Advertisement

முகிழ்  4

 

அன்றே ஆதித்யனை அடுத்தமுறையும் சந்திக்க நேர்ந்ததில் அடியோடு துவண்டாள் மதி. மேலும் அங்கு இருக்க மனம் இல்லாமல், அந்த பெண் அவனின் மனைவி என்று ஐயமற அறிந்துக்கொள்ளும் துணிவும் இல்லாததாலும் அவள் கோவில் விட்டு உடனடியாக கிளம்பிச் சென்றாள்.

 

என்றும் அவளுக்கு நிம்மதி அளிக்கும் அறுபடை சந்நதி, இன்று ஏனோ மன பாரத்தை அதிகரித்தது.

 

ஓய்ந்து வந்த மதியை கண்டதும், அவள் அன்னை பதறி போய் அவளிடம் விவரம் கேட்க, மதியோ ஆதியை தவிர்த்து கேமரா பற்றி மட்டுமே பதிலுரைத்தாள்.

 

அவள் அன்னை அவள் சோர்வை போக்கும் விதமாக அவளுக்கு சூடான பில்ட்டர் காபி கொடுக்க, அதை பருகியவள் உடனடியாக தனது அறைக்குள் முடங்க எத்தனித்த வேலை, அவளது தந்தை வாஞ்சையாக ஆதியுடன் நடந்த நேர்காணல் பற்றி விசாரிக்கவும் மறுபடியும் உடைந்துபோனாள்.

 

அவன் பேரே அவளுக்கு அவனை நினைவுக்கொள்ள செய்ய போதுமானதாய் இருந்தது. காலையில் இருந்து, எதை மறக்க முயற்சி செய்கிறாளோ அதுவே நினைவு வர இடைவிடா தோல்வியை தழுவினாள் மதி.

அங்கு இனியனோ, மதியுடன் பேச வெகு நேரம் யோசித்து, மதியின் தொலைபேசி எண்னை அவள் அலுவகத்தில் பேசி பெற்றான். அப்பாயிண்ட்மெண்ட்யில் சிறு மாற்றம் என சரியான காரணம் தேடிப் பிடித்து அவள் மேலதிகாரியிடம் இருந்து அவள் நம்பர் பெற்றவன், தாமதிக்காது அவளுக்கு உடனே அழைத்தான்.

 

ஓர் நாளே சந்திதவளை, இப்படி அழைப்பது சரியா, மதி எப்படி புரிந்துக் கொள்வாள், தவறாக எண்ணுவாளோ, அவளுக்கு சந்தேகம் ஏதும் ஏற்படுமோ இப்படி பலவாறு சிந்தித்து இறுதியில் அவளுக்கு அழைப்பது என முடிவெடுத்தான்.

 

ஆனால் மதியோ அவனது அழைப்பை ஏற்கவில்லை. ஆதித்யனின் அலுவலக நம்பரே அவள் அறிந்தது. இனியனின் தனி எண் அவள் அறியாத ஒன்று. புது எண்ஆக இருக்கவும் அவள் அதை ஏற்க வில்லை.

 

எப்போதும் இருக்கும் மதியாக அவள் இருந்திருந்தாள், நிச்சயமாக எடுத்திருப்பாள். ஆனால் இன்று அவளுக்கு தனிமை தேவைப்பட்டதாய் இருந்தது. தந்தையிடம் ஏதோ கடமைக்காக பதில் உரைத்தவள் தனது அறையில் வந்து முடங்கினாள்.

 

வெகுநேரம் ஆகியும் உறக்கம் வந்தபாடில்லை மதிக்கு. “மதி தான் எனக்கு பிடிக்கும்என்ற வார்த்தைகள், ஆதித்யனின் குரலில் ஒலிக்க ஆரம்பிக்க மதி 4 வருடங்கள் பின் நோக்கி சென்றாள்.   

2011 ஜனவரி மாதம், மதுரை, மதி தனது கல்லூரி வாழ்கையின் கடைசி வருடத்தில் இருந்தாள். எப்பொழுதும் போல் குயில் கூவும் சப்தம் கேட்டு கண்விழித்தவள், நேராக பின் வாசலுக்கு சென்று அங்கு இருக்கும் கருவேப்பில்லை மரத்தில் அமர்ந்து கூவும் குயிலை ரசிக்க ஆரம்பித்தாள். மதிக்கு இது ஒரு வழக்கம். முன்பு எல்லாம் அவள் இதுபோல குயில்களை அவள் வீடு அருகில் பார்த்தது இல்லை. சில மாதங்களாக, பூ பூர்த்து, காயாகி, கனியாகி இருக்கும் கருவேப்பில்லை மரத்தில் இருக்கும் பழத்திற்காக குயில் வர தொடங்கியது போலும். மிளகு அளவில் இருக்கும் அந்த பழம், பார்பதற்கும் மிளகு போல கருப்பாக தான் இருக்கும்.

