Advertisement

மனம் – 16

தாஜ்மஹால்…

காதலின் சின்னமாய், கட்டிட கலையின் மகுடமாய் தன்னுள்ளே பல ரகசியங்களை இன்றளவும் புதைத்து வைத்து, மக்களை தன்பால் ஈர்க்கும் அழகிய அன்பு சிம்மாசனம்..

டெல்லி என்றதுமே அனைவருக்கும் தாஜ்மஹால் பற்றிய நினைப்பு வராமல் இருக்காது. அதிலும் காதலர்களுக்கு கேட்கவேண்டியதே இல்லை. யாராகினும் அங்கே ஒருமுறை சென்றிட வேண்டும் என்றுதான் தோன்றும்.

அதில் யதுவீரும் லக்க்ஷனாவும் விதிவிளக்கல்ல.. யதுவீர் லக்க்ஷனாவை அழைக்கச் செல்ல, அவள் காரில் ஏறியதுமே அவன் செய்தது அவளை தன்னிடம் இழுத்து அணைத்துக்கொண்டது தான்..

லக்க்ஷனா இதை கொஞ்சமும் எதிர்பார்க்காமல் போக, முதலில் கொஞ்சம் திடுக்கிடலாய் தான் இருக்க, அவனோ ‘லக்க்ஷி லக்க்ஷி..’ என்று அவளை இன்னும் இன்னும் இறுக்கி அணைக்க, இத்தனை நாள் இல்லாத ஒரு வித்தியாசம் அன்று லக்க்ஷனாவிற்கு உணர முடிந்தது..

“யது…” என்றவளின் கரங்களும் அவன் தோள்களை தொட்டிருக்க, அதற்குமேல் அவளால் வேறெதுவும் பேசவும்  முடியவில்லை, யோசிக்கவும் முடியவில்லை..

“லக்க்ஷி உன்னை எவ்வளோ மிஸ் பண்ணேன் தெரியுமா???” என்று அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களோடு தன் விழிகளை உறவாடவிட்டபடி கேட்டவனின் பார்வையும் இன்று முற்றிலும் புதிது..

ஒருவேளை அவர்களின் நிச்சயம் முடிந்து அடுத்து ஓரிரு நாட்களில் யதுவீர் கிளம்பியதும் அதன்பிறகான உரையாடல்கள் எல்லாம் அலைபேசி மூலமாகவே இருந்ததினால் தானோ என்னவோ இத்தனை நாள் பிரிவுகளும் ஏக்கங்களும் இன்று வெளிப்பட, லக்க்ஷனா அவனை புதிதாய் பார்ப்பது போல் பார்த்தாள்..

“என்ன லக்க்ஷி அப்படி பாக்குற.. ஹப்பா… ரியலி நேத்து உன்னை பார்த்த அந்த செக்கன்ட் எப்படி இருந்தது தெரியுமா??? ஓ மை காட்…” என்று சொன்னவன், திரும்ப அவளை நெருங்கி வேகமாய் அவள் நெற்றியில் இதழ் ஒற்ற,

அந்த நொடியை லக்க்ஷனா கண்களை மூடி ரசிக்க, அவள் ரசிப்பதை ரசித்தவன், மெல்லமாய் அவள் காதோரம் “லக்க்ஷி…” என்றழைக்க,

“ம்ம்…” என்று நிமிர்ந்து யதுவீரை லக்க்ஷனா நேருக்கு நேராய் பார்த்த அந்த நொடி, அவனது இதழ்கள் அவளது இதழ்களை ஒட்டிக்கொள்ள, சட்டென்று லக்க்ஷனாவின் கண்கள் விரிந்து பின் வேகமாய் மூடிக்கொன்டது..

யதுவீராகத் தான் அவளை விடுவித்தான்.. லக்க்ஷனாவின் கண்கள் அப்போதும் மூடியிருக்க, “தேங்க்ஸ் பேபி…” என்றவனின் குரல் அவள் காதோரம் மெல்ல கிசுகிசுக்க, அதில் கண்கள் திறந்தவள்,

அவன் முதுகில் செல்லமாய் ஒரு அடிவைத்து, பின் அவன் மார்பிலேயே முகத்தை புதைத்துக்கொண்டாள்..

“நானுமே உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் யது…” என்றவளின் குரலே கலங்கிப் போய் இருக்க, அவள் கண்களும் கலங்கியிருப்பது அவனது சட்டை உணர்த்தியது யதுவீருக்கு..

