மிருளாலினி ஊரில் அமைச்சர் பிரச்சனை செய்து முடிந்த அதே நேரத்தில் சிம்மாவும் மற்றவர்களும் தேனீயில் இறங்கினார்கள்.
தன் நண்பர்களை கண்ட சிம்மா புன்னகைக்க, கார்த்திக்கை பார்த்த ரித்திகா சினமுடன் கைப்பையை வைத்து அடிக்கத் தொடங்கினாள்.
மச்சான், “என்னை காப்பாத்துடா” என்று கார்த்திக் சிம்மாவின் பின் மறைய, “எங்கடா போற? உன்னை கொல்லாமல் விட மாட்டேன்” என்று விரட்டினாள்.
ரித்து, அவனை விடு..என்று உதிரன் சொல்ல, சும்மா இருங்க மாமா. எல்லாம் இவனால் தான். முதல்லவே நாம எல்லாரும் பேசி இருந்தால் நாம நால்வரும் இப்படி கஷ்டப்பட்டிருக்க தேவையில்லை. நில்லு இல்லை மண்டைய உடைச்சிருவேன் என்று அவள் விரட்ட, அக்கா..அவரை விடு.
“விடணுமா?” ராஸ்கல்..எனக்கு அப்பவே சந்தேகம். இவன் எங்க பின்னாடியே சுத்தும் போது சிந்தித்தேன். ஆனால் இப்படி போட்டு கொடுப்பான்னு நினைக்கலை.அண்ணா..அவனை அடி என்று ரித்திகா கொந்தளித்தாள்.
அண்ணா..காப்பாத்துங்க என்று அவன் மருது பின் ஒளிய, திடகாத்திரமான உடல். கிராமத்து வாசனையுடனான வேஷ்டியுடன் வந்தான் மருது. எப்படியும் முப்பது வயதை ஒத்திருக்கும். உதிரனை விட மருது சிறியவன் தான். ஆனால் படிப்பில்லை. அவனுக்கு ஓர் தங்கையும் இருக்கிறாள். அவள் ரம்யா. தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள்.
ஏலேய், “எங்க வந்து ஓடிப் பிடிச்சு விளையாடுறீங்க?” மருது கேட்க, அண்ணா..என்று அனைவரும் நின்று விட்டனர். ரித்திகா அமைதியாக, சுருதி வாயை பிளந்து ஆவென ரித்திகாவை பார்த்தாள்.
ஹலோ, “வழிய விடுறீங்களா?” என மகிழன் அவளுக்கும் திலீப்பிற்கும் இடைபுகுந்து சென்றான்.
உதிரன் கையை கட்டிக் கொண்டு ரித்திகாவை முறைத்து பார்த்தான்.
“மாமா” அவன் என்று ரித்திகா தொடங்க, சின்னய்யா வாங்க, பெரியய்யா உங்களை அழைச்சிட்டு வரச் சொன்னார்.
ஓ, “உங்க பெரியய்யாவை மட்டும் தான் அழைச்சிட்டு போக வந்தீங்களோ?” சிம்மா கேட்க, “என்ன சிம்மா? உனக்கு தெரியாதா?” வாங்க சின்னபாப்பா என்று நட்சத்திராவை அழைக்க, அவள் மருதுவை பார்த்து முறைத்தாள்.
அய்யோ! உங்க பையலா? அழகா நம்ம சிம்மா போலவே இருக்கார் என்று மருது சொல்ல, “ஏன் அண்ணா உங்களுக்கு அண்ணி கஷ்டப்படும் போது தெரியலையோ?” மகிழன் கேட்க, “மகிழா என்ன இப்படி கேக்குற?” நான் பெரியய்யாவிடம் வேல பார்க்கும் போது சின்னம்மா என்று நட்சத்திராவை பார்த்தான் மருது.
போதும். உங்க எல்லாரின் வெட்டிப் பேச்சு. மாமா..அர்சுவை பிடிங்க என்று அவள் பையை எடுக்க, “நான் எதுக்கும்மா வந்துருக்கேன்?” என்று மருது பையை எடுக்க, மகிழ், நீங்க திலீப் சார் குடும்பத்துடன் போங்க. கவனமா இருங்க. மருதுண்ணா..நீங்க அவங்கள பத்திரமா அழைச்சிட்டு போகணும். ரொம்ப முக்கியமானவங்க என்று கண்ணை காட்டினான் சிம்மா.
சரி சிம்மா, பார்த்தா சினிமா ஹூரோ போல இருக்கார். “யார் சிம்மா?” என திலீப்பை பார்த்து மருது கேட்டான்.
அவர் பெயர் திலீப். நம்ம ஊருக்கு நம்ம ஸ்டாரோட வந்தாலே மிருளாலினி அவளோட மச்சினன். பெரிய ஹாஸ்பிட்டலில் டாக்டராக இருக்கார் என்றான் சிம்மா.
“டாக்டரா?” என்று அவர் கண்ணெடுக்காமல் திலீப்பை பார்த்தார்.
அண்ணா, “எங்களை பார்த்தாலெல்லாம் உங்களுக்கு ஹீரோ போல் இல்லையா?” மகிழன் கேட்க, என்ன மகிழா, சின்னப்பிள்ளையில இருந்து உங்க எல்லாரையும் தெரியும். “புதுசா இருக்கார்ல்ல? அதான் அப்படி தோன்றுதோ? என்னமோ!” என பேசிக் கொண்டே எடுத்து வைத்து கிளம்ப, மச்சி..கங்கிராட்ஸ்டா..என்று சிம்மாவை அணைத்தான் முகேஷ்.
முகி, “இதுவே ரொம்ப லேட்” என நட்சத்திரா சிம்மாவை பார்த்து அழுத்துக் கொண்டாள்.
செல்லம்மா, நீ கோபப்படுவன்னு எண்ணிக்கிட்டு இருந்தோம். இன்னும் கொஞ்ச நேரத்துல சிம்மாவோட உனக்கு திருமணம் உதிரன் சொல்ல, “எனக்கு எல்லாமே நினைவுக்கு வந்துருச்சு அண்ணா” என்று கண்கலங்கினாள். சிம்மா நட்சத்திராவை ஆழ்ந்து பார்த்தான்.
