சார், வாழ்த்துக்கள். மேம் இப்ப தான் சொன்னாங்க என்று நட்சத்திராவின் குழுவினர் அனைவரும் தமிழினியனுக்கு வாழ்த்தை கூற, முகூர்த்தக்கால் ஊன நேரமாகுது. “பண்டிதருக்கு கால் பண்ணுங்க” என்று அவன் சித்தி சத்தமிட்ட, “சொல்லியாச்சும்மா” என்று அவரின் கணவன் சொன்னார்.
“பொண்ணு யாரு சார்? இங்க தான் இருக்காங்களா?” மனீஷா ஆர்வமாக கேட்டாள்.
ம்ம்..என்று அவன் சொல்ல, “பார்க்கலாமா சார்?” என்று தியா கேட்டாள்.
“உள்ள தான் இருக்காங்க” என்று அவனறையை காட்டினான்.
ஹே, வாங்க பார்க்கலாம் அமிர்தன் எழுந்தான். தமிழினியன் அறையை திறந்து வெளியே வந்தாள் மிருளாலினி. அவளை பார்த்து அனைவரும் திகைத்தனர்.
“நீங்களா?” சுபி அண்ணா என்று மிருளாலினியை எல்லாரும் கேள்வியுடன் பார்த்தனர். அவள் கண்கலங்கி நட்சத்திராவையும் தமிழினியனையும் பார்த்தாள்.
சுபி, இப்ப உயிரோட இல்லை. பிரச்சனையில் அவன்..என்று நட்சத்திரா நிறுத்த, அனைவரும் அதிர்ந்தனர்.
“இல்லையா?” ஆனால் இவங்க கழுத்துல தாலி. “இப்ப திருமணம் இவங்களுக்கா?” அமிர்தன் அதிர்ச்சியுடன் கேட்டான்.
தமிழினியன் எழுந்து மிருளாலினி தோளில் கையை போட்டு, அவள் கழுத்தில் இருக்கும் தாலி என் கையால் அவளுக்கு நான் போட்டது. மிருளா, “என் மனைவி” என்றான் அவன்.
“ஆ”வென பார்த்த புலழரசன், “எனக்கு ஒரு சந்தேகம்? மறுமணம் ஓ.கே? நீங்க தான் தாலி கட்டிட்டீங்களே? அப்புறம் எதுக்கு இந்த ஏற்பாடு? ரிசப்சன் மட்டும் வச்சிருக்காலாமே?” என்று கேட்டான்.
“எங்களுக்கு எங்கள் மகன் திருமணத்தை பார்க்க ஆசை இருக்கும்ல்ல?” அதான் இந்த ஏற்பாடு என்று கிருபாகரன் அவர்களிடம் வந்து, “எதுக்கு இருவரும் நிற்கிறீர்கள்?” வாங்கப்பா என்று தன் மகன் தோளில் கையை போட்டு அவர்களை அமர வைத்து அவரும் அமர்ந்தார்.
“ஈ”வென பல்லை காட்டிக் கொண்டு புழலரசன், “வாழ்த்துக்கள் மேம்” என்றான்.
அடச்சே, “நகருடா” என்று எழுந்த தியா, சாரிக்கா எங்களுக்கு அவங்க பத்தி தெரியாது. அதிர்ச்சியில் எங்களால பேச முடியலை.
செலக்சன் சூப்பர், சார் ரொம்ப நல்லவர் என்று தியா தமிழினியனை புகழுரைக்க, அவன் அப்பா புன்னகையுடன், “அம்மாடி போதும். நீ கொடுக்கிற பில்டப்பை பார்த்தால் என் பிள்ளை சொல்லி செய்வது போல் என் மருமக நினைச்சுக்க போறா” என்றார்.
நட்சத்திரா எழுந்து மிருளாலினி அருகே அமர்ந்தாள். மிரு வாழ்க்கையில் சார் இரண்டாவதாக வந்தாலும் இதற்கு முன் இப்படி எல்லாருக்கும் சொல்லி அவள் பெற்றோர் திருமணம் செய்து வைக்கலை. இது தான் அவளுக்கும் முதல் முறை. சோ..மிரு, நீயும் செலக்ட் பண்ணலாம் என்றாள். அவள் கிருபாகரனை பார்த்தாள்.
ஆமா, “என் மகனும் மருமகளுமே செலக்ட் பண்ணட்டும்” என்றார் பெருமிதத்தோடு. அவள் ஏதும் பேசாமல் தமிழினியனை பார்த்தாள்.
“ஆரம்பிக்கலாமா?” அவன் மிருளாலினியை பார்த்து கேட்டுக் கொண்டே அவள் கையை கோர்த்தான். அனைவரும் ஆரவாரம் செய்ய, அவள் மீண்டும் அவனை பார்த்தாள்.
அக்கா, இரு நாள் தான். தினமும் பார்க்கலாம். ஆனால் இப்பவே வேலையை ஆரம்பிக்கணும். நீங்க செலக்ட் பண்ணா தான் ஆரம்பிக்க முடியும் என்றாள் மனீஷா.
சரி, பார்க்கலாம் என்று மிருளாலினி கூற, என்கேஜ்மென்ட், திருமண விழாவிற்கான பிளானை நட்சத்திராவுடன் சேர்ந்து செலக்ட் செய்தனர் மணமக்கள்.
நட்சத்திரா தமிழினியன் வீட்டிற்கு செல்வதை பார்த்த சிம்மா, வேகமாக நட்சத்திரா அறைக்கு சென்று பரண் மேலே பார்த்துக் கொண்டிருந்தான்.
அம்மா, சும்மா இரு. அவள பத்தி தெரியாம ஏதும் பேசாத என்றான் சிம்மா.
“எனக்கா தெரியாது?” என்று அன்னம் கேட்க, பரிதி அவரை முறைத்தார்.
