அத்தியாயம் 24

மிருளாலினி தயாராகி வரவும் இருமணி நேரமாக பூஜையை நடத்தி வெள்ளைநூலில் மஞ்சள் தடவி தமிழினியன் கையால் அவள் கழுத்தில் கட்ட சொன்னார்கள். அவன் கட்டியதும் அவனுக்கு மெதுவாக நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது. பிடிப்பாக இருக்கும் என்று அவன் விட, யாரோ அவன் பெயர் கூறி அழைப்பது போல் இருக்க அவன் எழுந்தான்.

தம்பி, இன்னும் முடியல. அமருங்கள் பண்டிதர் சொல்ல, யாரோ கூப்பிடுவது போல் இருக்கு. “உங்களுக்கு கேட்குதா?” தமிழினியன் அவரிடம் கேட்டான்.

“இல்லையே? அண்ணா, விளையாடுறியா?” ரகசியன் கேட்க, இல்லடா என்று சொன்ன தமிழினியனுக்கு வியர்த்து ஊற்றியது.

“அண்ணா” அவன் சத்தமிட, நெஞ்சை பிடித்துக் கொண்டு தமிழினியன் விழுந்தான். அவன் உடல் தூக்கி தூக்கி போட்டது. அவன் கைகளால் தரையை தானாக துலாவி அருகே அமர்ந்திருந்த மிருளாலினி கையை பிடித்தான். அவன் கண்ணின் ஓரத்தில் கண்ணீர் வழிய அவளுக்கு உயிரே போனது போல் அவன் கையை இறுக பற்றி அழுதாள்.

இனியா..என்று ஆளாலுக்கு அவனை அழைத்து அழ, மிருளாலினி மனதினுள், “என்னால தான் எல்லாமே தப்பா நடக்குது” என்று சொல்லிக் கொண்டே கதறி அழுதாள். அவன் துடிப்பை பார்த்து வேல்விழி மயங்கினார்.

தமிழினியன் வலியை சமாளித்து உடலை கட்டுக்குள் கொண்டு வந்து அவனுக்கு இடப்பக்கம் பார்த்தான். அந்த ராட்சத உருவம் அவனை அழைத்தது. மிருளாலினி கையை விடுத்து உயிர் போகும் வழியை அனுபவித்தும் அவளை பார்த்து அவன் புன்னகைத்தான். அதில் ஆயிரம் அர்த்தங்கள். அதில் ஒன்று உனக்காக எந்த வலியையும் தாங்குவேன் என்று தெரிய, மிருளாலினி உடைந்து அழுதாள்.

தமிழினியன் தள்ளாடி எழுந்து வெளியே வந்தான். எல்லாரும் பார்த்தது சூறாவளி காற்றுடன் சுபிதனின் ஆன்மா அந்த ராட்சத உருவத்துடன் சண்டையிடும் காட்சியை. இரு உருவமும் மாறி மாறி தங்கள் சக்தியை வைத்து தாக்கிக் கொண்டிருந்தனர்.

மண்டபத்தில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு எதிர்ப்புறம் ரித்திகாவும் உதிரனும் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர். இவர்களின் அழும் சத்தம் கேட்டு உள்ளே இவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த மாறனும் விக்ரமும் வெளியே வந்து அதை பார்த்து அதிர்ந்தனர்.

“இது இன்னும் அழியவில்லையா? விக்ரம் கேட்க, இது பெரிய ஆபத்தாயிற்றே!” மாறனும் சொன்னான்.

“என்ன சொல்றீங்க?” மிருளாலினின் கேட்க, சுபிதனின் வீட்டில் நடந்ததை விக்ரம் கூற, எல்லாரும் சுபிதனின் ஆன்மாவை பார்த்தனர்.

சார், எங்களை ஏமாற்ற தான் சாமியார் வேடத்தில் வந்து எங்களுடன் இவன் பேசி இருக்கான். உண்மையான சாமியார் இங்க தான் இருக்கார். இந்த பொண்ணு இருக்கா. “சிம்மா எங்க போனான்?” மாறன் கோபமாக அலைபேசியை எடுத்து இப்பொழுது தான் தியா வீட்டில் இருக்கும் சிம்மாவை அழைத்தான் மாறன். அவர்களும் கிளம்பினார்கள்.

தமிழினியன் மீண்டும் அதிகமாக துடித்து மயங்கினான். ரகசியன் அவன் மார்பில் காதை வைத்து பார்த்தான். அப்பா துடிப்பு இருக்கு. வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம் அவன் அழைக்க, சுபிதனின் ஆன்மா நோ…என கத்தியது.

கண்ணில் எல்லாரும் பார்த்தாலும் சுபிதனின் ஆன்மா பேசுவது யாருக்கும் கேட்கவில்லை ரித்துவை தவிர..

ரித்து மண்டபத்துக்குள்ள போ. அங்க இருக்கும் அம்மன் சிலையினருகே இருக்கும் மஞ்சள் குங்குமத்தை எடுத்து வா..சீக்கிரம் போ..சுபிதன் சொல்ல,

நா..நானா? தயங்கினாள் ரித்திகா.

நீ தான் செய்யணும் போ..என்று சுபிதனின் ஆன்மா கத்தியது.

ம்ம்..என்று அவள் செல்ல எத்தனிக்க அந்த உருவன் சுபிதனை வேகமாக தாக்கி தள்ளி விட்டு ரித்திகாவை பார்த்து கையை தூக்க, உதிரன் ஓடி வந்து அவளை அணைத்தவாறு மறைத்து நின்றான்.

