வேலையை கவனிக்கவென அனைவரும் செல்ல தமிழினியன் மிருளாலினியை பார்த்தான். அவள் சிம்மாவை பார்க்க, தமிழினியன் மிருளாலினி கையை பற்றி, “என்ன?” என்று புருவத்தை உயர்த்தினான்.
கண்களை மூடி திறந்த மிருளாலினி தமிழினியனை சிம்மா அருகே அமர வைத்து விட்டு, மறுபக்கம் அமர்ந்தாள்.
சிம்மா இருவரையும் பார்த்தான். தமிழினியன் புரியாமல் மிருளாலினியை பார்த்தான்.
சிம்மா, “உனக்கு இப்பொழுதும் நட்சுவை பிடிக்கும்ல்ல?” என்று மிருளாலினி கேட்டாள்.
சார், நீங்க அமைதியா இருங்க என்று மிருளாலினி சிம்மாவிடம், “சொல்லு சிம்மா? ஒத்துப்பாயா?”
அவளுடனான திருமணம் நான் சம்பந்தப்பட்ட விசயம் மட்டுமல்ல. இப்ப பையனும் இருக்கான். என் பெற்றோரும் ஒத்துக்கணும். அதை விட அந்த பிடிவாதக்காரி ஒத்துக்கணும். “நடக்காத காரியத்தை எதுக்கு தேவையில்லாம யோசிக்கிற?”
“நீயா எதுக்கு நடக்காதுன்னு சொல்ற?” உன் பெற்றோர் கண்டிப்பாக ஒத்துப்பாங்க. அப்புறம் அர்சு உன்னுடன் இருந்து கொள்வதை பார்த்தால் அவனையும் சம்மதிக்க வைத்து விடலாம். நட்சுவை ஒத்துக் கொள்ள வைக்கணும். அது மட்டும் தான் கஷ்டம். அதை நான் பார்த்துக்கிறேன். “நீ சொல்லு? உனக்கு ஓ.கே தான?” மிருளாலினி கேட்டாள்.
“இத்தனை வருடமாக யாரையும் நான் திருமணம் செய்து கொள்ளாததை வைத்தாவது உனக்கு தெரிய வேண்டாமா?” சிம்மா கேட்டான்.
சோ..”உனக்கு ஓ.கே”. இனி அவள நான் பார்த்துக்கிறேன் என்றாள்.
சரி, “அவள் கணவன் எப்போது இறந்தான்? உனக்கு அவனை பற்றி ஏதாவது தெரியுமா?” சிம்மா கேட்டான்.
”அவன் புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா சார்?” என்று தமிழினியனிடம் கேட்டாள் மிருளாலினி.
இல்லை. அம்மாவிடம் மட்டும் தான் அவள் பேசுவாள் என்றான் அவன்.
அவன் நம்ம பள்ளியில் படித்தவன் தான். எங்க சீனியர் தான்.
ஓ, “அதான் கல்லூரியில் அவளுக்கு பழக்கமானானா? அவன் புகைப்படம் உன்னிடம் இருக்கா?” தமிழினியன் கேட்டான்.
என்னிடம் இல்லை. ஆனால் அவன் எங்களுடன் கல்லூரியில் படிக்கலை.
“போலீஸ்ன்னு சொன்னால்ல?” போலீஸ் டிரைனிங்ல்ல தான் இருந்திருப்பான். “அவனை சந்தித்த நாள் முதல் எங்க ஊருக்கு நீங்க வரும் போது சொன்னாலே? உனக்கு மறந்து போச்சா?” என்று சிம்மா மிருளாலினியை பார்த்தான்.
எனக்கு மறக்கல. ஆனால் அவனை பற்றி எனக்கு முழுதாக தெரியாது என்று தமிழினியனை பார்த்தாள்.
தமிழினியன் சிந்தனையுடன், அவள் வாழ்க்கையின் சில நிகழ்வுகளை மறந்து விட்டாள். நானும் ஹிப்னடைஸ் செய்து பார்த்தப் போது, அவனை பற்றி அவள் சொல்லும் ஏதும் என் மனம் ஏத்துக்கலை. எனக்கு தெரிந்து அவள் கற்பனையுடன் ஒன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இது ரொம்ப டேஞ்சர் என்றான்.
“கற்பனையாக வாழ்கிறாளா? அப்படின்னா?”
நடக்காததை நடந்தது போல் அவள் மனம் அவளை ஆக்ரமிப்பு செய்து உள்ளது. அவள் சாதாரணமாக இல்லை. அவள் வேறொரு உலகில் இருக்காள். இந்த பாதிப்பு அர்சு பிறக்கும் முன்னே அவளுக்கு இருக்கு. அவளுக்கு குணமாகணும்ன்னா அவளை பற்றிய எல்லாம் எனக்கு தெரியணும் என்றான் தமிழினியன்.
மிரு, “அமைதியா இருக்க? உனக்கு அவள் நிலை ஏற்கனவே தெரியுமா?” சிம்மா சீற்றமுடன் கேட்டான்.
அவள் நிலையோ, பாதிப்போ எனக்கு தெரியாது. ஆனால் எதனால் அவளுக்கு இந்த பாதிப்பு வந்திருக்குன்னு எனக்கு புரியுது என்று மிருளாலினி அழுது கொண்டே தமிழினியன் அறைக்கு ஓடினாள்.
