அத்தியாயம் 28

மதிய நேரம் தியா வீட்டிற்கு வீராவும் வினித்தும் வந்தனர். தியாவின் அப்பாவிற்கு செய்ய வேண்டிய காரியங்களை வினித் செய்து கொண்டிருக்க, அஜய்யும் அவன் அப்பாவும் வந்தனர். தியா அவர்களை பார்த்து விட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். அர்சு அஜய்யை பார்த்து அவனிடம் ஓடி வந்து, “என்னோட அப்பா வந்துட்டார்” என்று சிம்மாவை பார்த்தான்.

அஜய் சிம்மாவை பார்த்துக் கொண்டே அர்சுவை தூக்கினான். அர்சு அஜய் அருகே சென்று, இனி என் அம்மா பக்கம் வந்த அப்பா உன்னை விரட்டிடுவார் என்றான்.

காயம்பட்ட இருந்த அஜய் மனமோ,ம்ம்..என்று அர்சுவை இறக்கி விட்டு நட்சத்திராவை அழைத்தான். எல்லாரும் அவனை பார்க்க, எதுக்குப்பா? பரிதி கேட்க, அஜய் விரக்தி புன்னகையுடன் “நான் பேசணும் அங்கிள்” என்றான். அவள் சிம்மாவை பார்த்துக் கொண்டே அஜய் கையை பிடித்து தனியே அழைத்து சென்றாள்.

“சொல்லுங்க சார்?” என்று எங்கோ பார்த்துக் கொண்டு நட்சத்திரா கேட்டாள்.

அஜய் கண்ணீர் வெளியே வந்தது. சட்டென அவள் முன் மண்டியிட்டான். அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.

சாரி..உன்னை அதிகமா தொந்தரவு செய்திருக்கேன். இனி உன்னிடம் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேன். என்னை விட நீ பெரியவன்னு தெரிந்து தான் சுற்றினேன். “என் பின்னே சுற்றும் பொண்ணு மத்தியில் நீ தனியா தெரிஞ்ச. ஏன்னு தெரியல?” ஆனால் உன்னை காயப்படுத்தியதற்கு மன்னித்து விடு. அதுக்காக கம்பெனி விசயமாக போட்ட ஒப்பந்தத்தை கிழிச்சுட்ட. நான் எங்க கம்பெனிய எடுத்து பார்த்துக்கப் போறேன். எல்லா நிகழ்ச்சிக்கும் நீ தான ஏற்பாடு செய்யணும். எதுவாக இருந்தாலும் என்று அழுத்தி தன் காரிலிருந்த ஒப்பந்த காகிதத்தை எடுத்து நீட்டினான் அஜய்.

“எங்க வந்து என்ன பேசுறீங்க சார்?” நட்சத்திரா மேலும் கோபமாக, சிம்மா நட்சத்திரா கையை பிடித்து போட சொன்னான்.

மாமா, “நீங்களுமா?” நட்சத்திரா சிம்மாவை முறைக்க, ஷ்..போடு. தவறு செய்தவருக்கு ஒரு முறை வாய்ப்பளிப்பது தவறில்லை என்றான்.

நட்சத்திராவும் யோசனையுடன், இனி ஏதாவது உங்க மேல தவறு இருந்தா உடனே கேன்சல் பண்ணிடுவேன் என்றாள்.

அஜய்க்கு எல்லாரும் அவனை ஒதுக்கி தனியே பிரிந்து செல்வது போல் இருந்தது. நட்சத்திரா கையெழுத்திட, அவனுக்குள் ஓர் நிம்மதி பெருமூச்சு. பின் தன் தோழனை பார்த்து நின்றான். அவன் முறைத்துக் கொண்டே இறந்தவரை வழிபட, அன்னம் சொல்ல சொல்ல எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். தியா ஓரத்தில் அமர்ந்து இருந்தாள்.

அஜய் வினித்தையே பார்க்க, அஜய் அப்பா அவன் கையை அழுத்தமாக பற்றினார். அவர் கையை இறுக பற்றிய அஜய், கண்களால் வினித்தை காட்டினான். அவர் தலையசைத்தார். இவர்களின் செய்கையை வீரா முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பா, “வெளிய வாழை இலை இருக்கு” எடுத்துட்டு வாங்க என்று வினித் சொல்ல, அஜய் வேகமாக எடுத்து வந்து கொடுத்தான். அவனை முறைத்தாலும் வெறுக்க மனமில்லாமல் வினித் வாங்கிக் கொள்ள, “அப்பாடா” என்று இருந்தது அஜய்க்கு.

வழிபாட்டை முடித்து விட்டு அனைவரும் சாப்பிட்டனர். தியா வேண்டாம் என்று பிடிவாதம் செய்ய, அன்னமும் நட்சத்திராவும் அவளை திட்டினார்.

எழுந்த வீரா, தியா டார்லிங் அப்பா நான் இருக்கேன் என்று உணவுடன் வந்தவரை தவிர்க்க முடியாமல் அழுது கொண்டே சாப்பிட்டாள். அதை ஏக்கமுடன் பார்த்தார் அஜய் அப்பா. சிம்மா அவரை கவனித்தான். அவர் கண்ணில் வலி, ஏக்கம், இயலாமை, பாசம் என மொத்தமும் கண்டான். அவன் யோசனை விரிந்தது.

