அத்தியாயம் 1

விண்ணுலகத்தின் முப்பெருந்தேவர்களாகிய பிரம்மன், விஷ்ணு, சிவபெருமான் அவர்களது தொழிலாகிய படைத்தல், காத்தல், அழித்தலை செவ்வனே செய்து வந்தனர்.

இதே போல் தேவாலயத்தில் இருந்த இயேசு பிரானின் கீழான காதல் தேவதைகள் மானுட இணைகளை சேர்க்கும் வேலையில் மும்பரமாகி இருந்தனர். அவர்களில் ஒரு காதல் தேவதையால், தான் சேர்த்து வைத்த மானுட தம்பதியினர் சிலர்  பிரிந்து வாழவே அத்தேவதையின் ஆயூட்காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. கடைசியாக சிலரை தம்பதியினராக சேர்த்து வைத்தாலொழிய அத்தேவதையின் ஆயூட்காலம் நீடிக்கும் இல்லை அத்தேவதை மறைந்து விடும். அதற்காக தேவனை அணுகிய போது,

மகளே! என்னால் ஏதும் செய்யமுடியாது. நம் விதிகளை மீற முடியாது. மானுடர்களுக்கு கூட தேவனாகிய நான் வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் தேவதைகளுக்கு என்னால் வாய்ப்பளிக்க முடியாது. உங்கள் வேலையை செவ்வனே செய்திருந்தால் இப்பிரச்சனை வந்திருக்காது என்று அவர் விளக்கமளிக்க, வருத்தமுடன் அத்தேவதை வெளியே வந்தார்.

எதற்காக இவ்வளவு வருத்தப்படுகிறாய்? ஆண் தேவதை கேட்க, பெண் தேவதை விசயத்தை சொன்னார்.

இதற்கு விடை உலகை ஆளும் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானிடம் இருக்கிறது. போ..அவரை நோக்கி தவமிரு. உனக்கான வரத்தை கேள். அவர் நிச்சயம் செய்வார். நம் காதல் தேவதைகளின் தலைவர் தான் உனக்கு குறுக்கே நிற்பார். ஆனால் நீ அவரை எதிர்த்து சிவபெருமானை அடைவது மிகவும் கடினம். முயற்சி செய்து பார். நம் முன்னோர் ஒருவர் சிவபெருமானால் பயனடைந்துள்ளார்.

“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்”. போ. உன் தவத்தில் குறுக்கீடு செய்யும் நம் தலைவரை தாண்டி உன் தவம் சிவபெருமானை சென்றடைந்தால் வெற்றி நிச்சயம்.

அங்கே பார். அவள் அவனிடம் காதலை சொல்லவில்லை. இனி அவள் சொல்வதும் சொல்லாததும் உன் கையில் தான். அவர்கள் இப்பொழுது பள்ளி படிக்கிறார்கள். பத்து வருடம் கடுமையாக தவம் செய்து பலனை அடைந்து கொள். இப்பொழுது ஆரம்பித்தால் தான் எதிர்காலத்தில் அவர்கள் இணைவார்கள். செல்..விரைந்து செல் என்று கூற, அத்தேவதை தன் வாய்ப்பை தேடி ஓடினார்.

             (பத்து வருடத்திற்கு பின்)

கையிலாயத்தில் சிவபெருமான் சக்தியுடன் வீற்றிருந்தார்.

“அய்யனே!” என்று காதல் தேவதை ஓடி வந்தார்.

“என்னாயிற்று காதல் தேவதையே? எதற்கு இவ்வளவு பதற்றம்?” சக்தி கேட்டார்.

அன்னையே! “அவன் இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவனை காப்பாற்றியே ஆக வேண்டும்”.

அய்யனே! “எனக்கான வரம் ஒன்றை கேட்டீர்களே?” அதை வைத்து இவன் உயிரை காப்பாற்றுங்கள் என்று காதல் தேவதை சிவனிடம் வேண்டி வணங்கினார்.

“வரம் உங்களுக்காக தான் தேவதையே!” ஈசன் சொல்ல,

அய்யனே! உங்களுக்கே தெரியும். காதலர்கள் சேர்ப்பதில் தான் எங்கள் உயிரே இருக்கிறது. இப்பொழுது இறக்கும் நிலையில் இருக்கும் இவனோ சாதாரணமானவன் இல்லை. சூழ்ச்சியில் சிக்கி மரண வாயிலில் இருக்கிறான். இவன் மனைவியும் அதே இறக்கும் நிலையில் தான் இருக்கிறாள். இவர்கள் இருவரும் இறந்தால் என் வாழ்நாள் ஐந்தே நிமிடங்கள் தான். இவர்களை காப்பாற்றுவதால் நான் பூரணமாகி விடுவேன்.

இவர்களை காப்பாற்றினால் ஏழு வருடங்கள் யாரும் என்னை அசைக்க முடியாது. அவ்வளவு வலிமையான காதல் இருவரிடமும். என் வரத்தை வைத்து இவர்களை காப்பாற்றுங்கள். “சீக்கிரம் அய்யனே!” என்றார் காதல் தேவதை.

“காப்பாற்றுவது முடியாது தேவதையே!”

“அய்யனே!” அதிர்ந்தார் அவர்.

தேவியே! “அய்யனிடம் கூறுங்கள்” என்று சொன்ன காதல் தேவதையின் அழகான பளப்பான இறக்கைகள் மறைந்து மறைந்து ஒளிர்ந்தது.

“அய்யனே!” உதவுங்கள் என்றார் சக்தி.

உதவலாம். ஆனால் உயிரை காப்பாற்றுவதற்கு பதில் அவர்களுக்கு ஓர் வாய்ப்பு வழங்குகிறேன் தேவி.

“வாய்ப்பா?” காதல் தேவதை கேட்டார்.

ஆமாம், அவர்களில் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுத்து அவர்கள் கழுத்தில் என்னுடைய இந்த வில்வ இலையை மாட்டி விடுங்கள். இருவரும் அவர்களது கடந்த காலத்தை அடைவார்கள். கழுத்தில் இருக்கும் இலை எப்போது வெண்மை நிறத்தில் ஒளிர ஆரம்பிக்கிறதோ? அதிலிருந்து சரியாக பத்தே நாட்களில் இறந்து விடுவர். அதற்குள் அவர்களுக்குள்ள பிரச்சனையை முடித்தாக வேண்டும்.

