Advertisement

பூக்கள்-11

“நனையாதா… காலுக்கெல்லாம்….. கடலோடு உறவில்லை….

நான் வேறு… நீ வேறென்றால்.. நட்பு என்று பேரில்லை…..

பறக்காத பறவைக்கெல்லாம்.. பறவையென்று பெயரில்லை…..

திறக்காத மனதிலெல்லாம்…. களவு போக வழியில்லை…..

தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ…..

திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ…..

பட படப்பாய்… சில கோபங்கள் தோன்றும்…

பனித்துளியாய்…. அது மறைவதும்யேன்…..

நிலநடுக்கம்…..அது கொடுமைகள் இல்லை…..

மனநடுக்கம் அது மிகக் கொடுமை….. அ…ஆஅ…    

கனா காணும் காலங்கள்….. கரைந்தோடும் நேரங்கள் ……

கலையாத கோலம் போடுமோ….

விழி போடும் கடிதங்ககுள்….

வழி மாறும் பயணங்கள் ……

தனியாக ஓடம் …. போகுமோ……”   

அவளின் காபியை திரும்பி கூட பார்க்கவில்லை அவன்…. குளித்து முடித்து கீழே இறங்கி வந்து தன் அத்தையிடம்

“அத்தை…. காப்பி…..” என்றான் அழுத்தி.

அவன் வந்த பின்னால் தான் வந்தாள்….. அகல்யா அங்கு தான் கிட்செனில்  இருந்தாள்….. கைலாஷின் அத்தை இவள் முகம் பார்க்கவும்….. அவள் கையில் எடுத்து சென்ற காப்பியுடன் நின்றாள்….

கைலாஷின் பெரியம்மாவும் இதை பார்த்தார்….. ஒன்றும் சொல்ல முடியாமல்…. அவளை பார்த்தார்…..

அகல்யா…. “சூடா இல்ல…..” என திக்க….

இரண்டு பெரியவர்களும் எதையும் முகத்தில் காட்டாமல்….. புதிதாக… ஒரு காபி எடுத்து அவள் கையில் கொடுக்க…..

அகல்யாவிற்கு முகம் வெளிறிப் போனது….. அறையில் தன்னை திரும்பி கூட பார்க்காமல் வந்தான்….. அதே இப்போது….. எல்லோர் எதிரிலும் செய்துவிட்டாளல்…. அதை நினைத்து முகம் அப்படியானது….

அதை பார்த்து கைலாஷின் அத்தையே…. அவனிற்கு காபியை கொடுத்தார்…..

பேப்பரை கையில் வைத்துக் கொண்டே…..எதையோ  யோசித்துக் கொண்டிருந்தான்…..

அங்கு வந்த குருமூர்த்தி…. கைலாஷிடம் “சாப்பிட்டு கிளம்புங்கப்பா….. இரண்டு பேரும்…. மறுவீட்டு விருந்துக்கு போகணும்…. கூப்பிட…. ஷண்முகம் மாமா வருவார்ப்பா…” என்றார்.

“ம்ம்…ப்பா…” என்றான். எழுந்து மேலே சென்றுவிட்டான்….

ஆனால் வந்தது கல்யாணி…..    

ஆம்….. கல்யாணியும் சுப்ரமணியமும் தான்….  அவர்களை மறுவீட்டு விருந்துக்கு அழைத்து செல்ல வந்திருந்தார்…… சுப்பிரமணியம் எவ்வளவு சொல்லியும் கேட்டவில்லை….. கல்யாணி…. தான்…. தான் செல்ல வேண்டும் என முன்னே கிளம்பி வந்தும் விட்டார்…..

கைலாஷின் திருமணத்தை பார்த்து அசந்து தான் போய் இருந்தார்…. கல்யாணி……. தன் மகளுக்கு வாராதா….. வாழ்வு… எப்படி இருக்கிறதென பார்க்கத்தான் வந்திருந்தார்….. திருமணத்திற்கு……. அதில், இவர் கண்ணில் பட்டது….  அக்ல்யாவிடம் கைலாஷ் காட்டும் பாராமுகம்…..