வீழ்ந்தெழுந்த சூரியனாக சுபிதனின் ஆன்மா அதை தாக்கும் முன் அது தாக்கியதில் உதிரன் தள்ளிச் சென்று விழுந்தான். அனைவரும் வேடிக்கை பார்க்க, விக்ரமும் சென்றான்.

சார், “போகாதீங்க” ரகசியன் சத்தமிட்டான். மிருளாலினி தமிழினியனை கத்தி அழைத்துக் கொண்டே அழுதாள். அனைவரும் அவனை சூழ்ந்திருந்தனர்.

“மாமா” என்று ரித்திகா உதிரன் பக்கம் திரும்ப, “ரித்து அவனுக்கு ஒன்றுமில்லை. நீ போ” என்று சுபிதன் ஆன்மா பேச பேச அவள் அதனருகே வர, அது அவளை தாக்க, இம்முறை தொங்கிக் கொண்டிருந்த விரிப்பை பிடித்து இழுத்து அதன் முன் வந்து ரித்துவை காத்தான் விக்ரம்.

ரித்து, “ஓடு” என்று விக்ரம் கத்த, மறுநிமிடம் வில்லில் பாய்ந்த அம்பாய் ஓடிச் சென்றாள் ரித்திகா. அவ்விரிப்போ பொசுங்கியது. விக்ரம் மேல் நெருப்பை ராட்சதன் உமிழ, சுபிதனின் ஆன்மா அவனை காத்து நின்றது. அவன் உதிரனிடம் ஓடிச் சென்று அவனை எழுப்பினான். எல்லாரும் வாயில் கை வைத்து கண்ணீருடன் பார்த்தனர்.

“என் பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் இந்த துயர்?” பாட்டி புலம்பிக் கொண்டே அழுதார். ஓடி வந்த ரித்திகா எல்லாரையும் பார்த்து அண்ணா பெயரை சொல்லி கத்துங்க.

மிரு அண்ணி, அத்தனை பேர் சத்தத்திலும் உங்க சத்தம் அண்ணாவின் ஆழ்மனதை எட்டணுமாம். அப்ப தான் இதயத்துடிப்பு நிற்காதாம். அண்ணாவை இந்த ராட்சசன் ஆழ்மனதில் கட்டி போட்டு வந்திருக்கானாம்.

இதயம் மெதுவாக தான் இப்ப துடிக்குமாம். “உங்கள் சத்தம் அண்ணாவின் காதலை நினைவூட்டி இதயத்தை பலப்படுத்துமாம்” என்று மிருளாலினி தோளில் தட்டிய ரித்திகா, சமைந்து நின்ற சுவாதியை பார்த்து, “அங்க என்ன வேடிக்கை பாக்குற?” என்று அவளையும் அவள் அண்ணன் மற்றும் அங்கு வேலை செய்யும் பலரையும் அழைத்து அம்மன் சிலை அருகே சென்று குங்குமம், மஞ்சளை தண்ணீரில் கரைத்தனர்.

“எதுக்கு இது?” ஒருவர் கேட்க, அந்த ராட்சசனின் சக்தி நெருப்பில் உள்ளதாம். அவனை விரட்ட தான் இந்த ஏற்பாடு என்றாள் ரித்திகா.

மிருளாலினியால் அவன் குடும்ப சத்தத்தை விட பெரியதாக ஒலி எழுப்ப முடியவில்லை. எல்லாரும் அவளை பார்த்துக் கொண்டே தமிழினியனை பெயர் சொல்லி அழைத்தனர். மிருளாலினிக்கு தமிழினியனை முதலாவதாக கோவிலில் பார்த்ததிலிருந்து நேற்று புகைப்படத்தில் பார்த்த அவன் ஏக்கம், நட்சத்திரா, மிருளாலினி அம்மா அவளுக்கு கூறிய அறிவுரை மூளையிலிருந்து மனதிற்கு வந்தது.

“இனி இவன் தான் நமக்கு எல்லாம். இவன் தான் என் காதல். இவன் தான் என் கணவன். இவனில்லை நானில்லை” என்று மனதில் அவள் உருப்போட., தமிழினியன் மார்பில் காதை வைத்து கேட்ட  திலீப், “அண்ணி அண்ணா இதயத்துடிப்பு சரியா கேட்கலை” என்று சொன்ன நிமிடம் மிருளாலினி அவனை உலுக்கிக் கொண்டு கதறி அழுதாள்.

தமிழ், நானும் உங்களை காதலிக்கிறேன் தமிழ். நீங்க இல்லாமல் நானில்லை தமிழ். எழுந்திருங்க..எழுந்திருங்க..இல்லை என்னையும் உங்களுடன் கூட்டிட்டு போயிடுங்க என கதறி அழுது கொண்டே கத்தினாள் மிரு. இப்பொழுது அவள் குரல் ஓங்கி ஓலிக்க தமிழினியன் இதயத்துடிப்பு சீரானது.

இவ்வளவு நேரம் ராட்சசனை சமாளித்து வந்த சுபிதனின் ஆன்மா தடுமாறியது. “அவள் காதல் கணவனாகி போனானோ? நான் இவளுக்கு யார்? நான் யாரோவாகிப் போனேனா?” என்று அது எண்ண, அதன் போக்கு ராட்சசனுக்கு தோதாகிப் போனது. சுபிதனின் ஆன்மாவை தள்ளி வீழ்த்தியது.

விழுந்ததில் சுபிதனின் ஆன்மா எண்ணம் களைந்து, அவள் என் மனைவியாக இருந்தவள். அவனுடைய மனைவியாகி விட்டாள். இனி எதையும் எண்ணக் கூடாது. எதற்காக வந்தோமோ? அதை செய்து விட்டு போகணும் என்று எண்ணி ராட்சசனை பார்க்க, அது தமிழினியன் பக்கம் திரும்பியது.