சரி, “என்ன தேடுறன்னாவது சொல்லு?” அன்னம் கேட்க, இங்கே ஆறு பை இருக்கு. இதுல அர்சு சொன்ன பை எதுவாக இருக்கும் என்று ஊதா நிறப்பையில் தூசி படிந்திருப்பதை பார்த்து அதை பரணிலிருந்து கீழே இறக்கி குதித்து இறங்கினான் சிம்மா.
தூசியை தட்டி விட்டு பரிதி பையை திறந்தார். அதில் கோகுலின் புகைப்படம் தனியாக சாதாரண ஆடையில் இருந்தது.
தம்பி, “இவன் தான நம்ம பாப்பாவின் கணவன்?” என பரிதி கேட்டார்.
இல்லப்பா. எனக்கு சந்தேகமா இருக்கு. இவன் பெயர் நரசிம்மன் இல்லை. கோகுல். இவன் இப்போது உயிரோட இல்லை. இவன் விவரத்திற்கும் ஸ்டாருக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கான்.
இவன் போலீஸூம் இல்லை. இவனுக்கு திருமணமான எந்த ரெக்கார்டும் இல்லை. உங்க மருமகள் இவனை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஸ்டார் நம்ம எல்லாரையும் நல்லா ஏமாத்தி இருக்கா என்றான் சிம்மா.
அலைபேசி ஒன்றும் பையில் இருந்தது. அதை எடுத்து பார்த்தான் சிம்மா. எந்த பாஸ்வேர்டும் இல்லாமல் இருந்தது. அதிலிருந்த ஓர் வீடியோவை பார்த்தனர் மூவரும்.
கோகுல் நிறைய ஆடைகளுடனும், நட்சத்திராவும் விதவிதமான புடவை, அணிகலன், சுடிதார் என தனித்தனியாக புகைப்படங்களுடன் இருந்தனர். பின் செல்ல செல்ல, அவர்கள் முன்னிருந்த ஆடையுடன் எடிட் செய்து மாற்றி இருந்தது தெரிந்தது. அதில் தான் நட்சத்திரா ஊரில் வைத்து காட்டிய இருவருக்கும் திருமணமனமான புகைப்படம் இருந்தது.
“பார்த்தீங்கல்ல? நான் சொன்னேன்ல்ல? கேடி..என்ன வேலை செஞ்சிருக்கா?” என்று சிம்மா அதை தூக்கி எறிந்தான்.
அம்மாடி, “உனக்கு ஏற்கனவே தெரியுமோ?” பரிதி அன்னத்திடம் கேட்க, சிம்மா அவன் அம்மாவை பார்த்தான்.
எனக்கு சரியா தெரியல. ஆனால் சந்தேகமா இருந்தது. ஏன்னா..என்று சிம்மாவை பார்த்து, இப்ப அவ என்ன நினைக்கிறான்னு தெரியல? ஆனால் அவளுக்கு சீமந்தம் நடந்த போது என் அண்ணனிடம் நீ பேசிய போது அவள் பார்த்த பார்வையில் அவளுக்கு உன் மீதிருந்த காதல் தெரிந்தது. ஆனால் அன்றிருந்த நிலையில் குழப்பமாக இருந்தது. பின் குழந்தையை பார்த்து தான் ஊர்ஜிதமானது. ஆனால் இப்படி கதை கட்டுவான்னு நான் நினைக்கலைப்பா என்றார் கண்ணீருடன் அன்னம்.
சிம்மா, “அர்சு நம்ம வீட்டு வாரிசு தானா? இது எப்படி நடந்தது? நீ தான் சொல்லணும்?” பரிதி கேட்டார்.
இல்லப்பா, அவள் என்னை அருகே விட்டது கூட இல்லையே! அப்புறம் எப்படி அர்சு என் மகனாவான்? ஆனால் அவன் என் மகன்னு எனக்கு தெளிவா தெரியுது. ஆனால் எப்படி நடந்ததுன்னு எனக்கு தெரியல என்றான் சிம்மா சிந்தனையுடன்.
நல்லா யோசித்து பாரு. யாருமில்லா மழை நேரம் என அன்னம் ஆரம்பிக்க, “அம்மா படத்துல நடக்குற மாதிரி கற்பனை பண்ணாதீங்க? அப்படி செய்ய அவள் என்ன வீட்டை விட்டு வெளிய சுத்துவா?” சிம்மா கோபமாக கேட்டான்.
சரி, அதை மேல தூக்கி வை. இப்பொழுதைக்கு இதை விடுங்க. பாப்பாவிடம் ஏதும் கேட்கவேண்டாம் என்றார் பரிதி.
சிம்மா, அதை இருந்த இடத்தில் வச்சுட்டு குளிச்சிட்டு சாப்பிட வா. முகூர்த்தக்கால் ஊனப் போறாங்க. அப்புறம் ஆடை எடுக்க போகணும். அவங்க எல்லாரும் வாராங்க என்றார் அன்னம்.
சரிம்மா என்று எடுத்ததை உள்ளே போட்டு விட்டு சிம்மா குளிக்க செல்ல, அங்கிருந்த படுக்கையின் அடியில் இருந்த நட்சத்திராவின் புகைப்படத்தின் பின் “லவ் யூ என் அழகிய வெண்கொடியே” என்று எழுதி இருந்தது.
குளித்து தயாராகி வந்த சிம்மா நட்சத்திரா அறைக்கு சென்று காற்றாடியை சுழல விட்டு படுக்கையில் அமர்ந்தான். அப்புகைப்படம் காற்றால் உந்தப்பட்டு அவன் காலடியில் வந்து விழுந்தது. நட்சத்திராவின் புகைப்படத்தை எடுத்து, சிரிப்பை பாரு. “என்ன வேலை செஞ்சு வச்சிருக்க? இதனால் உன்னை விட்டுருவேன்னு நினைக்கிறியா?” என்று செல்லமாக அவளை திட்டிக் கொண்டு, அவன் எடுத்து சென்றான். பின்னால் எழுதப்பட்ட செய்தியை அவன் கவனிக்கவில்லை.
