Advertisement

பூக்கள்-8

“ஆறாத காயங்ககளை….  ஆற்றிடும் நம் நேசம் தன்னை….

மாளாத சோகங்ககளை….. மாய்த்திடும் மாயம் தன்னை…..

செய்யும் விந்தை…. காதலுக்கு… கைவந்ததொரு கலைதானாடி….

உன்னை.. என்னை.. ஒற்றி ஒற்றி…

உயிர் செய்யும் மாயமும் அதுதானடி ……

நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது….. இன்னுரு உயிர்தானடி…..

நீ… நீல வானம்…

நீ…யும்… நானும்…..

கண்களே பாஷயாய்…..

கைகளே ஆசையாய்…..”

 

கைலாஷ் சொல்லியது போல் அடுத்த 1௦ நிமிடங்களில்…. தன் சித்தப்பா வீட்டை அடைந்திருந்தாள்…… முதலில் பார்த்த விசாலாட்சிக்கு அவளை அடையாளம் தெரியவில்லை தான்….. சுப்பிரமணியம் தான் போன் செய்து சொல்லி இருந்தார்……  விசாலாட்சிக்கு…. தன் பெண்ணுடன் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையும் வருவதாக…….

இப்போது கண்டு கொண்ட விசாலாட்சி…. “வாம்மா… காயத்ரி, வாங்க தம்பி …” என வரவேற்றார்…. அப்போதும் அவர்க்கு தெரியவில்லை….. இந்த கைலாஷ் தான் தன் பெண்ணிற்கு பார்த்த மாப்பிள்ளை என…..

கைலாஷ் தான் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்….”ஹாய் ஆன்ட்டி…. என பேரு கைலாஷ்…. நான்…..” என அவன் தயங்க…..

விசாலாட்சி சிரித்துக் கொண்டே “எங்க வீட்டுக்கு வரப் போற மாப்பிள்ளை..” என்றவர்….. நலம் விசாரித்து….. முறையாக கவனித்தார்…..

அவர்கள் வந்து சேரும் போதே மதியம் 1 மணி…. அதனால்….. விருந்தே தயார் செய்திருந்தார் விசாலாட்சி, எனவே உடனே உணவு உண்ண அழைத்தார்…..

கைலாஷ் சிறிது நேரம் செல்லட்டும் என அமர்ந்துக் கொள்ள….. அரை மணி நேரம் கடந்து வந்தாள் வைஷ்ணவி…. இப்போது தான் வீடு சற்று கலகலப்பானது….

வைஷ்ணவிக்கு கைலாஷை அறிமுகம் செய்யும் போது…. அதாவது கைலாஷ் என்ற பெயரை கேட்ட உடனேயே…. ஒரு வேலை இது நம் அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளையோ…. என்ற எண்ணம் வந்தது….. ஆனால் எப்படி அதை உறுதி செய்வது என தெரியவில்லை….. அவளிற்கு.

அத எதையும் முகத்தில் காட்டாமல்….. வைஷ்ணவி நன்றாகவே பேசினாள்….. காயத்ரியிடம் மிகவும் நன்றாக ஒட்டிக் கொண்டாள்….. காயத்ரிக்கு இந்த இடம் மிகவும் பிடித்தது…..      

காயத்ரிக்கு அந்த ஓட்டு வீடு மிகவும் பிடித்திருந்தது….. சுற்றிலும் மரங்கள்…… பின் புறம் கிணறு….. வீட்டிற்கு தேவையான….. காய்கறி, கீரை வகைகள், மல்லி பந்தல்….. அந்த இடமே அமைப்பாக இருந்தது…… காயத்ரி அதனை பார்த்துக் கொண்டே செல்ல….

வைஷ்ணவி, என்ன தான் காயத்ரியிடம் பேசிக் கொண்டிருந்தாலும்…. அவளின் கவனமெல்லாம் எப்படி எப்படி கைலாஷிடம் பேசுவது…. எப்படி தெரிந்து கொள்ளவது என்பதிலேயே இருக்க…..

