Advertisement

முகிழ் – 5

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் கொண்டவை இந்த கொடைக்கானல், ஆதலால் முருகன் கோயிலான இக்கோயிலை குறிஞ்சி ஆண்டவர் கோவில் என்று வழங்குகிறார்கள்.

 

மதிக்கு முருகன் என்றால் அலாதி பிரியம். முருகனை விட்டு கண் எடுக்காமல் பார்ப்பவள், இன்று ஏனோ முருகனை தரிசித்தாலும் அவள் கண்கள் க்ரிஷ்ணவ் சென்ற திசைக்கே அவள் பார்வையும் சென்று மீண்டு வந்தது.

 

எந்த பக்கம் அவன் செல்கிறானோ அந்த பக்கமே அவள் கருவிழிகளும் அலைபாய்ந்தது.

 

அர்ச்சர்கரிடம் அவனின் நண்பன், “இவன் தொழில்ல தொடங்கி இருக்க முதல் படி வெற்றிகரமா வரணும்னு அர்ச்சன செய்து தாங்க சுவாமி என்று அர்ச்சனை தட்டை அவரிடம் குடுத்துவிட்டு கூறினான்.

 

தனக்காக வேண்டும் நண்பனை பார்த்து ஒரு சிறு சிரிப்பை உதிர்த்தவன், “வெற்றி பெறனும்னா நாம உழைக்கணும் டா அதவிட்டுட்டு சாமிகிட்ட நிண்டா சாமி என்னடா பண்ணுவாரு என்று நண்பனை பார்த்து புன்னைகை புரிந்த க்ரிஷ்ணவ் என்ற ஆதியை அவன் நண்பன் பார்வையில் எரித்தான்.

 

உடனே, “……….ரி சரி கூ…….ல் கூல் அகில். இப்ப என்ன சொல்லிட்டேன், சரி நாம சாமி கும்பிடலாம் என்று சமாளித்த க்ரிஷ்ணவ்ஐ பார்த்து அகில், “அப்பாடா, இப்படி எப்பயோ தான் நம்மள பார்த்து இவன் பயப்படறான். இதே பிக் அப் பண்ணிட்டு போய்டுடா அகில்என்று வாய் விட்டே முனங்கியவனை பார்த்து தூண் மறைவில் இருந்த மதி சிரிப்பை வாயிக்குள் அடக்க பெரும் பாடுப் பட்டாள்.

மதி மனதிற்குள், “இவன் என்ன தொழில் தொடங்கிருப்பான்…? தெரியவில்லையே…. சரி அத நம்ம கண்டுபிடிபோம், நீ ஜர்னலிஸ்ட் ஆக போறவ மதி உன்னால இந்த சின்ன விசயத்த கண்டுபிடிக்க முடியாத என்ன?, அதெலாம் அசால்ட்டா கண்டுபிடிக்கலாம் என்று மனதிற்குள் திட்டமிட்டாள்.

 

அவள் ஏன் அவனை பற்றி அறிய முற்படுகிறாள் என்று அன்று சிந்தித்திருந்தால், இன்று ஏன் அவளுக்கு இந்த மனவேதனை வரப்போகிறது. மனதை கட்டுபடுத்தும் வித்தை அறிந்தால் யாருக்கும் மன வேதனை வரதே.

 

இப்படி தன் நினைவுகளில் உழன்றுக்கொண்டிருந்தவளை, பழைய நினைவுகளில் இருந்து மீட்டது அவளது அறைக்கதவின் சப்தம். . . .

 

ஒரு நிமிடம் அவளுக்கு தான் எங்கே இருகின்றோம் என்றே புரியவில்லை. அடுக்கம் காட்டு பகுதியிலா? அல்லது சென்னையில் அவள் வீட்டில்லா?

 

சுற்றுப்புறம் உணர்ந்து தனது வீடு என்பதை உறுதி படுத்திக்கொண்டு சிவந்திருந்த அவள் விழிகளை அழுந்த துடைத்துவிட்டு, அவளது கைபேசி எடுத்து மணி என்ன என்பதை பார்த்தாள். நேரம் இரவு 9.00 என்று காண்பித்தது.

 

அம்மா இருங்க வரேன் என்று குரலை சரி செய்துவிட்டு குரல் குடுத்துக் கொண்டே சென்றாள் கதவை திறக்க.