 

மேலும் அது கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குவதை பார்க்கும்பொழுது சிறிய வகை கருப்பு திராட்சை போல தோன்றும். அதன் கறுப்பு நிறம் குயிலின் நிறத்தோடு போட்டி போடும். இதை தினமும் பார்க்கவிட்டால், மதிக்கு அன்று முழுவதும் ஏதோ மனதிற்கு இதம் தரும் எதையோ இழந்தது போல உணர்வு அவளுக்கு தோன்றும் ஆதலால், ஞாயிறு கூட காலையில் கண்விழித்துவிடுவாள்.

 

அவள் வழக்கத்தைவிட மிக உற்சாகமாக கல்லூரி கிளம்பினாள். காரணம் அவளுக்கு ஒரு பெரிய பத்திரிக்கை நிறுவனத்தில் இருந்து இண்டர்ஷிப்  க்கு அனுமதி அளித்திருந்தார்கள். அந்த நிறுவனம் சத்யம் தினசரி (sathyam Daily News Paper). ஆம் மதி 3 ஆம் ஆண்டு பேச்சிலர் ஆப் ஜர்னலிசம் (Bachelor of Journalism) படித்துக் கொண்டு இருந்தாள்.

கோடைக்கானல் என்பதில் இருந்து மருவி கொடைக்கானல்ஆக மாறிய மலைத்தொடரில் 6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அழகிய காடு சார்ந்த கிராம பகுதியேஅடுக்கம்என்பதாகும்.

 

அடுக்கம்  அழகிய சிற்றூர், தெவிட்ட தெவிட்ட கண்களுக்கு விருந்தளிக்கும் பசுமை நிறைந்த மலை சரிவில் உள்ள கிராமம். குளுமையும், இயற்கையின் வளமும் அள்ளித் தெளிக்கப்பட்ட ரம்யமான இடம். அங்கே உள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நிறை குறை, நளிந்து வரும் அவர்கள் கலாசாரம் இதை பற்றி எல்லாம் ஆய்வு நடத்துவதே அவளது இறுதி ஆண்டு ப்ராஜெக்ட்.

 

தன் தோழிகளுடன் சென்றாள் மதி, அவர்கள் பிரிவில் வேறு சில மாணவ மாணவிகளும் கூட தங்கள் ப்ரோஜெக்ட்க்கு ஏற்ப அங்கு வந்து இருந்தார்கள். ஆய்வு செய்த நேரம் போக மீதி நேரங்களில் அவளுடைய கேமரா எடுத்துக்கொண்டு மதி தனியே கிளம்பிவிடுவாள்.

 

புகைப்படம் எடுப்பதில் மதிக்கு அத்தனை ஆர்வம்.

 

அப்படி ஒரு நாள், அவள் சென்ற பொழுது அவள் காதில் ஒலித்த குரலால் ஈர்க்கப்பட்டாள்.

மதி தான் எனக்கு பிடிக்கும்“, என்ற குரலை கேட்டவுடன் தன்னிச்சை செயலாக குரல் வந்த திக்கில் திரும்பியவள் கண்ணில் பட்டது முதுகுக்காட்டி முட்டியிட்டு அமர்ந்திருந்த அந்த குரலுக்கு சொந்தக்காரன். ஏதோ குழந்தையிடம் சமாதானம் கூறிக்கொண்டு இருந்தவனை மதி அவன் பின்னிருந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

 

அவன் குழந்தைக்கு சரி சமமாக அமர்ந்து வாய் அடித்ததை கண்டவள், அவனது குழந்தை போலும் என்று முதலில் எண்ணிக் கொண்டாள். ஆனால் சில நிமிடங்களில் ஒரு பெண்மணி வந்து அவனிடம் தேங்க்ஸ் அண்ணா என்று கூறிவிட்டு அங்கிள்க்கு பாய் சொல்லு வெண்மதி என்று சொல்லும்போது தான் தெரிந்துக் கொண்டாள், அக்குழந்தை அவனுக்கு தெரிந்தவர்கள் குழந்தை என்று.

 

அத்தோடு அவள் அவளுடைய பணி செய்ய கிளம்பி விட்டாள், அவனை பார்க்கும் ஆர்வம் அப்பொழுது அவளுக்குத் தோன்றவில்லை.

 

அதன் பிறகு இரண்டொரு நாட்கள் கழித்து மீண்டும் அதே குரல், “எனக்கு யாரும் ரோல் மாடல் இல்ல, நான்தான் மத்தவங்களுக்கு ரோல் மாடெல்லா இருக்கணும்னு ஆசைப்படறேன்“, மீண்டும் அதே குரல், குரல் வந்த திசையில் கண்களை சுழற்றினாள் மதி.