அய்யனே! “கால வரைமுறை இருக்கிறதா? வருடங்கள் நீளுமா?” காதல் தேவதை கேட்க, கண்டிப்பாக நீளும். வாழ்க்கை பாதிலிருந்து ஆரம்பமாகும். அது பள்ளி, கல்லூரி. இல்லை இருவரும் சந்தித்த நேரமாக கூட இருக்கலாம்.

தந்தையே! “இப்படி காலத்தை மாற்றினால் அவர்களின் வாழ்க்கை முறை மாறுமே?” வேலவன் கேட்டுக் கொண்டே அன்னை, தந்தை அருகே வந்தார்.

ஆம் குமரா. கண்டிப்பாக மாறும். மாறினால் தான் அவர்கள் உயிரை மீட்க முடியும்.

தந்தையே! “வாழ்க்கை மாறினாலும் இறப்பு நிச்சயிக்கப்பட்டது மாறாதில்லியே?”  வேலவனுடன் வந்த விநாயகர் கேட்டார்.

“முழுதாக அப்படி சொல்ல முடியாது மகனே!” மனிதர்கள் எப்போதும் விதியை நம்புபவர்கள். அவர்களில் சிலர் “விதியை மதியால் வெல்லலாம்” என்பர். ஆனால் மனிதர்களின் செயல்கள் தான் அவர்களின் விதியை தீர்மானிக்கும்.

“அப்படியென்றால் விதியை மாற்ற முடியுமா?” விநாயகர் கேட்க, சிவன் புன்னகைத்தார்.

தந்தையே! “எதற்கு புன்னகை?”

“நடப்பதை பார்த்து அறிந்து கொள்ளு கணேசா” என்று வில்வ இலையை தன் கழுத்திலுள்ள மாலையிலிருந்து எடுத்து சிவன் தேவதையின் கையில் கொடுத்தார்.

“நன்றி அய்யனே!”

“இருவருமே கடந்த காலம் செல்வார்களா?” சக்தி கேட்க, ஆம் தேவி, இருவரும் காதலர்கள் இல்லை. “கணவன் மனைவி தானே!” ஓருயிர் ஈருடலாய் இருப்பவர்களாயின் கண்டிப்பாக இருவருமே கடந்த காலம் சென்று தங்களது வாழ்க்கையை சரி செய்வர்.

“நன்றி ஈசனே! நான் சென்று வருகிறேன்” என்று காதல் தேவதை நேராக அரவமற்ற சாலையில் வாயில் நுரை தள்ள கீழே விழுந்து கிடந்த பெண் கழுத்தில் இருந்த தாலியில் அவ்வில்வ இலையை பொருத்தினார். அது ஜொலித்து அடங்கியது.

“இனி உன் எதிர்காலம் உன் வசமே!” தேவதை சொல்ல, “நான் என் மாமாவை பார்க்கணும்” என்றாள் அப்பெண்.

பொருந்திய இலை அப்பெண்ணின் உடலில் ஒளியாய் படர, மெதுவாக அவள் மறைய தொடங்க, அதே நேரம் பெரிய திருமண மண்டபத்தில் மணமகனின் அறையில் இருந்த ஒருவன் இரத்தவெள்ளத்தில், “என்னை மன்னித்து விடு ஸ்டார்” என்று புலம்ப, அருகில் இருந்தவர்களோ. அவன் இன்னும் சாகலை முடிங்க என்றனர்.

ஓர் பெண் கையிலிருந்த ஆயூதத்தை ஓங்க, புலம்பியவன் உடலோ மறைய தொடங்கியது. அனைவரும் அவனை அதிர்வுடன் பார்த்தனர். அவனுமே பயத்துடன் அவனை பார்த்தான். மறைந்தும் போனான்.

தேவதை காப்பாற்ற வந்த அப்பெண்ணை பார்த்து, “உன் மாமாவின் உயிரும் உன் உயிரும் உன் கையில் தான்” என்று சொல்ல அப்பெண் மறைந்து போனாள்.

ஈசனே! சோதனை வெற்றியடைந்து விட்டது. இருவரும் நல்ல மனம் படைத்த உயிருக்கு உயிரான தம்பதிகள் என்பதால் இருவரும் கடந்த காலத்தை சென்றடைந்து விட்டனர் என்று தேவதை மனதினுள் எண்ணினார்.

நாராயண..நாராயண..என்று சொல்லிக் கொண்டே கையிலாயத்திற்கு வந்த நாரதர், “எல்லாம் வல்ல சொக்கனே! யார் அந்த மானுடர்கள்? காதல் தேவதை அவரது தலைவரை மீறி உங்களை சந்திக்க வந்தாராமே?” கேள்விப்பட்டேனே! கேட்டார்.

ஆம், நாரதா.

“விசயத்தை அறிந்து கொள்ள வந்தீரோ?” சக்தி கேட்டார்.

“ஆம் தாயே!”

தாயே, “கலத்தை மூட்ட கேட்கிறார்” வேலவன் சொல்ல, என்ன சொல்றீர்கள் கந்தா? நான் அவ்வாறு செய்வேனா?

நாரதரே, “நீங்கள் அவ்வாறு மட்டும் தான் செய்வீர்கள்” என்ற விநாயகர், அன்னையே தேவதை முதல் முறையாக அப்பாவை காண வந்து பார்க்கின்றேன்.

தேவதைகளால் இங்கே நுழையவே முடியாது கணேசா. அவர்களின் மூத்த ஆண் காதல் தேவதை ஒருவர் சிறகுகள் அறுந்து இறக்கும் நிலையில் வந்து, அவர் அவரை மீட்டுப் போனார்.

மகரிஷிகள் தவமிறுப்பது போல் இந்த தேவதைகள் அவர்களுக்கான வேலையை முடித்து அவர்களுக்கு விருப்பமான தேவரை நினைத்து தவமிருப்பர்.

ஆனால் இரண்டாம் முறையாக காதல் தேவதை நம் ஈசனிடம் வந்திருக்காங்க. அதுவும் பெண் தேவதை. அவரின் கடுமையான தவத்தால் தான் இங்கே அவரால் நுழைய முடிந்திருக்கிறது.

அது சரி, “என்ன கேட்டாங்க அந்த தேவதை?” நாரதர் சிறிய நெற்றி முடிச்சுடன் கேட்டார்.

