அத்தியாயம் 7

மேம், “என்ன பண்றீங்க?” எங்க மேம்மை ரசிக்கலாம். அதுக்காக இப்படியெல்லாம் பாக்குறீங்க? என்ற பிரகா, “எக்ஸ்யூஸ்மி” என்று “எங்கே ஸ்மைல்” என்று திடீரென புகைப்படம் எடுக்க வந்தாள்.

“என்னம்மா திடீர்ன்னு பண்ற?” நிஷா கேட்க, மேம் வெயிட் பண்ணுங்க என்று ரித்திகா இடவல பக்கமிருந்த பாலா, வர்சனையும் ரித்திகாவுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து பிரணவ்விற்கு அனுப்பினாள்.

இருவரும் ரித்திகாவை பார்த்து விட்டு, அய்யோ போச்சி..பிரகா அலைபேசியை கொடு என்று வர்சனும் பாலாவும் எழுந்தனர்.

“மாட்டுனீங்கடா” என்று அவள் சொல்ல, பாலா போன் அலைபேசி அழைத்தது.

பிரகா, “என்ன செஞ்சு வச்சுருக்க?” என்று அலைபேசியை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பாலா.

என்ன பாலா, “இப்ப மேம்மை பிரபோஸ் பண்ணு பார்க்கலாம்” நக்கலாக பிரகா கேட்க, “அப்பாடா நல்ல வேலை செஞ்ச பிரகா” என்ற ஸ்ரீ, நான் தப்பினேன் என்றாள்.

“என்ன நடக்குது?” கோபமாக  உதிரன் கேட்க, சார் மேம் பக்கத்துல பசங்க யாரும் போனாலே எங்க பாஸ் கொந்தளித்து விடுவார். மேம் மேல அவ்வளவு லவ் என்றாள்.

“என்னது பசங்க பக்கத்துல்ல இல்லாம எப்படி பிராஜெட் பண்ணுவீங்க?” ரட்சகன் கேட்டார்.

“பாஸூம் பக்கம் இருப்பார் சார்” என்றாள் தக்சி.

அவர் புன்னகையுடன், “எப்படியோ நல்லா இருந்தா சரிதான்” என்று ரித்திகாவை பார்த்தார்.

பிரணவ் வர்சனுக்கு அழைப்பு விடுக்க, அவன் எடுத்தான்.

சார், “நீங்க எங்க பாஸோட லவ்வ பாக்குறீங்களா?” என்று தக்சனா கேட்க, ம்.. “பார்க்கலாமே!” என்றார் ரட்சகன்.

டேய், “என்னடா பண்றீங்க?”

பாஸ் சும்மா பேசிட்டு இருந்தோம்.

“பேசிட்டு தான் இருந்தியா?” என்று சினமுடன் பிரணவ் கேட்க, ஆமா பாஸ், “மேம்கிட்ட கேளுங்க” என்று ரித்திகாவை இழுத்தான்.

“பாலா பக்கம் இருக்கானா?”

எஸ் பாஸ்.

“ஸ்பீக்கரில் போடு” என்றான் பிரணவ்.

பாலா சார், “கால் பண்ணா எடுக்க மாட்டீங்களோ?”

பாஸ், நாங்க வேலையா இருக்கோம் என்றான் முகத்தை சுளித்துக் கொண்டு..

ஆமா, “நீங்க மட்டும் தான் வேலையா இருக்கீங்க?” நாங்க வெட்டியா இருக்கோம்ல்ல.

சரி பாலா, உனக்கும் வர்சனுக்கு செட்டில்மன்ட் பண்ணிடலாம். நீங்க வேற வேலைய பார்த்துக்கோங்க என்று அவன் கூற, “பாஸ்” என்றனர் இருவரும்.

சரி, “சொல்ல வேண்டியதை சொல்லுங்க” என்றான் பிரணவ்.

தலையில் அடித்துக் கொண்ட பாலாவுடன் வர்சனும் சேர்ந்து, “பாஸ் இனி எந்த காரணத்திலும் நாங்கள் மேம் அருகே செல்ல மாட்டோம்” என்று பள்ளி மாணவர்கள் பேசுவது போல் பேச, ரட்சகன் சிரித்தார்.

நாங்க சீரியசா இருக்கோம். “யார் சிரிக்கிறது?” பிரணவ் கேட்க, பாஸ் சார் என்றாள் தக்சனா.

பிரணவ் கண்ணா, “எப்படி இருக்கீங்க? இருந்தாலும் கட்டிக்கப் போகும் பொண்ணு மீது இவ்வளவு பொசசிவ்வா?” என்று அவர் சிரித்து கேட்க, “அங்கிள் கிண்டல் பண்ணாதீங்க” என்றான் அவன்.

ஏது, “இது கிண்டலா?” டேய் இது ஓவர். பாவம்டா அந்த பொண்ணு..என்று நிஷா குரல் குடுக்க, ஹேய் மைனா குஞ்சு, “நீயும் பக்கத்துல தான் இருக்கியா? எப்படி என் செலக்சன்?”

“நாட் பேடு” என்றாள்.

ஓய், என்ன நாட் பேடு? “ஷி இஸ் மை ப்யூட்டி பேரட்” என்றான்.

“பேரட்டா?” என்று நிஷா ரித்திகாவை உற்று பார்த்தாள். ரித்திகா அவளை முறைக்க, டேய் பேரட் காரமா முறைக்குதுடா என்றாள். உதிரனுக்கு டென்சன் ஏறியது.

எஸ், “தட்ஸ் மை ஒன் அண்டு ஒன்லி சில்லி பேரட்” என்றான். உதிரன் சினமாவதை பார்த்த ரித்திகா, பாலாவிடமிருந்து அலைபேசியை வாங்கி, பாஸ் நாங்க பேச வேண்டியது நிறைய இருக்கு. பசங்க காலையிலிருந்து சாப்பிடலை. இப்படி நீங்க பேசிட்டு இருந்தால் நேராக இரவு உணவுக்கு தான் நாங்க போகணும். அதனால நீங்க அப்புறம் பேசுங்க என்றாள்.