வைஷ்ணவி உள்ளே சென்றாள்…. தன் அம்மாவிற்கு தெரியாமல் எதையோ தேடி எடுத்து பார்த்தாள்….. அதில் இருந்த பெயரை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வந்து கைலாஷின் எதிரில் அமர்ந்தாள்….

வைஷ்ணவி கைலாஷின் எதிரில் அமரவும்….. கைலாஷ் இயல்பாக என்ன படிக்கிறாய்….. என்ன… என்று கேட்டுக் கொண்டிருந்தான்…..

இவளும் பதில் சொல்லிக் கொண்டிருந்தவள்…. ஒரு கட்டத்தில், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு….  கைலாஷிடம் இறங்கிய குரலில்… “மாமா…. நான் ஒன்னு கேட்பேன்…. என்றுவிட்டு திரும்பவும் சுற்றும் முற்றும் பார்க்கவும்…

பயந்தே போனனான் கைலாஷ் “என்ன …” என்றான்…… இறங்கிய குரலில்…..

“உங்க அப்பா பேர் என்ன…..” என மெலிதான குரலில் கேட்க…..

கைலாஷ் கலகலவென சிரித்தான்…… .சத்தமாக….. என்ன என மற்ற இருவரும் திரும்பி பார்க்க……. அவனுக்கு கண்ணில் நீரே வந்தது….. ஒன்றுமில்லை என தலை அசைத்தவன்…..

இப்போது தான் அந்த மர நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு….. புருவம் உயர்த்தி “எதுக்கு….” என  கேட்டான். வைஷ்ணவியிடம்.

என்ன சொல்வாள் அவள்….. சுதாரித்துக் கொண்டு….. “உங்களை…. நாங்க விசாரிக்க வேண்டாமா…. அப்படியே நம்பி எப்படி பெண்ணை கொடுப்பது….”என இப்போது இவள் அமர்த்தலாக பதில் சொல்ல….

“ம்கூம்…. இது ரீசன் இல்லை… எனக்கு தெரியும்….. ஆனாலும் சொல்றேன்….” என்றவன்…..

“என் அப்பா பேர்….. குருமூர்த்தி, நாங்க ஒரு ட்ராவெல் ஏஜென்சி வைத்திருக்கிறோம்……. அண்ணாநகர், சென்னையில் இருக்கோம்…..  போதுமா…. என் செல் நம்பர் …” என ஏதோ சொன்னான்.

இதையெல்லாம் எங்கு அவள் கவனித்தால்….. குருமூர்த்தி என்ற வார்த்தையில் தான் அவளுக்கு தேவையான விவரம் தெரிந்ததே  விட்டதே…. பிறகென்ன….

கைலாஷ் பேசிக் கொண்டிருக்க…. அதை அவள் கவனிக்க கூட இல்லை….. ஓடி சென்றாள்… தன் அம்மாவிடம்… சென்றவள்……..அனைத்தையும் சொன்ன பின்னரே வெளியே வந்தாள்….

பாவம், விசாலாட்சிக்கு தான்….. மனதே இல்லை…. என்ன அருமையான பையன்….. தன் பெண்ணிற்கு தான் கொடுத்து வைக்க வில்லை…. என மனதை தேற்றிக் கொண்டார்…..   

அதன் பின், வைஷ்ணவி கைலாஷிடம் நல்ல விதமாகவே பேசினாள்….. கைலாஷ் தான் என்ன என குழம்பி போய்விட்டான்….. இதை எல்லாம் இப்போது மனதின் ஓரத்தில் தான் வைத்திருந்தான்….

இதுவே மற்ற சமயமாக இருந்திருந்தாள்…… பிறரின்,  ஒரே ஒரு சின்ன குழம்பிய அசைவுகளை கூட அவன் கணித்திருப்பான்.

அவனிற்கு…. காயத்ரி மயம் தான்….. இப்போது என்ன சொல்வாள் ஏது சொல்ல்வாள்…. நான் அவளை ஈர்க்க வில்லையே என்ற எண்ணமே பிரதானம் அவனிடம்…..