அடேய்யப்பா..அப்புறம் உன்னோட ஸ்டாரை பார்த்துக்கிட்டே இரு. இன்னும் பத்து நிமிசத்துல மண்டபத்துக்கு போகலை. உன்னோட அப்பா அந்த காளிக்கு என்னை பழியாக்கிடுவார் என்று கார்த்திக் சொல்ல, “என்ன சொன்ன?” மேலும் கொதித்தாள் ரித்திகா.
ஷ்..எப்பா..இப்பவே கண்ணை கட்டுதே! கிளம்புங்கடா டேய் என்று அன்னம் பரிதியிடம் வந்தான் மாறன்.
“நீ எப்படா இங்க வந்த?”
நான் வந்துட்டேன்ம்மா. வாங்க என்று இரு காரிலும் ஏறினர். கார்களுக்கு பாதுகாப்பாக போலீஸ் ஆட்களை அனுப்பி வைத்திருந்தார் புகழேந்தி.
“என்னோட மாமாவை ஹீரோன்னு சொன்னீங்க?” நானும் புதுசா தான உங்க ஊருக்கு வந்திருக்கேன். என்னை எதுவுமே நீங்க சொல்லவேயில்லை சுருதி மருதுவிடம் கேட்க, அவர் பொண்ணுங்களிடம் பேச மாட்டார் என்றான் மகிழன்.
“எதுக்கு பேச மாட்டீங்க?” என காரிலிருந்து சுருதி கேட்க, எல்லாரும் எனக்கு தங்கச்சி மாதிரிம்மா என்றார் மருது.
“எல்லாருமே தங்கச்சியா?” அப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போகும் பொண்ணுமா தங்கச்சி.
இல்லம்மா, அவ வீட்ல தான் இருக்கா. துளசி என்னோட மாமா பொண்ணு.
அண்ணா, “பூசணி என்ன பண்றா?”
“அத ஏன் கேக்குற மகிழா?” அவளை சமாளிக்கவே முடியல. அவள் படிப்பை நிறுத்திடலாம்ன்னு நினைச்சா. அவள் டாக்டர் ஆகணுமாம். “நமக்கு தேவையா இது?” நேற்று கூட ஸ்கூல்ல ஏதோ இங்கிலீஸூல பேசணுமாம். அதை பேசுறேன்னு துளசிய படுத்துறாளாம். நாளை பேசணுமாம். நல்ல வேலை, சின்னய்யா, சின்னப்பாப்பா திருமண வேலை பிடித்துக் கொண்டதால் தப்பிச்சேன் என்றார்.
ஆமா, “யாரையாவது பிடிச்சு கட்டி வச்சிருங்க” என்றான் மகிழன்.
மகிழன், “என்ன பேசுறீங்க? படிப்பு எவ்வளவு முக்கியம்ன்னு எடுத்து சொல்ல வேண்டியவங்களே இப்படி சொல்றீங்க?” அதுவும் அவங்க டாக்டர் படிக்கணும்ன்னு நினைக்கிறாங்க என்று திலீப் கோபமாக கேட்டான்.
உங்களுக்கு அவளை பற்றி தெரியாது. சரியான சேட்டை. பசங்களுடன் சகஜமாக பழகினாலும் அவளுக்கென பள்ளியில் ஃபேன்ஸ் இருப்பாங்க. பயங்கர வாயாடி என்று மகிழன் சொல்ல, மருது முகம் வெளுத்தது.
ஷ்..”என்ன பேசுறீங்க?” என சுருதி அவனை இடித்தாள்.
“உனக்கென்ன?” என்று அவன் திரும்பிக் கொண்டான்.
சற்று நேரத்தில் ஊர் எல்லைக்கு வரவும் சிம்மா வந்த காரை இடிக்க வந்தது ஓர் லாரி. அதிலிருந்து தப்பி சாமர்த்தியமாக காரை ஓட்டினான் சிம்மா. லாரி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. துப்பாக்கி சத்தம் கேட்க, பரிதி கையில் தோட்டா உரசி சென்றது. அனைவரும் பதறினர். கீர்த்திக்கு வைத்த குறி பரிதி அவளை காக்க அவளை அணைத்துக் கொண்டு காப்பாற்றினார்.
மருது அண்ணா, வேகமா போங்க. இல்லை நம்மையும் தாக்க ஆரம்பிப்பாங்க மகிழன் சொல்ல, “யாருக்கும் ஏதும் ஆகி இருக்குமோ?” என பதட்டமாக சுருதி அப்பா கேட்க, பயப்படாதீங்க மாமா. சிம்மா அந்த அளவிற்கு விட மாட்டார் என்றான் திலீப். அவன் பேச்சில் அவனை பார்த்து புன்னகைத்தான் மருது.
போலீஸ் துப்பாக்கி பயன்படுத்தியவனை வளைத்து பிடித்து ஸ்டேசனிற்கு அழைத்து சென்றனர்.
இடம் வந்து இறங்கிய சிம்மா முன் போலீஸ் ஒருவர் வர, “தேங்க்யூ சார்” என்று அவருக்கு கையை கொடுத்து விட்டு, பெருமூச்சுடன் உடன் வந்தவர்களை பார்த்தான்.
சிம்மாவின் நண்பர்களும் மருதுவும் அனைவரின் பையையும் எடுத்துக் கொள்ள, “நில்லுங்கடா” என்று சிம்மா அவர்கள் பின் வந்தான்.
சிம்மா, “இங்க ஏதாவது ஆடைக்கான ஷாப் இருக்கா?” திலீப் கேட்க, மாமா, உனக்கும் வாங்கியாச்சு என்ற சுருதி “முதல்ல வா” என்று அழைத்து விட்டு, உங்க ஊர் சூப்பர். ஊர் எல்லையிலே உங்க குடும்ப புகைப்படத்துடனான பேனரை பார்த்தேன் என்றாள் சுருதி.
ம்ம்..ஸ்டாரோட அப்பா ஊர் பிரசிடென்ட். சுற்றி இருக்கும் மற்ற ஊராருக்கும் எங்க எல்லாரையும் நன்றாக தெரியும் என்று நடந்த சிம்மா நின்று விட்டான். அவன் முன் ரித்திகாவும் நகர முடியாமல் நிற்க, உதிரன் இருவரையும் பார்த்து விட்டு அவர்களிடம் வந்தான்.
