Advertisement

கண்மணி 9:
ஆறு மாதங்களுக்குப் பிறகு…
யாழ்முகை அப்போதுதான் காலேஜ் விட்டு வந்தாள்… ஆம்! அவளை திரு பேஷன் டெக்னாலஜி கோர்ஸீல் சேர்த்து விட்டிருந்தான். இவாவுக்கு அவள் விருப்பப்படி உடையை டிசைன் செய்து யாழ்முகை தர இயல்பிலேயே அவளுக்கு இருந்த திறமை வீணாக கூடாதென அவன் அவளை அக்கோர்ஸீல் சேர்த்து விட்டிருந்தான்.
யாழ்முகையும் மிகவும் சந்தோசமாக தனக்குப் பிடித்த விசயத்தைக் கற்றுக் கொள்ள செல்கிறாள்.அவளுக்கு இருக்கும் ஒரே வருத்தம் கணவன்அருகில் இல்லாமல் இருப்பது. திரு தனது நிறுவன பணிகளுக்காக லண்டன் சென்றுள்ளான்.
அவர்கள் நிறுவனத்தோடு மற்ற ஹோட்டல்கள்,தங்கும் விடுதிகள் எல்லாம் சேர்த்து டை-அப் செய்ய அவன் இப்படி வெளி நாடு செல்வது வாடிக்கையாகிப் போனது. இப்படி அன்னிய  நாட்டு நிறுவனங்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதால் ‘தி கார்னர்ஸ் ஆப் தி எர்த்’ மூலம் சுற்றுலா செல்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன.அந்த அந்த நகரங்களில் அவனின்  நிறுவனம் சார்பாய் மேனேஜர்ஸ், டூர்கைட்ஸ் என ஏற்பாடு செய்வது திருவின் வேலை.
ஆகையால்  வாரத்திற்கு ஒரிரு நாட்கள் மட்டுமே வீட்டில் இருப்பான்.அப்போதும் கூட ஆபிஸ் வேலையையே அவன் பார்ப்பான்.ஆனால் யாழ்முகைக்கு அவன் அவளோடு இருக்கும் அந்த சில நாட்களே போதுமானதாய் இருந்தன.ஏனெனில் தவற விட்ட நாட்களுக்கு எல்லாம் சேர்த்து மனைவியை சீராட்டி விடுவான்.யாழ்முகைக்கும் அவன் இப்படி வேலை வேலை என ஓடுவது கோபத்தை வரவழைக்கும்..இருந்தும் கூட அவனது நிலையை இப்போதெல்லாம் உணர்ந்து கொள்ள துவங்கி விட்டாள்.
அவனோடு  சண்டை போட வேண்டும் என நினைத்து வைத்ததெல்லாம் அவனைக் கண்ட நொடி கானலாய் கரைந்து விடும்…அந்த நொடிகளை சுகமாய் அனுபவிக்கவே மனம் வேண்டும்…அதையும் சண்டை போட்டு இழக்கும் முட்டாள்தனத்தை செய்ய விரும்பவில்லை அவள்.
இப்போதும் மாமியாருக்கு உதவிகள் செய்து விட்டு, இரவு உணவை முடித்து விட்டு அறைக்குள் நுழைந்தவுடன் கணவனின் நினைவு சுறாவளியாய் சுழன்று அடிக்க… செல்பேசியைக் கையில் வைத்துக் கொண்டு அவனது எண்ணையே வெறித்தாள்.
‘அவரையே நான் நினைச்சிட்டு இருக்கேன்ல…இப்ப அவர் நினைச்சா போன் செய்வார்..இல்லன்னா நான் அடிச்சுப் பேச மாட்டேன்..’ என மனதில் கெத்தாக  ஒரு பக்கம் நினைத்தாலும் இன்னொரு மனமோ அவள் இஷ்ட தெய்வமான அழகன் முருகனிடம் ‘முருகா..! அவர் போன் செஞ்சிடனும்…செய்யனும்..’ என மனமுருகி வேண்ட…ஸ்கைப் ஓலி கேட்டதும் அவள் இதயத்தில் இன்ப நதி..!!உடலெங்கும் பரவி குளிர்ப்பரப்ப, உற்சாகத்தோடு அவனோடு உரையாடத் தொடங்கினாள்.
அவள் கண்கள் கணவனின் காதலில் களிப்புற்றிருக்க, அதைக் கணவன் அவனும் சரியாய்ப் படித்தான்.
