.
அத்தை, சாம்பார் தான் வச்சேன். கொஞ்ச நேரத்தில் சமையல் முடிஞ்சிரும் என்று நட்சத்திரா அவள் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
தமிழினியன் வீடு கொஞ்சம் பெரியது. அருகே இருக்கும் மற்ற வீடுகளில் சில பெரியதாகவும் சில மத்திய ரக வர்க்கத்தினரின் வீடு போல் இருக்கும். நம் நட்சத்திராவின் வீடும் மத்தியரக வர்க்கத்தினரின் வீடு போல் இருக்கும் தேனீயில் இருக்கும் சிம்மாவின் வீட்டை போல்.
பரிதியும் அன்னமும் வீட்டை உற்றுநோக்கினர். அவள் வீட்டில் தோரணங்கள், திரைச்சீலைகள், கண்ணை கவரும் பொருட்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நட்சத்திரா தான் வெட்டிங் பிளானராச்சே…இந்த அளவிற்காவது வீட்டை அலங்கார படுத்த வேண்டாமா?
மிரு..நீ அந்த அறைக்கு சென்று ஓய்வெடு என்று தண்ணீரை மூவருக்கும் கொடுத்து விட்டு, உணவு தயார் செய்ய ஆரம்பித்தாள். மிருளாலினி நட்சத்திரா அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள்.
அன்னமும் பரிதியும் வெளியே அமர்ந்திருந்தாலும் நட்சத்திராவை கவனித்துக் கொண்டிருந்தனர். அவள் தயார் செய்து விட்டு அவர்களுக்கு சாப்பிட எடுத்து வைத்து விட்டு, அத்த, மாமா சாப்பிடுங்க. நான் மிருவை அழைச்சிட்டு வாரேன் என்று அவளை அழைத்து வந்தாள். இருவரும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தனர்.
அத்தை, “என்னாச்சு?” நான் சமைத்து பழகிட்டேன். தைரியமா சாப்பிடுங்க என்றாள்.
பாப்பா, உன்னோட அத்தையை திருமணம் செய்து வந்த போது அவளுக்கு சுத்தமாக சமைக்கவே தெரியாது. அவ்வளவு மோசமா இருக்கும். ஆனா இப்ப பழிகிட்டா. அது போல நீயும் பழகி இருப்பேல்லம்மா. நான் சாப்பிடுவேன். நீயும் சாப்பிடவாம்மா என்றார் பரிதி.
மாமா, “நீங்க எல்லாரும் சாப்பிடுங்க” என்றாள் அவள்.
“எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்று மூவரையும் பார்த்துக் கொண்டே நின்றாள் மிருளாலினி.
ஏம்மா, “எதுக்காக சாப்பாடு வேண்டாம்?” பரிதி கேட்டார். அவள் கண்கலங்கி மூவரையும் பார்த்தாள். நட்சத்திரா எழுந்து மிருளாலினியை அணைத்து, இனி யாரும் உன்னை ஏதும் சொல்ல நானும் விடமாட்டேன். சுபியும் விட மாட்டான் என்றாள்.
சுபி என்றவுடன் மிருளாலினிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. நட்சு, அவன் என் பக்கத்துல இருப்பதை உணர்ந்து தான் இந்த ஐந்து வருடங்களும் வாழவே செய்தேன். ஆனால் இப்ப அவன் போயிருவேன்னு சொல்லீட்டான். என்னால எப்படி? என்று மிருளாலினிக்கு தொண்டை அடைத்தது. பெரியவர்கள் அவளை எண்ணி கவலையுற்றனர்.
“உன்னோட அம்மா, அப்பா என்னடி செஞ்சாங்க?” உனக்கே தெரியும் என்னோட வீட்ல என்னை ஒதுக்கி எவ்வளவு கஷ்டப்பட்டேன். ஆனால் உன் அம்மாவும் அப்பாவும் உன் காதலை ஏற்றுக் கொண்டார்கள். நீ இல்லாமல் தனியா தான உன்னை எண்ணி கவலையுடன் இருக்காங்க. “அவங்கள எண்ணி பார்க்க உனக்கு தோணவே இல்லையா?” என்று சினமுடன் கேட்டாள்.
