அத்தியாயம் 10
ஷானு சூர்யா சிவராமன் மற்றும் துல்கர் நால்வரும் புதிதாக முளைத்திருக்கும் எதிரியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த அதே நேரத்தில் இவர்களது புகைப்படங்களை தனது மடிக்கணினியில் இரு கண்கள் பார்த்துக் கொண்டு இருந்தது. அடுத்தடுத்து அவர்களைப்பற்றி தகவல்கள் வந்த வண்ணம் இருக்க.., கடைசியாக வந்த தகவல்.. இவர்களை நம் பாதையில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்று அடைப்புகுறி செய்தியோடு துல்கரின் அலைபேசிக்கு அனுப்பிய அவர்கள் குடும்பத்தினரின் புகைப்படங்களும் வந்தன.
சின்ன முறுவலோடு, “அவர்கள் இதை அவ்வளவு சீக்கிரமாக விட்டுவிட மாட்டார்கள்”, என்று பதில் அளித்து, கூடவே அந்நால்வரையும் தொடர் கண்காணிப்பில் வைக்குமாறு பணித்துவிட்டு, தனது அலுவலகம் கிளம்ப எழும்போது… கணினியில் முக்கியமான குழுவில் இருந்து தகவல் வந்திருப்பதாக செய்தி ஒளிர்ந்தது.
அக்குழுவில் இருந்து எப்போதாவது மட்டுமே செய்திகள் வரும். ஆனால் அதன் தாக்கம் மிக நீண்ட காலத்திற்கு இருக்கும். எனவே, அக்குழுவுக்குச் சென்று தகவலைப் படித்த பின் அதனுடன் இணைப்பாக அனுப்பப்பட்டிருந்த உரலிகளுக்கு(URL லிங்க்) சென்று பார்க்க.. அம்முகம் கோபத்தில் ரத்த நிறம் கொண்டது.
சிறிது நேரம் தீவிர சிந்தனைக்கு சென்று, அன்றைய நாளிதழின் மின் தொகுப்பை தேடி எடுத்து தேவையான விபரங்களை சேகரித்தது. ‘இதற்கு உயிர்பலி தேவைப்படாது’, என்று தனக்குத்தானே சொல்லி, கணினியை அணைத்து விட்டு, வாசலில் தனக்காக காத்து நின்ற சுழல் விளக்கு பொருத்திய வாகனத்தில் ஏறி கொள்ள, அது டெல்லியின் போக்குவரத்தில் சங்கமித்தது.
*****************
ஷானு, சிவராமன் சாரின் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்ததும் முதலில் தனது அலைபேசியை எடுத்து சக்தியின் நம்பரை அழுத்தினாள்.
“ஹலோ அண்ணீ”
“சொல்லு ஷானு..”, மாயா (கணேஷின் அக்கா)
“பரத் வந்துட்டானா?”
“வந்துட்டானே. இப்பத்தான் ஸ்னாக்ஸ் சாப்டுட்டு விளையாடிட்டு இருக்கான். குடுக்கணுமா?”
“இல்லண்ணி, நா வந்து பேசிக்கறேன்”
“ஹே.. இரு இரு உன் குரல் ஒன்னும் சரியில்லையே? என்ன ஏதாவது பிரச்சனையா?”
“ம்ம்.. பெரிசா ஒன்னும்மில்லண்ணி, நேர்ல வந்து சொல்றேன்”
“சரி, கிளம்பிட்டியா?”
“இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்”
“ஓகே”, என்று மாயா சொன்னதும் அழைப்பை துண்டித்தாள். பின் கணேஷுக்கு அழைத்தாள்.
“சொல்லு மதி”
“ஒண்ணுமில்ல சும்மாதான் போன் பண்ணினேன், எப்போ சென்னை ரிட்டர்ன்?”
“இன் எ கப்புள் ஆஃப் டேஸ். ஏன்? ஏதாவது முக்கியமான விஷயமா?”, குரலில் கொஞ்சமாக கவலை தெரிந்தது. ஷானு சாதாரணமாக இப்படி கேட்கும் மனைவி இல்லை, என்பதால் ஏதேனும் சிக்கல் இருக்குமோ என்ற கணேஷ் யோசித்தான்.