ரித்து, “வா” என்று அவன் கையை பிடித்து, “வா சிம்மா” என்றான்.
இருவரும் அப்படியே நிற்க, எதிரே கண்ணீருடன் தன் அண்ணனை வெகுவருடத்திற்கு பின் அணைத்திருந்தார் அன்னம். அப்பத்தா வீல் சேரில் இருக்க, கண்ணீருடன் நின்ற சிம்மா, ரித்திகா, மகிழனுக்கு கால்கள் நகர மறுத்தது.
மகிழன், “என்னாச்சு?” என திலீப் கேட்க, அவன் பதிலே கூறவில்லை.
அம்சவள்ளி தன் பேரனை வாங்கி கொஞ்சிக் கொண்டே தன் கணவனை பார்த்து சிம்மாவை காட்டினான்.
அப்பத்தா வீல் சேரை தள்ளிக் கொண்டே வந்து, சிம்மா கையை பிடிக்க, அவன் கண்ணிலிருந்தது கண்ணீர். மடிந்து அமர்ந்தான்.
அம்மம்மா..என்று சிம்மா அழைக்க, என்னை மன்னிச்சிருய்யா. நீங்க பெரியவங்க மாதிரி சரியா நடந்துகிட்டீங்க. பெரியவங்க நாங்க தான் என அழுதவர் சிம்மா கையை பிடித்து கண்ணில் ஒற்றிக் கொண்டார்.
ரித்திகா பயத்துடன் உதிரன் கையை எடுத்து, அவளுக்கு புகழேந்தி ரட்சகனின் ஆய்வு கூடத்தில் வைத்து பேசிய நினைவில் பின்னே நகர்ந்தாள்.
“ரித்து” அழுத்தமாக அழைத்தான் உதிரன்.
மாமா, “என்னால முடியாதுன்னு நினைக்கிறேன்” என்று ரித்திகா கண்ணீரை பார்த்து அம்சவள்ளி அர்சுவை நட்சத்திராவிடம் கொடுத்து அவளிடம் சென்று அணைத்துக் கொண்டார். அவள் உடல் நடுங்க, அவரை பயம் தொற்றிக் கொண்டது.
“உதிரா” அம்சவள்ளி சத்தமிட, புகழேந்தியும் அவளிடம் வந்தார். அவர் அருகே வரவும் அவள் இதயம் படபடவென அடிக்க பயத்தில் மயங்கினாள் ரித்திகா.
அனைவரும் அவளிடம் பதறி செல்ல, புகழேந்தி இடையே வந்து நின்றான் மகிழன்.
அன்னம் ஓடி வந்து “ரித்தும்மா” என அழுதார்.
அத்த அழாதீங்க. அவளுக்கு ஒன்றுமில்லை என்று உதிரன் அவளை தூக்கிக் கொண்டு மண்டபத்தில் மணமகள் அறைக்குள் நுழைந்தான்.
ஊரார் அனைவரும் பதற, “தண்ணீரை எடுத்துட்டு வாங்க” என்று அவன் சத்தமிட்டு வாங்கி தெளித்தான். விழித்த அவள்..மாமா..பயமா இருக்கு. பெரிய மாமாகிட்ட உங்க பக்கமே வர மாட்டேன்னு சொன்னேன். ஆனால் இப்ப..என்று அவள் உடல் நடுங்கியது.
ரித்து, “நாங்க இருக்கும் போது நீ பயப்படலாமா?” நட்சத்திரா கேட்க, அண்ணி என்று உதிரனை பார்த்தாள். அவன் கோபமாக தள்ளி நின்றான்.
மாமா, அப்ப நான் சொன்னேன். ஆனால் இப்ப என அவன் முகம் பார்த்தாள்.
“இப்ப என்ன? சொல்லு?” அவன் கேட்க, அவள் பேசுவதை கேட்டு, ஏம்மா, உன்னை பிடிக்காமலா இத்தனையும் உன் பெரிய மாமா வாங்கி இருக்கார் என்று அவ்வறை அலமாரியை திறந்து நகைகள், பூக்கள்,..என வாங்கி இருந்ததை காட்டினார் அம்சவள்ளி.
அத்த, “அவருக்கு என்னை பிடிக்காதுல்ல?” ரித்திகா பாவமாக கேட்க, “யாரும்மா உன்னை பிடிக்காதுன்னு சொன்னது?” புகழேந்தியும் வந்தார். அவரை பார்த்து வேகமாக எழுந்தாள்.
அப்ப என்னுடைய புத்தி அப்படி இருந்தது. எல்லாரும் எப்போதும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கம்மா என்று என்னோட மகனுக்கும் குடும்பத்திற்கும் நீ சரியாக இருப்பன்னு தான் என் மகன் சொன்னவுடனே ஒத்துக் கொண்டோம்.
ஆனால் பெரிய மாமா, “இப்ப என் நிலை உங்களுக்கு தெரியாது”
தெரியும்மா. எல்லாமே தெரியும்..என்று அவர் உடல் விறைத்தது.
“மாமா” என்று உதிரனை பார்த்த ரித்திகா அழ, உதிரன் அவளை அணைத்து, “ஊராருக்கு நீயே சொல்லிறாத” என்று எச்சரித்தான்.
அவனை விட்டு விலகி புகழேந்தி முன் வந்து, “உங்களால எப்படி என்னை ஏத்துக்க முடிந்தது?”
முடியும்மா. எங்களுக்கு பொறுப்பான எங்க மருமகள் ரித்திகாவை மிகவும் பிடித்து போயிற்று என்றார் அவர். பட்டென அவர் காலில் விழுந்தாள் ரித்திகா.
அம்மாடி, “என்ன பண்றீங்க?” சீக்கிரம் தயாராகிட்டு வாங்க என்று அவர் அவளை எழுப்பி விட்டு சிம்மாவை வந்து அணைத்து “சாரி மாப்பிள்ள” என்று பரிதியின் கையை பிடித்தார். சிம்மா கண்ணில் ஆனந்தகண்ணீர்.
“மாமா” இந்த பொண்ணு கீர்த்தனா என அவளை அறிமுகப்படுத்தினான். அவன் தங்கையாக வந்திருப்பதாக சிம்மா சொல்ல, அவள் கண்ணில் ஆனந்த ஊற்று.