திருமணத்திற்கு செய்ய வேண்டிய வேலையை திட்டமிட்ட பின் மிருளாலினி எழுந்து தமிழினியனிடம் சொல்லி விட்டு அவன் அம்மா அறைக்கு சென்றாள்.
எல்லாரும் ஆட்களை வைத்து வேலையை ஆரம்பிங்க. வாரேன் என்று நட்சத்திரா தமிழினியனை பார்த்துக் கொண்டே மிருளாலினி சென்ற அறைக்கு சென்றாள். தமிழினியன் சிந்தனையுடன் அவள் பின் சென்றான்.
“மிரு” என்று நட்சத்திரா அழைக்க, “சொல்லு நட்சு?” என்று சன்னலருகே சென்று நின்றாள் மிருளாலினி.
நான் தமிழ் சாருக்காக தான் ஒத்துக்கிட்டேன் நட்சு. நான் சுபியை இழந்த போது எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு வார்த்தையால் சொல்ல முடியாது. அவரும் ஒரு விதத்தில் என்னை போல் என் நினைவோடு தான இருந்திருக்கார்.
நான் கூட சுபியோட ஐந்து வருடம் தான் தனியாக இருந்து சிரமப்பட்டேன். ஆனால் அவர் என்னை பள்ளி நாட்களில் இருந்து இப்ப வரை நினைச்சிட்டு இருந்திருக்கார். அவர் என்னை விட ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பார். எனக்கு நல்லா புரியுது. அதான் அவரை திருமணம் செய்ய ஒத்துக்கிட்டேன்.
“சுபிக்காக இல்லையா?” நட்சத்திரா கேட்டாள்.
“அவன் சொல்லி நான் கேட்கணுமா?”
அவனும் எனக்காக தான் சொல்றான். ஆனால் அவன் சொன்னது போது மனம் ஏத்துக்க முடியாமல் தான் ஒத்துக் கொண்டேன். ஆனால் இப்ப தமிழ் சார், என்னை இவ்வளவு காதலிக்கும் போது அவரை விட்டு செல்ல மனம் வரலை. சொல்லப் போனால் அவரை பிடிச்சிருக்கு. ஆனால் என்னால சுபியை நினைக்காமல் இருக்க முடியல.
நாங்க மூன்று மாதம் வாழ்ந்தாலும் நிறைய பிரச்சனைகளுடன் வாழ்ந்தோம். காதலிக்கும் போது இருந்த சந்தோசம் திருமணத்தின் பின் இல்லை. அதற்காக அவனுடனான என் காதலை விட முடியல. அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அழுதாள். தமிழினியன் கண்கலங்க கவனித்துக் கொண்டிருந்தான்.
மிரு, ஒரு விசயத்தை மட்டும் நல்லா புரிஞ்சுக்கோ. சாருடன் வாழணும்ன்னா சுபியை மறந்து தான் ஆகணும். என்னிடம் போல் அவரிடமும் சுபியை பற்றி பேசிக் கொண்டே இருந்தேன்னா அவருக்கு கோபம் வந்திரும். யாரோ ஒருவனை திருமணம் செய்து சுபியை பற்றி பேசினாலே கோபப்படுவாங்க. இனியன் சார் உன்னை காதலித்து இருக்கார். வெகுநாள் நீ பேசுவதை கேட்டு பொறுமையாக இருக்க மாட்டார்.
நீ அவர் காதலுக்காக சிந்திப்பது நல்லது தான். “உனக்கு அவரை பிடிச்சிருக்குன்னு சொல்ற? ஆனால் உனக்கு அவர் மீது காதல் இல்லையே?” அதனால் தான் உங்க முடிவில் நான் இடையே வரல. காதல் இல்லாமல் வாழ்வது கஷ்டம் தான்.
“உன் முடிவு தவறு” என்று நான் சொல்லலை என்று மிருளாலினி கழுத்தில் இருந்த தாலிச் செயினை வெளியே எடுத்து போட்ட நட்சத்திரா, அவர் உனக்கு கணவனாகிட்டார். அவருக்கு நீ மனைவியாகிட்ட. திருமணம் பண்ணலாம். ஆனால் அவரிடம் சுபியை பற்றி பேசாத. அதே போல் சுபி இறந்துட்டான். அவன் உன் வாழ்க்கையில் முடிந்த புத்தகம்.
அதை திருப்பி பார்த்து இவர் வாழ்க்கையையும் உன் வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துக்காத என்று சுபி நினைவில் நட்சத்திராவிற்கு அழுகை வந்தது. அவளாக மிருளாலினியை அணைத்தாள்.
அவளை விலக்கிய மிருளாலினி எங்களை விடு. “நீ சொல்லு? அர்சு யார் குழந்தை?” என்று கேட்டாள்.
“என்ன கேக்குற?” அர்சு எனக்கும் என் கணவனுக்கும் பிறந்த குழந்தை என்று கண்ணை துடைத்துக் கொண்டே பதிலளித்தாள் நட்சத்திரா.
“உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு? அவருக்கும் எனக்கும் தான் திருமணம் முடிந்து விட்டதே! மறந்துட்டியா?”
“மறந்தேனா? நானா?” மிருளாலினி கேட்க, நட்சத்திரா திகைத்து..ஆமா மிரு, எனக்கு சில விசயம் மறந்து விட்டது. ஆனால் திருமணம் என்று நட்சத்திரா சிந்திக்க, அவளுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது.
“ஏய், என்னாச்சுடி?” மிருளாலினி பதட்டமாக, நட்சத்திரா கண்கள் மங்கலாக மிருளாலினியை பார்த்துக் கொண்டு மயங்கினாள்.
நட்சு, எழுந்திருடி, “என்னாச்சு?” என்று மிருளாலினி அழுது கொண்டே நட்சத்திராவை உலுக்கிக் கொண்டு அழுதாள்.