“நீங்கள் அறியாததையா சொல்லப் போகிறோம்?” விநாயர் கேட்க, அனைவரும் அமைதியா இருங்கள். நடப்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன். “என்ன கூறுகிறீர்கள் அய்யனே?” சக்தி கேட்டார்.

ஆம் தேவி. “இருவரின் காதலாகிய வாழ்க்கையின் முடிவை பார்க்க நானும் தயாராக இருக்கிறேன்” என்றார் ஈசன்.

“நல்லது அய்யனே!” என்ற நாரதரும் அங்கேயே இருந்து கவனிக்கலானார்.

உடல்கள் மறைந்த கணவனும் மனைவியும் கடந்த கால உடலினுள் ஆன்மாவாக நுழைகின்றனர்.

அருமையான இயற்கை மிகுந்த சூழல் நிறைந்த எழில் கொஞ்சும் தேனீ மாவட்டம் வரவேற்க, அல்லி நகரத்தினுள் கார் ஒன்று நுழைந்தது. செல்லும் வழியெங்கும் தோரணங்களும், சாமிப்பாடல்களும் ஒலிக்க, கடை வீதிகளும் ஜோராக திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.

மேற்கு மலைத்தொடர் அடிவாரத்தில் அமைந்துள்ள அவ்வூரின் அல்லிநகரத்தில் “வீரப்ப அய்யனார் கோவில் திருவிழா” கோலத்தில் ஜே..ஜே வென அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இறை வழிபாட்டிற்காக ஆட்கள் வந்து செல்லுவதுமாய் இருந்தனர்.

அம்மா, “நம்ம செல்லம்மா வந்துட்டா” என்று ஆரவாரத்துடன் உதிரன் சத்தமிட்டான்.

“உன்னை பார்த்தால் பிரசிடன்ட் வீட்டு பையன் மாதிரியா நடந்துக்குற?” என்று சத்தமிட்டுக் கொண்டே அவனுடைய அப்பத்தா சூரையம்மாள் வந்தார். உடன் அவருடைய மகன் பிரசிடன்ட் புகழேந்தியும், மருமகள் அம்ச வள்ளியும் வந்தனர்.

“எங்கே என் மகள்?” ஆரவாரமாக அம்சவள்ளி கேட்க, வந்து இறங்கிய ரட்சத்திராவை பார்த்து அனைவரும் திகைத்தனர்.

ஆம்..விதிக்கப்பட்ட நம் நாயகி நட்சத்திரா வயிற்றை பெரியதாக்கி வந்து நின்றாள். அவள் ஆன்மா எதிர்காலத்திலிருந்து வந்திருந்தாலும் அவள் எதிர்காலம் மறந்து பழைய நட்சத்திராவாகவே இருந்தாள்.

புகழ், “உன் பிள்ளை என்ன செஞ்சுட்டு வந்திருக்கா?” சூரையம்மாள் கொதித்தார். அம்சவள்ளி மயங்கினாள். ஆர்வமாக எதிர்ப்பார்த்த தன் தங்கை நட்சத்திராவை பார்த்து பேச முடியாமல் நின்றான் உதிரன்.

வேகமாக அவளிடம் வந்த புகழேந்தி, “யாருடி காரணம்?” என்று அவளது கழுத்தை பிடித்தார்.

அப்பா, “சொல்றதை கேளுங்கள்” என்று நட்சத்திரா சொல்ல, டிரைவர் சீட்டிலிருந்து இறங்கினான் சுபிதன்.

அங்கிள், “அவளை ஏதும் செய்துடாதீங்க!” என்று பதறினான் அவன்.

“நீ தான் காரணமா?” என்று புகழேந்தி சினத்தின் உச்சிக்கே சென்று சுபிதனை அடித்தார்.

அப்பா, “அவனை அடிக்காதீங்க” என்று நட்சத்திரா அந்நிலையிலும் அவனை அவளது அப்பா அடிக்க விடாமல் பாதுகாத்தாள்.

அய்யோ, அவனை ஏதும் செஞ்சுடாதீங்க? என்று டிரைவர் சீட்டின் பக்கத்து சீட்டிலிருந்து மிருளாலினி கீழே இறங்கி ஓடி வந்து சுபிதன் முன் நின்று அவள் தாலியை நீட்டினாள். புகழேந்தி நிறுத்தி அவர்களை பார்த்தார்.

“இருவரும் என்னுடைய நண்பர்கள்” என்றாள் நட்சத்திரா.

அப்ப, “எவனிடம் ஏமாந்துட்டு வந்து நிக்கிற? உன் குழந்தைக்கு காரணம் யாருடி?” முடியை பிடித்தார் புகழேந்தி. விழித்த நட்சத்திராவின் தாய் தன் கணவனிடம் அவளை விடச் சொல்லி மண்றாடினார். ஆனால் அவர் அவளை விடுவதாக இல்லை.

ஊரார் அனைவரும் கூட, “ஊர்த்தலைவர் சந்ததி பொண்ணுங்க எல்லாமே இப்படி தான் செய்யுதுக” என்று எள்ளலாக பேசினர்.

சூரையம்மா கொதித்து, அவளை விடுடா. “இனி அவளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று ஆர்ப்பரித்தார்.

அப்பத்தா, “நான் சொல்வதை கேளு” நட்சத்திரா சொல்ல, யாரும் எதையும் கேட்பதாக இல்லை.

அத்தை, அப்படி சொல்லாதீங்க. “என்னோட பிள்ளை தப்பு செய்ய மாட்டாள்” அம்சவள்ளி உறுதியாக சொல்ல, “தவறு நடக்கவில்லை என்றால் எப்படி உன் பிள்ளை உண்டாகி வந்திருக்கும்மா?” என்று கூட்டத்தில் ஒரு கிழவி கேட்டார்.

பாட்டி, “நாங்க பேசணும்” என்றான் சுபிதன்.

“பேசணுமா? எப்படி குழந்தை வந்ததுன்னா சொல்லப் போறீங்க?” ச்சீ..ச்சீ..என்றார் ஒரு பெண்மணி.

அத்தை, “என்னை பேச விடுங்க?” நட்சத்திரா அவரிடம் சொல்ல, வள்ளி இதுக்கு தான் வெளியூர் அனுப்பாதேன்னு சொன்னேன். கேட்டாயா? “இப்ப உம் மவ குடும்ப மானத்தையே வாங்கிட்டா பாரு” என்று அவர் சொல்ல, அம்சவள்ளி தன் மகளிடம் வந்து நட்சத்திராவை ஓங்கி அறைந்தார்.

