Advertisement

மனம் – 3

யதுவீரும் அவன் அம்மாவும் கிளம்பியிருப்பார்கள் என்று ஒருவழியாய் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு, கண்ணீர் வடித்த கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளுக்கு திக்கென்று தான் இருந்தது.

யாரை பிடிக்காது என்றெண்ணி ஒதுக்கினாளோ, யாரை பிடித்துவிடுமோ என்று பயந்து ஒதுங்கினாளோ, யாரை இன்று பிடித்திருக்கிறது என்று உணர்ந்து, அவன் செல்கிறானே என்று அழுது கரைந்தாளோ அவனே அவள் கண் முன் நிற்க லக்க்ஷனாவிற்கு அதிர்ச்சியாய் தான் போனது..

‘யதுவீர்…’ என்று அவள் இதழ்கள் முணுமுணுக்க, அப்படியே கண்களை இமைக்காது தான் பார்த்து அமர்ந்திருந்தாள்.

அவனும் அப்படித்தான், அவன் பார்வையில் ஆயிரம் கேள்விகள், ஆனால் முகத்திலோ ஒன்றுமே இல்லை.. எந்தவித பாவனையும் இல்லாது, கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான்..

என்ன ஒரு பார்வை…. இத்தனை நாள் அவனை அலட்சியமாய் கடந்து வந்தவளால் இன்று அதை செய்ய முடியாது போக,

‘எழு.. எழு.. எழுந்து செல்..’ என்று அவள் அறிவு சொன்னதெல்லாம் எங்கோ காற்றோடு போக, உடல் முழுவதும் மரத்துப் போனது போல அப்படியே அமர்ந்திருந்தவளை நோக்கி வந்தான் யதுவீர்.

அவன் அருகில் வர வர அவளது பார்வையோ ‘என்ன செய்யப் போறான்..’ என்று பார்க்க, அவனோ மெல்ல குனிந்து தன் கைகளை அவள் முன்னே நீட்டினான் “கமான்..” என்றபடி..

என்னைத்தான் சொல்கிறானா என்று அவனையும் அவன் கையையும் மாறி மாறி பார்த்தவள், ஒருவழியாய் சுதாரித்து அவளே எழுந்து நின்றாள்.

“லக்க்ஷி.. ஐம் கோயிங்.. இப்போ உனக்கு ஹேப்பி தானே..” என்றவன், அவளது திகைத்தப் பார்வை கண்டு, “ஐ க்னோ லக்க்ஷி.. உனக்கு என்னை பிடிக்காது..” என்று சொல்ல, அவளுக்கோ தொண்டை அடைத்தது.

‘பிடிக்காதா.. அவனையா…’ என்று அவள்ளுல்லாம் சத்தம் போட, அதன் இரைச்சல் எல்லாம் லக்க்ஷனாவின் உள்ளேயே அடங்கிட, அதெல்லாம் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லையே..

கண்களோ இதோ இதோ என்று அடுத்த ஷிப்ட் கண்ணீரை இறக்கத் தயாராய் இருக்க, கைகளை இறுக மூடிக்கொண்டாள்.

“ஹ்ம்ம்… சோ லக்க்ஷி.. இப்போக் கூட பேசமாட்ட.. ஓகே.. தட்ஸ் யுவர் விஷ்.. பட்…” என்றவனுக்கும் என்னத் தோன்றியதோ, நெற்றியை லேசாய் தடவியவன், கொஞ்ச நேரம் அமைதியாக நின்றுவிட்டு பின்,

“ஓகே லக்க்ஷி.. நான்… ஹ்ம்ம் நான் இங்க வந்தது உன்கிட்ட சாரி கேட்கத்தான்.. ஐ  டோன்ட் க்னோ.. ஒருவேளை நான் தெரியாம உன்னை எதுவும் ஹர்ட் பண்ணிருந்தா சாரி.. ஓகே.. இத்தனை வருஷம் ஒரே ஏரியால இருந்தாச்சு.. இனி மீட் பண்ணுவோமா தெரியாது.. பட் சென்ட் ஆப் பண்றபோ ஒரு லிட்டில் ஸ்மைலோட நீ பை சொன்னா ஐம் ஹாப்பி…” என, அவளுக்கோ அவன் ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல உள்ளே மனம் நொருங்கிக்கொண்டு இருந்தது.