 

கதவை திறந்து விட்டு, “என்ன அம்மா நான்தான் தலை வலிக்கிதுன்னு சொன்னேன் இல்லையா? அப்புறமும் ஏன் அம்மா என்று வருத்தம் இழையோடிய குரலில் கூறும் மகளை பார்த்து சிரித்தார் அவள் அன்னை. “உனது வருத்தம் இனி காணாம போக போது என்றத் தாய்யை புரியாமல் பார்த்தாள் மதி.

 

என்ன அம்மா சொல்றிங்க, நீங்க…. என்ன சொல்றிங்கன்னு…. எனக்கு புரியல அம்மா என்று வார்த்தையை தேடி தேடி கோர்த்து பேசியவளை மதியின் அம்மா வினோதமாக பார்த்து, “என்ன மதி ஏன் இத்தனை குழப்பம்? உன்னோட கேமரா கிடைச்சாச்சு மதி குட்டி இனிமேல் உனக்கு சந்தோசம் தானே, கீழ தான் இருக்கு என்று அவள் தலையை வாஞ்சையாக அவர் கோதிய போது தான் மதி சீராக மூச்சு விட்டாள்.

 

இதற்காக தான் அம்மா இப்படி கூறினார்களா?” என்று மனதினுள் நிம்மதி பெரு மூச்சுவிட்டவள், “எப்படி அம்மா கேமரா கிடைத்தது?” என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டே வேக வேகமாக படி இறங்கினாள் மதி.

 

தன் தந்தையுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவனை கண்டு முதலில் திகைத்து, தனது சுய உணர்வுக்கு மீண்டவள், அவனிடம் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு இனியன் நீங்க….. இங்க….. எப்படி என்று தயக்கத்துடன் ஆரம்பித்து உடனடியாக, “வாங்க இனியன் எதுவும் முக்கியமான செய்தியா?” என்று கேள்வியோடு முடித்தாள்.

 

இனியன் உடனே எழுந்து, “மதி நீங்க கேமரா திருட்டு போனதும் ரொம்ப சோர்வா தெருஞ்சீங்க, நான் தானே உங்கள காபி சாப்பிடக் கூப்பிட்டேன். அதுதான் எனக்கு மனசு கேட்கல, நீங்க கிளம்பினதும் நான் மறுபடியும் அந்த பாதையில விசாரிச்சிட்டு போனேன். அப்போ அங்க இருந்த ஒரு அடகு கடையில இந்த கேமரா விற்கும் போது கையும் களவுமா பிடித்தேங்க, சரி உங்ககிட்ட இத தெரிவிக்கலாம்னு உங்க தொலைபேசிக்கு அழைத்தேன், ….னா, நீங்க எடுக்கல. அதான் சரி உங்கள நேரில் சந்தித்து கொடுக்கலாம்னு வந்தேன் சாரி டு டிஸ்டர்ப் யு இன் திஸ் டைம் மதி என்று நீளமாக பேசி முடித்தான் இனியன்.

 

உடனே மதி இனியனிடன் நன்றி செலுத்தும் விதமாக புன்னகை புரிந்தவள், இனியனிடம் தன் தந்தை, தாயை அறிமுக செய்துவிட்டு, அவனையும் ஆதித்ய குரூப் ஆப் கம்பெனி யின் மேனேஜர் என்று முறையாக அறிமுகம் செய்து வைத்தாள்.

 

ஒரு கண்ணியமான பேச்சோடு அவன் அவர்களிடம் இருந்து விடைபெற்றான். . . .

 

அவனை வழியனுப்பும் போது இனியன் பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று மதிக்கு விளங்கவில்லை. ஆதித்யனின் நினைவலைகளில் மீளமுடியாமல் தத்தளித்தவள் அவனை பற்றி மேற்கொண்டு சிந்திக்காமல் தனது அறைக்கு வந்து உறங்க முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டாள்.

 

ஆனால் இனியனின் விழியில் இருந்து மதி மறைந்தாலும், அவன் அகவிழியில் அவள் உருவம் மறையாமல் நிழலாடியது.