“chill பா, ரொம்ப நாள் ஆச்சே ஊர் சுத்தி. அதான் நீங்க எப்போ ஃபிரீ-ன்னு தெரிஞ்சிக்கிட்டு கொல்லி ஹில்ஸ் போலாம்னு ஐடியா”, பேச்சை இலகுவாக்கினாள். கூடவே கணவனின் அக்கறையில் ஷானுவின் படபடப்பு மட்டுப்பட்டு, எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியம் வந்தது.
“ஆஹா.. இப்போவே இப்டியே இந்த ட்ரிப் கேன்சல் பண்ணிட்டு வந்துடட்டுமா?”, வெகு ஆர்வமாக உடனே செய்வதைப்போலவே கேட்டான். அப்படி கணேஷால் ‘தடுக்’-கென எல்லாவற்றையும் விட்டுவிட்டு வர இயலாதென்பது அவனுக்கும் தெரியும் இவளுக்கும் தெரியும் ஆனாலும், வாழக்கையை ரசமாக்க இப்படியான சின்ன சின்ன பொய்கள் தேவைப்படுகின்றனவே?
குறுஞ்சிரிப்போடு, “அட அட அட.. வா ன்னு சொன்னா அப்டியே அடுத்த பிளைட் பிடிச்சு வந்துட்றா மாதிரி.., அட போங்க பாஸ், வேலைய முடிச்சு சீக்கிரமா வந்து சேருங்க. வைக்கிறேன் பை.”
“ஹ ஹ ஹ, பை”, போனை வைக்கும்போது ஷானுவின் அகத்தில் + முகத்தில் ஆயிரம் வோட்ஸ்.
ஷானுவைப்போலவே சூர்யாவும் அவளது வீட்டுக்கு அழைத்து பேசி அவர்கள் எவ்வித ஆபத்துமில்லாமல் இருப்பதாய் உறுதி செய்திருந்தாள். பின் ஷானுவை பார்த்து, “மேம்..?”,
“நோ, இப்போ எதைப்பத்தியும் யோசிக்க வேணாம், நாளைக்கு பாத்துக்கலாம். கிளம்பு போலாம்”, என்றுவிட..
“டன்”, என்ற பிறகு வேறு வார்த்தைகள் இல்லை. அலுவலகம் செல்லும்வரை இருவரும் அவரவர் எண்ணங்களில் முழ்கினர். தங்களது அறையில் நுழையும்போது இங்கும் ஒட்டுக்கேட்கும் கருவிகள் பொறுத்தப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. எனினும் அதை காண்பித்துக் கொள்ளாமல் இயல்பாக பேசி இருவரும் தங்கள் வேலை நேரம் முடிந்ததும் வீடு திரும்பினர்.
இரவு மகனோடு நேரத்தை செலவிட்ட ஷானு, அன்றைய அலைச்சல்கள், மிரட்டல்கள் இவற்றில் மனம் வெகுவாக சோர்ந்திருக்க, இப்போது எதையும் யோசிக்க கூடாது என்று வலுக்கட்டாயமாக முடிவெடுத்து சீக்கிரமாக உறங்கிவிட்டாள்.
காலை கண்விழித்தபோது, மனம் நிர்மலமாக இருந்தது. காலைக்கடன்களை முடிக்கும்போதே நேற்று நடந்தவைகளை அசைபோட்டு அலச ஆரம்பித்தாள்.
‘ம்ம். யாரெல்லாம் இதுக்கு பின்னால இருக்காங்க? இப்படி என்ன பயமுறுத்தினா.. கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணாம அப்டியே விட்டுடுவேனா? நோ நெவர். க்விட்டர்ஸ் ஆல்வேஸ் க்விட். தெ நெவெர் வின். அண்ட் ஐயம் நாட் எ க்விட்டர்.’ என்று தீர்மானித்தவளின் மூக்கு விடைத்து முகம் கடினமானது. பல் துலக்கி முடித்தவள், பளிச் சென குளிர்ந்த நீரை முகத்தில் அடித்துக்கொண்டாள்.