“ஓய்…என்ன…இன்னிக்கு வீட்ல பிரியாணியா..?” என திரு கேட்கவும்
“இல்லையே… தக்காளி சாதம் தான்..” என இவள் எதார்த்தமாய் சொல்ல,
“அப்புறம் எதுக்கு என் பொண்டாட்டி முகம் இவ்வளவு பிரகாசமா இருக்கு…? பிரியாணியைப் பார்த்தா தானே நீ பல்லைக் காட்டுவ..” என அவளைக் கடுப்பேத்த,
“வேண்டாம்.! நான் சண்டை  போடக்கூடாதுன்னு இருந்தாலும் வான்டடா வண்டி ஏறி என்னை வம்பிழுக்க நினைக்காதீங்க…” என இவள் பல்லைக் கடித்த வண்ணம் உரைக்க
“நம்ம சண்டை போட்டு சமாதானம் ஆகிடலாம் யாழ்..!சீக்கிரம் சீக்கிரம் சண்டை போடு…உன்னை சமாதானம் செய்ய என்னோட ஒவ்வொரு செல்லும் துடிக்குது…” என வசனம் பேச
“அங்கிருந்து எப்படி சமாதானம் செய்வீங்க…?”
“இப்படித்தான்” என அவன் பறக்கும் முத்தம் தர, அவளோ அமைதியான புன்னகையே அளித்தாள்.
அவளுக்குள் அமைதியாக ஒரு சூழல் சுழன்றுக் கொண்டிருக்க,அது கரையைக் கடந்து கண்களில் கண்ணீரை வரவழைக்காமல்  இருக்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணவனுக்கு அழுதாள் பிடிக்காது என்பதால் அழுகையைப் பிடிவாதமாய்ப் பிடித்து வைத்திருந்தாள்.
அவள் அவனது அருகாமைக்காக பெரிதும் ஏங்கினாள். ஆனால் அதை அவனிடம் வெளிக்காட்டவில்லை…காட்டினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை… அவனால் எப்படி லண்டனில் இருந்து இவளது  துயரம் தீர்க்க முடியும்..?அவன் வேலையாக இருக்கும் போது சும்மா அவனை தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை.
இதே ஆறு மாதம் முன் என்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள்.ஆனால் இப்போதோ திருமணம் அவளை பக்குவப்படுத்தி இருந்தது. அதற்காக திருமணம் ஆனா பெண்கள் அனைவரும் பக்குவப்பட்டவர்களா…??என கேள்வி எழலாம்…அது எல்லாம்  அந்த பெண்களைப் பொருத்து. விதிவிலக்குகள் எல்லாத்துக்கும் உண்டு தானே..!
பொறுத்தல்..அது மிகவும் பெரிய பண்பு. திருமணத்துக்கு முன் யாழ்முகை அவள் வீட்டினரைப் பொறுத்து அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தாள். இப்போதும் கணவன் சொல்படி நடக்கிறாள் தான்…ஆனால் கட்டுப்பட்டு அல்ல…காதலில் கட்டுண்டு……!! அது காதல் செய்த மாயமோ கணவன் செய்த மாயமோ….!! கண்மணி மட்டுமே அறிவாள்.
அவனை அனுசரித்து செல்வதில் அவளுக்கு அதி ஆனந்தம்..முழுதாக திருவின் திருமதியாக மாறிப் போயிருந்தாள் யாழ்முகை. அவனது கிண்டல் பேச்சுகள், செல்ல சீண்டல்கள் என எல்லாவற்றுக்கும் ஏங்கினாள்.
அவள் அமைதியாகவே இருப்பதைக் கண்டவன், “சாப்பிட்டியா நீ…?ஏன் டல்லா இருக்க…காலேஜ்ல எதாவது சண்டையா..?” என மென்மையாய்க் கேட்க
“இல்ல…” என்றாள்.எப்போதும் கல்லூரியில் சண்டை என்றால் அந்த லெக்சர் இப்படி… இவ அப்படி செஞ்சா…என மழலைப் போல் மனைவி சொல்லும் அனைத்தையும் ரசித்துக் கேட்டு அப்படி ஆராதிப்பான்.