 

மறுநாள் கண்விழித்த மதி, ஒரு சோர்வுடன் சுற்றி வந்தாள், அதை கவனித்த அவளின் பெற்றோர்கள் முகத்தில் சிந்தனை ரேகை படிவதை உணர்ந்தவள் வெகுவாக சிரமப்பட்டு தன் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

 

அதன் பிறகு இரண்டுநாட்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மதி பயணித்தாள், அன்று அவள் ஆதியுடன் நேர்காணலுக்கு செல்லவேண்டிய நாள்.

 

அதை எப்படி தவிர்ப்பது என்று தீவரமாக யோசித்தவள் அதே யோசனையுடன் குளித்து தயாராகி அவள் அன்னையின் கட்டயாத்திற்காக கோவிலுக்கு சென்றாள்.

 

கோவிலுக்கு சென்றவள் அது முக்கியமான சாலை, நெரிசல் அதிகமாக இருக்கும், ஆதலால் அருகில் உள்ள தெருவில் தனது வண்டியை நிறுத்தியவள், சாலையில் கவனம் இல்லாது நடந்து சென்றுக் கொண்டிருந்தாள்.

 

அப்பொழுது கோவிலில் இருந்து வெளிவந்த ஆதி கண்களில் மதி பட, “இவளை எங்கயோ சந்தித்து….” என்று யோசிக்கும் போதே அவனுக்கு சட்டென்ன நினைவு வந்தது இளமதி ரிப்போட்டர் என்று.

 

அவன் கவனித்துக் கொண்டு இருக்கும்போதே எதிரில் வரும் லாரியை கவனிக்காது அவள் நடந்துவருவதை உணர்ந்துக் கொண்டவன் இளமதி என்று அழைத்தான், அவன் குரலில் நிதானத்திற்கு வந்தவள் அவனை கண் இமைக்காமல் பார்த்தவள், எதிரில் வரும் வண்டியை கவனிக்கவில்லை.

 

ஒருநொடியில் நிலைமையை உணர்ந்தவன் அவளை சட்டென்று இடையோடைனைத்து அவளை தூக்கி சாலையோரத்தில் விட்டான். அவன் பார்வையில் ஏளனம் இருந்தது. அவனுடைய இடது புருவத்தை ஏற்றி இறக்கி, “நீ எப்பொழுதுமே இப்படித்தானா?” என்ற அவன் குரலில் ஏளனம் தெளிவாக வெளிப்பட்டது.

 

அதற்கு பதில் சொல்லாமல், அவன் கரம் பதிந்த தன் இடை குறு குறுப்பதை உணர்ந்து தன் மீதே மதிக்கு கோவம் துளிர் விட்டது. அவன் எப்படி பட்டவன் என்பதை அறிந்தும் அவள் மனம் அவன் பின்னால் செல்லவும், அன்று கோவிலில் பார்த்த பெண் வேறு இலவச இணைப்பாக நினைவு வரவும் அவள் கண்கள் அவள் கட்டுபாட்டை மீறி கண்ணீர் துளிர்த்தது.

 

கண்களை அவன் அறியாமல் துடைத்துக் கொண்டவள், “ஹெலோ மிஸ்டர் க்ரிஷ்ணவ் நீங்க என்ன காப்பாத்தினதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அதுக்காக என்கிட்டே இப்படி மறுபடியும் பேசவேணாம் என்று கோவத்துடன் செல்பவளை, ஆதி புரியாமல் பார்த்தான். அவள் கண்கள் கலங்கியது போல இருந்ததே என்று யோசிக்க தொடங்கி அதை தவிர்த்து விட்டு தன் கார் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு விரைந்தான்.

 

எல்லாம் இந்த அம்மா பண்ற வேலை, கோவிலுக்கு போ அதை செய் இத செய் னு…. என்று புலம்பியவாறே வண்டியை கிளப்பியவன் இவள் எல்லாம் என்ன பேர் சொல்லி கூப்டறா வரட்டும் இன்று அவள் என் அலுவலகம் தானே வந்தாகணும் என்று மனதில் குறித்துக் கொண்டான்.

 

ஆனால் அவன் மூளையில் சட்டென்று நினைவு வந்தது அவள் அவனை உச்சரித்தது க்ரிஷ்ணவ்”…. ஏதோ நினைத்துக் கொண்டு, “பின் இல்லை அப்படி இருக்க வாய்ப்பில்லை அப்படி இருக்காது என்று வண்டி ஓட்டுவதில் முனைந்தான் ஆதித்யா.