ஏய் நில்லு, “சொல்லீட்டு போ” என்று சிம்மா கத்த, நான் பேசிப் பார்க்கிறேன் என்று தமிழினியன் அவனறைக்கு சென்றான். சிம்மா கண்ணீருடன், “நான் உன்னை தனியே விட்டு பெரிய தவறு செய்து விட்டேன் ஸ்டார்” என்று நட்சத்திராவை பார்க்க சென்றான்.
அர்சு, “இன்னுமா குளிக்கிற?” நேரமாகுது. சீக்கிரம் வா என்று சமையலறையிலிருந்து நட்சத்திரா சத்தம் கொடுத்துக் கொண்டே காலை மற்றும் மதிய உணவை தயார் செய்து கொண்டிருந்தாள்.
பாப்பா, “மெதுவாடா” என்று பரிதி சொல்ல, மாமா அலமாரியின் முதல் தட்டில் இருக்கும் அர்சுவின் பள்ளிச்சீருடையை எடுத்து அவனிடம் கொடுங்க என்று சொல்லிக் கொண்டே அவள் வேலையை கவனித்தாள்.
உள்ளே வந்த சிம்மா, அவளை பார்த்துக் கொண்டே அவன் அம்மாவை தேடினான்.
அம்மா, அந்த பாப்பா வீட்ல அந்த பையனோட அம்மாவிடம் பேச போயிருக்காப்பா. அந்த பொண்ணோட அம்மா, அப்பாவுக்கு நேரமிருக்காதுல்ல..அந்த பொண்ணுக்கு வேண்டிய ஆடையை நாங்க வாங்குவதாக சொன்னோம். அதனால் பேச போயிருக்காப்பா. அந்த பொண்ணோட பெற்றோர் மற்ற வேலையை பார்க்கட்டும். பணம் கொடுத்திருக்காங்க. வாங்க மட்டும் செய்யணும் என்றார் பரிதி.
“சரிப்பா” என்று அடுக்கலையை எட்டி பார்த்தான். சிம்மா பேச்சை கூட கவனிக்காது அவள் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அர்சு இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு வெளியே வந்தான். சிம்மாவை பார்த்து,
“அப்பா” என்று அர்சு சிம்மாவிடம் வந்தான். அடுக்கலையில் இருந்து வந்த நட்சத்திரா இருவருக்கும் இடையே வந்து அர்சுவை முறைத்து, “சொல்லாதன்னு சொன்னா கேட்க மாட்டாயா?” என சத்தமிட்டாள். அர்சலன் முகம் வாட, “மாமா” என்று பரிதியை பார்த்தாள்.
“இந்தாருக்கும்மா” என்று அவர் அர்சலனின் ஆடையை கொடுக்க, இந்தா சீக்கிரம் மாற்று. இன்னும் பத்து நிமிடம் தான் வேன் வந்துரும். சாப்பிடணும் என்று சிம்மாவை பார்த்து, “இப்படி சும்மா நிக்கிறதுக்கு அர்சுவுக்கு போட உதவலாம்ல்ல?” என்று கேட்டுக் கொண்டே மீண்டும் அடுக்கலைக்குள் சென்றாள்.
இப்ப தான் திட்டுனா. “அதுக்குள்ள என்னையே ஆடை போட்டு விட சொல்றா?” என்று பரிதியிடம் சிம்மா கூற, அமைதியா சொன்னதை மட்டும் செய் இல்லை அவ்வளவுதான்.
“ஏன்? என்ன செய்வாளாம்?” என்று சிம்மா கேட்க, அப்பா..ஷ்..அம்மா கோபமா இருந்தா நாம பேசக் கூடாது இல்ல வீட்ல இருக்கும் எல்லாத்தையும் தள்ளி விட்டு, நம்மை எடுத்து வைக்க சொல்லி வேலை வாங்குவாங்க என்றான்.
அப்படியா? தாத்தா..அப்பா என்னை பார்த்துப்பார். நீங்க லன்ச் பேக் பண்ணுங்க. நான் லேட்டா போனா மிஸ் அடிப்பாங்க என்றான் பாவமாக.
சரிய்யா, “நான் எடுத்துட்டு வாரேன்” என்று அவர் செல்ல, ஆடையை மாற்றி விட்டுக் கொண்டே, “எதுக்கு லேட் ஆகுது? அம்மா லேட்டா எழுந்திருப்பாங்களா?” சிம்மா கேட்க, இல்லப்பா, அம்மா லேப்ல்ல நைட்டும் வேலை பார்ப்பாங்க. ஆனா பணம் பத்தலை.
என்னை படிக்க வைக்க கூட அஜய் அங்கிள் தான் உதவுறாங்க. பாதி பணம் தான் அம்மா கட்டுவாங்க. அப்பா அஜய் அங்கிள் அம்மாவை பார்க்க வந்தால், நான் உங்களையும் அழைக்கிறேன். நீங்களும் வந்திருங்க. அங்கிளுக்கு அம்மாவை பிடிக்கும். அம்மாவை கல்யாணம் பண்ணிக்க கேட்டாங்க.
“என்ன?” சிம்மா அதிர்ந்து, “உனக்கு கல்யாணத்தை பற்றியெல்லாம் யார் சொன்னா?”
