Advertisement

முகிழ் – 9

 

மதியை நோக்கி வந்தவன் நேராக மதியின் அருகியில் இருக்கும் சிநேகனிடம் சென்று கைகுழுக்க, மதி அப்போது தான் மனதினுள், “ஒஹ் அப்ப அவன் நம்மள பார்க்கவில்லையா?… இல்லையே என்ன பார்த்தமாதி தோனுச்சேஎன்று எண்ணிக் கொண்டே நின்று இருந்தவளை தாண்டி சிநேகனும், ஆதித்யனும் மணமக்களின் அருகில் சென்றனர்.

 

மணமக்களின் அருகில் சென்றதும் சினேகன், மணமகனான சிவாவிடம், “என் பெயர் சினேகன், நான் உங்க மாலதி (மணமகள்) கூட வேலை செய்றேன், எனக்கு ஒரு சந்தேகம் சிவா, உங்க முகத்துல ஏன் இவ்ளோ பூரிப்பு ஆதி சார் பார்த்ததும், எம்.டியே உங்க மேரேஜுக்கு வந்துருக்காருன்னா?” என்று கேள்வியோடு முடித்தான்.

 

அதற்கு சிவா, “அதுமட்டும் இல்ல மிஸ்டர்.சினேகன், நான் லாஸ்ட் வீக் தான் எல்லாருக்கும் இன்விட்டேஷன் குடுத்தேன் ஆபீஸ்ல, அப்போ ஆதி சார், அப்ராட் போயிருந்தார். அதுனால நான் அவர்கிட்ட அழைப்பிதல கொடுக்க முடியல்ல. அவரோட ரூம்ல டேபிள் மீது வைத்துவிட்டு வந்தேன்அவரு இன்னைக்கு காலையில் தான் வந்திருப்பாரு, வந்ததும் அவர் ஆபிஸ்ல வேலை பாக்கிற ஒருத்தர் கல்யாணத்துக்கு அந்த அழைப்பிதல் பார்த்துட்டே வரணும்னா அவருக்கு எந்த அளவு உயர்ந்த மனசு இருக்கணும்அவரு வருவாருன்னு நான் எதிர் பார்க்கவே இல்ல சினேகன், இது தான் காரணம் என் ஆச்சர்யம் கலந்த சந்தோசத்திற்குஎன்று கூறினான் சிவா.  

 

உடனே ஆதித்யன் சிவாவிடம், “சிவா, இதுல நீங்க இவ்ளோ பீல் பண்றதுக்கு எதுவும் இல்ல. நான் எப்பயுமே என் கம்பெனில வொர்க் பண்றவங்கள என்னோட குடும்பமா தான் பாக்குறேன், சொந்த குடும்பத்துள்ள, ஒரு சுப காரியத்துல்ல கலந்துக்க பத்திரிக்கை அழைப்பிதல்னு எதாச்சும் எதிர்ப் பார்போமா என்ன? அதே போல தான் இதுவும் சிவா, டேக் இட் ஈஸி அண்ட் கூல்ஒகே?” என்று அழகாக சிரித்து அவனது பாணியில் தனது இடது புருவத்தை ஏற்றி இறக்கி கேட்டான்.  

 

ஒகே என்று கூறிய சிவாவிடம், ஒரு மலர் கொத்தும் காசோலையும் குடுத்துவிட்டு, தான் கிளம்புவதாக கூறிய ஆதித்யனை, சிவா ஒரு புகைப்படம் எடுக்குமாறு கூறவும், அதே போல் சிவா சிநேகனிடமும்   கூறவும் இருவரும் மணமக்கள் அருகில் நின்றனர்.

 

அப்பொழுதான் மதி இல்லாததை உணர்ந்த சினேகன், அவள் நின்ற இடத்தில் பார்வையை செலுத்தியவன், அவள் தனக்குள் எதோ பேசி குழப்பிக் கொண்டிருப்பதை பார்த்து மணமக்களிடம், “மாலதி, சிவா ஒரு நிமிடம்என்று கூறிவிட்டு மதியை அழைத்தான்.

 

நடப்பிற்கு திரும்பிய மதி மணமக்களும் ஆதித்யனும் தன்னை ஏன் இப்படி பார்கின்றார்கள் என்று புரியாமலே அவர்கள் அருகில் வந்தாள்.

 

சினேகனின் அருகில் மதி நிற்க, மதி சினேகன் மணமக்கள் ஆதித்யன் என்று வரிசையாக நின்றனர். சினேகன் அருகில் நின்றாலும் மதியின் கண்கள் ஆதித்யனை வருட அது அழகிய புகைப்படமானது கேமராவில்.

