திலீப்பும் அவன் குடும்பமும் மிருளாலினி வீட்டிற்கு கிளம்பினார்கள். ரம்யாவை பார்த்து விட்டு செல்லலாம் என திலீப் காரை அவள் வீட்டிற்கு செலுத்தினான்.
சுருதி, “மகிழனிடம் காதலை சொல்லி விடுவோமா?” என எண்ணினாள். அவனும் இவர்களுடன் கிளம்பி இருந்தான். இவர்களுடன் வர மறுத்து அவன் பஸ் ஸ்டாப்பிற்கு சென்று கொண்டிருந்தான்.
ரம்யா வீட்டில் இல்லை என்றவுடன் அருகே விசாரித்தாள் கீர்த்தனா. அவள் தோழியை பார்க்க பஸ் ஸ்டாப் போயிருக்கா என்று பக்கத்து வீட்டினர் சொல்ல, திலீப் அவளை திட்டிக் கொண்டே காரை அங்கே செலுத்தினான்.
சுருதி அப்பா புன்னகையுடன் அவனை பார்த்துக் கொண்டே வந்தார்.
திலீப் காரை நிறுத்த மகிழன் அந்த பக்கமாக தான் நடந்து வந்து கொண்டிருந்தான். ரம்யாவை பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருப்பதை பார்த்து அனைவரும் இறங்கினர்.
கையில் வைத்திருந்த நோட்டை புரட்டிக் கொண்டிருந்த ரம்யா அவள் தோழி பாருவை பார்த்து அவளை நோக்கி வர, அவளோ மிதிவண்டியை சற்று முன்னதாகவே நிறுத்தி விட்டு சோகமாக நடந்து வந்தாள்.
பேருந்து ஒன்று வர, ரம்யா அப்பேருந்தின் இடையே ஓட, அனைவரும் பதறி விட்டனர்.
“ரம்யா” கீர்த்தனா முதலில் ஓடி வர, “தற்கொலை செய்யவா இங்கே வந்தாள்?” என்று திலீப் கோபமாகவும் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான். கீர்த்தனாவும் சுருதியும் அவளை நோக்கி வந்தனர். கீர்த்தனா அழுது கொண்டே ரம்யா..ரம்யா..என அழைத்துக் கொண்டிருந்தாள்.
பேருந்து ஓட்டுனர் பிரேக்கிட்டு பேருந்தை இடப்பக்கமாக திருப்பி நிறுத்தி விட்டு, “ஏம்மா..நீ சாக என்னோட பேருந்து தான் கிடைச்சதா?” அவர் கத்தினார். ரம்யா கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
“அய்யோ ரம்யா” என்று பாரு வேகமாக எழ, கீர்த்தனா அதற்குள் அவளிடம் வந்து அவளை எழுப்பி அழுது கொண்டே அணைத்தாள். திலீப் கோபமாக, “என்ன தான் நினைச்சிட்டு இருக்க?” என இருவரையும் பிரித்து ரம்யாவை ஓங்கி அறைந்தான்.
“அவள அடிக்காதீங்க” என அடுத்து அவன் அடிக்க கையை ஓங்க பாரு தடுத்தாள்.
ரம்யா கண்ணீருடன் திலீப் கீர்த்தனாவை பார்த்து விட்டு, பாருவை விரக்தியுடன் பார்த்தாள்.
ஏன்டி, “இப்படி பண்ண?” பாரு அழுது கொண்டே ரம்யாவை அணைக்க வந்தாள். கீழே கிடந்த அவளது நோட்டை எடுத்த ரம்யா..அவளை தள்ளி விட்டு, “நீ இப்ப என்னடி செஞ்ச?” என்று கையில் எடுத்த நோட்டாலே அவளை விட்டு விலாசினாள்.
சாரிடி..சாரி..சாரி..என அழுத பாரு, “என்னால முடியலடி” என்று ரம்யாவை அணைத்தாள்.
நீயாவது என்னோட இருப்பன்னு நினைச்சேன். காதலிச்சா சொல்ல தைரியம் இருக்கணும். “இப்படியா பண்ணுவ?” எனக்கு உயிரே போச்சு என்று ரம்யா அழுது கொண்டே அவளை அணைத்தாள்.
“என்ன? நீ தற்கொலை செய்ய வரலையா?” திலீப் கேட்க, “நான் எதுக்கு சாகணும்?” நான் என்னோட பாருவை காப்பாற்ற தான் வந்தேன்.
ஆமா, நான் தான் கோழை. நான் தான் பேருந்தில் விழுந்து சாக வந்தேன். ரம்யா தான் என்னை காப்பாற்றினாள் என்று பாரு அழுதாள்.
“பாரு” என்ற கலக்கமான குரலை கேட்டு எல்லாரும் பேருந்தின் பக்கம் பார்க்க, ரம்யா பின் வந்து மறைந்து நின்றாள் பாரு.
பேருந்திலிருந்து தன் புத்தகப்பையை கீழே போட்டு அவர்களருகே வந்தான் சரவணன்.
சரா..
ரம்யா அவனை முறைத்து பார்க்க, பாரு..என்று ரம்யாவிடம் வந்தான். ரம்யா பாருவை இழுத்து அவன் முன் நிற்க வைத்தாள்.
ஏன்டா, “உங்க காதலுக்கு நான் ஊறுகாயா?” ஹப்பா முடியல. எனக்கு இருக்கிற டென்சன் போதாது. நீங்க வேறடா என்ற ரம்யா சராவிடம் வந்து, பையத்தியக்கார நாயே! அவ உன் பின்னாடி சுத்துறது தெரியாது. “அவளால சொல்ல முடியலைன்னா உன்னால புரிஞ்சுக்க முடியலையா?”
அடியேய், “இந்த உலகத்துல்ல இவன் தான் இருக்கானா? இவனை பிடிச்சிருந்தா சொல்ல வேண்டியது தான..அதுக்காக சாகவா போவ?” என்று திலீப் காரை திறந்து தண்ணீரை எடுத்து மடமடவென குடித்தாள் ரம்யா.
இல்லடி, இவன் தான் அந்த வேணி கூடவே சுத்துறான். உனக்கே தெரியும். இந்த ஒரு வாரமா விலகி விலகிப் போறான். ரொம்ப கஷ்டமா இருந்தது. இன்று நீயும் இல்லை. ரொம்ப கஷ்டமா போச்சு..