பேசியது போதும். எல்லாரும் தயாராகுங்க என்று சூரையம்மா சொல்ல, அப்பத்தா..என்று உதிரன் அவரிடம் பேசினான்.
“முதல்ல தயாராகுங்க” என அனைவரையும் அனுப்ப, சுருதி..நீ தயாராகு. நட்சத்திராவையும் ரித்திகாவையும் தயார் செய்ய ஆள் இருக்காங்க. நீ வாங்கியதை மட்டும் கொடுத்துட்டு போம்மா..என்றான் சிம்மா.
“இதோ மாமா” என்று மகிழனை தேடினாள். அவனை பார்த்ததும், ப்ளீஸ் உங்க கெல்ப் வேணுமே! என வாங்கிய ஆடையை அவன் கையால் அனைவருக்கும் கொடுக்க வைத்து அவன் வாங்கிய ஆடையை அவன் கையாலே வாங்கிக் கொண்டு, அவனுக்கு வாங்கியதை அவனிடம் கொடுத்து விட்டு சென்றாள். அவன் புன்னகையுடன் அவளை பார்த்தான்.
அனைவரும் தயாராகி வர, ஊரார் மத்தியில் சிம்மராஜன்- நட்சத்திரா, உதிரன்- ரித்திகா திருமணம் இனிதே நடந்தேறியது. வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதையாக இருந்தனர் இரு ஜோடிகளும். திருமணம் முடிந்து அனைவரும் சாப்பிட்டு அமர்ந்திருந்தனர்.
ஒரு பொண்ணு பள்ளிச்சீருடையில் மறைந்து மறைந்து அவர்களை நோக்கி வந்தாள். திலீப் சுருதியை சுரண்டி காட்ட, அவள் வேகமாக ஓடி வந்து மகிழனின் கண்ணை மூடினாள். “யாரு” என கையை தொட்டு பார்த்து, ஏய்..பூசணி, “கையை எடுடி” என்றான்.
“பிக் சீனியர்” என்று அவன் முன் குதித்து வந்தாள். “மங்க்கியாடி நீ? எல்லாரும் இருக்காங்கன்னு கூச்சம் இருக்கா?” மகிழன் கேட்க, சீனியர் ரம்யா..சொல்லுங்க என அவனது தாடையை ஆட்டினாள்.
“கையை எடு” என்று மகிழனின் எரிச்சல் வெளிப்படையாக தெரிந்தது.
அடியேய், எப்படி இப்ப வெளிய வந்த? அம்சவள்ளி வாயில் கை வைத்து அதிசயம் போல் கேட்க, “பெரியம்மா..” எங்க வாட்ச் மேன் சாப்பாட்டை ஒளித்து வைத்தேனா? அவர் தேடும் சமயத்தில் ஓடி வந்துட்டேன்.
ரம்யா, துளசி சத்தம் கேட்க, எல்லாருக்கும் “பை பை”.அண்ணி வாராங்க என்று அனைவர் பின்னும் மறைந்து மறைந்து செல்ல, அவள் முன் மகிழன் வந்து நின்று, துளசியக்கா..இங்க தான் இருக்கா என்று போட்டுக் கொடுத்து நக்கலாக சிரித்தான்.
“மாட்டி விட்டு சிரிக்கவா செய்ற?” என்று அவன் காலில் மிதித்தாள்.
அய்யோ அம்மா! “என்னோட காலை எடுக்கணும் போலவே!” என நடிப்புடன் மகிழன் கத்த, “என்னாச்சு மாப்பிள்ள?” என்று புகழேந்தி வந்தாள்.
அவரை பார்த்து முறைத்து விட்டு, “உனக்கு எவ்வளவு திமிருடி?” என்று அவளை தேட, சீனியர் “பை பை” என சொல்லி விட்டு நேராக அவள் அண்ணனிடமே மாட்டினாள். மகிழன் அவளை பார்த்து சிரித்தான்.
“அண்ணா” என்று வேகமாக சிம்மாவிடம் ஓடி வந்தாள் ரம்யா.
சிம்மா அண்ணா, அண்ணாவிடமிருந்து காப்பாற்றுங்கள். இன்று ஒரு நாள் மட்டும் லீவு போடுறேன்னு கேட்டேன். விடவே மாட்டேங்கிறாங்க என கம்பிளைண்ட் செய்தாள்.
மருது அங்கே வர, துளசி இருவரையும் பார்த்து விட்டு, மாமா..இவளோட நீங்க ஸ்கூலுக்கு போக வேண்டியது தான். பாருங்க இப்படியா ஏமாத்திட்டு வருவா. போய் திட்டு வாங்குங்க என கோபமானாள்.
அண்ணி, “சாப்பிட வந்தது ஒரு குத்தமா?” என பேசிக் கொண்டே மெதுவாக நகர்ந்தாள்.
மருதண்ணா, “ஜெகா வாங்கப் போறா” மகிழன் சொல்ல, பிக் சீனியர் “நீ ரொம்ப மோசம்” என்று சொல்லிக் கொண்டே அனைவரையும் பார்த்தார். சட்டென நின்று கீர்த்தனாவை பார்த்தாள். அவள் இளஞ்சிவப்பு நிறத்தில் பாதம் வரை அழகான கவுன் அணிந்திருந்தாள். முகம் மட்டும் சோர்வாக இருந்தது.
“இவளுக்கு என்னாச்சு? எவ்வளவு அழகான ஆடை அணிந்திருக்கா? இவ்வளவு சோகமா?” என்று மருதுவை பார்த்து, அண்ணா நம்ம பிரச்சனையை அப்புறம் பார்த்துக்கலாம் என்று அங்கிருந்தவர்களை பார்த்தாள். எல்லாரும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
திலீப் கையில் அலைபேசியை பார்த்து, அதை அவனிடமிருந்து பிடுங்கி, நடுவில் வந்து கீர்த்தனாவை புகைப்படம் எடுத்தாள்.
பாப்பா, “என்ன பண்ற?” அவர் அலைபேசியை கொடு என்று மருது சத்தம் போட, ஒரு சேரை அவளருகே இழுத்து போட்டு..ஹேய் கெர்ல் “இதை பாரு” என்று அவள் எடுத்த புகைப்படத்தை காட்டினாள்.