விக்ரம், அது அவனருகே சென்றாலே அவன் செத்துடுவான் சுபிதனின் ஆன்மா அலற, அனைவருக்கும் இந்த வார்த்தை மட்டும் விழுந்தது. அனைவரும் தமிழினியனை மறைத்து நின்றனர். இதில் தெரிந்தது அவர்களின் குடும்ப ஒற்றுமை. விக்ரம் வியந்து அனைவரையும் பார்த்தான்.

அது நெருப்பை உமிழும் முன் வந்தனர் ரித்திகாவும் மற்றவர்களும். கீழிருந்து மாற்றி மாற்றி அதை சிந்திக்க விடாமல் குங்குமம், மஞ்சள் கலந்த தண்ணீரை அதன் மேல் அடிக்க அதற்கு மேலும் சினமேறியது. லிப்ட்டின் மூலம் உச்சிக்கு வந்த தமிழினியனின் தம்பிகளும் அத்தை பொண்ணுங்களும் மூன்று டிரம்மை அதன் மீது கொட்டினர். அது நேராக திரும்பி பார்க்க அதன் தகிக்கும் கண்கள் அவர்களை சுட்டெறிக்க, எல்லாரும் கீழ போங்க என்று ரகசியன் கத்தினான். அம்மனின் சக்தி அந்த ராட்சசனின் சக்தியை தோற்கடிக்க, அவன் வீழவில்லை ஆனால் அலறினான்.

அந்நேரம் அதை கட்டுப்படுத்த வந்தனர் பதினெட்டு பட்டி குருக்களும், சிம்மா, நட்சத்திராவும்.

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் அதை மந்திரம் ஓதி அடைத்தனர். தமிழினியனின் இதயத்துடிப்பு குறைவாகவே இருக்க மிருளாலினியும் மற்றவர்களும் அழுது கொண்டே இருந்தனர்.

“அண்ணா” என்று உதிரனிடம் நட்சத்திராவும், மாமா என கையிலிருந்த பக்கெட்டை கீழே போட்டு ரித்திகாவும் ஓடி வந்தனர். மிருளாலினிக்கு நட்சத்திரா சத்தம் கேட்கவும் தமிழினியனை விட்டு அவளிடம் ஓடி வந்தாள்.

“மிரு” நட்சத்திரா அழைக்க, “சாரி நட்சு” என்று நட்சத்திரா கழுத்தில் இருந்த வில்வஇலை அடங்கிய செயினை தொட, ஷாக் அடித்தது மிருளாலினிக்கு. ஆனாலும் விடாமல் அவள் பிடித்து இழுக்க..

“என்னடி பண்ற?” அதை கழற்ற முடியாது நட்சத்திரா சொல்ல, என்னால முடியும் நட்சு. “அவருக்கு ஏதும் ஆகக்கூடாது” என மெதுவாக இழுத்தவள் வேகமாக இழுக்க அவளை தூக்கி அடித்தது.

மிரு, “வேண்டாம்மா” அவள் பெற்றோர் அழ, அம்மா, ”அவனை போல் இவரை என்னால அந்த கடவுளுக்கு விட்டு கொடுக்க முடியாது. இவர் எனக்கு வேணும். அதற்காக எந்த எல்லைக்கும் நான் செல்ல தயார்” என்று அதை இழுத்து இழுத்து அவளை அவளே காயப்படுத்த, அனைவரும் கண்கலங்க அவளை பார்த்தனர்.

சாமி ஒருவர் அவளிடம் வந்து, மிருளாலினி கையை பிடித்து..ஹர ஹர மஹாதேவ் சொல்லி இழுக்க, அவளுக்கு ஏதும் செய்யவில்லை. சாமி கையை எடுத்து விட, உரத்த குரலில்

ஹர ஹர மஹாதேவ்..

ஹர ஹர மஹாதேவ்..

ஹர ஹர மஹாதேவ்..என மிருளாலினி கத்திக் கொண்டே இழுத்தாள்.

திடீரென அங்கே வந்த அகோரி தமிழினியனிடம் நேராக வந்து அவனது புருவத்தின் இடையில் கையை வைத்து மந்திரம் ஜெபித்து கொண்டே மிருளாலினியை பார்த்தார். அவள் கையில் நட்சத்திராவின் அந்த டாலர் மட்டும் வந்தது. அதை எடுத்துக் கொண்டே வேகமாக அவனிடம் ஓடினாள்.

அவர் கையை எடுக்க, அவளை வில்வஇலையை அவ்விடத்தில் வைத்து அழுத்த சொன்னார். அதிலிருந்த வில்வஇலை தானாக அவ்விடத்தில் விழ, அவனது நெற்றிப்பொட்டில் அதனுடன் அவள் விரலை வைத்து மென்மையாக அழுத்தினாள். அது மறையவும் அவள் கையை எடுத்து விட்டு, “தமிழ் எழுந்திருங்க” என்று அவள் அவனது மார்ப்பில் தலையை சாய்த்து அழ, கண்ணீருடன் தமிழினியன் கரங்கள் மிருளாலினியின் சிகைக்குள் நுழைந்தது. அவள் அவனை பார்க்க, சோர்வுடன் அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உங்களுக்கு ஒன்றுமில்லைல்ல?” என்று இதயத்துடிப்பை ஆராய்ந்தாள் மிருளாலினி. தமிழினியன் விழித்ததை பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்.

அவன் எழ, “வாங்க” என்று அவனை இழுத்து வந்து அந்த சாமியார்கள் முன் நின்றாள் மிருளாலினி.