பின்னர் சிறிது  நேரம் அவனோடு பேசியவள் நேரத்தைப் பார்த்து விட்டு “சரி…இப்ப தானே வந்திருப்பீங்க…போய் ப்ரஷ் ஆகிட்டு  சாப்பிடுங்க…” என கண்மணி சொல்லவும்
“ஆனாலும் டா…உன்னோட சமையலையும் அம்மா சமையலையும் ரொம்ப மிஸ் செய்றேன்..” என  சோக ராகம் இசைக்க,
“அதுக்கென்ன இங்க வந்ததும் நானும் அத்தையும் மாத்தி மாத்தி சமைச்சுப் போடுறோம்..”
“அடிங்க…ஏற்கனவே போன மாசம் டெல்லி சாப்பாடு பிடிக்கலன்னு சொன்னதுக்கு…மாமியாரும் மருமகளும் சேர்ந்து என்னை நாலு நாள் உட்கார வைச்சு சமைச்சுப் போட்டு இரண்டு கிலோ ஏத்தி விட்டீங்க…உனக்கு ரொம்ப கொழுப்பு யாழ்..என்னோட ஹேண்ட்சம் லுக்கை ஸ்பாயில் செஞ்சு..அங்கிள் லுக் வர வைக்க பார்க்கிற…” என அவளை சீண்ட,
“நானெல்லாம் காலேஜ் படிக்கும்போது மேரேஜ் ஆனவங்க எல்லாம் அங்கிள் கேட்டகரினு தான் சொல்லுவோம்” என பதிலுக்கு அவளும் பேச
“அதுக்கு தானே ப்ளான் போடுற..?? என்னைக் குண்டாக்கி அங்கிள் லுக் கொண்டு வர வைக்க…யூ……”
“பொதுவா பொண்ணுங்க தான் இப்படி பீல் செய்வாங்க…உங்களுக்கு என்ன..? இனி டெல்லில இட்லி இல்லை…மும்பைலசட்னி இல்லை….லண்டன்ல சோறைப் பார்க்க முடியல…ஆஸ்திரேலியாவுல குழம்பைப் பார்க்க முடியலனு  புலம்புங்க..அந்த வாய்ல ஒன்னு போடுறேன்…” என கை நீட்டி மிரட்ட,
“ஹாஹா….அதெல்லாம் அப்படி தான் சொல்வேன்… நீ தான்…கேட்கனும் அம்மணி…கேட்டு மாமாவுக்கு பிடிச்சதை சமைச்சுத் தரனும்…” என சரண்டர் ஆக
“உங்களை..! ஒண்ணு நீங்க சரண்டர் ஆகுறீங்க….இல்ல..என்னை ஆக்கிடுறீங்க…” என யாழ்முகை  முற்றிய நெற்கதிரைப் போல் தலை சாய்த்து செல்லமாய்க் குறைபட அவள் தலையசைப்பில் தலைக்குப்புற விழுந்தவன் ,
“சரண்டர் ஆகனும் என்பது மேரேஜோட முக்கியமான ரூல்ஸ்…அதுவும் திரு ரூல்ஸ்…”என காலர் தூக்கி விட இருவரையும் இணைக்கும் பாலமாய் அவர்கள் இதழ்கள் ஒன்றாய்ப் புன்னகைத்தன.
சரணடைதல்…! ஆட்சியாளர்களிடம் அடிமைகள் சரண்டையும்  வகை அல்ல..இது…ஆள்பவனிடம் ஆளப்படுபவள் அன்பால் சரணடையும் வகை.. இது அன்பின் மற்றொரு பரிமாணம்…!! திருமணத்தின் சிறப்பான பக்கம் அது…!!
இப்படியே பேசினால் அவள் தூக்கம் கெடுமென உணர்ந்தவன்,அவனுக்கும் அவளிடம் பேச வேண்டும் என்ற அவ இருந்த போதும் காலையில் அவளால் எழ முடியாது என “சரிடா…யாழ்மா…நான் போய் சாப்பிடுறேன்…நீ  தூங்குடா…குட் நைட்….” என்று சொல்லி வைத்தான்.
திரு என்னதான் இயல்பாய்க் காட்டிக் கொண்டாலும் அவனாலும் இல்லாள் இல்லாமல் இருக்க முடியவில்லை…அவளது அண்மைக்கு ஏங்கினான் அவன். ஆனாலும் வெளிக்காட்டாமல் கெத்தாகத் திரிந்தான்…அதை வெளிக்காட்ட போய்ஏற்கனவே கண்மணி கஷ்டப்பட்டு  கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கண்ணீரைத் திறந்து விடுவாளோ என பயம் கொண்டான்.
