Advertisement

அத்தியாயம் – 18

 

அவர்கள் கிளம்பிச் சென்ற பின் சிவா அவர்கள் அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்திருந்தான். காலையிலேயே கொஞ்சம் மூட் அவுட் ஆகிப் போனது அவனுக்கு.

 

‘என்ன மாதிரி மனிதர்கள்’ என்ற எண்ணமும் கோபமும் அவனுக்கு. அப்பா அம்மா முக்கியமில்லை ஆனால் அவர்கள் சேர்த்து வைத்த சொத்து மட்டும் முக்கியமா இவன் ஏன் இப்படி ஆகிப்போனான் என்ற கவலை அவனுக்கு.

 

“அப்போவே கடைக்கு கிளம்பினான், இப்போ உள்ள போய் உட்கார்ந்திருக்கான்ம்மா என்னன்னு போய் பாரும்மா… இப்படி உட்கார மாட்டான்” என்று சொல்லி மருமகளை அறைக்கு அனுப்பி வைத்தார் மாலினி.

 

ரெண்டும் முட்டிக்கொள்ளும் என்று தெரிந்திருந்தால் மருமகளை அவர் அனுப்பியிருக்க மாட்டாரோ!! என்னவோ!!

 

மெதுவாய் அவர்கள் அறைக்கதவை திறந்து உள்ளே வந்தவளின் விழிகளில் சோர்வுடன் கட்டிலில் அமர்ந்திருந்த சிவா தான் தெரிந்தான்.

 

கட்டிலின் அருகே சென்று அவனருகே அமர்ந்தாள். “என்னாச்சு கடைக்கு கிளம்பலியா??”

 

“ஹ்ம்ம் கிளம்பணும்…”

“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?? மாமா பேசினதே நினைச்சுட்டு இருக்கீங்களா??” என்றவளை ஏறிட்டு பார்த்தான்.

 

“எந்த மாமா??”

 

“இல்லை உங்க அண்ணா பேசினது நினைச்சு தானே இப்படி இருக்கீங்க??”

 

“ஹ்ம்ம் ஆமா…”

 

“அதுக்காக எல்லாம் இப்படியாகணுமா என்ன?? உங்களுக்கு எவ்வளவு வேலை இருக்கும் அதை பாருங்க… இதை எல்லாம் தூக்கி போடுங்க…”

 

“சொந்த பந்தங்கள் எல்லாம் எப்பவும் ஓரடி பின்னால தான். உண்மையா இருக்கவங்ககிட்ட நாமும் அப்படி இருக்கலாம்… இல்லையா என்னன்னா என்னன்னு இருக்க வேண்டியது தான்…”

 

“அவன் என்னோட அண்ணன்…” என்னால் அவனை அப்படி விடமுடியாது என்ற எண்ணத்தில் அதை அழுத்திச் சொன்னான்.

 

“யார் இல்லைன்னு சொன்னது… அவர் உறவு வேணும்ன்னு நீங்க நினைக்கிற மாதிரி அவரும் நினைக்கணும் தானே…”

 

“நீங்க இப்படி கவலைப்படுறீங்கன்னு அவர்க்கு தெரியப் போறதுமில்லை, அது புரியப் போறதுமில்லை. விடுங்க நடக்குறதை அது போக்குல விடுங்க…”

 

“உறவுகள் ரொம்பவும் முக்கியம் எல்லாரும் நமக்கு வேணும்…” என்றான் அவன்.

 

“அது போல அவங்களுக்கும் நாம வேணும்ன்னு அவங்க நினைக்கணும் அப்போ தான் உறவுகள் பலப்படும்,,,”

 

“நானும் அண்ணாவும் இது போல நெறைய பார்த்திட்டோம்… அம்மாக்கு உடம்பு சரியில்லாம போனப்போ தான் உறவுகளை முழுசா தெரிஞ்சுக்கிட்டோம்…”

 

“அதுனால எனக்கு எப்பவும் உறவுகள் மேல பெரிசா எதிர்பார்ப்பு இருந்ததில்லை. அவங்க இப்படி தான்னு வாழ பழகிட்டேன்…”

 

கொஞ்சம் இயல்புக்கு வந்திருந்தான். அப்போது தான் நினைவு வந்தவனாய் “உன்கிட்ட எப்பவும் இல்லாத ஒரு விஷயத்தை இப்போ பார்க்குறேன்… அது எப்படி??”