“எதுக்கு சாமி இதெல்லாம் நடக்குது? இனி பிரச்சனையில்லையே?” அவள் கேட்க நாளை இரவு வரை உங்களுக்கு பிரச்சனை இருக்காது.

“அடுத்து வரும் நாட்கள்?” மிருளாலினி கேட்க, உங்களது காதலின் ஆழத்தை காட்டினால் மட்டும் போதாதாது. இனி வரும் காலங்களிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாகவும் கணவன் மனைவியாக வாழணும் என்று அவர் அவன் கையில் ஓர் கயிற்றை கட்டி விட்டு சென்றார்.

பாட்டி தயங்கிய படி, “பிள்ளைகளுக்கு கல்யாணம்?” என தயங்க, அந்த பொண்ணு கழுத்துல எல்லார் முன்னிலையிலும் வைத்து தாலி கட்டி விட்டால் பாதி பிரச்சனை முடியும்.

“பாதியா? பிரச்சனை முடியலையா சாமி?” சுவாதி அம்மா கேட்க, அகோரி சிரித்தார். சாமியார்களும் அவரை பார்த்தனர்.

“இனி தான் ஆரம்பம்” என்று விட்டு அவர் கிளம்ப, “உங்களுக்கான நேரம் ஒரே இரவு தான்” என்று குருக்கள் அனைவரும் சொல்லி சென்றனர். மிருளாலினியும் மற்றவர்களும் புரியாமல் விழித்தனர்.

பின் அனைவரும் உள்ளே சென்றனர். மிருளாலினி சுபிதனின் ஆன்மாவை மொத்தமாக விட்டு விட்டாள். அவள் தமிழினியனை கவனிக்க, வேல்விழி அப்பொழுது தான் விழித்தார். அவன் ஓய்வெடுக்க, “என்னோட பிள்ளை” என்று ஓடி வந்தார்.

“உன்னோட மருமக உன்னோட பிள்ளைய காப்பாத்திட்டா” என்று அனைவரும் மிருளாலினி புகழ் பாட, தமிழினியனுக்கு மனச்சோர்வு அகன்று மெதுவாக எழுந்து அமர்ந்தான். திருமணத்திற்காக சற்று நேரத்தில் அனைவரும் வந்தனர்.

விக்ரம், ரித்திகா, உதிரன், நட்சத்திராவை தாத்தா நன்றி கூற தேடினார். அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். விக்ரமும் மாறனும் வெளியே தனியே அமர்ந்திருந்தனர். தாத்தா அவர்களை நோக்கி செல்ல, சுவாதி விக்ரமை புன்னகையுடன் பார்த்தாள்.

நட்சத்திரா வீட்டிற்கு செல்லும் சமயம் காதல் தேவதை பறந்து வந்து ஈசனின் மற்றுமொரு வில்வஇலை ஒன்றை அவள் பார்க்குமாறு போட அவள் அதை எடுத்த சமயம் தானாக அவள் செயினில் ஒன்றிக் கொண்டது. எல்லாரும் ஆச்சர்யமுடன் நட்சத்திராவை பார்த்தனர்.

எல்லாமே மர்மமா இருக்கு ரித்திகா சொல்ல, “அது சக்தி” என்றான் சிம்மா. எல்லாரும் அவனை பார்க்க தோள்களை உலுக்கி விட்டு, “ஸ்டார் தியாவை பார்க்க போகணும்” என்று இருவரும் அங்கே கிளம்பினார்கள்.

ரித்திகாவும் உதிரனும் வீட்டில் காலெடுத்து வைக்க, மகிழன் அலறல் சத்தம் கேட்டு பதட்டமாக உள்ளே வந்தனர். அன்னமும் பரிதியும் அறையை விட்டு ஓடி வந்தனர்.

மகிழன் உறங்கும் நேரத்தில் மார்க்கரை வைத்து அவன் முகம் முழுவதும் கிறுக்கி வைத்திருந்தான் நம் சுட்டி அர்சலன்.

மகிழனை பார்த்து ரித்திகா அவளை மறந்து சிரிக்க ஆரம்பித்தாள். வெகு நாட்களுக்கு பின் அவளது சிரிப்பில் மகிழன் அவளை மனமுறுகி பார்த்தான்.

அத்து, “நீ எப்ப வந்த?” என்று அர்சலன் ரித்துவை பார்த்து புன்னகையுடன் கையை நீட்டிக் கொண்டே அவளிடம் வந்தான்.

மை லயன், “சூப்பர் வேல பார்த்துருக்கீங்க?” என்று அவனை தூக்கி முத்தமிட, அவனும் ரித்திகாவிற்கு முத்தம் கொடுத்தான்.

அக்கா, “உனக்கு அர்சுவை” தெரியுமா?

ம்ம்..தெரியுமே. “நாங்க ஏற்கனவே பேசிட்டோமே!” என்றாள் ரித்திகா அர்சுவை நெற்றியால் முட்டி.

லயன்..இது மகிழுக்கு பத்தவில்லையாம் என்று அருகே இருந்த மார்க்கரை கையில் எடுத்தாள் ரித்திகா.

அத்து, “நானும்” என்று அர்சலன் சொல்ல, இதுவே போகாது. “என்னை விட்ருங்கடா என்று மகிழன் எழுந்து ஓட, அர்சுவை இறக்கி விட்ட ரித்திகா, எட்டி அவன் தம்பி மகிழை பிடித்து, ஹே லயன் “அவனோட கையை பிடி” என்று அவனை தள்ளி அழுத்திப் போட்டு அவன் மேலே அமர்ந்து அந்த சிவப்பு மார்க்கரை வைத்து அவன் உதட்டில் சாயமடித்தாள். அவள் செய்கையில் அனைவரும் மகிழ்ந்து புன்னகையுடன் பார்த்தனர்.