அப்பா, நான் சின்னப்பையன் இல்லை. சுபி அங்கிள் தான் அம்மாவை அப்பாவுக்கு கல்யாணம் செய்து வைக்கணும் இல்லைன்னா அவங்க மாதிரி ஆகிடுவாங்கன்னு சொன்னாங்க.
“அப்பாவா? உன் அப்பா தான் உயிரோட இல்லையே?”
அம்மா வீட்டிலிருந்து சென்ற பின் எப்படியாவது உள்ளே வந்து, அந்த அறையில் மேலுள்ள பரணில் பாருங்க. அதில் ஒரு பை இருக்கும். அவர் தான் என் அப்பா.
“பரண் மேல் உள்ளது உனக்கு எப்படி தெரியும்?”
சுபி அங்கிள், மேஜிக் செய்து அதை கீழே தள்ளி விட்டாங்க. நான் அதிலுள்ள எல்லாத்தையும் பார்த்தேன். நீங்க அங்க போனாலே உங்களுக்கும் உதவுவாங்க பாருங்க என்று வாயை மூடினான்.
மாமா, “அவனுக்கு ஆடை மாற்றி விடுறீங்களா இல்லை கதை பேசிட்டு இருக்கீங்களா?” காரசாரமாக நட்சத்திரா இருவரையும் பார்த்து கோபமாக கேட்டாள்.
“உனக்கு எதுக்கு இப்படி கோபம் வருது?”
அவனுக்கு இப்ப வேன் வந்திரும். அவன் இன்னும் சாப்பிடவில்லை.
“அதுக்கென்ன?” நான் விட்டுட்டு வாரேன்.
“நீங்களா?” என்னால எல்லாருக்கும் பதில் சொல்ல முடியாது.
“என்ன பதில்?”
மாமா நடிக்காதீங்க, அவன் உங்களை போல் இருக்கான். எல்லாருக்கும் தப்பாக தான் தோன்றும்.
“என்ன தப்பு? நான் தான் அன்றே சொன்னேன்ல்ல?” நீ எப்போதும் என்னோட ஸ்டார் தான். “யார் என்ன பேசினால் என்ன?”
அப்ப நாம மட்டும் தான். ஆனால் இப்ப அர்சுவும் பேச்சு வாங்கணும்.
ஓ.கே, அப்ப “நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று அவளை கூர்ந்து கவனித்து சிம்மா சொல்ல, அவள் கையை ஓங்கினாள். அவள் கையை பிடித்து, நான் நிஜமா தான் கேட்கிறேன். விளையாடலை.
“நீ சொன்னீயே?” அர்சுவும் பேச்சு வாங்கணும்ன்னு. அதே அர்சு கண்டிப்பாக பாதிக்க தான் போகிறான். “அவனும் நானும் உருவத்தில் ஒரே போல் இருப்பதால் என்னை தெரிந்தவர் அவனை பார்த்தால் என்னவாகும்?” அதை விட பள்ளியிலும் எல்லாருடைய எள்ளலான பேச்சுக்கு ஆளாவான்.
நட்சத்திரா மனம் சோர்ந்து, ப்ளீஸ் மாமா. விட்டுருங்க, அவனுக்கு நேரமாகுது. “எனக்கும் வேலை இருக்கு” என்று அவனுக்கு சாப்பாடை எடுத்து ஊட்டி விட்டாள். பரிதிக்கு மகன் சொல்வதும் சரியாக பட்டது. அவர் உள்ளிருந்து இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
“இப்ப நான் வெட்டி இல்லை ஸ்டார்” என்று சிம்மா சொல்ல, தெரியும் “எஸ். பி” சார் என்றாள்.
வேன் ஹாரன் கேட்கவும், “மாமா” என்று நட்சத்திரா சத்தம் கொடுக்க, பரிதி தன் பேரனுக்காக கட்டிய உணவை எடுத்துக் கொண்டு வந்தார்.
சிம்மா அர்சுவின் புத்தகப்பையை எடுக்க, நட்சத்திரா அவனிடமிருந்து பிடுங்கி, தன் மகனுக்கு ஷூ அணிவித்து பையை போட்டு விட்டு, லன்ச் பையை அவன் கையில் திணித்து கையை ஆட்டினாள்.
டிரைவர் அங்கிள், “அவர் தான் என் அப்பா” என்று அப்பா..”பை பை” என்று சிம்மாவிடம் கையை ஆட்டி விட்டு, அவனுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தான் அர்சலன். தாத்தா, அம்மா என்று அவன் கையசைக்க, நட்சத்திரா முகம் வாடி இருந்தது. ஆனால் சிம்மாவின் ஆனந்த கண்ணீர் அவன் தந்தை பரிதி மனதை உலுக்கியது.
நட்சத்திரா கையை பிடித்த சிம்மா, அவள் கையை தூக்கி புன்னகையுடன் ஆட்டினான். வேனில் இருந்தவர்களும் சுற்றி இருந்தவர்களும் இருவரையும் பார்த்தனர். அர்சலன் மகிழ்வுடன் கையை ஆட்டிக் கொண்டு, “லவ் யூ அம்மா, அப்பா” என்று சொல்ல, வேன் கிளம்பியது.