நடுவில் வைஷ்ணவி கேட்டதை எல்லாம் அவன் யோசனையுடன் பார்த்தானே.. தவிர கணக்கில் கொள்ளவில்லை……

காயத்ரிக்கு…. அப்பா தன்னை நம்பி அனுப்பினார்…. என்னவென்று கேட்ட வேண்டும்.. என நினைத்துக் கொண்டிருந்தவள்……. எப்படி எங்கு ஆரம்பிப்பது என யோசனையுடன் தான் இருந்தாள்…..          

உணவு உண்ணம்…. தருணத்தில் அதற்கான பேச்சு எழுந்தது….. வைஷ்ணவி தான்…. “அம்மா என் பிரின்ட் சங்கீதா இருக்கால… அவ அண்ணா, அங்கு சென்னை காலேஜ்ல தான் வொர்க் பன்னறாங்கலாம்…. அவ கேட்டு சொல்றேன்னு சொன்னாள்….” என்றாள்.

விசாலாட்சி “சரி அப்புறம் பேசலாம்….” என்றார் கொஞ்சம் சத்தமாக….

காயத்ரி தான் “எதுக்கு சென்னை காலேஜ்…. ப்ராஜெக்ட் ஏதாவது….” என கேட்ட்க….

என்ன சொல்வது என விசாலாட்சி திகைக்க….. வைஷ்ணவி இது தான் சமயம் என “எங்க பெரியம்மா….. இந்த வீடு வேணும், நீங்க கிளம்பி வேறு இடம் பார்த்து போங்க என சொல்லிட்டாங்க….” என்றாள்.

காயத்ரி முதலில் முழித்து…. பின் தனது அம்மா என புரிந்து கொண்டு “ஏன்….. என்ன….”என்றாள். திக்கி திக்கி….

விசாலாட்சி “அமைதியா இரு….” என சத்தமிட்டார். கைலாஷ் இது குடும்ப விஷயம் என ஒதுங்கி தான் இருந்தான்.

காயத்ரிக்கு ஏதோ என எண்ணம் வந்தது…… அதன் பிறகு அழுத்தி கேட்கவும்  முடியவில்லை அவளால்….. என்ன தான் சொந்தம் என்றாலும் அவர்களுக்குள்ளான பழக்கம் இல்லை அல்லவா…..

அதன் பிறகு நேரம் சென்றது மாலை 5 மணிக்கு இருவரும் கிளம்பினர்…. காயத்ரி தனியாக….. வைஷ்ணவியை அழைத்து தனது செல் நம்பரை கொடுத்து விட்டு, அவளுடைய செல் நம்பரை வாங்கியே சென்றாள்.

காரில் செல்ல செல்ல…. காயத்ரிக்கு தன் அப்பா நினைத்தது போல் தன இருக்கிறது…. எனவே தான் வந்த வேலை முடிந்தது என்ற எண்ணம்…. அதுவே அவளை “அப்பாடா…” என்று உணர செய்தது….

காயத்ரி காரிலுள்ள cd ப்ளேயரை ஆன் செய்தால்…. ஏதோ அவளுள், கலவையான உணர்வு….. தன்னால் கை நீண்டது பாட்டு கேட்க…..

பத்மாவதி ஹிந்தி வர்ஷன் ஸ்ரேயா க்ஹோசல் சாங் க்ஹூமர்……. “க்ஹூமர்…. ” என ஆரம்பிக்க…..

இவள்ளிற்கு அது தெரியாததால்…. வேறு மாற்ற……

கைலாஷ்…”ஹே…. வெயிட் …… சூப்பர் சாங்….. ப்ளே…” என்றான்.

காயத்ரி முறைத்தால்…. அதற்கெல்லாம் அவன் அசரவில்லை….. முடிந்த பின்பே வேறு மாற்றினான்…..

சிறிது நேரம் கழித்து…. கைலாஷ், அவளை பார்ப்பது ரோட்டை பார்ப்பது என… மாறி மாறி செய்ய….

காயத்ரி இயல்பாக….. சிரித்துக் கொண்டே “என்ன….” என்றாள்.

கைலாஷ் பொறுக்க முடியாமல்…. கேட்டே விட்டான்…” நான் உன்னை பாதிக்கவே இல்லையா…..” என்றான். ஆற்றாமையாக….