ஆமா, அம்மா அப்பா ரொம்ப கஷ்டப்படுவாங்க என்று அதற்கும் மிருளாலினி அழுதாள்.
“நீ என்ன செய்யணும்ன்னு நீயே முடிவெடு” என்று நட்சத்திரா சொல்ல, அம்மாடி நீ சொல்றது சரி தான். ஆனால் அங்க இவளை தனியா வச்சு மேலும் கஷ்டப்படணுமே? அன்னம் கேட்டார்.
இல்லம்மா..பொண்ணா பிறந்தாலே இப்படி தான். சுபி இறந்து ஐந்து வருடங்களாகி விட்டது. இப்ப அம்மா, அப்பாவிடம் சென்று அவர்களுடன் வாழ்ந்தால் என்றால் “தன் பிள்ளை தனியாக இருக்கிறாளே!” என்று மனவேதனையிலே உயிரற்ற ஜடமாகி விடுவார்கள். அவர்களுக்கும் தன் பிள்ளையை குடும்பமாக பார்க்க ஆசை இருக்குமே! என்று அன்னம் சொல்ல, மிருளாலினி மேலும் அழுதாள்.
அம்மாடி, முதல்ல சாப்பிடு. “பின் என்ன செய்யலாம்?” என்று முடிவெடுக்கலாம் என்றார் பரிதி.
அங்கிள், எனக்கு எதுவும் வேண்டாம்.
நீ பட்டினியாவே இரு. நான் அம்மாவுக்கு கால் செய்து, நடந்த அனைத்தையும் சொல்கிறேன் என்று நட்சத்திரா நகர்ந்தாள்.
“அம்மாவுக்கு தான் எல்லாமே தெரியுமே?”
“அப்படியா?” சுபி உன்னருகே இருப்பது; அவனை அவன் குடும்பமே கொலை செய்தது; அவன் உன்னையும் டாக்டர் சாரையும் சேர்க்க நினைக்கும் அனைத்தும் தெரியுமா? தெரிந்தால் எவ்வளவு கஷ்டப்படுவாங்க கேட்டாள் நட்சத்திரா.
சொல்லீடாத நட்சு. அவங்க கஷ்டப்படுவாங்க என்று அமைதியாக சாப்பிட அமர்ந்தாள். நால்வரும் சாப்பிட்டனர்.
நட்சு, “நான் ஊருக்கு போகவா?” அம்மாவையும் அப்பாவையும் ஐந்து வருடங்களாக பார்க்கவேயில்லை. பேசிட்டு மட்டும் தான் இருக்கேன்.
“சுபி?” என்று நட்சத்திரா கேட்க, மிருளாலினியிடம் பதிளில்லை.
அத்தை, மாமா நீங்களும் ஓய்வெடுங்க. அப்புறம் மாமாவுக்கு போன் செய்து தாரீங்களா? அர்சு சாப்பிட்டானான்னு தெரியல என்று கேட்டாள் நட்சத்திரா.
இந்தாம்மா, நம்பரை வச்சுக்கோ என்று சிம்மாவின் எண்ணை கொடுத்தார் அன்னம்.
நட்சத்திரா கால் பண்ண சிம்மா எடுக்கவில்லை. அன்னமும் பரிதியும் ஓய்வெடுக்க, சுபி மிருவை எண்ணி கவலையுடன் அமர்ந்தாள் நட்சத்திரா.
மாலை நேரம் காபி போட்டு தன் அத்தை மாமாவை எழுப்பி கொடுத்து விட்டு, தன் தோழியை பார்க்க சென்றாள். மிருளாலினி தூங்கிக் கொண்டிருந்தாள். வெளியே வந்து அன்னம் பரிதியுடன் அமர்ந்தாள்.
“உன்னோட அம்மா, அப்பாவை பார்க்கணும்ன்னு உனக்கு தோணலையா?” பரிதி கேட்டார்.