இது போன்றதொரு உணர்வுகள் எல்லாம் அவளுக்குப் புதிது.. எப்படி அதை கையாள்வாது என்று தெரியாமல் போனாலும், அவனிடம் இருந்து அதெல்லாம் மறைக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் பிரதானமாய் இருக்க, அவளின் அனைத்து வலிகளையும் மறைந்து,

வழக்கம் போலவே அவனை முறைத்தவள், “ஜஸ்ட் கெட் அவுட்…” என்றாள் சீறலாய்.

அவளுக்கே தெரியவில்லை தான் ஏன் இப்படி செய்கிறோம் என்று. அவன் சொன்னதுபோல, லேசாய் சிரித்தபடி கை காட்டினால் அவனும் சென்றிடுவான் தான். ஆனால் அவன் போவதை எப்படி அவள் சிரித்தபடி பார்க்க முடியும். அதற்கு இந்த கோபமே பரவாயில்லை என்றெண்ண,

அந்த கோபம் அவளையும் யதுவீரையும் சேர்த்தே தாக்கும் என்பது தெரிந்தும், அவனை தான் நோகடிக்கிறோம் என்று புரிந்தும் அப்படித்தான் பேசினாள்.

சரி கடைசி நாளாவாது நல்லபடியாய் பேசுவாள் என்றெண்ணி வந்தவனுக்கோ அவளது இந்த பேச்சு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்க “லக்க்ஷி..” என்று அதிர்ந்துப் பார்த்தான்.

“எஸ் லக்க்ஷி தான்.. சோ வாட்..” என்று அவனை உறுத்து விழித்தவளை இப்போது ஆராய்ச்சியைப் பார்த்தவன்,

“இது உன்னோட நேச்சர் இல்லை…” என்றான் குற்றம் சாட்டும் குரலில்..

‘ஐயோ இவன் போகமாட்டேன்கிறானே..’ என்ற பரிதவிப்பில் மேலும் மேலும் அவள் தன்னிலை மறக்க,

“என்னோட நேச்சரா… என் நேச்சர் பத்தி உனக்கென்ன தெரியும்.. என்னவோ எல்லாம் என்னைப் பத்தி தெரிஞ்சது போல பேசுற.. லுக் யதுவீர்.. ஆமா எனக்கு உன்னை சுத்தமா பிடிக்காது.. அதான் உன்னை பார்க்கக்கூடாதுன்னு மேல வந்தேன்.. இங்கயும் வந்து.. ச்சே…” என்று முகத்தை சுளிக்க, அவனுக்கோ அவமானமாய் போய்விட்டது..

“ஹேய்…” என்று அவளை நெருங்கியவன்,

“இதுக்குமேல ஒருவார்த்தை பேசின..” என்று விரல் நீட்டியவன், “உன்கிட்ட சொல்லிட்டு போகணும் நினைச்சேன் பாரு..” என்றுவிட்டு ‘போ டி..’ என்று சொல்வது போல் கையை ஆட்டிவிட்டு  திரும்ப நடக்கத் தொடங்க,

“நான் கேட்டேனா சொல்லிட்டு போன்னு.. ச்சே ஐ ஹேட் யு…” என்று லக்க்ஷனா கண்ணீரோடு கத்த, அவளைத் திரும்பிப் பார்த்தவன், பின் அப்படியே வேகமாய் கீழறங்கி சென்று அடுத்து கிளம்பியும் விட்டான்..

அதன் பின் லக்க்ஷனாவிற்கு அப்படியொரு அழுகை.. அவள் மனதில் எழுந்த ஆசை ஒருபுறம் அவளை பயம் காட்டியிருக்க, அதன்பொருட்டு அவள் யதுவீரிடம் இப்படி நடந்ததும் கஷ்டமாய் இருக்க, அவன் தன்னை என்ன நினைப்பானோ என்ற எண்ணமும் எல்லாம் சேர்ந்து அவளுக்கு அழுகையைக் கொடுக்க, வெகு நேரம் அங்கே தான் அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு நன்றாக தெரியும், இதை அவன் யாரிடமும் சொல்ல மாட்டான் என்று. ஆக அவளும் இதை யாரிடமும் சொல்லவில்லை. ஷீலுவிடம் கூட. எப்போதும் இருப்பது போல் இயல்பாய் இருக்க, முன்னே கொஞ்ச நாட்கள் அடிக்கடி பூனம் மீராவிற்கு அழைத்து பேசுவார், பின் அதுவும் தேய்ந்து இல்லாது போக அவ்வபோது அவர்களை பற்றிய செய்தி மட்டுமே எப்போதாவது காதில் விழும்.