கையை தட்டிக் கொண்டே அங்கே வந்தார் அன்னம்.

என்ன அண்ணி, “மானம் பறந்து விட்டது போலேவே? என்னையும் என் புருசனையும் எப்படி விரட்டினீர்கள்? இப்ப உங்க பொண்ணை என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்டார் அன்னம்.

நீ பேசாதடி. “நீயும் ஓடிப்போனவள் தானடி?” சூரையம்மாள் கத்த, ஆமா அம்மா, நான் ஓடிப்போனவள் தான்.

“அம்மாவா?” நாயே, “அப்படி சொல்லாதே!”

சரி, நம்மை விடு. “என்னோட மவனை பார்க்கும் போதெல்லாம் கரிச்சு கொட்டுவியே? இப்ப உன்னோட செல்லப் பேத்தி யாருமே இல்லாம தனியா வந்து நிக்குறா? ஏமாத்திட்டானுகளா?” என்று நக்கல் தெரிக்க அன்னம் கேட்க, கொந்தளித்த புகழேந்தி.

செல்லம்மா, “என்ன பேச்சு வாங்க வச்சுட்டடி பாரு. நம்ம குடும்ப கௌரவமே போச்சு” புகழேந்தி சத்தமிட்டார்.

ஆமா செல்லம்மா, உங்கப்பனுக்கு உன்னை விட அவன் மானம், கௌரவம் தான் பெரிசா போச்சு.

“இனி என்ன செய்யப் போற?” ஏமாற்றியவனை தேடிக் கிளம்பு என்றார் நட்சத்திராவின் சொந்த அத்தை அன்னம்.

டேய் சிம்மா, “உன்னோட ஸ்டார் குழந்தையை வயித்துல்ல சுமந்துட்டு வந்திருக்காடா” என்று உரக்க கத்தினான் மாறன்.

ஆலமர நிழலில் நண்பர்களுடன் அரட்டையுடன் பைக்கில் அமர்ந்திருந்த நம் கதாநாயகன் சிம்மராஜன் குதித்து இறங்கி, “என்னடா சொன்ன?” என்று மாறனை அடித்தான்.

உன்னோட அம்மாவும் அங்க தான் இருக்கு. போடா..போ..உன்னோட காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது என்றான் மாறன்.

“வந்து உன்னை கவனிக்கிறேன்” என்று தன் லூங்கியை ஏற்றிக் கொண்டு கோபமாக சென்றான் சிம்மா.

“எல்லாரும் நிறுத்துங்க” என நட்சத்திரா கத்தினாள். சிம்மராஜனும் அங்கே வந்தான்.

நான் சொல்ல வருவதை யாருக்கும் கேட்க கூட விருப்பமில்லை. யாரும் கேட்க வேண்டாம். “நீங்க என்ன என்னை வெளியே அனுப்புறது?” நான் போறேன். ஆனால் ஊரை விட்டு நான் போகமாட்டேன். நான் வந்த வேலைய முடிச்சிட்டு போறேன்.

நட்சு, இங்க இருக்கிறது பாதுகாப்பா தெரியல. இவங்க பார்த்துப்பாங்கன்னு தான் உன்னை அழைச்சிட்டு வந்தோம் என்ற சுபிதன், மிரு ..“சொல்லு அவளிடம்” என்றான் தன் மனைவியிடம்.

இல்ல சுபி, அவள் இருக்கட்டும். அவளோட ஊர்க்காரவங்க தான. “அவர்களுக்கு அவளை பற்றி தெரியாமலா இருக்கும்?” இருந்தும் இப்படி பேசுறது சரியில்லை.

எல்லாரும் கேட்டுக்கோங்க. உங்க ஊர்ப்பொண்ணு நட்சத்திரா இங்க தான் இருக்கப் போறா. நாங்க இங்க இருக்க முடியாது. நாங்க ஒரு வாரம் முன்பு தான் திருமணம் செய்து கொண்டோம். எங்க குடும்பத்திடம் சொல்லி தான் இவளை அழைத்து வந்திருக்கோம். நாங்கள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். அதனால் இவளை எங்களுடன் அழைத்து செல்ல முடியாது. அவளுக்கு முடிந்தால் உதவுங்க என்று நட்சத்திராவை பார்த்தாள்.

எல்லாரையும் பார்த்த நட்சத்திரா சிம்மா கண்கள் கலங்கி இருப்பதை பார்த்துக் கொண்டே அவனுடன் நின்ற அவன் நண்பன் முகேஷிடம் வந்தாள்.

முகி, இது என்னோட கார்டு. நானே சம்பாதித்தது. இதில் உள்ள பணத்தை வைத்து கோவில் அருகே எனக்கு வீடு வேண்டும் என்றாள்.

அவன் யோசனையுடன் சிம்மனை பார்த்தான். அவன் ஏதும் சொல்லாமல் இருக்க, சிம்மனின் மற்ற நண்பர்கள் அவளை முறைத்துக் கொண்டு நின்றனர். அவர்களை பார்த்த முகேஷ், “நான் செய்கிறேன்”. ஆனால் மற்ற எதுவும் என்னால் செய்ய முடியாது என்றான்.

“ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் நட்சத்திரா.

“மற்ற எல்லாவற்றையும் நாங்க பார்த்துக்கிறோம்” என்ற சுபிதன், வீடு ஒரு மாதத்திற்கு போதும். “நட்சு போதும்ல்ல?” என்று கேட்டான்.

ஓ.கே சுபி, நான் சொல்கிறேன். நீ வாங்கிட்டு வா என்றாள்.

மிருளாலினி சிம்மாவை பார்த்து சுபிதன் காதில் சொல்ல, “மிரு உங்க ரகசியத்தை வீட்ல போய் வச்சுக்கோங்க” என்ற நட்சத்திரா ஊராரை பார்த்து, உங்க பிரசிடண்டுக்காக எனக்கு நீங்க பொருட்கள் கொடுக்காமல் இருந்தால் கன்ஸ்யூமர் கோர்ட் படி எல்லாரும் ஏற வேண்டி வரும் என்று மிரட்டினாள்.

“என்னம்மா மிரட்டிறியா?” ஒருவர் கேட்க, அங்கிள் நான் மிரட்டலை. உண்மையை தான் சொல்றேன். உங்க வியாபாரம் கெடக் கூடாதுன்னு நினைக்கிறேன்.