 

“என்ன??”

 

“பொறுமை, நிதானம், இப்படி வந்து என்கிட்ட பேசுறது எல்லாம் தான்…”

 

லேசாய் ஒரு புன்னகை அவள் இதழோரத்தில். “நிஜமாவே நான் நிதானமா இருக்கேனா?? அப்போ இதுக்கு முன்ன அப்படி இல்லையா??”

 

“இல்லைன்னு உனக்கே தெரியும்…”

 

“ஹ்ம்ம் ஒத்துக்கறேன், கொஞ்சம் அவரசப் புத்தி எனக்கு…”

 

“ஆஹான் அது மட்டும் தானா…”

 

“இன்னும் நீங்க என்னெல்லாம் நினைக்கறீங்களோ  எல்லாமே போதுமா…”

 

சட்டென்று அவள் கையில் கிள்ளினான். “நிஜமாவே இது நீ தானா… ரொம்ப ஆச்சரியமா இருக்கு எனக்கு…”

 

“உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல…”

 

“தெரியாது…”

 

“இதென்ன பதில்…”

 

“இதுக்கு பதில் அப்புறம் சொல்றேன்… நீ சொல்லு என்னாச்சு திடிர்னு உன்கிட்ட இவ்வளவு மாற்றம்…”

 

“மாற்றம் என்கிட்ட கொஞ்சம் இருந்திருக்கலாம், நிறைய மாற்றங்கள் உங்களால தான். என்னை இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றீங்க நீங்க…”

 

அவள் அப்படிச் சொன்னதும் அவனுக்கு ஒரு மாதிரியானது. “இம்ப்ரெஸ் பண்றேனா?? நானா?? உன்னையா??”

 

அவள் சொன்னதை சாதாரணம் போல் தான் சொன்னாள். ஆனால் அவனிருந்த மனநிலையில் எதையும் அவனால் இயல்பாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை. “ஆமா நீங்க தான் என்னை இம்ப்ரெஸ் பண்றீங்க??”

 

“என்ன காரணத்துக்காக நான் அப்படி செய்யணும்… எனக்கு புரியலை…” என்றான் கண்கள் சுருக்கி.

 

அவளுக்கு அவன் குரலில் இருந்த வேறுபாடு தெரியவில்லை தெரிந்திருந்தால் அந்த பேச்சை அப்போதே நிறுத்தியிருப்பாளோ!! என்னவோ!! “ஏன்னா நான் உங்க வைப்?? அதுனால கூட இருக்கலாம்”

 

“அதுக்காக நான் ஏன் உன்னை இம்ப்ரெஸ் செய்யணும்…”

 

“என்கிட்ட உங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம்??” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை அவன் கோபத்தின் உச்சிக்கு சென்றிருந்தான்.

 

“சீய்!! வாயை மூடு. இம்ப்ரெஸ் பண்ணுறாங்களாம் இம்ப்ரெஸ் நான் ஏன்டி அதெல்லாம் செய்யணும்…”

 

“என்னைக்கு தான் நீ என்னை புரிஞ்சுக்குவ, நான் இயல்பா நடந்துக்கறது எல்லாம் உன்னை இம்ப்ரெஸ் பண்ணுற மாதிரி தெரியுதா உனக்கு. இத்தனை நாள்ல அது என் குணம்ன்னு உனக்கு புரியலையா”

 

“எல்லாத்தையும் நீயாவே கற்பனை பண்ணிக்குவியா… அன்னைக்கும் அப்படி தான் நீயா ஒண்ணை புரிஞ்சு நீயா என்னை அடிச்சே… அதோட விட்டியா பிரின்சிபால் வரை கொண்டு போனே…”