அவளோடு ஏழு மாதமாக குடும்பம் நடத்துகிறான் அவன் கண்மணியின் கண்ணில் கண்ணீர் கட்டி நிற்பது கூட அறியமுடியாத கணவனா அவன்…??
இப்படியே ஏக்கமும்  தவிப்புமாய் அவன் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினான்.
கல்லூரி விட்டதும் வெளியே வந்த யாழ்முகை கணவனின் மகிழுந்தை கண்டதும் மனம் விகசிக்க வேகமாய் வந்தாள்…அவனோ புன்னகையோடு கூலர்ஸை சட்டையில் சொருகிய நிலையில் சாய்ந்த வண்ணம் நின்றிருந்தான்.
கண்மணியைக் கண்டதும் கண்ணுக்குள் நிறைத்தவன் அவள் நெருங்கியதும், “சர்ப்பரைஸ்…” என சொல்லி சிரிக்க,
“எப்ப வந்தீங்க…? சொல்லவே இல்ல….” என்றவளுக்கு உணர்ச்சிப் பெருக்கில் மூச்சு வாங்கியது… அவளது முதுகை தட்டிக் கொடுத்தவன் அவளை அமர வைத்து  வண்டியைக் கிளப்பினான்..
“முன்னாடியே டிக்கெட் எடுத்துட்டேன்…அம்மாட்ட சொன்னேன்…உனக்கு தான் சர்ப்பரைஸா இருக்கட்டும்னு விட்டேன்..என்ன…இன்னிக்கும் பிரியாணியா என்ன..? ரொம்ப ப்ரைட்டா இருக்க…?” என அவளின் பிரகாசத்தின்  காரணம் அறிந்தும் சீண்ட
“ஆமா..ஆமா…பிரியாணி தான்…என்னோட ப்ரண்ட் கொண்டு வந்தா….செம டேஸ்ட் யூ நோ.. அவ பாய் பொண்ணு.. சோ நம்மளை விட டேஸ்டா  செஞ்சிருந்தாங்க….ரெசிபி கேட்டிருக்கேன்.. நம்ம வீட்ல ஒரு நாள் செய்றேன்..” என பிரியாணி பற்றி பேசி அவனைக் கடுப்படிக்க திருவோ ஒரு கையால் அவளது காதை திருகி,
“என்ன நக்கலா…?” என முறைக்க
” நோ….பிரியாணி..” என அவள் பல்லை காட்டி  இளிக்க,
“யாழ்மா….” என அவன் கையை எடுத்து விட்டு அப்பாவி லுக்குக்கு மாற,
“பின்ன..உங்களைப் பார்த்து தான் நான் சந்தோஷப்பட்டேன்னு தெரிஞ்சும்…என்னை சீண்டினா… நீங்க தான் என்னை மிஸ் செய்திருக்க மாட்டீங்க…” என அவள் நொடித்துக் கொள்ள
அவளது செல்ல சிணுங்கலினால் அவன் சிந்தையில் சாரல் மழைக்காற்று  வீசியது. நேசம் கொண்ட பாசமானவள் அவனைத் தேடியது அவனுக்குக் கர்வத்தை வரவழைத்தது.
விரிந்த புன்னகையில் அவன் முகம் விகசிக்க, “நான் மிஸ் செய்றதையெல்லாம் வார்த்தையால சொல்ல முடியாது யாழ்..” என ஆழ்ந்த குரலில் சொன்னான்.
அவள் கயல்விழிகளை அகன்ற வண்ணம் அவனைப் பார்க்க, அவள் கை மீது தன் கையை வைத்த கணவனவன்,
“எனக்கு சிலதை இப்படி எக்ஸ்பிரஸ் செய்ய  வராதுடா…உன்னைப் பார்க்க ஆசையில்லாமலா வேலையெல்லாம் சீக்கிரம் முடிச்சிட்டு ஓடி வந்தேன்..ஹ்ம்ம்…”
“புரியுதுப்பா…ஐ நோ யூ….” என யாழ்முகையும் அவன் கையை அழுத்திக் கொடுத்தாள். பின்னர்  வீடு சென்றதும் இரவெல்லாம் இருவரும் இந்த பத்து நாள் பேசாத கதையெல்லாம் பேசி வெகு நேரம் கழித்தே தூங்கினர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு , கல்லூரி விட்டதும் யாழ்முகை திருவுக்குப் போன் செய்தாள். எப்போதும் அவளே ஆட்டோ பிடித்து வீடு வந்து விடுவாள். திருவுக்கு வேலை இல்லையென்றால் அவன் முன்பே சொல்லி விட்டு அவளை அழைக்க வந்து விடுவான்.