இப்படியே அந்த வருடம் முடிய, அடுத்து இவர்களும் வேறு ஏரியாவில் சொந்த வீடு வாங்கி குடிபெயர்ந்திட, சௌக்கார்பேட்டை செல்வதே அரிதாகிப்போனது. ஷீலுவை தினமும் கல்லூரியில் சந்திப்பாள் லக்க்ஷனா ஆனால் அவளோ தப்பித் தவறிக்கூட யதுவீர் பற்றி பேசிட மாட்டாள்.

கல்லூரி நாட்களும் முடிந்து அவரவர் வேலை என்று ஆரம்பிக்க, ஷீலு வீட்டில் தான் இருந்தாள். லக்க்ஷனா  வேலைக்கு செல்லத் தொடங்கவும், அவர்கள் பார்ப்பதும் கூட ரொம்பவும் கம்மிதான் என்றாகிவிட, ஒருநாள் நீலம் தான் இவர்கள் வீட்டிற்கு வந்தவர்,

“நம்ம யது இண்டர்நேசனல் ப்ளேயர் ஆகிட்டான்…” என்று பெருமையாய் சொல்லிட, லக்க்ஷனாவிற்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது. ஆனால் வெறுமெனே மகிழ்ந்து என்ன செய்ய..

யதுவீர் அவள் வாழ்வில் இருந்து சென்றிருந்தாலும், மொத்தமாய் அவள் மனதையும் எடுத்துக்கொண்டு சென்றிருக்க, அவனப் பற்றிய எண்ணங்கள் மட்டுமே அவளிடம் இருந்தன.

அவனைத் திரும்ப பார்க்கும் வாய்ப்புக் கிடைக்குமா அதெல்லாம் தெரியாது. ஆனால் இப்போது லக்க்ஷனாவின் மனதில் பெரும்பயம்.. அவள் மனதில் தோன்றிய இந்த எண்ணம்.. இந்த ஆசை.. இந்த காதல்…

அதற்கான ஆயுள் தான் என்ன?? இல்லை முதலில் இது சரியா என்றே தெரியவில்லை. அவளது குடும்பம் கலகலப்பான குடும்பம் தான் என்றாலும் கண்டிப்பும் அங்கே நிறையவே இருக்கும்.

அப்படியிருக்கையில் தன் மனதில் தோன்றிய ஆசையை தனக்குள்ளே புதைக்க, யதுவீர் இனி எந்த ரூபத்திலுமே அவள் வாழ்வில் வந்துவிடக்கூடாது என்ற முடிவில் இருந்தாள்.

அதன்பொருட்டே தப்பித் தவறிக்கூட அவன் சம்பந்தப்பட்ட எந்த விசயத்திலும் தலைகொடுக்க மாட்டாள். முக்கியமாய் ஸ்போர்ட்ஸ்.. மீராவே விளையாட்டுத் துறை ஆசிரியை தானே. வீட்டில் ஸ்போர்ட்ஸ் சேனல் ஓடினால் பார்க்க மாட்டாள். யாராவது பார்த்தாலும் திட்டுவாள். 

அதில் எங்காவது யதுவீரை காட்டிவிட்டால், பின் தன் கட்டுபாடுகள் எல்லாம் நொருங்கிவிடுமோ என்ற பயம்.. இப்படி தனக்குள்ளே பலவிதமான உணர்வுகளை அவள் மூட்டை கட்டி வைத்திருக்க, இப்போதோ அனைத்துமே ஒன்றுமில்லாமல் போனது..

பல வருடங்களுக்கு பின் யதுவீரை டிவியில் என்றாலும் பார்த்தாள். அவன் குரலைக் கேட்டாள்.. அவன் தோற்றம் முன்னைவிட மாறியிருந்தது.. அதெல்லாம் மனதில் பதிய, அறைக்கு வந்தவளுக்கோ

‘அவன் சொன்னபோல சிரிசிட்டே பை சொல்லிருந்தா கூட இவ்வளோ வந்திருக்காதோ.. கடைசி கடைசில ஹெட் யு சொல்லிட்டேனே..’ என்று வருந்த, இப்போதும் கூட யதுவீர் வந்தால் அவனோட இயல்பாய் பேசுவோமா என்ற சந்தேகம் அவளுள் இருந்தது.