உடனே….. எப்படி தான் வாழ்கிறாள் என பார்ப்போமே என ஒரு எண்ணம்….. இதோ மறுநாள் காலை வந்து விட்டார்….. கைலாஷ் வீட்டிற்கு….. பார்த்த குருமூர்த்திக்கு…. சங்கடமாக இருந்தது……

சுப்ரமணித்திற்கே….. இது ஒரு தயக்கம் தான்….. தன் மனைவியின் எண்ணம் புரியும் தான்…. ஆனால் என்ன சொல்லி தடுப்பது என தெரியாமல் வந்தார்…..    

சண்முகத்தை தான் அவர் எதிர்பார்த்தார்…. கல்யாணி வந்து நிற்கவும்…… என்ன செய்வது….. இப்போது போய் எதுவும் சொல்ல கூடாது என நினைக்க நினைக்க……

இது… ஏதும் அறியாத….. அகல்யா….. அவர்களை கவனித்து விட்டு….. “வாங்க பெரியம்மா…… பெரியாப்பா….”என அழைத்து….. உற்சாகமாக அவர்களிடம் சென்று அமர்ந்து கொண்டாள்…..            

அங்கு… அப்போது, கீழ் இறங்கி வந்த…. கைலாஷ், கல்யாணியை பார்க்கவும் முகம் சுளித்தான்….. இருந்தும், அதனை கண்டு கொள்ளாமல் கல்யாணி….

“வாங்க மாப்பிள்ளை…… சாப்பிட்டிங்களா…… நாம, இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பனும்…..” என ஆணை போல் சொல்ல…..

அருகில் அமர்ந்திருந்த அகல்யாவிற்கே….. இந்த பேச்சு என்னமோ போல் இருக்க….. அவள் தன் மாமனாரை பார்த்தாள்…..

இதையும் கவனித்த கல்யாணி….. “எங்க… மாப்பிள்ளை…. ஹனிமூன் போறீங்க…..” என ஓர் நக்கல் சிரிப்புடன் கேட்டகவும்….    

கைலாஷ் இப்போது……  எழுந்தே விட்டான்…… அவர்களின் அருகில் அமர்ந்திருந்த அகல்யாவை….. ஒரு முறை முறைத்தான்…..

எப்போதும் அவன் முகத்தையே பார்க்கும் அவளிற்கு….. இது புரிய…. முதல் முதலில் ஆசையாக கணவன் பார்க்க… எழுந்து நின்றாள்…..

சுப்பிரமணியம் தான் என்ன செய்வது என தெரியாமல்….. சங்கடமாக இருக்க, கைலாஷ் எழுந்த உடன்….. அவரும் அன்னிச்சையாக எழுந்து விட்டார்…..

கைலாஷை பார்த்து….. “சரி மாப்பிள்ளை நீங்க…. மெதுவாக வாங்க… நாங்க முன்பு செல்கிறோம்…..” என்றார் நிலைமை உணர்ந்து….

குருமூர்த்தி அமைதியாய் வாசலை பார்த்து,

“சரி சுப்பிரமணியம்….  பையனும் மருமகளும் வருவார்கள்…..” என கூறி கைகூப்ப……

அவரும், கிளம்ப…. அகல்யா காபியுடன் வந்தாள்….. கல்யாணி…. அப்போது….. “அகல்யா, எப்படா நம் வீட்டு விருந்துக்கு வரீங்க…. காயத்ரி, கேட்டு வர சொன்னாள்….” என்றார்.

கைலாஷ் அந்த வார்த்தையே போதுமானதாக இருந்தது…… அவனை நிலைகுலைய செய்ய…..

ஆனால், அகல்யா “நீங்க பேசாதீங்க பெரிம்மா….. அக்கா கல்யாணத்திற்கு கூட வரவில்லை…. இப்போ விருந்துக்கு கூப்பிடறாங்களா….” என்க….