 

ஆதித்யன் மறுபடியும் அவர்களுக்கு வாழ்த்துக்கூறி அவன் மேடை மீது இருந்து இறங்கும் பொழுது மதியை பற்றி மனதினுள், “எங்க போனாலும் இந்த பொண்ணு ஆப்சென்சே ஆப் மைண்ட்லயே இருக்குறா ஆனால் இவளுக்கு நிச்சயம் திமிர் அதிகம் தான், அன்னைக்கு நான் அவளை காப்பாற்றியதுக்கு ஒரு நன்றிக் கூட சொல்லனும்னு தோனல, அதுமட்டும் இல்லாமல் என்னிடம் அத்தனை அலட்சியமா நடந்துக்கிட்ட முதல் ஆளு இவள் தான்என்று எண்ணிக் கொண்டே இனியனை கண்டவன் அவனை அழைத்து அலுவலகம் சம்மந்தமாக சிலவற்றைக் கூறிவிட்டு இனியனை அனுப்பினான். அங்கிருந்து கார்பார்கிங் செல்ல லிப்ட் நோக்கி நடந்த ஆதித்யன், திருமணவீட்டுக்காரர்கள் உணவு உண்ண வற்புறுத்தி அழைத்தும் அவன் அவர்களிடம் நாகரீகமாக மறுத்துவிட்டு நடந்தான்.  

 

மறுப்பக்கம் மதியோ சினேகனுடன் நின்றுக்கொண்டு தனக்கு தாமதம் ஆகிவிட்டது எனவும் ஆதலால் உணவு உண்ண வரவில்லை என்றும் கூறிக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு சிறுவன் மின்தூக்கியில் செல்லவேண்டுமென அடம்பிடிக்க, கூடவே அவனது நண்பர்கள் பட்டாளமும் சூழ்ந்திருக்க அந்த சிறுவனின் தாய் அவனை அதட்டிக் கொண்டிருந்தாள்.

 

அவன் அடம் அதிகமான காரணத்தால் அவள் தாய் கை ஒங்க, அவன் பெருங்குரலெடுத்த அழுகை வெளிவர, மதி அவர்கள் அருகில் சென்று தன்னை அறிமுக படுத்திக்கொண்டு, அவள் அழைத்து செல்வதாக கூறவும் அந்த சிறுவனின் தாய் சம்மதித்தாள்.

 

அந்த சிறுவனின் தாய் (மாலதியின் அக்கா) சம்மதிக்க மற்றொரு காரணமும் இருந்தது. அது மதியை அவளின் தங்கையின் அலுவலக புகைப்படத்தில் அவள் பார்த்திருப்பது தான். இல்லாவிடில் இக்காலத்தில் மற்றவரை நம்பி குழந்தையை விடுவது கடினமான ஒன்றாயிற்றே.   

 

அந்த சிறுவனின் தாய் மதியிடம், “எனக்கு இங்க கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு அது தான் இவன் கூட போக முடில சரி நீங்க இந்த பசங்கள பார்கிங் ஏரியா விட்டா போதும், கீழ இவனோட அப்பா இருக்காரு, அவருகிட்ட நான் போன் சொல்லிடறேன் மதி, தேங்க்ஸ், அவரு பாத்துபாருஎன்று கூறி நன்றி தெரிவிக்கும் விதம்மாக புன்னைகைத்தாள்.  

 

அது நான்கு நபர்களை மட்டுமே அனுமதிக்கும் அளவுடைய மின்தூக்கி.

 

மின்தூக்கியில் ஆதித்யன் நுழைந்தவுடன், 3 சிறுவர் பட்டாளமும் அதை அடுத்து மதியும் மின்தூக்கியில் நுழைந்தனர்.

 

ஆதி தான் மதியை பார்த்தான். மதி அந்த சிறுவனிடம் பேசிக்கொண்டே நுழைந்தவள், உள்ளே நுழைந்ததும் ஆதிக்கு முதுகு காட்டி நின்றுக்கொண்டு சிறுவர்களிடம் வலவலத்தாள்

 

மதி ஆதி இருப்பதை உணராமல் பேசிகொண்டிருந்தவள் அவனுக்கு வெகு அருகில் நின்றிருந்தாள். 4 நபர்கள் இடத்தில் சிறுவர்களாக இருந்ததால் மதி, ஆதி மற்றும் 3 சிறுவர்கள் அடைத்துக்கொண்டு மின்தூக்கி கீழ் நோக்கி நகர்ந்தது.

