Advertisement

என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா!!!

 

முகிழ்  1

 

இரவு 12.25 என்று கடிகாரம் யாருக்கும் காத்திராமல் தன் பணியை செய்து கொண்டு இருந்தது. மதியழகி மிகவும் படபடப்புடன் காணப்பட்டார். சாந்தமான முகமும் சாந்தியின் உருவான அவர், அவரின் வாழ்நாளில் இன்று தான் மிகவும் படப்படப்புடன் இருந்ததாக அவர் கணவன் இளமாறனுக்கு தோன்றியது.

 

அதற்கு காரணமும் இருக்க தான் செய்தது, அவர்களின் ஒரே செல்ல மகள்இளமதி‘. தங்களின் கரைகாணா காதலில் கலங்கரை விளக்காக பிறந்தவள். அவர்க்களின் காதலின் அடையாள சின்னம், அவர்களின் இருவர் பெயரும் இணைத்தே அவளுக்கு இளமதி என்று வைத்து மகிழ்ந்தார்கள்.

 

தன் மனையாளை தேற்றினாலும் அவருக்கும் உள்ளுர கலக்கமாகவே இருந்தது என்னவோ மறுக்க முடியாத உண்மை. இப்பொது மணி நடு இரவு 1.00, இன்னமும் இளமதி வந்த பாடில்லை.

 

மனையாளுக்கு ஆறுதல் சொன்னாலும், அவரும் முதல் முறையாக தன் மகளின் விருப்ப படி பத்திரிகை நிருபர் ஆக்கியது தவறோ என்று கவலை கொண்டார். இருப்பினும் தன் மகள் சிறு வயதில் அந்த பிரபலமான பத்திரிகை நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்தது அவளின் திறமையை எடுத்துக்காட்டியது. அதை  நினைத்து மனதை தேற்றி கொண்டார், தன் மகளின் சந்தோசத்துக்கு தாம் தடையாக இருக்க கூடாது என்று எண்ணி அவர் தற்காலிக ஆறுதல் தேட முயன்று தோற்று கொண்டு இருந்தார். .

 

அவர்கள் இதய துடிப்பு அவர்களுக்கே கேக்கும் அளவு பதட்டத்துடனும் படபடப்புடனும் இருந்த வேலை கதவு தட தட என்று இடி போல முழங்க ஆரம்பித்தது. கதவு திறந்த நொடி அவர்களின் மகள் வாடிய கொடி போல் உடல் முழுதும் ரத்த காயத்துடன் மயங்கி சரிந்தாள். இளமதி என்ற கதறல் உடன் அழைத்த தாயிற்கு உணர்வு தப்பவில்லை அதற்கு பதில் அவர் அப்போது தான் விழித்துக்கொண்டார். தான் கண்டது வெறும் கனவு மட்டுமே என்று நம்புவதற்கு அவருக்கு சில மணி துளிகள் தேவை பட்டதாய் இருந்தது.

 

மதியழகி யின் அலறல் கேட்டு கண்விழித்து வந்த இளமாறனும், இளமதியும், மதியழகியின் அருகில் அமர்ந்து அவருக்கு தண்ணீர் குடுத்து அவரை தேற்ற முயன்றார்கள். இளமைதியோ அவரிடம் காரணம் கேட்கவில்லை, காரணம் அவள் அறிந்தது தானே, தன்னை பணியை விட சொல்லி தன் அன்னை வற்புறுத்துவார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

 

அவளோ தன் மகளிடம் கெஞ்சும் பார்வை ஒன்றை வீசினால், ஆனால் சின்னவளோ இதற்கு எல்லாம் நான் சளைத்தவள் அல்ல என்ற தோரணையில், “அம்மா எதுக்கும் பயப்படாத எனக்கு ஒன்னும் ஆகாது, நான் கண்டிப்பா என்ன பார்த்துப்பேன், எந்த வேலையில் தான் ரிஸ்க் இல்ல, நீ வீனா டென்ஷன் ஆகாம தூங்கு என்று கூறி விட்டு அவள் சென்று விட்டாள்.

 

ஆனால் அவள் அன்னைக்கு தான் தூக்கம் தொலைந்தது.கணவன் மீது ஆற்றமையோடு ஒரு பார்வை பார்த்தார்அவரும் அனைத்தும் சரி ஆகும் என்று கண்களால் ஆறுதல் சொன்னார்

 

அன்று காலை அழகாக விடிந்ததாக மதி க்கு தோன்றியது, அவள் அன்னையிடம் காபி கேட்டபடியே தந்தையின் தோளில் சலுகையாக சாய்ந்து சிரித்து விளையாடி கொண்டு இருந்தாள்.