 

“அதுவும் பத்தாம என்னை சஸ்பென்ட் பண்ணவும் வைச்ச… எல்லாத்துக்கும் மேலா எங்கம்மா கிட்டத்தட்ட ஆறு வருஷமா என்கிட்ட பேசாம இருந்தாங்க அதுக்கும் நீதானேடி காரணம்…”

 

அவன் பேச்சில் துணுக்குற்றவளுக்கு உள்ளே எதுவோ பிசைந்தது. தான் ஒன்று பேசப் போக அது எங்கேயோ சென்றுவிட்டதே என்றிருந்தது அவளுக்கு.

 

அவன் சொன்ன மற்ற விஷயங்கள் அவளுக்கு தெரியும், ஏனெனில் அது அவளால் நேரடியாய் அவனுக்கு நேர்ந்தவை. ஆனால் மாலினி அவனிடம் பேசாமல் இருந்தார் என்ற செய்தி அவளுக்கு புதிது.

 

தன்னால் அவன் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பது அவன் சொன்ன பின்னே தான் அவளுக்கு புரிந்தது.

 

“நீ இவ்வளவு செஞ்சும் நான் உன்னைவிட்டு விலகி தான் போனேன். திருப்பி எதுவும் செய்யலை, செய்ய முடியாம எல்லாம் இல்லை”

 

“எந்த பிரச்சனையும் வேணாம்ன்னு தான் ஒதுங்கி போனேன். திரும்பவும் உன்னை பார்த்தது மாம்ஸ் கவியை பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு தான்”

 

“உங்க வீட்டில இருந்து உனக்காக என்னை கேட்பாங்கன்னு அன்னைக்கு எனக்கு தெரியாது. அப்போ கூட நீ ஏதோ புரியாம தான் பண்ணியிருப்பே, இன்னமும் அதை நினைச்சுட்டு இருக்கக் கூடாதுன்னு தான் அம்மா உன்னை கல்யாணம் பண்ண சொல்லி சொன்ன போது சரின்னு சொன்னேன்…”

 

“அப்போ கூட உன்கிட்ட கேட்டேன் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு… வேணும் வேணாங்கிறதை முடிவெடுக்குற பொறுப்பையும் கொடுத்தேன்”

 

“அன்னைக்கு சரின்னு தானே மண்டையை ஆட்டினே… சரி இனி இது தான் நம்ம வாழ்க்கை அதோட போக்குல போய் வாழ தொடங்குவோம்ன்னு தான் இன்னைக்கு வரைக்கும் இருக்கேன்…”

 

“ஆனா உனக்கு நினைப்பு நான் உன்னை இம்ப்ரெஸ் பண்றேன்னு… அதுவும் சீய் ஒரு அல்ப சுகத்துக்காக தான் நான் உன்னை மயக்குறனா… என்ன பேச்செல்லாம் பேசுறே நீ…”

 

அவள் அவனை இடைமறிக்க முயல “பேசாதேடி இனிமே நீ பேசவே பேசாத… ஒரு மனைவியா நீ எனக்கு வேணும்ன்னு நினைச்சிருந்தா என்னால உன்னை அடைஞ்சிருக்க முடியாதா…”

 

“நான் என்ன அதுக்குன்னு அலைஞ்சிட்டு இருக்கேனா… அன்னை என்னை ஒரு பொறுக்கியா நினைச்சே… அதைக்கூட ஏதோ சின்னப் பொண்ணு புரியாம செஞ்சேன்னு எடுத்துக்கலாம்…”

 

“இன்னைக்கும் என்னைப்பத்தி உன் நினைப்பு மாறலைல… இப்பவும் நான் உனக்கு அதே பொறுக்கியா தெரியறேன்ல…”

 

“ஆமாடி நான் பொறுக்கி தான் அப்படியே வைச்சுக்கோ… நான் நல்லவனா இருக்கறது எல்லாம் உனக்கு புரியாதுல. கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகியும் என்னை உனக்கு தெரியலைல”

 

“நான் உனக்கு கெட்டவனாவே இருந்திட்டு போறேன். இனிமே அந்த நல்லவன் வேஷம் எல்லாம் எதுக்கு” என்றவன் அவள் முகத்தை வேகமாய் பற்றி தன்னருகில் இழுத்தவன் வன்மையாய் அவள் இதழ் சிறை செய்தான்.

