Advertisement

கசாட்டா 9:

வெந்நீரில் நீந்தும் மீன்கள்

உயிர் பிழைப்பது கடினம்!

அது போல உன் சுடும் கண்ணீரை

கண்ட பின் நான் வாழ்வது கடினம்!

தன் தோள் சாய்ந்திருந்த மதியை லேசாக அணைத்தவாறே கௌதமின் நினைவுகளும் கடந்த காலத்திற்குப் பயணமானது.

அன்று ராகிங் செய்த மதுவை திட்டிய பின் தொலைப்பேசியில் பேசிக் கொண்டே சென்ற கௌதம் பேசி முடித்ததும் நேராகக் கல்லூரி முதல்வரின் அறைக்குச் சென்றான்.பணி நியமணம் பற்றிப் பேசியதும் கல்லூரி முதல்வர் ஆடிட்டோரியத்திற்கு அழைத்துச் சென்றார். முதல் வருட மாணவர்களை வரவேற்கும் பொருட்டுச் சிறிய விழா அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அனைத்து மாணவர்களும் ஒன்று கூடியதும் முதல்வர் பேசத் தொடங்கினார். மதி அன்ட் ஸ்வேதாவும் அங்குத் தான் இருந்தனர்.

“ஏன்டி ஸ்வேதா இந்தப் பிரின்சிக்கு என்ன தான் பிரச்சனை..? ப்ர்ஸ்ட் இயர் பசங்களை வரவேற்குறதா இருந்தா அவங்களை மட்டும் அசம்பிள் பண்ண சொல்ல வேண்டியது தான..? அத விடுட்டு நம்மளையும் வர சொல்லி இம்சை பண்றாரு..?அதை விட ஒரு கொடுமை வெல்கம் ஸ்பீச்னு அவர் போடுற மொக்கையை வேற கேட்கணும்…” எனச் சலித்துக் கொள்ள

“கொஞ்ச நேரமாவது வாயை மூடிட்டு சும்மா இருக்கியா… ஏன்டி உனக்கு வாயே வலிக்காதா..? சும்மா தொணத் தொணனு நச்சரிக்காம அவர் பேசப் போறதை கவனி…”

“உன்கூடலாம் ப்ரெண்ட்ஷிப் வச்சுக்கிட்டேன் பாரு என்ன சொல்லணும்.. நீ கவனி மா.. “

“எல்லோருக்கும் காலை வணக்கம்..! இப்போ நாம் அனைவரும் இங்க ஒன்று கூடியிருக்கிறது எதுக்குனு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்… தங்கள் எதிர் காலக் கனவை நோக்கி அடி எடுத்து வைத்திருக்கும் நம் கல்லூரியின் புது வரவுகளான முதலாம் வருட மாணவர்களை வரவேற்கத் தான்…”

“ஏய் ஸ்வேதா..! நம்ம பிரின்சி இதுக்கு முன்னாடி டாப் டென் மூவிஸ் தொகுத்து வழங்கி இருப்பாரோ..?” என மதி ஸ்வேதாவிடம் கிசு கிசுக்க,

“ஏன் அப்படிக் கேட்குற?” என்றாள் ஸ்வேதா.

“புது வரவு அது இதுனு பினாத்திட்டு இருக்காரேனு கேட்டேன்…”

“வாயில நல்ல வந்திரும் நீயும் உன் சந்தேகமும் தூ” என துப்பாத குறையாக தோழியிடம் கடுப்படிக்க,

“சரி சரி அதுக்குனு ஸ்பிரே பண்ணாத…! நான் புத்திசாலித்தனமா கேள்வி கேட்குறதை பார்த்து உனக்குப் பொறாமை டி….”  பதிலுக்கு ஸ்வேதா முறைத்ததில் மதி வாயை அப்போதைக்கு மூடிக் கொண்டாள்.