மாமா, எனக்கும் அவங்க நினைவா தான் இருக்கு. நான் என் பிள்ளையுடன் சென்று அன்று போல் நடந்தால் அர்சு மனதை பாதித்து விடும். “அப்பா கோபம் தான் தெரியுமே?” சட்டென ஏதாவது யோசிக்காமல் சொல்லி விடுவார். “அவனும் என்னை போல் கஷ்டப்படணுமா?”
சரிம்மா, “உதிரனுடனாவது பேசுவியாம்மா? எங்க இருக்கான்? என்ன செய்றான்?” அன்னம் கேட்க, “நம்ம ஊருக்கு அண்ணா வரலையா?” அவன் சும்மா தான் போனான். சீக்கிரம் வந்திருப்பான்னு நினைச்சேன் என்று கண்கலங்க வருத்தப்பட்டாள் நட்சத்திரா.
மாமா, போன் எடுக்கவே மாட்டேங்கிறாங்க என்று நட்சத்திரா சொல்லிக் கொண்டிருக்க, அம்மா..என்று அர்சலன் வீட்டிற்குள் ஓடி வந்தான்.
அர்சு குட்டி, “அம்மாகிட்ட வந்துட்டீங்களா? சாப்பிட்டீங்களா? என்ன சாப்பிட்டீங்க?” என நட்சத்திரா தன் மகனை மடியில் அமர்த்தி கேட்டுக் கொண்டிருந்தாள்.
அம்மா, “அப்பா வெளிய இருக்காங்க” என்றான் அர்சு.
“அப்பாவா?” என்று நட்சத்திரா எட்டி பார்த்து கோபமாக சிம்மாவிடம் சென்றாள்.
மாமா, “அர்சுகிட்ட எதுக்கு அப்படி சொல்லி வச்சுருக்கீங்க?”
“என்ன சொல்லி வச்சேன்?”
“என்ன.. சொல்லி வச்சேனா!” நீங்க அப்பான்னு எதுக்கு அவனிடம் சொல்லி வச்சீங்க? சத்தமிட்டாள்.
பக்கத்து வீட்டு ஆட்கள் வெளியே வந்து, “ஏம்மா எதுவும் பிரச்சனையா?” ஒருவர் கேட்க, இல்ல அங்கிள், “என்னோட மாமா தான்” என்று “உள்ள வாங்க” என்றாள். சிம்மா அசையாது அவளை முறைத்து பார்த்தான்.
மாமா, உங்களை தான் எல்லாரும் கேள்வியா கேட்டு கொல்லுவாங்க. உள்ள வாங்க என்றாள்.
“யாருடி உன்னை கொல்றது?” என்று கேட்டுக் கொண்டே மஞ்சுளா நட்சத்திராவிடம் வந்தார்.
மஞ்சுக்கா, ஒன்றுமில்லை. இவரு என்னோட மாமா. அப்பாவோட தங்கையின் மகன் என்று அவள் விளக்க, “தம்பிய எங்கேயோ பார்த்தது போல் இருக்கே? சினிமா ஆக்டராடி?” என்று கேட்க, நட்சத்திரா சிரித்தாள். அவன் முறைத்து பார்த்தான்.
அக்கா, “எஸ். பி சிம்மராஜன்” அக்கா என்று மேலும் நகைத்தாள் நட்சத்திரா.
அடியேய், “வெளிய வச்சி பேசிட்டு இருக்க?” அவர் சத்தம் போட, நானா வர வேண்டாம்ன்னு சொன்னேன். நான் கூப்பிட்டேன் அக்கா, அங்க பாருங்க இதே முறைப்பு தான் வந்ததிலிருந்து.
“எஸ். பி” சார் முறைத்தது போதும். உங்க அம்மாவும் அப்பாவும் உள்ளே தான் இருக்காங்க. “போங்க” என்று அவள் சொல்ல, அவன் அவர்களை பார்த்து வெறித்தவாறே சென்றான்.
“என்னடி உங்க ஊரு ஆட்கள் வந்திருக்காங்க? ஊருக்கு ஷிப்ட் ஆகப் போறீயா?” மஞ்சுளா கேட்க, இல்லக்கா நான் எங்கேயும் போக மாட்டேன். அவர் வாழ்ந்த ஊரை விட்டு நான் எங்கே போகப் போறேன் என்றாள். சிம்மா திரும்பி அவளை பார்த்து விட்டு உள்ளே சென்றான்.
