உதிரன் கோபமாக ரித்திகாவை முறைத்துக் கொண்டே வெளியே வந்தான். அவனிடம் வந்த ரித்திகா, “சாரி மாமா…” நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்க. நமக்கு செட் ஆகாது. நான் உங்களுக்கு தகுதியானவள் இல்லை என கத்தினாள்.
“போதும் நிறுத்து” என சீற்றமுடன் உதிரன் செல்ல, அவனை கார் ஒன்று மோத வந்தது. அவன் கவனிக்காமல் செல்ல திலீப் அவனை பிடித்து தள்ளினான். உதிரன் தள்ளி சென்று கீழே விழ திலீப் நகர்ந்தான். கார்க்காரனோ காரை ஓட்டிக் கொண்டே கதவை திறந்து வைத்திருந்தான். இறுக்கமான கார்க்கதவு திலீப் மீது இடிக்க, சுற்றி சென்று வயிற்றை பிடித்துக் கொண்டு திலீப் கீழே விழுந்தான்.
மாமா..என ரித்திகா திலீப் அடிபட்டிருப்பதை கூட காணாது உதிரனிடம் ஓடி வந்து அவனை இறுக அணைத்து, “சாரி மாமா..சாரி மாமா..” என பதட்டமாக அழுதாள். அவள் உடல் நடுங்கியது.
அதே நேரம் மாமா..என்ற மறுகுரலில் சுருதி அவள் அப்பாவுடன் வந்த காரிலிருந்து திலீப்பை நோக்கி வர, பதட்டத்தில் இடையே நின்று விட்டாள். மகிழன் திலீப்பிற்கு உதவி செய்து கொண்டிருந்தான்.
ஏய்..என்று திலீப்பை அவ்விடத்திலே விட்டு மகிழன் சுருதியை நோக்கி ஓடி வந்தான். டேங்கர் லாரி அவளை நோக்கி வர, சுருதிம்மா..என்று அவள் அப்பா கத்த, அவள் லாரியை பார்த்து அதிர்ந்து நின்றாள். பாய்ந்து சுருதியை தள்ளிய மகிழன் அவள் மேலே விழுந்து விட லாரி அருகே வந்து விட இருவரும் உருண்டனர்.
லாரிக்காரன் கடந்து செல்லும் போது, ஓர் பொடியை அவ்விடம் தூவ, அதன் லேசான மணம் தெரியவும் உதிரன், எல்லாரும் மூக்கையும் வாயையும் இறுக மூடிக்கோங்க. இல்ல பிரச்சனையாகிடும். சீக்கிரம் இந்த இடத்தை விட்டு வீட்டுக்கு போங்க என கத்தி விட்டு ரித்துவின் மூக்கு, வாயை அவன் மூட, அவள் அவன் மூக்கு வாயை மூடினான். சுருதி அப்பாவும் மூடிக் கொண்டே தன் பொண்ணிடம் வந்தார்.
மகிழன் மீது சுருதி அவனை பார்த்துக் கொண்டே படர்ந்திருந்தாள். இருவரும் உதிரன் சொன்ன நிமிடம் மாறி மாறி மூக்கு, வாயை மூடிக் கொண்டிருக்க, அவளின் அங்கங்கள் அவன் மீது உராய, தீப்பற்றியது போல் மேலும் பார்த்தான்.
“சுருதி” என்று அவள் அப்பா சத்தம் கேட்டு அவன் எழ, அவனும் எழுந்தான்.
சுருதி எழ, அவள் அப்பா இறுமிக் கொண்டிருந்தார். அப்பா..”கையை எடுக்காதீங்க” என்று அவள் கையை எடுக்க, கண்களாலே நோ..என மகிழன் அவளிடம் கண்ணசைத்தான். அவன் ஓர் கையை அழுத்தமாக அவன் முகத்தில் அழுத்திக் கொண்டே, “வாங்க அங்கிள்” என அவரை அவ்விடம் விட்டு நகர உதவினான். மூவரும் வர, திலீப் எழுந்து வலியுடன் நின்றிருந்தான்.
உதிரன் அவனை வீட்டினுள் அழைக்க, அவன் ரித்திகாவை பார்த்தான். அவளோ தன் தம்பியை பார்த்து அவளிடம் ஓடினாள்.
சுருதியின் அப்பாவை வெளியே அமர வைத்து மகிழன் இருவரையும் பார்க்க, மகிழ், “உனக்கு ஒன்றுமில்லையே?” என ரித்திகா அவன் கை, கால்களை தொட்டு பார்க்க, என்னை தொடாத. என்னை இப்பொழுதும் சரி அப்பொழுதும் சரி. நீ உன்னோட தம்பியாகவே பார்க்கலைல்ல. என் பக்கம் வராத. நான் ஈவ்னிங்கே காலேஜ் ஹாஸ்டலுக்கு கிளம்புகிறேன் என்று உரக்க சினமுடன் கத்தினான்.
சுருதியும் அவள் அப்பாவும் அவனது திடீர் சீற்றத்தில் அவனை விழிவிரித்து பார்த்தனர். பரிதி உதிரனுடனும் திலீப்புடனும் உள்ளே வந்தார். சிம்மா வெளியே வந்து, விடுடா..அவங்க பிரச்சனைய அவங்க பார்த்துக்கட்டும் என்றான்.
“அவங்களா?” இன்னும் அவ உதி மாமாவ கல்யாணம் பண்ணிக்கல. என்னை ஒரு பொருட்டா கூட மதிக்கலை. பாரு அண்ணா..