“அதுக்கு இப்படி கேனத்தனமா யோசிப்பியா?” என்று சரா..என்று ரம்யா அவனிடம் வந்து,
நான் தான் இப்ப சாவு வரை போயிட்டு வந்திருக்கேன். அது உன் கண்ணுக்கு தெரியலையா? பாவி..பாவி..பாருவை விட்டு விலகுவானாம். ஆனால் பாரு தான் கண்ணுக்கு தெரிவாளாம் என்று ரம்யா அவனை மொத்தி எடுத்தாள்.
“அய்யோ விடுடி அவனை” என்று பாரு ரம்யாவை தள்ள, அடப்பாவி உனக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தேன். “அவனை அடிக்க கூட கூடாதா?” ரம்யா கேட்டாள்.
ரம்மி..இவளும் அந்த ஜெகா கூட பேசிட்டே இருக்கா சரவணனும் சொல்ல, “அட லூசுகளா?..இப்படியா பொறாமைப்படுவீங்க? உனக்கு அதான் பிரச்சனையா?” ரம்யா கேட்க, “இல்லை” என பாருவை பார்த்துக் கொண்டே தலையசைத்தான்.
“அப்புறம் என்னடா?” அது வந்து..கேஸ்ட் பிராபிளம் என்று தயங்கினான்.
இப்பதைக்கு பேசி பழகுங்கடா. “அதுக்குள்ள கல்யாணம் வரை போற?” ரம்யா கேட்க, திலீப் ரம்யாவிடம் வந்து அவளை உற்று பார்த்தான்.
“என்ன?” அவள் கேட்க, “நீ நல்லா இருக்கியா?” எனக் கேட்டான்.
ம்ம்..என்று அவள் சொல்ல, ஆமா..ஸ்கூல் போற வயசுல்ல என்ன லவ்வு? என்று பாருவை பார்த்தான் திலீப்.
ஹலோ, “நீங்க யாரு?” எங்க விசயத்துல்ல தலையிடாதீங்க சரவணன் சொல்ல, “ஒரு ப்ரெண்டா சொல்லலாமே!” என்று திலீப் ரம்யாவை பார்த்துக் கொண்டே சொன்னான்.
ப்ரெண்டா? என்று சரவணன் திலீப்பை பார்க்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில ஸ்கூல் பசங்க தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து, சேர்ந்தவாறு ரம்யா தலையில் ஊற்றினார்கள். மகிழன், திலீப், சரவணன் கோபமாக அவர்களை பார்க்க, அவர்களில் ஒருவன் கன்னத்தில் விழுந்தது அறையொன்று.
வாவ்..சூப்பர். பொண்ணுன்னா இப்படி இருக்கணும். சோ.கூல். க்யூட் என்று கூலருடன் இறங்கி அங்கே வந்தான் விகாஸ்.
“என்னடா சொன்ன?” சுவாதி அவன் தலையை தட்ட, அந்த பொண்ண தான சொன்னேன்.
அவ யாருன்னு நல்லா பாரு.
“என்ன பார்க்கணும்? அதான் இவ்வளவு அழகு கொட்டிக்கிடக்கே!” என்றான். அதிர்ந்து நின்று கொண்டிருந்த விக்ரம் அவனை முறைத்தான்.
“என்ன மச்சான்? முறைக்கிறீங்க?”
டேய், அவ அவரு தங்கை. அந்த ஸ்கூல் பொண்ணு. மறந்துட்டியா? விகாஸ் தலையில் சுவாதி அடிக்க வர, அவள் கையை பற்றி அவன் தடுத்தான்.
“அப்படியா மச்சான்? உங்க தங்கையா?” வசதியா போச்சு என்று அவன் சொல்ல, விக்ரம் அவனை முறைத்து விட்டு சுவாதியை பார்த்தான்.
கீர்த்து..எல்லாரும் அதிர, கீர்த்தனா அறைந்தவன் அவளை அடிக்க கையை ஓங்க, “யாரு மேல கைய வக்கிற?” என்று அந்த ஸ்கூல் பையன் கையை பிடித்து முதுகு பக்கம் திருப்பினான் விக்ரம்.
வீ, “இங்க என்ன பண்றீங்க?” திலீப் அதிர்ச்சியுடன் கேட்க, அண்ணா..என்ற கீர்த்தனா, அவனை விடுங்க என்று விக்ரம் கையை பார்த்து, “உங்களுக்கு என்னாச்சு?” என்று பதறினாள்.
அவனை விட்ட விக்ரம், “போறீங்கலா கையை உடைக்கணுமா?” என கேட்க, அவர்கள் அங்கிருந்து ஓடினார்கள். திலீப் அவனது கைக்குட்டையை ரம்யாவிடம் கொடுத்தான். அவள் முகத்தை துடைத்துக் கொண்டிருக்க, திலீப் “நீ நல்லா தான இருக்க?” என்று அவன் அம்மா கண்கலங்க வந்து அவனை அணைத்தார்.
ம்மா, ஒன்றுமில்லை. நான் நல்லா இருக்கேன் என்றான்.
ஏன்டா அண்ணா, “உனக்கு எப்படா காதல் வந்தது? அதுவும் அந்த பொண்ணுக்கு திருமணமாகிடுச்சு போல!” என விகாஸ் சிரித்துக் கொண்டே, “என்னிடம் சொன்னால் கரெக்ட் பண்ண உதவி இருப்பேன்ல்ல?”
“வாயை மூடுடா” என்ற சுவாதி, அண்ணா அவனை விடு. “அவங்க மேரேஜை நீ பார்த்தியா?” சுவாதி கேட்க, அவன் அம்மா அவனை பார்த்தார்.
அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை என்றான் திலீப்.
ஆமா..ஆமா..அவன் யாரு? என் அண்ணன்ல்ல. இப்படி தான் இருக்கணும் விகாஸ் மேலும் வெறுப்பேற்ற, “சும்மா இருடா” என்று ரகசியன் அவன் தலையிலே ஒரு போடு போட்டான்.
மாமா..என்று ஹரிணி திலீப்பிடம் வந்து குச்சி மிட்டாயை நீட்ட, விகாஸ் அவளை கேலி செய்தான். திலீப் யோசனையுடன் அதனை வாங்கும் முன் அவளே வாயில் போட்டு, சாரி மாமா..”உனக்கு கிடைக்காதே!” என்று வெறுப்பேற்றினாள்.
“என்னடி? என் பிள்ளைய வெறுப்பேத்திட்டு இருக்க?” போடி என்று திலீப் அம்மா ஹரிணியை தள்ள, அவள் வாயிலிருந்த மிட்டாய் கீழே விழுந்தது.