 

மதியின் அருகில் இருந்த ஆதிக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு. அவள் அருகில் இத்தனை நெருக்கத்தில் இருப்பது அவனுக்கு ஏதோ ஒரு வகையில் அவனை சலனப்படுத்தியது.

 

அவன் மனதினுள் ஏதோ ஒரு தாக்கம். அந்த தாக்கம் என்னவென்று உணர்வதுக்குள் அடித் தளத்திற்கு வந்துவிட்ட மின்தூக்கியில் இருந்து குழைந்தைகள் வெளில் ஓட அந்த சிறுவன், ஒருவரைஅப்பா….” என்று கூறி அவரின் கால்களை கட்டிபிடித்தான். கடைசியாக வெளில் ஓட எத்தனித்த சிறுவன் மதியின் கொசுவம் பகுதியில் மிதித்துவிட்டு செல்ல அது அறியாமல் மதி தனது புடவைமீதே அடி எடுத்து வைக்க கால் இடறி விழப்போனவளை ஒரு வலிய கரம் அவள் இடையில் கைகுடுத்து தடுத்தது.  

 

இடை பகுதியின் சேலை மடிப்பு களைந்து விட ஆதித்யனின் கை, மதியின் வெற்றிடையில் பதிந்தது.

 

யாரும் வெளியில் செல்லாததால், மின்தூக்கி தானாகவே மூடிவிட்டு மேல்நோக்கி நகர ஆரம்பித்தது ஒரு சில நொடிகளில் நடந்து விட்ட நிகழ்வுகளில் மதி தன்னை பிடித்திருப்பது யார் என்று பார்க்க எண்ணி திரும்ப, ஆதித்யனின் முகத்தை வெகு அருகில் பார்த்தவளுக்கு மூச்சடைத்து.

 

ஆதித்யனின் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டவள் முகத்தில் கலவரம் ஓடக் கண்டு, அவள் கை கொசுவ பகுதியை பிடித்திருப்பதையும் பார்த்து, சட்டென்ன ஆதி லிப்டின் கடைசி தளமான 4வது மாடிக்கு உரிய பொத்தானை அழுத்திவிட்டு இடையில் லிப்ட் எங்கும் நிற்காத வகையில் அதனுடைய மூடும் பொத்தானை (Lift Door Closing Button) இடைவிடாது அழுத்திக்கொண்டிருந்தான்.

 

பொத்தானை அழுத்திக்கொண்டிருந்தவன், அவள் இடையில் பதிந்த தன் கை குறுகுறுக்க ஆதிக்கு தன் மீதே கோவம் ஏற்பட்டது. மதி மீது முன்னிருந்த கோவம், இப்போது அவனுடைய மாற்றத்துக்கும் அவளையே காரணம் காட்டி அதுக்கும் சேர்த்து மதி மீது தன் கோவத்தை இறக்கினான்.

 

ஆதி மதியிடம், “உனக்கு அறிவு இல்ல, உன்ன அலட்சியமா இருக்கணு சொன்னா, அன்னைக்கு அவ்ளோ திமிரா போன…. இன்னைக்கு நடந்ததுக்கும் உன்னோட அலட்சியம் தான் காரணம், உன்னலாம் எப்படி தான் ரிபோர்டரா செலக்ட் பண்ணினாங்களோ

 

இடியட்…. உனக்கு பிரச்சனையா இல்லையானு எனக்கு தெரியாதுபட் எனக்கு ப்ரோப்ளம், என்கூட உன்ன இந்த நிலமையில பார்த்தா என்னோட இமேஜ் என்ன ஆகுறதுஎன்று வார்த்தைகளை துப்பினான்.

 

அன்று அவளை, அவன் ஏளன பார்வை பார்த்ததற்கே எடுத்தெறிந்து பேசியவள் இன்று மௌனம் பூசிக் கொண்டாள். அவள் அலச்சியம் தான் காரணம் என்று அவள் மனமே எடுத்துரைத்தது. அவள் நலுங்கிய உடையுடன் 4வது மாடியில் யாரேனும் இருந்துவிட்டால் தன்னை என்ன நினைப்பார்கள் என்று எண்ணியவள் கண்களில் கண்ணீர் தாரகை மலர ஆரம்பித்தது.