“ஹேய் பேபி ப்ளீஸ் அழாத.. என்கேஜ்மென்ட் முடிச்சிட்டு நான் அப்படியே டூ டேஸ்ல கிளம்பி வந்தது இப்போ வரைக்கும் எனக்கு கில்டியா இருக்கு.. சோ ப்ளீஸ்.. அழாத..” என்று யதுவீர் சமாதானம் செய்யும் பொழுதே, அவன் கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு பின்னே இருந்த காரின் ஹாரன் சத்தம் கேட்க, இவனோ வண்டியை கிளம்ப வேண்டிய நிலை..

“ஹ்ம்ம் நான் வொர்ரி பண்ணல யது…” என்று முகத்தை துடைத்தவள், “கிளம்பலாம்…” என்று சொல்ல, ஒருநொடி அவள் முகத்தை ஆசையாய்  பார்த்துவிட்டு தான் யதுவீர் காரைக் கிளப்பினான்..

குளிர் காலம் என்பதால், அத்தனை சீக்கிரத்தில் ஆதவன் விழிக்கவில்லை.. கரிய நிற மேகங்கள் எல்லாம் கொஞ்சம்  கொஞ்சமாய் சம்பல் நிறமாய் மாறிக்கொண்டு இருக்க, சாலைகள் எல்லாம் வெறிச்சோடி இருந்தாலும், அந்த நேரத்தில் யதுவீரோடு காரில் பயணம் செய்வது லக்க்ஷனாவிற்கு இனிமையாகத் தான் இருந்தது..

எங்கு செல்கிறோம், யதுவீர் என்ன நினைத்து வைத்திருக்கிறான் என்பது எல்லாம் அவளுக்குத் தெரியாது.. அவள் நினைத்தது எல்லாம் டெல்லி சென்று யதுவீரை காண வேண்டும்.. இப்போது அது நடந்துவிட்டது. பல நாட்கள் கழித்து அவனோடு இருக்கும் தருணம், அவள் அவன் மட்டுமே வியாபித்திருக்கும் நேரம் வேறெதுவும் சிந்திக்கவும் தோன்றாமல் இருக்க, அமைதியாய் அந்த பொழுதுகளை எல்லாம் மனதில் சேமித்துக்கொண்டு இருந்தாள்.

“தெரி மேரி.. மேரி தெரி.. பிரேம் கஹானி…” என்று மிக மிக மெல்ல சத்தத்தில் பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க, இருவரின் மனநிலைக்கும் அந்த பாடலுக்கும் சேர்த்து யதுவீரை மீண்டும் மீண்டும் லக்க்ஷனா பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க,

“யது… நான் எங்கயும் போகல… சோ ரோட் பார்த்து கார் ஓட்டு…” என்றாள் லக்க்ஷனா..

“நீ எங்கயும் போகல.. ஆனா லக்க்ஷி.. உனக்கு எப்படி சொல்லன்னு தெரியலை.. திஸ் இஸ் டோட்டலி நியு டூ மீ.. இவ்வளோ லவ் எனக்குள்ள எங்க இருந்ததுன்னு எனக்கே தெரியலை.. எல்லாமே உன்னால தான்…” என்றவன் ஒரு கையால் அவள் கரத்தை பற்ற,

அவனை பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தவள், “நான் என்ன யது பண்ணேன்…” எனவும்,

“என்னை லவ் பண்ண.. எனக்கே தெரியாம… அதான்…” என்றவன் பிடித்திருந்த கரத்தை கொஞ்சம் தூக்கி முத்தமிட,

“ஹ்ம்ம்.. என்ன சார் இன்னிக்கு ரொம்ப எமோசனலா???”  என்றவளுக்கும் நன்றாகவே தெரிந்தது உள்ளுக்குள் தானும் அப்படித்தான் இருக்கிறோம் என்று..

“தெரியலை.. பட்.. இப்படியே இருக்கனும் போல இருக்கு லக்க்ஷி.. அவ்வளோதான்.. நீ நான்… மட்டும்….” என்றவன் எதோ யோசனைக்கு போக,

“என்ன யது..??” என்றாள் அவளும் கேள்வியாய்..

“ம்ம்ம் நத்திங் பேபி…”

“என்கிட்ட சொல்லமாட்டியா??”

“நம்ம சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாமா???” என்று யதுவீர் கேட்டதும் லக்க்ஷனாவிற்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்..