“என்னோட பேரட் இன்னும் சாப்பிடலையா?”

ஆமா சார், உங்க கிளிக்கு ரொம்ப பசிக்குதாம். கொஞ்சம் விடுறீங்களா?

சரி, பாலா வர்சனுக்கு இது தான் கடைசி வாய்ப்பு என்றான் பிரணவ். “அப்பாடா தப்பித்தோம்” என்றனர் இருவரும்.

ஓ.கே, “எங்கே மாமாவுக்கு கிஸ் கொடு?” அவன் கேட்க, “அய்யோ போச்சு” என்று நிஷா உதிரனை பார்த்தாள். அவன் பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

என்னோட மாமாவுக்கு இப்ப கிஸ் பண்ண முடியாது. “நான் சாப்பிட்டு கொடுக்கவா?” என்று உதிரனை வெறுப்பேற்றினாள் ரித்திகா.

ஒன்னே ஒன்னு மட்டும் ப்ளீஸ் என குலைந்தான்.

பாஸ், இங்க நாங்க மட்டும் இல்லை ஸ்ரீ சொல்ல, என்னோட செல்லக்கிளி அருகே இருப்பவர் அனைவரும் காதை மூடிக்கோங்க என்று க்யூட்டாக அவன் சொல்ல, “வாட் எ ரொமான்ட்டிக்?” என்றாள் ஸ்ரீ.

பாஸ், “போன் ரொமான்ஸா?” வர்சன் கிண்டலாக கேட்க, “டேய் நீ இன்னும் போகலையா?” டிஸ்டர்பன்ஸ் என்றான் பிரணவ்.

“என்னது? நாங்க டிஸ்டர்பன்ஸா..?”

வேலை செய்யும் போது கூட எங்க பாஸ் சும்மாவே இருக்க மாட்டார் சார். நினைச்ச நேரம் யார் இருக்காங்கன்னு பார்க்கமால் ரித்திகா மேம்மிற்கு கிஸ் கொடுத்திருவார். இதை விட இந்த பிராடெக்ட் தயாரிக்க எங்க லேப்பில் வைத்து திடீரென அவர் கொடுத்த முத்தத்தில் மேம் பயந்து கையிலிருந்த ஆசிட்டை கீழே போட்டாங்க. நல்ல வேலை காலில் ஃபைபர் சாக்ஸ் போட்டிருந்தாங்க. அதனால் தான் அன்று தப்பிச்சாங்க. இல்லை அவங்க கால் வெந்து போயிருக்கும் என்றான் வர்சன். மூவரும் அதிர்ச்சியுடன் ரித்திகாவை பார்த்தனர்.

“ஏன்டா வர்சா? உன்னிடம் யாராவது கேட்டாங்களா?” கோபப்பட்ட பிரணவ்விடம், “ப்ளீஸ் பாஸ். நானே உங்களுக்கு கால் பண்றேன்” என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல் அலைபேசியை வைத்து விட்டாள் ரித்திகா.

ரித்திகா தன் காலில் இருந்த செப்பலை அவிழ்க்க குனிந்தால் நிஷா உதிரனின் கையை அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தாள்.

“பாசமா இருக்குற மாதிரி எப்படி முகத்தை வைச்சிட்டு கீழே சில்மிசம் பண்ணிட்டு இருக்கார்” என்று ரித்திகா மனதினுள் உதிரனை திட்டிக் கொண்டிருந்தாள்.

நிஷாம்மா, “இவங்க தங்க ஏற்பாடு செய்யுங்க” என்றார் ரட்சகன்.

சார், “இரு வாரத்திற்குள் முடிச்சிருவீங்கல்ல?” ரித்திகா கேட்க, இல்லம்மா ஒரு மாதம் ஆகும். எல்லாரும் இங்கே இருக்கட்டும். நீங்க என்கேஜ்மென்ட்டுக்கு போயிட்டு வந்த பின் முடிச்சுக்கலாம் என்றார்.

இல்லைன்னா..உங்க விழாவை தள்ளி வையுங்க என்றார்.

நோ, சார் அது மட்டும் முடியாது.

“உனக்கு பிரணவ்வை ரொம்ப பிடிக்குமோ?” அவர் கேட்க, “ஆமா சார்” என்று உதிரனை பார்த்துக் கொண்டே தலையசைத்தாள். அவன் கோபத்தில் முகம் சிவந்தான்.

சார், நான் லேப்பிற்கு போறேன். இவங்க பிராடெக்ட்டை நிஷா கொண்டு வரட்டும் என்று உதிரன் நிற்காமல் செல்ல, “என்ன இது அதிசயம்?” நியூ பிராடெக்ட். ஆர்வமாக வேலை செய்பவன். உன்னை எடுத்து வரச் சொல்கிறான் என்று ரட்சகன் செல்லும் உதிரனை பார்த்துக் கொண்டே கேட்டார்.

டாட், அவனுக்கு வேலை இருக்கும். நான் பார்த்துக்கிறேன் என்று நிஷா சொல்ல, ரித்திகா மனம் வலித்தது.

“லேப்பிற்கு செல்கிறேன்” என்று வெளியே வந்து விட்டான் உதிரன். ரித்திகா தங்குமிடத்தை அடைய அவள் அலைபேசி அழைக்க, அவள் வெளியே சென்றாள். அவள் பின் பாலாவும் அலைபேசியுடன் சென்றான்.

“சொல்லுடா?” என்று ரித்திகா கேட்க, “என்ன சொல்லணும்?” மகிழ் கேட்டான்.

“எங்க இருக்க?”

“உனக்கெதுக்கு?” என்று வேண்டா வெறுப்பாக கேட்டான் மகிழன்.

மகிழ், புரிஞ்சுக்கோ. நம்ம நிலைய சரி செய்யணும். இந்த வருசம் நீ முடிச்சிட்டேன்னா டாக்டர் ஆகிடுவ. எல்லாமே சரியாகிடும் என்றாள்.