 

அவள் குனிந்த தலை நிமிராது சேலையை பிடித்தபடி படி நின்ற கோலம் ஏனோ ஆதித்யனின் மனதில் பதிந்தது. அவள் கண்களில் தேங்கி நின்ற கண்ணீர், எதிரில் இருந்த ஆதியின் உருவத்தை மங்கலாக காட்ட, அவள் கண்ணின் இமை குடை போல மூடி விரிந்த போது அவள் கண்ணீர் முத்தாக சிதறியது. அந்த நொடி அவள் திமிர் பிடித்தவள் என்ற எண்ணம் தளர்ந்தது அவனுக்கு. அவன் முன் புடவையை சரி செய்து கட்டவும் இயலாமல், என்ன செய்வது என தெரியாமல் அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றாள்.

 

இவை அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் நடக்க, மின்தூக்கி 4வது தளத்திற்கு வந்தடைந்தது.மதியின் மனம் படபடக்க கதவு திறந்து மதியின் கண்களில் பட்டது உபரிகை (மொட்டை மாடி). அதை பார்த்த பின் தான் மதியின் மூச்சு சீரானது. வேகமாக வெளியேறியவள் உபரிகையின் நுழைவாயிலில் இருந்த சுவற்றின் பின்னால் சென்று மறைந்தாள்

 

மதியை இந்த நிலையில் மாடியில் விட்டு போக மனமில்லாமல் வேறு யாரேனும்வந்தால் அவளுக்கு ஏதும் பிரச்சன்னை நேரமோ என எண்ணி அங்கே அவளுக்கு காவலிருக்க முடிவு செய்தான்.

 

வேறு யாரேனும் வந்துவிடுவார்களோ என்று பதறிக் கொண்டே சேலையின் கொசுவம் பகுதியை சரி செய்தவள் அந்த இடம்விட்டு வெளி வர, அங்கே ஆதித்யன் சாலையை நோக்கி வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். நடந்து வரும் அரவம் கேட்கவும் திரும்பி பார்த்தவனை மதியின் பார்வை ஏறிட்டது.

 

அவள் பார்வையே, அவன் இங்கு துணை இருப்பான் என்று அவள் எதிர்ப்பார்கவில்லை என பறைசாற்றியது.

 

தவறு செய்த குழந்தைபோல அவள் கலங்கிய கண்களை கண்டவன் என்ன நினைத்தானோ, அவளை முதலில் மின்தூக்கியில் செல்லுமாறு தனது வலதுக் கையை தூக்கி போ என்பது போல செய்கை செய்தான்.

 

மறுவார்த்தை பேசாமல் சென்று மின்தூக்கியில் நுழைந்தவள் முதல் தளத்தை அடைந்தாள்.

 

ஆனால் அவளுக்கு அவனின் குணம் முரண்பாடாக இருந்தது. தான் அன்று அடுக்கம் பகுதியில் பார்த்ததற்கும் இன்று நடந்தவைக்கும் சமந்தம் படுத்தமுடியாமல் தடுமாறினாள்.

 

கலங்கிய முகத்துடன் வந்த மதியை பார்த்த சினேகன் என்னவென்று கேட்க அவள் அவனிடம் சமாளித்து, வீட்டுக்கு கிளம்புவதாக கூறினாள். அவள் கிளம்ப எத்தனிப்பதை பார்த்த இனியன் அவளிடம் சென்று பேச நினைக்க அதற்குள் அவ்விடம் விட்டு அகன்றிருந்தாள்.

 

அவளை தேடிவிட்டு ஒருவேளை அவள் கீழே சென்று இருப்பாளோ என எண்ணி லிப்டின் அருகில் வந்தான். லிப்ட் திறக்கப்பட்டதும் உள்ளே ஆதித்யன் இருப்பதை பார்த்து, சார் நீங்கள் கிளம்பிவிட்டீர்கள் என நினைத்தேன் என்று கூறினான்.

 

அப்போது தான் ஆதி மேல் தளத்தில் இருந்து வந்துக் கொண்டிருந்தான். இடையில் இனியனை சந்திக்கவும், சமாளிக்கும் விதமாக இனியனிடம், ” எஸ் இனியன், நான் கிளம்பிட்டேன் பட் அந்த அடையார் கிளைன்ட் ஒரு முக்கியாமான நகல கேட்கிறாரு, அதான் உங்க மொபைல்க்கு டையல் செய்தேன் பட் லைன் கிடைக்கல அது தான் உங்கள பார்க்க வந்தேன்என்று சிறுதும் யோசிக்காமல் தடுமாற்றமின்றி கூறி அழகாக சமாளித்தான். காரணம் ஒரு பெண்ணின் பெயருக்கு சிறு அளவு மாசுக் கூட வரக் கூடாது என்பதே.