அவள் பேசுவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.. அவன் முதலில் என்ன நினைப்பான்.. நினைத்திருப்பான்.. காரணமே இல்லாமல் அவன்மீது வெறுப்பை அல்லவா கொட்டிவிட்டாள். அதிலும் அவள் ஹேட் யூ என்று சொன்னபோது அவன் பார்வை.. அதே பார்வையை இனியொரு முறை அவளால் எதிர்கொள்ள முடியுமா என்றால் கண்டிப்பாய் முடியாது.

இதற்கு யதுவீரையே எதிர்கொள்ளாமல் இருந்திடலாமே என்று தோன்றவும் தான் மீராவிடம் ஷீலு திருமணத்திற்கு மட்டும் போவோம் என்று சொன்னது. ஆனால் அவரோ ஒரேதாய் மறுக்க,

இத்தனை நேரம் ஷீலுவிடம் பேசியதில் அவளுமே ‘நீ கண்டிப்பாய் வரவேண்டும்..’ என்று சொல்லிட, யார் சொல்வதையும் அவளால் மறுக்கமுடியவில்லை. அவள் மனம் சொல்வதையும் கேட்கமுடியவில்லை

யதுவீர்…  அவன் வாழ்வே இப்போது சுத்தமாய் மாறியிருந்தது. அவனுக்கென்று ஒரு அங்கீகாரமும் அடையாளமும் கிடைத்தபின்னே அவன் விஐபி ஆகிவிட்டான்.

அது ஒரு மாய உலகம்.. கபடி… விருதுகள்.. அதனை தொட்டு பார்ட்டிகள்.. அப்படியே விளம்பரங்கள் என்று அவன் உலகம் முற்றிலும் வேறாய் இருந்தது.. வேறு எதையும் அவன் சிந்திக்க நேரமில்லை.

ஆனால் இப்போதோ ஷீலுவின் திருமணம் சென்னை செல்லவேண்டும் என்று பூனம் சொல்லவும் முதலில் அதை மகிழ்வாய் ஏற்றுக்கொண்டவன், பின் தனிமை பொழுதில் தனக்கான நேரத்தை கணக்கிட்டு சென்னை செல்ல யோசிக்க,

அப்படியே அவன் நினைவுகள் எல்லாம் பின்னோக்கி போக அன்று கடைசியாய் அவன் சென்னையில் சந்தித்து வந்தது லக்க்ஷனா என்று நினைவில் வரவும், அப்படியே ஒன்றுவிடாமல் அவள் பேசியது எல்லாம் கண் முன்னே விரிய,

“லக்க்ஷி….” என்று அவனின் இதழ்கள் அவனையும் அறியாது முணுமுணுக்க, யதுவீரின் கண்களில் ஒரு ஒளி மின்னி மறைந்தது..

“லெட்ஸ் ராக் பேபி…” என்று மட்டும் சொல்லிக்கொண்டன்..

சென்னை செல்கிறோம் என்றதுமே யதுவீருக்கு மனதில் என்னவோ ஒரு புது உற்சாகம்.. அது சென்னை செல்வதாலா… இல்லை அங்கிருப்பவளை சந்திக்கப் போகிறோம் என்பதாலா என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் மனம் மிகவும் சந்தோசமாக உணர்ந்தது.

ஷீலு திருமணம் இல்லை என்றாலுமே அவன் சென்னை சென்றிருப்பான் தான்.. அடுத்த மாதம் கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு அங்கே தான் லீக் மேட்ச்கள் இருந்தது. ஆக எல்லாம் சேர்ந்து அவனுக்கு மேலும் மேலும் சந்தோசத்தைக் கொடுக்க, ஷீலுவின் திருமணத்தை ஆவலாக எதிர்பார்த்திருந்தான்.

ஆனால் லக்க்ஷனாவோ மனதிற்குள் தோன்றும் பதற்றத்தை வெளிக்காட்டாமல் இருக்கவே பெரும்பாடு பட்டாள். இதற்கு நடுவே மீராவோ அவர் கணவரிடத்தில்

“ஷீலுக்கு கல்யாணம்ங்க.. நம்மளும் இப்போவே லக்க்ஷிக்கு பார்க்க ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும்…” என்று அலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, அதுவும் இவள் காதில் தெளிவாகவே விழ,

இத்தனை நாள் என்னவோ ஒரு அமைதியில் சென்ற வாழ்க்கை இன்று அப்படியே மாறி விட்டதுபோல் இருந்தது.

என்னதான் லக்க்ஷனா நாட்கள் மெதுவாக நகரவேண்டும் என்று நினைத்திருந்தாலும், காலம் அவள் சொல் பேச்சு கேட்குமா என்ன, சரியாய் இன்னும் ஷீலுவின் திருமணத்திற்கு நான்கே நாட்கள்..