நான் கர்ப்பமா இருக்கேன். ஒரு கம்பிளைண்ட் போனாலும் ஊருக்கே  பிரச்சனை வரும். “வருமா? வராதான்னு?” உங்க எதிர்கால போலீஸாக வரவிருக்கும் சிம்மராஜனிடமே கேட்டுக்கோங்க என்று அமைதியாக சொல்லி விட்டு அவள் குடும்பத்தை பார்த்தாள்.

அப்பத்தா, உன்னோட மகள் அன்னம் சொன்னது சரிதான். அவங்க மாமாவோட உன் பக்கத்துல இருக்கிறதால உனக்கு ஏதும் தெரியலை. நான் இப்ப போனால் இனி கண்டிப்பாக வர மாட்டேன். உங்க எல்லாரையும் விட பாதிக்கப்போவது சிலர் தான் என்று கண்கலங்கியவள் அம்மா, “நீ என்னை நம்புறேல்ல?” எனக் கேட்டாள்.

ஆமா, செல்லம்மா. நீ என்னோட வளர்ப்பு. கண்டிப்பாக வழி தவற மாட்ட.

அம்மா, “ஒரே ஒரு முறை உன்னை கட்டிக்கவா?” என்று நட்சத்திரா அவள் அம்மாவை அணைத்தாள். இருவரும் கண்ணீரில் இருக்க, புகழேந்தி கோபமாக தன் மனைவி அம்சவள்ளியை நட்சத்திராவிடமிருந்து பிரித்து வேகமாக இழுத்தார். அவர் வேகத்தில் கீழே விழ வந்த நட்சத்திராவை பிடித்தான் சிம்மராஜன். அனைவரும் பதறி அவளை பார்த்தனர். இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிம்மா, “என்ன செய்ற?” என்று அவன் அப்பா பரிதி கோபப்பட்டார்.

கண்களை துடைத்து அவனை விட்டு விலகிய நட்சத்திரா தன் அண்ணன் உதிரனை பார்த்தாள்.

நட்ச்சா..என்று அவன் அவளிடம் வர, “இந்த வீட்டிலிருந்து யாராவது அவளை பார்க்க, பேச, அவள் பக்கம் சென்றால் இந்த வீட்டில் அவர்களுக்கு இடமிருக்காது” என்று புகழேந்தி சத்தமிட்டார்.  உதிரன் அப்படியே நின்று விட்டான்.

முன் வந்த ஓர் பாட்டி, “பிள்ளை தான் தன் மீது தவறில்லைன்னு சொல்லுதே? என்னன்னு கேட்கலாமே?” என்று கேட்டார்.

வேண்டாம் பாட்டி, இதுக்கு மேல் யாருக்கும் என்னை பற்றி தெரியவும் வேண்டாம். எனக்கு எதையும் சொல்லவும் விருப்பமில்லை. இனி இந்த வீட்டிற்குள் வர எனக்கும் விருப்பமில்லை.

“இவங்க எல்லாரும் விருப்பப்பட்டாலும் நான் செத்த பின் அவங்க வச்சுக்கட்டும்” என்று அவள் சொல்ல, ஊரார் அனைவருக்கும் அவள் மீதுள்ள கோபம் சென்று பரிதாபமாக மேலிட்டது.

“நெருப்பை யாராலும் தொட முடியுமா?” என்று ஒருவர் சொல்ல, புகழேந்தி சத்தமிட்டார். அனைவரும் கலைந்தனர்.

தன் மகள் அருகே இருந்து பார்த்துக்கொள்ளும் நேரமாயிற்றே! அம்சவள்ளியால் வீட்டினுள் செல்ல முடியாமல் வெளியவே அமர்ந்தார்.

முகேஷை பார்த்து, “என்னால் சும்மா அலைய முடியாது. கோவிலுக்கு அருகே வீடு வேண்டும்” என்றாள். அவன் விழிக்க, “யாரும் என்னை ஏதும் செய்ய மாட்டாங்க” என்றாள் அன்னம், பரிதியை பார்த்துக் கொண்டு.

“சிம்மா வா” என்று அவன் அம்மா அவனை இழுத்து சென்றார்.

சிம்மாவின் நண்பர்கள் கோபமாக அவளை பார்க்க, அவள் புன்னகையுடன் அவர்களிடம் சென்று, “நீங்களும் என்னை நம்பலைல்ல?” கேட்டாள்.

“எப்படி நம்புறது? வாயும் வயிறுமாய் இருப்பவளை யார் நம்புவா?” கார்த்திக் கேட்க, “இவன் சரியாக தான கேட்கிறான் மிரு?” என்றாள் நட்சத்திரா.

பின் அவர்களை பார்த்து, பொண்ணுங்களுக்கு சொந்த ஊரிலும், ஏன்? அம்மா, அப்பா அருகில் இருக்கும் போது கூட பாதுகாப்பு இப்பெல்லாம் இருப்பதில்லைல்ல மாறா. “உலகத்தை பற்றி உனக்கு தெரியாதா?” என்று கேட்க, அவளை திகைத்து மற்றவர்கள் பார்த்தனர்.

அடியேய், “என்னடி பேசுற?”

சும்மா இரு. லைட்டா ஃபன் பண்ணுவோம்.

“இது ஃபன்னா உனக்கு?” அவள் முறைக்க, என் செல்லம்ல்ல கோவிச்சுக்காத என்று நட்சத்திரா மிருளாலினியை கொஞ்சினாள்.

“அவளை விடு” என்று சுபிதன் இருவரையும் பார்த்தான்

அச்சோ, “சுபி உன்னோட பொண்டாட்டியை நான் கொஞ்சுறேன்னு பொறாமையா?” அவள் கேட்க, “சும்மா இருடி” என்று மிரு வெட்கமுடன் காரில் ஏறினாள்.

“யாரு அவன்?” மாறா கேட்க, அதை விடுங்க. எனக்கு வீடு தேடுவதை விட உங்களுக்கு பெரிய வேலை இருக்கு. போங்க உங்க ப்ரெண்டை சமாதானப்படுத்துங்க என்றாள்.

டேய், “சிம்மாவை நீங்க பார்த்துக்கோங்க”. நான் வீடு தயார் செய்து தேவையானதை அரேஞ்ச் செய்திட்டு வாரேன் என்றான் முகேஷ். “இருடா நானும் வாரேன்” என்று மாறனும் அவனுடன் சென்றான்.