“சரியாகுமா? எது சரியாகும்? உன்னை நான் எப்படி நினைத்தேன்? நீ என்ன செஞ்சுட்டு இருக்க?” நான் தான் சொல்றேன்ல்ல. அம்மாவிற்கு தேவையான எல்லாவற்றையும் நான் கவனித்துக் கொள்கிறேன்

“நீயா? உன்னால எப்படிடா முடியும்?” முதல்ல படிப்பை முடி.

ஓ..”அதுவரை அவனுடன் இருக்கப் போறீயா?” மகிழ் கேட்க, இல்லடா..”ப்ளீஸ்” என்று அழுதாள் ரித்திகா.

“கல்யாணம் வேற நடக்கப் போகுதாமே!” அப்புறம் என்ன மேடம் பணக்காரியாகிடுவ. “உன் காட்டுல மழை தான்” என்றான் மகிழ். அவள் கண்ணீர் அவள் கண்ணில் போட்டிருந்த மையை கரைத்தது.

“எனக்கு என்ன தோணுது தெரியுமாக்கா?” நீ அவனை கல்யாணம் செய்வது போல் தெரியல. “விலைமாதுவானது போல் இருக்கு” என்று சொல்லி விட்டு மகிழ் அலைபேசியை  தூக்கி எறிந்தான்.

நான்..விலைமாதுவா? என்று கதறி அழுதாள். பத்து நிமிட அழுகைக்கு பின் தன் முகத்தை சீர் செய்து எழுந்தாள் ரித்திகா. கட்டுப்படுத்த முடியாத அழுகை கண்ணீராய் வந்தது. ஓரிடத்தை வெறித்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

அவளை தேடி வந்து கொண்டிருந்த பாலா ரித்திகாவை பார்த்து, ரித்து..வா போகலாம். பசிக்குதுன்னு சொன்ன? என கேட்டுக் கொண்டே அவளருகே வந்து அவள் கண்ணீரை பார்த்தான்.

ரித்து, “எதுக்கு அழுற?” என்று அவளை நெருங்கினான். அவள் அசையாது ஒருவாறு நின்று கொண்டிருந்தாள். ரித்து..என்னாச்சு என்று அவளை உலுக்கினான். அவள் கண்ணீர் அதிகமானது.

“பிரச்சனையா ரித்து?” அவன் கேட்க, அவள் பதிலளிக்காமல் அழுதாள். அவளை அணைத்து ஆறுதலளித்தான் பாலா. சரியாக உதிரன் இருவரையும் பார்த்தான்.

அந்நிலையிலும் உதிரனை பார்த்த ரித்திகா, மாமா..உன்னை பார்ப்பேன்னு நினைக்கலை. ஆனால் இந்த நிலையில் உன்னை பார்ப்பதை விட நான் சீக்கிரம் இங்கிருந்து செல்வது தான் சரியாக இருக்கும் என்று பாலாவிடம், பாலா எனக்கு அம்மா, அப்பா நினைவாகவே இருக்கு என்று மேலும் அழுதாள் உதிரனை பார்த்துக் கொண்டு.

அவளை விலக்கிய பாலா, “ரித்து இதுக்கா இப்படி அழுற?” என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டு, “ரித்து” என்று அவளை நெருங்கி மயக்கத்துடன் பார்த்து அவள் இதழ்களை நெருங்கினான் பாலா.

உதிரனை பார்த்துக் கொண்டே மெதுவாக கண்களை மூடினாள் ரித்திகா. உதிரன் பயங்கர கோபமாக இருவரையும் பார்த்துக் கொண்டே அருகிலிருந்த மரத்தில் அவன் கையை குத்தி காயமாக்கினான். மனதில் பயத்துடன் நின்றாள் நம் அல்லிக்கொடி ரித்திகா.

வேகமாக வந்த உதிரன் சினமுடன் பாலாவை தள்ளி விட்டு ரித்திகாவை முத்தமிட பாலா என நினைத்து அவனை தள்ளி விட்டாள் ரித்திகா.

சார்..என்று பாலா சத்தமிட, ரித்திகா அவனை தள்ளியதில் சீற்றமான உதிரன் மேலும் ரித்திகாவை முத்தமிட்டான். இத்தனை வருட கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்தான் உதிரன். உதிரன் முத்தமிட ரித்திகா அவனை அணைத்து முத்தமிட்டாள். அவன் அவளை நகர்த்தி கோபப்பார்வை வீசினான். இவளோ “தேங்க்ஸ் மாமா” என்றாள்.

தேங்க்ஸ்ஸா, ச்சீ..கல்யாணம் பண்ண ஒருவனை வச்சிட்டு இன்னொருவனை கட்டிப்பிடிக்குற? நான் முத்தம் கொடுத்ததற்கு “தேங்க்ஸ்” வேற என்று காரி உமிழ்ந்தான் உதிரன். ரித்திகா உடைந்து கண்ணீருடன் அவனை பார்த்து மீண்டும் “தேங்க்ஸ்” சொல்லி விட்டு அழுது கொண்டே ஓடினாள்.

“ரித்து” என்று அதிர்ச்சியுடன் பாலா எழுந்தான்.

என்னடா ரித்து? “இதுக்கு மேல அவ பக்கம் போன அவ்வளவுதான்” என்று பாலாவிடம் உதிரன் சத்தமிட்டான். மாமா என அவள் அழைத்ததை பாலா கேட்டிருக்க மாட்டான்.

சார், “நீங்க என்ன பண்ணீட்டிங்க? அவ அழகா இருந்தா இப்படியா முத்தம் கொடுப்பீங்களா?” என இருவர் பற்றியும் அறியாமல் அவனும் அவன் பங்கிற்கு உதிரனிடம் கத்தி விட்டு சென்றான் பாலா.