நட்சத்திரா சிம்மாவை திரும்பி முறைக்க, அவன் புருவத்தை உயர்த்தினான். அவன் கையை உதறி விட்டு வீட்டிற்குள் சென்றார்.
நீங்க பேசிட்டு இருங்க. நான் அம்மாவை பார்த்துட்டு வாரேன் என்று பரிதி இருவருக்கும் இடைவெளி கொடுக்க நினைத்தார்.
உங்க பையனுக்கு வேலையே இல்லையா? திருட்டுப்பசங்க நிறைய சுத்துறானுகளாம். சீக்கிரம் பிடிக்க சொல்லுங்க என்று கேலியாக கூறிக் கொண்டே அவளது புடவையை எடுத்து அறைக்கு சென்றாள்.
“மகனே! நீங்க நினைப்பதை பாப்பா நடக்க விட மாட்டா போலவே?”
அப்பா, அதை நான் பார்த்துக்கிறேன். அவ சொன்ன வேலையை பாருங்க. அவள் என்னை வெளியே கிளம்ப வைப்பதிலே இருக்கா. அதான் என்னால போக முடியல என்றான் சிம்மா.
தமிழினியன் அறைக்கு சென்றான். கதவு பூட்டப்பட்டு இருந்தது.
“மிருளா”, கதவை திற சத்தமிட்டான்.
“என்னாச்சுடா? ஏதும் திட்டினாயா?” கிருபாகரன் கேட்க, அனைவரும் எட்டிப் பார்த்தனர்.
எங்களுக்குள் பிரச்சனை இல்லை. நட்சத்திராவை நினைத்து அழுதாள்.
“உன்னோட பொண்டாட்டிக்கு அழுறதை தவிர ஏதும் தெரியாதா?” சுஜித்ரா கேலி செய்ய, அவளை முறைத்து விட்டு மேலும் கதவை தட்டினான். அன்னமும் பார்த்துக் கொண்டிருந்தார்.
அனைவரும் சத்தம் கொடுக்க, கண்ணை துடைத்துக் கொண்டு கதவை திறந்தாள் மிருளாலினி.
அம்மாடி, முதல்ல உங்க கல்யாண வேலையை பார்க்கலாம். அப்புறம் அவளுக்காக பார்க்கலாம் வேல்விழி சொல்ல, அவள் அன்னத்தை பார்த்தாள். இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
எல்லாரும் வேலைய பாருங்க. நான் மிருளாவிடம் பேசணும் என்றான் தமிழினியன்.
நோ..முடியவே முடியாது. ஏதாவது ஏடாகூடாமாகிட்டால் என்று சுஜித்ரா சொல்ல, சுஜி அவ என்னோட பொண்டாட்டி. அவளிருக்கும் நிலையில் இப்ப ஏதும் நடக்காது என்று அவன் சொல்ல, அனைவரும் கலைந்தனர்.
பேசிட்டு சீக்கிரம் வா அண்ணா, எல்லாருக்கும் ஆடை எடுக்க போகணும் சித்தப்பா மகன் ராஜா கூறினான்.
ம்ம்..என்று தமிழினியன் அன்னத்தை பார்த்தான். அவர் நகர்ந்தார்.
தமிழினியன் உள்ளே சென்று அறைக்கதவை தாழிட, வேண்டாம் யாராவது ஏதாவது நினைப்பாங்க என்று கதவை லேசாக சாத்தி வைத்தாள்.
“இங்க உட்காரு” என்று தமிழினியன் மிருளாலினியை படுக்கையில் அமர வைத்து, அவளிடம் கேட்டான்.
சொல்லு? நட்சத்திரா பற்றி நான் எல்லாமே தெரிஞ்சுக்கணும்? என்று கேட்டான். அவள் கையை நீட்டி பிராமிஸ் வாங்கிக் கொண்டாள். அவனும் சத்தியம் செய்து விட்டு அவளை பார்த்தான்.
சார், நட்சத்திராவிற்கு திருமணமே நடக்கலை. அவள் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நட்சத்திராவிற்கும் சிம்மாவிற்கும் பிறந்தவன் தான் அர்சு. ஆனால் இருவருக்கும் இடையில் ஏதும் நடக்கவில்லை.
“ஏதும் நடக்காமல் எப்படி அர்சு பிறப்பான்?” என்று கேட்க தமிழினியன் மூளையில் வெளிச்சம் பட்டது.
“செயற்கை கருவினால் பிறந்தவனா அர்சு?” என்று அவன் திகைத்தவாறு கேட்க, தலையை ஆட்டினாள் மிருளாலினி.
அப்ப சிம்மா? அவன் கேட்க, சிம்மா மீது நட்சத்திரா வைத்திருந்த காதல்; அவள் குடும்பத்திற்காக அவள் ஊரில் வாழ்ந்த முறை; இவர்களை சந்தித்து நண்பர்களாகி பின் மருத்துவமனைக்கு சென்றது; சிகிச்சை மாறியது; அவள் கருவுற்றது; முதலில் கலைக்க நினைத்த நட்சத்திராவிற்கு அது சிம்மாவின் குழந்தை என்றதும் பிடிவாதமாக அவள் கருவை வளர விட்டது. நட்சத்திரா திருவிழாவை காரணமாக வைத்து சிம்மா அருகே இருக்க நினைத்து ஊருக்கு சென்றது; திருமணமானது என்றும் அவன் நல்லவன் என்றும் சிம்மாவை மனதில் வைத்து அவள் ஊராரிடம் பேசியது; பின் சிம்மா இங்கே வரவும் அவளும் இங்கே வந்தது; அவளுடைய நட்பு மிருளாலினியால் சிதைந்தது என அவளை பற்றி எல்லாவற்றையும் சொன்னாள்.