 

இப்பொழுதும் அவளால் அவனது முகம் பார்க்கமுடியவில்லை. ஏனெனில், அவனை சுற்றி இன்னும் 4 பேர் இருந்தார்கள், அவனுடையே வயதே, அவனது நண்பர்களாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள்.

ஆனால் இந்த முறை அவனை பார்க்கும் ஆசை துளிர் விட்டது. அவனது பேச்சு ஏதோ ஒரு வகையில் அவளை ஈர்த்தது உண்மையே. அவனுடைய தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்று மதிக்கு தோன்றிட்டு.

 

அடுத்து ரொம்பவும் அவளை காக்க வைக்காமல் அவனை சந்திக்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்தது. அந்த வார இறுதியில், அருகில் இருக்கும் கொடைக்கானல் தாவரவியல் பூங்காவிற்கு செல்லலாம் என முடிவெடுத்த மதியும் அவள் தோழிகளும் அங்கே சென்றனர். வார இறுதி ஆனாலும் அவர்கள் சென்றது காலை என்பதால் அங்கே நெரிசல் இல்லாமல், அவள் தேடி வந்த அமைதியான சூழல் இருந்தது.

 

வித விதமான வண்ண மலர்களை தன் கேமரா மூலமாக பதிவு செய்தவள், அவனது குரல் போல கேட்கவும் ஒரு பெரிய மரத்தின் பின் மறைந்து அதை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

அதே குரல் தான், இன்னும் கொஞ்சம் முயன்று அவன் என்ன கூறிகிறான் என்பதை கவனிக்க ஆரம்பித்தாள். அப்போதும் அவன் முதுகுக்காட்டி தான் நின்றுக் கொண்டு இருந்தான். அவன் நண்பன் போலும், அவன் அந்த குரலுக்கு சொந்தக்காரனோடு கெஞ்சிக் கொண்டு இருந்தான், “ஏன்டா ஒரே ஒரு பூ தானே பறிக்கிறேனு சொல்றேன், அந்த பொண்ணுக்கு பூக்கள்னா ரொம்ப இஷ்டம் போல,

 

நான் இத பறிச்சு குடுத்தா அவ சந்தோசப்பட்டு என்கிட்ட பேசுவதான……. ஏன் டா அத புரிந்துகொள்ளாம, பூ பறிக்க கூடாது சொல்லி என் காதலுக்கு குழி வெட்டுற பாவி பாவிஎன்று புலம்பி கொண்டு இருந்தான்.

 

அவன் புலம்புவதை காதில் வாங்காமல் சிரித்தவன், “டே நான் நிஜமா உன் லவ்அ டெவெலப் பண்ண தான் ஹெல்ப் பண்றேன். நீ இப்ப என்ன சொன்ன, அந்த பொண்ணுக்கு பூக்கள் ரொம்ப பிடிக்கும் அப்படினு தான?, அது உண்மை என்றால் அவள் நிச்சயமா பூக்கள பறிக்க விரும்பமாட்டா, அத செடியில வச்சுத் தான் அழகுப் பார்ப்பா. நீ அவ பின்னாடி சுத்துரப்ப நானு கவனிச்சிருகேன், அவளை சந்தித்த இரண்டொரு நாட்கள்ல அவ ஒரு முறைக் கூட பூ வச்சது இல்ல மச்சி, இந்த ஊர் பூவுக்கா பஞ்சம்? அப்புறமும் அவ ஏன் வைக்கல? யோசி மச்சிஎன்று அந்த குரலுக்கு சொந்தக்காரன் கூற நண்பன்டா என்று அடுத்திருதவன் அணைத்துக் கொண்டான்.

 

சரி நீ போய் அவக்கிட்ட உன் லவ் எப்படி சொல்றதுன்னு பாரு, நான் கொஞ்சம் வாக் போய்ட்டு வரேன்என்று கூறிவிட்டு மதி இருந்த பக்கம் திரும்பாமலே அவன் நடையை தொடர்ந்தான்.

 

மதி தான் ஏமாற்றமாக உணர்ந்தாள். சரி அவனை பின்தொடர்ந்து போகலாம் என்று நினைத்தால், அவன் நண்பனோ மதி இருந்த திசை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான்.

 

சிறிது தூரம் நடந்து வந்தவன் (அவனின் நண்பன்), என்ன நினைத்தானோக்ரிஷ்ணவ்என்று அழைத்தான். உடனே அந்த குரலுக்கு சொந்தக்காரன் நடையை நிறுத்தி அவன் திரும்பினான். அந்த காலைக் குளிருக்கு ப்ளாக் ஜெர்கின் அணிந்திருந்தவன் ஒருகையை பேன்ட் பாக்கெட்டுகள் விட்டிருந்தவன், மறுக் கையால் அவன் சிகையை ஸ்டைலாக கோதி அவனது இடது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்கி என்ன என்பதாக பார்த்தான்.