வீரப்ப அய்யனார் கோவிலில் காரை நிறுத்தி கீழே இறங்கினார்கள். அங்கே வந்த இருவர் வீட்டுச்சாவியை நீட்டினர்.

அண்ணா, “அப்ப ஓவரா பேசுனீங்க? நான் உங்க வீட்ல இருந்தால் தரித்திரமாகாதா?”

புரியுது. உன்னை நெருங்க நம் சிம்மாவாலே முடியலை. ஏதோ தவறா இருக்குன்னு புரியுதும்மா. அதனால் உன்னை நாங்க நம்புறோம்மா என்றார்.

அண்ணா, “மாமா வீட்டில் தங்கிக்கவா?” அவர் வீடு தான் கோவிலுக்கு அருகே இருக்கு. நம் அய்யனார் துணை என் பிள்ளைக்கும் எனக்கும் இனி அதிகம் தேவைப்படும். அதனால் தான் இங்கே வந்தேன் என்றாள் நட்சத்திரா.

சரிம்மா, “உன் விருப்பம்” என்றார் அவர்.

“தேங்க்ஸ் அண்ணா, அங்கிள்” என்று அவள் வாங்கிக் கொண்டு, “மிரு நடந்து போகலாமா?” எனக் கேட்டாள்.

உனக்கு இப்ப ஏழு மாதமாகுது. “ரொம்ப தூரமா?” என்று மிரு மாறனை பார்த்தாள்.

இல்லை, ரொம்ப தூரமில்லை. “நீ நடந்துருவேல்ல நட்சத்திரா?”

ம்ம்..”சுயர்” என்று அவனை பார்த்து புன்னகைத்தாள்.

பரவாயில்லை. “எங்களை பார்த்து சிரிக்கிற?” முகேஷ் கேட்டான்.

ம்ம், “இப்ப சிரிக்க பிடிச்சிருக்கு” என்றாள்.

மாறன் அவளை ஒருமாதிரி பார்த்தான்.

“எதுக்கு அப்படி பாக்குற”? படிக்கும் போது நான் உங்களுடன் நன்றாக பேசி இருந்தால் உங்க பிரசிடென்ட் என்ன செய்வார்ன்னு நான் சொல்ல தேவையில்லையே?

ம்ம்..என்றான் அவன்.

“என்னது நட்சு சிரிக்க கூட மாட்டால்லா?” என்று சுபிதன் கேட்க, “பள்ளியிலே ரொம்ப திமிரு பிடிச்ச பொண்ணு இவள் தான்”.

ஹேய், அப்படியெல்லாம் இல்லை. “இங்க பாருங்க” என்று சுபிதன் தன் போனை எடுத்து அவர்களிடம் காட்டினான். எல்லா புகைப்படத்திலும் அப்படியொரு புன்னகை. மற்ற பொண்ணு பசங்களை விட ரொம்ப சந்தோசமாக இருந்திருப்பாள் நட்சத்திரா. அதை பார்த்து விட்டு, உன்னோட குடும்பத்துக்காகவா எல்லாரிடமும் திமிறா பேசுவ? மாறன் கேட்க, அவள் கண்ணீருடன் திரும்பி நின்றாள்.

அதான பார்த்தேன். “சிடுமூஞ்சி பொண்ணையெல்லாம் எப்படி சிம்மா காதலிப்பான்?” என பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்தனர். இப்பொழுது நட்சத்திரா தங்கவிருக்கும் வீட்டிற்கு எதிரே தான் சிம்மராஜனின் வீடும் இருந்தது.

பள்ளியில் படிக்கும் போது நீ இங்கே வந்திருந்தால் சிம்மா குதியாய் குதித்திருப்பான். “இப்ப என்ன செய்யப் போகிறானோ?” என்றான் கவலையுடன் மாறன்.

அவள் ஓரக்கண்ணால் இடப்பக்கம் பார்த்தாள். “என்ன?” என்று எட்டி பார்த்தான் முகேஷ்.

ஏய்..என்று முகேஷ் கத்த, ஷ்..என்ற நட்சத்திரா, மாறா சிலர் அவங்க வேலையை பார்க்காமல் அடுத்தவங்க என்ன செய்றாங்கன்னு பார்ப்பாங்களாம். “அப்படி இருப்பவர்களை பார்த்திருக்கிறாயா?” நான் பார்த்திருக்கேன்.

என் பின் சுற்றி சிலர் காயமடைந்து இருக்கலாம். ஆனால் இனி அவர்கள் எதிர்காலத்தை நோக்கி செல்வது தான் சரியாக இருக்கும் இல்லை என்னை போல் அவங்க வாழ்க்கையும் தொலைந்து விடும்.

ஆனால்டா மாறா, இந்த சிம்மாவுக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லை. “வளர்ந்து என்ன பிரயோஜனம்?” ஒரு பொண்ணை செட் பண்ணி இருந்தான்னா அவன் வேலைக்கு சேர்ந்தவுடனே என் அத்தையும் மாமாவும் கல்யாணமாவது செய்து வைத்திருப்பார்கள். “காதல்ன்னு இன்னும் சுத்திக்கிட்டு திரிகிறான் வெட்டிப்பையன்” என்று நட்சத்திரா சொல்ல, சீற்றமுடன் நகர்ந்தான் சிம்மா. அவன் செல்லவும் கண்ணீருடன் அவனை திரும்பி பார்த்தாள்.

நட்சத்திரா..என சிம்மனின் நண்பர்கள் அதிர்ந்து அவளை பார்த்து, “உனக்கும் அவனை பிடிக்குமா?” எனக் கேட்டனர்.

அவள் கண்ணை துடைத்து விட்டு, என் பின்னே சுற்றிய அத்தை மகன் சிம்மா. “அவனை பிடிக்காமல் இருக்குமா?”

நான் சென்றது அவன் தொந்தரவால் இல்லை. என் வாழ்க்கையின் மகிழ்ச்சியை தேடி. ஆனால் இப்ப “எல்லாம் முடிஞ்சிருச்சு” என்றாள் வருத்தமாக நட்சத்திரா.

“நிஜமாகவா? இது தெரிந்தால் சந்தோசப்படுவானே!”

இல்ல. “யாரும் அவனிடம் எதையும் சொல்லக்கூடாது” என அவர்கள் இருவர் கையையும் இழுத்து உப்பிய வயிற்றின் மீது வைத்து, “இது என் குழந்தை மேல பிராமிஸ்” என்றாள். இருவர் கையும் நடுங்க கையை எடுத்தனர்

இது தெரியாமல் உன்னை நிறைய முறை நாங்கள் திட்டி இருக்கோம்.