குருமூர்த்திக்கும் சுப்ரமணித்திற்கும்….. தலையில் அடித்துக்கொல்லாம் போல் இருந்தது…..

கல்யாணி, கைலாஷை நக்கலாக பார்க்க……  

ஆனால், கைலாஷ் இப்போது குழப்பமாக….. அகல்யாவை பார்க்க….. அந்த இடமே பார்வைகளால் பற்றி எரிந்தது……

ஆனால், அகல்யாவிற்கு இந்த அமைதி….. ஏதோ புரிய வைத்தது…..

சுதாரித்துக் கொண்டாள்…… உடனே, காப்பியை கொடுத்தால்…..
“நாங்க கிளம்பி வரோம் பெரியப்பா…..” என்று முடித்துக் கொண்டாள்.

அகல்யாவிற்கு என்னமோ….. தன் பெரியம்மாவை…. தன் கணவனுக்கு பிடிக்கவில்லை….. என புரிந்தது…… தன் வீட்டு மனிதர்களிடம் அவன் இன்னும் கலந்து பழக வில்லை…… என்றும் தோன்றியது…..

ஏதோ…. ஏதோ… என்று மட்டும் தெரிகிறது….. என்னவென்று புரியவில்லை….. ஏதோ அமீனிஷியா…… நோயாளி போல்….. இருக்கு ஆனா…. இல்லை என்ற நிலை……

எந்த புள்ளியில்.. இருந்து யோசிப்பது….. தன்னிடம் கைலாஷ் காட்டும் பாராமுகம்…. தன் உறவுகளிடம் காட்டும் ஒதுக்கம்….. எதையெல்லாம் எப்படி எடுப்பது…..

தன் அக்காவிற்கு திருமணம் ஆன போது….. எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தனர்….. ஆனால் இங்கு….. ஏதோ சரியில்லை….. இப்படியே யோசித்து… அவள் நேரம் சென்றது                                  

தனது பிறந்த வீட்டின் மறுவீடு அழைப்பிற்கு கூட கடமைக்காக தன்னுடன் வருகிறான்… என நினைத்தாள்….. அதுவே தான் நடந்தது…

வீட்டில் விட்டு  விட்டு சென்று விட்டான்…… மதியம் உணவு நேரத்தில்….. வந்தான்,

உணவு உண்டு முடிந்ததும்…. விசாலாட்சியிடம்… “வரேன்…. ஆன்ட்டி….”என சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான்…..  அவ்வளவே, ‘நீ வருகிறாயா…..’ என அவள் முகம் கூட பார்க்கவில்லை….. தன்னை நினைத்தே….. சுய இறக்கம் கொண்டாள் அகல்யா….

அகல்யா தனியாக மாலையில் அவளின் சித்தப்பா…. அழைத்து வந்து விட்டு சென்றார்…… வீட்டில் உறவுகள் எல்லாம் கிளம்பி இருந்தன…… வீட்டில் யாரும் இல்லை…… வந்து பார்த்தவளுக்கு தொண்டையடைத்து……

இவர்களின் விவரம் அறிந்து…. குருமூர்த்தி வந்து கொண்டிருந்தார்…. ஆனால், அதற்குள்…. அகல்யாவின் சித்தப்பா கிளம்பி இருந்தார்….  

என்ன உணர்விது….. தனிமை…… அதும் கல்யாணம் செய்த மறுநாள்….. கண்களில் நீர்….. வேறு ஏதும் செய்ய முடியவில்லை….. அப்படி ஒரு அழுகை…..

வீட்டில் ஹாலில் உட்கார்ந்து…..   

யாரை நம்பி….. அவன் வீட்டில் கால் வைக்கிரோமோ….. அவனே….. உதாசீனப்படுத்துவதா….. இதை ஏன்.. யாருமே கேட்கவில்லை என்பது தான் அவளின்…. கேள்வி…..

கூடவே…. இன்னொன்றும் தோன்றியது….. சொல்லிக் கொடுத்தா….. அன்பு நேசம்… உரிமை…  வரும்…..