நரசிம்மன்? என்று தமிழினியன் கேட்க, அவன் பெயர் கோகுல். சும்மா நட்சு விட்ட கதை. ஆனால் அவன் நம்ம பள்ளியில் படித்தவன். சுபி தான் எல்லாவற்றையும் அவன் புகைப்படத்தை வைத்து தயார் செய்தான். எல்லாமே போட்டோகிராஃபி தான். திருமண புகைப்படம் கூட அவனுடன் இருப்பது போல் நட்சுவிடம் இருக்கும் என்றாள்.
“எதுக்காக அவ மருத்துவமனை போனா?”
வயிற்று வலியால் ஆப்ரேசன் செய்ய போய் அந்த மருத்துவமனையில் ஆள் மாற்றி சிகிச்சை நடந்து விட்டது. பாவம் அவள். அவள் பேசியதை கேட்டாளே அவள் அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கா. எப்படியானாலும் நானும் ஓர் காரணம் தான? என்று அழுதாள் மிருளாலினி.
தமிழினியன் தயக்கத்துடன் அவள் கையை பிடிக்க, அவன் மீது சாய்ந்து அழுதாள் மிருளாலினி. அவள் தோளில் கையை போட்ட தமிழினியனை அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
சிம்மா எதுக்கு அந்த ஹாஸ்பிட்டல் வந்தான். “ஹாஸ்பிட்டல் நேம்?” என்று அவளை பார்த்தான் தமிழினியன்.
மெதுவாக அவனை விட்டு விலகி, “நான் சொன்னால் நீங்க அங்க பிரச்சனை செய்வீங்களா?”
ஆமா, “சும்மா விட முடியுமா?”
புதிதாக சேர்ந்த நர்ஸ் ஒருவரால் தான் இப்படி தவறாக நடந்தது. அவருக்காக தான் நாங்க பிரச்சனை செய்யலை. முதலில் சுபியும் பிரச்சனை செய்தான். பின் அவன் நட்சுவின் பதிலில் அமைதியாகி விட்டான்.
இப்ப இதை பற்றி ஏதும் பேச வேண்டாம். நீ இன்னும் அழுதா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க என்றான் தமிழினியன்.
அப்படின்னா, “அவள் இப்படி தனியாகவே கஷ்டப்படட்டுமா?” அவன் கேட்க, மிருளாலினி அமைதியாக இருந்தாள்.
அவளிடம் எதையும் நீ சொல்லாத, நானே அவளுக்கு சிகிச்சை செய்து புரிய வைக்கிறேன்.
“அவளுடைய இந்த பாதிப்பால் அவள் உயிருக்கு ஒன்றுமில்லையே?”
நிச்சயமாக சொல்ல முடியாது. அவள் அந்த கோகுலை தான் கணவனாகவும் அர்சு அவன் குழந்தை எனவும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். அர்சு, சிம்மா குழந்தை தான் என்று என்ன சொன்னாலும் அவள் கேட்கவே மாட்டாள். நாம போர்ஸ் பண்ணா அவள் மனம் மேலும் பாதிக்கப்படும். அமைதியாக இருக்கலாம்.
நான் அவளிடம் கேட்டதிலிருந்து பார்த்தால் மருத்துவமனை விசயமும், கோகுல் பற்றிய விசயமும் மறந்து இருக்காள்.
அவளை சரி செய்திடலாம்ல்ல. இன்னொரு விசயம் என சிம்மா அவளுக்காக திருமணம் செய்யவே மாட்டேன் என கூறியதை கூறினாள் மிருளாலினி.
ம்ம்..பரவாயில்லை. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. அவன் குழந்தை என இதுவரை சிம்மாவிற்கு தெரியாமல் இருந்திருக்கு. ஆனால் இப்ப அவனுக்கு கண்டிப்பாக சந்தேகம் வந்திருக்கும். அவன் கண்டறிவதை கண்டறியட்டும். ஆனால் நாமாக ஏதும் செய்ய வேண்டாம்.
“சிம்மாவால் தான் நட்சத்திராவின் மனநிலை பழையவாறு சரியாகப் போகுதுன்னு எனக்கு தோணுது” என்று தமிழினியன் மிருளாலினியை பார்த்தான்.
ம்ம்.”.நாம் இருவரும் சேர உதவலாமா?” மிருளாலினி கேட்க, “நாமா?” அவன் கேட்டான்.
ஆமா, “நாம தான்” என்று அவள் அழுத்திக் கூற, அவளை நெருங்கிய தமிழினியன் புன்னகையுடன், இனி தேவையில்லாமல் அழாத. கஷ்டமா இருக்கு.
அவங்களை நாம சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ வேறொருவன் செய்வான் என்று சுபிதனின் ஆன்மாவை எண்ணினான் தமிழினியன்.
