Advertisement

பூக்கள்-3

“வெள்ளி நதியிலாடும் போது.. காட்சி காண வந்த நீ….

அள்ளியெடுத்து சூடும் போது… சாட்சியாகா இல்லையா…..

என்னிளந்த காதல் நெஞ்சம்.. கோடி.. கோடி.. பார்த்த நீ…

கண்ணிறைந்து வாழ கொஞ்சம்… வாழ்த்து சொல்ல மறந்ததேன்…..

என்னிதயம் துடிக்குது தினமும் உருகும் அவள் நினைவில்….

கண்ணிமையில் அவளுருவம் சொல் தமிழில் அவள்ளமுதம்…..

தனிமையில் கொடுமையில் காதலில் அன்றென்னை வாட்டியதே….

பிரிவென்னும் சிறைதனில் காதலில் இன்றென்னை வாட்டுவதேன்…………

நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே…..

நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே…..

ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே……

ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே……

நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே…..”

தன் அப்பாவுடன் தன் அறைக்கு சென்றாள்….. காயத்ரி. “ஏன் அப்பா என்னமோ மாறி இருக்கீங்க…..” என கேட்ட….

சுப்பிரமணியம் “காயத்ரி நீ அங்க….. நம்ம ஊருக்கு… ஒரு தரம் போய்ட்டு….. வாம்மா…. என்னமோ  ஏதோ தப்பா…. நடக்குதும்மா….” என்றார்.

“அப்பா நான் எதுக்கு…. எனக்கு அங்கு யாரையும் தெரியாது…..” எனக.

“இல்ல டா… ம்மா…. அது என்னால அங்கு என்ன நடக்குதுன்னு தெரிசிக்க முடியல…. நீ போய் பார்த்துட்டு சொல்லுடா….. என்ன தான் இருந்தாலும் உன் சித்தப்பா குடும்பம் டா… அது….” என்க….

என்ன ஏது என யோசனை வந்தது…. காயத்ரிக்கு, அப்படி அவர்களுக்கு என்ன நடந்து விட போகிறது…. அதுவும்  நான் போய் செய்யும் அளவுக்கு….

“நாளைக்கு நீ எதுவும் பேசக் கூடாது…….நான், அம்மாவிடம் சொல்லி விடுகிறேன்….. போய் அங்கு என்ன ஏது என பார்த்து சொல்வது மட்டும் தான் உன் வேலை “ என்றார் திரும்பவும்….

கல்யாணி விசாலாட்சிக்கு மறுநாள் காலை போன் செய்தார்…… “என்ன விசாலாம் வீடு பார்த்திட்டியா…” என்றார் எடுத்த உடன்…..

விசலாட்சிக்கு என்னடா இது நேற்று தான் சொல்லி சென்றார்கள் அதற்குள் எங்கு போவது….. எதை பார்ப்பது…. வைஷ்னவிக்கு வேறு காலேஜ் பார்க்க வேண்டும்….. என சிந்தனையில் இருந்தவர்…… எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

திரும்பவும் கல்யாணியே கேட்டார்…”ஏதாவது சொல்லு விசாலம்….. இன்னும் உனக்கு 15  தான் டைம் அதற்குள் எனக்கு நீ காலி செய்து கொடுத்தால் தான்….. நான் எனக்கு உண்டான வேலையை செய்ய முடியும்….” என்று கறாராக சொல்லி போனை வைத்து விட்டார்…..

இதுவரை யாரும் இப்படி பேசியதில்லை…. விசாலத்திடம், ஒரு கடுமையை உணர்ந்தார்….. தனது குடும்பத்தை சார்ந்தவர்களிடமிருந்து வரும் கடுமையான முகம்….. அதை நாம் பார்க்க நேரும் தருணம்….. உடைந்து விட தான் தோன்றியது விசாலாத்திற்கு……     

அதாவது…. சொத்துகளை பாகம் பிரிக்கும் போது…… சுப்ரமணியன் நிலத்தில்… வீடு இருந்தது….. எனவே அவர்கள் கனடா சென்ற போது, அதில் வசிக்க…. பாலமுருகன் தம்பதிக்கு அனுமதி வழங்கப்பட்டது….. அப்போது அதற்காக டிக்கெட்டிற்கு பணம் கொடுத்தார் பாலமுருகன்……

இப்போது கல்யாணிக்கு அந்த நிலம் தேவையாக இருப்பதால்…. இவர்களை காலி செய்ய சொல்கிறார்கள்…. இந்த விஷயம் எதுவும் சுப்ரமணித்திர்க்கு தெரியாது……