இதை கவனித்துக் கொண்டிருந்த தமிழினியன் உள்ளே வந்து மிருளாலினியிடம் சத்தமிட்டான். அவளிடம் எதையும் சொல்ல வேண்டாம்ன்னு தான நாம முடிவெடுத்தோம். “எதுக்கு தேவையில்லாமல் அதை பற்றி பேசுன?” என அவன் கத்தும் சத்தம் கேட்டு, அனைவரும் அங்கு வந்தனர்.
கிருபாகரன் நட்சத்திராவை பார்த்து பயந்து அவளிடம் வந்தார்.
சுஜி, “தண்ணீர் எடுத்துட்டு வா” என்று தமிழினியன் சொல்ல, சாரி சொல்லிக் கொண்டே அழுது கொண்டிருந்த மிருளாலினியை பார்க்க தமிழினியன் மனம் அமைதியாகி, “அழாம இருக்கியா?” அவளுக்கு மயக்கம் மட்டும் தான். இனியாவது வாயை மூடிகிட்டு இரு. எதையும் அவளிடம் சொல்லாத. அவளே எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் என்றான்.
“என்னதுப்பா சொன்னா? எதனால இந்த மயக்கம்?” புரியாமல் வேல்விழி கேட்க, “ஒன்றுமில்லைம்மா” என்று தமிழினியன் சொல்லிக் கொண்டிருக்க, வீட்டினுள் கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களை பார்த்துக் கொண்டே சிம்மாவும் அவன் பெற்றோரும் வந்தனர்
“யாருக்கும் ஏதும் பிரச்சனையா?” சிம்மா கேட்டுக் கொண்டே அனைவரையும் விலக்கி உள்ளே வந்தான். அவனை பார்த்ததும் மிருளாலினி அவனிடம் சென்று, சாரி சிம்மா “என்னால தான்” என்று அழுதாள்
அய்யோ, “பாப்பாவுக்கு என்னாச்சு?” பதறினார் பரிதி.
சிம்மா..தமிழினியனை பார்க்க, மயக்கம் தான். இப்ப எழுந்திருவா என்றான்.
மிருளாலினியை விட்டு விலகிய சிம்மா, நட்சத்திரா அருகே வந்தான்.
தண்ணீரை தமிழினியனிடம் சுஜி கொடுக்க எல்லாரும் வேலையை பாருங்க. “இவளிடம் நான் பேசணும்” என்று தமிழினியன் சொல்ல, அனைவரும் நகர்ந்தனர்.
வேல்விழி, கிருபாகரன், பரிதி இருக்க, அன்னம் தமிழினியனிடமிருந்து நட்சத்திராவை தன் மடியில் போட்டு, “அடியேய் எழுந்திரு” என்று அவர் கண்கலங்க பேச்சு கொடுக்க, தமிழினியன் தண்ணீரை நட்சத்திரா முகத்தில் தெளிக்க, அவள் மெதுவாக விழித்தாள்.
உடனே அவளருகே வந்த மிருளாலினி, “சாரிடி” என்று மீண்டும் அழ, “மிருளா வாயில கைய வச்சுட்டு அமைதியா இரு” என்று கத்தினான் தமிழினியன். அவள் பயந்து தள்ளி கண்ணீருடன் நட்சத்திராவை பார்த்துக் கொண்டே அமர்ந்தாள்.
வேல்விழி மிருளாலினி அருகே செல்ல, அவரை பார்த்து எழுந்து அழுது கொண்டே அவரை அணைத்து அழுதாள்.
நட்சத்திரா விழித்ததும் எதிரே நின்று அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த சிம்மாவை பார்த்தாள்.
நட்சத்திரா,” நீ வீட்டிற்கு சென்று ஓய்வெடு” தமிழினியன் சொல்ல, “சார்” என்று அவனையும் சிம்மாவை, அன்னத்தையும் பார்த்து அழுது கொண்டிருந்த மிருளாலினியை பார்த்தாள். அவள் பேசியது நினைவு வந்தது.
சார், என்று தமிழினியனை பார்த்து, “எனக்கு திருமணமே ஆகலைன்னு எதுக்கு மிரு சொல்றா?” எனக்கு திருமணம் ஆகிடுச்சு. நல்லா யோசித்தும் திருமணம் ஆனது நினைவில் இருக்கு நட்சத்திரா சொல்ல, ஆமா..உனக்கு திருமணம் ஆகிடுச்சு. அவளுக்கு தான் மனசு சரியில்லை. அதான் அப்படி சொல்லீட்டா என்று தமிழினியன் மிருளாலினியை பார்த்து, “அப்படி தானே மிருளா?” என்று கேட்டான்.
ம்ம் என்று தலையசைத்து விட்டு வேல்விழியிடமிருந்து நகர்ந்தாள் மிருளாலினி. சிம்மா இருவரையும் பார்க்க, நட்சத்திரா மெதுவாக எழுந்தாள்.
சிம்மா, “நட்சத்திரா ஓய்வெடுக்கணும்” என்று தமிழினியன் சிம்மாவிடம் கண்ணை காட்டினான். சிம்மா சிறிதும் யோசிக்காமல் நட்சத்திராவை தூக்க, மாமா நானே வாரேனே! என்றாள் மெதுவாக நட்சத்திரா.
வேண்டாம்மா, “சிம்மா அவளை வீட்டு விட்டுட்டு வா” என்றார் அன்னம். எல்லாரும் அவரை பார்த்தனர். போ..என்று அவர் சிம்மாவிடம் சொல்ல, அவன் அமைதியாக அவளை தூக்கி செல்ல, நட்சத்திரா அவனை பார்த்துக் கொண்டே சென்றாள். சோர்வாக அவன் மார்ப்பில் சாய்ந்தும் கொண்டாள் நட்சத்திரா.