அப்படி வந்தால்…. அதுவும் எத்தனை நாள் இருக்கும்….. என்று தான் தோன்றியது….. இதையெல்லாம் நினைக்க நினைக்க இன்னும் அழுகை நின்றபாடில்லை…..

குருமூர்த்தி பர பரப்பாக உள்ளே வந்தார்….. வந்தவர் கண்டது….. ஹாலில் தன் மருமகளின் கண்ணிற் முகம் தான்…… தன் மகன் மேல் அப்படி ஒரு கோவம் வந்தது…..

எப்படி எதிர்கொள்வது….. அகல்யாவை என தெரியாமல் வந்தவர்…. தன்னை திடப்படுத்திக் கொண்டு வந்தார்…..

“மருமகளே….. வந்துட்டியா….. வா…. வா….” என ஏதோ சிறுப்பிள்ளையை போல் அழைத்தார்….

திடும் என அவர் குரல் கேட்டகவும் திடுக்கிட்ட…. அகல்யா….. தன் கண்ணை துடைத்துக் கொண்டே நிமிர…..

திருப்தியானார் குருமூர்த்தி….

“என்னம்மா…. எப்போ வந்த….. நாகு எங்க….. காபி குடிச்சியா….” என  கேள்வியாக கேட்டவர் ….. தானே காபியும் கலந்து கொடுத்தார்….

அதுவரை அமைதியாக இருந்த அகல்யா….. அவர் காப்பியை அவளிடம் நீட்ட, இப்போது பாவமாக அவர் முகம் பார்த்தாள்……       

நல்ல உயரத்தில்….. கோல்டன் ப்ரேம் இட்ட கண்கண்ணாடியில்…. நிமிர்ந்து நின்று…. அவர் தன் கணீர் குரலில்…  அந்த இடத்தில், ஏது சொன்னாலும் செய்ய தோன்றும் ஒரு மரியாதையான தோற்றம்….

இந்த குரல்….. தன்னிடம் மட்டும்….. எப்படி இவ்வளவு தன்னமையாக கேட்கிறது…. என நினைத்து எழுந்து நின்றாள்….

அன்பான பார்வை பார்த்தார்….. “உட்காந்து குடிடாம்மா…” என்றார்.

அகல்யா “நீங்க மாமா…” என

“நான் ஆபீஸ் ல சாப்பிட்டு தான் வந்தேன்….” என்றவர்.

அவள் குடிக்கும் வரை அமைதியாக இருந்தவர்….. பின் அவளின் தாய் வீடு நலம் விசாரித்து தெரிந்தவர்…..

பின்பு கேட்டார்….. நான் வரும் போது….. “உன் கண் கலங்கி இருந்தது….” என்றார்..

“இல்ல மாமா….. அது சும்மா…. ஏதோ நியாபகம்…..” என திக்க….

“சரி, இனி எதுவாக இருந்தாலும் மாமா கிட்ட சொல்லு….

புரியுதுடா….. உன்னோட எண்ணம்…… ஆனா, புரிய வேண்டியவனுக்கு இன்னும் உன் அருமை தெரியவில்லை…… விடு….. நாம சேர்ந்து அவனை நம் வழிக்கு கொண்டுவந்தரலாம்……” என்று அவளை உற்சாகமாக்க…. தனது கையை உயர்த்த….. அவளும் அவருடன் சேர்ந்து…..சிரித்துக் கொண்டே  hifive தர….. அந்த இடமே இப்போது ஒளி பெற்றது….

############    

அன்று சீக்கிரமே வந்த கைலாஷ்….. தன் அறைக்கு செல்லவும், அகல்யா அந்த பால்கனியில்…. எங்கோ வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்……

இவன் வந்ததை கவனிக்கவில்லை…… அங்கு அவளது செல் போனில்….

ஸ்வர்ணலதா…… “அந்த குழலை போல் அழுவதற்கு…

அத்தனை கண்கள் எனக்கில்லையே…..