அறைக்கு வந்த ரித்திகா கண்ணீருடன் படுக்கையில் குப்புற படுத்து தேம்பி தேம்பி அழுதாள். மாமா நீயும் என்னை கேவலமா நினைச்சுட்டேல்ல? மகிழ் என்ன வார்த்தை சொல்லீட்டான் தெரியுமா? நான் எதுக்கு உயிரோட இருக்கேன்னே தெரியலை.

இல்ல மாமா. நான் இப்ப இருக்கணும் இல்லைன்னா பிரச்சனையாகிடும் என்று அவளாக பேசிக் கொண்டிருக்க, அறைக்கதவை தட்டிய பாலா, மேம் சாப்பிடணும். வாங்க என அழைத்தான்.

எனக்கு எதுவும் வேண்டாம் பாலா. நான் ஈவ்னிங் வாரேன் என்று அவள் மீண்டும் அழுகையை தொடர்ந்தாள். மனம் ஓய்ந்து களைத்து தூங்கி விட்டாள்.

பாலா அனைவரும் சாப்பிடும் இடத்திற்கு வந்தான். பஃப்வே புட் சிஸ்டம் அரேஜ் செய்திருந்தனர்.

பாலா, “நீ மட்டும் வர்ற? மேம் எங்கே?” ஸ்ரீ கேட்க, அவங்களுக்கு பசிக்கலையாம் என்று அமைதியாக அமர்ந்தான்.

வா, நாம சாப்பிட எடுத்து வருவோம் வர்சன் அழைத்தான். யோசனையுடன் பாலா உதிரனை பார்த்தான். அவனும் இவனை தான் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

பாலா எழுந்தான்.

“எங்கடா போற?” வர்சன் கேட்க, “சைட் அடிக்க பொண்ணுங்களை பார்க்க போவான்” என்று தக்சனா கூற, அவன் ஏதும் பேசாமல் செல்ல, “நில்லுடா” என்று பிரகா அவனிடம் வந்து, “எங்க போறன்னு சொல்லீட்டு போ” என்றாள்.

எனக்கு மனசு சரியில்லை. “என்னை தனியா விடுறீங்களா?” அவன் கத்தினான். எல்லாரும் அவனை திகைத்து பார்த்தனர்.

“என்னாச்சுடா? ஏதும் பிரச்சனையா?” பிரகா கேட்க, ப்ளீஸ் பிரகா என்னை தனியா விடுங்க என்று கண்கலங்க வெளியே சென்றான். உதிரன் அவனை பார்த்துக் கொண்டு சாப்பிடாமல் எழுந்தான்.

உதி, “சாப்பிடலையா?” நிஷா கேட்க, பசிக்கலை என்றான்.

“பசிக்கலையா? இல்ல மனசு வலிக்குதா?” நிஷா கேட்க, “இல்லை” என்று மட்டும் சொல்லி விட்டு அவனும் அறைக்கு சென்றான்.

மாலை நேரம் குளித்து தயாராகி அவளாகவே கேண்டின் வந்தாள் ரித்திகா. அங்கே வந்தவுடன் பிரகா அவளிடம் வந்தாள்.

மேம்,” டீ சூப்பரா இருக்கு” என்று அவள் சொல்ல, தேங்க்ஸ் என்று எல்லா பக்கமும் பார்த்து, டீயை எடுத்து வந்து தனியே ஓரமாக வெளிக்காற்று அவள் மீது படுமாறு அமர்ந்தாள்.

மேம், எங்களோட சேர்ந்துக்கோங்க என்று ஸ்ரீ அழைத்தாள்.

இருக்கட்டும். நான் தனியே இருக்கணும் என்று உதிரனை பார்க்கும் திராணியற்று சன்னல் பக்கமாக வெளிக்காற்றுடன் மரம், பறவைகளின் கீச்சிடும் சத்தம் கேட்குமாறு அமர்ந்தாள். ஆனால் டீயை எடுக்காமல் வைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

நிஷாவும் உதிரனும் அவளை பார்த்தனர். உதிரனுக்கு அவள் மீதான கோபம் கொஞ்சமும் குறையவில்லை. ஆனால் அதையெல்லாம் கவனியாது சன்னல் பக்கம் இரு குருவிகளின் கொஞ்சலையும் கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.

மேம், உங்க அலைபேசி  அழைக்குது..என்று ஒருவன் திடீரென அருகே வந்து பேச, பயந்து எழுந்தாள். அவள் மீது டீ கொட்டி விட்டது.

மேம்..என்று தன்சிகாவும் அவள் குழுவினரும் வந்தனர்.

அமைதியாக “வெயிட்” என்று நகர்ந்து வாஷ் பண்ண சென்றாள். பாலா அவளிடம் வர, நோ பாலா நான் பார்த்துக்கிறேன். சுட்டு விட்டதா மேம் அவன் கவலையாக கேட்க, நோ..என்று அவள் நகர்ந்தாள்.

உதிரன் கலங்கி அமர்ந்திருந்தான். “ஊரில் எப்படி இருந்த பொண்ணு?” அவளை தாங்கும் அம்மா, அப்பா..அவளை ஏதும் தவறாக சொல்ல கூட விடாத அண்ணன், தம்பி. அப்புறம் என் ரித்தி..என்று உதிரன் நினைவு பின்னோக்கி சென்றது.

“மாமா…லவ் யூ” என்று சொல்லிக் கொண்டே உதிரன் பின்னாலேயே கல்லூரியை வலம் வந்தவள் ரித்திகா. யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை “என் மாமா” என்று அனைவரிடமும் கெத்தாக சுற்றி பிரபசரிடம் திட்டு வாங்கி, அவளுடைய மாமாவிற்கு “பிளையிங் கிஸ்” என தாராளமாக கொடுத்த வள்ளல். அவளை ரசித்து பார்த்த உதிரன், இப்பொழுது.. என முகத்தை சுருக்கினான். ஆனால் அவள் அங்குள்ள யாரையும்  கண்டுகொள்ளாமல் வாஷ்ரூம் சென்றாள். எல்லாரும் அமர்ந்தனர்.