இதுல நீயும் உன்னுடைய ஆடையும் ரொம்ப அழகா இருக்கீங்க. அது என்ன மூஞ்சியில கவலை. பாப்பா..கஷ்டத்தை தள்ளி விட்டு, “இதோ பார்.. என்னை போல் புன்னகைத்து பார்” என்று சிரித்து காட்டினாள்.
“என்ன பண்ற?” மகிழன் கோபமாக, “என்ன நடந்ததுன்னு தெரியாம அவளை மேலும் கஷ்டப்படுத்துற?” கத்தினான்.
சீனியர், நீங்க தான் கஷ்டப்படுத்துறீங்க. அவளுக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது. “அவளது கவலையை மறக்க ஏதாவது செய்ய வேண்டாமா?” அவளை பார்த்ததுமே பெரிய பிரச்சனைன்னு தெரிந்தது. அதான் இப்படி செய்தேன்.
நீ அந்த அலைபேசியில் உன்னை பார். உன் வருத்தம் உன்னை மட்டுமல்ல மற்றவர்களையும் கஷ்டப்படுத்தும். உனக்கு வேண்டியவர்களை எண்ணிப் பார் என்று அவள் கையில் அலைபேசியை வைத்தாள் ரம்யா.
மருது கோபமாக..பெரிய இடத்துக்காரவங்க விசயத்துல்ல தலையிடாதன்னு சொல்லி இருக்கேன்ல்ல என்று ரம்யாவை திட்டி இழுத்து செல்ல..
அண்ணா..”இரு” என்று அங்கிருந்த ரோஜா ஒன்றை எடுத்து, இது உனக்காக நான் கொடுப்பது என துக்கிப் போட்டு ஸ்மைல் சிக்னல் செய்ய, கீர்த்தனாவின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. அனைவரும் மகிழ்ந்தனர்.
இப்படி தான் துருதுருன்னு ஏதாவது செய்து கொண்டே இருப்பாள் அன்னம் சொல்ல, “அவங்க பெற்றோர் எங்க இருக்காங்க?” சுருதி அப்பா கேட்க, சுருதிக்கு மட்டும் அவளை பிடிக்கவில்லை. அவள் மகிழனிடம் நெருக்கம் காட்டுவது பிடிக்கவில்லை.
அவங்களுக்கு பெற்றோர் இல்லை. மருது தான் சிறுவயதிலிருந்து ரம்யாவிற்கு. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இங்கு மட்டுமல்ல பள்ளியிலும் சரியாக சேட்டை செய்வாள். ஆனால் அவளை யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க. அவள் தான் சுற்றுவட்டார பள்ளிகளிலும் எப்பொழுதும் முதல் வருவாள். படிப்பில் அவ்வளவு கவனம்..என்று பெருமையாக பரிதி கூறினார்.
மீண்டும் அமைதியானாள் கீர்த்தனா. அண்ணா..ப்ளீஸ் என்று ரம்யா மருதுவிடம் பேசிக் கொண்டே வந்தாள்.
“என்னடி அதுக்குள்ளவா சாப்பிட்ட?” அம்சவள்ளி கேட்க, நீங்க வேற..என்னோட ப்ரெண்ட்ஸோட ஜாலியா சாப்பிடணும் அதான் அண்ணி எடுக்க போயிருக்காங்க. அண்ணா அதுக்கு தான் திட்டுறான்.
ஏடி..ரம்யா, “ஸ்கூலுக்கு டேக்காவா?” நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி கேட்க,
இல்லக்கா, “மாமா தான் வேலைக்கு டேக்கா குடுத்துட்டு ராசாத்திக்கா வீட்டுக்கு போன மாதிரி பார்த்தேன்” என்று அவள் சொல்ல, திலீப் கையிலிருந்த அலைபேசி பட்டென விழுந்தது. அனைவரும் அதிர, அவன் ஓர் படிக்கு மேலே போனான். அய்யய்யோ..என்று அந்த பொண்ணு வெளியே ஓடினார்.
அவனை பார்த்து விட்டு, ஓ.கே எல்லாருக்கும் திருமண வாழ்த்துக்கள். எனக்கு நேரமாகுது என்று அவள் சொல்ல, “என்னது எல்லாருக்கும் திருமண வாழ்த்தா?” என்று அம்சவள்ளி வாயை பிளக்க,
பெரியம்மா..திருமணம்செய்யாதவங்களுக்கும் இப்பவே முடிச்சு வச்சிருங்க. எல்லாரும் ஜோடி ஜோடியா தான இருக்காங்க என கேட்க, அடியேய் “உனக்கு வாய் கூடிப் போச்சு” என்று ரித்திகா சொன்னாள்.
ஏய்..அழுமூஞ்சு, நல்லா அழுது கண்ணை சிவந்து வச்சிருக்காத. நாம நிறைய புகைப்படம் எடுத்துக்கலாம் என்று அவள் சொல்ல, அம்மாடி சீக்கிரம் கிளம்பு என்று துளசி அப்பா சொல்ல, மாமா..ஈவ்னிங் எனக்கு ஹார்லிக்ஸ் வாங்கி வையுங்க என்று அவள் அண்ணி கொண்டு வந்த பாக்ஸை தூக்கிக் கொண்டு ஓடினாள் ரம்யா.
திலீப்பை பார்த்த மகிழன், “இப்ப என்ன சொல்றீங்க சார்?” என்று கேட்டான்.
“நான் என்ன சொல்வது?” இந்த பொண்ணு அதிகமா பேசினாலும் சில விசயங்களை சரியாக தான சொல்லுது. உங்க சிஸ்டர் படிக்க உதவி வேணும்ன்னா..என்னோட நம்பருக்கு கால் பண்ணுங்க என்று அவன் எண்ணை மருதுவிடம் கொடுத்தான் திலீப்.
“வேண்டாம் டாக்டர் அய்யா” மருது சொல்ல, “வாங்கிக்கோடா” உதவியா இருக்கும்ல்ல என்று புகழேந்தி சொல்லவும் வாங்கிக் கொண்டான் மருது.
தியா..தியா..என்ற அழைப்பில் கதவை திறந்து வெளியே வந்தாள் தியா.