 

அவள் எதையும் உணரும் முன்னரே அவனே எல்லாம் பேசி முடித்து அவள் இதழ் மூடி இதோ விலகி எழுந்தும் சென்றுவிட்டான்.

 

அவனின் முதல் முத்தம் இப்படியா இருக்க வேண்டும் என்று எண்ணியவளின் கண்களில் நீர் அரும்பியது. நீர் கோடுகள் இதழில் பட்டு லேசான எரிச்சலை கொடுத்த போது தான் அவள் வலியை உணர்ந்தாள்.

 

எழுந்துச் சென்று கண்ணாடியில் பார்க்க வீங்கி தடுத்திருந்த உதடுகளின் ஓரத்தில் லேசாய் சிவப்பாய் ஒரு கோடு.

 

‘எல்லாம் என்னால் தான்…’ என்ற எண்ணமும் அவளுக்குள் எழுந்தது. ‘இப்படியே எப்படி வெளியில் செல்வது’ என்றும் புரியவில்லை.

 

வெகு நேரமாய் இங்கு அமர்ந்திருப்பதும் சரியில்லை என்ற எண்ணத்தில் உதட்டை அழுந்த மூடியவாறே வெளியில் செல்ல நல்ல வேலையாக அங்கு மாலினி இல்லை.

 

பிரிட்ஜை திறந்து ஐஸ் கியூப் ஒன்றை எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்கு வந்தவள் உதடுகளில் அதை ஒற்றி எடுத்தாள். அரை மணி நேரத்தில் வீக்கம் லேசாய் வற்றியிருக்க வெளியில் வந்தாள்.

 

அவளை கண்ட மாலினியின் முகம் யோசனைக்கு தாவினாலும் ஒன்றும் கேட்கவில்லை அவர். அன்று மதியம் உணவிற்கு வந்தவன் யாரையும் பார்க்காமல் சாப்பிட்டு சென்றுவிட்டான். இரவும் அது போலவே செய்தவன் அறைக்கு வந்த பின்னே தான் ஆசுவானமானான்.

 

அவன் நிம்மதி எல்லாம் மீண்டும் அவளை அந்த அறைக்குள் பார்க்கும் வரை மட்டுமே தொடர்ந்தது. அவள் படுப்பதற்கு அறைக்குள் வர அவளை கண்டதும் முகம் கடுத்தது அவனுக்கு. “நீ கீழே படு…”

“முடியாது…” என்றாள் அவள் பதிலுக்கு.

 

“என்னடி கொழுப்பா உனக்கு??”

 

“முன்ன இருந்துச்சு இப்போ இல்லை…” என்றவள் எதுவும் சொல்லாமல் கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டாள்.

 

“திமிர் பிடிச்சவ… ராட்சசி… என்னை இம்சை பண்றதுக்கே வந்த இம்சை அரசி…” என்றான்.

 

அவன் பேச்சில் அவனை நோக்கி திரும்பியவள் “தேங்க்ஸ்” என்றாள்.

 

“எதுக்கு??”

 

“நான் அரசின்னு சொன்னீங்கள்ள… அப்போ நீங்க தானே அரசன்…” என்றுவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள்.

 

‘நான் என்ன சொன்னா இவ என்ன சொல்றா??’ என்று கடுத்தது அவனுக்கு. பேசாமல் குப்புறப்படுத்துக் கொண்டவன் அவளை திட்டிக்கொண்டே உறங்கி போனான்.