அனைத்தும் முடிந்து தியா அவள் பொருட்களை எடுத்து வைக்க, ஓர் பாட்டி வந்தார்.

பாட்டி, நீங்க இங்கே இருந்துக்கோங்க. அப்புறம் உங்க பையனுக்கு இதை விற்கிறேன் என்று அவ்வீட்டை அவள் பார்த்த பார்வையில் வினித் மனமும் சில்லானது.

தயங்கி அவளிடம் வந்த வினித், “எதுக்கு வீட்டை விக்கிற தியூ?”

“எனக்கு பணம் வேணும்டா” என்றாள்.

“பணமா? உன் பெயரில் தான் அப்பா சேர்த்து வச்சிருக்காரே!”

ம்ம்..ஆனால் எனக்கு அது போதாது. எதுக்குன்னு கேட்காத. ப்ளீஸ் என்றாள்.

சரிம்மா, நீ எதுக்குன்னு சொல்ல வேண்டாம். இந்த வீடு உனக்கு மட்டும் பொக்கிஷம் இல்லை வினித்திற்கும் தான். அதனால் இதை நானே வாங்கிக்கிறேன் என்றார் வீரா.

“அங்கிள்” என்று அவள் தயங்க, நீ சொன்னது போல் உன்னிடம் நாங்க காரணம் கேட்கவில்லை. அதே போல் நீ இந்த வீட்டை வினித் பெயருக்கு மாற்றி கொடு என்றார்.

அப்பா, “என்ன பேசுறீங்க? நான் அவளை விற்க வேண்டாம்ன்னு சொல்ல வந்தால் இப்படி பேசுறீங்க?” வினித் அவன் அப்பாவிடம் கோபமாக கேட்டான்.

இது தான் சரி என்றவர். இது உன் பெயருக்கே மாறும்மா என்று அவர் மனதில் எண்ணிக் கொண்டார். தியா அம்மா இறந்ததில் வினித் மனமுடைந்து இருந்திருப்பான். அதனால் வீரா தன் கம்பெனி பொறுப்பை நம்பிக்கை உடையவரிடம் விட்டு தான் வந்திருப்பார். அவ்வப்போது சென்று கவனித்தும் கொள்வார். தன் மகனுக்கு ஆதரவாக வாழ ஆரம்பித்து இருப்பார். அவர் ஏற்கனவே ஓடி ஓடி சேர்த்து வைத்ததே கோடிக்கணக்கிற்கு மேலே இருக்கும். வினித் அஜய்யுடன் இருக்க காரணமும் உள்ளது. அதுவும் அஜய்க்காக தான்.

“சரிங்க அங்கிள்” என்றாள் அவள்.

பாட்டிம்மா, “நாங்க குறைஞ்ச வாடகைக்கு விட்டா நீங்க இங்க இருந்துப்பீங்களா?” வீரா கேட்க, இப்ப இருக்கேன். எம் மவன் வீடு வாங்கிட்டா அங்க போயிருவேன் என்றார் அவர்.

பாட்டி, “உங்களால முடிந்த வரை வீட்டை சுத்தமா மட்டும் வச்சுக்கோங்க” என்று கையில் பையை தூக்கிக் கொண்டு தியா வெளியே வந்தாள். அனைவரும் வெளியே வந்தனர்.

தியாவின் அத்தை மகன் மூச்சிறைக்க ஓடி வந்து சில பொருட்களை அவளிடம் கொடுத்தான். “இன்னும் எத்தனை நாள் இப்படியே திரியப் போற மாமா?” எனக்காக வேண்டாம் மாமா என தியா கண்ணீருடன் அவனை அணைக்க, அஜய் கரங்கள் தானாக கோபத்தில் மடங்கியது. வீராவும் வினித்தும் அவனை பார்த்தனர். அவன் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தான்.

அவனை விலக்கிய தியா, “மேரேஜூக்கு மறக்காம சொல்லு இல்லை இன்விடேசன் அனுப்பு” என்று அவள் நகர, அவன் அழுது கொண்டே சென்றான். நின்று அவனை திரும்பி பார்த்து விட்டு தன் வீட்டை பார்த்தாள். அவள் கண்ணீர் அதிகமாக அஜய் அவள் முன் வந்து அவள் கையிலிருந்த பையை உரிமையாக வாங்கி, கார் டிக்கியில் போட்டான்.

“என் மகனா இவன்?” என்று அவன் அப்பாவே ஆச்சர்யத்தில் மூழ்கினார். தியாவும் அதே கண்ணோட்டத்தில் சென்று அவன் அப்பா காரில் ஏற, தியா..”இங்க வா” என்று வினித் அழைத்தான்.

இருக்கட்டும் வினு. நான் சாருடன் வருகிறேன் என்று அவள் ஏறிக் கொள்ள, அஜய்க்கு கோபம் வந்தது. ஆனாலும் அமைதியாக இருந்தான். சிம்மா அஜய்யிடமும், அவர் அப்பாவிடமும் பேசி விட்டு நகர, “ஏதும் உதவின்னா கூப்பிடு தியா” என்று நட்சத்திரா, சிம்மா மற்றும் அவளின் அத்தை, மாமா, பையனுடன் கிளம்பினாள்.