அந்த பரதேசிய பத்தி விசாரித்து முதல்லவே விலகி இருக்க சொன்னேன். அப்பவாது அவன் வீடியோ எடுத்து மிரட்டுறான்னு சொல்லி இருக்கலாம்ல்ல. அம்மா, அப்பாவிடமும் நல்லவன் போல பேசி ஏமாத்தி இருந்திருக்கான். மொத்தமா அவ என்னை விலக்கிய மாதிரி இருக்கு அண்ணா என மகிழன் சிம்மாவை அணைத்து அழுதான்.
இல்லடா, “நான் எப்படி உன்னை விலக்குவேன்?” நீ என்னோட முதல் உயிர்டா. அவன் ரொம்ப மோசமானவன். அவனால் உனக்கு ஏதாவது ஆகிடும்ன்னு பயமா இருந்தது. மாமாவுக்கு துரோகம் செஞ்சது போல இருக்குடா. “நான் எப்படி அவரை கல்யாணம் பண்ணிக்கிறது? “கர்ப்பப்பையை எடுத்தால் மாமாவே விலகிடுவாங்கன்னு தான் தான் டாக்டரிடம் பேசினேன் என்றான்.
“அது எப்படிம்மா? கர்ப்பப்பையை எடுத்துட்டா காதல் இல்லாமல் போகுமா?” சிம்மா கோபமாக கேட்டான்.
அண்ணா, “நான் என்ன தான் பண்றது?” என ரித்திகா அழுதாள்.
சிம்மாவிடமிருந்து மகிழன் ரித்திகாவிடம் சென்று அவளை அணைத்துக் கொண்டான். “என்னோட உயிருக்காக உன்னோட மானத்தையே விட்ருக்கியே?” ஏன் ரித்து? இதுக்கு நாம இருவருமே சேர்ந்து செத்து போயிருக்கலாம் என அழுதான். சுருதி அதிர்ந்து அவனை பார்த்தாள்.
“மகிழ் சாவதா?” என அவள் கண்ணீர் வெளியே வந்தது.
இல்லடா, சாவதா? கண்டிப்பா இல்லை. அந்த பிரணவ் ஒருத்தன் இல்லை. இவன் போலும் அந்த வர்சன் போலான ஆட்கள் இந்த உலகில் நிறைய பேர் இருக்காங்க. யார் என்ன செய்தாலும் அவங்க செய்றத செய்ய தான் செய்வாங்க. அதுக்காக நாம சாக முடியாது. சாகக்கூடாது.
“நாம என்ன தவறு செய்தோம்?” என் மீதுள்ள தவறு ஒன்று தான். உதவி யாரிடமாவது கேட்டிருக்கணும். கேட்டால் அவன் யாரையும் கொன்றுவான்னு தான் கேட்கல.
அதை விடு..என மகிழனை விலக்கி அவன் கண்ணீரை துடைத்து விட்டு, எப்பொழுதும் போல் நீ காலேஜ் போகணும். நீ அப்பா ஆசைப்பட்டது போல் டாக்டர் ஆகணும்.
“எங்க? நான் தான் நிறைய விடுப்பு எடுத்துட்டேனே!” என்னை காலேஜ்ல்ல இருந்து வெளிய அனுப்புறதா பேசிட்டு இருக்காங்க என்றான்.
“இவ்வளவு சாதாரணமா சொல்ற?” இதுக்கு தான் உன்னை விடுப்பு எடுக்காத. பகுதி நேர வேலையெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேன். “கேட்டீயா?” சரி..நாளைக்கு நானும் காலேஜ் வாரேன். பேசலாம். என்ன கண்டபடி திட்டுவானுக..பரவாயில்லை.நம்ம வாங்காத திட்டா என்று மகிழனை பார்த்து ரித்திகா புன்னகைத்தாள்.
“ரொம்ப நாள் ஆச்சு?” உன்னோட சிரிப்பை பார்த்து என்று மகிழன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
டேய், “என்ன பண்ற?” உதிரன் சத்தம் கேட்க, இருவரும் நிமிர்ந்து பார்த்தனர். ரித்திகா கலக்கமுடன் அவனை பார்க்க, மகிழனோ,
“என்ன மாம்ஸ் ஜெலஸ்ஸா?” என்று ரித்திகா கழுத்தை மகிழன் இறுக கட்ட, விடுடா..மூச்சு முட்டுது என ரித்திகா கத்தினாள்.
அப்பாடா, “ரெண்டும் பழைய பார்முக்கு வந்திருச்சுக்க” என்று சிம்மா கூற, அதை கேட்டு, “எது? இதா பழைய பார்ம்? எனக்கு அப்படி தெரியலையே!” உதிரன் சொல்ல, மகிழனை நகர்த்தி விட்டு ரித்திகா எழுந்தாள்.
அம்மா தாயே! எங்கள மேலையும் டென்சன் ஆக்கிடாத என்று மகிழன் சொல்ல, ரித்திகா கண்கள் அலை பாய்ந்தது. என்னால முடியாதே..என அவள் தனியாக பேச, “கண்டிப்பாக” என்றான் சிம்மா.
“உனக்குமா கேட்குது?” உதிரன் கேட்க, ஆமா..என அவன் கூறியதை கூற, அனைவரும் பயத்துடன் அதிர்ந்தனர்.
எல்லாரையும் வெளியே வர வைத்து சிம்மா விசயத்தை கூறத் தொடங்கினான்.
ரித்து- உதி மச்சான், நான்- ஸ்டார்.. இப்பொழுதே திருமணம் செய்து கொள்ளணுமாம் என்ற சிம்மா வார்த்தையில் திலீப்பின் காதல் மனது உடைந்து சில்லாய் போனது. அவன் கண்ணீரில் மகிழன் திகைத்து அவனை பார்க்க, அவனை தொடர்ந்த சுருதியும் திலீப்பை பார்த்து எழுந்தாள்.
“மாமா” என சுருதி அழைக்க, அனைவரும் அவளையும் திலீப்பையும் பார்த்தனர். அவன் அசையாது கண்ணீருடன் அப்படியே நின்றான்.