“உனக்கு இது கிடைக்காதே!” என்று சுவாதி ஹரிணியை வம்புக்கு இழுக்க, எதுக்கு ரோட்ல நின்னு பேசிட்டு. வாங்க போகலாம் என்று தாத்தா சொல்ல, “இருங்க” என்ற பாட்டி ரம்யாவை பார்த்து ஏம்மா பொண்ணு, “இங்க வா” என்று திலீப் பாட்டி அவளை அழைக்க, அவள் யோசனையுடன் திலீப்பையும் கீர்த்தனா, சுருதியையும் பார்த்துக் கொண்டே பாட்டி அருகே சென்றாள்.
“இந்தாம்மா” என்று ஒரு குட்டி பாக்ஸை கொடுத்தார்.
“எனக்கு வேண்டாம்” என்று ரம்யா திலீப்பையும் சுருதி அப்பாவையும் பார்த்தாள்.
“வாங்கிக்கோம்மா” என்று சுருதி அப்பா சொல்ல, “எதுக்கு?” ரம்யா பாட்டியிடம் கேட்டாள்.
நீ அந்த குட்டிப்பொண்ணை காப்பாத்துனேல்ல. அதான்..
அவ என்னோட ப்ரெண்டு தான். அதுக்காக எனக்கு எதுவும் வேண்டாம் என்று மறுத்தாள்.
“என்னோட பரிசா வச்சுக்கோ” என்றார் பாட்டி.
அவள் அதை திறந்து பார்க்க, அதில் அழகான தங்க நிற இலைத் தோடு இருந்தது.
பாட்டி, “இது பார்க்க காஸ்ட்டிலியா இருக்கே!” என்று ரம்யா கேட்க “வச்சுக்கோம்மா உனக்கு தான்” என்றார் தாத்தா.
“எனக்கா? என்னை உங்களுக்கு தெரியுமா?” அவள் கேட்க, இல்லம்மா. தோணுச்சு கொடுத்தோம் என்று சமாளித்தார் தாத்தா.
திலீப் சுருதியை பார்க்க, நானில்லை..அப்பா என கையை சுருதி அப்பாவிடம் காட்டினாள்.
“மாமா” திலீப் சுருதி அப்பாவை அழைக்க, மாப்பிள்ள நீங்க செய்தது எப்படியும் தெரிய வந்திரும். அதான் அத்தை, மாமாகிட்ட மட்டும் சொல்லீட்டேன் என்றார் புன்னகையுடன்.
சரி. “இப்ப எதுக்கு எல்லாரும் இங்க வந்திருக்கீங்க?” திலீப் கேட்க, இந்த ஊர் புளியங்கா நல்லா இருக்குமாம் மாப்பிள்ள. அதான் சாப்பிட்டு பார்க்கலாம் என்று வந்தோம் என்று ஹரிணி அம்மா கிண்டலாக கூற, அத்தை..திலீப் கோபமானான்.
“அப்புறம் என்னப்பா? தெரிஞ்ச புள்ளைங்களுக்கு திருமணம் முடிஞ்சிருக்கு. வாழ்த்து கூற வேண்டாமா?” பாட்டி கேட்க, சரி..போய் சொல்லீட்டு வாங்க. நாங்க இங்கேயே இருக்கோம். கிளம்பிடலாம் என்றான் திலீப்.
வாட்? நெவர் மாமா. ஜாலியா எஞ்சாய் பண்ணப் போறோம் என்று ஹரிணி சொல்ல, “எப்படி இப்படி குச்சிமிட்டாயை கீழே போட்டு விளையாடவா?” விகாஸ் கேலி உரைத்தான்.
வீ, “நீ வாய திறக்காத” என்றான் திலீப் கோபமாக.
அய்யோ அண்ணாவுக்கு இவ்வளவு கோபம் வருது. பெரியம்மா, இவன் உங்க பையன் தானா! போச்சு..போச்சு..இவனை காத்துகருப்பு அடிச்சிருச்சு போல. லவ் காத்துகருப்பா என்று விகாஸ் கேட்டான்.
தாத்தா, இவனை வாயை மூட சொல்லுங்க இல்லை அடிச்சிருவேன் என்றான் சினமாக திலீப்.
அய்யோ..முடியலடா. ஏற்கனவே செம்ம டயர்டு. எங்காவது கூட்டிட்டு போங்கடா என்று வேல்விழி அமர்ந்தார்.
ஓ, “நாம எப்ப கிளம்புவோம்?” திலீப் கேட்க, “மாமா ஒரு வாரம் ஆகும்” என்றாள் ஹரிணி.
“என்னது? ஒரு வாரமா? என்னடா சொல்றா? உங்களுக்கு வேலை இல்லையா?” ராஜா, ரகா..திலீப் கேட்க, அண்ணா மேரேஜூக்காக ஏற்கனவே முடிக்க வேண்டியதை முடிச்சிட்டு தான வந்தோம் என்று இருவரும் ஹை பை போட, “என்னிடம் கேட்க மாட்டாயா?” விகாஸ் கேட்க,
ஆமா..நீ கம்பெனி ஆரம்பிச்சன்னு தான் பேரு. என்றாவது போயிருக்கியா? என்ற சுவாதி. எல்லாரும் உனக்கு கொடுக்கும் செல்லம் தான் என்று கடிந்தாள்.
“எனக்கு வேலை இருக்கே!” திலீப் சொல்ல, உன்னோட டீன்கிட்ட பேசி சமாளி என்றார் தாத்தா.
தாத்தா, ஏற்கனவே சனாகிட்ட என்னோட பேசண்டை விட்டு வந்திருக்கேன். இப்ப ஓவர் டைம்ல்லாம் அவ பண்ண மாட்டா என்றான்.
திலீப், நீ கூட ஏதோ கிராமத்துல்ல கேம்ப் அடுத்த வாரம் போடணும்ன்னு சொன்னேல்ல. அதை இங்க மாற்ற சொல்லு. இங்கே எங்களுடன் இருந்த மாதிரியும் உன் வேலை செய்தது போலும் இருக்கும் என்றார் கிருபாகரன்.
ம்ம்..நல்ல ஐடியா தான். ஆனால் பிரசிடன்ட்டிடமும் என்னோட டீனிடமும் பேசணுமே! மகிழ் மட்டும் விகாஸை முறைத்துக் கொண்டிருந்தான்.
சுருதி அவனிடம் வந்து, வீ மாமா அப்படி தான் கண்டுக்காதீங்க என்றாள்.