இதை விடுங்கள். “வேலையை பார்க்கலாமா?” என்று அவள் கேட்க, அவளுக்கு உதவ ஆரம்பித்தனர்.

வீட்டிற்கு வந்த சிம்மா கோபமுடன், அம்மா “ஸ்டார்” என்னை என்ன சொல்லீட்டா பாரும்மா என்றான்.

“என்னடா சொன்னா?” அவன் அம்மா சமையல் வேலையை கவனித்துக் கொண்டே கேட்டார்.

“வெட்டிப்பையன்னு” சொல்லீட்டாம்மா.

“எவ்வளவு தைரியம் அவளுக்கு?” வா. அவளை ஒரு வழி செய்துட்டு வரலாம்.

“அதெல்லாம் வேண்டாம்” என்று சினமுடன் அறைக்கு சென்றான். இருவர் அறையும் எதிரெதிரே இருந்தது. கோபமாக சன்னலருகே வந்தான்.

நட்சத்திரா ஓய்வெடுக்க செல்வதாக கூறி அறைக்கு வந்தாள். அனைவரும் அவளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதும், அடுக்குவதுமான வேலையை செய்து வந்தனர்.

சன்னலை திறந்து வயிற்றை பிடித்துக் கொண்டு சிம்மாவின் வீட்டை பார்த்து விட்டு படுத்துக் கொண்டாள். அவள் குடும்பம் எதிராக இருப்பதால் மனம் கனத்து தூங்க முடியாமல் மனதினுள்ளே சிம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

சற்று நேரத்தில் வெளியே வந்தாள் நட்சத்திரா. பொருட்கள் அனைத்தையும் மிருளாலினி சமையற்பகுதியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

“தேங்க்ஸ்டி மிரு” என்றாள் கண்கலங்கியவாறு.

“அதுக்குள்ள எழுந்துட்ட?” அவள் கேட்க, தூங்க முடியலடி. ரொம்ப கஷ்டமா இருக்குடி.

“ஈவ்னிங் கோவில்ல பங்சன் இருக்காமே?” அவள் கேட்க, ஆமா இந்த மாதம் முழுவதும் இருக்கும். “சுபி எங்க?”

“வெளிய தான் இருப்பான்”.

நட்சத்திரா வெளியே வந்தாள். பாட்டி ஒருவர் அங்கே வந்தார்.

அம்மாடி, இந்தா இப்ப சாப்பிட வச்சிக்கோ. உங்க மூணு பேருக்கும் செஞ்சுட்டு வந்திருக்கேன்.

பாட்டி, “மாறனும் முகேஷூம் சாப்பிட வாங்க போயிருக்காங்க” என்று சுபிதன் சொல்லிக் கொண்டே பாட்டியிடம் வந்தான்.

“வெளிச்சாப்பாடு பிள்ளை இந்த நேரத்துல சாப்பிடக்கூடாது” என்றார்.

சுபி, அவங்க வாங்கும் முன் சொல்லணுமே? “கால் பண்ணி சொல்லு” என்றாள் நட்சத்திரா.

“நம்பர் இல்லையே?” அவன் கேட்க, சிம்மாவ வச்சிக்கிட்டு, என்ன நம்பர் இல்லை?” என்று சிம்மா..வெளிய வா என்று உரக்க அழைத்தார் பாட்டி.

“பாட்டி வேண்டாம்” என்று நட்சத்திரா பதட்டமாக பாட்டியிடம் வந்தார்.

ஏய் கிழவி, எதுக்கு கத்துற? “பையன் தூங்கிட்டு இருக்கான்” என்று அன்னம் வெளியே வந்து நட்சத்திராவை பார்த்தார்.

“மாறன்ட்ட சாப்பாடு வாங்க வேண்டாம்ன்னு சொல்லணும். இப்பவே உன் பிள்ளையை சொல்ல சொல்லுடி” பாட்டி சொல்ல, என் பிள்ளை வர மாட்டான். “வேணும்ன்னா நடந்து போய் சொல்ல சொல்லு” என்றார் அன்னம் முகத்திற் அறைந்தாற் போல்.

இல்ல பாட்டி, இருக்கட்டும். நான் எங்க இருக்காங்கன்னு பார்த்து சொல்லிக்கிறேன் சுபிதன் செல்ல, “கண்டவளெல்லாம் இங்க தங்க வச்சிட்டு அந்த ஆறுமுகம் எங்க போனான்?” அன்னம் கேட்க, நட்சத்திரா கண்கள் கலங்கியது.

“என்ன பேச்சுடி பேசுற? இதே நிலையில் நீயும் ஒரு நாள் இருந்த? மறந்துட்டாயா? நீயாவது புருசனோட இருந்த? ஆனா பிள்ளை அவள் குடும்பமும் இல்லாமல் அந்த பையனும் இல்லாமல் இருந்துட்டு இருக்கா? உன்னோட அண்ணன் பொண்ணு தான? கொஞ்சம் கூட கஷ்டமா இல்லையா?” பாட்டி கேட்டார்.

“இப்படி திருமணத்துக்கு முன் நான் கர்ப்பமாகவில்லையே? அவ புருசன் யாருன்னு அவளுக்கு தெரியுமான்னு முதல்ல கேளு?” என்று அவர் பட்டென சொல்ல, எனக்கு அவரை நன்றாக தெரியும். என் உடம்புக்கு மட்டுமல்ல என் உயிருக்கும் சொந்தக்காரர் தான் அவர்.

“அப்புறம் எதுக்கு தனியா வந்திருக்காலாம்?” அன்னம் கேட்க,

நட்சத்திரா, “யாராலும் நீ ஏமாறவில்லையா?” என்று அங்கு வந்த மாறன் கேட்டான். எல்லாரும் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இல்லை, சும்மா ஃபன்னுக்காக தான் பேசினேன். நான் யாரிடமும் ஏமாறவில்லை. அதே போல் இப்படி குழந்தை வரும் நிலையாகும்ன்னு எனக்கு தெரியாது. இது ஒரு விபத்து. ஆனால் இதற்கு காரணமான அவரை எனக்கும், என்னை அவருக்கும் ரொம்ப பிடிக்கும்.

“என்னடி பேசுற? இந்த நிலையில உன்னை தனியாக விட்டவன் உன்னை காதலிப்பானா?” கோபமாக அன்னம் கேட்டார்.