சிம்மா வீட்டினுள் சென்று அவளை படுக்கையில் போட்டு அவளருகே அமர்ந்து சிந்தித்தான். திருமணம் ஆகலைன்னு மிரு சொன்னா. அதான் உண்மையாக இருக்கணும். நிச்சயம் என்னோட ஸ்டார் யாரையும் காதலிக்கவும் இல்லை. திருமணம் செய்து கொள்ளவும் இல்லை என்று சிம்மாவுக்கு மனம் நிம்மதியானது. அவனை பார்த்துக் கொண்டிருந்த நட்சத்திரா மெதுவாக அவன் கையை பிடித்தாள். சிம்மா அவளை பார்த்து அமர்ந்தான்.
மாமா சாரி, “தேங்க்ஸ்” என்றாள்.
எதுவும் பேசாமல், சிந்திக்காமல் ஓய்வெடு ஸ்டார் என்று எழுந்தான். அவள் அவன் கையை விடாமல் மீண்டும் அவனை பார்த்தாள்.
“என்ன?” அவன் கேட்க, “மாமா கொஞ்ச நாள் பக்கத்துல இருக்கியா?” என்று கேட்டாள்.
“என்னை விட்டு விலகி தான இருப்ப? இப்ப என்ன?”
தெரியல மாமா. நீயும் அத்தை மாமாவும் கூட இருப்பது “இத்தனை நாள் என் வீட்டை நினைத்து வருந்திய எனக்கு எல்லாம் கிடைத்தது போல இருக்கு” என்றாள்.
சரி, நீ ஓய்வெடு. அங்க வேலை முடியவும் வாரோம். தேவையில்லாமல் எதையும் சிந்திக்காமல் நிம்மதியாக தூங்கு. நாங்க இருக்கோம் என்று அவன் சொல்ல, அவள் கண்களை மூடி துயிலானாள். சிம்மா அவளை பார்த்து விட்டு தமிழினியன் வீட்டிற்கு சென்றான்.
தமிழினியன் வீட்டிற்கு பண்டிதர் வந்து விட, அவனின் சொந்தங்கள் அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு முகூர்த்த பந்தலை வீட்டிற்கு வெளியே ஊன்றினர். மிருளாலினியுடன் அன்னமும் பரிதியும் இருந்தனர். அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். சிம்மா அவர்களின் பூஜை முடியவும் வீட்டினுள் சென்றான். அவன் பின் தமிழினியனும் வேகமாக சென்றான்.
மிருளாலியை பார்த்து சிம்மா, “மிரு நீ சொன்னது உண்மையா?” என தெரியாதது போல் கேட்டான். அவள் அவனை பார்த்து மௌனமானாள்.
“சொல்லு மிரு?” சிம்மா சத்தமிட்டான்.
சிம்மா, எதற்கு சத்தம் போடுற? உனக்கு தெரிய வேண்டியது கண்டிப்பாக தெரியும். அதற்கான நேரம் இதுவல்ல. முதல்ல அவள நல்லா கவனிச்சுக்கோ. ஆன்ட்டி, அங்கிள் நீங்க கொஞ்ச நாள் அவளுடன் இருந்தால் நல்லா இருக்கும் என்று அன்னம் பரிதியை பார்த்து தமிழினியன் சொன்னான்.
“என்னிடம் இப்பவே சொல்ல சொல்லு?” அவளுடைய கடந்த காலம் கண்டிப்பாக மிருவுக்கு தெரியும். அவளை சொல்ல சொல்லுங்க என்றான் பிடிவாதமாக சிம்மா.
சிம்மா, எங்களுக்கு திருமணம் நடக்கவுள்ளது. நிறைய வேலை இருக்கு. நீ தெரிய வேண்டியதை என்னோட சிகிச்சை மூலம் நட்சத்திரா வாயிலாகவே வர வைக்கிறேன். அப்பொழுது தெரிந்து கொள்.
அப்ப முதல்ல அவளோட பெற்றோருக்கு உதவு. எங்கள் திருமணம் முடிந்த பின் நட்சத்திராவை பற்றி நாமே முழுதாக அறிந்து கொள்ளலாம். எப்பொழுதெல்லாம் அவளை சிகிச்சைக்கு அழைத்து செல்கிறோனோ அப்பொழுது நீயும் வா என்று தமிழினியன் கூற, அதுவும் சரிதான் என்று சிம்மாவும் ஒத்துக் கொண்டான்.
நட்சு,” இப்ப நல்லா இருக்காலா?” மிருளாலினி கேட்க, “ஓய்வெடுத்துட்டு இருக்கா” என்று சிம்மா சொல்லி விட்டு, அம்மா…நீங்க சாரோட சென்று ஆடையை எடுத்துட்டு வாங்க. நான் அவளோட அம்மா, அப்பாவை பார்க்க அவங்க ஊருக்கு போறேன் என்றான்.
சிம்மா, “உனக்கு ஏதோ வேலை இருக்குன்னு சொன்ன?” பரிதி கேட்டார்.
அதை மிளிரா பார்த்துப்பான். நான் டி.ஐ.ஜி சாரை மீட் பண்ணீட்டு நேராக செல்கிறேன். இங்க தேவையானதை நீங்க பார்த்துக்கோங்க என்று அவன் அறையை விட்டு வெளியேற, சிம்மா..என அழைத்தாள் மிருளாலினி. அவன் திரும்பி அவளை பார்க்க, “தேங்க்ஸ்டா” என்றாள்.
சார், “இவளை தனியே விட்டுட்டு போகாதீங்க” என்று சிம்மா தமிழினியனிடம் சொல்லி விட்டு வெளியேறினான். நட்சத்திரா வீட்டை கடக்கும் போது ஒரு நிமிடம் நின்று வீட்டை பார்த்து விட்டு சென்றான். தமிழினியன் அனைவரையும் அழைத்துக் கொண்டு திருமணத்திற்கான அனைத்து பொருட்களையும் வாங்க கிளம்பினான்.