 

மறுநாள் அவள் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவனிடம் அதை கேட்க தயக்கம் வேறு, அவள் மேல் கோபமாய் வேறு இருக்கிறானே… அவனிடம் எப்படிப் பேச என்று அவள் தயங்கிக் கொண்டே இருக்க காலை உணவின் போது மாலினியே ஆரம்பித்தார்.

 

“சிவா இன்னைக்கு பாவையை அவங்க வீட்டில கூட்டிட்டு போய் விட்டுட்டு வரணும்ல… நீ போய் விட்டிட்டு வந்திடு…” என்றார்.

 

அவனோ “வண்டி சொல்றேன்ம்மா நீங்களும் அப்பாவும் போயிட்டு வந்திடுங்க… எனக்கு கடையில கொஞ்சம் வேலையிருக்கு” என்று நாசூக்காய் மறுத்தான். மாலினிக்கு அது இயல்பாய் தெரிந்தாலும் பாவைக்கு தெரியும் தானே அவன் தன்னை மறுக்கிறான் என்று.

 

என்ன தான் நடக்கிறது பார்ப்போ என்ற ரீதியில் தான் அவள் அமர்ந்திருந்தாள். மாலினி அவனுக்கு அன்னையாயிற்றே “நீ எப்போ ப்ரீ ஆவே??” என்றார்.

 

“ஒரு இரண்டு நாளைக்கு வேலை நிறைய இருக்கு. அப்புறம் தான் கொஞ்சம் ப்ரீ ஆவேன். எனக்காக எல்லாம் எதிர்பார்க்க வேணாம் நீங்க போயிட்டு வந்திடுங்க…” என்றான் இப்போதும்.

 

“நீ எப்போ ப்ரீயோ அப்போ நீயே கூட்டிட்டு போ… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து போனா சம்மந்திக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்…”

 

“அன்னைக்கு நீங்க சேர்ந்து வந்ததை பார்த்திட்டு அவ்வளவு சந்தோசம் அவங்களுக்கு…” என்று அவன் மறுக்காத வகையில் சொன்னார் அவர்.

 

“இப்போ நான் என்ன பண்ணணும்மா??”

 

“நீ ப்ரீயா இருக்கும் போது அவளை அவங்க வீட்டில கொண்டு போய் விட்டுட்டு வாடா” என்றார் அவர்.

 

“சரி நானே போறேன்… இன்னைக்கு கூட்டிட்டு போய் விட்டுட்டு வர்றேன்…” என்று எழுந்தான்.

 

“வேலை இருக்குன்னு சொன்னே??”

 

“ஆமா இருக்கு தான்… என்ன செய்ய அது முடியற வரை எல்லாம் காத்திட்டு இருந்தா வேலைக்கு ஆகாது…” என்றவன் அவர்கள் அறைக்குள் நுழைந்தான். செல்லும் முன் “கிளம்பு போகலாம்…” என்று அவளிடம் சொல்லிச் சென்றான்.

 

அவன் சென்றதும் அவள் மாலினியை பார்க்க “அவன் சொன்னதை நான் மறுத்து சொன்னேன்னு வருத்தப்படாதேம்மா…”

 

“எனக்கு புரியுது அத்தை… எங்கம்மா மட்டுமில்லை நீங்களும் நான் அவரோட போனா சந்தோசப்படுவீங்கன்னு புரியுது” என்றுவிட்டு எழுந்து சென்றவளை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

சற்று நேரத்தில் அவள் அறைக்குள் வர அவளைக் கண்டதும் அவன் வெளியேறினான். அவள் உடைமைகள் எல்லாம் எடுத்து அங்கேயே அடுக்கி வைத்தாள் அவள்.

 

அங்கிருந்து எதையும் எடுத்துச் செல்ல விருப்பமில்லை அவளுக்கு. மீண்டும் ஒரு மாதம் கழித்து இது போல் ஒரு வாரம் வந்து செல்ல வேண்டும் என்று எண்ணி அதை அப்படியே விட்டுச் சென்றாள்.