மெதுவாக விலகிய உதிரன் அவள் சென்ற இடத்தை அடைந்தான். அவள் குனிந்து வாஷ் செய்து கொண்டிருக்க, “மேம் நீங்க இப்படி தான் எல்லாரையும் உங்க பக்கம் வர டிரிக் யூஸ் பண்றீங்களா?” என்று நக்கலாக கேட்டான். அவள் பதிலளிக்காமல் மனதில் வலியுடன் துடைத்துக் கொண்டிருந்தாள்.

“சொல்லுங்க மேம்?” என்று அவளது முடியை விலக்கி ரித்திகா தோளில் கை வைத்தான். அவள் அலைபேசி அலறியது.

“யாரு? உங்க ஹஸ்பண்டா? பாலாவா? இல்லைன்னா வேற எவன்?” என்று கேட்டான்.

அவள் நகர்ந்து, “சாரி சார் நான் கிளம்பணும்” என்றாள்.

“அதுக்குள்ளவா?” நானாக வந்திருக்கேன். “எனக்கு ஃபேவர் பண்ண மாட்டீங்களா?” என்று அவளை அவன் பக்கம் திருப்பினான். அவள் தலை கவிழ்ந்து நிற்க, “மேம் உங்கள மாதிரி பொண்ணுங்களுக்கு வெட்கமெல்லாம் வருமா?” என்று கேட்டான்.

அவள் கண்ணீருடன் நின்றாள்.

வராதுல்ல மேம். “எனக்கும் ஃபேவர் பண்ணீட்டு போங்க” என்றான் உதிரன்.

“நான் பேசணும்” என்று மெதுவாக சொன்னாள்.

அவளை இழுத்து அணைத்த உதிரன், “உனக்கு எவ்வளவு பணம் வேணும்? நானும் தாரேன் வர்றீயா?” என கேட்டான்.

“என்னோட உதி மாமாவா இது? இப்படி பேசுகிறாரே!” என்று கண்ணீர் அருவியாக கொட்டியது அவளுக்கு.

“எதுக்கு மேம் அழுறீங்க? உங்களுக்கு தான் பிடிச்சிருக்கே! தேங்க்ஸ் சொன்னீங்களே!” என்று அவளை மேலும் இறுக்கினான்.

ப்ளீஸ், என்னை விடுங்க. எல்லாரும் தப்பா நினைக்கப் போறாங்க என்றாள்.

தப்பாவா? ஓ…தப்பாகவா? பரவாயில்லை நினைச்சிட்டு போகட்டும் என்றான். அவள் கண்ணீருடன் அவனை விலக்கி நிமிர்ந்து பார்த்தாள்.

ஒரு வேலை அப்பொழுது கூட என் உடலுக்காக தான் “மாமா மாமா” என சுத்துனீங்களோ? என கேட்க, அவள் நிற்க முடியாமல் அங்கேயே அமர்ந்து விட்டாள்.

“என்னாச்சு? நான் கண்டுபிடிச்சுட்டேன்ல்ல? பயமா இருக்கா? இதுக்கு எதுக்கு பயம்? இருவருக்கும் பிடித்த விசயம் செய்ய என்ன பயம்?” இதுக்கெல்லாம் பயம் தேவையில்லை. இன்று இரவு நான் சொல்லும் இடத்திற்கு வா என்று அவன் சொல்ல, வேண்டாம் சார்..

“சாரா? நான் உங்க மாமா? மறந்து போச்சா” அவன் கேட்க, அவளுக்கு மனம் சுள்ளென வலிக்க ஆரம்பித்தது. “ஒரே ஒரு கிஸ்” என்று உதிரன் ரித்திகாவின் இதழை அடைந்தான். அவள் உடைந்து அமர்ந்திருந்தாள். அவளை அப்படியே விட்டு உதிரன் சென்றான். அவன் வெளியே வந்தும் அவள் வரவில்லை.

பாலா, “நீ மேம்மை பார்த்தாயா?” அவங்க வெளியே வரவேயில்லைன்னு நினைக்கிறேன் என்று ஸ்ரீ சொல்ல, “வா நாம பார்த்து வரலாம்” என்று பிரகாவும் ஸ்ரீயும் உள்ளே சென்று பார்த்தனர். முன்னே அவள் இல்லை. உள்ளே தள்ளியிருந்த அறையில் மயங்கி இருந்தாள் ரித்திகா.

பாலா, வர்சா “வாங்கடா” என்று ஸ்ரீ கத்திக் கொண்டே வெளியே வந்தாள்.

ஏய், “எதுக்கு கத்துற?” எல்லாரும் நம்மை தான் பார்க்கிறாங்க என்று வர்சன் சொல்ல, பாலா..”மேம் மயங்கி கீழே விழுந்திருக்காங்க” என்றாள். பாலா, வர்சன் மற்ற எல்லாரும் உள்ளே செல்ல, உதிரன் நிஷாவும் சென்றனர்.

ஏய், “என்ன இது? ப்ளட்டா இருக்கு?” பாலா கேட்க, உதிரன் மனம் அடித்துக் கொண்டது.

டேய், மேம் கையில தான் இரத்தமா இருக்கு. அவங்களை இந்த கம்பி தான் கிழித்து இருக்கு. பாரு அதிலும் இரத்தம் என்றாள் ஸ்ரீ.

உதிரன் நிமிடமும் யோசிக்காது ரித்திகாவை பிரகா மடியிலிருந்து தூக்கிக் கொண்டு சென்றான். அவளது அலைபேசியை பாலா எடுத்து சென்றான். சிகிச்சை செய்தனர். பெரியதாக இல்லை என்றாலும் சோர்வுடன் இருந்தாள் ரித்திகா.

பாலா சத்தம் கேட்டு உதிரன் வெளியே வந்தான். ரித்திகாவிற்கு மகிழன் கால் செய்து, “சாரிக்கா கோபத்தில் பேசிட்டேன்” என அழுதிருப்பான்.