“மாப்பிள்ள” என சுருதியின் அப்பாவும் அவனிடம் வர, ரித்திகா தலைகவிழ்ந்து நின்றாள். ரித்திகாவை பார்த்த உதிரன் பார்வை திலீப்பை துளைக்க, “அவன் என்ன செய்தான்?” என ரித்திகாவிடம் கோபமாக வந்தான் உதிரன்.
“மாமா” என அவள் இதழ்கள் நடுங்கியது. அவள் நடுக்கத்தை பார்த்து தவறாக எண்ணிய உதிரன் திலீப்பை அடிக்க வந்தான்.
ரித்திகா வேகமாக திலீப் முன் வந்து, மாமா அவர் என்னை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் என அவள் தயங்க, “என்ன சொல்லித் தொலை..” என மகிழன் கத்தினான். சுருதி பயத்துடன் உதிரனையும் மகிழனையும் பார்த்தாள்.
“என்னை பிடிச்சிருக்குன்னு காதலை சொன்னார்” என்று மூச்சு வாங்கி சொல்லி முடித்தாள்.
“பிடிச்சிருக்கா?” என்று உதிரன் திலீப்பை பார்த்தான். அனைவரையும் விலக்கி விட்டு திலீப் நகர, “ஒரு நிமிசம்..” ரித்துவும் உதிரனும் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க. நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும் என பரிதி சொல்ல, திரும்பி கூட பாராது தலையை மட்டும் அசைத்தான் திலீப். அவன் மேலும் நகர்ந்தான்.
நீங்க எங்கேயும் போகக் கூடாது. உங்க உதவி எங்களுக்கு வேண்டும் என்று அழுத்தமாக சிம்மா கூற, முடியாது சார். மாமா இங்கிருந்தால் கஷ்டப்படுவாங்க என்றாள் சுருதி.
சரி, நீங்க போங்க என்ற சிம்மா..உதி மச்சான்..முக்கியமான விசயம்..மிருளாலினிக்கு அடுத்த அந்த சாவானின் கண்ணில் படப் போகும் அந்த பொண்ணுங்க “ரித்துவும் ஸ்டாரும்” என்றான் சிம்மா.
“சிம்மா” என அவன் பெற்றோர்கள் அதிர, திலீப்பின் நடை நின்றது. சுருதியும் அவள் அப்பாவும் இவர்களை பார்க்க, ஆமா..சுபி தான் சொன்னான் என்றாள் ரித்திகா.
அதுமட்டுமல்ல..காலையிலே திருமணம் நடக்கணுமாம். இல்லைன்னா..இரவு அண்ணாவும் மாமாவும் என ரித்திகா கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க, அனைவருக்கும் புரிந்தது.
அப்படின்னா, மிருளா அக்கா போல..”உங்களை திருமணம் செய்யப் போகும் உதிரன் அண்ணா, சிம்மா மாமா உயிர் ஆபத்தில் இருக்கா?” சுருதி கேட்க, “மாமாவா?” உதிரன் கேட்க, ஆமா..சுவா அப்படி தான அழைப்பாள் என்றாள் சுருதி.
“இப்ப ரொம்ப முக்கியம்” என்றான் மகிழன்.
அண்ணா, “அந்த அரக்கன் உங்களை..” மகிழன் சிம்மாவிடம் கேட்க, இன்றே அவனை அழிக்கணுமாம். சுபி அதற்கு தயாராகி விட்டானாம். இனி நாம் தான் தயாராகணுமாம்.
“நாமா?”
ஆமா மச்சான், நம்ம சிவன் கோவில் பூசாரி நம்மை பாதுகாக்கவும் அவனை அழிக்கவும் சில ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறாராம். அதே போல் இங்கே மிருளாலினி வீட்டிலும் இரவு தயார் செய்வார்கள். ஆனால் இன்று மிருளாவும் தமிழும் வீட்டில் இருக்கப் போறதில்லை. அதே போல் நாமும் நமக்கான இரவை நம் ஊருக்கு வெளியே இருக்கும் காட்டுப்பகுதியில் தான் கழிக்கப் போகிறோம்.
“என்னது முதலிரவு காட்டிலா?” மிருகங்கள் வரும் வாய்ப்பு கூட இருக்கும் சிம்மா அன்னம் பதற, அம்மா..அந்த ஈசனை மீறி நம்மிடம் ஏதும் வராது.
“உடனே எப்படின்னா முடியும்?” மகிழன் கேட்க, கஷ்டம் தான் என்றான் சிம்மா.
“மாமா” என்று சுருதி திலீப்பை பார்க்க, நாங்களும் உதவுகிறோம். எனக்கு தெரிந்த நண்பன் தனி பிளைட்டே வச்சிருக்காங்க. அவங்களிடம் பேசுகிறேன் என்று திலீப் சொல்ல, “வாட்” என அனைவரும் வாயை திறந்தனர்.
ஓ.கே, “பட்டுப்புடவை எல்லாம் வாங்கணுமே?” சிம்மா சொல்ல, ரித்திகா பாவமாக அனைவரையும் பார்த்தாள். யாரும் அவளை கண்டுகொள்ளவில்லை.
அதை நான் பார்த்துக்கிறேன் என்றாள் சுருதி. ஆமா…நாங்க இப்பவே கிளம்புகிறோம் என அவள் அப்பாவும் சொல்ல, நானே இருவரையும் தயார்படுத்துகிறேன். பொண்ணுங்க தயாராக தேவையான எல்லாவற்றையும் நானே வாங்கிட்டு வாரேன் என்றாள் சுருதி.