எவனோ ஒருவன் வாசிக்கிறான்…..

இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்……” என உருகிக் கொண்டிருந்தார்…. அகல்யாவும் தான்….

கைலாஷ் உள்ளே வரும் போது இந்த லைன் தான் ஓடிக் கொண்டிருந்தது…. கூடவே அவளின்….. அனாதரவான தோற்றம்……  ஆனால்

கைலாஷிற்கு…. காலையில் நடந்தது தான் நினைவில் வந்தது….. என்னை வேண்டாம்… என்று தூக்கி எரிந்தவர்களுடன் இவளிற்கு என்ன பேச்சு…..

ஏதோ திருமணத்திற்கு வந்தார்களா…. சென்றார்களா… என இருக்க வேண்டும் தானே…. இவளுடன் என்ன உறவு அவர்களுக்கு….. ஏன், இவளிற்கும் என்ன உறவு….. என எண்ணி அவளை தான் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்….    

ஏதோ உறுத்த…. திரும்பி பார்த்தாள்….. தன் கணவன் தன்னை தான் பார்க்கிறான்….. என்று தெரிய…. என்ன செய்வது என தெரியாமல்….. அவனை தாண்டி… அந்த இடத்திலிருந்து… வெளியே சென்றுவிட்டாள்..           

நேற்று இவள் வேண்டாம் என்றவன் தான்….. இன்று, என்னை அவமானபடுத்தியவர்களுடன்….. தன் மனைவிக்கு என்ன பேச்சு என யோசிக்கிறான்…..

அகல்யாவிற்கு எப்படி….. கணவன் என்ற உறவு முறையே…..ஒரு எதிர்ப்பார்ப்பை தந்தோ… உரிமையை தந்ததோ…… அப்படி தான் கைலாஷிற்கும்…. இவள் மனைவி என்ற உறவு முறையே…. அவளிடம் தனக்காகன…. உரிமையை தேடியது….

ஆனால் இதை அவன் உணரவில்லை….. அவ்வளவே. ஆனால் இந்த உரிமை….. கோவம் என்னும் வடிவில்…. வந்தது…..  

அகல்யாவிற்கு…. ஏனென்று தெரியாதா புறக்கணிப்பு…. ஒவ்வரு முறையும்….. காலை ஜாக்கிங் முடித்து வந்தாள்…. இவளின் கையில் காப்பி குடிப்பதில்லை…..

அன்று மெத்தையில் படுத்திருக்கும் போது….. அவனி புறம் திரும்பி தான் படுத்தால்… ஆனால், அதன் பின் இவன் எழுந்து சென்றுவிட்டான்… அவள்… அப்படியே உடைந்து அழுதாள்…. ஆனால்… தேற்ற யாருமில்லை…

வீட்டில் தன் தந்தையிடம் மட்டுமே பேசுவது….. நாகுவிடம் இப்போது பேச்சே இல்லை…..

அகல்யாவை….. படுத்துகிறானா…. தன்னை படுதிக்கொள்கிறானா…. புரியவில்லை அவனிற்கு….

அவள் பரிமாற வந்தாள்….. “நாகுண்ணா….” என சத்தமாக அழைத்தான்…. இவள் திடுக்கிட்டு…… விலகினால்…..   

அகல்யாவிற்கு இப்போதெல்லாம் இந்த கைலாஷின் பாராமுகம் பழகி இருந்தது….. காரணம், அவன் திருமணம் ஆன இந்த 10 நாளில் அகல்யாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை கைலாஷ்…..

அவளும் ஒரு நான்கு நாட்கள் அவன் பேசுவானா என.. அவன் முகமே பார்த்திருந்தாள்….. ஆனால், ஒரு கட்டத்தில் அவன் தன் முகத்தை கூட பார்க்க விருப்பமில்லை என்பதை…… கைலாஷ் அவளிற்கு அமைதியாவே புரிய வைத்திருந்தான்….