ஆன்ட்டி, “இப்படி தூங்குறீங்க?” வாங்க என்று மிருளாலினியை எழுப்பி அர்சலன் வெளியே அழைத்து வந்தான். அவள் சிம்மாவை பார்த்து, “நீ எப்ப வந்த?” அவங்களால இனி பிரச்சனை வராதே! எனக் கேட்டாள்.
சரிக்கா, “நாம அப்புறம் பேசலாம்” என்று நட்சத்திராவும் உள்ளே வந்தாள்.
இல்லை, இனி பிரச்சனை வராது. அவன் இப்பொழுதைக்கு ஜெயிலில் இருக்கான். நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தணும். நீயும் வரணும் என்றான் சிம்மா.
மாமா, “மிரு இல்லாம அவங்களை உள்ளே தள்ள முடியாதா?”
சுபியின் அண்ணன் தப்பிக்க வழியில்லை. ஆனால் அவன் அம்மா செய்த தவறுக்கான போதிய ஆதாரமில்லை. அதனால் மிரு நீ வந்து நடந்த எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்றான் சிம்மா.
ம்ம்..வாரேன் சார் என்றாள் மிருளாலினி.
மிரு, “இங்க என்ன பண்ற?” தமிழ் வீட்டுல தான் நீ இருக்கணும் என்றது சுபிதனின் ஆன்மா.
இதற்கு மேல் நான் அங்கே செல்லமாட்டேன்.
நீ அங்க தான் இருக்கணும்.
நான் போக மாட்டேன். நான் என் அம்மாவிடம் போகப் போறேன் என்றாள் மிருளாலினி.
நீ போகலாம். ஆனால் தமிழை கல்யாணம் செய்து அவனையும் கூட்டிட்டு போ என்றது சுபிதனின் ஆன்மா.
என்னால அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது. உன்னோட அம்மா மாதிரியே அவங்களும் பேசுறாங்க. எனக்கு அவர் மீது விருப்பமும் இல்லை. என்னால உன்னை மறந்துட்டு வேரொருவனுடன் வாழ முடியாது என்று அழுதாள்.
என்னால இனி வரவே முடியாது. இன்று இரவு வரை மட்டும் தான் நான் பேசுவது உனக்கும் தமிழுக்கும் கேட்கும். நீ என்ன செய்தாலும் என்னை பார்க்கவோ பேசவோ முடியாது. நமக்குள் எல்லாமே முடிந்து விட்டது என்று கத்தியது.
“இங்க என்ன நடக்குது? இது உனக்கு முக்கியமா?” சிம்மா கோபமாக கேட்டான்.
என்ன நடக்குது? மிரு அழுது கிட்டே இருக்கா. அதான் அவளை எல்லாரும் சேர்ந்து அழ வைக்குறாங்களே!
“யாரு அழ வச்சா?” சிம்மா கேட்க, சுபி டாக்டர் சாரை திருமணம் செய்து கொள்ள சொல்கிறான். அவரும் விருப்பம்ன்னு சொல்றாரு. ஆனால் அவன் அம்மாவிற்கு இவளை பிடிக்கலை. சும்மா அவளை எல்லாரும் தொந்தரவு பண்ணாதீங்க என்றாள்.
“தொந்தரவா?” அவளோட நல்லதுக்காக தான் சுபி சொல்றான்.
மாமா, “நீங்க அவனுக்கு சாதகமா பேசுறீங்க?”
“அவன் நிலையில் இருந்தால் தான் உனக்கு புரியும்” என்றான் சிம்மா. நட்சத்திரா கோபமாக உள்ளே சென்றாள்.
“நீங்க எதுக்கு சண்டை போடுறீங்க?” அன்னம் கேட்க, அத்தை..”மாமா பேசுறத பார்த்தீங்கல்ல?” நட்சத்திரா கேட்க, ஷ்..ஏதும் பேசாத. “நீ இருவருக்கும் இடையில போய் முழிச்சிட்டு இருக்க போறீயா?” பரிதி கேட்டார்.