வாம்மா..சுருதி அப்பா அவளை அழைக்க, ஒரு நிமிடம் என்ற உதிரன் தன் கார்ட்டை மகிழன் கையில் கொடுத்து, “அவர்களுடன் போயிட்டு வா. நீ காரை ஓட்டு. அவர் கொஞ்சம் ஓய்வில் இருக்கட்டும்” என்றான் உதிரன்.
“மகிழுமா?” ஜாலி என மனமகிழ்ச்சியுடன் சுருதி சென்றாலும் திலீப்பை பார்த்து கவலையாகவும் இருந்தது.
மாமா, சுருதி அழைக்க, நீங்க போயிட்டு வாங்க. நான் ஓ.கே தான் என்று அமர்ந்தான்.
விக்ரமிடம் இங்கு நடப்பதை சொல்லாமல் அவனிடம் மிருளா ஊரை தள்ளி இருக்கும் தனி வீடு ஒன்றில் இன்றைய இரவை கழிக்கும் படி சொல்லணும். பின் அவனிடம் கவனமாகவும் இருக்க சொல்லுங்க என்று திலீப்பிடம் சொல்ல சொன்னான் சிம்மா.
“நானா?” திலீப் கேட்க, ஆமா நீங்க தான். அம்மா அப்பா இங்கிருக்கும் முக்கியமானதை மட்டும் எடுத்து பேக் பண்ணுங்க என்றான் சிம்மா.
சிம்மா, மணி ஏழாகுது. நல்ல நேரம் என உதிரன் கேட்க, பரிதி அலைபேசியை பார்த்து பத்தரை மணிக்கு மேல் தான் என்றார். “இருமணி நேரத்துல போயிடலாமா? அன்னம் கேட்க, போயிடலாம்” என்றான் திலீப்.
மச்சான், முதல்ல உங்க அம்மா, அப்பாவுக்கு விசயத்தை சொல்லுங்க. முத மாதிரி பிரச்சனை செய்ய மாட்டாங்கன்னு நினைக்கிறேன் என்றான்.
ம்ம்..உதிப்பா, நீ பேசிட்டு அலைபேசியை கொடு. நாங்களும் பேசணும்ல்ல. அதான நம்ம முறை என்றார் அன்னம்.
சரிங்கத்தை என உதிரன் அலைபேசியில் அவன் பெற்றோருடன் பேச, அவர்கள் மகிழ்வுடன் பேசினர். அவனும் ஆச்சர்யமாக பேசினான். அவன் அப்பத்தாவும் பேசினார்.
அன்னம் தயங்கி அலைபேசியை வாங்க, புகழேந்தி பாசமாக “தங்கம்” என அன்னத்தை அழைக்க, அவர் கண்ணில் அப்படியொரு உவகை..அண்ணா..என இவர் பாசத்தில் கரைய..அம்மா, உங்க பாசத்தை அப்புறம் வச்சுக்கோங்க. முதல்ல பேச வேண்டியதை பேசுங்க என சிம்மா சொல்ல, புகழேந்தி புன்னகைத்தவாறு மாப்பிள்ளைக்கு அவசரத்த பாரு.
“மாப்பிள்ளாய்யா?” யோவ்..இருய்யா உன்னை ஊர்ல வந்து கவனிச்சுக்கிறேன் என்றான் சிம்மா.
“சரிங்க மாப்பிள்ள” என அவர் கூற, “என்ன மச்சான் உங்க அப்பாரா இது? என்ன ஆச்சர்யம்?” என சிம்மா சொல்ல அனைவரும் சிரித்தனர்.
ரவியும் கீர்த்தியும் காரிலிருந்து இறங்கினர். ரவி நீங்க போங்க. கீர்த்தி, நீ வா என ரவி சென்று விட்டானா? என பார்த்து விட்டு, போய் குளிச்சிட்டு ஆடையை மாற்று ஒரு வாரம் உனக்கு பள்ளியில் விடுப்பு சொல்லிட்டேன். நாங்க ஊருக்கு போறோம். நீயும் எங்களுடன் தான் வரணும் என்றான் சிம்மா.
நார்மலான ரெடிமேட்ஸ் கடைக்குள் நுழைந்தனர் சுருதி, அவள் அப்பா, மகிழன். நேராக உள்ளே வேகமாக சுருதி நடக்க, சுருதிம்மா..அவள் அப்பா அழைக்க, அப்பா நமக்கு நேரம் குறைவு தான். நீங்க இங்கேயே இருங்கள். நாங்கள் பார்த்து வாங்கீட்டு வாரோம்.
திருமணத்திற்கு எல்லாருக்கும் எடுத்தால் தான நன்றாக இருக்கும் என்றார் சுருதி அப்பா.
இருக்கட்டும் அங்கிள். அதற்கெல்லாம் நேரமில்லை என மகிழன் சமாளிக்க பார்க்க, அப்பா வாலேட் குடுங்க என்று அவரிடம் வாங்கிய சுருதி கார்டு ஒன்றை எடுத்து, எனக்கும் தெரியும்ப்பா. அரைமணி நேரத்தில் வாரோம்.
அம்மாடி, “எப்படி?” அவர் கேட்க, அவரை பார்த்து குறும்புடன் கண்ணடித்து, “யாருமிருக்க பயமேன்” என்று அவள் முன் செல்ல, மகிழன் யோசனையுடன் பின் சென்றான்.
“உங்க குடும்ப நபர்களின் புகைப்படம் இருந்தா காட்டுங்க” என நேராக மகிழனிடம் கேட்டுக் கொண்டே அங்கிருந்தவர்களிடம் பலரக புடவைகளின் பெயரை கூறி எடுக்க சொல்ல, அதை மேலோட்டமாக பார்த்த சுருதி மகிழனை பார்க்க, அவன் புகைப்படத்தை காட்டினான். அதில் பெண்களின் புகைப்படத்தை பார்த்து அவர்களுக்கு ஏற்ற அழகான புடவைகளை மலமலவென எடுத்தாள். பின் அதற்கான பிளவுஸ், உள்ளாடைகளையும் எடுத்தாள். இருபது நிமிடத்தில் எடுத்து விட்டு, ஆண்கள் செக்சனிற்கு சென்று பட்டுவேஷ்டியுடனான சட்டையையும், பெரியவர்களுக்கு அங்கவஸ்திரமும் சேர்த்து எடுத்தாள்.