ஆமா அத்தை, “அவர் போல் என்னை யாராலும் காதலிக்க முடியாது” என்று நட்சத்திரா சொல்ல, சிம்மாவின் அறையினுள் பொருட்கள் கீழே விழும் சத்தம் கேட்டது.

அறையை பார்த்த நட்சத்திரா, அவருக்கு நானென்றால் ரொம்ப பிடிக்கும். எங்களது சந்திப்பு சாதாரணமானதில்லை. நான் இப்பொழுது உயிரோட இருக்க காரணமும் அவர் தான்.

அநேகமாக நான் கிளப் பக்கம் செல்லவே மாட்டேன். ஆனால் அன்று என் நண்பர்களுக்காக வந்தேன். அவர்கள் என்னை தனியா விட்டு சென்றனர். நான் மேங்கோ ஜூஸ் தான் குடித்தேன். ஆனால் எனக்கு தெரியாமல் ஆல்கஹால் கலந்து கொடுத்தாங்க. நான் தெரியாமல் குடித்து விட்டேன். அங்கே தான் அவரும் இருந்தார். அவரும் குடித்திருந்தார்.

என்னை சிலர் விருப்பமில்லாமல் அழைத்து செல்ல முற்பட்டனர். அவர் தான் உதவினார். நாங்கள் அப்பொழுது போதையில் மேலும் ஆல்கஹால் அருந்தி விட்டோம். அதனால் எங்களுக்குள் தவறாக நடந்து விட்டது.

பின் ஒருநாள் இருவர் காரும் இடித்து முட்டிக் கொண்டோம். அப்பொழுது இருவருக்குமே சரியாக நினைவில்லை.

அடுத்த முறை எங்க கிளைண்ட் உடன் வேலை செய்யும் பொண்ணிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்தான். அவனை போலீஸ் ஸ்டேசனுக்கு இழுத்து சென்றோம். அங்கே அவரை சந்திக்க நேரிட்டது.

ஏன்னா, அவர் போலீஸ். பிரச்சனை முடிந்து சென்று விட்டேன். மறுநாள் வேலை செய்யும் இடத்திற்கே நடந்தது நினைவு வந்து பேச வந்தார். பின் தான் நடந்தது எனக்கும் நினைவுக்கு வந்தது. அடிக்கடி சந்தித்து பேசி எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிதல் வர ஆரம்பித்தது. காதலாக மலர்ந்தது. அவர் அம்மா, அப்பாவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களுக்கும் என்னை பிடித்து விட்டது.

நாட்கள் நன்றாக நகர்ந்தது. ஒருநாள் வேலை பார்க்கும் இடத்திலே மயங்கி விட்டேன். அப்பொழுது தான் நான் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. அவரிடம் சொல்ல தான் சென்றேன். அவர் நிலை என்னை அவரிடமிருந்து விலக்கியது.

நான் அவரை பார்த்தது கான்ஸ்டபிளாக. நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்த அன்று குழந்தையை பற்றி பேச நினைத்தேன். அவரது மூன்று வருட உழைப்பிற்கு இன்ஸ்பெக்ராக பிரமோசன் கிடைத்தது.

குழந்தையை பற்றி நான் சொன்னால் அவரை எல்லாரும் மட்டமாக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அதுவும் திருமணமாகாமல் குழந்தை என்றால் அவரை தவறாக பேசி, அவரை அங்கே நிலைத்திருக்க விட மாட்டார்கள். அதனால் அவரிடம் மறைத்தேன். என்னுடைய ஐந்தாம் மாதத்தில் வயிறு வெளியே தெரிந்தது. அவருக்கு தெரிந்து விட்டது. உடனே தாலி வாங்கி வந்து விட்டார். ஆனால் அவருக்காக வேண்டாமென்று நானும் மிருவும் தான் பேசினோம்.

இங்கே அவரும் வருவதாக இருந்தது. ஆனால் ஒரு பெரிய கேஸ் இருந்ததால் கேரளா வரை செல்ல வேண்டி இருந்தது. அவர் “டி. ஐ. ஜி சதாசிவத்திடம்” முடியாது என்று சொல்ல அவர் பதவியை இறக்குவதாக பேசினார்கள். அதனால் தான் அவரை நேரில் பார்த்து இவரை கஷ்டப்பட்டு அனுப்பி இங்கே வந்தேன்.

அப்பாவும் அப்பத்தாவும் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். ஏன்னா மாமா, அப்பா நண்பனாக இருந்தும் உங்களுடைய காதலை மறுத்தவர் அவர் அத்தை. என் குடும்பத்தை பார்க்கவும், சில நாட்கள் அவர்களுடனும், என் பிள்ளைக்கு நம்ம வீரப்ப அய்யனார் அருள் வேண்டும் என்று தான் வந்தேன். நம்ம கோவில் விழா முடியவும் கிளம்பி விடுவேன்.

அப்புறம் அத்தை, எனக்கு, அம்மா, அண்ணாவுக்கு உங்க மேல கோபமே இல்லை. முடிந்தால் அவர்களை மட்டும் பார்த்துக்கோங்க. எனக்கு உங்க குடும்பத்தை பார்த்து தான் அதிகம் பொறாமைப்பட்டிருக்கேன். ஏன் சிம்மா மாமா இருக்கும் இடத்தில் நான் இருக்கக்கூடாதுன்னு ஏங்கி இருந்திருக்கேன்.

“ஏன்னா?” அப்பா எப்பொழுதும் கண்டிப்பு. அப்பத்தா குற்றப்பத்திரிக்கை வாசிப்பாங்க. அம்மா, அண்ணா நன்றாக பார்த்துக் கொண்டாலும் ஏதோ தனியே இருப்பது போல் தான் இருந்தேன். ஆனால் சிம்மா மாமா அப்படி இல்லை. எப்பொழுதும் உங்களுடனும் மாமாவுடன் அவ்வளவு ஜாலியாக பேசுவங்க. அவங்க ப்ரெண்ட்ஸூடன் சுதந்திரமாக பேசும் உரிமையும் இருந்தது.

மாமா, “நான் பேசுறதை கேக்குறேல்ல?” அடுத்த ஜென்மத்துல்ல உங்க குடும்பத்தோட நானும் இருப்பேன் என்று கண்கலங்கி அழுது கொண்டே வீட்டினுள் சென்றாள்.

சிம்மாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.