 

எப்படியும் அதை ஆதித்யன் மறுநாள் இனியனிடம் தான் குடுப்பதாக இருந்தான். அதை இப்பொழுதே குடுப்பதில் தவறில்லை என எண்ணினான் ஆதித்யன்.

 

இது போல ஆதித்யன் பலமுறை இனியனிடம் குடுத்திருந்ததால், இனியனும் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆதியிடம் அந்த கோப்பை வாங்கி கொண்டு சென்றான்.

 

இந்த இடைப்பட்ட நேரத்தில் மதி அவசரத்திற்கு கேப் கிடைக்காமல் போக, ஆட்டோவில் ஏறி பயணமானாள்.

 

கோப்பை குடுத்துவிட்டு ஆதித்யன் தாம்பரத்தில் இருந்து கிளம்பிவன் சற்று நேரத்திலே அவனது தொலைபேசிக்கு ஒரு முக்கிய தொழில் வட்டார அழைப்பு வரவும் காரை ஓரமாக நிறுத்தி காரில் அமர்ந்தபடியே பேசினான்.

 

10 நிமிடங்கள் தொடர்ந்த அந்த அழைப்பு முடியும் தருவாயில், அவனுக்கு தான் குடுத்த கோப்பில் முக்கியமான ஆவணம் இல்லாதது நினைவு வர இனியனுக்கு அழைக்க அது கால் வைடிங் என்றே தொடர்ந்து 2, 3 முறை வர, ஆதித்யன் அழைப்பை துண்டித்தான்..

 

இதுபோல குறைகளை அனுமதிப்பது ஆதித்யனுக்கு அறவே பிடிக்காத ஒன்று. ஆகவே இனியன் சென்ற பாதையில் ஆதி பயணிக்க தொடங்கி இருந்தான்.

 

இங்கு மதி சென்ற ஆட்டோ .எம்.ஆர்யில் (OMR Road) செல்லாமல் .சி.ஆர் (ECR Road) எடுக்கவும், .சி.ஆர் ஆள் நடமாட்டம் குறைவாக இரவில் இருக்கும் சாலை என்பதால் மதி ஆட்டோ ஓட்டுனரிடம், “அண்ணா .எம்.ஆர்யில் போங்கஎன்று கூற அதை கவனிக்காமல் அவன் செல்ல தொடங்கி இருந்தான்.

 

5 நிமிடங்கள் கழித்து அவன் பேசிக்கொண்டிருந்த அழைப்பை துண்டித்துவிட்டு அவன் தொலைப்பேசி கண்ட பொழுது ஆதித்யனின் அழைப்பை பார்த்தவன் தாமதிக்காமல் ஆதிக்கு அழைத்தான்.

 

ஆதி விவரம் கூறாமல் இனியனிடம், “எங்க இருக்கீங்கஇனியன் என்றதும் .சி.ஆர் எடுத்திருப்பதாக இனியன் கூற ஆதித்யன்நான் வந்து கொண்டிருக்கின்றேன் எனக்காக காத்திருங்கள்என்றுக் கூற வண்டியை ஓட்டி வந்த இனியன் ஓரமாக நிறுத்தினான்.

 

இங்கு மதியோ ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லி பயனில்லை ஏதோ தவறாக நடகின்றது என்பதை உணர்ந்தவள் ஆட்டோவிலிருந்து வெளியே குதித்தாள்.

 

ஆதி இனியனும் தொலைபேசி அழைப்பில் இருக்கும்பொழுதே குதித்தவள், எதிரில் இனியனின் கார் தென்பட இனியன் என்று தன்னால் முடிந்தமட்டும் குரல் எழுப்பினாள்.

 

அந்த குரல் இனியனின் செவி தீண்டிய நொடி புயலென விரைந்தான் இனியன். அவள் ஆட்டோவிலிருந்து குதித்ததை எதிர்ப்பார்க்காத ஓட்டுனர் அவள் புறம் ஆட்டோவை திருப்ப எதிர் திசையில் ஓடிவருபவனை பார்த்து வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான்.

 

இனியன் அருகில் வந்ததும் அவள் சற்று தெளிவடைந்து… “இனியன் என்ன கொஞ்சம் வீட்டில்என்று திக்கி திணறி கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே அங்கு வெகு அருகில் கேட்ட ஹாரன் ஒலி கேட்டு திரும்பியவர்களின் அருகினில் ஒரு கார் வந்து நின்றது…….

 

Advertisement