‘சிவா சார் கூடாதுன்னாலும்.. இதெல்லாம் பண்றது யாருன்னு கண்டிபிடிக்காம விடமாட்டேன். நேத்து வரைக்கும் எந்த ஒரு கேஸ்-லயும் பர்சனலா இன்வால்வ் ஆகக்கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். எப்போ என்னை என் குடும்பத்தை வச்சு த்ரெட்டன் பண்ண நினச்சங்களோ.. இனி இது மட்டும்தான் என்னோட டார்கெட்.’
‘என்னை வேவு பாத்தா நா உங்களை கண்டுபிடிக்க முடியாதா? ஹும்..!”, துவாலையால் முகம் துடைக்க.. உஷ்னமாய் மூச்சு வெளிவந்தது. ‘நோ.. கோபப்படாத, போகஸ் பண்ணு, போகஸ் ஆன் தி கேஸ்’, என்று தனக்குத்தானே சொல்லி திட்டம் வகுக்க ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தீவிர சிந்தனைக்கு பின் சில முடிவுகளை எடுத்தாள். கொஞ்சம் உற்சாகமாக உணர்ந்தாள். ‘அட.. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் கூட நல்லா இருக்கே..’, என்று தோன்றியது.
உடற்பயிற்சி முடித்து வெளியே வரும்போது.. காலை சூரியனின் கதிர்கள் தேகத்தில் பட்டு இதமாக ஊடுருவியது.
உறங்கும் மகனிடம் சென்று, “கண்ணா, ஆறு மணி ஆச்சு பாரு, ஸ்கூல் இருக்கு எழுந்துக்கோ”, எழுப்பினாள்.பின் மகனுக்கான காலை நேர வேலைகளில் மூழ்கினாள். சில மணித்துளிகள் கடந்து..
“பரத், ரெடியா?”
“தோ வர்றேன் மா”
“ஓகே. சீக்கிரம் வா ஷூ போட்டு விட்டுடறேன்.”, மகனுக்கு எப்போதும் லேஸ் தளர்த்தி காலனியை அணிவது சிரமம். முடிந்தவரை அவனையே போட்டுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவாள், எப்போதாவது பள்ளிக்கு தாமதாகும் தருணங்களில் அவளே போட்டு விடுவாள்.
நாற்காலியில் பரத் அமர்ந்ததும், “கண்ணா எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்றியா?”
“சொல்லுங்கம்மா”
“நீ போம்போது உன்கிட்ட அம்மா ஒரு கவர் குடுப்பேனாம், நீ சாயங்காலம் ஸ்கூல் விட்டு அத்தை வீட்டுக்கு போவல்ல? அப்போ அதை அத்தை கிட்ட குடுப்பியாம்”
“ப்ச். இவ்ளோதானா?”,
“எஸ் அவ்ளதான்”, என்று சொல்லி விட்டு, ஒரு கவரினை அவனது பையில் திணித்தாள். “நானே உள்ள வச்சிட்டேன், ஜஸ்ட் இதை அத்த கிட்ட குடுத்தா மட்டும் போதும்”
பரத்தை பள்ளிக்கு அழைத்துப்போக ட்ரைவர் வாசலில் காத்திருக்க பையை எடுத்துக்கொண்டவன், “ஓகே மா, பை”, சொல்லி காரில் ஏறிக்கொண்டான்.
அடுத்ததாக ஷானு அவளது அலுவலகத்திற்கு புறப்பட்டாள். ஸ்பை கேமரா மற்றும் ஒட்டுக்கேட்கும் கருவி முதலியவற்றை கண்டுபிடிக்கும் சாதனம் ஒன்றையும், சிறிய குறிப்புத்தாள் புத்தகத்தையும் (scribbling pad) கைப்பையில் எடுத்துக்கொண்டாள்.