மகிழனுக்கு எடுத்து விட்டு, “உங்களுக்கு இது ஓ.கேவா?” எனக் கேட்டாள்.
“எனக்குமா?” வேண்டாம் என்றான் அவன்.
ஹலோ, உங்க அக்கா திருமணம் தான். “புதியது இல்லாமல் எப்படி?” என்று அவனிடம் கேட்க, கார்ட்டை அவன் பில் போடும் இடத்தில் கொடுக்க, முதல்ல பில் போடட்டும் என்ற சுருதி அனைத்தையும் பார்த்து விட்டு, ஒரு புடவையை காட்டி..இதில் விலை அதிகமாக போட்டிருக்கு என அப்புடவை பற்றிய விவரத்தை கூறி அவள் விலையை குறைக்க கடைக்காரரே ஆவென பார்த்தார்.
மேம், “எப்படி இப்படி வரையறுக்கப்பட்ட விலைய சொல்றீங்க?” விற்பனை பெண் கேட்க, நான் பேஸன் டிசைனிங் பைனல் இயர்..எனக்கு எல்லா விதமான ஆடை பற்றியும் தெரியும். எங்களுக்கு நேரமில்லை. சீக்கிரம் மாற்றி பில் செய்து கொடுங்கள் என்று இப்ப குடுங்க. நான் இப்ப வந்திடுறேன் என்று ஒரு பெண்ணிடம் ஓடினாள் சுருதி.
அந்த பொண்ணு மூன்று கவராக கொடுக்க, இதை தனியா பில் போடுங்க என கடையை கவனித்தாள். மகிழன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அவனை பார்த்து புருவத்தை உயர்த்த, “ஒன்றுமில்லை” என்று கார்டை வாங்கி பாக்கெட்டில் நுழைத்து விட்டு ஆடைகளை வாங்கினான்.
ஹே..இருங்க. நானும் வாங்கிக்கிறேன் என்று அவள் வாங்க, சரவணா..”இவங்களுக்கு உதவு” என்று கடைக்காரர் சொல்ல, “தேங்க்யூ சார்” என்றாள் அவள்.
“உங்க மேரேஜூக்காம்மா? திடீர் திருமணமா?” என அவர் கேட்க, “எங்களுக்கா இல்லையே?” நாங்க பார்த்து இரு நாட்கள் கூட முழுதாக முடியல என்றான் பதட்டமாக மகிழன். சுருதி புன்னகையுடன் அவனை பார்த்தாள்.
அவன் திரும்பி அவளை பார்த்து, “அது என்ன தனி கவர்?” எனக் கேட்டான். எங்களுக்கு என சொல்லிக் கொண்டே அப்பா, வாங்கிட்டோம்..அரை மணி நேரம் தான். எப்படி? சுருதி கேட்க, என் பொண்ணுன்னு காமிச்சுட்டம்மா என்றார் அவர் பெருமையுடன். மறுபக்கம் திரும்பி மகிழன் புன்னகைத்தான்.
அப்பா, நீங்க தான் டிரைவ் பண்ணனும். கார் டிக்கில போட்றாதீங்க. பின் சீட்டில் வையுங்க. மகிழ் நீங்க பின்னாடி ஏறிக்கோங்க என மீண்டும் கடைக்காரரிடம் ஓடினாள்.
ஏய், என்னாச்சு? மகிழன் கேட்க,மார்க்கர் என சொல்லிக் கொண்டே அவரிடம் பிளாக் மார்க்கரை வாங்கி வந்து அவளும் பின் பக்கம் ஏறினாள்.
“என்ன பண்ற?” மகிழன் கேட்க, பின்னே இருக்கும் சில ஆடைகளை முன்னே நகர்த்தி வைத்து விட்டு, எல்லாவற்றையும் எடுங்க என புகைப்படத்தில் உள்ளவர்களின் பெயரை கேட்டு கருப்பு மார்க்கரில் பெயரை எழுதி பிரித்து வைத்தாள். அவ்வப்போது வெளியே பார்த்தாள்.
“என்ன தேடுற?” மகிழன் கேட்க, கவரிங் ஜூவல் ஷாப் தான். அங்க சில பொருட்கள் வாங்கணும் என அவள் சொல்லிக் கொண்டே, “அப்பா காரை நிறுத்துங்க” என இறங்கினாள். மகிழனும் இறங்கினான். அங்கேயும் சில பொருட்களை வாங்கி விட்டு, காரில் ஏறினார்கள். இம்முறை முன் ஏறிக் கொண்டாள்.
அவர்களுக்காக வாங்கிய கவரை வாங்கிய பிரித்து, “அப்பா உங்களுக்கு நல்லா இருக்கா? இது திலீப் மாமாவுக்கு நல்லா இருக்கா”” சுருதி கேட்க, சூப்பரா இருக்குடா..”உன்னோடதை காட்டு” அவர் கேட்க, அவள் பேன்சி லாங் கவுனை காட்டினாள்.
என்னம்மா, “நீ சிம்பிளா எடுத்துருக்க?” அவர் கேட்க, நம்ம குடும்பத்தோட இல்லாமல் நாம தனியா கலந்துக்கிற பங்சன். எனக்கு ஒரு மாதிரி இருக்கு. பாருங்க..”அம்மா ஒரு கால் பண்ணி இருக்காங்களா?” சோகமாக சுருதி கேட்க, அவ அவளோட மருமகனோட பிஸியா இருப்பாம்மா என்றார்.