காலையில் வேலைக்கு கிளம்புகையிலே “லக்க்ஷி சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்தா திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிடலாம்..  தென் மார்னிங் அங்க போக சரியா இருக்கும்..” என்று மீரா சொல்லிட,

“ம்ம்…” என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

ஆனால் ‘அவன் வந்திருப்பானோ வந்திருப்பானோ…’ என்ற எண்ணம் மட்டும் அடித்துக்கொண்டே இருக்க, மறுநாளும் வந்திட, மீரா, லக்க்ஷி, நிர்மல் மூவரும் ஷீலு வீட்டிற்கு கிளம்பிச் சென்றனர்..

எத்தனை வருடங்களாய் அவர்கள் வாழ்ந்த இடம் தான், ஆனால் நிறைய மாற்றங்கள்.. அங்கே ஷீலு வீட்டிற்குள் சென்றபின்னோ ஏக போக வரவேற்பு.. அங்கிருக்கும் அனைவரையும் இவர்களுக்குத் தெரியும்.. வந்திருந்த உறவினர்களில் ஒருசிலர் மட்டுமே புதியவர்கள்..

ஆக அப்படியொன்றும் வித்தியாசம் தெரியவில்லை.. நீலம் வந்து மீராவை கட்டியணைத்து வரவேற்க,

“லக்க்ஷி..” என்று அவளையும் அணைத்துக்கொள்ள, அவளின் பார்வையோ அவன் எங்கே என்று ஒருமுறை வீட்டையே அலசி மீள,

“ஆரே… மீரா… லக்க்ஷி… நிர்மல்…” என்று சந்தோசமாய் அவர்களை வரவேற்றபடி உள்ளிருந்து வந்தார் பூனம்..

யதுவீர் அங்கில்லை என்றதுமே லக்க்ஷனாவின் மனம் கொஞ்சம் அமைதி அடைந்துகொண்டு இருக்கையிலேயே, பூனம் வந்திட, திக்கென்று இருந்தது.

மீண்டும் பார்வையை ஓடவிட்டாள்.. எங்காவது இருக்கிறானா.. எங்கிருந்தாவது பார்க்கிறானா என்று.. ஆனால் அப்போதும் யதுவீர் அவள் கண்ணில் விழாது போக,

‘ஒருவேளை வரலியோ…’ என்று நினைத்தபடி பூனம் வந்தவரிடம் சிரித்தபடி,

“ஆன்ட்டி…” என்று கட்டிக்கொண்டாள்.

“எப்படி இருக்கீங்க…” என்று ஆரம்பித்த பேச்சு, அடுத்து கொஞ்ச நேரம் வரைக்கும் நீள, நீலம் இவர்களுக்கான அறையை காட்டியவர்,

“லக்க்ஷி ஷீலு மாடில இருக்கா..” என்று சொல்ல, அவளும் அங்கே சென்றாள்.

ஷீலுவும் அவளது மற்ற கசின்ஸ்களும் அமர்ந்து அரட்டையில் இருக்க, லக்க்ஷனா அங்கே சென்றதும் அனைவருமே

“ஹேய் லக்க்ஷி….” என்று மகிழ்வாய் அவளை வரவேற்க, ஷீலு சென்று அவளைக் கட்டிக் கொண்டாள்.

“நீ வரமாட்டியோன்னு நினைச்சேன்…” என்றவளிடம்,

“லூசு…” என்றுமட்டும் திட்டிவிட்டு, அவளும் மற்றவர்களோடு பேச்சில் இறங்க, மனமோ யதுவீரை வெகுவாய் எதிர்பார்த்தது.

வந்துவிட்டானா இல்லையா… வருவானா மாட்டானா… என்று எதுவும் புரியாமல், அவள் இருக்க, அந்த ஒருநாளும் அப்படியே முழுதாய் கழிய, மறுநாள் மாலை மெகந்தி பாங்சன்.. அப்படியே சங்கீத்தும்…

கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்… தடபுடலாய் இருந்தது.. நிர்மலும் மீராவும் முழுதாய் அவங்கே கொண்டாடத்தில் தங்களை மூழ்கடித்துவிட, லக்க்ஷனாவிற்கோ அப்படி இருக்க முடியவில்லை..

ஷீலு கூட பார்த்துவிட்டு கேட்டாள் “லக்க்ஷி ஏன் ரெஸ்ட்லெஸா இருக்க..” என்று..