மாமா, “என்ன பேசுறீங்க? நீங்களும் மாமாவுக்கு சாதகமா பேசுறீங்களா?” நட்சத்திரா கேட்க, பாப்பா நான் யார் பக்கமும் இல்லை. நீங்க உங்க சண்டையை ஆரம்பிக்கலாம் என்று தொலைக்காட்சியில் செய்தியை போட்டு அமர்ந்தார் பரிதி.
சுபிதனின் ஆன்மாவால் மிருளாலினியை சமாதானப்படுத்த முடியவில்லை. பலத்த காற்று அங்கு வீச, சுபி உன்னால என்னை பயமுறுத்த முடியாது என்றாள் மிருளாலினி.
அர்சுவிடம் சென்ற சுபிதனின் ஆன்மா மெதுவாக அவன் காதில் ஏதோ கூற, அர்சு மிருளாலினியிடம் ஓடினான். மிரு அவனை பார்க்க, அவன் திரும்பி ஆன்மாவை பார்த்து விட்டு பட்டென மிரு கழுத்தில் இருந்த செயினை பிடுங்கிக் கொண்டு தமிழினியன் வீட்டை நோக்கி ஓடினான்.
தமிழ், “சாப்பிட்டு போ” என்று அவன் அம்மா வேல்விழி கத்த, “எனக்கு எதுவும் வேண்டாம்” என்று தமிழினியன் வெளியே வந்தான். மிருளாலினி அர்சுவை விரட்டிக் கொண்டு வெளியே வந்தாள். நட்சத்திரா, சிம்மா, அன்னம், பரிதி அவள் பின் வந்தனர்.
அர்சு தமிழினியனை பார்த்து, “ஸ்வீட்டா என்னை காப்பாத்து” என்று அவன் காலை கட்டிக் கொண்டு மறைந்து நின்றான். அவனை விரட்டி ஓடி வந்த மிருளாலினி தமிழினியனை பார்த்து காலிற்கு பிரேக் கொடுத்து அவன் முன் நெருக்கமாக வந்து மூச்செடுத்து விட்டு நின்றாள்.
அர்சு, “ஒழுங்கா குடுத்துரு” என்று தமிழினியனை சுற்றி விரட்டினாள். அர்சலன் அவனை சுற்றி ஓட சட்டென நின்றாள். ஓடி வந்த அர்சலன் மிருளாலினியிடம் மாட்டினான். அவனை பிடித்து தூக்க, அவன் துள்ளிக் கொண்டு “ஸ்வீட்டா என்னை காப்பாற்று” என்று தமிழினியனை பார்த்து கத்தினான்.
“இங்க என்ன நடக்குது?” வேல்விழி கத்த, அர்சலன் அமைதியானான். மிரு அவன் கையிலிருந்த செயினை வாங்க முயன்றாள்.
அர்சா, “அத தமிழ் வீட்டுக்குள்ள தூக்கிப் போடுடா” என்று சுபிதனின் ஆன்மா கத்த, அர்சலனும் தூக்கி போட்டான். அது வீட்டினுள் விழுந்தது.
வேகமாக மிருளாலினி தமிழ் வீட்டினுள் செல்ல சென்றவள் சடாரென நின்று, டேய் சுபி, “என்ன பிளான் போட்டு இருக்க?” ஒழுங்கா என்னோட கைக்கு செயின் வரணும் என்றாள்.
போச்சு, கண்டுபிடிச்சுட்டாளே! என்று ஆன்மா சொல்ல, சோ உன்னோட பிளான் தான என்று வீட்டை சுற்றி பார்த்தாள்.
“உன்னை என்ன செய்றேன் பாரு” என்று புடவையை இடுப்பில் சொருகிக் கொண்டு அங்கிருந்த மரத்தில் ஏறினாள்.