ஹாய்..குட் மார்னிங். வா..போகலாம் என்று வினித் தியாவை அழைத்தான்.
“அதுக்குள்ளவா?” நான் இன்னும் தயாராகலை என்றாள் அவள்.
வா..
“எங்க?” தியா கேட்டுக் கொண்டே வினித்தை பார்த்தாள். வினித் சத்தத்தில் அஜய் வீட்டில் எல்லாரும் வெளியே வந்தனர்.
டேய், “விளையாடுறியா?” நான் பிரஸ் கூட பண்ணல தியா சொல்ல, “அதான் நீ என் அழைப்பை எடுக்கலை என்றதுமே தெரிந்து விட்டதே!” என்று அவள் கையை பிடித்து, “இங்கேயே நில்லு” என்று கதவை சாத்தினான்.
“என்னடா பண்ற?” எனக்கு வேலை இருக்கு என்றாள்.
“வேலையா?” என்று வினித் அவளை பார்த்து, “பைக் எடுத்துட்டு வந்திருக்கேன் வா” என்று அவளை தரதரவென இழுத்தான்.
கையை விடு. யாராவது பார்த்தால் உன்னை தான் தப்பா நினைச்சுப்பாங்க.
அப்படின்னா, நீயாகவே வா..என்றான்.
“எங்க தான்டா கூப்பிடுற?” தியா கேட்க, அஜய் அப்பா தனராஜ் அங்கே வந்து, “என்ன பிரச்சனை?” என்று கேட்டார். அவன் அம்மா தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார். அஜய் கீழிறங்கி அவன் அம்மா அருகே வந்து நின்றான்.
“பிரச்சனையா?” என்னால தியாவிற்காக? என்று தனராஜை முறைத்த வினித், “தியா முதல்ல வெளிய வந்து பாரு” என்று கோபமாக சொன்னான்.
பிரச்சனையெல்லாம் இல்லை சார். வினித் என்னோட பிரதர் போல. “அவன் என்னை என்ன செய்யப் போகிறான்?” என்று வா..என்னன்னு பார்க்கிறேன் என்று தலையில் அடித்தாள் தியா.
வினித் பைக் அருகே சென்ற தியா பக்கென சிரித்தாள். வினித் அவள் புன்னகையை பார்த்து பெருமூச்சு விட்டான்.
வீரா அங்கிள், “என்ன இது கோலம்?” என்று சிரித்துக் கொண்டே அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழற்றினாள்.
எப்படிம்மா, “ஹீரோ மாதிரி இருக்கேனா?” பொண்ணுங்க எல்லாரும் என் பக்கம் என்று குறும்புடன் புன்னகைத்தார்.
ஆமா அங்கிள், “வினித் நாம வேணும்ன்னா அங்கிளுக்கு பொண்ணு பார்க்கலாமா?” என்று அவனை பார்த்து கண்ணடித்தாள்.
நானும் வெட்கத்தை விட்டு கேட்டுட்டேன்ம்மா. என் பிள்ளை ஒத்துக்க மாட்டேங்கிறான் என்று அவர் சொல்ல, தகப்பா..”இதெல்லாம் ஓவரா இல்லை” என்று வினித் தியாவை பார்த்து, “வா..” என்று அழைத்தான்.
“இதோட எப்படி வர்றது?” சொன்னேன்ல்ல. பிரஸ் கூட பண்ணல.
சரி, நாங்க வெயிட் பண்றோம். அரை மணி நேரம் தான் வா.
“காலங்காத்தால வந்து இப்படி தூக்கத்தை கலைச்சிட்டு இப்ப அரை மணி நேரத்துல தயாராகி வர சொல்ற? அங்கிள் இவனுக்கு என்ன ஆச்சு? எங்க போகணும்?”
அம்மாடி, புதுசா வேலையில சேரப் போறேல்ல. கோவிலுக்கு தான் போக முடியாது. அம்மாவையும் ஆன்ட்டியையும் பார்த்துட்டு உனக்கு ஆடை எடுக்கணும் என்றார் வீரா.
“ஆடையா? எனக்கு தான் இருக்கே?”
“எது? இந்த சுடிதாரா?” நோ..நோ..நாங்க எடுப்பதை தான் நீ உடுத்தணும் என்றான் வினித்.
போட்டேன்னா தெரியும். “ராஸ்கல்” என வினித்தை திட்டி விட்டு, அங்கிள் உங்க செக்கரட்டரி போல் என்னால உடை உடுத்த முடியாது. என்னை விட்ருங்க என அவள் ஓட, “அவள பிடிடா” என்று வீரா சொல்ல, அங்கிள் நோ..என தியா புன்னகையுடன் ஓடி வந்தாள் அஜய் அப்பாவை நோக்கி.
ஏய், “நில்லு” வினித் சொல்ல, சார்..சார்..கெல்ப் பண்ணுங்க. என்னால அந்த மாதிரி ஆடையெல்லாம் போட முடியாது என்று அவள் சொல்ல, பெரிய கம்பெனியில போட வேண்டிய ஆடையை போட்டா தான் நல்லா இருக்கும் என்றார் அவரும்.
“என்னது? சார் நீங்களுமா?” என நகர்ந்தாள்.
“அவளை துக்கிட்டு வந்து அமர வை” என்று வீரா சொல்ல, “வராதடா வந்த கொன்றுவேன்” என்று செடிகளுக்கு உணவாகிக் கொண்டிருந்த பைப் நீரை கையிலெடுத்தாள்.
தியா, “அதை கீழ போடு” வினித் சொல்ல, அஜய் அவன் அப்பா அருகே வந்தான்.
முடியாது. ஒழுங்கா கிளம்பிடு என்று தியா சொல்ல, தியா அங்க பாரு ஹம்மிங் பேர்டு என்று வினித் சொல்ல, அவள் கண்கள் மின்ன, “எங்கடா?” என்று அவள் தோட்டப்பக்கம் பார்க்க, அவளருகே வந்த வினித் அவள் கையிலிருந்ததை பிடுங்க, அவள் இறுக்கமாக பிடித்தாள். தண்ணீர் அவன் மீது பீய்ச்சி அடிக்க, இருவரும் தடுமாறி விழுந்தனர்.