அங்கே சூர்யா இன்னும் வந்திருக்கவில்லை. அவள் வந்ததும் எங்கெங்கே என்னென்ன கருவிகள் இருக்கின்றன என்று தேட ஆரம்பித்தாள். இரு இடங்களில் மைக் பொறுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டாள். பின் தனது அலுவலை துவங்கியவள், பொறுமையாக சூர்யாவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பொறுத்தே சூர்யா அலுவலகம் வந்தாள். முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல இருந்தது. ‘என்ன?’ என்று ஷானு பார்வையிலேயே விசாரிக்க.., “காலைல வீட்லர்ந்து போன் பண்ணினாங்க. பேசிட்டே இருக்கும்போது உன்ன பாத்து ரொம்ப நாளாச்சு, ஸ்கைப் வந்து பேசுன்னு சொல்லி தொந்தரவு பண்ணினாங்களா.. சரின்னு நானும் ஸ்கைப் போனேனா? அப்போதான் தெரிஞ்சது.. வீட்ல எனக்கு மாப்ள பாத்திருக்காங்களாம், அவங்களுக்கு காமிக்கறதுக்காகத்தான் இந்த நாடகம்னு..”
“சரி, பொண்ணுன்னு இருந்தா மாப்பிள்ளை பாக்கத்தான செய்வாங்க?, அதுக்கு ஏன் இப்படி இருக்க?” வாய் பேச, கை குறிப்பெழுத ஆரம்பித்தது. “ஆபீஸ்-ல 2 ears. எங்கன்னு கண்டுபிடிச்சிட்டேன்“. (இரண்டு காதுகள் அதாவது மைக்ரோ போன்கள்) சூர்யா ஷானு எழுதும்போதே ஒரு யூகத்திற்கு வந்திருந்தாள். குறிப்பு அவள் பால் நகர்த்தப்பட.. மொத்தமும் புரிந்தது.
“மேம், நா போட்டிருந்தது ஜாக்கிங் ட்ராக் சூட். மார்னிங் ஒர்க் அவுட் முடிச்சு வேர்க்க விறுவிறுக்க இருந்தேன். இப்படியா ஒரு பொண்ணு பாக்கும் படலம் நடக்கும்?”, பேச்சு அதுவாக இருக்க.. “வாவ், அதை ரிமூவ் பண்ணிடலாமா? இல்லன்னா ஜாமர்..? “, எழுதினாள்.
“அதுல உனக்கு ரொம்ப வருத்தம் போல?”.. “நோ தேவையில்லை, அது இருக்கிறா மாதிரியே நாம காட்டிக்க வேண்டாம். இனி இப்படித்தான் ஸ்க்ரிப்லிங் பாட்-ல எழுதி பேசப்போறோம்”,
“மேம், ஒரு பியூட்டிபார்லர் போகல, பெடிக்யூர், மேனுக்கியுர் இல்லன்னா கூட அடஜஸ்ட் பண்ணிக்கலாம், ஆனா, ஒரு பேஷியல் கூட பண்ண விடலாமா.. இப்படி பண்ணிட்டாங்களே… ன்னு ஒரு வருத்தம்” … “சூப்பர் மேம், பட் கேமரா எதுவும்..?”
“பையன் ஓகே சொல்லிட்டானா?, “இல்ல செக் பண்ணிட்டேன்”
“அவன் முகத்தைப் பார்த்தா ஓகே மாதிரி தான் தோணுச்சு…”, “தென் ஓகே. அப்ப நெக்ஸ்ட் மூவ்?”
“அப்போ சீக்கிரமே பத்திரிக்கையை குடுப்பன்னு சொல்லு”.. “அந்த சோனு வீட்டுக்கு போனதுக்கு அப்பறம் தான் நமக்கு ப்ராப்ளம் ஸ்டார்ட் ஆச்சு. சோ, நாம போன இன்வெஸ்டிகேஷன் ரூட் கரெக்ட்”
“மேம், இப்பல்லாம் யார் மேம் பத்திரிக்கைய கொடுக்கறாங்க, வாட்சப்-ல குரூப் மெசேஜ் ன்னு தட்டி விட்டா அதான் இன்விடேஷன், கொரோனா பீரியட்-ல கூட்டம் சேர்க்கிறது ரொம்ப தப்பு மேம்“, “ஆமா மேம், யூ ஆர் ரைட்” கை எழுதியது.