தெரிந்தால்…. தம்பி உயிருடன் இருந்தாலாவது சரி….. என்பார். ஆனால் இப்போது ஒரு பெண்ணின் தயவி குடும்பம் நடக்க ….. இதில் தானும் அவர்களை….. சொந்த இடம் விட்டு போக சொல்வதா….. என நினைத்து முடியாது என்றிருப்பார்…………

இந்த விஷயம்…. சுப்ரமணியத்திற்கு தெரியாது என்பது….. விசாலத்திற்கு தெரியும்….. ஆனால் தான் போய் எப்படி சொல்ல்வது என அமைதியாக இருந்தார்……..  

தங்களுடைய நிலத்தில் வீடு கட்டலாம் என்றாள்….. முடியாது, ஏனென்றால் அதை விற்று தான் இரு பெண்ணகளின் திருமணம் முடிக்க வேண்டும்……

இப்போது போய் தாய் வீட்டில் நிற்க முடியுமா…. அதுவும் அம்மா, அப்பா வேறு இல்லை… ஒரே ஒரு அண்ணன் மட்டுமே………..   

ஒரே வழி சென்னை தான்…… அகல்யாவிடம் சொல்ல வேண்டும்…..  என அந்த வாரம் முழுவதும் ஒரே யோசனை விசாலாத்திற்கு……….

இவர் நினைத்துக் கொண்டிருந்த தருணம்…..  அகல்யாவிடமிருந்து போன்… “அம்மா………” என்ற கூவலுடன்…..

விசாலத்திற்கு அந்த சந்தோஷமே புது நம்பிக்கையை கொடுத்தது…… “என்னடாம்மா….” என்றார்.

அகல்யா…”என்ன 6 மன்த் சிங்கப்பூர்….. அனுப்பராங்கம்மா………” என்றாள் துள்ளலுடன்……….

அவளிடம் நல்லவிதமாகவே பேசி வைத்தவர் என்ன செய்வது யாரிடம் கேட்பது என விழித்துக் கொண்டு நிற்கும் போது தான்………. காயத்ரி வந்தாள்…. கூடவே கைலாஷ்………

விசாலாத்திற்கு முதலில் புரியவில்லை தான்…… பின்பு பெரியவர், அதாவது சுப்ரமணியன்  போன் செய்து சொன்னது நியாபகம் வர….. அதன் பின் “வாம்மா…. காயத்ரி, வாங்க தம்பி …” என்று வரவேற்றார்….   

ஆம் இருவரையும் தான் அனுப்பி இருந்தார் கல்யாணி……

ஒரு வாரத்திற்கு முன்பு…. சரியாக ஊற்கு வந்த போதே….. கல்யாணி வீட்டை காலி செய் என்று சொன்ன உடன் ……. விசாலம் தான், சொல்லி இருந்தார்….. அகல்யாவிற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்…. அவள் திருமணம் முடிந்ததும் நான் வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்றார்…….

அதில் கல்யாணிக்கு ஒன்றும் முரண்பாடு இல்லை போலும் சரி என்று சொல்ல வந்தவர்…. பின்பு எப்படி யார்….. என பேச்சு திசை மாறவும்….. அங்கு சுற்றி…….. இங்கு சுற்றி….. கைலாஷ் தான் அது என தெரியவும்………. அதுவும் தன் அண்ணன் மூலமாக தான் நடந்து கொண்டிருக்கிறது என தெரியவும்….

தாய் மனம்….. தப்பு கணக்கு போட்டது……….

எனவே….. எல்லோரையும் பகைத்துக் கொண்டார்….. கல்யாணி, ஆம் தன் அண்ணனிற்கு போன் செய்து……

“என்ன அண்ணா… இப்படி செய்து விட்டாய்…. நான் கைலாஷை தான் காயத்ரிக்கு பேசலாம் என நினைக்க…. நீ அதை எப்படி அகல்யாவிற்கு பார்க்கலாம்…..” என்று ஒரு பிடிவாத குரலில் கேட்க…..

அவரும் நொந்தே தான் போனார்….. “நீ தானே ம்மா….. கனடாவில் செட்ல்லாக கூடிய மாப்பிள்ளை வேணும் என்றாய்….. அதனால் தான்… அவளும் நம் பிள்ளை தானே ம்மா….. நல்ல இடமாக் அமைந்தால்….. விசாலாத்திற்கு சற்று நிம்மதி என தான்… பார்த்தேன்….” என விளக்க.