 

அம்மா காபி கேட்ட நீ என்ன காப்பி தோட்டம் போட்டு பயிர் செய்ற அளவு டைம் எடுக்குற எப்படி இளா இந்த அழகிய லவ் பண்ணி கல்யாணம் பண்ணினியோஎன்று வம்பு வளர்த்தாள் மதி. அவள் தந்தை சிரித்து கொண்டே, “என்ன கண்ணு பண்றது, காதலிக்கும் போது கண்ணு இல்ல இப்ப பேசுற உரிமையும் இல்ல, அப்பா பாவம் ல ட குட்டிமா என்று அவர் பங்குங்கு அவரும் அவர் மனைவியின் காலை வாரினார்.

 

இவர்களின் பேச்சை கேட்ட அன்னை, முன்னிரவு கண்ட கனவை மறந்து அவர்களோடு வம்புக்கு இறங்கினாள். அங்கே அழகான சந்தோஷமான சூழல் உருவாகியது. வேகமாக கிளம்பி அன்னையிடம், “அம்மா நான் இன்னைக்கு சீக்கரம் போகனும் ரொம்ப முக்கியமான பேட்டி இருக்கு ஆதித்யன் க்ரூப்ஸ் ஆப் கம்பெனி ஓட எம்டி கூட மா என்றாள், இதை கேட்டு கொண்டு இருந்த தந்தை, “மிஸ்டர் ஆதித்யன் கூட பேட்டியா? வெறி குட் குட்டிமா, ரொம்ப சின்ன வயசுல அவரு சாதிச்சது அதிகம், அங்க போய் உன் வாலு தனத்த காட்டாதடா என்று தன்னுடைய செல்ல மகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

 

இடைவரை நீண்ட கூந்தலை ஒரு கிளிப்பில் அடகியவள், ஆலிவ் கிரீன் சல்வார் உடுத்தி அன்றைய பணிக்கு தயாரானாள். தன்னுடைய ஸ்கூட்டி பெப் யை ஸ்டார்ட் செய்தவள், “என்னடா நம்ம அப்பா ஏதோ 3வது மனுசன அவ்ளோ உயர்வா பேசுறாரு அப்படி என்ன அவன் பெரிய ஆளா என்று உள்ளுர நினைத்தபடி சென்று கொண்டு இருந்தாள். அவளுக்கும் தெரியும் தான், அவன் வட்டாரத்தில் அவன் சிங்கத்துக்கு இணை ஆனவன் என்று இருந்தும் அவளுக்கு அவள் தந்தை பாராட்டியதை ஏற்று கொள்ள தான் ஏனோ மனம்வரவில்லை, இதுவும் ஒரு வகையான குட்டி பொறாமை, அவள் தந்தை யின் ஒரே செல்ல பெண், தந்தை மற்றவனை புகழ்ந்ததை அவள் ஏற்க, மனம் வரவில்லை..

 

ரூபி அப்பார்ட்மெண்ட்: ஆகாய நீலவண்ண ஷர்ட், ப்ளாக் பான்ட் என்று நேர்த்தியான உடை அணிந்து ஒரு கையில் லேப்பும் மறுகையால் தன் தலை முடியை கோதியவாறு மாடி படிகளில் இறங்கி கொண்டு இருந்தான் இனியன். மடி கணினியில் அன்றைய பணிக்கு தேவையான அனைத்தும் சரி செய்து எழுந்த அவன் தோற்றம் பெண்களை மறுபடியும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் தோற்றம் தான். 5.8 உயரமும் அதற்கு ஏற்ற உடற்கட்டும் அவன் லாப் பாக் உடன் தன்னுடைய வோல்க்ச்வகோன் (Volkswagon) வெண்டோ ப்ளாக் கார்-யில் பயணம் ஆனான்.

 

இனியன், மதி இருவரும் எதிர் எதிர் திசையில் பயணித்துக்கொண்டு இருந்தார்கள். இருவரும் போகவேண்டிய இடமோ ஒன்று தான் என்பதை அறியாமல்.

 

இனியன், பெயருக்கு ஏற்றதுபோல் மிகவும் இனிமையானவன். ஆதித்யன் க்ரூப்ஸ் ஆப் கம்பெனியில், மேனேஜர் ஆக பணி புரிபவன். அன்று நடக்க வேண்டிய வேலைகளை பற்றியே சிந்தித்து கொண்டு, இன்று தனது எம்டி க்கு உண்டான நேர்காணலுக்கும் தக்க ஏற்பாடு செய்யவேண்டுமென குறித்துக்கொண்டு பயணித்துக்கொண்டு இருந்தான். அதே போல் மதியும் அன்றைய நேர்காணல் பற்றிய யோசனை உடன் அந்த முக்கிய பிரதான சாலையை கடக்கும் பொழுது அந்த விபத்து நடந்தது.

 

Advertisement