“ஒண்ணுமில்ல…” என்று லக்க்ஷனா தலையை உருட்டும் போதே, பக்கத்தில் யாரோ பூனமிடம், யதுவீர் எங்கே என்று கேட்க, லக்க்ஷனாவின் காதுகள் அப்படியே பின்னே நீண்டது.

அதற்குள் அங்கே பாட்டுகள் ஹை பிட்சில் ஒலிக்கத் துவங்க, பூனம் சொன்ன ‘லீக் மேட்ச்…’ என்ற வார்த்தை மட்டும் தான் லக்க்ஷனாவின் காதுகளில் விழுந்தது..

‘மேட்சா… அப்.. அப்போ அவன் வரமாட்டனா….’ என்று கொஞ்சம் மனம் நிம்மதியடைந்தாலும், ‘அப்போ.. பாக்கவே முடியாதா…’ என்று உடனே சோர்வும் அடைந்தது..

ஷீலுவிற்கு மெகந்தி போட்டுக்கொண்டு இருக்க, அருகில் மற்றவர்களும் போட்டுக்கொள்ள,

“நீயும் போடு…” என்று பூனம் சொல்ல, “நைட் போட்டுக்கிறேன் ஆன்ட்டி…” என்று சொல்கையிலேயே, ஷீலுவின் சித்தப்பா பெண் ஒருத்தி,

“லக்க்ஷி கம்மான் லெட்ஸ் டான்ஸ்…” என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றாள்..

“நோ நோ..” என்று இவள் எத்தனை மறுத்தும், அங்கிருந்த கூட்டம் விடாது போக, ஷீலுவோ ஆடேன் என்பதுபோல் பார்க்க, லக்க்ஷனாவோ மீராவின் முகத்தை பார்க்க, அவரும் சிரித்தபடி ஆடு என்று சொல்ல,

“ஹேய்….” என்று சுற்றி அனைவரும் கை தாட்டி, ஆளுக்கொரு பாடலை சொல்ல, முடிவாய் ‘டோலு பாச்சே’ என்று பாடல் ஒலிக்கத் தொடங்க, அதன் பின்னே அங்கே யாருமே நிற்கவில்லை..

பாடலின் இசைக்கு ஏற்ப, கூட ஆடியவர்களின் நடனத்திற்கு ஏற்ப, லக்க்ஷனாவும் சுற்றி சுற்றி வந்து ஆடிக்கொண்டிருக்க, பாடலின் முடிவில் பாஸ்ட் மியுசிக் வர, அனைவரின் ஆட்டமும் கொஞ்சம் வேகமாய் சூடு பிடிக்க, லக்க்ஷனா வேகமாய் அட, அருகே ஆடியவளின் கால் அவள் காலில் பட்டு, லக்க்ஷனா தடுமாறிப் போக, அவள் சுதாரிப்பதற்குள் பின்னே வந்தவள் அவளை கவனிக்காமல் இடித்துவிட,

பார்த்திருந்த அனைவருமே லக்க்ஷனா விழப் போகிறாளோ என்று கொஞ்சம் பயந்தே பார்க்க, மீரா அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்துவிட,

லக்க்ஷனா கொஞ்சம் தடுமாறி போனவள், கீழே விழப் போறோம் என்று அவளும் உணர்ந்த நொடி, அழகாய் வந்து நின்று தாங்கிப் பிடித்திருந்தான் யதுவீர்..

அழகாய் சந்தன நிற ஷர்வானியில், அவன் உயரத்திற்கும், உடல்கட்டிற்கும் ஏற்றார் போல இருந்தது அந்த உடை..

யதுவீர் அங்கே வந்து நின்ற நேரம் சரியாய்  ஒலித்துக்கொண்டு இருந்த பாடல் நிற்க, அனைவரும் தங்கள் நடனத்தையும் நிறுத்திவிட்டு சந்தோஷத்தில் கரங்களை தட்ட, நடுவில் யதுவீர் அவளை தாங்கிப் பிடித்திருக்க, லக்க்ஷனா அப்படியே திகைத்து நின்றிருந்தாள்..

‘யதுவீர்…’ என்று அவள் கண்களும் முகமும் மனமும் மலர்ந்து விரித்திட, அவளது மலர்ச்சி தப்பாமல் அவன் கண்களிலும் விழுந்து,

“டூ யு ஸ்டில் ஹேட்டிங் மீ பேபி…” என்றான் அவள் செவிகளில்..                       

 

 

 

                                                                    

                               

                        

                    

 

Advertisement