மகிழா, “எதுக்கு அழுற?” பாலா கேட்க, “யாரு?” மகிழன் கேட்டான்.

பாலா. உன் அக்காவுடன் வேலை செய்பவன்.

“அக்கா எங்க?”

அவளுக்கு..என்று நிறுத்தி, “நீ எதுக்கு அவகிட்ட சாரி சொன்ன?” பாலா கேட்க, நான் அக்காகிட்ட பேசணும் என்றான்.

மகிழ், “நான் கேட்டதுக்கு பதில் சொல்லு? எதுக்கு அவகிட்ட சாரி கேட்ட?” என்று கத்தினான். இப்பொழுது தான் உதிரன் வெளியே வந்தான்.

“சொல்லப்போறியா? இல்லையா மகிழா?” என்று அவன் கேட்க, என்னால சொல்ல முடியாது என்று மகிழன் அழுதான்.

“நீ எதுக்கு அழுற?” உங்க இருவருக்கும் இதே வேலையா போச்சு என்று சத்தமிட்டான் பாலா.

பாலா அண்ணா, அக்கா எழுந்தான்னா மட்டும் அலைபேசியை அவளிடம் கொடுங்களேன்..

“எதுக்கு?”

அவ கஷ்டப்படுற மாதிரி பேசிட்டேன்.

“என்ன பேசுன?” கோபமாக அவன் கேட்க, அவன் பேசியதை சொல்ல, “என்னடா பேசிட்ட?” என்று பாலா கண்ணீருடன் அதிர்ந்து நின்றான்.

பாலா, “என்னாச்சுடா?” தன்சிகா கேட்க,  அலைபேசியை பார்த்து, “எதுக்கு அப்படி பேசுன?” பாலா கேட்க, கோபத்துல பேசிட்டேன்.

“கோபமா? உனக்கு அப்படி என்ன கோபம்?” உனக்கு இப்ப கிளாஸ் இருக்கும்ல்ல அவன் கேட்க, “நான் போகலை” என்றான் மகிழன்.

என்னடா, உன்னை உன்னோட பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்குறாங்க. “கிளாஸூக்கு போகாம எங்க இருக்க?” திட்டினான் பாலா. உதிரனும் சிந்தனையுடன் கவனித்துக் கொண்டிருந்தான்.

“நான் பார்ட் டைம் ஜாப்ல்ல இருக்கேன்” என்றான் அவன்.

“என்ன? பார்ட் டைம் ஜாப்பா? இந்த வருடம் முடித்தால் தான நீ டாக்டராக முடியும். ஆனால் நீ என்ன பேசுற?”

ப்ளீஸ், இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க. “நான் அக்காவிடம் பேசணும்” என்று அழுதான். உதிரனை பார்த்த பாலா, மேம் விழிச்சிட்டாங்களா? எனக் கேட்டான்.

ம்ம்..என்றான் உதிரன்.

“நீ பேசு” என்று உள்ளே சென்ற பாலா, “மகிழ் உன்னிடம் பேசணுமாம்” என்றான்.

இல்ல பாலா, “வேண்டாம்” என்றாள்.

“அவன் என்ன செய்றான்னு தெரியுமா?” பாலா கேட்க, அதான் நான் எதுவும் சொன்னால் அவன் கேட்கும் நிலையிலே இல்லை. “என் நிலையை அவனே புரிஞ்சுக்க மாட்டேங்கிறானே!” என்று அழுதாள்.

ஸ்பீக்கரில் போட்டான் பாலா.

ரித்து, சாரி நான் கோபத்துல பேசிட்டேன். என்னால யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் இருப்பதை என்னால ஏத்துக்க முடியல. ப்ளீஸ்,.வா..நம்ம ஊருக்கே போயிடலாம். என்னால காலேஜ் போனாலும் படிக்க முடியலை என அவன் அழ, ரித்திகாவும் கதறி அழுதாள். அனைவரும் அவர்களை புரியாமல் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தனர்.

மகிழுக்கு இவள் செய்யும் அனைத்தும் தெரிந்து ஊருக்கு அழைக்கிறான் என்று உதிரன் ரித்திகாவை மேலும் தவறாக எண்ணினான். ஆனால் பாலாவிற்கு “ஏதோ பிரச்சனை?” என்று மட்டும் தெளிவாக புரிந்தது. அனைவரும் வெளியேறினர்.

உதிரன் யோசனையுடன் வெளியே சென்றான். நிஷா, “நான் அவள பார்த்துட்டு வரவா?” உதிரன் கேட்க, இப்ப வேண்டாம்டா. “அவள் ஓய்வெடுக்கட்டும்” என்றாள் நிஷா.

எல்லாரும் வெளியே நிற்க, எல்லாரும் கிளம்புங்க. நாங்க உங்க மேம்மை பார்த்துக்கிறோம் என்றாள் நிஷா. பாலா வேண்டுமென்றே உதிரனை முறைத்தவாறு அமர்ந்திருந்தான்.

பாலா வா..பிரகா அழைக்க, நீ போ. அவள தனியா விட்டு நான் வர மாட்டேன்.

“தனியாவா? நாங்க பார்த்துக்கிறோம்ன்னு சொன்னேன்ல்ல?” நிஷா கேட்க, “உங்களுக்கு அவள பத்தி என்ன தெரியும்?” அவன் கேட்க, நிஷா பேசும் முன் அவள் கையை பிடித்து சொல்ல விடாமல் உதிரன் தடுத்தான். நிஷாவிடம் உதிரன் அவனை பற்றி எல்லாவற்றையும் சொல்லி இருப்பான்.

“நீ என்ன உதியை முறைச்சுக்கிட்டே இருக்க?” நிஷா கேட்க, மேம் ப்ளீஸ் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க என்று பாலாவின் சிந்தனை பிரணவ்விடம் சென்றது.