“எதுக்குமா இந்த தேவையில்லாத வேலை? அவன் சொல்வதை கேட்க வேண்டியது தான?” சிம்மா கேட்க, என்னது அவன் வாங்கி கொடுத்த பொருளையா பயன்படுத்த சொல்றான். சும்மா இருங்க மாமா என நட்சத்திரா மீண்டும் ஆரம்பிக்க, “இருவரும் நிறுத்துறீங்களா?” என்று மிருளாலினி மரத்தில் இருந்து சத்தமிட்டாள்.
இங்க பாரு மிருளா, உனக்கு அந்த செயின் தான வேணும். இரு நான் எடுத்து தாரேன் என்று தமிழினியன் வீட்டினுள் செல்ல, தமிழ் நில்லு அவள பத்தி உனக்கு முழுசா தெரியாது என்றது ஆன்மா.
“இருக்கட்டும்” என்று அவன் சொல்ல, இருங்க சார் நான் எடுத்துட்டு வாரேன் என்று நட்சத்திரா வேகமாக வீட்டினுள் காலெடுத்து வைத்து உள்ளே செல்ல, ஆன்மா அவளை தடுக்க அவள் முட்டி கீழே விழுந்தாள்.
இதுவரை கோபத்தை தவிர பெரியதாக உணர்வையும் காட்டாத சிம்மா, “உனக்கு இது தேவை தான்” என்று பயங்கரமாக சிரித்தான்.
மாமா, “உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்” என்ற நட்சத்திரா, சுபி நீ அவள நல்லா பார்த்துக்கிட்ட. ஆனால் உன் வீட்டில் மற்றவர்கள் அவளை கஷ்டப்படுத்தியது உனக்கு தெரியும் தான? இங்கேயும் அவள் கஷ்டப்படணும்ன்னு நினைக்கிறியா? என்று நட்சத்திரா மிருளாலினியை பார்த்தாள்.
அடியேய், உனக்காக தான பேசிட்டு இருக்கேன். நீ அந்த கிளையில் ஏறினால் உன்னோட வெயிட் தாங்காது. விழுந்திருவடி என்று நட்சத்திரா கத்த, தமிழினியன் மரத்தின் கீழ் வந்து நின்றான்.
இனியா, “உனக்கு வேலை இருக்குன்னு சொன்ன? என்ன பண்ற?” வேல்விழி கத்த, “சும்மா கத்திக்கிட்டே இருக்காதம்மா” என்று அவர் கணவன் கிருபாகரன் அவர் வாயை அடைத்தார்.
“எல்லாரும் இங்கிருந்து போங்க” என்று உச்சியில் ஏறி கத்தினாள் மிருளாலினி. பக்கத்து வீட்டு ஆட்களும் அங்கு கூடினர்.
மிரு, எல்லாரையும் கூட்டிட்ட. இப்ப என்னால உன்னை பிடிக்க முடியாது. குதிச்சிறாத என்று சுபிதன் ஆன்மா சத்தமிட்டது.
“இதை தான் நான் எதிர்பார்த்தேன்” என்றாள் அவள்.
அம்மாடி, “நீயும் தப்பு செய்யாதம்மா” என்று பரிதி கத்தினார்.
சாரி அங்கிள், “நட்சுவை தனியா விட்றாதீங்க” என்று மிருளாலினி சொல்ல, என்னை சந்திக்க, சேர்ந்து வாழ நினைத்து இப்படி செய்யாத வெதும்பியது சுபியின் ஆன்மா.
எல்லாம் நம் கர்மவினைப்படி தான் நடக்கும். நீயும் நானும் பூவுலகிலும் சரி மேலுலகிலும் சரி சேர்ந்து இருக்கவே முடியாது. முட்டாள் தனம் பண்ணாதே! என்று வானம் இருள் சூழ கத்தியது சுபிதனின் ஆவி.
கத்துவதை எதிர்பார்க்காத மிருளாலினி கீழே விழுந்து ஓர் கிளையை பிடித்துக் கொண்டாள்.
தமிழ், இப்ப எல்லாரும் பார்க்கிறாங்க. நான் ஏதும் செய்தால் எல்லாமே தப்பாகிவிடும். அதனால நீ தான் மிருவுக்கு ஏதும் ஆகாமல் பார்த்துக்கணும் என்றது. சிம்மா ஆர்வக்கோளாறு இடையில வரக்கூடாது.