“என்னை விட அம்மாவுக்கு மாமா முக்கியமா?” சினமாக சீட்டில் சாய்ந்து கொண்டாள்.
சுருதி அப்பா சிரித்து கொண்டு, “அவபிளானை பத்தி என்ன நினைக்கிறீங்க?” என்று அவர் கேட்டது தான். “அந்த மாடை கட்டிக்கிறதுக்கு நானு புல்லு மேயுற எருமையை கட்டிப்பேன்”. சரியான பைத்தியக்காரன் என அவள் திட்டிக் கொண்டே சென்றாள்.
சரி, அவனை விடு. “விகாஸை பத்தி என்ன நினைக்கிற?”
சேடிஸ்ட்..அழகா பொண்ணை பார்த்தா போச்சு ஜொல்லு விட்டுட்டு பின்னாடியே போயிருவான் என திட்டினாள்.
ஹா..ஹா..என சிரித்தார்.
அப்பா சிரிக்காதீங்க.
சரிம்மா, சிரிக்கலை..அப்ப நம்ம திலீப்? என கேட்டார்.
திலீப் மாமா ரொம்ப நல்லவர். நாங்க இருவரும் ஒரே மாதிரி தான். சோ..செட் ஆக மாட்டார். இப்ப அத்தை பக்கத்துல இருந்தா அவருக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும். ரொம்ப கஷ்டம் தான்.
எல்லா மாமனுகளையும் வேண்டாம்ன்னு சொல்லீட்ட. “ரகாவும் வேண்டாம்ன்னு தான் சொல்லப் போற? யாரையும் காதலிக்கிறியாம்மா?” அவர் கேட்க, சுருதி அமைதியானாள். கண்ணாடி வழியே மகிழனை பார்த்தான். அவனும் இவர்களது உரையாடலை கவனித்துக் கொண்டு தான் வந்திருப்பான். அவனும் அவளை பார்க்க, அவள் கண்ணாடி வழியே அவனை பார்ப்பதை கவனித்து அவளை தவிர்த்தான். சுருதி அப்பாவும் இருவரையும் கவனித்தார்.
என்னம்மா பேச்சையே காணோம்.
“நான் யாரையாவது காதலித்தால் நீங்க ஏத்துப்பீங்களாப்பா?” அவள் கேட்க, எனக்கு என்னம்மா பையன் நல்லவனாகவும் உன்னை நன்றாக பார்த்துக் கொண்டால் போதும்.
“அம்மா ஒத்துப்பாங்களாப்பா?” அவள் வருத்தமாக கேட்க, அவ ராஜாவ தான் உனக்கு கட்டி வைக்கணும்ன்னு நினைக்கிறாலே. நீ யாருன்னு சொன்னா நான் உன் அம்மாவை சம்மதிக்க வச்சிருவேன் என்றார்.
“லவ் யூப்பா” என்றாள். அவர் ஆதரவாக அவளது தலையை இடக்கையால் கோதினார்.
நான் இன்னும் என்னோட காதலை சொல்லலைப்பா. அவங்க ஏத்துக்கிறதும் கஷ்டம் தான். சொல்லணும். முதல்ல அவரே படிப்பை முடிக்கல. நானும் படிப்பை முடிக்கணும். அப்பா..நான் தனியே பேசன் டிசைனிங் கம்பெனி நடத்தணும்ன்னு நினைக்கிறேன். “ஏதாவது செய்யலாமா?” சுருதி கேட்க, ஒரு வருசம் நீ வொர்க் பண்ணு. அப்புறம் பார்த்துக்கலாம் என்றார்.
போக வேண்டாம்மா..உன்னோட மாமாக்கள் யாரும் ஒத்துக்க மாட்டாங்க.
அவனுகள விடுங்க.
நான் பசங்கள சொல்லலை. கிருபாவே திட்டுவான்டா.
ஏன்ப்பா, விசயம் இல்லாமல் இல்லைடா. உன்னோட திலீப் மாமா அம்மா பேச்சை கேட்காம வெளிய வேலைக்கு போனாங்க. போன இடத்தில் அவரை தவறான கண்ணோடத்தில் எல்லாரும் பேசினாங்க. அதனால அவங்க மன அழுத்தத்தில் இருந்தாங்க. ஆனால் இப்ப எந்த பிரச்சனையும் இல்ல.
நம்ம குடும்பத்துல்ல எல்லாரும் சேர்ந்தும் தனியாகவும் கம்பெனியை விரிவாக்கி பெரிய நிலையில் இருப்பதால் அதன் மூலம் வந்தவங்கன்னு பேசுவாங்கடா. “எதுக்கு இதெல்லாம்?”
“அப்படின்னா எதுக்கு எங்கள படிக்க வச்சீங்க?” சுருதி கோபமாக கேட்க, “மூளையை பயன்படுத்த கற்றுக் கொள்ள தான்” என கேலி செய்தார். “அப்பா” என அவர் கையில் குத்தினார்.
சரிம்மா, நீ தனியா போக வேண்டாம். நீ ஏதாவது ஒரு டிசைனில் புதுவிதமாக ஆடையை உருவாக்கு. அதை நம்ம ராஜா பொறுப்பில் இருக்கும் மாலில் வைக்கலாம். மக்கள் வாங்குவதை வைத்து முடிவெடுக்கலாம் என்றார்.
“அதை கூட அவன் மாலில் தான் வைக்கணுமா?” என கோபமாக கேட்டாள் சுருதி.
நம்ம குடும்பத்து பிள்ளைய வச்சிட்டு அடுத்தவங்க மாலில் உன்னுடைய பொருளை வைப்பதா? அவர் கேட்க, அப்பா..அப்பாவா பேசாதீங்க. பிஸினஸ் மேனா பேசுங்க என்றாள்.