ஏன்னென்றே தெரியாத புறக்கணிப்பு…. இது கொடுமையிலும் கொடுமை அல்லவா…. சுற்றி இருக்கும் அனைவரும் தன்னையே பார்ப்பது போன்று இருக்க…. ஆனால் கொண்டவனோ, தன்னை மட்டும் பார்ப்பது இல்லை…..

அகல்யாவிற்கு சொல்லமுடியாத வலி…..ரொம்பவே வாடிப்போனால் அகல்யா….. அந்த சமயத்தில் தான் குருமூர்த்தி அகல்யாவை வீட்டை கவனிக்கும் பொறுப்பை கொடுத்தார்….

குருமூர்த்தி தன் மருமகளை….. அந்த வீட்டில் இயல்பாக நடமாட செய்தார்.. எல்லாவகையிம் நீதான் இந்த வீட்டின் ஆதாரம்…. என சொல்லாமல் அவளிற்கு புரிய வைத்தார்.

குருமூர்த்தி….. வீட்டு நிர்வாகம்….. சாமான்கள் வாங்க வேலையாட்கள் சம்பளம்.. என அனைத்தையும் இவளிடம் கொடுத்தார்…. தனியாக் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்து அதற்கான செலவுகளுக்கு பணம் போட்டு அவளிடம் கணக்கு எழுத செய்தார்….

எங்கு வெளியே சென்றாலும் அகல்யாவிடம் சொல்லி சென்றார்….. இப்படி பெண்கள் இல்லாமல் பழகிய வீட்டில் ஒரு பெண்ணின்…. வருகை நிறைய மாற்றங்ககளை தந்தது…..

குருமூர்த்திக்கு கணவன் மனைவியின் நிலை புரிந்தாலும்….. அதில் அவர் தலையிடவில்லை…..

சொந்தங்கள் இருந்த அந்த நாட்களில் கூட அவன்…. யார்க்காகவும்…. எதற்காகவும்…. அவளிடம் பேசவோ… ஏன் பார்க்கவோ.. கூட இல்லை…. ஆண்களின் மௌனம் ஒரு போதும் சம்மதம் இல்லை…… என்பதை கைலாஷ் காட்டிக் கொண்டிருந்தான்…..

அகல்யாவும்…. ஒதுங்கிக் கொண்டாள்….. அவனின் கவனத்தை ஈர்க்க எந்த விதமான செய்கையும் அவளிடம் இல்லை…

கல்யாணத்திற்காக அகல்யா 15 நாள் லீவ் எடுத்திருந்தாள்….. இந்த நாட்களில் நாகு தான் அவளின் பேச்சு துணையானார்…..

கைலாஷின் சிறு வயது கதைகள் சொல்லுவார்…. அவன் பட்ட துயரம் சொல்லுவார்…..

இதை எல்லாம்…. உள்ளுக்குள் ரசித்துக் கேட்டாலும்….. வெளியே.” போதும்ண்ணா….. ரொம்ப பேசுறீங்க… “என கிண்டலுடன் நகர்ந்து விடுவாள்.   

நாகுவின்……… சமையலை ரசித்து பாராட்டினாள் அகல்யா…. ‘அப்பா….. அவருக்கொரு அடிமை கிடைத்த நிம்மதி….’ இது வரை ஏதோ…. ஒன்று சமைத்தவர்….. இப்போது என்ன வேண்டும் என அக்ல்யாவிடன் கேட்டு செய்தார்….

காலை பெரும்பாலும் கைலாஷ்….. நான்கு இட்லி, இல்லை இரண்டு தோசை என ஏதோ உண்டு கிளம்புவான்….. ஆனால் இப்போது அகல்யா ஒரு சாலாட், பின் ஏதேனும் புதிதாக செய்தாள்….

கைலாஷும் “இப்படி சாப்பிட்டா… எப்படி வேலை செய்வது…. ஆபிஸ் போய் தூங்கணுமா….” என நாகுவிடம் கடிந்தாலும்… உண்டு விட்டே செல்வான்….