ஏனெனில் அவன்தானே சொன்னான் திருமணத்திற்கு எப்படியும் ஐந்து மாதங்களாவது ஆகவேண்டும் என்று.. ஆனால் இப்போது அவனே இப்படி கேட்க, லக்க்ஷனாவோ பேந்த பேந்த தான் விழித்தாள்..

“ஹா ஹா.. லக்க்ஷி… என்ன அப்படி பாக்குற.. நீ தூரமா இருக்கப்போ மத்த விஷயங்கள் எல்லாம் நியாபகம் வந்து அப்படி சொல்ல வச்சது.. இப்போ நீ இங்க இருக்கப்போ இப்படி பேச வைக்குது..” என,

“ஹ்ம்ம் அப்போ நாளைக்கு நான் கிளம்பவும் நீ என்ன செய்வ???” என்றவள், இவன் என்ன சொல்வான் என்பதுபோல் அடிக்கண்ணில் பார்க்க,

“அக்ச்சுவலி நீ இந்த வீக் டெல்லி வராம இருந்திருந்தா நெக்ஸ்ட் வீக்கென்ட் நானே சென்னை வந்திருப்பேன்..” என்று யதுவீர் சொல்ல,

‘நிஜமா….’ என்பதுபோல் லக்க்ஷனா பார்க்க,

“எஸ்… லக்க்ஷி…” என்றவன் கண்களை மூடித் திறக்க,

“ம்ம்ம்…” என்றவள் அவன் தோள்களில் சாய்ந்துகொள்ள, அமைதியாகவே அந்த கார் பயணம் தொடர்ந்தது.

அப்போதும் கூட லக்க்ஷனா எங்கே போகிறோம் என்று கேட்காமல் இருக்க, “என்ன லக்க்ஷி எங்க போறோம்னு கேட்கவேயில்லை..” என்று யதுவீர் கேட்க,

“உன்கூட தானே போறேன்…. சோ உனக்குத் தெரியாதா என்னை எங்க கூட்டிட்டு போகணும்னு…” என்று லக்க்ஷனா சொல்லவும்,

“ம்ம்…” என்று சிரித்துக்கொண்டவன்,

முதன்முதலில் லக்க்ஷனாவை அழைத்துக்கொண்டு சென்றது டெல்லியின் புகழ்பெற்ற கோவிகளில் ஒன்றான கால்காஜி மந்திர்க்கு.. பிராதன காளி கோவில். முதல் நாளே யதுவீர் முதலில் இங்கே போகவேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்..        

கோவிலின் முன்பு காரை நிறுத்த, லக்க்ஷனாவிற்கு அது இன்னும் ஆச்சர்யமாய் போனது.

“கோவிலுக்கா..” என்று கேட்டபடி இறங்க,

“ம்ம் இந்த கோவில் எனக்கு எப்பவுமே ஸ்பெசல் லக்க்ஷி… டெல்லி வர்றப்போ எல்லாம் இங்க வந்திடுவேன்..” என்றபடி அவனும் இறங்க, அது வார இறுதி நாள் என்பதால் கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருந்தது..

லக்க்ஷனாவும் யதுவீரும் வரிசையில் சென்று நிற்க, கூட்டத்தில் இருந்த ஒருசிலர் அவனை அடையாளம் கண்டுகொண்டு முன்னே செல்ல வழிவிட,

“நோ தேங்க்ஸ்…” என்று சொல்லி மறுத்தவன், வரிசையில் நிற்க, லக்க்ஷனா அவனை கொஞ்சம் பெருமையாய் பார்த்தவள், பின் திரும்பிக்கொண்டாள்..

லக்க்ஷானாவின் தோளில் கையை வைத்து அவளுக்கு பின்னே யதுவீர் நிற்க, கூட்டம் முன்னே நகர நகர, இவர்களும் அதற்கேற்றார் போல் நகர்ந்து செல்ல,

“நல்லா வேண்டிக்கோ லக்க்ஷி.. இங்க என்ன வேண்டினாலும் அது நடக்கும்..” என்று யதுவீர் குனிந்து அவள் காதருகே சொல்ல,

“நீ நிறைய வேண்டிருக்க போல யது..” என்றவளும் மனதில் ‘யதுவீரோடு நிறைவான வாழ்வு வாழ வேண்டும்..’ என்று வேண்டிக்கொண்டாள்..

ஒருவழியாய் கூட்டத்தில் நின்று, கடவுளை வணங்கி வெளிவர, யதுவீரோடு ஒருசிலர் செல்பிகள் எடுத்துக்கொள்ள அப்போது லக்க்ஷனா கொஞ்சம் தள்ளியே நின்றுகொண்டாள்..