அவன் தனியா மாட்டட்டும். அப்புறம் வச்சுக்கிறேன் என்று இருவர் மட்டும் தனி உலகில் பேசிக் கொண்டிருந்தனர். சுருதி அம்மா இருவரையும் பார்த்து விட்டு தன் கணவனை பார்த்தான். நான் சொன்னது இவர் தான் என கையசைத்து காட்டினார்.
“என்ன மாமா? காத்துல்ல படம் வரையுறீங்க?” ராஜா கேட்க, “சும்மா தான் மாப்பிள்ளை. ட்ரை பண்ணேன்” என்று சிரித்தார். அவர் மனைவி அவரை முறைத்தார்.
“ரம்யா” என்று கீர்த்தனா அவளிடம் வந்து, அவளை இழுத்து விக்ரம் முன் வந்து, இவர் என்னோட அண்ணா விக்ரம்.
அண்ணா, இவ ரம்யா. என்னோட ப்யூட்டி ப்ரெண்டு என்றாள் புன்னகையுடன். ரசிகா முகம் வாடி இருந்தது. ரகசியன் அம்மா அவள் கையை ஆதரவாக பிடிக்க, சுவாதி ரசிகாவை இழுத்து வந்து, ரம்யாவிடம் இவளும் இவரோட தங்கை தான் என்றாள். கீர்த்தனா முகம் மாறியது. ஆனால் அவள் அதை காட்டவில்லை.
விக்ரம் சுவாதியை முறைத்து விட்டு, ரசிகாவை பார்த்தான். அவள் கீர்த்தனாவை பார்த்தாள்.
ம்ம்..அண்ணாவா? என்று விக்ரமை பார்த்துக் கொண்டே நின்றாள் ரம்யா.
என்னாச்சு ரம்யா? கீர்த்தனா அவளை உலுக்க, “ஒன்றுமில்லை” என்று “ஹலோ அண்ணா” என்று புன்னகைத்தாள். அவளுக்கு அவள் அண்ணா எண்ணத்தில் வர, சுருதி அப்பாவையும் திலீப்பையும் பார்த்து, நடந்த எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம். ப்ளீஸ் என்றாள் கண்ணாலே!.
சரிம்மா, சொல்லலை என்றார் அவர்.
ஹாய், எல்லாரும் சொல்லாமல் வந்திருக்கீங்க? வெல்கம்..என்று சிம்மா வர, அவனை பார்த்த விக்ரம் கோபமாக துப்பாக்கியை நீட்டி, “ஏன்டா சொல்லலை?” என்று சிம்மாவை நோக்கி வந்தான்.
விக்ரம், அது முக்கியமான நேரம்.
“அதுக்கு சொல்லாமல் திருமணம் பண்ணிப்பியா?” விக்ரம் துப்பாக்கியை வைத்து விட்டு அவனை விரட்ட, “மச்சான்ஸ் என்ன சின்னப்பிள்ளை போல விளையாடுறாங்க?” விகாஸ் கேட்க, அவ்விடம் வந்தனர் புகழேந்தியும் பரிதியும் ஒவ்வோர் பக்கமிருந்தும்.
சிம்மாவை விக்ரம் பிடிக்க, விக்ரம் “ஒரு நிமிசம்டா” என்ற சிம்மா, “என்னாச்சு மாமா?” என்று புகழேந்தியை பார்த்தான்.
“ரம்யா” என்று சொல்லிக் கொண்டே அனைவரையும் பார்த்து விட்டு விக்ரமை பார்த்து நின்றார்.
“இவரு மாப்பிள்ள?” புகழேந்தி கேட்க, மாமா..இவன் விக்ரம். என்னோட ப்ரெண்டு என்று சொல்லி விட்டு, விக்ரம்.. மாமா. என் ஸ்டாரோட அப்பா என்றான்.
விக்ரமிற்கும் மாமா தான? ஓ…மாமாவா? என்று விகாஸ் ஆர்ப்பரிக்க, புகழேந்தி அவனை வித்தியாசமாக பார்த்தார்.
“ஆசிர்வாதம் பண்ணுங்க அங்கிள்” என்று அவர் காலில் விக்ரம் விழ, ம்ம்..நல்லா இரு. எழுந்திருப்பா என்று எல்லாரையும் பார்த்தார். ரம்யாவும் அவளது ப்ரெண்ட்ஸூம் அவர் அருகே வந்தனர்.
மாப்பிள்ள, எல்லாரும் தங்க ஏற்பாடு பண்ணுங்க என்றார். தாத்தா முன் வந்து அறிமுகமாகி அவர் குடும்பம் முழுவதையும் அறிமுகப்படுத்தினார்.
“வாங்க” என்று அவர் அழைக்க, பரிதியை பார்த்து எல்லாரும் நன்றாக பேசி அன்னம் நட்சத்திராவை பற்றி கேட்டனர்.
மகிழன், ஏற்கனவே கிளம்பி இருந்தானே! அவன் கிளம்புவதாக சொல்ல, மாப்பிள்ள இன்னும் இருநாட்கள் இருந்துட்டு போகலாமே! புகழேந்தி அழைக்க, இல்ல பெரிய மாமா. நான் என் அக்காவுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு. இங்கிருந்தால் சரிப்பட்டு வராது என்றான்.
மகிழ், “நில்லு” என்று சிம்மா அழைக்க, யார் உதவியும் வேண்டாம். நான் என்ன செய்யணும்ன்னு முடிவெடுத்துட்டேன். நான் போகணும் என்றான் சீரியசாக. பின் ரம்யாவை பார்த்து, என்ன நடந்தாலும் படிப்பை விட்றாத. உனக்கு நீ கேட்ட ரெபரன்ஸ் எல்லாமே நான் தாரேன் என்றான்.
“பிக் சீனியர்? பிரச்சனையா?” ரம்யா கேட்க, முதல்ல உன்னோட பிரச்சனைய பாரு. அப்புறம் இந்த மாதிரி எதுக்கும் ஆகாத உதவியெல்லாம் செய்றேன்னு ரிஸ்க் எடுக்காத என்று அவன் சொல்ல, சரவணன் அவனை முறைத்தான்.
“என்னடா முறைக்கிற?” முதல்ல படிக்கிற வேலைய பாருங்க. அப்புறம் எப்ப வேணும்ன்னாலும் லவ் பண்ணலாம் என்று சொன்னான்.
எல்லாரும் போங்க. நான் பேசிட்டு வந்துடுறேன் தாத்தா என்று திலீப் நிற்க, கீர்த்தனா யோசனையுடன்.. அண்ணா..நீயும் போ. நான் ரம்யாவுடன் கொஞ்ச நேரம் இருந்துட்டு வாரேன்னு சொல்ல, அம்மா நானும் அவளோட இருந்துட்டு வாரேன் என்று சுருதியும் கீர்த்தனாவுடன் நின்றாள்.
