Advertisement

முகிழ் –  3

 

மதி, ஆதித்யனின் நேர்காணலுக்கு சென்ற நிமிடம் முதல், இங்கு இனியனோ அவன் கண்கள் கணினிய கவனித்தாலும் அவன் எண்ணமோ மதியை சுற்றியே சுழன்று கொண்டு இருந்தது. மதிக்கு யாரை மறக்க வேண்டும் என்று நினைத்தாளோ, அவனை மறுபடியும் சந்திக்க நேர்ந்த விதியை நொந்துக் கொள்ளமட்டும் தான் முடிந்தது. ஆதித்யன் ஆள் வரும் அரவம் உணர்ந்து கணினியை விட்டு நிமிர்ந்து பார்க்க அங்கே சிலையென நின்ற மதிதான் கண்ணில் பட்டாள்.

 

ஆதித்யன் மனதினுள், “இடியட் இவள் எல்லாம் எப்படி தான் ஜர்னலிஸ்ட் ஆனாளோ, உள்ளே நுழைந்தவுடன் விஷ் இல்லை, சுறு சுறுப்பும் இல்லை, தன்னை அறிமுக படுத்திக்கொள்ளவும் இல்லை அப்படியே சிலைபோல நின்று கொண்டு என் நேரத்தையும் வீணாக செலவிடுறாஎன்று எண்ணியவன் அவன் தொண்டையை செருமி, “எஸ் டெல் மீஎன்று கூறினான் இல்லை கர்ஜித்தான் என்று சொல்வதே சரியாக பொருந்தும். அவனின் குரலில் இருந்தே அவன் பொறுமை பறந்துகொண்டு இருப்பதை உணர்ந்தவள், தன்னை வேகமாக அவனிடம் அறிமுக படுத்திக்கொண்டாள்.

 

ஹெலோ சார், யம் ரிபோர்ட்டர் இளமதி ஃப்ரம் சத்யம் டெய்லி நியூஸ் பேப்பர். உங்ககிட்ட ஒரு சில கேள்விகள் அதுக்கு அப்புறம் உங்களோட போடோஸ் கேன் ஹேவ் யுவர் 30 மினிட்ஸ்என்று சகஜமாகவும், சரளமாகவும் தனது ஏக்கத்தையும், தனது தடுமாற்றத்தையும் மறைத்து அவனிடம் கேட்டு விட்டு ஒரு சிறு புன்னைகயுடன் நின்றவளை கூறுபோட்டு விடும் பார்வையுடன் அவளை அளந்தான். தனது தடுமாற்றத்தை தன் கண்கள் பிரதிபலித்து விடுமோ என்று அஞ்சியவளாக அவள் தன் இமைகளை எதார்த்தமாக தாழ்த்திக்கொண்டாள்.

 

அனைவரையும் ஒரு பார்வையில் அலசிவிடும் ஆதித்யனால் அவளை புரிந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுது தான் முதல் முறையாக அவளை சந்திக்கிறான். ஆனால் ஏனோ அவள் கண்ணில் அன்னியத்தன்மை இல்லை. மாறாக ஒரு இனம் புரியாத உறவும், ஒரு ஏக்கமும் இருந்ததை அவன் கண்டுகொண்டான்.

 

மேலும் அவனை யோசிக்கவிடாமல், அவனது கைபேசி அழைத்தது. அழைப்பை ஏற்றவனின் முகமோ பல உணர்சிகளை பிரதிபலித்தது. உடனே இண்டர்காம்யில் இனியனை அழைத்து, தனக்கு முக்கியமான வேலை இருப்பதாகவும், மதியை காண்பித்து, “டேக் கேர் ஆப் ஹெர் இண்டெர்வியூ அபௌட் ஔர் கன்சர்ன்எனக் கூறிவிட்டு அவளிடம், “எக்ஸ்கியூஸ் மீஎன்று கூறி செல்பவனை பார்வையால் மட்டுமே தொடர முடிந்தது அவளால்.

 

மதி தனது மனதை சமன்செய்து இனியனின் உதவிக் கொண்டு அவர்களது நிறுவனத்தை பற்றியும் அதன் வளர்சிக்கான காரணம், எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் இம்போர்ட்ஸ் பற்றி என சில கேள்விகளை கேட்டு விட்டு அந்த நிறுவனத்தின் முக்கியாமான ஒரு சில புகைபடங்களை எடுத்துக்கொண்டு கிளம்ப எத்தனித்தாள்.

 

ஆனால் இனியனுக்கோ, மதியுடன் பேச வேண்டும் என்று எண்ணம், அவள் செல்வதை தடுப்பதற்காக, அவளிடம் அவன் பேச்சுக் கொடுக்க எண்ணி அவளை ஒரு காபி சாப்பிட அழைத்தான். அவர்களது காபிடேரியாவில் அல்லாமல், வெளியில் இருக்கும் ஒரு காபி ஷாபிற்கு.  