அவளை ஒரு பார்வை யதுவீர் பார்க்க, ‘இட்ஸ் யூவர் டைம் யது..’ என்று சொன்னவள், அவனுக்கும் அவனது ரசிகர்களுக்குமான இடைவெளியில் தான் புகாமல் இருந்துகொள்ள, அடுத்து கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டானர்..

“ஹ்ம்ம் கோவிலுக்கு வந்தது அது ஒருவித அமைதி கொடுக்குது…” என்று லக்க்ஷனா சொல்ல,

“எஸ்…. ஒவ்வொரு டைம் டெல்லி வர்றப்போவும் இங்க வந்திடுவேன்…. சம்திங் இங்க வந்தா அடுத்து எல்லாமே நல்லாதா நடக்கும் அப்படின்னு ஒரு தாட்…” என்று யதுவீர் சொல்லி சிரிக்க,

“ஹ்ம்ம் குட்.. அடுத்தது எங்க…” என்று லக்க்ஷனா கேட்கவும்,

“வேறெங்க ஹோட்டல் தான்…” என்றவன் அடுத்து காரை வேகமெடுத்தான்..

ஹோட்டல் சென்று காலை உணவு முடித்து, அடுத்து கொஞ்ச நேரம் ஷாப்பிங் என்று சுத்தி, அவளுக்கு அவன் வாங்கி கொடுத்து, அவனுக்கு அவள் வாங்கிக்கொடுத்து என்று இருவரும் டெல்லியை சுற்ற, யதுவீரோ எங்கேயும் லக்க்ஷனாவின் கரங்களை விடவேயில்லை.

அவளும் அப்படித்தான்.. இது எங்களுக்கான நேரம் என்று இருந்தாள்.. மனதில் ரொம்ப ரொம்ப திருப்தியாக சந்தோசமாக இருந்தது.. இந்த நாள் இப்படி அமையும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.. ஆனால் மதிய உணவை கொஞ்சம் சீக்கிரமே முடித்து, யதுவீர் காரை வேகமாய் செலுத்த,

“என்ன யது இவ்வளோ ஸ்பீட்..” என்று லக்க்ஷனா கேட்க,

“நெக்ஸ்ட் இன்னொரு ஸ்பெசல் பிளேஸ் போறோம் லக்க்ஷி…” என்றவன் அவள் எத்தனை கேட்டும் எங்கே என்றுமட்டும் சொல்லவேயில்லை..

கிட்டத்தட்ட இரண்டு மணிநேர கார் பயணம், நடு நடுவே நல்ல சீனரிகள் எதுவும் தென்பட்டால் அங்கேயெல்லாம் யதுவீர் காரை நிறுத்தி லக்க்ஷனாவோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டான்..

“இப்போகூட சொல்ல மாட்டியா ???” என்று பொறுமையை கை விட்டு லக்க்ஷனா கேட்க,

“ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் பேபி..” என்றவன் அடுத்து கொண்டு போய் காரை நிறுத்திய இடம் பார்த்து கொஞ்சமில்லை ரொம்பவும் அசந்து தான் போனாள் லக்க்ஷனா..

“யதுவீர்…!!!!!!” என்று அவனை அதிர்ந்து பார்த்தவளை,

“ஹா ஹா லக்க்ஷி.. ஹவ் திஸ் இஸ்…” என்று புருவங்களை உயர்த்திக் கேட்க,

“ஹா… யது…” என்று தலையை இடம் வலமாய் ஆட்டியவள், வேகமாய் அவனை கட்டிக்கொள்ள,

“ஹா ஹா…” என்று சிரித்தவன், “கம் லெட்ஸ் கோ…” என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றான்..

லக்க்ஷனாவிற்கு தாஜ்மஹால் பற்றிய சிந்தனை கூட இல்லை.. ஆனால் யதுவீர் அவளை அங்கே அழைத்து வந்திருக்க, மனதில் மேலும் மேலும் அவன் மீதிருக்கும் காதல் கூடியது உண்மைதான்..

அவனது இத்தனை அன்பையும் தன்னால் சுமக்க முடியுமா என்று தெரியாமல் கொஞ்சம் திண்டாடித்தான் போனாள்..