அத்தை, “நீங்களும் என்னை தப்பா நினைச்சுட்டீங்கல்ல?” இனி என்ன நடந்தாலும் மாமா என் வாழ்க்கையில் வர வேண்டாம். ஆனால் நாளை ஒரு நாள் மட்டும் நான் அவருடன் எப்படியாவது நேரம் கழிக்க வேண்டும். அதன் பின் மொத்தமாக அவரை விட்டு சென்று விடுகிறேன். அவரே நினைத்தாலும் என்னால் அவரை ஏற்றுக் கொள்ள முடியாது. என் பல வருட கனவுகள் இந்த ஒரே மாதத்தில் குழி தோண்டி புதைத்தது போல் ஆயிற்று. “எல்லாம் என் தலை எழுத்து” என்று தலையில் அடித்து அழுது களைத்த ரித்திகா சோர்வுடன் தூங்கி விட்டாள்.
மதிய உணவு உண்ண ரித்திகாவை அழைக்க வந்த பாலா, ரித்திகா அறைக்கதவை மெதுவாக திறந்தான். உள்ளே உதிரன் கோபமாக பேசும் வார்த்தை கேட்டது.
“உதிரனா? அவரை இப்பொழுது தானே அவர் பெற்றோருடன் பார்த்தேனே!” அவர் குரல் இங்கே கேட்கிறது என்று பாலா சிந்தனையுடன் இருக்க, ரித்திகா அழும் சத்தம் கேட்டது.
பாலாவின் மனம் அவனை “போ” என்று கூற, அவன் புத்தியோ “அமைதியாக இரு” என்ன நடக்குதுன்னு பாரு என்றது. அவன் அமைதியாக நின்றான்.
ரித்திகா அழுது விட்டு அலைபேசியை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். அவள் காதலிக்கும் போது கல்லூரியில், அல்லி நகரத்தில் என உதிரனை அவனுக்கு தெரியாமல் ரித்திகா எடுத்த புகைப்படம் இருந்தது. அதை தான் அவள் பார்த்தாள்.
அடுத்ததாக அவன் கல்லூரி மீட்டிங்கில் பேசிய வீடியோவை கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பாலாவிற்கு அவள் அழுகை, உதிரனின் வீடியோவை இவள் கேட்பதை வைத்து, “ரித்து நீ உதிரனை காதலிக்கிறாயா? அப்படியென்றால் அந்த பிரணவ்..”என்று சிந்தித்தான்.
ஹாய்..என்று நிஷா அவனிடம் வர, ஷ்..என்று அவள் வாயில் கை வைத்த பாலாவை நிஷா பார்த்தாள். அவன் புருவத்தை உயர்த்த, அவள் அவன் கையை பார்த்தாள்.
“சாரி மேம்” என்று கையை எடுத்துக் கொண்டு ரித்திகா அறைக்கதவை தட்டினான். நிஷா சந்தேகமாக அவனை பார்த்து, நீ இங்க என்ன செய்ற? என்று கேட்டாள்.
“அமைதியா இருங்க” என்று அவன் சொல்ல, சோர்வுடன் ரித்திகா கதவை திறந்தாள்.
ரித்து, “சாப்பிட வா” பாலா அழைத்தான்.
“வா போகலாம்” என்று நிஷா ரித்திகாவை இழுக்க, ஒரு நிமிசம் மேம். வாரேன் என்று உள்ளே சென்றாள். பாலா யோசனையுடன் நின்று கொண்டிருந்தான். நிஷா அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதவை பூட்டி விட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு ரித்திகா அவர்களுடன் வர, பாலா அவளது அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அனைவரும் உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க, மூவரும் வந்தனர். மூவரையும் பார்த்த ரட்சகன் முகம் மாறியது. அம்சவள்ளியும் உதிரனும் ரித்திகாவை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நிஷா பாலாவுடன் சுற்றுவது ரட்சகனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. நிஷா ரித்திகா அருகே அமர, “நிஷாம்மா இங்க வா” என்று ரட்சகன் கோபமாக அழைத்தார்.
டாட், “சாப்பிட்டு பேசலாமே!” என்று நிஷா கூற, இங்க வந்து சாப்பிடுன்னு சொன்னேன் என்று அவர் பாலாவை முறைத்தார். அவன் அவர் முறைப்பை கண்டு கொண்டாலும் காணாதது போல் இருந்தான். ரித்திகா அவரை பார்த்து விட்டு மற்றவர்களை கவனித்தாள். புகழேந்தி, அம்சவள்ளி அவளை பார்ப்பதை கவனித்து அவள் முகம் வாட, அமைதியாக இருந்தாள்.
பிரகவதி எழுந்து நிஷாவிடம் வந்து, “மேம் நீங்க உங்க குடும்பத்தினருடன் சாப்பிடுங்க” என்று நிஷாவை எழுந்திருக்க சொல்ல, அவள் பிரகவதியை முறைத்தாள்.
மேம் ப்ளீஸ், உங்க டாட் விட்டால் பாலாவை ஏதும் செய்து விடுவார் போல. நீங்க அவனை விட்டு தள்ளியே இருங்க என்று பிரகவதி நிஷா காதில் கிசுகிசுத்தாள்.
“முடியாது” என்றாள் நிஷா.
மேம், நான் என்னோட ப்ரெண்ட்ஸோட சாப்பிடணும். எழுந்து போங்க என்று நிஷாவின் உணவுத்தட்டை எடுத்து வேகமாக ரட்சகன் அருகே வந்து, தட்டை வைத்து விட்டு அவள் பாலா அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
நிஷா பல்லை கடித்துக் கொண்டு பிரகவதியை முறைக்க, “நாங்க பேசணும். போறீங்களா?” என்று பாலாவும் பிரவதியுடன் சேர்த்து நிஷாவை காயப்படுத்த, அவள் கோபமாக ரட்சகன் அருகே இருந்த அவளது உணவுத்தட்டையும் அவரையும் பாலாவையும் பார்த்தாள்.