தமிழினியன் காரும் விக்ரமின் காரும் மிருளாலினி வீடு முன் வந்து நின்றது. அவளது பெற்றோர் மகிழ்வுடன் வெளியே வந்தனர். குழந்தையுடன் ஒரு பொண்ணு இருவருக்கும் ஆராத்தி சுற்றினார் புன்னகையுடன்.

மிருளாலினி கண்ணீருடன் அக்கா..என அழைத்தாள். தமிழினியன் அவள் கையை கோர்த்தான். அவர் புன்னகையுடன் தட்டுடன் வெளியேற, மற்றவர்கள் உள்ளே சென்றனர்.

“எல்லாரும் சென்று விட்டார்களா?” என பார்த்து விட்டு விக்ரம் சிம்மாவை அழைத்தான். அண்ணனை காணாது வந்த ரசிகாவும் அவளை தேடி சுவாதியும் வெளியே வந்தனர். விக்ரம் எதிர்ப்பக்கமாக திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்தான்.

ரித்திகா பற்றி விக்ரம் சொல்ல, காரை ஓட்டி வந்த சிம்மா கோபமாக, “உன்னை நம்பி தான விட்டு வந்தேன்? அவள கொஞ்ச நேரம் கூட உன்னால பார்த்துக்க முடியாதா?” எனக் கத்தினான்.

நிறுத்துடா. எல்லா நேரமும் நான் பொறுமையா இருக்க மாட்டேன் என்ற விக்ரமும் சத்தமாகவும் கோபமாகவும், உனக்கு அந்த பொண்ணு எப்படியோ அதே போல் தான் எனக்கும். இப்ப கூட அவளுக்கு துணைக்கு என்னோட ஆட்களை காவலுக்கு போட்டு தான் வந்திருக்கேன். விசயம் சீரியஸ் தான். அதுக்காக வாய்க்கு வந்த படி பேசாத..அந்த வர்சன் யாரோ சொல்லி தான் செய்திருக்கான். எனக்கு சந்தேகம் உள்ளவரை விசாரிக்க அவளோட ப்ரெண்டு பாலா தான் போயிருக்கான். நீ அமைதியாக அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவளையும் தமிழ் சார் குடும்பத்தையும் ஒரு கண்ணு வச்சுக்கோ.  ஏதோ தப்பா நடக்கப் போவது போல இருக்கு என்றான் விக்ரம்.

சிம்மா அமைதியாக, “உன்னுடன் இருப்பவர்களை கவனமா பார்த்துக்கோ” என்றான்.

ம்ம்..விக்ரம் அமைதியாக, சினமுடன் விக்ரமிடம் வந்த ரசிகா அவனது அலைபேசியை பறித்து, “உனக்கும் என் அண்ணாவுக்கும் தான் பிடிக்காதுல்ல? அப்புறம் எதுக்கு பேசுற?” என்று ஆவேசமாக கத்தினாள்.

ரசி, “என்ன பண்ற?” அலைபேசியை கொடு விக்ரம் அவளிடமிருந்து பிடுங்க, ரசிகா அழுது கொண்டு நீ அவங்க யாருடனும் பேசக் கூடாது என்றாள்.

“ஏன்? எதுக்கு?” நாங்க யாருக்கும் தெரியாமல் தான் பேசிக்கிறோம். அதுவும் வேலைக்காக தான். “உனக்கு என்ன பிரச்சனை?” என்று அலைபேசியை பிடுங்கி சிம்மா..என அழைத்தான். அவன் அலைபேசியை அணைத்து இருந்தான்.

ரசிகா அழுது கொண்டிருக்க, “சிம்மாவை சம்மதிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?” சரியான வீம்பு பிடித்தவன். “என்னை பார்த்தால் மட்டும் அவனுக்கு என்ன ஆகுமோ?” என்று மேலும் கோபத்தோடு தன் தங்கையை பார்த்தான். அவள் அழுகை அவனை பாதிக்க, அமைதியாக அவளிடம் வந்து அமர்ந்து, அவள் தலையில் கை வைக்க, அவள் அவனை பார்த்தாள்.

ரசி, இந்த கேஸ்ல எங்க இருவரும் சேர்ந்து செய்தால் தான் கொலைகாரனை கண்டறிய முடியும். அவனிடம் உள்ள ஆதாரமும் என்னிடமுள்ள ஆதாரமும் சேர்ந்தால் தான் அவனை பிடிக்க முடியும். அவனே இங்கிருந்து சென்ற பின் தாரேன்னு சொன்னான்.

“நீ பேசியதில் என்ன செய்யப் போகிறானோ?” அதை விட தமிழ்- மிருளா இருவரையும் அவன் கொல்ல நினைக்கிறான்னா..அவங்கள பற்றி முன்னதாவே கொலைகாரனுக்கு தெரிந்திருக்கும். அவர்களை பாதுகாத்து காக்கணும்ன்னா அவனை கண்டுபிடிக்கணும். அது சாதாரணமானதில்லை. “நீ எதுக்கு இதுல கோபப்படுற? அதான் எனக்கு புரியல” என வருத்தமாக விக்ரம் பேச, தள்ளி நின்று இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் சுவாதி.

அண்ணா, “இந்த கேஸ் முடிந்தவுடன் என்னுடன் நம்ம வீட்டுக்கு வர்றீயா?” ரசிகா கேட்க, “முடியாதுடா” என்று அவள் தலையில் கோதியவன் சுவாதியை பார்த்து, புருவம் உயர்த்தினான்.