காயத்ரியின் சிரிப்பு நின்றே போனது…. “ஆம் இவன் கேட்பது உண்மை தானே…. ஏன் இவன் என்னை ஈர்க்கவில்லையா…”என தனக்குள் கேட்டுக் கொண்டு அமைதியானாள்….

கைலாஷ் “சொல்லு காயத்ரி….. எதுவா இருந்தாலும் சொல்லு…..” என்றான் இறுகிய குரலில்.

அவனிற்கு இதற்கு மேல் பொறுமையில்லை….. இவள் என்னுடையவலா…. இல்லையா என தெரியாமல்….. தனது கற்பனையை கூட அவனால் வாழ முடியவில்லை…….

சுற்றமெல்லாம் சொல்லிவிட்டது தான்…. இவள் உனக்கு தான் என ஆனால், இவள் மட்டும் என்னிடம் நெருங்கமாட்டேன் என்கிறாள்…… என்ன செய்வது இவளை……

அவனுள் தயக்கம்….. ஒரு முழுமையான ஆண் மகன், தன் இணையின் எண்ணம் தெரியாமல் நெருங்க நினைக்க மாட்டான்.

“தெரில கைலாஷ்….. நான் என்ன சொல்றது…… எனக்கு, என் வேலை ரொம்ப முக்கியம் கைலாஷ்….. நான் என்ன செய்ய….. ஒரு வாரம் டைம் தாங்க நான் யோசிச்சு சொல்றேன்…..” என்றாள் தயக்கமாக….

அவளே தொடர்ந்து “நீங்க…. அங்க வர  ட்ரை பண்ண மாட்டிங்களா……” என்றாள்.

“குட்….. காயத்ரி….. நான் கேட்பது நேசம்…… நீ… பேசுவது….. உனக்கு நான் என்ன கேட்கறேன்….. நீ என்ன சொல்றேன்னு தெரியுதா……” என்றான் காரமாக.

“நீ அப்பவே… சொல்லி இருக்கலாம் காயத்ரி….. ஓ…. நீ சொன்ன நான் தான் புரிஞ்ச்சிக்கலையோ…..” என்றான் காரின் ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தியபடி…..

காயத்ரி சற்று….. பயந்து தான் போனால்……” என்ன கைலாஷ்…… என்னை திரும்பவும் கார்னர் பன்ரிங்க…..” என்றாள். திரும்பவும் அதே வார்த்தை…..

கைலாஷ் கொதித்து தான் போனான்…”என்னடி கார்னர் பண்டறாங்க உன்னை…… என்னை பிடிக்குதான்னு கேட்டேன்….. அதுக்கு என்னமோ என்னோட கனடா வாங்கற…… நான் யோசிக்கணும்னு இன்னும்னு சொல்ற….. எனக்கு நிறைய வேலை இருக்கு… உன் பின்னாடியே சுத்த முடியாது….. எனக்கு கிளியர்ரா…. சொல்லிடு…. நான் உன் பக்கமே திரும்பி கூட பாக்க மாட்டேன்….. சொல்லுடி சொல்லு….” பொறுமை எல்லாம் பறந்து போயிற்று அவனிடம்…..

சென்னையை கிட்ட தட்ட நெருங்கி இருந்தனர்…… காரின் வேகத்தை குறைத்தான் சாலையோரம் நிறுத்தினான்….. அவளை நோக்கி திரும்பி அமர்ந்தான்….. ஏதும் பேசவில்லை…..

கோவம்…. என்ன சொல் வருகிறாள் இவள்….. என்னை வேண்டாம் என்கிறாளா…… கண்முடி அமர்ந்தான்….. ஏற்கனவே இவள் உணர்த்தியது தான்….. இப்போது வாய் மொழியாக கேட்ட போகிறேனா…..