ஏதேதோ பேசி கடைசியாக….. நீ தான் குருமூர்த்தி அண்ணனிடம் பேசுகிறாய்….. எனக்கு இந்த வரனை தான் நீ முடிக்க வேண்டும்…… என கல்யாணி ஒரே பிடிவாதம்…..

கல்யாணியின் அண்ணன் தாமோதரன் சொல்லி பார்த்தார்….. “நம் பெண்ணுக்கு என்ன குறை….. பொறுமையாக செய்யலாம்…. அவள் எதிபார்க்கிற படி நல்ல வரனை நான் பார்த்து முடித்து வைக்கிறேன்….

அத்தோடு, கைலாஷ் கனடா வரவெல்லாம் சம்மதிக்க மாட்டான்….. குருமூர்த்தி அப்படியெல்லாம் ஒத்துக் கொள்ளமாட்டார்…..” என லட்சம் முறை எடுத்து சொல்லியும் கல்யாணி தனது பிடியை குறைக்கவில்லை.

கல்யாணியின் அண்ணி அரசி கூட நொடித்துக் கொண்டார்… “ எனக்கு இந்த பையன் தான் வேணும் என சொல்லும் பெண்களை பார்த்திருக்கேன்….. ஆனா, முத தரவையா…… இந்த மாப்பிள்ளை தான் வேணும் என கேட்கும் மாமியார…… இப்போ தான் பார்க்கிறேன்….. “

தொடர்ந்து… ”ஏங்க…. நம்ம பிள்ளை கிட்ட ஏதாவது….. குறையோ…… அதான் அண்ணி, யாரும் இல்லாத இடமா பார்த்து கொடுத்தாக, கேள்வி கேட்க மாட்டாங்கன்னு….. இப்படி செய்யுதான்களோ…. “ என்க.

தாமோதரன் “நீ ஒருத்தி போதும்…. இந்த சம்மந்தத்தை கலைக்க….. எங்கிட்ட கேட்ட மாறி கல்யாணிக்கிட்ட ஏதும் பேசிடாதே…. அவ்வளவு தான் நீ தொலைஞ்ச…. பாத்து நடந்துக்கோ….. உங்க வீட்டு ஆளுகளுக்கு தெரிய கூடாது …… ஏதாவது வெளியே வந்தது….. அப்புறம் பேரன் பேத்தி எடுத்ததுக்கப்புறம் டிவேர்ஸ்…. வாங்குனவங்க நாமளாதான் இருப்போம்…..” என தன் கடுமையை…… தன் மனைவியிடம் காட்டினார்.  தங்கைக்கு ஏற்ற அண்ணனாக…..

தாமோதரன் என்ன செய்வது…. எப்படி இதை நடத்திக் கொடுப்பது…. என தான் யோசனை அவருக்கு…. தன் தங்கை ஒன்று கேட்டு அதை தான் எப்படி செய்து கொடுக்காமல் போகலாம்….. என்ற எண்ணம் தான் இப்போது…..

தந்தை இல்லாத பெண்…. தன்னால் முடிந்த உதவி செய்து கைதூக்கி விடுவோம்….. என்ற எண்ணமெல்லாம் தன் தங்கையின்….. கோரிக்கையின் முன் தவிடு போடி ஆனது.

கல்யாணியை பொறுத்தவரை….. தன் பெண்கள் நால்வர்க்கும் நல்ல முறையிலேயே திருமணம் செய்தார்….. ஆனால் எல்லா மாப்பிளைகளும், மாத சம்பளக்காரர்கள்…..

ஆனால் ஒழுக்கமானவர்களாக இருந்தார்கள்…. என்பது  அவர் கண்களுக்கு முதலில் தெரிந்தது…. இப்போது சற்று மங்கி தெரிகிறது…. அவ்வளவே.

தற்சமயம், வந்த போது தான்….. குருமூர்த்தியின் வீட்டிற்கு சென்றிருந்தார்…. அவரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு…. அப்போதும் ஏனோ.. தானோ… வென சென்றவர் தான்……

கைலாஷ் தலையெடுத்த பிறகு தொழிலில் கொஞ்சம் மாற்றம் வந்தது அது வீட்டிலும் நிகழ்ந்தது…… பழைய வீட்டை புதுபித்து இருந்தான்….. அவர்கள் வீடும் பெரியது…. குருமூர்த்தியின் அப்பா காலத்து வீடு.  