கரங்களை கோர்த்து காரிலிருந்து இறங்கி வந்த நிஷாவும் பாலாவும் ரித்திகாவின் செய்கையில் அதிர்ந்து பின் சிரித்தனர். அவர்களை பார்த்ததும் மகிழனிடமிருந்து எழுந்தாள்.

போச்சு..நாளைக்கு கல்லூரி வேற இருக்கு. என் மானம் போகப் போகுது என சம்மனமிட்டு தலையில் கை வைத்து புலம்பினான் மகிழன். உதிரன் அவனிடம் வந்து கையை நீட்ட, போங்க மாமா நீங்க என்னை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க. போங்க…நான் கோபமா இருக்கேன்.

சரி, நீ கோபமாகவே இரு. இப்ப எழுந்திரு. உள்ளே போய் பேசிக்கலாம்.

இதுக்கு மேல பேச்சா? நெவர். நான் மறுபடியும் தூங்கப் போறேன். என்னை விடுங்க என்று எழுந்து வீட்டிற்குள் ஓடினான்.

பாலா, நிஷாவை தலையசைத்து ரித்திகா அழைக்க, உதி, “பாலா வீட்ல எத்தனை பேர் தெரியுமா?” செம்ம ஜாலியா இருக்கு என்றாள் நிஷா.

“அதுக்குள்ள அங்கிருப்பவர்களையும் உன்னை போல் மாத்திட்டியா?” உதிரன் கேட்க, “அப்புறம் உன்னை போலா கிடைத்ததை நழுவ விட்டு இருப்பது” என்று நிஷா ரித்திகாவை பார்க்க, அமைதியாக அமர்ந்தான் உதிரன்.

அம்மாடி, “தோசை சாப்பிடுங்க” அன்னம் சமையலறைக்கு செல்ல, பாலா கண்கள் எல்லா பக்கமும் துலாவியது.

“என்னாச்சு? யாரை தேடுற பாலா?” உதிரன் கேட்டான்.

ரித்துவோட அண்ணாவை தேடுறேன். அர்சு நிஷாவை பார்த்துக் கொண்டே ரித்திகா மடியில் ஏறி அமர்ந்தான்.

“அண்ணா, அண்ணி வெளிய போயிருக்காங்க” என்றாள்.

ஏன் ரித்து, “எங்களிடமாவது சொல்லி இருக்கலாமே?” பாலா கேட்க, “சொல்லி என்ன செய்ய சொல்ற? அந்த வீடியோவை அவன் வெளியிட்டு என் மானம் போகவா?”

பாலா அதை விடு. “அந்த பிரணவ் என்ன ஆனான்?” நிஷா கேட்க, அவன் ஹாஸ்பிட்டலில் போலீஸூடன் பத்திரமாக இருக்கான் என்று பாலா உதிரனை பார்த்தான்.

“சரிதான உதிரன் சார்?” பாலா உதிரனிடம் கேட்டான்.

“எனக்கு தெரியாது” என்றான் அவன். எல்லாரும் இருவரையும் பார்த்தனர்.

ரித்து, எனக்கு சின்ன சந்தேகம் தான். அவனுக்கு பட்ட அடியில் அவன் செத்திருக்க வேண்டியது. ஏதோ மிருகம் அடிச்சதாம். சாவை தொட்டு மீண்டு வந்திருக்கானாம்.

“இதுல என்னடா உனக்கு சந்தேகம்?” நிஷா கேட்டாள்.

மிருகத்தின் பற்தடமும் இல்லை, சின்ன கீறல் கூட இல்லை. மூன்று பேர் சேர்ந்து அடித்தால் எப்படி அடிபட்டிருக்கும். அப்படி தான் அவனுக்கு அடிபட்டிருக்கு.

உதிரன் சார், “உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” பாலா கேட்க, அனைவரும் சந்தேகமாக உதிரனை பார்த்தனர்.

ஆமால்ல, சாருக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. பிரணவ்வை பிடித்து கொடுத்தது விக்ரம் சாராம். அவர் தான் ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சாராம்.

டேய், “அங்க எங்க காடு இருந்தது?” மிருகம் வர..நிஷா உதிரனை பார்த்துக் கொண்டே கேட்க, அவன் எழுந்து நகர்ந்தான்.

மாமா, “சாப்பிடலாமா?” அர்சு ரித்துவிடமிருந்து உதிரனிடம் சென்று காலை கட்டிக் கொண்டான்.

உதிரன் அவனை தூக்க, காடு இல்லை தான். ஆனால் அவன் போலீஸூடமிருந்து தப்பி ஓடும் போது காடிருக்கும் பகுதிக்கு சென்றிருக்கலாம். அங்கிருக்கும் மூன்று வேட்டை நாய்கள் அவனை கடித்து குதறி துப்பி இருக்கலாம் என்று பாலா சொல்ல, உதிரன் அவனை முறைத்து பார்த்தான்.

சார், “என்னை எதுக்கு முறைக்கிறீங்க?” நான் வேட்டை நாய்களை தானே சொன்னேன். அது கூட சில நேரங்களில் நன்றியுடன் இருக்குமாம். இதுல இன்னொரு சந்தேகமும் உள்ளது.

“இந்த வேட்டைநாய்கள் எதுக்கு ரித்துவிற்காக நன்றியாக இருக்கணும்?” பாலா கேட்க, உதிரன் அர்சுவுடன் சமையலறைக்கு சென்று அன்னத்திடம் அர்சுவை கொடுத்து விட்டு அறைக்கு சென்று கதவை படாரென அடித்து சாத்தினான்.