மதியம் குருமூர்த்தி மூலமாக அவனை உணவிற்கு வீட்டிற்கு வர செய்தாள்….. வகையான உணவு முடித்து சிறிது நேரம் உறங்கி செல்ல பழக்கி இருந்தாள்…..

நாகு கூடவே….. கிட்செனில் தானும் பேசியபடி காய் நறுக்கி…. சப்பாத்திக்கு தேய்த்துக் கொடுத்து என…. சிறு சிறு உதவிகள் செய்தாள்…..

இரவு இப்போதெல்லாம்.. அவன் சீக்கிரம் வந்து விடுவான். ஆனால், என்ன அவள் கண்ணில் படுவதில்லை…… அவனிற்கு, இரவு நேரங்களில் அவன் அறைக்கே உணவு எடுத்து சென்று வைத்து விடுவாள்….

ஆனால், இன்னும் ஒரே கட்டிலில் தான் அவர்களின் படுக்கை…. மனம் மட்டும் வேறு வேறு தான்…..

கைலாஷிற்கு…..புரிகிறது…. தன்னை நம்பி, தானே எல்லாம்.. என ஒருத்தி வந்திருக்கிறாள்….. அவளுடன் தான் இனி நான் வாழ்ந்தாக வேண்டும் என தெரிகிறது….

ஆனால்…. தன் மனைவியின் முகத்தை நினைக்கும் போதெல்லாம்….. எங்கிருந்தோ தான் பட்ட அவமானம் தான் நினைவு வருகிறது….. அதைவிட….. இது தன் மனைவிக்கும் தெரியும் என்னும் போது….. அவனால்….  அவள் இருக்கும் திசையை கூட திரும்பி பார்க்கமுடியவில்லை…….

அதனால் அவளிடமிருந்து ஒதுங்குவதாக நினைத்துக் கொண்டு….. இப்படியெல்லாம் அவளை படுத்துகிறான்.   

குருமூர்த்தி தனது கால் டாக்ஸி…. ஆபீஸ் சென்றார்…. இவன் டூர் அண்டு ட்ரவெல்ஸ்… ஆபீஸ் சென்றான்…. எந்த வகையிலும்…. கைலாஷை, அவள் தொந்தரவு செய்யவில்லை….

அன்று காலை அகல்யா பர பரவென கிளம்பிக் கொண்டிருந்தாள்…. எப்போதும்.. இவன் ஜாக்கிங் செல்ல கிளம்பிய உடன்…. இவள் குளித்து கீழே சென்று விடுவாள்….

ஆனால், இன்று இவள் கீழே போவது….. மேலே வருவது….. என அலைந்துக் கொண்டிருந்தாள்….. ஜாக்கிங் முடித்து வந்தவன்…. ஒரு கிரீன் டீயுடன் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்….

இவளின் பர பரப்பை பார்த்து….. என்ன.. என யோசித்துக் கொண்டிருந்தான்.

சரியாக 7:50க்கு…. அழகான சாக்லேட் கலர்…. சுடி…. முக்காகை வைத்து….. சாண்டில் கலர் பாட்டம் உடன்…. தனது ஷால்லை பின் செய்யாமல்…. ஒன்சைடாக… போட்டு…. தனது கூந்தலை ஒரு கேச்சு கிளிப்பில் அடக்கி…. பட படவென மாடி படியில் இறங்கி வந்தாள்….

கைலாஷ்…. நிமிர்ந்து அமர்ந்தான்….. ‘ரொம்ப அழகா இருக்காலோ….’ அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்….. அவளையே….. ‘இந்த கண்ணுல கொஞ்சம் மை வைத்தாள் தான் என்னாவாம்….’ என தன் போல் அவனுள் யோசனை ஓடியது……

அவனுள் இருந்த மற்ற நினைவுகள் எல்லாம் காணோம்….. இப்போது அவன்…. தன்னுடன் ஒரு ஜீவன் இருக்கிறது…. என உணர தொடங்கினான்…..               