“சாரிடா” என்று தியா பாவமாக சொல்ல, பைப் வைத்திருந்த அவள் கையை திருப்பி அவள் மீது தண்ணீரை அடித்தான் வினித்.
மூச்சு வாங்கிய தியா..கண்களை மூட, அனைவரும் பயந்து விட்டனர்.
வினித் அவளை பிடித்து உலுக்க, அஜய்யும் அவள் அப்பாவும் அவர்களிடம் ஓடி வந்தனர். வீராவும் பைக்கில் இருந்து இறங்கி வீட்டினுள் ஓடி வந்தார்.
தியா..தியா..வினித் பதட்டமாக அழைக்க, வாயில் சேர்த்து வைத்திருந்த நீரை தியா அவன் மீது துப்ப, அது வினித் இல்லை. அஜய். அனைவரும் திகைத்து விழித்தனர்.
சிரித்துக் கொண்டே கண்ணை திறந்த தியா, அஜய் முகத்திலா துப்பினோம் என்று அதிர்ச்சியுடன் கண்களை விலக்கி வினித்தை பார்த்து விட்டு அனைவரையும் பார்த்து அஜய்யை பார்த்து திருதிருவென விழித்தாள்.
அச்சோ, “என்னோட பிள்ளை” என அஜய் அம்மா ஓடி வர, சுயம் வந்து “சாரி சார்” என்று அவனிடம் சொல்லி விட்டு, மனதினுள் “போச்சு..போச்சு..” தியா நீ செத்தடி. உன்னை கொல்லப் போறான். சும்மாவே குதிப்பான். “அவன் குடும்பத்தின் முன் இப்படி செய்து விட்டோமே! என்ன செய்யப் போகிறானோ?” என்று பயந்த தன் மருண்ட விழிகளை பார்க்க, அஜய் அசையாமல் அவள் கண்களையே பார்த்தான்.
“அஜய்” என்று அவனை இழுத்த அவன் அம்மா, “ஏன்டி நீங்க விளையாட இது என்ன ப்ளே கிரவுண்டா? என்னோட பிள்ளைய மயக்க பாக்குறியா?” என கத்தினார்.
இங்க பாருங்க. ஓவரா பேசாதீங்க. “அவள பத்தி என்ன தெரியும்ன்னு பேசுறீங்க?” நீங்க உங்க லிமிட்ல்ல இருங்க. உங்க பையன் தான் இங்க வந்தான். அவ அவன் பக்கம் போகல. ஆனால் இனி இருவரும் சேர்ந்து தான் வொர்க் பண்ணப் போறாங்க. கண்டபடி பேசாதீங்க.
“எழுந்திரு தியா” என்று வினித் கோபமாக அவளுக்கு கை கொடுத்து தூக்கி விட்டான்.
வினித், “என்ன சொன்ன? நீ என் அருகே இருக்க மாட்டாயா?” உதடுகள் நடுங்க தியா கேட்க, ஒரு வாரம் தான் உன்னுடன் இருப்பேன். என்னோட வொர்க்கை உனக்கு பழக்கப்படுத்தி விட்டு போகிறேன்.
“போகிறாயா? எங்க போகப் போற?” அஜய் கேட்க, வினித் அவனை முறைத்து பார்த்து விட்டு, என் அப்பாவோட கம்பெனியை நான் தான் பார்த்துக்கணும். அதை அப்படியே விட முடியாது. என் நண்பனுக்காக இதுவரை உடன் இருந்தேன். இதுக்கு மேல அவனை பத்தி யோசிக்க பிடிக்கலை.
தியா..நீ உன்னோட வேலைய மட்டும் கவனிக்கணும். யாரும் ஏதும் சொல்லும் அளவு போயிடாத. அப்புறம் என்று அவளை பார்த்து ஆடையை மாத்திட்டு வா. நீ பர்பக்டா நடந்துக்கணும். உனக்கு எல்லாமே நான் கற்றுத் தருகிறேன். இப்ப இருக்கும் தியாவாக இருந்தால் இந்த வேலையை உன்னால சரியாக செய்ய முடியாது.
திறமை உன்னிடம் இருந்தாலும் இடத்திற்கு ஏற்றவாறு மாற பழகிக்கோ. எதுவும் பிரச்சனைன்னா நானும் அப்பாவும் இருக்கோம் என்று அவன் கூற, “கண்டிப்பா வரணுமா?” என்று தியா உதட்டை பிதுக்கினாள்.
வந்தே ஆகணும். “என்னப்பா சொல்றீங்க?” ஆமா தியாம்மா..சீக்கிரம் வா என்றார் வீரா.
அங்கிள், வெளிய வேண்டாம். வீட்டுக்கு வாங்க என்று வினித்தையும் வீராவையும் அழைத்து சென்றாள். அஜய் மூவரையும் பார்த்துக் கொண்டே சென்றான்.
“இவன் என்ன இப்படி சொல்றான்?” என தனராஜூம் சிந்தித்தார். தியா தயாராக மூவரும் சென்றனர்.
அஜய் கம்பெனி பொறுப்பை எடுத்துக் கொள்வதால் சீக்கிரமே தயாரானான். அவனும் அவன் அப்பாவும் ஒன்றாக காரை நோக்கி வந்தனர். வினித்துடன் வந்த தியா அவன் பைக்கில் இருந்து இறங்கினாள் பக்கா செக்ரட்டரியாக.
முட்டி தெரிய மஞ்சள் நிற கையில்லாத கவுனுடன் மேலே கோர்ட் அணிந்திருந்தாள். ஹேர் ஸ்டைல் மாறி இருந்தது. சிறிய அளவிலான மேக்அப். சொல்லப் போனால் இவள் தியாவா? என்று வியந்து பார்த்தார் அஜய்யின் அப்பா. அஜய் அவளை பார்த்து உறைந்து நின்று விட்டான்.
பை அங்கிள், நாம மாலை சந்திப்போம் என்று வினித்தை சங்கடமாக பார்த்தாள். அவன் அவளை முறைக்க, ம்ம்..என்று தலையசைத்து, “இரு வாரேன்” என்று அஜய்யையும் அவன் அப்பாவையும் பார்த்துக் கொண்டே சென்றாள்.
தனராஜ் கோபமாக, “என்னடா இது?” என்று வீராவை நோக்கி சென்றார்.