அந்த வீட்டின் செழுமையும், அதன் வனப்பும் தான் முதலில் அவரை ஈர்த்தது….. பின் நிறைய தெரிந்தவர்கள்….. எல்லாம் உறவு முறையை தாண்டிய…. பிணைப்பு…..

“குருமூர்த்திக்கும், கைலஷிற்கும்  தொழிலில் நல்ல பெயர்….. எல்லா பெரிய இடத்து மனிதகளிடமும் அவர்களுக்கு பழக்கம்….. அவர்கள் அனைவரும் அவரிடம் காட்டிய அன்பு” என கல்யாணியை மிரள செய்தது…..

பல தலைமுறைகளாக….. ஒரே இடத்தில் காலுன்றி வளர்ந்தவர்கள் அவர்கள்….. அதனால் அவர்களின் செல்வாக்கு அப்படி….. பணம் என்ற அளவு கோல்…. இங்கே வரவில்லை.

கல்யாணிக்கு தோன்றியது….. நம்மிடமும் பணம் இருக்கிறது….. ஆனால், இந்த செல்வாக்கு, ஒரு பத்து மனிதர்க்கு நம்மை தெரியுமா…… காசு கொடுத்தால் எல்லாம் நடக்கிறது தான்…..

ஆனால் இந்த அதீத அன்பு….. மனிதர்களின் முகத்தில் தெரியும் இந்த கனிவு….. இதெல்லாம்…. சாத்தியமே இல்லை….. என நெகிழ்ந்து தான் போனார் கல்யாணி.

அதை நினைத்துக் கொண்டே இருந்தவர்….. அன்று அகல்யாவிற்கு….. இந்த குருமூர்த்தியின் பையன் ஜாதகம் வந்ததை பார்த்தவர்….. அதுவும் தன் அண்ணன் மூலமாக என அறிந்தவர்….. காய் நகர்த்தினார்….. தன் அண்ணன் மூலாமாகவே.

அதற்காவே தானும்…. இப்போதே வீட்டை காலி செய்ய வேண்டும் என விசாலத்திடம் கூறி வந்தார் கல்யாணி.                   

இரண்டு நாட்களாக தாமோதரனுக்கு என்ன செய்வது எப்படி செய்வது என ஒரே யோசனை….. அன்று குருமூர்த்தியே போன் செய்தார்…. தாமோதரனுக்கு….. “என்னப்பா…. என்ன சொல்ல்றாங்க பொண்ணு வீட்டு காரங்க….. எங்களுக்கு சம்மதம்…. மேற்கொண்டு பேசலாமா…” என்றார்.   

தாமோதரன் “நான் கேட்டு சொல்கிறேன் ….” என்று வைத்துவிட்டார்…..

உடனே கல்யாணியை அழைத்து பேசினார்….. கல்யாணியும் “நீ பேசு…. ண்ணா…. விசாலம்…. இப்போதிக்கு திருமண ஏற்பாடெல்லாம் செய்யமாட்டார்…” என்றார் உறுதியான குரலில். தான் கொடுத்த அழுத்தம் அவ்வாறு பேச வைத்தது கல்யாணியை.

அதே போல் தாமோதரன் பேசும் போது….. விசாலம் வேறு காரணம் கூறினார்…. “அகல்யா ஆபிஸ்ல சிங்கப்பூர் அன்னுப்பராங்கலாம்…. அதனால இப்போ கல்யாணம் வேணாம்ன்னு சொல்றான்னா….” என்றார்.

தாமோதரனுக்கு மிகவும் சந்தோஷம்” அப்பாடா…. நம்மளால.. ஒரு பெண்ணின் வாழ்வு கெடவில்லை…. ஏதோ அவளின் குடும்பத்திற்கு இன்னொரு வாய்ப்பு வந்து விட்டது.” என்றே மகிழ்ச்சி அவர்க்கு…

அதை அப்படியே கூறினார்….. தாமோதரன், குருமூர்த்தியிடம்……

குருமூர்த்தி தான் “பையனுக்கு 2 மாசத்துல கல்யாணம் பண்ணனுமாம்… இல்லன்னா தள்ளி போகுமாம்….” என்றார் கவலையாக.

அப்போதிக்கு “ஒ…” என்று கேட்டுக் கொண்டவர்…. பிறகு எதுவும் பேசாது “வைக்கிறேன்” என்று வைத்துவிட்டார்     

மறுநாள் குருமூர்த்திக்கு போன் செய்த தாமோதரன்…. “என்…. தங்கை பெண் காயத்ரியை பார்க்கலாமா….” என ஆரம்பித்து….. காரியத்தை செவ்வனே செய்தார்.