இன்று அவளே போன் அடிக்கவும் விளம்பரதாரர்களோடு பேசிக் கொண்டிருந்தவன் அயனைக் கவனிக்க சொல்லிவிட்டு  வெளியே வந்து அவளை மீண்டும் அழைத்தான்.
“சொல்லு யாழ்…”
“உங்களுக்கு வேலை இருக்கா…?”
“ஏன் மா…” அக்கறையில் அமிழ்ந்த குரலில் கேட்டான் அவன்.அவன் மனைவி சும்மாவெல்லாம் போன் போட்டு அவனை தொல்லை செய்ய மாட்டாள் அல்லவா…??
“அது….வேலை முடிஞ்சதும் என்னை அழைச்சிட்டுப் போறீங்களா.. அதுவரை நான் இங்க இருக்க காபி ஷாப்ல வெயிட் செய்றேன்…”
“என்னாச்சுன்னு சொல்லு யாழ்மா….ஏன் நீ வெயிட் செய்யணும்…காசு இல்லையா என்ன..? ஆட்டோல போயிட்டு வீட்டுல போய் கொடுடா..” என பொறுமையாக சொல்ல
“அது எல்லாம் ஒன்னுமில்ல…இப்ப வருவீங்களா மாட்டீங்களா..?..” என கோபம் வீசும் குரலில் சொல்லவும் இவனுக்கு சிரிப்பு தான் வந்தது.அவன் மனைவி கோபப்படுவெதெல்லாம் வரலாற்றில் பொறிக்க நோ அவிக்க வேண்டிய விசயமல்லவா…காரணமின்றி அவன் காரிகை செயல்பட மாட்டாள் என உணர்ந்து அவனும் வேலையை அயனிடம் விட்டு விட்டு மனைவியைப்  பார்க்க சென்றான்.அவன் வண்டியை நிறுத்தியதும் உள்ளே ஏறியவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் ஏதோ அப்செட் என புரிந்தவன், “என்னாச்சு…இன்னிக்கு பிரியாணி பார்த்து சிரிப்பு வரல….கண்மணிக்கு என்னவாம்…?” என கொஞ்சலாக கேட்க
அவனது தோள்களில்  ஈரம் உணர்ந்தவன் அவள் முகத்தை  நிமிர்த்திப் பார்க்க , கண்கள் ஹோலி கொண்டாடியவர்களின் முகம் போல் சிவந்திருக்க, முகமோ தலையில் சூடி விட்டு போட்ட மல்லி போல் வாடி வதங்கிப் போ இருந்தது.
“என்னாச்சு யாழ்மா…எக்சாம்ல பெயில் ஆகிட்டியா…. நீ…”
“இல்ல…”
“அப்புறம் ஏன் டா அழற…?”
“எனக்குப் ப்ரீயட்ஸ் வந்து இரண்டு மாசம் ஆகுது…”
“சரி…அதுக்கென்ன டாக்டரை பார்த்தா  போச்சு…”
“அது இல்ல…” என எரிந்து விழுந்தவள் ,
“நம்ம அம்மா அப்பாவா ஆகப்போறோம்னு நினைக்கிறேன்…” என்றவள் வார்த்தைகள் முடிக்கும் முன்னே அவனின் இறுகிய அணைப்புக்குள் இருந்தாள். அவள்  தோளில் தலை சாய்த்த வண்ணம்,
“லூசு…பொண்டாட்டி..இதுக்கு அழுவாங்களா….எவ்வளவு ஹாப்பியானா விசயம்..” என கடிய
“இல்ல…எனக்கு கன்பார்மா தெரில…ஆனா அப்படி இல்லன்னா..டாக்டர்ட்ட தனியா போக பயமாயிருந்துச்சு…கண்டிப்பா நல்ல விசயம் தானே இருக்கும்…அதான் துணைக்கு உங்களை கூப்பிட்டேன்…தப்பா எதுவும் ஆகாது தானே…எனக்கு பாப்பா வேணும்..” என ஆசையும் பயமும் போட்டி போடும் குரலில் சொன்னாள்.