சொல்லியே விடுவாளா….. நான் வேண்டாம் என சொல்லியே விடுவாளா…. கேட்க வேண்டும்….. அதையும் தான்….. இது தான் என் நிலையா அதையும் என் காதால் கேட்டே ஆக வேண்டுமா……

காயத்ரி தயங்கி தயங்கி…..”கூல்… கைலாஷ்….. உன் லைப் மட்டும் இதுல இல்ல….. நானும் தான் இதுல இருக்கேன்….. சோ, நான் யோசிக்காம ….. சொல்ல முடியாது…. சோ ப்ளீஸ்…… என்ன விட்டுடு…..” என்றாள் கண்ணில் நீருடன்…..

“இதில் எங்கோ என் அம்மா தப்பு பண்ணிட்டாங்க….. அதுக்கு நீ என்ன மன்னிச்சுடு கைலாஷ்….. ப்ளீஸ்….. என் அம்மா…. என் ஆசையை உன்னிடம் சொல்லாதது தப்பு தான் ப்ளீஸ்….. சாரி… சாரி….” என்றாள் கை கூப்பி…..

கண் மூடி இருந்தவன் திறக்கவே இல்லை….. “அய்யோ என்ன வார்த்தை சொல்லிகிறாள் இவள்….. விட்டு விடு….. நான் என்ன அவ்வளவு கொடுமையானவனா…..” என நினைத்தவன்.

கண் திறக்க அவளின் கன்னி நிறைந்த முகமும்…. கூப்பிய கைகளும் தான் தெரிந்தது…… சடாரென காரிலிருந்து இறங்கி விட்டான்….. என்ன மாரியான எதிர்ப்பு இது…..

இப்போது அவன் பொறுமையாக் இருந்தான்…… என்னென்றே தெரியவில்லை…… எல்லாவற்றையும் தன்னுள் புதைப்பவன் போல் அமைதியானான்…..

தன் போன் எடுத்து….. தனது உதவியாளர்க்கு அழைத்து….. ஒரு டாக்ஸி அனுப்பும்படி பணித்தவன்…… வெளியவே நின்றான்….

சுமார் ஒரு மணி நேரம் சென்று அவனின் கம்பெனி வண்டி வந்தது…… அவளின் முகம் கூட பார்க்காது….. ஏற்றி விட்டு அட்ரஸ் sms செய்து அனுப்பி வைத்தான்.        

அப்படியே  தன் காரின் மேலேறி அமர்ந்தவன் தான் அந்த வானத்தை வெறித்த வண்ணமே அமர்ந்திருந்தான்….. முன்பே ஒடுங்கி இருப்பவன்…… எப்போது என்ன நினைக்கிறான் என தெரியவில்லை……

போன் அடிக்கவும் தான்… நினைவுக்கு வந்தவன்…… யாரென பார்க்க… தன் தந்தை தான் எனவும் தன்னை மீட்டுக் கொண்டான்…..

“ஹலோ…. ப்பா…” என்றான் இயல்பான தருவித்த குரலில்…..

இப்போது தன்னை மீட்டுக் கொண்டவன்…. நேரே வீட்டிற்கு சென்றான்….. இந்த விஷயத்தை தள்ளி போட்டு தன் அப்பாவிற்கு அவன் நம்பிக்கை தர முனையவில்லை……

வீட்டில் சென்ற உடன் “ப்பா…. அந்த ….. அந்த காயத்ரி … அந்த சம்பந்தம் வேண்டாம் ப்பா….. இப்போ எதுவும் வேண்டாம்ப்பா…. ப்ளீஸ்…” என்றான் தெளிவாக…. கேட்டவர் தான் குழம்பினார்…

எல்லாவற்றையும் விலக்கி சொன்னவன் இதற்கு மேல் எதுவும் யாரிடமும் பேசக் கூடாது என்றவன்…… மேலே சென்றுவிட்டான்…..

அதன் பின் குருமூர்த்தியும் அவர்களுக்கு போன் செய்யவில்லை……. சுப்ரமணியமும் இவர்களுக்கு போன் செய்யவில்லை…..

குரு மூர்த்திக்கு இப்போது தோற்றுவிட்ட உணர்வு…… எவ்வளவு பெரிய அடி தன் மகனிற்கு….. மீட்ட வேண்டும் அவனை….. மீட்டே  ஆக வேண்டும்…..

 

Advertisement