“ஹே லக்க்ஷி வாட் ஹேப்பன்…??” என்று கேட்டவனைப் பார்த்தவள்,

“ரியலி.. நான் இன்னிக்கு ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன் யது…. எனக்கு இங்க வர்றபோ மீட்டிங் முடிச்சிட்டு உன்னை பார்க்கணும் அது மட்டும் தான் மைண்ட்ல இருந்தது.. வேறெதுவும் இல்லை.. பட் நீ.. என்னை நேத்து நைட்தான் பார்த்த அதுக்குள்ள இவ்வளோ ப்ளான் பண்ணிருக்க.. ரியலி ஐம் லக்கி…” என்று சொல்ல,

“நீ லக்கி நான் லக்கின்னு தனி தனியா சொல்லாத லக்க்ஷி.. நம்ம லக்கி கப்பிள்ஸ் தான்.. நம்ம லவ் ஸ்பெஷல் தான் எப்பவுமே…” என்றவன் அவளை தோளோடு சேர்த்து அணைத்தபடி உள்ளே அழைத்து செல்ல, அங்கேயும் கூட்டமாகத் தான் இருந்தது..

ஆனால் அதெல்லாம் இவர்கள் கண்டுகொள்ளவில்லை.. கூட்டமாவது இன்னொன்றாவது இப்படியொரு இடத்திற்கு வந்து, மற்றவர்களை கண்டுகொண்டால் அது எப்படி நியாமாக இருக்குமா என்ன?? என்று நினைத்தவர்கள் முழுக்க முழுக்க தங்கள் நினைவுகளில் மட்டும் சுற்றிப் பார்க்க, அந்த பொழுது அத்தனை ரம்யமாய் கழிந்தது..

கொஞ்சம் கொஞ்சமாய் மாலை பொழுது கவிழ்ந்து கொண்டு வர, அடுத்து கொஞ்ச நேரத்தில் இருவரும் அவரவர் அறைக்குத் திரும்ப வேண்டுமே என்றிருக்க, கார் பயணம் முழுவதும் கொஞ்சம் அமைதி தான் நிரம்பி வழிந்தது.

அவ்வப்போது யதுவீர் லக்க்ஷனாவின் கரங்களை இருக்கப் பற்றுவதும், பின் விடுவதுமாய் இருக்க,

அவளோ “ரிலாக்ஸ் யது.. அடுத்து எப்போ மேட்ச்… லாஸ்ட் த்ரீ மேட்ச் எல்லாம் வின் பண்ணது செம சூப்பர்ல..” என்று பேச்சை மாற்ற,

“எஸ் லச்க்ஷி.. தொடர்ந்து த்ரீ மேட்சஸ் வின்.. டோட்டல் எட்டு மேட்சஸ். இன்னும் டூ வின் பண்ணிட்டா நாங்க சீரீஸ் வின் பண்ணிடுவோம்…” என,

“கண்டிப்பா அடுத்து வர எல்லா மேட்சும் வின் பண்ணுவீங்க…” என்றவள், “என்னோட விஷஸ் உன் டீமுக்கும் கனவே பண்ணிடு..” என்றாள்..

“ம்ம்…” என்று தலையை ஆட்டி யதுவீர் அவள் சொன்னதை ஏற்றுகொள்ள, “ஷீலு கிட்ட சொன்னியா நீ??” என்றான் அப்போது தான் நியாபகம் வந்தவனாய்..

“நேத்தே சொல்லிட்டேன் யது.. இன்னிக்கு நம்ம மீட் பண்றதுனால நாளைக்கு மீட் பண்ணலாம் சொல்லிட்டா.. நீயும் நாளைக்கு பிசி ஆகிடுவல்ல..”

“எஸ் லக்க்ஷி.. அடுத்த நாள் மேட்ச் இருக்கே.. சோ நாளைக்கு ரொம்ப பிசி.. பட் நீ ஏர் போர்ட் போறப்போ சொல்லு ஐ வில் கம் தேர்..”

“ வேணாம் யது.. நீ ரிலாக்ஸா உன் வொர்க் பாரு.. இந்த டே வே எனக்கு ரொம்ப புல்பில்லா இருக்கு…” என்று லக்க்ஷனா சொல்ல,

“ஹ்ம்ம்…” என்று அதற்கும் தலையை ஆட்டிக்கொண்டான், இப்படியே பேசியபடி வர, அடுத்து லக்க்ஷனாவை அவள் தங்கியிருக்கும் ஹோட்டலில் இறக்கிவிடும் பொழுது நேரம் இரவு ஒன்பதை கடந்திருக்க,

“நானே போயிப்பேன் யது.. நீ கிளம்பு…” என்று அவள் அத்தனை சொல்லியும் கேட்காது,

“நானும் வருகிறேன்..” என்று சொல்லி, அவளோடு அவனும் உள்ளே வர, அதற்கு  முன்பே லக்க்ஷனா வருகிறேன் என்று ரூப்பாவிற்கு சொல்லியிருந்தமையால் அவர்கள் எல்லாம் இவளுக்காக ஓர் அறையில் காத்திருக்க, யதுவீரோடு லக்க்ஷனா வரவும் அனைவருக்கும் சந்தோசமாய் போனது..