நாய் கதையை விடு. “யார் யார்ன்னு சொல்லு?” ரித்திகா கேட்டாள்.

“என்ன யார்?” தெரியாதது போல் பாலா கேட்க, “மாமா அவனை என்ன செஞ்சாங்க?” என நேரடியாக கேட்டாள் ரித்திகா.

“அதை எதுக்கும்மா நீ கேக்குற? அவர் தலையிலிருக்கும் கட்டை பார்த்து கூட உனக்கு உன்னோட மாமா மேல இரக்கம் வரைலையா?” உன்னை அவருக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு அவர் அடிவாங்கியதையும் சண்டை போட்டதையும் சிம்மா கூற தான் எங்களுக்கு அவரும் உன்னை காதலிக்கிறான்னு தெரிந்தது என்ற பரிதி, சிறுவயதிலிருந்து உன்னை பார்த்து வளர்ந்தவர்ம்மா. “அப்படியே விட்ருவாரா?”

“விட்டு போனார்ன்னா நீ அவரை தேட வேண்டியது தான?” அதான உன் பழக்கம். “எப்பொழுதும் அவர் பின் தான சுற்றுவ? எதுக்கு அவர் சென்றதும் விட்ட?” பரிதி கேட்க, ரித்திகாவிடம் பதிலில்லை.

புகழ் பற்றி உனக்கு தெரியாதது இல்லை. இவரை வீட்டுக்குள்ளவே வச்சி பார்த்துக்கிட்டான். நம்ம நட்சத்திராவின் துணிவு அன்று இவரிடம் இல்லை. அதே போல் சுதந்திரமாக வாழும் வாய்ப்பு அவருக்கு தேவை என்று பயன்படுத்தினார்.

ஒருவேலை உன்னை போல் அப்பொழுதே இவர் உன்னை காதலித்து இருந்தால் அவரை தேடி வந்திருவன்னு நம்பிக்கையோட இருந்திருக்கலாம். நீ கல்யாணம்ன்னு போய் நின்றால் அவர் மனது எப்படி வேதனைப்பட்டிருக்கும். எல்லா பக்கமும் யோசிக்கணும். இல்ல கேட்டு தெரிந்திருக்கணும். அதை விட்டு உன் எண்ணத்திலே முடிவெடுக்கக்கூடாதும்மா என்றார் பரிதி.

“பெரியப்பா” என்று ரித்திகா அவரிடம் சென்று அவரை அணைக்க, உன் நிலையும் புரியுதுடா. சிம்மாவிடம் நீ மறைமுகமாகவாது சொல்லி இருக்கலாம். அவனும் உன் மீது கோபமாக இருக்கான் என்றார் அவர்.

“அக்கா” என்று மகிழன் அவர்களிடம் வந்து, நேற்று இரவு தூங்க முடியாமல் நான் வெளியே வந்த போது என்று உதிரன் அவன் பெற்றோரிடம் பேசியதை கூறினான்.

ரித்து, உதியை பார்த்த நாளிலிருந்து அவன் குடும்பத்தை விட உன்னை பற்றி அவன் என்னிடம் பேசியது தான் அதிகம். அதனால் தான் என்னால உன்னிடம் நன்றாக பழக முடிந்தது. டாட் முன் நான் யாரிடமும் அதிகமாக பேச மாட்டேன். ஆனால் உதி உன்னை மட்டும் தான் நினைத்துக் கொண்டிருக்கிறான் பதினைந்து வயதிலிருந்து. அவனால் உன்னிடம் பேச முடியல. அவன் காதலை சொல்ல முடியல.

“உன் எதிர்காலம் உன் கையில்” நல்ல முடிவா எடுப்பன்னு நினைக்கிறேன். இந்த வாய்ப்பை விட்டால் உங்கள் இருவர் வாழ்க்கையும் பாழாகிவிடும். “பாஸ்ட் இஸ் பாஸ்ட்” நிகழ்காலம், எதிர்காலத்தை பார் ரித்து என்று நிஷா எழுந்தாள்.

அன்னம் சாப்பிட எடுத்து வைத்தார் நிஷா, பாலாவிற்கு. அவன் உதிரனின் அறையை பார்த்துக் கொண்டே சாப்பிட அமர்ந்தான்.

பரிதி எழுந்து, உதிரன் அறைக்கதவை தட்ட மௌனமாக இருந்தான்.

கதவை திறப்பா..என்றார்.

உதிரன் கதவை திறக்க எல்லாரும் அவனை பார்த்தனர். அழுது வீங்கிய முகம் அவன் அழுத அறிகுறியாக இருந்தது. எல்லாரும் ரித்திகாவை முறைத்து பார்க்க, அவள் வெளியே நகர்ந்தாள்.

“உள்ளே வரலாமா?” பரிதி கேட்க, அவர் உள்ளே சென்று பேச அவன் அவரை அணைத்து அழுதான். தப்பு செஞ்சுட்டேன் மாமா. ரித்து, நட்சாவை தனியே விட்டு போயினதால் தான் இருவரும் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க. அந்த பிரணவ்வை கொல்லணும் போல இருக்கு மாமா என்று உதிரன் சொல்ல, நம்ம ஊரு பிள்ளைன்னு நிரூபிக்கிறய்யா. அவனை வெட்டி எதுக்கு நாம நம்ம வாழ்க்கையை கெடுத்துக்கணும்.

“உனக்கு ரித்தும்மாவை பிடிச்சிருக்குல்ல?”

“ஆம்” என உதிரன் தலையசைத்தான்.