பாலா கவனம் ரித்திகா மேல் இருக்க, ரட்சகன் நிஷாவை முறைக்க, வந்த கோபத்தில் அவளது உணவுத்தட்டை எடுத்து தூக்கி எறிந்து விட்டு சீற்றமுடன் அவள் செல்ல, எல்லாரும் பயந்து அவளை பார்த்தனர்.
அடியேய் பிரகா, “தட்டை உன் தலையில் போடாம போயிட்டாங்க” என்று கூறி ஸ்ரீ சிரிக்க, அனைவரும் அவளை முறைத்தனர். உதிரன் எழுந்தான்.
இருப்பா. நான் பார்த்துக்கிறேன் என்று ரட்சகன் எழ, “நான் பேசலாமா?” என்று அம்சவள்ளி கேட்க, அவரும் அமர்ந்தாள். அம்சவள்ளி ரித்திகாவை பார்த்துக் கொண்டே நிஷாவிடம் பேச சென்றார்.
ரித்திகா சாப்பிட முடியாமல் தட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்தாள். மேம்..பாலா அழைக்க, “பசிக்கல பாலா” என்று ரித்திகா செல்ல, பிரகவதி பாலாவிடம்..”ஏதோ தப்பா நடக்குது” என்று ரட்சகனை பார்த்தாள்.
ஆமா, “தப்பா தான் நடக்குது” என்ற பாலா கண்ணில் ரித்திகா அமர்ந்திருந்த இடத்தில் அவளது அலைபேசி இருந்தது. அவன் அதை எடுக்க செல்லும் நேரம் அலைபேசியில் அழைப்பு வந்தது.
சென்று கொண்டிருந்த ரித்திகா அலைபேசி சத்தம் கேட்கவும் வேகமாக ஓடி வந்தாள். பாலா அதற்குள் அலைபேசியை எடுக்க, பாலா..என்று கோபமாக ரித்திகா சத்தமிட்டாள். எல்லாரும் அவளை பார்த்தனர்.
அருகே வந்து பாலா கையிலிருந்து அலைபேசியை பிடுங்கி ரித்திகா செல்ல, அதிர்ச்சியுடன் அவளை பார்த்தனர். பாலா மட்டும் மனதில் வலியுடன் இதழ்களில் புன்னகையுடன் அவளை பார்த்தான். அவளுடைய அலைபேசி திரையில் பட்டுவேஷ்டி சட்டையுடன் கண்ணில் கூலருடன் புன்னகையுடன் உதிரன் இருப்பதை பார்த்தான் பாலா.
ரித்து, “நீ ரொம்ப வருசமா உன்னோட மாமாவை காதலிக்கிற. பிரணவ்வோட கல்யாணம்? இது சரியில்லையே?” என்று பாலா சிந்தித்துக் கொண்டிருந்தான்.
உதிரன் ரித்திகாவிடம் பேசவென அவள் பின் சென்றான். யாருமில்லா ஓரிடத்தில் உதிரனுக்கு முன் ரித்திகாவை வர்சன் பிடித்து விட்டான்.
மேம், “அந்த அலைபேசில்ல அப்படி என்ன இருக்கு? உங்களை உயிராக காதலிக்கும் பாலாவிடமே இவ்வளவு கோபப்படுறீங்க?” என்று நக்கல் சிரிப்புடன் அவளது அலைபேசியை பிடுங்க வந்தான். அவள் விலகி அலைபேசியை அவளது ஆடைக்குள் மறைக்க, அவன் பார்வை போன போக்கில் வேகமாக நடந்தாள் ரித்திகா.
மேம், “எங்க போறீங்க?” நான் இன்னும் முடிக்கலை என்று வர்சன் அவள் கையை பிடிக்க, “கைய எடுடா” என்றாள்.
“எடுக்கணுமா? முடியாதே?” எனக்கு அந்த அலைபேசி கூட வேண்டாம். “நீ போதும்” என்று அவன் கையை அவளது இடையில் வைக்க, அவன் கன்னத்தில் பளாரென அறைந்தாள். அந்நேரம் வந்த உதிரன் மறைந்து நின்றான்.
“உனக்கு எவ்வளவு தைரியம்? என்னை என்னன்னு நினைச்ச?” கோபமானான் வர்சன்.
“என்னவா?” நீயெல்லாம் மனுசனே இல்லை என்று அவள் கூற, நான் மனுசன் தான். “பாக்குறீயா?” என்று அவளை இழுத்து இறுக்கமாக அணைக்க, அவனை வேகமாக தள்ளிய ரித்திகா, “ச்சீ நாயே? உன்னோட புத்தி மாறவே மாறாதா?”
“மாறாதே? நீ இவ்வளவு அழகா இருக்கும் போது. நான் மட்டுமல்ல எல்லாரும் உன்னை பார்க்க என்ன?” அடைய தான் நினைப்பார்கள். உன்னுடைய இடம் எனக்குரியது. உன்னோட அழகுக்காக கிடைத்தது தானே! எல்லாமே!
ஆமா, தெரியும் தான். ஆனால் உன்னை போல் உயர்ந்த இடத்திற்கு செல்ல எதையும் செய்பவள் நானில்லை.
அச்சோ, “அப்படியா? அப்படின்னா நீ எதுக்கு இந்த இடத்துல்ல இருக்க? பிரணவ்வை கல்யாணம் பண்ணிக்கப் போற?”
என் நிலை சொன்னாலும் உன்னை போல் மிருகங்களுக்கு தெரியாது. நான் செய்வது தவறானாலும் வேறு வழியில்லை. பிரணவ்வை பிடித்து தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் என்றாள் ரித்திகா.
“அட அட அட உனக்கு அவனை பிடிக்குமா? அவன் உன் அழகை மட்டும் தான் நேசிக்கிறான். காதலாவது மண்ணாங்கட்டியாவது?”
ஏய், அவர் உன்னோட பாஸ். “நீ இப்படி பேசுற?”