“இல்லை” என தலையசைத்து ரசிகாவை யோசனையுடன் சுவாதி பார்க்க, “ரசி உன்னோட ப்ரெண்டு நம்மள பார்த்துகிட்டே நிக்கிறா?” என்றான் விக்ரம்.

ரசிகா, அவனிடமிருந்து சுவாதியை நோக்கி சென்றாள். அவளுக்கு ரகசியன் கோபம் நினைவுக்கு வந்தது. விக்ரம் சுற்றும் பார்த்தவண்ணம் வீட்டினுள் சென்றான். எல்லாரையும் உணவுண்ண அழைத்தார் அவள் அப்பா.

மிருளாலினி அம்மா உணவை எடுத்து வைக்க அனைவரும் சாப்பிட்டனர்.

“இங்க அறை ஒன்று தான் இருக்கு” சுவாதி தயக்கமாக கேட்க, “நாம பக்கத்துல போய் தங்கிக்கலாம்” என்று மிருளாலினி அப்பா சொன்னார்.

மாமா, “நான் தான் சொன்னேன்ல்ல?” தமிழினியன் கேட்க, இல்ல மாப்பிள்ள, உங்க விருப்பப்படி இங்கே இருங்க. “நீங்களும் மிரு பற்றி இன்னும் தெரிஞ்சுப்பீங்கல்ல?”

“நானும் இங்கே தான் இருப்பேன்” என்றான் விக்ரம்.

தம்பி, பக்கத்துல அவள் அம்மா ஆரம்பிக்க, இல்ல ஆன்ட்டி, நான் இங்க தான் இருப்பேன். என்னால யாருக்கும் தொந்தரவு இருக்காது. நான் வெளிய இருந்துப்பேன் என்றான் சாப்பிட்டுக் கொண்டே.

சார், “ரொம்ப குளிரா இருக்கும்” மிருளாலினி சொல்ல, புன்னகைத்த விக்ரம் தயாராக தான் வந்துருக்கேன் என்று தமிழை பார்த்தான்.

அண்ணா, “அவங்க எதுக்கு சொல்றாங்க? புரியலையா?”

ரசி, “உனக்கு நான் ஏன் சொல்றேன்னு புரியலையா?” என்ற விக்ரமின் கேள்வியில் அனைவரும் அமைதியானார்கள்.

சரிங்க தம்பி, ஆனால் உள்ள ஹாலில் கூட இருந்துக்கோங்க. வெளிய வேண்டாம் என்று மிருளாலினி அம்மா கூற, நீங்க சொன்னதுக்காக உள்ளே தங்குறேன். இதுவரை உங்கள் வயதுடைய யாரும் என் மீது இப்படி அக்கறையாக பேசியதில்லை என்றான் விக்ரம். ரசிகா முகம் அதிர்ச்சியில் இருந்தது.

ஆம், அவள் அம்மா தான் இவனை கண்டுகொண்டதேயில்லை. ரசிகா கொஞ்சம் கொஞ்சமாக விக்ரமின் நிலையை எண்ணி சிந்திக்க தொடங்கினாள்.

சாப்பிட்டு அனைவரும் இளைப்பாறி மாலை வெளியே வந்தனர். மிருளாலினி சமையல் அறையில் அவள் அம்மாவுடன் நின்று கொண்டிருந்தாள். சுவாதியும் ரசிகாவும் அவர்களிடம் சென்றனர்.

ஐ..காலிப்ளவர் பக்கோடா என்று ரசிகா எடுக்க வர, அவள் கையில் அடித்த மிருளாலினி “சூடா இருக்கு”. இந்தா என்று ஒரு பவுலை கொடுத்தாள்.

அதை எடுத்து அவள் வாயில் கொண்டு வர, அதை வெடுக்கென புடுங்கிய சுவாதி வாயில் போட்டு, சூப்பர் அண்ணி..என்று சுருதி குறைந்து, உஃப் உஃப் என வாயிலிருந்து காற்றை வெளித்தள்ளி, “காரமா இருக்கு” என்று வீடே அதிரும் வண்ணம் கத்தினாள். எல்லாரும் பயந்து சமையலறைக்கு வந்தனர்.

“தண்ணிய குடிடி” என்று ரசிகா சுவாதி வாயில் தண்ணீரை ஊற்றினாள்.

“இதுவாம்மா காரம்?” என்று மிருளாலினி அம்மா அதை சுவைத்து, “மிரும்மா காரமே தெரியல” என்று சுவாதியை பார்த்தார்.

அத்தை, “சுவாதிக்கு காரம் சுத்தமாக ஒத்துக்காது” என்றான் தமிழினியன்.

மாப்பிள்ள, “இதை சாப்பிட்டு பாருங்க” என்று மிருளாலினி அம்மா தமிழினியன் வாயில் பக்கோடாவை கொடுத்தார். அவன் புன்னகையுடன் மென்று சுவைத்து நல்லா இருக்கு அத்தை. அவளுக்கு காரம் சாப்பிட்டு பழக்கமேயில்லை. அதான் என்று சுவாதியை பார்த்து சிரித்தான்.