“அவள் உன் பின்னாடி எப்படி சுத்தினா?” அவ வரைலைன்னா நீ தேடி இருக்கணும். முடிந்ததை பேசி ஏதும் ஆகப் போறதில்லை. இருவர் மீதும் தவறு உள்ளது. இனி அவள் எங்கு சென்றாலும் நீயும் போ. அவளை விடாத. நான் உனக்கு உதவுகிறேன். அவ உன்னை மறக்கலைய்யா..மறைக்கிறா. அதனால பழைய சுட்டி ரித்துவா நீ மாறணும் என்றார்.

மாமா, “அவளுக்கு என்னை பிடிக்கும்ல்ல? ஏன் என்னை யாரோ போல் பார்க்கிறா?” கண்ணீர் வடிய கேட்டான் உதிரன்.

அது அப்ப. இப்ப உங்கள தான் அவளுக்கு பிடிக்கும் என்று மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அவர் வெளியேறினார்.

“நாளையிலிருந்து என் காதல் கன்னியை அடைய போராடுவேன்” என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டான் உதிரன்.

தமிழினியனை ரகசியன் தாங்கி நடந்தாலும் மிருளாலினி அவன் கையை விடாமல் அவனுடனே நடந்தாள். தமிழினியனின் சோர்வு தன்னால் என்று அவள் பேசியது அவனுக்கு கேட்டிருக்கும்.

ரகசியன் அவர்களை விட்டு செல்லவும் அவர்களை தனியே விடாது எல்லாரும் ஆளாலுக்கு தமிழினியனுக்கு சாப்பிட எடுத்து வந்தனர். அவன் அம்மா அவனருகே அமர்ந்து அவனுக்கு ஊட்டி விட, தமிழினியன் கையை மிருளாலினி தளர்த்த, அவள் கையை இறுக பற்றினான் அவன். அவள் கண்கள் கலங்கியது. இருவரையும் பார்த்துக் கொண்டே தன் மகனுக்கு உணவை கொடுத்து விட்டு, வேல்விழி மற்றவர்களை பார்த்தார்.

“எல்லாரும் வாங்க திருமணத்திற்கு தேவையானதை எடுத்து வைப்போம்” என்று பாட்டி அனைவரையும் அழைத்தார். அவர்களை சூழ்ந்திருந்த எல்லாரும் சென்று விட தமிழினியன் மிருளாலினியை கூர்ந்து பார்த்தான். அவன் கையை விட்டு மிருளாலினி எழுந்தாள்.

“தேங்க்ஸ்” என்றான் தமிழினியன். அவள் திரும்பி அவனை கவனிக்க, நீ பேசிய அனைத்தும் கேட்டது. எனக்கு ஓ.கே. நீயில்லாமல் நானுமில்லை என்றான்.

அவள் கண்ணீருடன் அவனை பார்க்க, அவன் எழுந்து கையை விரித்தான். அவள் கண்ணீர் பெருக, அவன் மார்பினுள் புதைந்து தேம்பி தேம்பி அழுதாள். அவன் கண்ணில் இருந்த வெகு நாளுக்கான அவனின் காதல் தேடல் அவனை வந்தடைந்தது.

நான் ரொம்ப பயந்துட்டேன் தமிழ். நீங்க துடித்த துடிப்பால் என்னால மூச்சே விட முடியவில்லை. நீங்க என்னை விட்டு எங்கேயும் போகக்கூடாது என்று சொல்லிக் கொண்டே உடல் குலுங்கி அழுதாள்.

“இப்படி அழுதால் நாம எப்படி திருமணம் செய்வது? நம்முடைய அலங்காரம் களைந்து இருக்கு. இப்படியேவா திருமண மேடைக்கு செல்வது?” தமிழினியன் கேட்க, அவள் அழுகையை நிறுத்தாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இருவர் கண்களும் கலக்க, அவனது கரங்கள் அவளது சிகையை கோதி அவளது வதனத்தை ஏறிட்டது. அவள் கண்ணீர் பெருக, அதை அவன் கரங்களால் துடைத்து, எனக்காக நீ அழுவது பிடிச்சிருக்கு. அழும் போது கூட ரொம்ப அழகா இருக்க மிருளா.

அவள் அழுகை மெதுவாக குறைய, ஆளுங்க வர ஆரம்பிச்சுட்டாங்க. சோ..என்று அவன் அவளை பார்க்க, அவள் புரியாதது போல் விழித்தாள்.

அவளது தலையை ஆட்டியவன் “சீக்கிரம் கிளம்புங்க என்னோட பொண்டாட்டி. திருமணம் பண்ணனும்ல்ல” என்று அவளது நுனி மூக்கில் அவன் இதழ்களை பதித்து விட்டு, அவளை நகர்த்தினான்.

ஹலோ, “வரலாமா?” கதவை தட்டி சுஜித்ரா கேட்டாள்.

“வாக்கா” என்று அவன் சொல்ல, மிருளாலினிக்கு அவன் அணைப்பு வேண்டுமென்று தோன்ற அவள் வேகமாக அவனை அணைத்துக் கொண்டாள்.

உள்ளே வந்த சுஜித்ரா தமிழினியனை பார்க்க, கண்களை மூடி திறந்த அவன் மிருளாலினி தோளில் கை வைத்தான்.

மிருளா, சீக்கிரம் தயாராகணும். இல்ல நானே உன்னை தயார் செய்ய வந்து விடுவேன் என்று தமிழினியன் புன்னகைத்தான்.

ஹாம்..என்று அவனை விட்டு நகர்ந்து, வேண்டாம். நானே சீக்கிரம் தயாராகிடுவேன் என்று சுஜித்ராவை பார்த்து, சாரி அண்ணி என்றாள்.

உன்னோட முகத்தை கண்ணாடியில பாரு. அழுது நல்லா சிவக்க வச்சிருக்க..