“ஆர்வக்கோளாறா?” என்று சிம்மா கேட்க, நட்சத்திராவும் தமிழினியன் அருகே செல்ல, “ஓய் நீ என்ன பண்ற?” என்று அவள் முந்தானையை பிடித்தான் சிம்மா.
மாமா, நீ போலீஸ் தானே. “நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்க?”
“நீ இங்க வா” என்று அவளை வரச் சொன்னான்.
“சீக்ரெட் பிளானா மாமா?”
மண்ணாங்கட்டி. மிருவை அவன் தான் காப்பாற்றணும். இடையில போய் கெடுத்து விட்றாத என்றான் சிம்மா.
“அப்ப பிளான் இல்லையா?”
அவன் முறைத்தான்.
அத்த, உங்க பையன் போலீஸ் ஆனதை காட்டுகிறாராம். எப்ப பாரு முறைச்சுக்கிட்டே இருக்காரு. “வெரி பேடு” என்று தமிழிடம் செல்ல இருந்த நட்சத்திரா கையை பிடித்தான்.
“அமைதியா இருக்கீங்களா?” தமிழினியன் சத்தமிட்டான்.
இனியா, “உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை?” அவன் அம்மா கேட்க, “இது தேவையானது தான்” என்று மிருளாலினியை பார்த்து, “கையை விடு” என்றான்.
“மிருளாலினி அவனருகே செல்லக் கூடாது” என்று கிளையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
“என்ன செய்றம்மா?” தம்பி சொல்ற மாதிரி கையை விடும்மா என்றார் பரிதி. அவள் காதில் வாங்காமல், “எல்லாரும் போங்க” என்று சத்தமிட்டாள்.
இரவு நேரம். இறந்த தன் கணவன் செய்வதை பொறுக்க முடியாமல் மனதினுள் வேதனையுடன் மிருளாலினி காலையிலிருந்து சந்தித்த போராட்டங்கள் அவளை களைப்புற செய்தது. அவள் கண்களை மூட அவள் உலகமே இருட்டானது போல் ஓர் உணர்வு. மயக்கம் அவளை தழுவ கண்ணீருடன் மரக்கிளை முறிந்து கீழே விழுந்தாள்.
அனைவரும் சத்தமிட, தமிழினியன் அவளை பிடித்துக் கொண்டே கீழே விழுந்தான். பின் அவளை பார்த்தான். கண்ணிலிருந்து கண்ணீர் வடிய, அவளுடைய மென்மையான இதழ்கள் இறுக்கமாக இருந்தது. முகம் முழுவதும் சோகம். மேலே விழுந்து கிடந்த அவளை கண்ணீர் ததும்பும் சோகமாக அவளை பார்த்து மனம் நொந்தான் தமிழினியன்.
சிம்மாவும் மற்றவர்களும் அவர்களிடம் வர, கையை உயர்த்தி அனைவரையும் நிற்க வைத்து அவளை தூக்கி அவன் வீட்டிற்கு செல்ல, நோ..என்று சத்தமிட்ட நட்சத்திராவின் வாயை அடைத்தான் சிம்மா.
ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..என்று சத்தமிட்டு, அவன் கையை தட்டி விட்டு, “மாமா என்ன பண்ற?” என்று கேட்க, அர்சு, வேல்விழியும் மற்றவர்களும் வீட்டிற்குள் சென்றனர்.
“வாங்க போகலாம்” என்று நட்சத்திரா அழைக்க, “கோவிலில் வைத்து பார்த்த போது பேசவே தயங்கியது போல் இருந்ததே!” என்று சந்தேகமாக பார்த்தான் சிம்மா.
ரொம்ப வருசம் கழித்து பார்த்தேன்ல்ல. அதான் என்று தன் மகன் பின்னே சென்றாள். “என் கோபத்தையே மறக்கடிச்சுட்டா” என்று சிம்மா புன்னகையுடன் அவள் பின் சென்றான்.
மிருளாலினியை தமிழினியன் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா? அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.