குருமூர்த்தி…. பூஜை அறையில் இருந்தார்…. அவரிடம் சென்றவள்….. “மாமா…. நான் போயிட்டு வரேன் மாமா….. evening 6:30ஆகும் மாமா நான் வர….” என்று விட்டு….

அவரும்…. “சரிம்மா….. ஜாக்கிரதை….” என்றார்.அவனை தாண்டி சமையலறை சென்றவள்…. அங்கிருந்த இவனை ஓர கண்ணால் பார்த்தாள்….. தன்னை பார்க்கிறான்….. அப்பா….. என்னை பார்த்துட்டான்…..    எவ்வளோ….. நாள்டா… என்னை பார்க்க…. கண் கலங்கியது….. ஒரு கோவம் வந்தது.

நாகுவிடம் சென்றவள்…. உண்ண முடியவில்லை… டைனிங்க டேபிளில் தனது காலை உணவை…. ஒரு டிபன் பாக்ஸ்ல்  எடுத்துக் கொண்டவள்….. “அண்ணா….பாய்….”என

அவர் “அக்ல்யாம்மா…. மதியம்…. சாப்பாடு….” என அவள் பின்னாலேயே ஹால் வரை வந்தார்….

கைலாஷ் ‘என்னாடா…. இது…. இந்த நாகுண்ணா…. அவ பின்னாடியே ஓடறாரு….. ம்ம்….’    

அகல்யா நிற்காமல் “இல்ல ண்ணா….. ஆபீஸ் ல பார்த்துகிறேன்…. டைம் ஆச்சுண்ணா….” என கிளம்பி கேட் தாண்டி நடந்து விட்டாள்….

கைலாஷ் இது எல்லாவற்றையும் ஹாலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தா….. “ஒ …. வொர்க் பண்றாலா…..” என்று தோன்றியது…..

“எங்க…. டீச்சர்ரா இருப்பாளோ….. இல்லையே, evening டைம் ரொம்ப லேட்டா சொல்றாலே….. ம்….ம்ம்…..   என்ன படிச்சிருப்பா…..

இங்கே தானே உட்கார்ந்திருன்கேன்….. என்கிட்ட சொல்லவே இல்லை……” என ஒரு செகண்ட்….. ஷணம் நினைத்தான்….. அதற்காக தன்னையே திட்டியும் கொண்டான்….             

ஆனாலும், மனம்…. தேடிக் கொண்டே இருந்தது….. யாரை கேட்பது…. என…. யாரிடம் கேட்டாலும் தனக்கு மரியாதை இருக்காது என தோன்றியது……

அவள் வீட்டில் இருந்தாள், உடனே கிளம்புபவன், இன்று… மெதுவாக…. தயாரானான்…. தன் அறையின் நேர்த்தியை இப்போது தான் பார்த்தான்….. தன் கபோர்டின் அருகில்….. அவளிற்கு என புது கபோர்டு ஒன்று வந்தது…..

முன்பே அவனின் அறை சுத்தமாக தான் இருக்கும்… இப்போது இன்னும் நேர்த்தியாக இருந்தது…..

அவளிற்கென புதிதாக ஒரு ஆளுயர கண்ணாடி…….. அவன் அறையில் இப்போது இருந்தது…… அதில் சென்று தன் தலையை வார நினைத்தவன்…..

அங்கு ஏதோ இருப்பது போல் இருக்க நிமிர்ந்து பார்க்க…… சின்ன நோட் ஸ்லிப் இருந்தது….. அதில், “ ஹாய் கைலாஷ்….. விஷ் மீ….. கல்யாணம் ஆகி பஸ்ட்டே ஆபீஸ் போறேன்…. பாய்…..” என எழுதி….. அதில் ஸ்டிக் செய்திருந்தால்……

அதை பார்த்ததும்…. ஒரு மோன புன்னகை உதட்டில்….  இவனில்…. இவன் மனதில் ஒரு அசைவு…. ஓர் கர்வம்….. ஆனால் அந்த ஸ்லிப்பை… எடுத்துக் கிழித்து….. போட்டான்.

  

    

          

Advertisement