 

சிவாவிடம் மட்டும் பேச வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. உள்ளிருந்தே அவனை அழைத்தாள். “என்னங்க கொஞ்சம் வாங்களேன்…” என்ற அவள் குரலில் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்த போதும் அங்கு அமர்ந்திருந்த அன்னை தந்தைக்காக முகத்தை சாதாரணமாய் வைத்து எழுந்து சென்றிருந்தான்.

 

“என்ன??” என்று கடுப்பாய் அவன் மொழிய அவளோ ஒன்றும் சொல்லாமல் அறைக்கதவை மூடினாள்.

 

அதைக்கண்டு ஒன்றும் புரியாதவன் “இப்போ எதுக்கு கதவை மூடுறே??”

 

“இதுக்கு தான்…” என்றவள் அவனை நெருங்கி வந்து அணைத்துக் கொண்டாள்.

 

சிவா அப்படியே திகைத்து நின்றுவிட்டான். சத்தியமாக அவன் இதை எதிர்பார்க்கவில்லை. அழுவாள் சண்டை போடுவாள் திட்டுவாள் என்று தான் எண்ணியிருந்தான்.

 

அவளாய் வந்து இப்படி அணைப்பாள் என்பதை அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவன் நெஞ்சில் ஈரம் வேறு உணர்ந்தான், ஆனாலும் ஒன்றும் கேட்கவில்லை அவன்.

 

அவளோ அவனை விடுவது போல் தோன்றாததால் அவள் சொன்னதையே திருப்பி சொல்லிக் காட்டினான் அவன். “என்ன என்னை இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றியா??”

 

அவளோ சற்றும் தாமதியாமல் “ஆமா… என் புருஷனுக்கு என்னை பிடிக்கணும்ல… அதுக்கு தான்… இம்ப்ரெஸ் பண்ணுறது ஒண்ணும் தப்பில்லை” என்றாள். ‘இவளை…’ என்று பல்லைக் கடித்தான் அவன்.

 

“இதென்ன புதுசா…”

 

“உங்களுக்கு புதுசா தெரிஞ்சா அப்படியே வைச்சுக்கோங்க… நேத்து நான் ஏதோ பேசப் போய் எப்படியோ அர்த்தமாகிட்டு…”

 

“இப்போ அதைப்பேச நேரமில்லை… ஆனா ஒண்ணு இங்க இருந்த இந்த பத்து நாளும் நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன்…”

 

“மத்த எல்லாரையும் விட அதுக்கு நீங்க தான் முக்கிய காரணம்… எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு… முட்டாள்த்தனமா அன்னைக்கு நான் செஞ்சதை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு”

 

அவள் பேசிக்கொண்டே போக “பாவை…” என்ற மாலினி “உங்கம்மா போன் பண்ணுறாங்கம்மா உன் போன் இங்க இருக்கு…” என்றார் அவர்.

 

“ஒரு பைவ் மினிட்ஸ் அத்தை நான் வந்து பேசறேன்…” என்று அவருக்கு பதில் கொடுத்தவள் இன்னமும் அவனை விட்டு விலகவில்லை.

அவனை நன்றாய் இறுக்கி அணைத்துக் கொண்டவள் “ஐ மிஸ் யூடா, அண்ட் ஐ யம் இன் லவ் வித் யூ… ஐ லவ் யூ சோ மச்…” என்றாள்.

 

சிவாவிற்கு நடப்பது கனவா நிஜமா என்று தானிருந்தது. “இங்க பாரு போதும் இதெல்லாம் நீ கிளம்பு…” என்று சொல்லி அவளை தன்னில் இருந்து பிரித்தான்.

 

அவளோ “இப்போதைக்கு இது போதுங்க…” என்றுவிட்டு அவன் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்து “போகலாம்” என்றிருந்தாள்… சிவாவோ ஆவென்று தான் பார்த்தான் அவளை…

 

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

Advertisement