ம்ம்..பார்த்து வாங்க என்று விக்ரம் சொல்ல, மச்சான் நான் பத்திரமா அழைச்சிட்டு வந்துடுறேன் என்றான் திலீப். விக்ரம் புன்னகையுடன் நகர்ந்து ரசிகா கையை பிடித்தான்.
மகிழ், “எதுக்கு இப்ப வீட்டுக்கு போற?” சிம்மா கேட்க, போய் வந்து சொல்கிறேன் அண்ணா என்று பரிதியை பார்த்தான்.
மாமா, இவங்களை உதி மச்சானுக்கும் தெரியும். அவரிடம் சொன்னால் எடுத்துட்டு வந்துருவார். இந்த நேரத்துல்ல என்னால மகிழை தனியே விட முடியாது. தாத்தா..கோவிச்சுக்காதீங்க சிம்மா சொல்ல, நீ முதல்ல அவரை பாருப்பா என்றார்.
அண்ணா, நான் பார்த்துப்பேன் என்றான் மகிழன். சிம்மா காதில் அவன் சொல்வது விழவேயில்லை.
நான் பைக் எடுத்துட்டு வாரேன். கிளம்பலாம் என்றான்.
“அண்ணா” மகிழன் அழைக்க, ஷ்..என்று அவன் வாயில் கை வைத்த சிம்மா, “வாரேன்” என்று அழுத்தமாக கூறி விட்டு உதிரனை அழைத்து விசயத்தை சொன்னான்.
துளசி சினமுடன் அங்கே வந்தாள். நேராக ரம்யாவிடம் வந்து, “நினைச்சத சாதிச்சுட்டேல்லடி” என்று அவளை அடிக்க வர, அவள் கையை தள்ளி விட்ட திலீப், “உனக்கு என்ன தான் பிரச்சனை? அவ உன்னோட சின்னப்பொண்ணு. உனக்கு புரியலையா?” கோபமாக கேட்டான்.
“அது என்ன? எல்லா பசங்களும் அவளுக்காகவே பேசுறீங்க? உன்னோட அண்ணனை போல எல்லாரையும் உன்னோட மயக்கி வச்சிருக்கியா?” என்று கேட்க, ரம்யா அழுகையை அடக்கி கண்ணீருடன் நின்றாள்.
“துளசி” என்று சீற்றமான நட்சத்திரா, “என்ன பேச்சுடி பேசுற? அவள ஏன் இப்படி கஷ்டப்படுத்துற?”
ரம்யா, “என்னடி நடக்குது?” பாரு கேட்க, ரம்யா பதில் கண்ணீரில் மட்டுமே இருந்தது.
“யாரு கஷ்டப்படுத்துறா? அவளால் தான் எல்லாமே!”
அவளால் மாமா என்னை திட்டி விட்டு பேசாதன்னு சொல்லீட்டு போயிட்டாரு. இவள சும்மா விட மாட்டேன் என்று அவளருகே மேலும் வர, கீர்த்தனா அவளை பிடித்து தள்ளி விட்டாள்.
ஏய்..அப்ப தான அத்தன பேர் உனக்கு புத்தி சொன்னாங்க. உனக்கு புரியலையா? இதுக்கு மேல அவ மேல கையை வச்ச. அவ்வளவு தான்.
மருதண்ணா, உனக்கு மாமான்னா. அவளுக்கு சொந்த அண்ணா. அவளுக்கில்லாத உரிமை உனக்கு இல்லை. உனக்கு தான் அம்மா, அப்பா எல்லாருமே இருக்காங்கல்ல. “இல்லாதவட்ட வந்து என்ன செய்ற?” சீற்றமுடன் கீர்த்தனா வார்த்தைகள் வந்தது.
“அவளுக்கு நீ எதுக்குடி வக்காளத்து வாங்குற?” என துளசி அவதூறாக பேச, விக்ரம் கோபமாக பல்லை கடித்தான்.
“துளசி” போதும் சிம்மா சொல்ல, “பாருங்க. எல்லாரும் அவளுக்காக என் வாயை மூடச் சொல்றீங்க?” அவள் மேலும் கத்த, எல்லாரும் துளசியை திட்ட, அவளோ வெறி கொண்டு திலீப்பை தள்ளி விட்டு ரம்யா முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளினாள். ரம்யா தலையில் அடிபட்டு இரத்தம் வந்தது.
மருது, துளசி பெற்றோர் அங்கே வந்து இதை பார்த்து அதிர்ந்தனர்.
“பாப்பா” என்று மருது கண்ணீருடன் அவளிடம் வந்தான். எழுந்த ரம்யா.. “நில்லு” என்று கத்தினாள்.
துளசி மருதுவை பார்த்து, மாமா..அவ நடிக்கிறா என்று மாற்றி பேச அனைவரும் கொதித்தனர்.
போதும் அண்ணி..போதும். யாரும் ஏதும் பேசாதீங்க. நான் பேசணும் என்று கத்தினாள் ரம்யா.
இதுக்கு மேல என்னால முடியாது. அண்ணி நான் உன்னையும் உன் குடும்பத்தையும் பிரிக்க கொஞ்சமும் எண்ணியதேயில்லை. எனக்கு யாருமே வேண்டாம். நீ நினைச்ச மாதிரி அண்ணா..என சொல்ல வந்தவள் நிறுத்தி, உன்னோட மாமாவை கட்டிக்கோ. நானும் அதை தான் ஆசைப்பட்டேன். இனி என்னால உனக்கு தொந்தரவு இருக்காது.
எனக்கு யாருமே இல்லை. நான் போறேன். உங்களை பொறுத்தவரை நான் செத்துட்டேன்னு வச்சுக்கோங்க. நான் போயிடுறேன்.
பாப்பா, “என்ன பேசுற?” நான் உன்னோட அண்ணா மருது சொல்ல, இல்ல நீ யாருன்னே எனக்கு தெரியாது. போ, “நீ என்னைக்கு உன்னோட பாப்பாவா பார்த்த?” ஒரு வேலை நாம அண்ணன் தங்கையா இருந்திருந்தா இந்த பேச்சு வந்திருக்காது. எப்பையுமே துளசி அண்ணி வீட்ல தான இருந்தேன். வளர்ந்தேன். நீ அவங்ககிட்ட தான விட்டு விட்டு போவ? இப்ப மொத்தமா போயிடுறேன் என்று அழுது கொண்டே புகழேந்தியிடம் வந்து,
அய்யா..எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்க. நான் வேற எங்காவது போகணும். நான் இங்க இருக்க மாட்டேன். இந்த வருசம் மட்டும் நான் படித்து முடிக்கணும். ப்ளீஸ் அதுக்கு மட்டும் உதவுங்க என்று அவர் காலில் விழுந்து அவள் அழ, அனைவர் மனமும் உருகி போனது.