உடனே ஜாதகம் பார்த்தார்கள்….. 10 பொருத்தமும் பொருந்தி இருந்தது….. காயத்ரி கைலாஷிர்க்கு……

தாமோதரனுக்கு சந்தோஷம் தாள முடியவில்லை….. “எப்படி இப்படி….. ஒரு அமைப்பு….. அதனால், தானோ என்னவோ…. அகல்யாவின் பொருத்தம் தட்டி சென்றது என தன் தங்கையிடம் பேசி தீர்த்துவிட்டார்.”……..

பெரியவர்கள் பெண் பார்க்கும் நாள் குறித்தனர்…… குருமூர்த்தி தன் மகனிடம் சொன்னார்…. “நாளை புதன் கிழமை உனக்கு பெண் பார்க்க செல்கிறோம்…. காலை 10 மணிக்கு ப்பா….. ரெடியாகிடுவில்ல…..” என்றார்.

கைலாஷிற்கு தெரியும் தனக்கு திருமணத்திற்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என…… அதனால் அவன் தயாராகாவே இருந்தான்….. அப்பா பார்க்கும் பெண்ணை மணமுடிக்க…..

ஆனால் இந்த ஒரு வாரமாக தான்….. ஏதோ, ஓர் எதிர்பார்ப்பு அவனுள்….. அவள் காயத்ரி போல் இருந்தாள் பாரவாயில்லை….  என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.

இது தவறு யாரும், யாருக்கும் இணையானவர்கள் அல்ல…. என தெரிந்தாலும்….. அப்படின்னா…. அது காயத்ரியாகவே இருக்கட்டும் என தான் தோன்றியது அவனுக்கு……     

தன் தந்தை கூறியவுடன் இந்த எண்ணம் வரவும்….. எப்படி இப்படி ஒரு நினைப்புடன் பெண் பார்க்க செல்வது……. என நினைத்தவன்….

“ஏன் ப்பா…. இவ்வளவு அவசரம்…. கொஞ்சம் பொறுமையாக செய்யாலாமே…. நீங்க பாஸ்ட்டா போறமாரி எனக்கு தெரியுதுப்பா….” என்றான்.

குருமூர்த்தி….. “அதெல்லாம் இல்லப்பா….. பையன்களுக்கு எல்லாம் 28 வயதிற்குள் முடித்து விட வேண்டும்….. நீ ஒரு வருடம் லேட் வேற…. சரியாக தான் இருக்கும்…. எதுவும் பேசாமல் கிளம்பு…..” என்றவர்

பின் ஏதோ யோசித்தவராக….. “உனக்கு கல்யாணி ஆன்டியின் பெண்ணை தெரியும் தானே…..” என்றார்.      

கைலாஷின் ஒவ்வெரு அணுவின்…. முலை… முடுகெல்லாம்…..  புத்துணர்வு பெற்றது….. ஏதோ பரபரப்பு….. ஆனாலும் ஓர் கனமான அமைதி….

இது இப்படியாக இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு. மட்டுமே அவனுள்…… அப்பா, அப்படியே சொல்லிவிடுவாரா….. என தலையை கைகளால் கோதிக் கொண்டு….. ஏதோ வரம் தரும் கடவுளை போல் தன் தந்தையை பார்த்திருந்தான்…..

குருமூர்த்தி “என்னப்பா….. அதான் சண்டே அன்னிக்கு போய் காலையில் பிக்கப் செய்தியேப்பா…. அந்த பெண்ணை தான் உனக்கு பார்த்திருக்கு…… ஏதாவதுன்னா …… இப்பயே சொல்லிடுப்பா ……. அங்க போய் அவர்களை சிரமபடுத்த வேண்டாம்…..” என்றார்.

தன் மகனிற்கு பெண்ணை பிடிக்காமல் போனால் என்ன செய்வது என அவர் யோசித்து சொல்ல…..

கைலாஷோ ஓடி வந்து தன் தந்தையை இருக கட்டிக் கொண்டான்….. “தேங்க்ஸ் ப்பா…. தங்க் யு சோ மச் ப்பா…… லவ் யு பா……” என அவரை தூக்கி ஒரு சுற்று சுற்றி தான் கீழே இறக்கினான்………

ஒரு நிதானத்திற்கு வந்த பின்பே குருமூர்த்தி கேட்டார்…” டேய் இது எப்போலேயிருந்து……….” என்று.

என்னவென சொல்வான்…. கைலாஷ்…..    

 

  

Advertisement