மிருவுக்கு மொத்தமாக மாறி இருக்கா. “காரம் இல்லாமல் மிருவுக்கு சாப்பாடு நுழையவே நுழையாது” என்று தமிழினியனிடம் மிருளாலினியை பற்றி அவள் அம்மா சொல்ல, “அம்மா” என்று மிருளாலினி அவள் அம்மாவை கிள்ளினாள்.

மாப்பிள்ள கிட்ட தானடி சொல்றேன். ஏன்டி கிள்ளுற? அவர் கேட்க, தமிழினியன் அவளை பார்த்து சிரித்தான். மிருளாலினி அசட்டு புன்னகையை தவழ விட்டாள்.

சுவாதி இருவரையும் முறைத்துக் கொண்டு, “நடத்துங்கடா..நடத்துங்க..” என்று நகர்ந்தாள்.

“காரத்துக்கா இந்த சத்தம்” என்று மானசீகமாக தலையில் அடித்தான் விக்ரம். அனைவரும் சிரித்தனர்.

“என்னோட மானத்தை வாங்குறாங்களே!” என்று சுவாதி நகர, ரசிகா தன் அண்ணனை பார்த்தாள்.

ஹாலில் வந்து அனைவரும் அமர, வெளியே சென்ற மிருளாலினி அப்பா உள்ளே கையில் சில பொருட்களுடன் வந்தார். நேராக வந்த அவர் தன் மனைவி கையில் ஒன்றை கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு கொடுத்தார். இவரின் அணுகுமுறை அங்கிருந்தவர்களை கவர்ந்தது.

அங்கிள், “உங்களுக்கு?” தமிழினியன் கேட்க, என் மனைவியும் நானும் பங்கிட்டு சாப்பிட்டே பழகி விட்டோம் என்றார்.

மிருளாலினி தன் பெற்றோரை பெருமையுடன் பார்க்க, “எங்க வீட்ல இப்படியெல்லாம் நடக்கவே நடக்காது” என்ற சுவாதி, “ரசிகாவிடம் உங்க வீட்ல எப்படி ரசி?” என்று கேட்டாள்.

அப்பா, வாங்கி வந்து ஹாலில் வச்சிட்டு குளிக்க போயிருவாங்க சுவா. இல்லைன்னா யாரிடமாவது கொடுத்து விடுவாங்க என்றாள் ரசிகா சோகமாக. விக்ரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ரசிகாவும் விக்ரமை பார்த்தாள்.

“உங்க வீட்ல என்ன செய்வாங்க?” விக்ரம் சுவாதியிடம் கேட்டான்.

அப்பா, ஏதாவது வாங்கிட்டு வந்தா..நானும் அண்ணாவுமே முடிச்சிருவோம். அதனால அம்மாவுக்கு அப்பா நாங்க இல்லாத போது வாங்கி கொடுத்துட்டு போவாங்க என்றாள்.

“உங்களுக்கு தெரியாம தான வாங்கித் தருவாங்க?” ரசிகா கேட்க, ஆமா..நான் கண்டுபிடிச்சிட்டேன். ஆனால் அண்ணாவுக்கு தெரியாது. “தெரிந்தால் அவ்வளவு தான்” என்ற அவளது பாவனையில் அனைவரும் சிரித்தனர்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க தமிழினியன் மெதுவாக அங்கிருந்து அறைக்கு நகர்ந்தான். ரசிகா சுவாதியிடம் கண்ணை காட்ட, இருவரும் எழுந்து அவனிடம் சென்றனர். விக்ரமும் மிருளாலினியும் ஒருவரை ஒருவர் பார்த்து, “அந்த புத்தகம்” என எழுந்து அவனிடம் சென்றனர்.

“என்ன புத்தகம்?” மிருளாலினி அம்மா கேட்க, அவள் அப்பாவோ ஏதோ காரணம் கூறி மழுப்பினார்.

அண்ணா, “அந்த புத்தகம் எங்க?” என்று சுவாதி கேட்டாள்.

எல்லாரும் வெளிய போங்க. நானும் விக்ரம் சாரும் பார்த்துக்கிறோம் என்றான் தமிழினியன்.

ரசிகா அவன் அண்ணன் விக்ரமை பார்த்தாள். எடுங்க. சும்மா தெரிஞ்சுக்கட்டும் என்றான் அவன்.

கதவை தாழிட்டு அனைவரும் அமர்ந்தனர். புத்தகத்தின் முதல் பக்கத்தில் “காமபித்தன் சாவான்” என்று அந்த அரக்கனின் உருவம் தெளிவாக இருந்தது.

இடையுடனான அழுக்கான கூந்தல், கருமை நிற முகத்தில் நாவல்நிற பெரிய விழிகள், தடித்த கூர்நாசி, கரு அதிரத்தின் இடையே மேல், கீழ் இருபக்கமும் கூரான பற்கள்,  மிகப்பருத்த தேகம், கை, கால்கள் நீண்டு அரக்கனின் அப்பட்டமான தோற்றத்தில் இருந்தான் சாவான்.

பத்தாயிரம் வருடங்களுக்கு முன் சிரநாத்கலியின் அரக்க தலைவனாக இருந்தார் மித்தலையார். அவரின் எடுப்புகளில் முக்கியமான நம்பிக்கையானவன் தான் சாவான். அவனை நம்பி கொடுக்கும் அத்தனை வேலையையும் திறம்பட செய்து முடிப்பவன் என்றாள் சொல்லற்கரியது.