டேய் வெளிய போ. நாங்க தயாராகணும் என்று சுஜித்ரா கையை தட்ட, பார்லரிலிருந்து ஆட்கள் வந்திருந்தனர். தமிழினியன் வெளியேற, “நீங்க ஓ.கே தான?” மிருளாலினி சத்தமாக கேட்க, நான் ஓ.கே. நீ தான் ஓ.கே இல்லன்னு நினைக்கிறேன்.

இல்லையே? நான் சூப்பராக தயாராகி வந்திருவேன் என்றாள் மிருளாலினி.

ம்ம்..நான் காத்திருக்கிறேன் என்று அவன் செல்ல, அவனுடைய பிரதர்ஸ் அவனை அழைத்து சென்றனர்.

சற்றுநேரத்திலே திருமணம் தொடங்க, மணமக்கள் மேடை ஏறினர். தனக்காக ஒப்பனை செய்து வந்த தன் அழகு தேவதையை பார்த்து சொக்கி தான் போனான் தமிழினியன்.

அண்ணா..போதும். கொஞ்ச நேரம் தான். பின் உங்களுக்கு தான் அவங்க சொந்தம். பின் அவங்களை பார்த்துட்டே இருங்க என்றான் ராஜா. எல்லாரும் சிரித்தனர். மிருளாலினி தமிழினியன் அருகே அமர்ந்து அவனை ஓரக்கண்ணால் பார்த்தான். அவன் புன்னகையுடன் அவளை பார்த்தான்.

“போதும் பார்த்தது” என்று ஜெனி அவளருகே வந்தாள். கோ எங்க ஜெனி?

வருவான்..என்றாள்.

“என்ன சலிப்பு?” சுஜித்ரா கேட்க, இளங்கோ கிப்டை தலையில் வைத்து பாவமாக நடந்து வந்தான்.

அண்ணா, “என்ன இது?” சுவாதி சிரிக்க, தண்டனையாம். நான் சாப்பிட ஆர்டர் பண்ணது மாறிடுச்சும்மா. அதான்.

“நேற்று சாப்பிட்டு தான போனீங்க?” ரகசியன் கேட்க, மச்சான்..”நான் அப்பாவாகப் போறேன்” என்று அமர்ந்திருந்த தமிழினியனை அணைக்க வந்தான் இளங்கோ. மிருளாலினி தொண்டையை செருமி அவனை கண்களால் எறித்தாள்.

ஓய்..குட்டச்சி, அவன் என்னோட உயிர் நண்பன். நாங்க கட்டிப்போம். வெட்டிப்போம் என்றவனை வெட்டவா? குத்தவா? என பார்த்தாள்.

டேய் மச்சி, “என்னடா க்யூட்டா இருந்தவ டெவில் ஆகுறா?” தமிழினியன் காதில் இளங்கோ கிசுகிசுக்க..கோ, அவ என்னை முழுசா மனசால ஏத்துக்கிட்டா. எனக்காக அழுதாடா என்று ஆனந்த கண்ணீருடன் பேச, மிருளாலினி இப்பொழுது தமிழினியனை முறைக்கும் முறையாயிற்று.

டேய், உன்னையும் முறைக்காறாடா. மாட்டிக்கிட்ட போ. வாழ்த்துக்கள் என்று இளங்கோ தமிழினியனிடம் கையை கொடுத்தான்.

“அங்க என்னடா என்னோட பேரனிடம் குசுகுசுன்னு பேசுற?” பாட்டி கேட்க, பாட்டி..மிருளா ரொம்ப நல்ல பொண்ணு. “என்னோட தங்கச்சிய கண்கலங்காம பார்த்துக்கோன்னு சொன்னேன்” என்று அவன் இளிக்க, “எங்களுக்கு அப்படி பேசியது போல் தெரியலையே?” விகாஸ் கேட்க, “தங்கச்சி சொல்லும்மா” என்று மிருளாலினியை பார்த்தான் இளங்கோ. அவள் அவனை முறைத்து பார்த்தாள்.

விக்ரம் அவன் குடும்பத்துடன் அமர்ந்திருந்தான். வனஜா அவனுடன் பேசவில்லை என்றாலும் நால்வரும் சேர்ந்து அமர்ந்திருந்தனர்.

விக்ரமின் கண்கள் பட்டுப்புடவையில் ஜொலித்த ஆபரணங்களுடன் க்யூட்டாக இருந்த சுவாதியின் பக்கம் சரிய, சிவப்பு சட்டையும் பட்டு வேஷ்டியுமாக ஆண்மை பொருந்திய பலத்துடன் ஆணழகனாய் இருந்த ரகசியனிடம் கட்டுண்டு இருந்தாள் ரசிகா. சதாசிவம் பரிதியின் வலியை மனதில் நினைத்தவாறு யோசனையுடன் இருந்தார். அவ்வப்போது தன் கணவனையும் ரசிகாவையும் ரகசியனையும் பார்த்துக் கொண்டிருந்தார் வனஜா.

கட்டிமேளம்..கட்டிமேளம்..குரல் ஓங்கி ஒலிக்க, மிருளாலினி கண்கள் நட்சத்திராவை தேடியது.

அவ வரலை. அர்சுவை மட்டும் வர வைப்போம் என்று சொல்லிக் கொண்டே மென்மையான அவளது சங்கு கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டினான் தமிழினியன். அது யாராலும் பிரிக்க முடியாத முதல் பிணைப்பு. அந்த ராட்சசனின் முதல் தோல்வி. அதை தாண்டி நம் ஜோடிகள் பிழைப்பார்களா?

வாருங்கள். அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.