உள்ளே ரித்திகாவை அலைபேசி அழைக்க, அவள் எழ ரித்து..இரு. நான் வாறேன் என்று பாலா எழ, அவனுக்கு முன் உதிரன் உள்ளே சென்றான். ரித்திகா உதிரனை பார்க்க முடியாமல் அலைபேசி பக்கம் அவள் கவனத்தை திருப்பினாள்.

உள்ளே வந்த பாலா அலைபேசியை  எடுத்து ரித்திகாவிடம் கொடுத்து விட்டு, உதிரனை முறைத்தான். உதிரன் அவனை கண்டுகொள்ளவேயில்லை.

அலைபேசியை   பார்த்து ரித்திகா கண்கள் கலங்கியது. பாலா, நான் தனியா பேசணும். “கொஞ்சம் வெளிய இருக்கிறாயா?” என்று பாலாவையும் உதிரனையும் பார்த்தாள்.

இருவரும் வெளியேற, “அதிகமாக நடந்து கொண்டோமோ?” என்று சிந்தனையுடன் உதிரன் அமர்ந்தான்.

சார், உங்களை தனா சார் அழைத்தார் ஒரு பொண்ணு உதிரனிடம் வந்தாள். உதிரன் ரித்திகா இருக்கும் அறையை பார்த்தான்.

உதி, “நான் இருக்கேன். நீ உன்னோட வேலைய பாரு” என்றாள் நிஷா. உதிரன் சென்று விட்டான். நிஷா அறை வாசலிலே நின்று கொண்டிருந்தாள்.

“எதுக்கு நிக்குறீங்க?” என்று கோபத்தை விடுத்து பாலா நிஷா அருகே நாற்காலியை நகர்த்தி போட்டான். “தேங்க்ஸ்” என்று அவனிடம் கூறி விட்டு, ரித்திகாவை பார்த்தவாறு அமர்ந்தாள் நிஷா.

பாலா, நீ இங்கேயே இருந்தேன்னா எல்லாரும் தப்பா பேசுவாங்க.

அதுக்கு, “அவள விட்டு போகணுமா?”

அவ பேரு கெட்டுப் போயிரும். அப்புறம் உன் விருப்பம் என்றாள் நிஷா.

நீங்க அவள தனியா விட்டு போகாதீங்க. ஏதாவது அவசரம்ன்னா உடனே என்னை கூப்பிடுங்க என்றான்.

உனக்கு இவளை அவ்வளவு பிடிக்கும்ன்னா உங்க பாஸூக்கு எதுக்கு விட்டு கொடுத்த? நிஷா கேட்க, நான் என் காதலை சொல்லும் முன் தான் அவர் அவளை பார்த்து பேசிட்டாரே!

எத்தனை வருசமா இருவரும் காதலிக்கிறாங்க?

இந்த ஒரு மாதமாக தான் அவளுக்கு புரமோசன் கொடுத்தாங்க. அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறதா அவளே சொன்னா. அதனால தான் பிரமோசன்னு கூட எல்லாரும் அவளை கஷ்டப்படுத்துற மாதிரி பேசுனாங்க. பாஸூம் அவள் மீது காதலாக தான் இருக்கார். அவளை அப்படி தாங்குவார் என்றான்.

அப்படியா? அவள்? என்று கேள்வியுடன் நிஷா பாலாவை பார்க்க, பேசுவா சிரிப்பா. ஆனால் ஏதோ அவளிடம் இல்லாத மாதிரி தெரியுது. அப்பப்ப சண்டை போட்டுப்பாங்க. சோ..தெளிவா ஏதும் தெரியல.

“நீ கேட்கலாமே?”

என்னிடம் மட்டுமல்ல யாரிடமும் அதிகம் பேச மாட்டா. அவள் தம்பியை கூட ஒரு முறை தான் பார்த்திருக்கேன். நான் சகஜமாக எல்லாரிடமும் உரிமையா பேசுவேன். அது போல தான் பேசினேன்.ஆனால் இன்று அவன் என்னிடம் நன்றாக பேசினான். என்னை பற்றி ரித்து சொல்லி இருப்பாலோ?

“அமைதியாகவா இருப்பா?”

ஆமா மேம், அவள் வேலைய பற்றி மட்டும் தான் பேசுவா. நானும் அவளும் ஒன்றாக தான் சேர்ந்தோம். வர்சன் கூட எங்களுக்கு சீனியர் தான் என்றான்.

அப்பொழுது உள்ளிலிருந்து க்யூட்டாக பேசும் பழைய ரித்திகாவின் வாய்ஸ் கேட்டு நிஷாவும் பாலாவும் அவளை பார்த்தனர்.

மேம், “ஒருநாள் கூட இப்படி சிரித்து க்யூட்டா பேசி பார்த்ததேயில்லை” என்று பாலா கதவை திறந்தான்.

“நீ எங்க போற?” நான் பார்க்கிறேன். நீ போ..

இல்ல யாரால சிரிக்கிறான்னு நான் பார்க்கணும் பாலா சொல்ல, நீ அவளிடம் பேசிக்கோ. ப்ளீஸ் புரிஞ்சுக்கோப்பா.

பாலா சோகமாக நகர்ந்தான். நிஷா மட்டும் உள்ளே சென்றாள்.

“மேம்” என்று சிரிப்புடன் நிஷாவை பார்த்தாள் ரித்திகா.

“உன்னை இப்படி பார்க்க எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? சரி யாருடன் பேசுற?” என்று நிஷா கேட்க, மேம் அண்ணாவும் பையனும் என்று மகிழ்வுடன் சொன்னாள். சிம்மாவும் அர்சலனும் வீடியோ காலில் இருந்தனர்.

சிம்மா போல் அர்சு இருப்பதை பார்த்து, அண்ணா நான் முதலிலே நினைத்தேன். “அண்ணிக்கும் உனக்கும் பிறந்தவன் தான?” ரித்திகா கேட்க, “தெரியலை” என்றான் சிம்மா.

அண்ணா, “தெரியலைன்னு சொல்ற?” உன்னையும் பையனையும் பார்த்தால் அப்படியே ஒன்றாக இருக்கீங்க.