 

அவளுக்கு இதில் தவறு இருப்பதாகவும் தோணவில்லை. அவள் செய்யும் வேலை நிமித்தமாக அவள் இதுபோல இடங்களுக்கு சென்று அங்கயே நேர்காணலுக்கு தயார் ஆவதும் உண்டு என்பதால் அவள் இனியனோடு அருகில் இருக்கும் கடைக்கு சென்றாள்.

 

அவள் இருந்த மனநிலை சிறுது நேரத்திலே மாறியது. இனியன் மிகவும் கலகலப்பாகவும், மென்மையாகவும் பேசினான். கம்பெனி பற்றி மட்டும் அல்லாது அவனை பற்றியும் கூறினான்.

 

இன்று தான் அவனை சந்தித்தாள் அவள் என்பதை மறந்து அவன் மதியின் மனதில் நல்ல மனிதன் என்ற உயரத்திற்கு அவன் உயர்ந்தான். இனியனுக்கு, தாய் தந்தை யாரும் இல்ல. வீட்டிற்கு சென்றால் அவன் சாப்பிட்டானா? என்று கேட்க கூட அவனுக்கு யாரும் இல்லை. அதற்காக அவன் இதை அனைத்தையும் அழுது வடிந்துக்கொண்டும் கூற வில்லை. விளையாட்டுப் போலவே சொல்லி முடித்தான்.

 

சிறிது யோசித்து விட்டு இனியன் தொடர்ந்தான். “வேறஇந்த கம்பெனி சேர்ந்தது துணை மேலாளராக, இப்போ மேலாளர் ஆகியிருக்கேன்என்று இனியன் கூற, “இவ்ளோ சீக்கரம் பதவி உயர்வு அப்படினா நீங்க ஆதி சார் க்கு நண்பர் இல்ல நிஜமாகவே வேலையில கெட்டியா இருக்கனும், நீங்க எப்படி?’’ என குறும்பாக சிரித்தாள் மதி. உடனே இனியன், “அய்யோ இல்லைங்க மதி, ஆதி சார்க்கு தொழில்ல என் மேல நெறைய நம்பிக்கை. அத தவிர பெர்சனெல்லா ஏதும் இல்ல. அவரு எப்ப என்ன எதிர்ப்பாற்கிராரோ அதுக்கு முன்னாடி நான் அத செய்து முடிச்சிருவேன். அதுனால தான். ஜஸ்ட் உங்கட்ட சொல்றேன் நீங்க கேட்டதுனால, சத்தியமா தற்பெருமை இல்லைங்கஎன்று கூறி நகைத்தான்.

 

என்ன மதி நான் என்னை பற்றியே சொல்லிக்கொண்டு இருக்கிறேன் உங்களை பற்றியும் கூறுங்களேன் என்றதுக்கு மதியோஎன்னை பற்றி சொல்ற அளவுக்கு ஒன்னும் பெருசா இல்லைங்க, அப்பா அம்மா  க்கு ஒரே செல்ல மகள், சொந்த ஊரு மதுரை, இப்போ வேலை நிமித்தமாக டிரான்ச்பர் ஆகி குடும்பத்தோட வந்து செட்டில் ஆகியாச்சு சென்னையில, எனக்கு என்னோட வொர்க் வெறும் கார்ரியர் மட்டும் இல்லை அத நான் லவ் பண்றேன், ஆனா நிறைய பேர் அப்படி இல்ல. இந்த பத்திரிகை வெறும் தொழிலா மட்டுமே பாக்குறாங்க. காலையில நடந்த விபத்தும் அதுக்கு நீங்க சக மனிதரா உதவி செஞ்சதும் பேப்பர் போடணும்  னு எனக்கு ஆசை தான், ஆனா எங்க எடிட்டர் அதுக்கு வேற ரீசன் சொல்றாரு. சோ அந்த நியூஸ் இப்ப போடலன்னு முடிவு ஆகிருச்சு. அதுல எனக்கு கொஞ்சம் வருத்தம்ங்க, இந்த மாதி சின்ன சின்ன ஏமாற்றங்கலோடு வாழபழகிகிட்ட ஒரு சரா சரி பொண்ணு. பட் கண்டிப்பா ஒரு நாள் எனக்கு பிடிச்சமாதி உண்மைய மட்டும் பேப்பர்ல எழுதுவேங்க அப்ப நான் ஒரு நல்ல நிலைமையில இருப்பேன்என்று கூறி சிரித்தவளை இமை விளக்காமல் பார்த்தான் இனியன்.

 

அவர்கள் அமர்ந்து காபி அருதிக்கொண்டு இருந்த இடம் கடைக்கு வெளியில் பார்த்துக்கொண்டே சாப்பிட வசதியாக பூங்கா போல அமைக்க பட்டு இருந்த ஒரு ரம்யமான இடம். அதை ஒட்டி உள்ள பிளாட்பார்மில் சிறுவர் சிறுமியர், வேலைக்கு செல்பவர்கள், நடைபாதையில் செல்பவர்கள் என அனவைரும் சென்றுக்கொண்டும் போய்க்கொண்டும் இருந்தனர். திடீர் என்று மதியும் இனியனும் எதிர்பாரா விதமாக மதியின் கேமராவை ஒருவன் தூக்கி கொண்டு ஓட ஆரம்பித்தான்.