பேசலாம். “உன் அம்மாவிடம் யார் வாங்கி கட்டிக் கொள்வது?” என அவர் கேட்க, நான் அம்மாவிடம் பேசிக்கிறேன் என்றாள்.
பேசுறது சரிம்மா. என்னை இழுத்து விட்றாதம்மா என்றார் அழகான முகப்பாவனையுடன். சிரித்து விட்டாள் சுருதி.
“அப்பா இருந்தாலும் அம்மாவுக்கு இப்படியா பயப்படுவீங்க?”
திருமணத்தின் பின் எல்லா ஆண்களின் நிலையும் இவ்வாறு தான் இருக்கும் என்றார் அவர்.
அப்பா, “அத்தை இந்த அளவிற்கு கோபப்படுவாங்களா?” சுருதி கேட்க, “யாரை கேக்குற?”
சுவாதி அம்மாவை தான். அதா..போலீஸ்காரன்னா அவங்களுக்கு தவறான எண்ணம். அதான்..அப்ப மாமா? அவன் சும்மாவே மூஞ்சியை உர்ன்னு தான் வச்சிருப்பான்.
இல்லப்பா, சுவாதி கஷ்டப்படுறது நல்லா தெரியுதுப்பா. உங்களுக்கே தெரியும்ல்ல. அவள் என்ன தான் சிரித்தாலும் மனசுக்குள்ள ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கா. அவளை பார்த்தாலே கஷ்டமா இருக்கு.
“அதுக்கு நாம என்னம்மா பண்றது?”
அவ லவ்வுக்கு உதவலாம்ல்ல. “உங்களுக்கு விக்ரம் சாரை பிடிக்காதா?” சுருதி கேட்க, நல்ல பையன் தான். ஆனால் ரிஸ்க்கான வேலைல்லம்மா.
எதுல்ல தான்ப்பா ரிஸ்க் இல்லாம இருக்கு. ரோட்ல நடப்பது கூட ரிஸ்க் தான் என்றாள்.
சரியா தான் சொல்ற. என்ன தான் குடும்பமா நாம சேர்ந்து இருந்தாலும் அவங்க அவள பெத்தவங்க. அவங்களுக்கும் அவங்க பொண்ணு திருமண விசயத்துல்ல ஆசை இருக்கும்ல்ல.
“சுவாதி ஆசை? அவளோட காதல்?”
அம்மாடி, என்னை விடு. நீ வேணும்ன்னா விகாஸ் கிட்ட பேசு. அவனால் வேண்டும்ன்னா உதவ முடியும் என்றார் சுருதி அப்பா.
“அவனிடமா?”
“அவன் இவன்னு பேசாதம்மா. அழகா மாமான்னு சொல்லு” என்று மகிழனை பார்த்தார். அவன் முகம் சுருங்கியது.
“மாமாவா?” சரி, இவங்க திருமணம் முடியட்டும் பேசுகிறேன் என்றாள்.
“தனியா பேசப் போறீயா?” என்று தன் மகளை ஓரக்கண்ணால் பார்த்தார் அவர்.
அப்பா, அந்த கேடியோட பேச தான் போறேன். லவ் பண்ண போகலை. எனக்கு தான் வேறொருவரை பிடிச்சிருக்கே!
சரிம்மா என அவர் அமைதியானார்.
“யாருன்னு கேட்க தோணலையாப்பா?” சுருதி கேட்டுக் கொண்டே மகிழனை பார்த்தாள்.
இல்லம்மா, நீ சொல்லும் போது சொல்லும்மா. யாராக இருந்தாலும் கவனமாக இரும்மா என்று கள்ளப்புன்னகை சிந்தினார். மகிழனோ சிந்தனையில் ஆழ்ந்தான்.
“என்னம்மா அலைபேசியில்?”
மெஹந்திப்பா, “கல்யாண பொண்ணுங்களுக்கு போட்டு விடணுமே!”
“அதெல்லாம் வேண்டாம்” மகிழன் சொல்ல, பிளைட்ல்ல போறோம்ன்னு தான சொன்னாங்க. நான் அந்த நேரத்தில் போட்டு விடுவேன் என்றாள்.
“உனக்கும்மா?”
“எனக்கு நேரமிருக்காதுப்பா” என்று டிசைனை பார்த்துக் கொண்டே சென்றனர்.
சுருதியும் மகிழனும் காரை விட்டு இறங்கி வாங்கிய பொருட்களை எடுக்க, வெளியே வந்த உதிரன் அவர்களை பார்த்து வந்தான்.
“என்னோட மாமா எங்க?” என்று உதிரனை பார்த்து சுருதி கேட்க, “தெரியலையே?” என சொல்லிக் கொண்டே மகிழனுடன் பொருட்களை எடுத்தான். சுருதி அவ்விடத்தை கண்ணால் அலச, திலீப் அங்கு எங்குமே இல்லை.
அப்பா, “மாமாவை காணோம்” என்று மகிழனிடம், “இதை உள்ள எடுத்து வையுங்க” என்று சொல்லி விட்டு அவர்கள் வந்த வழிக்கு எதிரான திசை நோக்கி திலீப்பை தேடி செல்ல, சுருதிம்மா நானும் வாரேன். தனியே போகாத என அவளுடைய அப்பாவும் கார்ச்சாவியை உதிரன் கையில் கொடுத்து, காரை ஓரம் நிறுத்த சொல்லி சென்றார்.
எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு மகிழன் அவர்களை தேடி வந்தான். அவன் வந்த நேரம் திலீப் சிவந்த கண்களுடன் சுருதியை அணைத்துக் கொண்டு நின்றிருந்தான். மகிழன் உடல் விறைத்து அவர்களை பார்த்தான். சுருதி அப்பா அங்கு இல்லை. அவன் கோபமாக வீட்டிற்கு செல்ல திரும்ப, “மாமா..” என பதறினாள் சுருதி.