“ஹாய் கைஸ்…” என்றவன் அவர்களோடும் கொஞ்சம் நேரம் செலவிட்டு, பின் செல்ல, அத்தனை நேரம் அவனோடு இருந்தாலும், இப்போது கிளம்புகையில் கொஞ்சம் அவள் முகம் சுனங்க,

“ஆல்வேஸ் ஹேப்பி சென்ட் ஆப் தான் கொடுக்கணும்..” என்று கொஞ்சம் யதுவீர் மிரட்டவும்,

“நீ இருக்கியே…” என்ற முறைக்கத் தொடங்கியவள், “பை யது.. நாளைக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு ப்ளைட்…” என,

“ஓகே பேபி.. நாளைக்கு மீட் பண்ணலாம்..” என்று சொல்லி அவளுக்கு கை காட்டி விட்டு சென்றான்..

அவன் சென்றபின்னும் கூட லக்க்ஷனா அங்கேயே நின்றிருக்க, “ஹல்லோ மேடம் இப்போவாது எங்களை கொஞ்சம் கவனிக்கிறது…” என்றபடி அவளுது நட்புக்கள் அங்கே வர,

“ஹே சாரி.. எல்லாம் மார்னிங் இருந்து என்ன பண்ணீங்க??” என்று கேட்டபடி அவர்களுடன் மீண்டும் அறைக்குச் சென்றாள்..

கொஞ்ச நேரம் கலகலப்பாய் பேசியபடியும், நாளை எங்கே செல்வது என்று ஆளாளுக்கு ஒன்று சொல்லியபடியும் கொஞ்ச நேரம் பொழுது கழிய, அடுத்து கொஞ்ச நேரத்தில் மீரா அழைத்துவிட்டார்..

“ம்மா…” என்றவளின் குரலே மகிழ்வாய் ஒலிக்க,

“லக்க்ஷி.. என்ன காலைல இருந்து போன்னே இல்லை..” என்று மீரா கேட்க,

“ம்மா யதுவும் நானும் வெளிய போனோம்…” என்றதும்,

மீராவின் முகம் அங்கே கொஞ்சம் யோசனையாய் சுருங்க, இங்கே இவளோ “கோவிலுக்கு போனோம்மா.. தென் கொஞ்சம் ஷாப்பிங்.. அப்புறம் தாஜ் மஹால்.. அப்படியே சப்பிட்டிட்டு யது வந்து என்னை டிராப் பண்ணிட்டு போனான்…” என்று சந்தோசமாகவே எல்லாம் பகிர,

“ம்ம் ம்ம்.. ஓகே லக்க்ஷி.. வேற எதுவும் பிராப்ளம் இல்லையே..” என்றார் மீரா..

“அதெல்லாம் இல்லம்மா.. நாளைக்கு எல்லாம் ஷாப்பிங் போறோம்.. அப்படியே ஷீலு வர்றேன் சொல்லிருக்கா.. சோ மீட் பண்ணிட்டு ஈவ்னிங் ப்ளைட் ஏறிட வேண்டியது தான்..”

“ஓகே.. இப்போ தூங்கு.. டைம் ஆச்சு.. நாளைக்கு பேசுறேன்..” என்று மீரா போனை வைத்துவிட, அவர் மனமோ ஆயிரம் யோசனைகளை சூடியது..

அங்கே யதுவீரும் சரி, லக்க்ஷனாவும் சரி அன்றைய நாளின் இனிமையோடு இரவு தூக்கத்தை தொட, மறுநாளோ இருவருக்கும் அவரவர் குழுவோடு நேரம் கழிய,

ஷீலு லக்க்ஷனா  எந்த இடத்தில் இருக்கிறாள் என்று கேட்டறிந்து அவளை வந்து பார்த்தும் விட்டு போக, ஒருவழியாய் டெல்லியில் இருந்து கிளம்பும் நேரமும் வந்தது.                                                         

                                         

                       

                               

Advertisement