அவள் வீட்டினர்  மாதம் மாதம் ரேஷன் பொருள் வாங்குவது போல் இவளிடம் தவறாமல் ‘ நல்ல செய்தி..உண்டா..’ என கேட்டு இவளை இம்சிக்காமல் இருக்க மாட்டார்கள்.. அதனால் எங்கே எதிர்ப்பார்ப்பு பொய்யாகி விடுமோ என்ற பயம் பாவையவளுக்கு..
திருவுக்கும்  குழந்தை என்றால் கொள்ளை ஆசைதான்..ஆனால் அவ மனைவி எதுவானாலும் தாங்க வேண்டும் என நினைத்தவன், “எதுவும்  தப்பா ஆகாதுடா.. அப்படியே ஆனாலும் தப்பு செஞ்சு… தப்பை சரி செஞ்சிடலாம்..” என யாழின் கன்னத்தில் அழுந்த முத்தமிட, அவள் செந்தூரமாய் சிவக்க, அவனும் நிறைந்த சிரிப்போடு காரை எடுத்தான்.
அவர்கள் விரும்பியது போலவே யாழ்முகை கருவுற்றிருந்தாள்..!
வீட்டிற்கு வந்த திரு , ‘ நான் அப்பா ஆகிட்டேன்..’ என அவன் அம்மாவை தூக்கி சுற்ற,
“டேய்…என் பேரப்புள்ளைக்கு எல்லாம் செய்ய நான் நல்லா இருக்கனும்டா..இறக்கி விடுறா…ப்ளீஸ்..” என அவர் கத்த
“அரசு..என்ன இது…? அம்மாவை விடு…” என அவன் தாத்தா நம்பியார் கணக்காய்க் கண்களை சுருக்கிக் கொண்டு  மிரட்ட,
“தாத்தா…  நீ கொள்ளு தாத்தாவாகிட்ட…..” என அவரையும் சுத்த
“ஏன் டா..அவன் அவன் பொண்டாட்டியை தூக்கி சுத்துவானா… நீ..என்னடான்னா..எங்களை தூக்கிற..படவா..விடு…என்ன…” என அவர் திட்ட
அவரை மெதுவாக இறக்கியவன் ” மாசமா இருக்கவங்களைத் தூக்கி சுத்தினா இன்னும் தலை  சுத்தும்.. நான் வேணும்னா என் பொண்டாட்டியை இப்படி சுத்துறேன்…..” என்றவன் யாழ்முகையை நடுவில் நிற்க வைத்து அவளை சுத்தி வர,
“என்ன செய்றீங்க…போங்க…பாருங்க அத்த…” என சிணுங்க..”
“விடுடா..கண்மணி டயர்டா இருப்பா… நீ வா டா… ஜூஸ் தரேன்..” என்றவர்  அவளுக்குப் பழச்சாறு எடுத்து வந்து தந்தார்.
அவர் சம்மந்திக்கு அடித்து சொல்ல,திரு மனைவியை தள்ளிக் கொண்டு அறைக்குள் வந்தான்.
அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டு, “பாரு…இப்பதான் உன் முகம் சிரிக்குது..இதுக்கு போய் யாராவது அழுவாங்களா..?” என செல்லமாய் அவள் கன்னம் இழைத்துக் கேட்க
“இப்ப நல்லவிதமா வந்துடுச்சு…வராம போயிருந்தா….”
“வராம போயிருந்தா…என்ன…தப்பு செஞ்சுடலாம்னு சொன்னேன்ல…” என கண்சிமிட்ட
“உங்களை….எப்பவும் அதே நினைப்பா..?”
“நோ… நீ கூட இருந்தா மட்டும் இப்படி சென்சார் செய்ய வேண்டிய எண்ணங்கள் எல்லாம் தோணுது…” என இன்னும் அவளை நெருங்கி கிசுகிசுப்பாய் சொல்ல, கரைந்து போனாள் கண்மணி.
கருவுற்றிருந்த சமயத்தில் கண்மணியை தன் கண்ணின் மணியாய் பார்த்துக் கொண்டான் திரு.வேலைகள் எவ்வளவு இருந்தாலும் அவளுக்கு நேரம் ஒதுக்கி விடுவான்.முடிந்த வரையில் வெளி நாடு செல்வதையெல்லாம் அயனிடம் ஒப்படைத்தான்.
ஒன்பதாவது மாதத்தில் ஒரு அழகிய ஆண் மகவை ஈன்றாள் யாழ்முகை!

Advertisement