அண்ணா, “நான் பேசவா?” என்று அவள் கேட்க, சிம்மா அவளை பார்த்து, “நீ எங்க இருக்க? அது என்ன கையில் கட்டு?” என கேட்டான்.

அவள் கம்பியில் இடித்துக் கொண்டதாக சொன்னாள். பின் அர்சுவிடம் பேசினாள்.

“அத்தையா?”

ஆமா. நான் உனக்கு அத்தை என்றாள்.

அம்மா, “என்னிடம் சொல்லவில்லையே?”

உன்னை போல் உன் அம்மாவை எனக்கும் ரொம்ப பிடிக்கும். அப்புறம் சிம்மாவுக்கும் பிடிக்கும் என்றாள். அர்சு சிம்மாவை பார்த்தான்.

புருவத்தை சுருக்கி, “ஆமாவா?” தலையசைத்து கேட்டான் அர்சு.

சிம்மா கண்கலங்க அர்சுவை பார்த்தான். சிம்மா கழுத்தை கட்டிக் கொண்டு “லவ் யூ” என்றான் அர்சு.

அண்ணா, “அண்ணி பக்கத்துல்ல இருக்காங்களா?” தயக்கமாக கேட்டாள்.

இல்லடா, அவள் அர்சு எங்க பையன்ன்னு ஏத்துக்க மாட்டேங்கிறா..

ஆமா அண்ணா, அண்ணி உன்னிடம் பேசியது கூட இல்லை. “எப்படி குழந்தை?”

எனக்கும் அதான் சுத்தமாக புரியல ரித்து.

டி. என். ஏ டெஸ்ட் எடுத்து பாருண்ணா..

அதை பார்க்காமலே இவன் என் பையன்னு எனக்கு தெளிவா தெரியுது. உன் அண்ணி தான் என்னன்னு சொல்லணும் என்றான் சிம்மா வருத்தமாக.

அண்ணா, காரணமில்லாமல் அண்ணி மறைக்க மாட்டாங்க. கண்டிப்பாக நரசிம்மன்னு ஒருவன் இல்லை. அண்ணி நம்மை நல்லா ஏமாத்தி இருக்காங்க என்றாள்.

ம்ம்..நல்லா ஏமாந்து இருக்கேன் என்று சிம்மா கண்ணீர் வர, அண்ணா ப்ளீஸ் அழாத..

“நான் உன்னை சிம்மான்னு அழைக்கவா?” அர்சு கேட்க, நோ..செல்லம். அத்தையை பாரு. “உன்னோட அப்பா பேர் என்ன?” என்று கேட்டாள்.

நரசிம்மன்..

“நீ அப்பாவை பார்த்திருக்கிறியா?”

அப்பா செத்து போயிட்டாங்களாம்.

உன்னோட அப்பா சாகலைடா. உன்னோட அப்பா பேரிலும் சிம்மா இருக்கு. உன்னருகே இருப்பவர் பெயரும் சிம்மா தான். இவன் என் அண்ணன் சிம்மராஜன். இனி இவரை அப்பாவா வச்சுக்கோ ரித்திகா சொல்ல, “ரித்தி என்ன பேசுற?”

அண்ணா, நீ சும்மா இரு என்றாள் ரித்திகா.

ஆமா, சிம்மா..சிம்மா..அப்படின்னா நான் உன்னை அப்பான்னே கூப்பிடுறேன். எனக்கு அப்பா இல்லைன்னு என்னோட ப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. இனி யாருமே என்னை ஏதும் சொல்ல மாட்டாங்க. அதான் எனக்கு அப்பா இருக்காரே என்று சிம்மாவை கட்டிக் கொண்டான் அர்சலன்.

பாருண்ணா..பெயர் கூட நீ அன்று பேசியது போல் அர்சலன்னு வச்சிருக்காங்க. அர்சலன்..சிங்கத்திற்குரிய பெயராகும். உன் மகன், மகளுக்கு சிங்கத்தின் பெயர் போல் வைக்கணும்ன்னு நீ சொன்னதை வைத்து வச்சிருக்காங்க.

அண்ணா, முதல்ல அண்ணிக்கு ஏதாவது பிரச்சனையான்னு பாரு. அதான் ஏத்துக்க மாட்டேங்கிறாங்க.

சரிம்மா, “அவனோட பேசுறியா?” சிம்மா கேட்டான்.

“பேசுறீயா வா? குடு” அவனிடம் என்று அத்தையும் மருமகனும் வாய்க்கு வாய் பேசி தான் ரித்திகாவின் சிரிப்பை பாலாவும் நிஷாவும் பார்த்தனர்.

அண்ணா, இவங்க நேம் நிஷா. என்னோட பிராடெக்ட்டை அனலைஸ் பண்ண வந்தேன். இது ஓர் ஆராய்ச்சி கூடம் என்றாள் ரித்திகா.

மேம், இவங்கள பாருங்க. “உங்களுக்கு என்ன தோணுது?” என்று நிஷாவிடம் கேட்க, அப்பாவும் மகனும் தான. “இதை என்ன கேட்கிற? வேறெதுவும் இருக்கா?” நிஷா கேட்க, அர்சு குட்டி கேட்டேல்ல.. “எப்படி?” என்று ரித்திகா காலரை தூக்கி விட்டாள்.

அத்த, நீ சொன்னது சரிதான். “லவ் யூ ஸ்மைலி” என்றான் அர்சு.

“ஸ்மைலியா? வாவ், என் செல்லம் க்யூட்டா நேம் வைக்கிறானா?” என்று ரித்திகா கேட்க, “நீ எனக்கு நிக் நேம் சொல்லு?” என்று அர்சு கேட்டான்.

ம்ம்..”மை க்யூட் லையன்” என்றாள்.

“லையனா?” இரு உன்னை கடிக்கவா என்று இருவரும் தங்கள் விளையாட்டை ஆரம்பிக்க, நிஷா ரித்திகாவை பார்த்துக் கொண்டே புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.