 

இது என்ன? ஏன் இத்தன்னை வருடத்திற்கு பிறகு அவனை ஏன் நான் சந்திக்க வேண்டும் மறுபடியும் என் மனதில் ஏன் சலனம்? இல்லை மனம் அவனை வெறுக்கவே இல்லையோ? அப்படி இருக்க வாய்ப்பில்லை அவனை எனக்கு பிடிக்கவில்லை அது தான் எனக்கு இத்தன்னை மனவேதனை தருகிறது வேறொன்றுமில்லை என்று தனக்கு தானே கூறிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் மதி.

 

உன்னை தேடி தேடி

என் கண்ணின் கண்மணிகள்

நின் பிம்பத்தை தீண்டி தீண்டி

நித்தம் உயிர்பெற்ற நிமிடங்கள் யாவும்

எந்தன் மனதின் தாபமோ?

 

உன்னை தேடாமலே  

நின் பிம்பத்தை பருக

என் கருவிழிக்கு தருணம் வந்தும்

அதை தவிற்க துடிக்கும் என்நிலை

முன் ஜென்ம சாபமோ?

 

தனது காமெராவை எடுத்தவள், இன்று எப்படியும் அவனை சந்திப்பதை தவிர்த்தாக வேண்டும் என்று எண்ணிக் கொண்டே அதை தன் பையிற்குள் வைக்க போனவள் அப்போது தான் கவனித்தாள் காமெராவின் ஒரு பகுதியில் தெறித்து உடைந்திருந்தது. அவளுடையது கேனான் (Canon EOS 7D 18MP Digital SLR) கேமரா. தெறித்திருந்த பகுதி மெமரி கார்டு போடும் பகுதியாகும். உடனே ஆராய்ந்து பார்த்தவள் மெமரி கார்டும் அதில் இல்லாமல் போனதில் அவளுக்கு ஆச்சர்யம் பெரிதாக ஒன்றுமில்லை.

 

காரணம், அது மெமரி கார்டு வைத்து லாக் போடும் பகுதியாகும், அது உடைந்துவிட்டதால், அவளுடைய மெமரி கார்டும் விழுந்திருக்க வாயிப்பு அதிகமே.

 

உடைந்த தனது காமெராவை எடுத்துக் கொண்டு தன் தந்தையிடம் சென்றாள். காமெராவை பற்றி கூறியதுமே அவள் அன்னை அடுப்படியிலிருந்து வெளிப்பட்டவர், “அப்பாவும் மகளும் சேர்ந்து ஏன் தான் இப்படி ஆட்டமா ஆடுகிறிர்களோ, நான் சொல்றத கேட்காமல் அவளுக்கு லட்சத்துக்கு பக்கமா அந்த கேமரா வாங்கி தந்தீங்க இப்பொழுது என்ன ஆச்சு அந்த 90,000 இருந்தா என் பொண்ணுக்கு 4 பவன் நகை வாங்கி இருப்பேன் என்று கரண்டியோடு வந்து நின்றவரை பார்த்து மதியின் தந்தை சிரிக்க தொடங்கினார்.

 

மதிக்கும் சிரிப்பு தொற்றிக் கொள்ள, மதியின் தந்தை அவளிடம், “மதி குட்டி அதில் எதும் முக்கியமானது இருந்ததா அல்லது எதும் முக்கியமான கேஸ் எதும் ஹான்டில் பன்றியாமா என்றுக் கேட்க மதியோ மறுப்பாக, “இல்லை இப்பொழுது அப்படி எதும் பார்கவில்லை அப்பா அதே போல என்கிட்ட எல்லா போட்டோஸ் கும் காப்பி இருக்கு என் சிஸ்டம்ல, எக்ஸ்செப்ட் தி ஒன் விச் ஐ ஹேவ் டுக் எஷ்டர்டே என்று முடித்தாள்.

 

மதி யோசிப்பதை பார்த்து அவள் தந்தை, “நீ சொல்றத வச்சு பார்க்கும் பொழுது அவன் திருடிட்டு போகும்போது கிழ விழுந்தோ அல்லது வேற ஏதோ காரணத்தினால தற்செயலா நடந்துருக்கும் மதி குட்டி சோ நீ கவலை படாம இத சரி பண்ண குடு டா என்று கூறினார்.