மித்தலையார் அரக்கனின் திருமணம் நடக்கவிருந்த சமயத்தில் சாவான் தன் தலைவனுடைய அனைத்து திருமண வேலைகளையும் சிரமேற்க்கொண்டு நடத்தினான். அம்மணப்பெண் அரக்கியான சம்பூவை அவர் பார்த்திருக்கவில்லை. ஆனால் அவருடன் வந்த மற்ற பெண் அரக்கிகளை பார்த்த மாத்திரம் சாவானின் மனம் சலனப்பட்டு இருந்தது.

இதுவரை பார்க்காத அழகு அரக்கிகளை முதலாய் காணும் அவனுக்கு ஆசை பிறந்தது. மறுநாள் தன் தலைவரிடம் அவனுக்கும் சம்பூவின் வீட்டழகிகளில் ஒருவரை தனக்கு மணமுடித்து வைக்க சொல்லி கேட்டான் சாவான்.

மித்தலையாரோ கர்வம் பிடித்தவன். “உனக்கென்ன திருமணம்? என் கீழிருக்கும் நீ யாரை மணக்கப் பார்க்கிறாய்?” என்று உரத்து சத்தமிட்டு, சாவான் கழுத்தில் கத்தியை வைத்தான். அதிலிருந்து அப்பேச்சை சாவான் நிறுத்தி இருந்தாலும், முதல் முறையாக அவன் தலைவர் மீது வன்மம் தொடங்கியது. ஆனாலும் மித்தலையாருக்கான சேவையை அவன் நிறுத்தாமல் எப்பொழுதும் போல் செய்து வந்தார்.

சில நாட்களாகவே சபைக்கு தலைவர் வரவில்லையே! என சிந்தித்த சாவான் தன்னுடன் இருக்கும் சேவகர்களிடம் அதை பற்றி வினவினான்.

நம் தலைவர் அவர் மனைவியுடனும் ஆறு நாத்தியுடனும் உல்லாசமாக இருப்பதாக சொன்னதை கேட்டு சினமானான் சாவான்.

பொறுத்து பார்த்தும் அவனால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரை வரவைக்க தன் மக்களையே துன்புறுத்தினான். அவனுடன் இருக்கும் சேவர்களே அவனை பார்த்து விலகி நின்றனர். சாவான் கோபம் அவ்வளவு பயங்கரமானதாக இருந்தது. காலையில் அனைவரையும் துன்புறுத்துவதும், இரவில் பெண்களை கற்பழிப்பது எனவும் ஒரு மாதம் கழிந்தது. அவனே சிரநாத்கலியின் தலைவனாக எண்ணி அனைத்தையும் செய்தான்.

ஒருநாள் உண்மையான தலைவனான மித்தலையார் தன் நகரத்திற்கு வந்தார். வந்தவர் சாவான் பற்றி கேள்விப்பட்டு அவனை வரச் சொன்னார். அதற்கு அவனோ, “என் நாட்டில் அவன் என்ன என்னை அழைப்பது?” என்று ஏளனமாக சிரித்தான். அவனது கொடுமைக்கு பயந்து மக்கள் அனைவரும் அவன் பக்கம் இருந்தனர்.

இதை கண்ட மித்தலையார் கோபத்தில் அவனுடன் சண்டைக்கு செல்ல, அவரை தடுத்து அவன் முன் வந்து நின்றார் சம்பூ என்ற பேரழகியும் அரக்கியும்..

என்ன அழகு! என்ன அழகு! வா..என்னருகே வா என்று அவன் சம்பூவை அழைக்க, அவளோ தன் கணவனை பார்த்து மித்தலையாரின் கரத்தை விடாது பற்றினார்.

“இங்க வான்னு சொன்னேன்” சாவான் குரல் ஆங்காரமாய் ஒலிக்க, அங்கிருந்தவர்கள் பயந்து ஒதுங்கினார்கள். ஆனால் அவ்வரக்கியோ பயமில்லாது, “தன் கணவனின் வாளுக்கு பதில் சொல்லு” என்று நின்றாள்.

சாவானோ பயங்கரமாக சிரித்துக் கொண்டு தன் வாளை உருவினான். மித்தலையாரும் வாளை எடுத்தார். இருவரும் மோதல் விடாது ஒருமணி நேரமாக சமமாக சென்று கொண்டிருக்க, சம்பூவை ஓரக்கண்ணால் பார்த்து அவள் அழகை பருக எண்ணிய சாவாவின் வாள் சம்பூவின் ஆடையை கிழித்து பதம் பார்த்தது. அவள் தன் மார்பகத்தை இருகரம் கொண்டு மறைக்க, அதில் மயங்கிய சாவானோ தன் வாளால் ஒரே வெட்டால் மித்தலையாரை வெட்டி சாய்த்தான். பின் தன் ஆசை அரக்கியை தூக்கி சென்று தன் ஆசையை சம்பூ மூலம் தீர்த்தான். ஆனாலும் அவன் காமவெறி அடங்கவில்லை.