அவனெல்லாம் எனக்கு விசயமேயில்லை. “ஒரு உண்மையை சொல்லவா?” பிரணவ்வும் நானும் சிறுவயது தோழர்கள். அவன் பாரின் சென்ற பின் அவனை சந்திக்க முடியவில்லை. ஆனால் அவன் அப்பாவுக்கு என்னை முன்னதாகவே தெரியும். அவரை வைத்து தான் உள்ளே நுழைந்தேன். ஆனால் அவன் வந்தவுடன் என்னை விட்டு உன்னை பார்த்து உன் அழகில் மயங்கி விட்டான். அதான் இந்த கல்யாணம்..என்று வர்சன் அவளை நெருங்கினான்.
அப்படின்னா, “பாஸ் உன்னை திட்டுவது?”
நடிப்பு..
“அப்படின்னா நான்?”
நீ சும்மா பயன்பாட்டுக்கு என்றான்.
பாஸ் அந்த அளவிற்கு போக மாட்டார் என்று ரித்திகா சொல்ல, “உனக்கு அவனை பற்றி தெரியாதா? தெரியாதது போல் நடிக்கிறியா?” அவன் கேட்க, மௌனம் காத்தாள்.
சரி, “இன்று ஒரு நாள் மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ” என்று அவளை இழுத்தான் வர்சன்.
இங்க பாரு. நான் அவரிடம் சொல்லி விடுவேன்.
சொல்லு..அவனுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.
எனக்கு உன் இடம் கூட வேண்டாம். நான் அழைக்கும் போது நீ வந்தால் போதும். வா..என்று அவன் அழைக்க, ரித்திகா அழுது கொண்டு எனக்கு எதுவும் வேண்டாம். எல்லாரும் என்னை விட்டுருங்க என்று அழுதாள்.
“எதுவும் வேண்டாமா?” உனக்கு முக்கியமானது அங்க..அவன் சொல்ல, “போதும் நிறுத்து” என்று பிரணவ்விற்கு போன் செய்ய, அவன் அவள் போனை தட்டி விட்டான். இருவரும் மல்லுக்கு நிற்க உதிரன் குழப்பமான மனதுனுடன் உள்ளே காலடி எடுத்து வைக்க, வர்சனை அழைத்தான் பிரணவ்.
வர்சன் அலைபேசி சத்தம் கேட்கவும் உதிரன் மீண்டும் மறைந்து கொண்டான். பிரணவ் வர்சனை திட்ட, “சாரி சார்” என்று அவன் அமைதியானான். அவன் வெளியேற உதிரன் கோபமாக அவனை முறைத்துப் பார்த்தான். ஆனால் வர்சன் கண்டு கொள்ளாமல் சென்றான்.
பின் வந்த ரித்திகா உதிரனை பார்த்து அதிர்ந்து நின்றாள்.
மேடம், “என்ன பண்ணீட்டு வர்றீங்க?” உதிரன் சினமுடன் கேட்க, அவள் அமைதியாக நின்றான். அவளை மீண்டும் அதே இடத்திற்கு அழைத்து வந்து, “என்ன செய்ற? உனக்கு அவனை பிடித்து தான கல்யாணம் செய்ற?”
ஆமா சார், எனக்கு பிரணவ்வை ரொம்ப பிடிக்கும். நான் சிரமப்படும் நேரம் எனக்கு துணையாக இருந்தார். அது மட்டுமல்ல இந்த வர்சன் போல் அவர் இல்லை. ரொம்ப நல்லவர். அவரை தான் நான் காதலிக்கிறேன் என்று அவள் சொல்ல, அவளது கையை பிடித்து இழுத்த உதிரன் அவளை நெருங்கி, “நீ அவனை காதலிக்கக்கூடாது” என்று அவளது இதழ்களை சிறை செய்தான். அவள் அவனை தள்ளி விட்டு, “சார்” என்றாள்.
“சாரா? மாமா..”என்றான் உதிரன்.
அவள் கண்கலங்க உதட்டில் நடுக்கமுடன் அவள் நிற்க, அவளை மேலும் இழுத்து அணைத்து விட்டு முத்தமிட்டான். பின் அவன் விலக, “என்னோட உதி மாமாவிற்கு என்னுடைய அப்பொழுதைய காதல் முத்தங்கள்” என்று அவன் முகம் முழுவதும் முத்தமிட்டு அவனது இதழை ரித்திகா சிறை பிடித்தாள். இருவரும் முத்த மழையில் நனைய, ரித்திகாவை தேடி வந்த பாலா அவர்களை பார்த்து அதிர்ந்து நின்றான்.
அவனை பார்த்த உதிரன் ரித்திகாவிடமிருந்து விலகி, “நீ எவனையும் கல்யாணம் பண்ணிக்கோ. இதுக்கு மேல என் கண் முன் வராத” என்றான்.
இல்ல வருவேன். சில நாட்கள் தான் என்றாள் ரித்திகா.
“வந்தா நான் கிஸ் பண்ணிடுவேன்” உதிரன் சொல்ல, அவள் அமைதியாக பாலாவை பார்த்து, அவரை நான் பள்ளி, கல்லூரி படிக்கும் போதே காதலித்தேன். ஆனால் இப்ப பிரணவ்வை தான் பிடிக்கும் என்றாள்.
ஓ..அவனை இப்ப காதலிக்கிற. “இவர் மீதுள்ள பழைய காதலுக்காக இப்ப முத்தம் கொடுத்துக்கிறீங்களோ?” பாலா கேட்க, சினமுடன் உதிரன் நகர்ந்தான். ரித்திகா அமைதியாக கண்ணீருடன் உதிரன் சென்ற திசையை பார்த்துக் கொண்டே நின்றாள்.
இப்படியே வராத. உன்னோட அறைக்கு போயிடு. “மேக் அப்பை சரி செய்” என்று பாலா வேதனையுடன் நகர்ந்தான். ரித்திகா அவளறைக்கு சென்றாள்.