மருது மண்டியிட்டு, இல்ல பாப்பா..இனி நான் உன்னுடனே இருக்கேன். “நீ எங்கடா போகப் போற?” அண்ணா உனக்காக தான் செய்தேன்.
எனக்காகவா? என்ன செய்த? ஒரு நாள் கொஞ்ச நேரம் என்னோட பக்கத்துல்ல இருந்திருக்கியா? என்னை அடுத்தவங்க வீட்ல தான விட்டுபோன?”
மாமா நல்லா பார்த்துக்கிட்டாலும் என்னாலும் ரொம்ப நேரம் அங்கே இருக்க முடியல. சரி நம்ம வீட்டுக்காவது போகலாம்ன்னு இங்க வந்தால் வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க. அதனால தான் அந்த சின்னபசங்களோடவே சுத்துவேன். அது உனக்கு பிடிக்காது. “நான் என்ன செய்ய?” என தேம்பி தேம்பி அழுதாள்.
இனி என்னோட இருக்க உன்னால முடியாது. உனக்குரியவங்க கூடவே இருந்துக்கோ.
அம்மாடி, “என்னம்மா இப்படி சொல்ற? இந்த மாமாவை உனக்கு பிடிக்காதா?” துளசி அப்பா கண்ணீருடன் கேட்க, பிடிக்கும் மாமா. ரொம்ப பிடிக்கும். அண்ணாவை விட உங்களை தான் பிடிக்கும். எனக்கு அப்பா இல்லாத குறை உங்களால தான் போனது. “ஆனால் நீங்க என்னோட அப்பா இல்லையே? துளசியோட அப்பா தான” என்று தன் இரு கையாலும் முகத்தை துடைத்து விட்டு, இதுவரை நீங்க எல்லாரும் படிக்க வச்சி நல்லா பாத்துக்கிட்டீங்க. அதுக்கு நன்றி. நான் இதுக்கு மேல இங்கிருந்தால் சிலரோட சந்தோசம் கெட்டு போயிரும்.
அப்புறம் மாமா, முக்கியமான விசயம். துளசி அண்ணிக்கு மட்டுமல்ல, உங்க மருமகன் மருதுவுக்கும் உங்க பொண்ணு துளசியை ரொம்பவே பிடிக்கும். சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிருங்க என்று துளசியை பார்த்து, “உன்னை நம்பி நான் என்னோட எல்லாத்தையும் விட்டு போறேன் பார்த்துக்கோ” என்று மருதுவை பார்க்க, அவன் ஓடி வந்து அவளை அணைத்தான்.
அவனை கோபமாக தள்ளி, “உன்னால தான் எல்லாமே! என் பக்கம் கூட வந்துருறாத” என்று துளசி அம்மாவிடம் சென்று அவரை அணைத்து, “என்னோட அண்ணாவையும் அநாதையாக்கிடாதீங்க அத்தை” என்று அவர் காதில் விழும்படி கூறி விட்டு அங்கிருந்து ஓடினாள்.
“ரம்யா” என்று கீர்த்தனா, பாரு, சரவணன் பின் ஓடினார்கள்.
“ஏன்டி உன்ன அவ என்ன பண்ணா? இப்படி கேவலா பேசுற. நடந்துக்கிற. உன்னை இந்த வயித்துல்ல தான் பெத்தேனா?” என துளசி அம்மா அவளை அடித்து அழுதார்.
அண்ணா, “முதல்ல அவளுக்கு ஓர் முடிவெடுக்கணும்” மகிழன் சொல்ல, வா..முதல்ல அவளை பார்ப்போம் என்று சிம்மா சொல்ல, உதிரன் அங்கே வந்தான்.
தாத்தா, எல்லாரையும் கூட்டிட்டு போங்க. “நான் வாரேன்” என்று திலீப் கண்ணீரை துடைத்து விட்டு அவன் காரை எடுக்க, எல்லாரும் அவனை வியந்து பார்த்து நின்றனர்.
“திலீப்” அவன் அம்மா சத்தமிட, “வந்திடுறேன்ம்மா” என்று அவன் காரை எடுத்தான். உதிரன் அவர்களை அழைத்து சென்றான்.
புகழேந்தியும் பரிதியும் மருதுவை பார்த்தனர். அவன் பார்வையோ துளசி மீது சீற்றமாய் படிந்தது. துளசி பயத்துடன் அவனை பார்த்தாள்.
மருது, எல்லாமே கை மீறி போச்சு. கொஞ்ச நாள் ரம்யா தனியா இருக்கட்டும் பரிதி சொல்ல, “தனியாவா?” அவ என்னோட தங்கச்சி. என்னோட உசுறுய்யா. “அவள எப்படி விடுறது?” மருது சீற்றமுடன் கேட்க, “அதுதான் சரி” என்று சுருதி அப்பாவும் தாத்தாவும் வந்தனர்.
முடியாது. எனக்கு இனி யாருமே தேவையில்லை. என்னோட பாப்பா போதும் என்று மருது கூற, துளசி குடும்பமே அவனை அதிர்ந்து பார்த்தது.
“மாமா” துளசி அழைக்க, அவன் காதில் விழாதது போல் நான் இப்பவே அவளையும் அழைச்சிட்டு இங்கிருந்து போறேன் என்றான்.
“வர மாட்டா” என்று துளசி அப்பா கூற, ஏன் மாமா? உங்க பொண்ணால என்னோட இத்தனை வருட கஷ்டமும் போச்சு என்று மருது கத்தினான்.
“அவ மட்டும் தான் காரணமா மருது?” பரிதி கேட்க, அவன் அவரை பார்த்தான்.
நீயும் தான் காரணம். என்ன தான் சொந்தமாக இருந்தாலும் உன்னோட மாமா குடும்பம் அடுத்தவங்க தான். தங்கச்சிக்கு தேவையான பணத்தேவையை மட்டும் தான செஞ்ச. “அவளுக்கு உன்னை விட்டா யாரு இருக்கா?” அவள் கேட்டது சரி தான். நாம வாழ பணம் மட்டும் தேவையில்லை. “உடன் இருக்கணுமே!” அவ எல்லாம் அறிந்த பொண்ணு இல்லை.