“அப்போ சீக்கிரமா இன்விடேஷம் வரும்..? இந்த உன்னோட க்ரஷ் என்ன ஆனான்?”.. “அதான் அதே ரூட்ல போலாம்னு இருக்கேன்”
“அது க்ரஷ் இல்ல மேம், என்னோட கர்ஸ், எப்போப்பாரு ரோபோ மாதிரி மூஞ்சி வச்சு.. கழுத்தறுக்கறான். கல்யாணமாயிடுச்சா ன்னு கேட்டா.. மிதப்பா ஒரு லுக்.. இல்லையான்னு கேட்டா.. அதுக்கும் ஒரு அண்டார்டிக்கா ஐஸ் பெர்க் மாதிரி பிளைன்-நா ஒரு லுக்.”, சூர்யா கேஸை மறந்து விட்டு.. நிஜமாகவே புலம்பினாள்.
அவள் எதுவும் எழுதாமல் இருப்பதை பார்த்த ஷானு.., பென்சிலைத் தட்டி.. எழுது என்பதுபோல கை காண்பிக்க.., சூர்யா தலையில் தட்டிக்கொண்டாள். அதன் பின் எழுதிக்கொண்டிருந்த முக்கியமாக சம்பாஷணைக்குள் வந்து, “ஆனா இப்போ நாம வெளிப்படையா எதுவும் செய்ய முடியாதே?”, எழுதி கேட்டாள்.
“ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டியதுதானே?”.. “ரைட். நாம எதுவும் செய்ய முடியாது, ஆனா நமக்காக வேற யாராவது செய்ய முடியுமில்ல?”
“ம்ம். பேசணும் மேம், ஆனா எப்படி பேசறதுன்னு தான் தெரில”..”எந்த போலீசையும் நம்ப முடியாது, எந்த புத்துக்குள்ள எந்த பாம்போ?”
“யூ ஹெசிட்டேட்? வெக்கம்.. அப்படி ஏதாவது?”, என்று சிரித்தாள் ஷானு. ஆனால் கை, “அதனாலதான் வெளிய டிடெக்டிவ் ஏஜெண்சி-ட்ட அந்த வேலைய குடுத்திருக்கேன்”, எழுதியது.
சூர்யாவும் சிரித்தபடி, “அப்படியெல்லாம் எதுவுமில்லை. பட் அவனே சொல்றதுக்கு என்ன ன்னு ஒரு கோவம்”, .. “நம்பலாமா? வெளி ஆளுங்க ன்னு வேற சொல்றீங்க? மாட்டிகிட்டாலோ.. டேபிள் க்ராஸ் பண்ணினாலோ நமக்குத்தான் ஆபத்து. முக்கியமா நம்ம ஃபாமிலிக்கு.
“வாட் அவனா? இந்த அவர்.. சுவர்.. வாட் எ மேன்?-ல்லாம் என்னாச்சு?”.. “யெஸ், ரொம்ப நம்பகமானவங்க, சொல்ற வேலைய கச்சிதமா முடிச்சு குடுப்பாங்க, நீ ஒரு வேலை பண்ணு, இந்த விஷயத்த எப்படியாவது சிவா சாருக்கு தெரியப்படுத்து. துல்கரை கூப்பிட்டு நீ உன் பர்சனல் பேசுவியோ இல்லையோ கண்டிப்பா இதை சொல்லிடு. யார் இதுக்கு பின்னால இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும். பட் பி கேர்ஃபுல் ”
“அட போங்க மேம், அதெல்லாம் தூரத்திலேர்ந்து பாக்கற வரைக்கும்தான், கிட்டக்க வந்துட்டா நாம யோசிக்கிற பிம்பம் கலைஞ்சு போய் அவங்க நிஜம் நமக்கு பதிய ஆரம்பிச்சுடும். அதுலயும் துல்கர் இருக்கானே.. ஒரு ரோபோ. அவனை வச்சு என்ன பண்றதுன்னே தெரில”.. “டன்”
“ஆமா, நானும் கவனிச்சிருக்கேன், துல்கர் உணர்வுகளை அவ்வளவு சீக்கிரமா வெளிய காமிக்காத ரகம்தான்” , தேவையான தகவல்களை பரிமாறிக்கொண்டதால் இனி நேரடி பேச்சு.