திலீப் மயங்கி அவள் மீது விழ, அவனது உடலை தாங்க முடியாமல் கீழே விழுந்திருந்தாள் சுருதி. திலீப் அவள் மீது மயக்கத்தில் இருந்தான்.
“ஏய்” என்று மகிழனும், “மாப்பிள்ள” என்று சுருதி அப்பாவும் அவர்களிடம் விரைந்தனர்.
திலீப்பை மகிழன் நகர்த்த, சுருதி எழுந்து மாமா..மாமா..என அழுதாள்.
மகிழன் வேகமாக குழாய் நீரை பிடித்து அவன் மீது தெளித்தான். சுருதி மேலும் அழ, “அழாம இரு” என்று சினமுடன் மகிழன் கத்த, அப்பாவும் பொண்ணும் அவனை பார்த்தனர்.
திலீப் கண்ணை திறக்க, குடிக்க நீரை கொடுத்து விட்டு மகிழன் எழ, “மாப்பிள்ள நீங்க நல்லா தான இருக்கீங்க? ஏதும் செய்யுதா?” சுருதி அப்பா கேட்க, மகிழன் கோபமாக மூவரையும் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“நல்லா இருக்கேன்” என்ற திலீப் மகிழனை பார்த்தான். அவன் முறைப்பை பார்த்து மெதுவாக எழுந்தான்.
“அப்பொழுது ஓடி வந்து உதவ வந்தவனா இவன்?” என்று திலீப் மகிழனை பார்க்க, நீங்க வீட்டுக்கு போங்க. நான் இவரிடம் கொஞ்சம் பேசணும் என்றான் மகிழன்.
இல்ல தம்பி, “நாங்க பார்த்துக்கிறோம்” என்று அவள் அப்பா கூற, “நான் பேசணும்” என்று மகிழன் அழுத்தமாக கூறினான்.
“உங்க அக்காவுக்காக இல்லை” என சுருதி கூற, அவளை முறைத்த மகிழன், அங்க வேண்டியதை பாருங்க. கொஞ்ச நேரத்துல பிளைட்ல்ல போகணும் என்றான்.
வாம்மா..என சுருதி அப்பா அவளை அழைத்து செல்ல, அவள் இருவரையும் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.
“உங்களுக்கு எப்பொழுதிலிருந்து என் அக்காவை பிடித்தது?” மகிழன் கேட்க, திலீப் அமைதியாக இருந்தான். அவன் மணிக்கட்டை பிடித்து சோதித்து அவன் கையை விட்டு மகிழன் திலீப்பை பார்த்தான்.
அன்று பிரச்சனையின் போது மணக்கோலத்தில் பார்த்தேன். பார்த்ததும் பிடித்து விட்டது. நிறைய பொண்ணுங்களை கடந்து வந்திருக்கேன். ஆனால் இப்படியொரு உணர்வு யார் மீதும் இதுவரை வந்ததில்லை என்றான் திலீப்.
ம்ம்..இருக்கலாம். ஈர்ப்பாக இருக்கும். ஆனால் என் அக்காவும் உதி மாமாவும் சிறுவயதிலிருந்தே காதலிக்கிறாங்க. எனக்கு அப்பொழுதிலிருந்தே என் மாமா அவர் தான்னு மனதில் பதிந்து விட்டது. வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது என்றான் மகிழன்.
ம்ம்..பார்த்தேன். அவருடன் நீ மட்டுமல்ல உன் அக்காவும் உயிரா இருக்காங்க. அவரும் உங்க மேல உயிரா இருக்காரு. ஆனால் என்னால என் மனசை சமாதானப்படுத்த முடியல. அதான் தனியே வந்தேன். ரொம்ப கஷ்டமா இருக்கு என்ற திலீப் அவனை அணைத்து மீண்டும் அழுதான்.
நீங்க இப்படி செய்தால் என் அக்கா ரொம்ப வருத்தப்படுவா. ஒரு ப்ரெண்டா அவளை பார்க்க பாருங்க. உங்களை பார்த்தாலே அழுதது தெரியுது. உதி மாமாவுக்கு இதனால் அக்கா மேல் கோபம் வர கூட வாய்ப்பிருக்கு.
“கொஞ்சம் அமைதியா இருப்பீங்களா?” என மகிழன் கெஞ்சுவது போல் கேட்டான்.
ம்ம்..நான் காட்டிக்கலை.
அப்படி சொல்லலை. அவள மறந்துருங்க. அது கஷ்டம் தான். ஏன்னா..உங்க இடத்துல அவள் இருந்த போது ரொம்ப கஷ்டப்பட்டா. உங்களை பார்த்தால் அதான் நினைவுக்கு வருது.
உன்னோட அக்காவை விடு. “நீ என்னை நண்பனாக ஏத்துப்பாயா?” திலீப் கேட்க, ம்ம்..ஏத்துக்கலாம். ஆனால் எனக்கு நேரம் வேணும். “உங்களை பற்றி சரியாக தெரியாமல் எப்படி?”
“அக்கா திருமணத்தை பார்க்க கஷ்டமா இருக்குமே?” மகிழன் கேட்க, “அதற்கென்ன செய்வது? நான் வர வேண்டாமா? நான் இப்பொழுதே எங்க அண்ணி ஊருக்கு கிளம்பவா?” திலீப் கேட்க, இல்ல போக வேண்டாம். அக்காவிடமிருந்து நீங்க வெளியே வர அவள் திருமணத்தை பார்த்து தான் ஆகணும் என்றான். “போகலாமா?” அவன் கேட்க, இருவரும் வீட்டிற்கு வந்தனர்.