உன்னோட வேலையை மட்டும் பாரு. யாரை நம்பியும் தியாவை விட முடியாது. அவளை எல்லாவற்றிலும் நாங்க பழக்கப்படுத்தணும் என்றார் அவர்.
“என்ன பழகணும்?” தனராஜ் கோபமாக கேட்டார்.
“உனக்கு தேவையில்லை” என்று அஜய்யை பார்த்த ராகவீரன், “அஜய் மத்த பொண்ணுங்க மாதிரி நீ தியாவை ட்ரீட் பண்ண நடக்குறதே வேற” என்று எச்சரித்தார்.
“அங்கிள்” என்று பேச வந்த அஜய்யை நிறுத்திய வினித், கிளம்பலாமா பாஸ்? என்று கேட்டான்.
தியா வரவும் வினித் டிரைவர் சீட்டில் ஏற, அவனருகே ஏற வந்த அஜய்யை நிறுத்திய வினித், தியா “நீ முன்னாடி வா” என்று அழைத்தான்.
“நானா?” அவள் கேட்க, “உன்னை தான்” என்று வினித்தின் அழுத்தத்தில் அவள் வெளியே வந்து அஜய்யை பார்த்தாள்.
“எதுக்குடா?” அஜய் கேட்க, அப்பா சொன்னார்ல்ல. அவளுக்கு பழக்கப்படுத்த என்று வினித். “சீக்கிரம் வா” என்று அழைத்தான்.
அஜய் சார், “கொஞ்சம் தள்ளி நிக்குறீங்களா?” என தியா அவனிடம் கேட்க, அஜய் அமைதியாக காரின் பின் சீட்டில் அமர்ந்தான்.
கார் ஓட்ட சொல்லிக் கொண்டே வந்தான் வினித்.
“எதுக்குடா?” அவள் கேட்க, “நான் கிளம்பிய பின் யார் கார் ஓட்டுவா?” நம்ம பாஸ் குடிச்சிட்டு வந்தாலும் நீ தான் ஓட்டணும் தியா. முக்கியமான விசயம். நீ அவர் செல்லும் இடத்திற்கு சென்றாலும் எதையும் சாப்பிடக் கூடாது என பல அறிவுரை வழங்கினான் வினித்.
அஜய் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “வினித் போய் தான் ஆகணுமா?” என்று கேட்டான்.
அவன் முகத்தை பார்த்து மனதினுள் புன்னகைத்த வினித், வெளியே முகத்தை உர்ரென வைத்து, “போய் தான் ஆகணும்”.
“இப்பொழுது போல் டிராப் பண்ணீட்டாவது போகலாமே? இத்தனை வருடங்களாக நீ இல்லாமல் நான் எங்கேயும் போனதில்லையே!” அஜய் கேட்க, சட்டென பிரேக்கை அழுத்தினான் வினித்.
பிரான்சுக்கு போகப் போறேன். அங்கிருக்கும் பிஸினஸை கையில் எடுக்கப் போறேன். அப்பா தான் இங்கிருப்பார் என்றான்.
அஜய்யை விட தியா அதிர்ந்து, “பிரான்ஸா?” நோ..வினித், “போகாத” என்று அவன் கையை பிடித்தாள் தியா.
இங்கிருந்து இதுக்கு மேல பொறுமையா என்னால இருக்க முடியாது தியா.
“என்ன சொல்ற?” அஜய் கேட்க, “தவிர்க்க முடியாத சில காரணத்தால் தான் இங்கிருந்து போகப் போகிறேன்” என்றான் வினித். அவன் கையை எடுத்த தியா கண்ணீருடன், “என்னால தான் போகப் போறீயா?” எனக் கேட்டாள்.
தியா கண்ணீரை பார்த்து புன்னகைத்த வினித், “இல்லையே? உன்னோட அடியை பொறுக்க முடியாமல் போகிறேன்” என்று அவன் அவளை கேலி செய்தான்.
இனி அடிக்கவே மாட்டேன். போகாத என்று தியா அப்பாவியாக கூற, அவள் கண்ணீரை துடைத்து விட்டு, “உன்னை விட்டு போக எனக்கென்ன ஆசையா?” சில வருடங்கள் தான். “மனசு அமைதியாக மாட்டேங்குது தியா” என்று கண்ணை மூடினான் வினித்.
“நான் உன்னை கஷ்டப்படுத்தி இருந்தால் சாரிடா” என்று அவள் அழுதாள்.
ஏய், “என்ன சின்னப் பிள்ளை போல் அழுற?” தினமும் நான் உன்னிடம் பேசுவேன். அஜய் ஏதாவது திட்டினால் கூட என்னிடம் சொல்லிடு. உன்னை நம்பி தான் அஜய் கம்பெனியை விட்டு போகிறேன் தியா. பொறுப்பா நடந்துக்கோ என்றான்.
ஏதோ, “நான் ஓனர் மாதிரி பேசுற? நானும் உன்னுடன் வந்துறவா?” தியா கேட்க, அஜய் கண்கள் விரிந்து முகம் சுருங்கியது.
இல்ல தியா, நீ அஜய் பக்கத்துல இரு. அதுவே போதும். நான் கிளம்பும் முன் என் வேலையையும் அவன் வேலையையும் விளக்கி விட்டு தான் செல்வேன். கிளம்பலாம் என்று வினித்தும் கண்களை துடைத்தான்.
வினித், உன் பேச்சே சரியில்லை. “ஒரு மாதிரி பேசுற?” அஜய் கேட்க, ம்ம்..என்று அவனை பார்த்து விட்டு ஏதும் சொல்லாமல் கம்பெனிக்கு வந்தனர்.
தியா வினித்துடன் வெளியே சென்ற சமயம் தான் சிம்மா அஜய் அப்பாவை அழைத்து அவரிடம் முழுதாக இல்லை என்றாலும் விசயத்தை கூறி விக்ரமிற்கு உதவ அவரது செக்யூரிட்டிகளை அனுப்ப சொல்லி கேட்டிருப்பான். அவர் அஜய்யிடம் கூறி தான் செய்திருப்பார். ஏதாவது முக்கியமான கேஸாக இருக்கும் என அஜய் எண்ணிக் கொண்டான்.