 

அவனின் ஆண்மையில், அவனின் கம்பிரத்தில் மதி பிரமித்தாள். அவள் ஒன்னும் ஆண்களே கண்டிராதவள் அல்ல. ஆயினும் அவனது ஆறடி உயரத்தில், அவனது இடது புருவம் வளைந்து ஏறி இறங்கியதில், ஒரு நிமிடம் அவளை மறந்து அவனை ரசித்தாள். ஆனால் அவளது மனமோச்ச மதி என்ன நீ இப்படி சைட் அடிக்கிறஎன்றது ஆனால் இன்னோரு மனமோ, “ஆல் பார்க்க ஹீரோ மாதி இருக்கான் சோ கொஞ்சமே கொஞ்சம் மட்டும் சைட் அடிச்சே இதுல என்ன தப்புஎன்று வாதிட்டது.

 

இவை அனைத்தையும் மதியின் மனது காற்றை விட வேகமாக எண்ணி முடித்து மீண்டும் அவர்களின் பேச்சில் கவனமானது.

 

அவன் நண்பன் கூறினான், இல்லை கத்தினான் என்றே சொல்ல வேண்டும், “டே மச்சான் நான் உன் தங்கச்சிப் பாத்துட்டு குறுஞ்சி ஆண்டவர் கோவில் வந்திடறேன், நீயும் அங்க வந்திடு டாஎன்று சென்று விட்டான்.

 

மதி வேகமாக மனதில் கணக்கிட்டாள், “இன்னமும் நேரம் இருக்கிறது, அங்கேயும் சென்று தான் பார்க்கலாமேஎன்று நினைத்தவள் மேலும், “இதற்கு பிறகும் அவனை சந்திக்கும் வாயிப்பு தற்செயலாக அமையாது, நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்என்று எண்ணிக் கொண்டு, “அவனை ஏன் நான் சந்திக்க வேண்டும்என்ற கேள்வியை சிரமப்பட்டு தவிர்த்து செயலில் இறங்கினாள்.

 

தன் தோழிகளை வற்புறுத்தி அங்கே சென்றவள் அவனது வருகைக்காக காத்திருந்தாள். சலிப்புற்ற தோழிகள், பக்கத்தில் சென்று விட்டு வருவதாக சொல்லிச் சென்றனர். மதி மட்டும் க்ரிஷ்ணவ் யின் வரவை நோக்கி காத்திருந்தாள்.

 

கோவில் வெளியில் ஏதோ சத்தம் கேட்க எழுந்து சென்றவள், அங்கே ஒரு பொண்ணை 4 பேர்கள் சூழ்ந்துக் கொண்டு கேலி செய்வதைப் பார்த்து அங்கே செல்ல முயன்ற கால்கள் தடைப் பட்டு நின்றது.

 

எதிரில் புயல் வேகத்தில், அவனே வந்து கொண்டு இருந்தான். அவனுடைய நீண்ட கால்களினால் நான்கே எட்டில் அவர்களை அணுகியவன் ஒருத்தனின் சட்டையை கொத்தாக பிடித்து ஒரு அறை விட்டான். அந்த சப்தத்தில், அடி வாங்கியவனின் கூட்டாளிகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகினர்.

 

நன்றி தெரிவித்த அந்த பெண்ணிடம், சிறு தலை அசைப்பு, சிறு புன்னைகை மட்டுமே செய்து, “பார்த்து போமாஎன்று கூறி மதியை கடந்து அவன் கோவிலுக்குள் சென்றான்.

அந்த நொடி க்ரிஷ்ணவ் கடந்து சென்று விட்டான் மதியை, ஆனால் மதியின் மனதோ நாய்க் குட்டி போல அவன் பின்னே சென்றுக் கொண்டு இருந்ததை மதியே அறிய வாய்ப்பில்லை அந்த தருணத்தில்.

 

முதலாம் சந்திப்பில் குழந்தையாக நீ

இரண்டாம் சந்திப்பில் தலைவனாக நீ

மூன்றாம் சந்திப்பில் தோழனாக நீ

நான்காம் சந்திப்பில் வீரனாக நீ

இன்னும் எத்தனை சந்திப்பு காத்திருன்கின்றதோ?

அதில் எந்த சந்திப்பில் நீ என்னை காண்பாயோ?

இல்லை காத்திருப்பவள் முகமறியாமலே மறைவையோ?

                                                          

 

Advertisement