தயாராகு. “ஆடை வாங்க போகணும்ல்ல?” என்று அவன் சொல்ல, தலையை ஆட்டினாள் மிருளாலினி. இவை அனைத்தையும் கேட்ட அன்னம் கண்ணீருடன் தன் மகன் சிம்மாவையும், மருமகள் நட்சத்திராவையும் பார்க்க சென்றார். தன் அண்ணன் மகள் தன் ஆசைப்படி தன் மகனுடன் இணையும் வாய்ப்பு ஒன்று கிடைத்ததாக எண்ணி மகிழவும் செய்தார்.
நட்சத்திரா குளித்து விட்டு தயாராகி வெளியே வந்தாள். சிம்மா அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
“கால் பண்ணா எடுக்க மாட்டாயா?” என்று சிம்மா சத்தமிட, சார் பெரிய பிரச்சனை சார். அம்மாவுக்கு தெரிந்தால் என்னை கொன்றுவாங்க என்று இன்ஸ்பெக்டர் மிளிரன் கூறினார்.
“மிளிரனுக்கு பயமா?” நம்பிட்டேன்டா என்று சிம்மா சொல்ல, நிஜமாக தான் சொல்றேன் சார். நான் காதலிக்கும் பொண்ணு கர்ப்பமாகிட்டா. நான் தாலியை எடுத்துட்டு போனால் அவள் எனக்கு பதவி உயர்வு வந்த பின் திருமணம் செய்யலாம்ன்னு சொல்றா. ஏற்கனவே இதற்காக தான் திருமணத்தை தள்ளிப் போட்டோம். என்னோட அம்மா, அப்பாவிற்கும் அவளை பிடித்து, எப்பொழுது திருமணம் செய்யலாம்ன்னு கேக்குறாங்க? இந்த நிலையில் குழந்தை பற்றி சொன்னால் என் கதையை முடிக்கப் போறாங்க என்றான்.
அடப்பாவி, ”உன்னை எவ்வளவு நல்லவனுன்னு நினைத்தேன்?” என சிம்மா பேச அவனை பார்த்துக் கொண்டே நட்சத்திரா அடுக்கலைக்கு சென்றாள்.
சார், “உங்களுக்கு நினைவிருக்கா?” அந்த ராஸ்கல் மகாவோட கேங்கை பிடிக்க கிளப்பிற்கு சென்ற போது தான் ஒரு பொண்ணிடம் சிலர் தவறாக நடந்து நான் உதவினேனே! அன்று அந்த பொண்ணு அவள் கதையை கூற, நானும் குடித்து எங்களுக்குள் சம்பவமாகிடுச்சு.
பின் என் காரில் இடித்து இருவரும் முட்டிக் கொண்டோம். பின் அந்த பொண்ணை ஏதோ பிரச்சனையாக நம்ம ஸ்டேசன் வந்தா. அப்ப தான் அவளை எனக்கு நினைவு வந்து நாங்க பேசி பழகி லவ் பண்ணோம். இப்ப இப்படி குழந்தை வரை செல்லும்ன்னு நான் நினைக்கவில்லை என்று அவன் காதல் கதையை கூற, சிம்மா யோசனையுடன் இதை எங்கேயோ கேட்டது போல் இருக்கே என்றவன் முன் வந்த நட்சத்திராவை பார்த்தான்.
நட்சத்திரா அவர்கள் ஊரில் வைத்து இதை தான் சொல்லி இருப்பாள். அது நினைவு வந்து, “என்ன சொன்ன?” என்று சிம்மா அதிர, அவன் மீண்டும் அவனது காதல் கதையை கூறினான்.
“இதை நட்சத்திரா ஐந்து வருத்திற்கு முன் கூறியது இப்பொழுது இவன் வாழ்க்கையில் எதற்கு நடக்கிறது?” என்று சிந்தனையுடன் மிளிரன் பேசுவதை கவனிக்காமல் இருந்தான் சிம்மா. அவன் காத்திருந்து பார்த்து விட்டு அலைபேசியை வைத்து விட்டான்.
அன்னம் வீட்டிற்குள் வர, நட்சத்திரா அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். தன் மகன் அசையாது சிலையாய் நிற்பதை பார்த்து,
சிம்மா, “என்னய்யா ஆச்சு?” என்று அன்னம் கேட்க, அம்மா..என்று “ஒன்றுமில்லை” என்று தடுமாற்றத்துடன் அவன் வார்த்தைகள் வந்து விழுந்தது. அவன் தடுமாற்றத்தை கவனித்து நட்சத்திராவும் அவனை திரும்பி பார்த்தாள்.
“பிரச்சனை ஏதும் இல்லைல்ல?” என்று பரிதி கேட்க, இல்லப்பா..என்று அவன் நட்சத்திராவை பார்த்தான்.
அப்பா, “நான் இப்ப வந்துடுறேன்” என்று அவனுக்கென கொடுக்கப்பட்ட காரை எடுத்தான் சிம்மா. நேராக மிளிரனை பார்க்க ஸ்டேசன் சென்றான்.
“என்னாச்சு சார்? பிரச்சனையா?” தயாராகாம வந்துருக்கீங்க அவன் கேட்க, ஆமா..பிரச்சனை தான் என்று நரசிம்மன் என்ற பெயர் பழைய ரெக்கார்டில் இருக்கான்னு பார்க்க சொன்னான். “போலீஸ், ரௌடி, இல்ல மக்களுள் ஒருவனாகவாது இருக்கானா பாரு?” என்று சிம்மா கூற, “எதுக்கு சார்?” மிளிரன் கேட்டான்.