 

தந்தை சொல்வது உண்மையே என்று உணர்ந்தவள், உடனடியாக அவள் சிந்தையில் இதை காரணம் கொண்டே நம்ம ஏன் இன்று நேர்காணலை தவிர்க்ககூடாது என்று எண்ணம் தோன்றவும் அவள் மனமோ தீமையிலும் நன்மை இது தான் போல என்று சற்று நிம்மதி அடைந்தது.

 

இதை எதுவும் பொருட்படுத்தாது மதியின் அன்னை, “ஏங்க நான் கேட்டது உங்கள் காதில் விழுந்ததா இல்லையா?” என்று முறைக்கவும், இளமாறன் சட்டென்று மதியழகியிடம் சரணடைந்து, “ஐயோ அப்படி மட்டும் என்னை பார்க்காத ரொம்பவும் மோசமாக இருக்கிறது என்னால் சகிக்க முடியவில்லை என்று நாடக பாணியில் கூறி சிரிக்க அவளின் அன்னை தந்தையின் பேச்சு மெல்ல மெல்ல காற்றில் தேய்ந்துவிட மதி தன் அறைக்கு சென்று தயாராகி அலுவலகம் கிளம்பினாள்.

 

அலுவலகம் சென்ற மதி தன் மேலதிகாரியை சந்தித்து நிலைமையைக் கூற எத்தனிக்க அவரோ, “மிஸ்.மதி நீங்க மிஸ்டர்.ஆதித்யனோடு நேர்காணலுக்கு போக வேண்டாம் என்று கூறி மதியின் வயிற்றில் லிட்டர் லிட்டராக பாலை வார்த்தார். சந்தோசம் அடைந்தாலும் அவள் உள்ளே சிறு ஏமாற்றம் பரவுவதை உனாராமல் இல்லை மதி.

 

அவரது பேட்டிக்கு வேறு ரிபோர்டரை அனுப்பிக் கொள்வதாகவும் கூறினார்.

 

காரணமும் அவரே, திரு சதா சிவமே தொடர்ந்தார்.

(மதியின் மேல் அதிகாரி தலைமை ஆசிரியர் (Chief Editor) திரு.சதா சிவம் கண்ணியமிக்க மனிதர், சமுதாயத்தின் அத்தன்னை அவலங்களையும் தட்டிகேட்க முடியாவிட்டாலும் ஓரளவேனும் அவரால் முடிந்த நன்மையை இந்த பணி மூலம் செய்பவர். அவருக்கு கீழ் உள்ள ஆசிரியர் (Editor) மலைச்சாமி கொஞ்சம் வளைந்துக் குடுப்பவர். ஆதாயம் இல்லாத செய்தியை போட விரும்பமாட்டார். நேற்று இனியன் செய்த நற்செயலை தேவையற்றது என ஒதிக்கி அதற்கு ஓரளவு நம்பும்படியான காரணம் குடுத்தவரும் இவர் தான்)

 

சதா சிவம் மதியின் தந்தை வயதிற்கு உரியவர், வேலை நிமித்தமாய் மிஸ்.மதி என்றழைப்பவர், மற்ற நேரங்களில் மதிமா என்றே அவளை அழைப்பார்.

 

மிஸ்.மதி இப்ப உங்க கிட்ட கொடுக்க போறது ரொம்பவும் ரகிசயம்மா செய்யவேண்டியது. இது நம்ம நிறுவனத்தில கூட இப்போதைக்கு யாருக்கும் தெரியவேண்டாம் என்று கூறி அவர் சொன்ன தகவல்கள், மதிக்கு அதிர்ச்சியே முதலில், அதன் பின் சுதாரித்து ரிபோர்டர் மதியாக மாறி அந்த வேலையை கவனமாக செய்ய வேண்டுமென உறுதிபூண்டாள்.

 

இறுதியாக, “மதிமா, ரொம்பவும் நீ கவனமாக இருக்க வேண்டும் என்று முடித்தார். அந்த கேஸ் மதியை எந்த பாதையில் இழுத்து செல்லவிருகின்றது என்பதை விதி மட்டுமே அறிந்தது.

 

Advertisement