ஒருமாதமாக தன்னவனுக்கு கொடுத்த உடலை மாற்றான் தீண்டவும் துடித்த அரக்கியோ, சாவான் மோக வலைக்குள் இருக்கும் போது அங்கிருந்த பெரிய கத்தியை எடுத்து அவன் வயிற்றில் பலமுறை குத்தி குத்தி கிழித்தே விட்டிருந்தாள். அவன் இறக்கும் தருவாயில்..”என் ஆசை சம்பூ…” என்று அவன் கூற,

“ஆசையா..ச்சீ..தூ…உன்னால முடிந்தால் என் போல் மூன்று காதல் கன்னி மானூட பெண்களை தேர்ந்தெடுத்து அடைந்தாலோ ஒழிய என்னை நீ மறுமுறை அடைய முடியும்”.

என் மன்னவனால் என் மானத்தை காப்பாற்ற முடியவில்லை. நம் அரக்க உலகத்தில் யாராலும் எனக்கு உதவமுடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் மானுடர்கள் அவ்வாறில்லை. தன் துணைக்கான உயிரை விட மானத்தை பெரிதும் போற்றுபவர்கள். அவர்களை தாண்டி நீ என் அருகே கூட வரமுடியாது. நான் என் மன்னவனிடமே செல்கிறேன் சாவான் என்று சம்பூ அதே கத்தியில் தன் உயிரை மாய்த்து விடை பெற்றாள்.

“மானூட பெண்ணா?” என்று இறக்கும் நிலையில் சிரித்தவாறு மாய்ந்தான் சாவான். அவனது ஆன்மா எங்கும் சுற்றித் திரியாது. அரக்க கடவுளை நோக்கி வழிபட்டு தன் வரத்தையும் சக்தியையும் பெருக்கிக் கொண்டது.

“அப்பாடா? என்ன கதைடா இது? இது என்ன கதை சுருக்க புத்தகமோ?” சுவாதி கேட்க, “அதில் இருக்கும் படங்களை பார்த்தால் பயமா இல்லையா?” ரசிகா கேட்க, “பயமா?” என சுவாதி சிரித்தாள்.

தமிழ், இந்த அரக்கன் பார்வை தான் நம் மிரு மேல பட்டு இருக்குன்னா..என்று விக்ரம் “தமிழினியன்- மிருளாலினியை” பார்த்தான். அனைவரும் அதிர்ந்தனர்.

அப்படின்னா, “அந்த சம்பூ சொன்ன பெண்களில் நம் அண்ணியும் ஒருவரா?” என்று சுவாதி கலக்கத்துடன் வாயில் கை வைத்தாள்.

அண்ணா, “இது நடக்குமா?” ரசிகா விக்ரமையும் தமிழினியனையும் பார்க்க, இன்று இரவு அவன் மந்திர சக்தியிலிருந்து விடுபட்டு வந்து விடுவான் என்று தமிழினியன் மிருளாலினி கையை இறுக பற்றினான்.

முதல்ல அவன் தாக்கப் போவது உங்களை தான் என்றான் விக்ரம். மிருளாலினி கண்ணீருடன் தன்னவனை அணைத்தாள்.

விக்ரம் எழுந்து இருவரையும் கண்ணசைத்து வெளியே அழைத்தான். சுவாதியும், ரசிகாவும் வெளியே வர, “பயமா இருக்கு” என மிருளாலினி அழுதாள்.

சுவாதி, ரசி இருவரும் நீங்க தங்கப் போகும் வீட்டை விட்டு எக்காரணமும் வெளியே வரக் கூடாது என்று சொல்லி விட்டு, மிருளாலினி பெற்றோரிடம் மறைக்க முடியாது என விசயத்தை சொல்ல, அவள் அம்மா பயத்தில் மயங்கி விட்டார். சுவாதியும் ரசிகாவும் அவரை எழுப்ப, அங்கிள், “நீங்க எல்லாரும் பாதுகாப்பாக அந்த வீட்ல இருங்க”.

“என்னப்பா சொல்ற?” இதை நீ என்னிடம் முன் சொன்ன போது கூட ஏதோ ஆன்மா தான். பிடித்து அடைத்து விடலாம் என்று எனக்கு நான் சமாதானம் சொல்லிக் கொண்டேன். “இப்ப அரக்கன்னு என்னன்னமோ கதை சொல்ற?”

உங்க மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் ஏதும் ஆகாது. நாங்க பார்த்துக் கொள்கிறோம் என்று சிம்மாவை அழைத்தான் விக்ரம்.

“அய்யனே!” என கடுங்கோபத்துடன் கையிலாயத்திற்கு வந்தார் காதல் தேவதை.

என்னாயிற்று? ஏன் இவ்வளவு கோபம்? என ஈசன் புன்னகையுடன் தேவதையை பார்த்தார்.

கந்தா, கணேசா, என்னை என்ன சொன்னீர்கள்? உங்களது தந்தையை பார்த்தீர்களா? காதல் தேவதையை பயமுறுத்தி அரக்கனை அழிக்கும் வழிமுறைக்காக இந்த மிருளாலினி பொண்ணை உபயோகிக்க எப்படிப்பட்ட திருவிளையாடலை அரங்கேற்றி இருக்கிறார்? என்று எரிகிற எண்ணையில் கொழுத்திப் போட்டார் நாரதர்.

ஆம், ஈசனே! “தங்களை நம்பி நான் ஏமாந்து விட்டேன்” என்றார் சீற்றமுடன் காதல் தேவதை.

சாந்தி..சாந்தி..தேவதையே! நீங்கள் ஏமாறவில்லை. என் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கு. அதே போல் தான் இதுவும்.

