உயிரின் நிறைவே…..
(விண்மீன்களின் சதிராட்டம் போட்டிக் கதையிலிருந்த மாலினி-ராகவன் கதை )
டீசர்…
“ம்ம்… ரேவதி….”
“சொல்லுங்க ராகவன் சர்…”
“இல்லை…உங்க ப்ரெண்ட் வரலையா ?”
“ம்ம்ம்….?”, முழித்தாள் ரேவதி.
“அதான் மாலினி மேடம். கேலிக்கோ க்ரூப்.”, எரிச்சல் முகத்தில் தெரியாமல் கேட்டான் ராகவன். ’ வேணும்னே செய்யறா. ரெண்டு வாரமா வரலையே என்னாச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்னு பார்த்தா, கடுப்படிக்கறாளே.’
“என்ன விசேஷம் சர்? மாலினி பத்தி கேக்கறீங்க ?”, பதில் சொல்லாமல் ஆட்டம் காட்டினாள் ரேவதி.
“அவங்க பேப்பர்ஸ்ல கொரி இருக்கு. வந்தாங்கன்னா என்னைப் பார்க்க சொல்லுங்க.”, விருட்டென்று சென்றுவிட்டான்.
இவன் திரும்பிய சில நிமிடங்களில் ரேவதி சீட்டை விட்டு போனுடன் செல்லவும், ‘ம்ம் வருவாள் மதியம்.’, என்று புரிந்து மனது சமன்பட வேலையில் கவனம் செலுத்தினான் ராகவன்.
*************************************************************
“மயிலு…அவ்வளோ அழகா இருக்க. இப்படி ஒருத்தி என் வாழ்க்கையில் வருவான்னு நான் நினைக்கவேயில்லை. “
மாலினியின் முகத்தை இரு கையிலும் ஏந்தி ராகவன் கண்களில் காதல் பொங்க கூற,
“மயிலா ?”
“ம்ம்… எங்கிட்ட ப்ரபோஸ் செய்தியே, அன்னிக்கு கருப்பு பாக்ரவுண்ட்ல, தோகை விரிச்ச மயில் டிசைன்ல சேலை கட்டியிருந்தியே…”
“ஆமா”, அவனுக்கு ஞாபகம் இருந்ததே ஆச்சரியமாய் இருந்தது மாலினிக்கு.
“ஒரு நிமிஷம் கருப்பா இருக்க என் வாழ்க்கையை வண்ணமாக்க வந்த மயில் மாதிரிதான் பட்டுச்சு. இன்னும் கூட அப்படித்தான் இருக்கு.”, கரகரத்து வந்தது ராகவனின் குரல். அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டவள்,
“ரகு…”, பொறுப்புகள் எல்லாம் சீக்கிரமே நல்லபடியா முடிக்கலாம். கவலைப்படாதீங்க. நமக்கான வாழ்க்கை கண்டிப்பா கலர்ஃபுல்லா, நல்லா இருக்கும்.”
*********************************************************
“என்னை மாதிரி வீட்ல அடம் பிடிச்சி காதலிச்சவனை கல்யாணம் செய்துகிட்டு வர பொண்ணுங்களுக்கு ஒரு ப்ரச்சனைன்னா அம்மா வீட்ல சொல்ல முடியாது. நீயா தானே பார்த்துக்கிட்டன்னு குத்தி காட்டுவாங்க. புகுந்த வீட்லயும் சொல்ல முடியாது, என் புள்ளைய மயக்கித்தானே கல்யாணம் செய்துகிட்டன்னு அவங்க பங்குக்கு குத்திக் காட்டுவாங்க. எங்க காதலையும், கட்டிகிட்ட புருஷனையும் நம்பித்தான் வரோம். இதுல புருஷனே, நீ என்னைவிட வசதியானவனா கல்யாணம் செய்திருக்கலாம்னு பேசினா, அடித்தளமே ஆட்டம் கண்டிரும் ரகு…
இப்ப என்ன, நீங்களே பெரிய பணக்காரனா பார்த்து கட்டி வைங்க ரெண்டாம் தாரமா…. என் பொணத்த….”
“மாலினி….”, இரைந்தான் ராகவன்.