 

இதை முதலில் எதிர்பார்க்காத மதி பின்பு உடனடியாக சுதாரித்து அவனை பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்தாள். இனியனும் அவசரமாக டேபிள் மீது இரு நூறு ரூபாய் நோட்டுக்களை வைத்துவிட்டு மதியை தொடர்ந்து ஓடினான்.

 

அவள் துரிதமாக செயல்பட்டும் மதியால் அவனை பிடிக்க முடியவில்லை. பின்னோடு வந்த இனியன் தான் பின்பு மதிக்கு ஆறுதல் கூறி அவளை அனுப்பிவைத்தான்.

 

இன்று ஒரே நாளில் காலையில் சந்தித்த விபத்து, எதிர்பாராத, பார்க்க கூடாது என்று நினைத்த ஆதித்யனின் சந்திப்பு, அவனை சந்தித்தும் அவனிடம் பேட்டி காண முடியாமல் போன ஏமாற்றம் இதற்கு மேலாக தனது நெருங்கிய தோழி போலான அவளது கேமராவை பறிக்குடுத்தது என அவள் அந்த சிந்தனையில் உழன்றுக் கொண்டே மதி தன் மேலதிகாரியை சந்தித்து விவரம் கூறினாள். ஆதித்யன் க்ரூப்ஸ் ஆப் கம்பெனியில் இன்னும் இரு தினங்களிக்கு பிறகு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருப்பதாகவும் கூறி அவரிடமிருந்து விடைப்பெற்றாள்.

 

அவள் தொலைத்தது, அவளது சொந்த கேமரா என்பதால் அவளது பத்திரிக்கை நிறுவனமும் அதைபற்றி ஏதும் கூற வில்லை. ஆனால் மதிக்கு தான் அவளது வலதுகையே இல்லாதது போல உணர்ந்தாள்.

 

அவளது சக ஊழியர்கள் மட்டும் அவளிடம் காமெரா திருட்டு பத்தி போலீஸ் கம்ப்ளைன்ட் செய்யும்படி அறிவுறுத்தினார்கள். மனக்கலக்கத்தில் இருந்த அவளுக்கு அதை செயல் படுத்த தற்போது முடியாது என்று எண்ணி அவர்களிடம் மறுநாள் அதை செய்வதாக கூறியவள் சோர்ந்து அமர்ந்தாள்.

 

அதன் பின் மதிக்கு வேலையில் கவனம் செல்லவில்லை. ஆதி, ஆதி ஆதித்யனை சுற்றியே உழன்றுக் கொண்டு இருந்தது. இப்படியே இருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தவள் அலுவலகம் விட்டுக் கிளம்பினாள். .சி.ஆர் யில் இருந்து கிளம்பிய மதி தனது வீடு இருக்கும் அடையார் செல்லாமல், அப்படியே பெசன்ட் நகர் க்கு சென்று கனத்த மனதுடன் கடற்கரை மணலில் அமர்ந்து விட்டாள்.

 

அவளது கால்கள் கடல் மணலில் நடந்தாலும் அவள் என்னமோ கொடைக்கானலை சுற்றி வலம் வந்துக் கொண்டு இருந்தது.

 

கால் போன போக்கில் நடந்து வந்தவள் எதிரில் தென்பட்டது அறுபடை முருகன் சந்நதி. அவளையும் அறியாமல், கோவிலிற்குள் சென்று மனமுருகி 6 முருகனையும் ஒரே இடத்தில் தரிசித்தாள்.

 

பழனி மலை முருகன் சந்நதியில், அவளைக் கட்டிபோடும் குரல், அவள் மனம் நிலை இல்லாமல் தவிப்பதற்கு காரணமானவனின் குரல் கேட்க அந்த திசை நோகியவள், 55 வயது மதிக்க தக்க ஒரு பெண்மணியுடன் அவன் ஆதித்யனே வந்துகொண்டு இருந்தான். புது மஞ்சள் கயிறு அணிந்து அழகிய பின்க் டிசைனர் சாரி அணிந்து அழகிய பூவாக முன் இருபதுகளில் இருக்கும் ஒரு பெண்ணும் அவன் அருகில் வர அதை பார்த்த அவள் இதயம் விம்மியது. அவன் அருகில் வருபவள் யார் என்று தீர்மானிக்கமுடியாமல் அவள் மனம் தூரத்தில் இருக்கும் அலைக் கடலை போல அலை அடித்தது.

என்னவனே

இனி அப்படி உன்னை அழைக்க

உரிமையற்றவளோ நான்

 

உனக்காக காத்திருந்த

கணங்கள் யாவும் யுகங்களாக

 

உன்னைக் இக்கோலத்தில் பார்த்தப்பின்

கணங்கள் யாவும் ரணங்களாக

 

உன்னை சேரவும் துணிவில்லை

இப்போதோ உன்னை சேரவும் வழியில்லை

 

Advertisement