“இதில் என்ன காரணம் இருக்கப் போகிறது?”

நீங்கள் தேர்ந்தெடுத்தவர்களின் எதிர்கால அழிவை முழுதாக நீங்கள் பார்க்கவில்லை. “அனைவரையும் சாகும் தருவாயில் தானே பார்த்தீர்கள்?” சிவபெருமான் கேட்க, காதல் தேவதை அமைதியானார்.

சிம்மாவை அவ்விடத்திலே கொன்று இருப்பார்கள். ஆனால் சிம்மாவை கொல்ல வந்தது மனிதர்கள் அல்ல. அனைவரும் ராட்சசர்கள். அவன் பின் சுற்றி அவனையும் நட்சத்திராவையும் பிரித்த அவளோ மானுட பெண் அல்ல. அரக்கி தான்.

அதே போல் நட்சத்திராவை அந்த சாவான்..எப்படி சித்திரவதை செய்திருப்பான் தெரியுமா?

உங்களுக்கு மிகவும் பிடித்த அந்த ரித்திகா அவளை பிரணவ் உருவத்தில் அவள் உடலே சிதையும் அளவு செய்திருப்பான்  அவ்வரக்கன். அவளின் நிலையை கண் முன் பார்த்த உதிரன் உயிரோடு இருப்பானா? சொல்லுங்கள்.

சுபிதன் இறக்காமல் இருந்திருந்தால் நட்சத்திராவிற்காக இருவரும் பிரிந்திருப்பர். மிருளாலினி சுபிதன் கூட இவர்களின் நிலையில் தான் இருந்திருப்பார்கள்.

தேவதையே! நீங்கள் உங்கள் வாய்ப்பை பயன்படுத்தியது போல் அந்த சுபிதன் அவன் வாய்ப்பை பயன்படுத்துகிறான்.

“அவனா? என்ன கூறுகிறீர்கள் தந்தையே!” கந்தன் வினவினார்.

ஆம் கந்தா, சுபிதன் இறக்கும் தருவாயில் அவனுக்கு நடக்கவிருக்கும் காட்சிகளை அம்பலப்படுத்தினேன். அவன் பிழைக்கும் வாய்ப்பை தன் மனைவி, நண்பர்களுக்காக விட்டுக் கொடுத்து தன் உயிரை போக்கி அவர்களை அந்த அரக்கன் தாக்காமல் இருக்க நான் தான் ஏற்பாடு செய்தேன். அதனால் அவனுள்ளும் நான் அவ்வப்போது வசித்து அவனை காக்கிறேன்.

“ஓர் அரக்கனை அழிப்பது சாதாரணமில்லையே!” சுபிதன் தன் உயிரை கொடுத்து அனைவர் உயிரையும் அந்த அரக்கனை அழிக்கவும் உதவுவான் என்று நானும் எண்ணவில்லை தான்.

“அப்படியென்றால், அந்த மூன்று பெண்களில் மிருளாலினி மட்டுமில்லை ரித்திகாவும் நட்சத்திராவும் இருக்கிறார்களா?” பார்வதி தேவி கேட்க, “ஆம் தேவி..”அந்த அரக்கனை அழிக்கும் வழி பெண்களிடம் மட்டும் தான் உள்ளது. மூவரும் அவனிடமிருந்து முதலில் தப்பணும் என்றார்.

“சுபிதன் இதற்கு ஒத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் என்ன நடக்கும் ஈசனே?”

“உலகமே சாவான் வசம் மாறிடும். பின் என்ன?”  பெண்கள் அனைவரும் கற்பை இழந்து மரணித்துக் கொண்டிருப்பார்கள் என்று சிவன் அமைதியானார்.

“மன்னித்து விடுங்கள் ஈசனே! கோபம் என் கண்ணை மறைத்து விட்டது” காதல் தேவதை கூற, எனக்கு ஒரு ஐயம் தேவதையே? அந்த அரக்கன் தமிழினியனை காயப்படுத்தும் போது நட்சத்திராவின் இலையை மிருளாலினி அவன் உடலில் பொருத்தினாள். அவன் எழுந்தான்.

“அதே நேரம் நீங்கள் நட்சத்திராவின் முன் அவ்விலையை பறந்து சென்று எதற்காக போட்டீர்கள்?” என கணேசன் கேட்டார்.

ஈசன் சொன்னார் செய்தேன். அரக்கனின் கெட்ட ஆன்மா சென்று விடும் என்று தோன்றியதால் அவர் சொன்னவுடன் செய்தேன். அவ்வளவு தான்.

சரி, வாங்க எப்படி அந்த முதல் ஜோடி தங்களை பாதுகாக்கிறார்கள்? என்று பார்க்கலாம் ஆர்வமாக நாரதர் கூற, அனைவரும் அவரை முறைத்தனர்.

“உங்களை யாரும் தேட மாட்டார்களா நாராத?” என்று கடுப்பாக கந்தன் கேட்க, இல்ல கந்தா..”ஈசனிருக்கும் இடமே என்னிடம்” என்று தத்துவத்தை பொழிந்தார் நாரதர்.

“போச்சுடா” இவரிடம் பேசுவதற்கு அமைதியாக இருந்து விடலாம் என்று அனைவரும் கவனிக்கலாயினர்.