“பாரு” என்று சத்தமிட்டான்.
சார், நம்ம ஆபிஸூக்கு சென்று பார்க்கலாம். “வாங்க” என்று மிளிரன் யோசனையுடன் சிம்மாவை பார்த்தான்.
சரியோ, வா என்று இருவரும் கோப்புகள் அடங்கிய அலுவலக அறைக்கு சென்றனர். இருவரும் அங்கிருந்தவனிடம் கூறி தேட சொன்னார்கள்.
சார், அப்படி யாருமே இல்லை. மக்களில் ஒருவன் கூட நீங்க சொன்ன டைம் பீரியடில் இல்லை என்றார் அவர்.
சிம்மா யோசனையுடன் அலைபேசியை எடுத்து, நட்சத்திராவுடன் திருமண கோலத்தில் இருந்தவனை காட்டி, “இப்புகைப்படத்தை வைத்து ஏதாவது கண்டறிய முடியுமா?” எனக் கேட்டான்.
சார், “இதோ” என்று அவர் சிம்மாவை அழைக்க, வந்து பார்த்தவனுக்கு சரியான அதிர்ச்சி.
இவர் பெயர் நரசிம்மன் இல்லை. கோகுல். இப்ப இவர் உயிரோட இல்லை. ஆனால் நீங்கள் அலைபேசியில் காட்டியவர் இவர் தான். அவர் சென்னை தான் என்று மிருளாலினி படித்த பள்ளி என்றும் அவனால் கல்லூரி செல்ல பணமில்லாமல் கிடைக்கும் வேலையை செய்து வந்திருக்கான் என்று தெரிய வர, “ஸ்டார் நீ என்னை ஏமாற்றி இருக்கேல்ல?” என்று எல்லார் முன்னும் சத்தமிட்டான்.
கம்ப்யூட்டரில் இருக்கும் நட்சத்திராவை பார்த்து,” சார் இவங்கள தான் நீங்க காதலித்தீங்களோ?” என்று நட்சத்திரா, மிருளாலினி, சுபிதன், கோகுல் இருந்த புகைப்படத்தை காட்டி மிளிரன் கேட்டான்.
இவன் இறந்தும் அவன் ஐடி மூடப்படாமல் ஆனிலே இருக்கு. ஆனால் யாரும் அதை இயக்கவில்லை என்று அங்கிருந்த அலுவலக போலீஸார் கூறினார்.
“அது எப்படி?”
“அவன் உயிரோட தான் இருக்கானோ?” என்று மிளிரன் கேட்க, ம்ம்..இருக்கலாம். அவன் இறப்பு பற்றி விசாரியுங்க என்று சிம்மா மீண்டும் நட்சத்திரா வீட்டிற்கு சென்றான்.
அங்கே அவளுடன் பசங்க சிலரும் பொண்ணுகளும் இருந்தனர். அவர்களை பார்த்துக் கொண்டே, “அம்மா..நீங்க எப்ப கிளம்புறீங்க?” என சிம்மா கேட்டான். அவனை பார்த்த எல்லாரும் அவனிடம் ஓடி வந்தனர்.
அய்யோ மேம், “அர்சு மாதிரியே இருக்காரே!” என்று தியா வாயை பிளந்து கொண்டு சிம்மாவை பார்த்தாள்.
“உங்க ஹஸ்பண்டு இறந்துட்டாருன்னு சொன்னீங்க? இவர் உங்களுக்கு மாமா மட்டும் தானா?” என்று வெளிப்படையாகவே புலழரசன் கேட்டார்.
ஆமா மேம், “இவர் தான் அர்சுவின் அப்பா போல் இருக்கார்” என்று கீரன் சொன்னான்.
“செட் அப், முடிச்சுட்டீங்களா?” என கத்திய நட்சத்திரா வேகமாக வெளியேற, “வாயை மூடிட்டு இருக்கீங்களாடா?” மேம் பழைய பார்முக்கு வர நேரமாகும். எப்ப வேலையை ஆரம்பித்து, இந்த முறை நாம் ஃப்ரீயா தான் வெட்டிங் ஒர்க் செய்து வெறும் கையோடு தான் போகப் போறோம் என்று புலம்பினான் அமிர்தன்.
வெளியே சென்ற நட்சத்திரா பதட்டமுடன் உள்ளே வந்தாள்.
டேய், இந்தா போனை பிடி. நான் வீட்ல இல்லை. வேலையாக வெளியே இருக்கேன்னு சொல்லீடு என்று ஓடி ஒளிந்தாள் நட்சத்திரா.
“அஜய் சாரா? போச்சுடா?” பிரச்சனை காரில் வந்து கொண்டிருக்குன்னு பார்த்தால் தலையில் ஏறுதே! ஓ..காட் என்ற அமிர்தன்,
ஹலோ சார், மேம் வெளிய வேலையா போயிருக்காங்க. நீங்க நாளைக்கு பேசிக்கோங்க என்றான்.