“அவ தனிமையை போக்க மட்டும் தான் உன் மாமா வீட்டுக்கு போவா” என்று அங்கே வந்த அன்னம், துளசியை பார்த்து “உன்னோட எதையும் அவ உன்னிடமிருந்து பறிக்கலடி. நீ தான் அவளோட இரத்த சொந்தமுள்ள அண்ணனை பிரிச்சுட்ட. உனக்கு இப்ப கூட உரைக்காது. வயிறு எறிந்து சொல்றேன். அவளை போல நீயும் ஒரு நாள் யாருமில்லாமல் நிப்ப. அப்ப தெரியும் அந்த வலி என்று அன்னம் துளசிக்கு சாபமிட்டார்.
“அன்னம்” பரிதி சத்தமிட, “சும்மா இருங்க” அந்த புள்ள வந்து சொல்லும் போதெல்லாம் எனக்கும்…எனக்கும்.. என்று அழுது கொண்டே அன்னம், நானும் இதே போல் இருந்தேன்ல்ல. ஆனால் என்னோட மாமா துணைக்கு இருந்தார். “ஆனால் அந்த சின்னப்புள்ள என்ன பண்ணுச்சு?” ச்சே..உன்னை பார்த்தாலே அருவருப்பா இருக்குடி என்று துளசியிடம் பேச, அவள் ஓரிடத்தை வெறித்து பார்த்தாள். அவள் அம்மா, அப்பா மனமுடைந்து அமர்ந்திருந்தனர்.
ஏம்ப்பா, உனக்கு பணம் வேணும் தான். “அதுக்காக பிள்ளைய சொந்தக்காரவங்ககிட்ட விட்டு போயிடுவியா?” நான் ஏற்கனவே சொன்னேன். நீ ரம்யாவிற்கு தேவைன்னு. ஆனால் நான் சொன்னதை நீ கேட்கவேயில்லை. உனக்கென்ன உன் அத்தை பெத்த ரத்தினமே இருக்கா. கட்டிக்கிட்டு நல்லா இரு. அவ எப்படியும் போகட்டும் என்று அன்னம் ஆதங்கத்தை கொட்டினார்.
தன் மீது தவறு என்றாலும் துளசியை நம்பி தான விட்டு போயிருப்பான் மருது, அவளிடம் வந்த மருது, “எத்தனை நாளா அவகிட்ட இப்படி நடந்துட்டு இருக்க?” எனக் கேட்டான்.
இல்ல மாமா, இன்று கோபத்தில் தான்.
“அவ மேல உனக்கென்ன கோபம்? உன்னை கல்யாணம் பண்ண முடியாதுன்னு என்றாவது சொல்லி இருக்கேன்னா?” கொஞ்ச வருசம் காத்திருன்னு தான சொன்னேன். இப்படி எனக்குன்னு இருந்த என்னோட ஒரே தங்கையை பிரிச்சுட்ட.
“உனக்கென்ன கல்யாணம் தான பண்ணிக்கணும்?” என்று துளசியை மருது இழுத்து சென்றான்.
“மாப்பிள்ள அவசரப்பட வேண்டாம்” துளசி அப்பா சத்தமிட, “உங்க பொண்ணுக்கு தான அவசரம்” என்று கோவிலில் அம்மன் முன் இருந்த மஞ்சள் கயிற்றை அவள் கழுத்தில் கட்டி விட்டான். எல்லாரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.
மருது, “என்ன செஞ்சுட்ட?” புகழேந்தி சத்தமிட, நானும் உங்க முன்னிலையில் எல்லார் முன்னும் தான் இவளை கட்டிக்கணும்ன்னு தான் ஆசைப்பட்டேன்.
நான் இவளை கல்யாணம் பண்ணிக்கலைன்னு தான என்னோட பாப்பாவை என்னிடமிருந்து பிரிச்சா. “இப்ப என்ன செய்யப் போறா?” கேளுங்க.
“ரம்யாவை போல நான் கட்டிய தாலியை கழற்றி தூக்கி எறியப் போகிறாளா? இல்லை என்னையும் வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு வெளிய துரத்தப் போறாளா?” என்ற மருதுவின் வார்த்தையில் விக்கித்து நின்றாள் துளசி.
துளசி அப்பாவோ இருவருக்கும் நெற்றியில் பொட்டிட்டு மருது கையை பிடித்து இழுத்து செல்ல, “என்னடி வேடிக்கை பாக்குற?” போடி..என்று அவள் அம்மா அவளிடம் சத்தமிட்டார். துளசியும் அவர்களுடன் பின் வர, எல்லாரும் சென்றனர்.
உதிரன் சார், அந்த பொண்ணை பார்க்கணும். வண்டியை திருப்புங்களேன் ரகசியன் சொல்ல, “இப்ப அவ என்ன செய்றாலோ தெரியலையே?” அவனும் ரம்யாவிற்காக வருந்தினான்.
“நீங்க போய் என்ன செய்யப் போறீங்க?” உதிரன் கேட்க, சார் என்னோட தம்பி திலீப் அவங்களோட தான் போயிருக்கான். நாங்க போகணும் என்றான் அவன்.
“வீட்டிற்கு சென்று பார்ப்போம்” என்று வண்டியை மருது வீட்டிற்கு செலுத்தினான்.
ஓடிய ரம்யாவோ அழுது கொண்டே வீட்டிற்கு வந்தாள். அவள் பின்னே வந்தவர்கள் கதவை தட்டிக் கொண்டிருக்க, திலீப் அங்கே வந்தான்.
நிதானித்த ரம்யா, வேகமாக பை ஒன்றை எடுத்து அவள் ஆடையை அதனுள் திணித்தாள். வெளியிருந்து அனைவரும் கத்த, எல்லாரும் போங்க..போங்க.. என்று அழுதாள்.
“கதவை திற” திலீப் சத்தமிட, “முடியாது” என அழுது கொண்டே சோர்வில் மயங்கி விட்டாள். அவள் சத்தமில்லாமல் இருக்க எல்லாரும் பயந்தனர்.
“கதவை உடச்சிருவோம்” சிம்மா கூற, அதற்கும் அவளிடம் பதிலில்லை.
அண்ணா, கதவை உடைங்க. அவளிடம் சத்தமே இல்லை. பயமா இருக்கு கீர்த்தனா சொல்ல. கதவை உடைத்தனர் சிம்மா, மகிழன், திலீப். அவள் கீழே விழுந்திருப்பதை பார்த்து, தண்ணீரை தெளித்தனர்.