“மேம் மேம், உங்களோடது லவ் மேரேஜ் தான? உங்க ஆளு எப்படி உங்களை ப்ரபோஸ் பண்ணினாருனு கொஞ்சம் சொல்லுங்களேன், நா ட்ரை பண்ணி பாக்கறேன்.”
“ஹ ஹ ஹ, அத நீ பண்றதுக்கு வாய்ப்பே இல்ல.”
“மேம் சொல்லாமலே நீ அதுக்கு லாயக்கில்லன்னு சொன்னா எப்படி?”
“அப்படியா சரி, விட்ட விடி காலைலே அலாரம் வச்சு எழுந்துக்கோ. சூப்பரா ட்ரெஸ் பண்ணிட்டு நேர துல்கர் தங்கி இருக்கற பொலீஸ் க்வாட்டர்ஸ்-க்கு போ. அவனை பார்த்து, ‘அஞ்சு நிமிஷம் டைம் தர்றேன், நீட்டா குளிச்சுட்டு வாங்க’ன்னு சொல்லு. வந்தான்னா.. அவனை பக்கத்துல இருக்கிற எதாவது கோவிலுக்கு கூட்டிட்டு போ. அங்கே போயி யாரோடையாவது சண்டை போடு. துல்கர் உங்கூட சண்டை போடறவங்கள விலக்கி விட்டு உன்னை திட்டுவான். பதிலுக்கு ‘நீ எப்போவும் என் கூடவே இருக்கியா, சண்டை போடாம இருக்கேன்?-ன்னு கேளு. லவ் வந்துடும்.”
“க்கும்.. விளங்கிடும். ஏற்கனவே நம்ம டிபார்ட்மென்ட்-ல எனக்கும் துல்கருக்கும் கசமுசான்னு கிசுகிசு ஓடுது. இதுல நா அவன் க்வார்ட்டர்ட்ஸ் க்கு போனா, முடிஞ்ச்சு.. போஸ்டர் அடிச்சு போட்டுடுவாங்க. அதையாவது சமாளிக்கலாம்-னு வச்சுக்கோங்க. ஆனா நீங்க சொன்னீங்க பாருங்க அந்த ஐடியா.. ஏற்கனவே நா சைட் அடிக்கறது ரோபோவை. அது காலைல ரெண்டு மணி நேரம் வொர்க் அவுட் பண்ணும். அந்த நேரத்துல போனா, உடம்ப பிட்-டா வச்சிக்கணும்னு துல்கர் கிட்ட இருந்து லெக்ச்சர் தான் கிடைக்கும். அதுவும் எண்ணி நாலு வார்த்த பேசுவான். ரெண்டு நிமிஷம் எக்ஸ்டரா அங்க இருந்தா.. ‘அப்பாலே போ சாத்தானே’ன்னு ஒரு ஸ்டெர்ன் லுக் வரும்.”
“ஹஹஹ, அதான் சொன்னேன், நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்னு”
“மேம். உங்க காலத்து டெக்னிக்-லாம் வேலைக்காகாது. அதனால, குருவே, உங்க டிசைப்பில் தானா யோசிச்சு, எப்படியாவது ப்ரபோஸ் பண்றேன். கரெக்ட் பண்றேன்”
“ஹா ஹா ஹா . வாழ்த்துகள். மெடிக்கல் இன்சூரன்ஸ் பண்ணிருக்கியா? எதுக்கும் ஒண்ணுக்கு ரெண்டு பாலிசியா எடுத்து வச்சிக்கோ”
பல்லைக் கடித்து, “ஆ!!! மேம்..!”, சூர்யா.
000000000000000000000000000000000000000000000000000