அதுசரி, “நீ ஏதோ பிரச்சனை தலையில் ஏறுதுன்னு சொன்ன மாதிரி இருந்தது” என்று சத்தம் அருகே கேட்க, அனைவரும் வாசல்பக்கம் பார்த்தனர்.
அய்யய்யோ..போச்சுடா என்று அமிர்தன் சிம்மா பின் நின்று, சார் நீங்க போலீஸ்ன்னு உங்க அம்மா சொன்னாங்க. “ப்ளீஸ் கெல்ப் பண்ணுங்க” என்று அவன் பின் ஒளிந்தான் அமிர்தன்.
மைதா மாவு நிறம், அடர்ந்த கருமை கேசம், ஜொலிக்கும் குறும்பு கண்ணில் கூலருடன் அழகான போஸ்ஸில் நின்று கொண்டிருந்தான் பிஸினஸ் உலகத்தை கையில் வைத்திருக்கும் தனராஜின் ஒரே மகன் அஜய். அவனை சிம்மா குடும்பம் ஆவென பார்த்தனர்.
சிம்மா பின் ஒளிந்த அமிர்தனை கொத்தாக பிடித்து இழுத்தான் அஜய்.
“எங்கடா உங்க மேம்?” என்று அவன் காதில் கையை கொண்டு வரும் முன் அலறி நட்சத்திராவை காட்டிக் கொடுத்தான் அமிர்தன்.
மேம், “காப்பாத்துங்க” என்று அவன் கத்த, நட்சத்திரா வெளியே வந்தாள். அவனை விட்டு நட்சத்திராவிடம் வந்தான் அஜய்.
மேம், “ஹைடு அண்டு சீக்” விளையாடணும்ன்னா முதலிலே சொல்லி இருக்கலாம்ல்ல? இப்படி சொல்லாமல் விளையாடினால் நான் தோற்று விடுவேனே!
சார் ப்ளீஸ், “கெஸ்ட் வந்துருக்காங்க” நட்சத்திரா சொல்ல, சிம்மா கோபம் மேலிட்டது.
அம்மா, பார்த்தேல்ல..நாம கெஸ்ட்டாம் சிம்மா சொல்ல, அவனை பார்த்து, ஹே உன்னை பார்த்தால் அப்படியே அர்சு டார்லிங் போலவே இருக்க? என்று சிம்மாவை சுற்றி பார்த்தான்.
எஸ். பி..சிம்மராஜனா? ம்ம்..கேள்விப்பட்டிருக்கேனே! என்று திமிர் வழிந்தோட அஜய் அவனிடம் கையை நீட்ட, சிம்மாவும் கையை கொடுத்தான். அஜய் சிம்மா கையை அழுத்த, சிம்மா அழுத்தியது தாங்க முடியாமல் கையை இழுத்துக் கொண்டு அவனை முறைத்தான்.
இருவர் கண்களும் அனலாய் தீப்பிடிக்க, மேம்..இருவரும் இங்கே ஆரம்பித்து விடாமல் நம்ம வேலையை பார்க்கணும் என்றான் அமிர்தன்.
ம்ம்..என்று சிம்மா முன் வந்த நட்சத்திரா, சாரி “மாமா கோபிச்சுக்காத” என்று சொல்லிக் கொண்டே அஜய்யை பார்த்தாள்.
மேடமோட “ஃசேப்டி கார்டு எங்க?” அவன் கேட்க, அர்சு பள்ளிக்கு போயிருக்கான் சார் என்றாள்.
நான் பெரிய ஃசேப்டி கார்ட்டை கேட்டேன்.
டாக்டர் சார் திருமணத்திற்கான வேலையை தான் ஆரம்பிக்கப் போகிறோம். நாங்க கிளம்புகிறோம் சார் என்று அவள் சொல்ல, “மேம் உங்க ப்ரெண்டு மேரேஜ்ன்னு சொன்னீங்க? இனியன் சார் மேரேஜா?” என்று மனீஷா கேட்டாள்.
“இருவரும் தான் திருமணம் செய்து கொள்ளப் போறாங்க” என்றாள் நட்சத்திரா.
ஒரு நாள் முன் தான் அவருடன் சாட் செய்தேன். அவர் சொல்லவேயில்லை என்று புழலரசன் கூற, நேற்று எடுத்த முடிவு தான்.
“நேற்றா?” நாங்க அவரை பார்த்துட்டு வாரோம் என்று தியா சொல்ல, நானும் வாரேன். திருமணம் பற்றிய பிளானை கேட்கணும். நமக்கு அதிக நேரமில்லை. “சார், நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாமா?” என்று அஜய்யிடம் கேட்டாள் நட்சத்திரா.
எஸ்.பி சார்? அவன் கேட்க, அவர் எங்க சொந்தம் என்றாள் அவள்.
ஓ.கே பை. “இரு நாட்களுக்கு பின் மீண்டும் வருவேன்” என்று அவன் சிம்மாவை பார்த்துக் கொண்டே சென்றான்.
எல்லாரும் சாப்பிடுங்க, நாங்க வாரோம் என்ற நட்சத்திரா சிம்மாவை பார்த்து விட்டு, அவள் குழுவினருடன் வெளியேறினாள். அவர்கள் நேராக தமிழினியன் அறைக்கு வந்தனர். அவன் அப்போது தான் அறையிலிருந்து வெளியே வந்தான்.