பயந்து விழித்தாள் ரம்யா.
“ரம்யா” என அனைவரும் பதற, சுற்றி பார்த்து விட்டு எழுந்தாள் அவள்.
“நான் போகணும்” என்று பையை எடுத்தாள்.
“எங்க போகப் போற? நீ இங்க தான் இருக்கணும்” என்றான் திலீப்.
“என்னால முடியாது திலீப். இதுல நீங்க தலையிடாதீங்க” என்றாள்.
ஆமா ரம்மி, “நீ போகக் கூடாது” என்றாள் பாரு.
நான் போகணும். நான் இங்கிருந்தால் செத்திருவேன். “பரவாயில்லையா?” எனக் கத்தினாள்.
“இப்ப தான் தவறான முடிவுன்னு என்னை சொன்ன?” பாரு கேட்க, ஆமா பாரு சரா இல்லைன்னா என்ன? உன்னோட அம்மா, அப்பா, அக்கா இருக்காங்கல்ல. என்னை மாதிரி நீ இல்லைல்ல என்றாள் பாயிண்டாக ரம்யா.
“எல்லாரும் இருந்து மனசில்லைன்னா?” என்று பாரு கேட்க, பைத்தியம் மாதிரி பேசாதடி. உன்னோட அம்மா, அப்பா உனக்காக எவ்வளவோ செய்றாங்க என்றாள் ரம்யா.
ஆமா, செய்றாங்க தான். “உன்னோட அண்ணா உனக்காக செய்யலையா ரம்மி?” சரவணன் கேட்டான்.
இல்ல என்றாள் அவள்.
ஆமா, “செய்யலைன்னு தான சொல்வ?” அண்ணா செஞ்ச ஒரே தப்பு. உன்னை அவங்க பக்கத்துல்ல இருந்து பார்த்துக்கல. அவ்வளவு தான். மத்தபடி உனக்கு வேண்டியதை செஞ்சிருக்காங்க. நீயே சொல்லு.
“உன்னோட அண்ணா விருப்பப்பட்டு ஏதாவது சாப்பிட்டு இருக்காங்களா?” எப்பொழுதும் வேலை வேலை வேலைன்னு தான உழைச்சிட்டு இருந்தாங்க. யாருக்காக உழைச்சாங்க. “அவங்களுக்காகவா? அவங்க படிக்கவா? அவங்க வயித்துக்கா? சொல்லு?” சரவணன் கோபமாக கேட்டான்.
தெரியும். எனக்கும் எல்லாமே தெரியும்டா. அண்ணா அவனுக்காக யோசிச்சது துளசி அண்ணிய மட்டும் தான். “அவங்களுக்கு தான் என்னை பார்த்தாலே பிடிக்கலையே! நான் என்ன செய்றது?” இதை தவிர வேறு வழியில்லை என்றாள்.
“வழி இருக்கு” என்றான் திலீப். எல்லாரும் அவனை பார்க்க, அவன் வீட்டினரும் வந்தனர்.
“நீ சொன்னது போல உன்னோட பள்ளிவிடுதியில் தங்கி படி” என்றான் திலீப்.
“காமெடி பண்றியா திலீப்? எங்கள பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?” இங்க பணம் என்ன கொட்டியா கிடக்கு. சும்மாவே என்னோட அண்ணனை அண்ணன்னு கூட அழைக்க முடியாத நிலையில் இருக்கேன். “இப்ப அவர் எப்படி எனக்கு பணம் கட்ட அனுமதிப்பேன்? உனக்கென்ன?” பெரிய குடும்பம். பாட்டி, தாத்தா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, அண்ணா, தம்பி என நிறைய பேர் உனக்காக இருக்காங்க. “நான் அப்படி இல்லையே?”
ம்ம்..இல்லைன்னா நீ தான் வளர்த்துக்கணும் திலீப் சொல்ல, இருக்கிற சொந்த உறவே இல்லைன்னு சொல்லும் போதும் எதுவும் இல்லாத என்னை ப்ரெண்டா கூட யாரும் ஏத்துப்பாங்களோ? என்னமோ? என சொல்ல, பாரு கோபமாக அவளை அடித்தாள்.
“நீ நாளையே விடுதியில் சேர்ந்து கொள்ளலாம்” என்ற திலீப் அவன் பாக்கெட்டில் இருந்த பில்லை எடுத்து வைத்தான்.
“பணம் எனக்கு கட்டினியா? எதுக்கு?” ஏற்கனவே என்னோட அண்ணன் ஓவரா பேசினான். “இது வேறயா?” என்னால் ஏத்துக்க முடியாது என்றாள்.
உன்னோட மாமா கூட சென்று தான் உன்னை சேர்த்து விட்டேன். அதுவும் நீ கஷ்டப்படக் கூடாதுன்னு தான் அவரும் என்று நிறுத்தி அவளை பார்த்தான் திலீப்.
அவள் அவனையே பார்க்க, உன்னோட அண்ணன் விருப்பத்துடன் தான் கட்டினேன். அவங்க இருவரும் நான் பணம் கட்ட ஒத்துக்கிட்டாங்க.
என்னை சமாளிக்க பொய் சொல்லாத.
“என்னை என்னன்னு நினைச்சுட்டு இருக்க?” அவங்க சொன்னாங்கன்னு மட்டும் செய்யல. எனக்கும் உன் மேல அக்கறை இருக்கு. அதனால் நானாக தான் செய்வதாக கேட்டேன் என்று திலீப் சொல்ல, “அக்கறையா?” என்று அவனை அவள் பார்த்தாள்.
“என்ன அக்கறை?” யாரும் ஏதும் பேச வேண்டாம் என்று அவள் அமர, அண்ணா, “இதெல்லாம் என்ன? ஃபிரீ சர்வீஸா?” விகாஸ் கிண்டல் செய்ய, அவன் அம்மாவும் அப்பாவும் அவனை தான் பார்த்தனர்.
எல்லாரையும் அங்கே பார்த்த ரம்யாவிற்கு என்ன செய்வதென புரியாமல் போனது. பெரியவர்களை பார்த்து புன்னகைக்க கூட முடியாமல் உள்ளே அழைத்தாள். திலீப் சொந்தங்கள் சிலர் திலீப்பை புன்னகையுடன் பார்க்க மற்ற சிலரோ அவ்வீட்டை பார்த்து முகம் சுருக்கினார்கள். கீர்த்தனாவிற்கு கோபமாக இருந்தது.