முதல்வர் தொடர்ந்தார்…. “மாணவர்களே இந்தக் கல்லூரி காலம் என்பது அனைவரும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு அற்புதமான பொற்காலம்… இது உங்களுக்குக் கல்வியை மட்டும் அல்ல வாழ்க்கை பாடத்தையும் கற்றுத் தரும்… வெறும் புத்தகப் புழுவாய் இருப்பது மட்டுமே வெற்றி அல்ல என்பதை உணர்ந்து உங்கள் கனவுகளை நோக்கி நடை போடுங்கள் வெற்றி நிச்சயம்…” என்று முடிக்கவும் மாணவர்களின் கரவோசை ஓங்கி ஒலித்தது.

“உங்களுக்கு இன்னோரு அறிவிப்பும் காத்திருக்கிறது… நம் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்திருக்கும் ஆசிரியரை அறிமுகபடுத்தப் போகிறேன்” எனக் கூறி கௌதமை மேடைக்கு வருமாறு சைகை செய்யவும் கௌதம் மேடை ஏறினான்.

அவனைக் கண்டதும் ஸ்வேதா பயத்தில் மதியை சுரண்ட அவளோ பாதித் தூக்கத்தில் இருந்தாள். மதி அசையாமல் இருக்கவும் ஸ்வேதா மதியின் முதுகில் ஒரு அடி வைக்கவும் பதறி அடித்து எழுந்து “ ஏன்டி எருமை அடிச்ச… ஏற்கனவே அந்த ஆள் போடுற பிளேடு தாங்க முடியாம தூங்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்… . இதுல நீ வேற உயிரை வாங்கு…! “

“அடியேய் ஒரு நிமிஷம் ஸ்டேஜ்ல இருக்கிறது யாருனு பாரு”

மேடையை நோக்கி தன் பார்வையைச் செலுத்த அதிர்ச்சி அடைந்தாள். அடுத்த நொடி “ஸ்வேதா இவன் நிஜமாகவே லெக்சரர் தான் போல என்னடி பண்றது..?”

“ஆமா இப்போ கேளு… என்ன பண்றதுனு..? வகையா மாட்டுனோம்….” என்ற ஸ்வேதாவின் குரலில் படபடப்பு அப்பட்டமாக தெரிய,

“விடு டி..! என்னதோ அவன் நம்ம டிபார்ட்மெண்ட் மாதிரி இந்தப் பயம் பயப்படுற…”

“இருந்தாலும்…. “என இழுக்க

“அவனே மறந்தாலும் நீ விட மாட்ட போலயே….?” என தோழியை அடக்கிவிட,

முதல்வர் “இவர் தான் Mr.கௌதம் இன்றிலிருந்து நம்ம கல்லூரியின் கணிப்பொறித் துறையில் பணியாற்றப் போகிறார்….” என்று அறிமுகப்படுத்தி விட்டுக் கௌதமிடம் ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு கூறினார்.

“ அய்யோ மது…! நம்ம டிபார்ட்மெண்ட் டி… செத்தோம்” எனப் புலம்ப

“எவ்ளவோ பண்ணிருக்கோம்…. இதைப் பண்ண மாட்டோமா பார்த்துக்கலாம் விடுடி….” என ஆறுதல் சொன்னாலும் அவளுக்கும் உள்ளூரம் ஒரு வித நடுக்கம் இருக்கவே செய்தது.

“ஹலோ ப்ரெண்ட்ஸ்…! ரொம்பப் பேசி உங்களைப் போரடிக்க விரும்பலை… இனி தினமும் பார்த்துக்கப் போறோம்…. சோ கொஞ்ச கொஞ்சமா என்னைப் பற்றி நீங்களும் உங்களைப் பற்றி நானும் தெரிஞ்சுக்கலாம்… அப்போ தான் அதுல ஒரு ஸ்வாரஸ்யம் இருக்கும்…. உங்கள் ஒத்துழைப்பை எனக்கும் தருவீங்கனு நம்புறேன்….நன்றி..!” வழக்கப் படி இல்லாமல் நண்பர்களிடம் பேசுவது போல் இருந்த வித்தியாசமான அதே சமயம் சுருக்கமான கௌதமின் பேச்சு மாணவர்களைக் கவர்ந்தது என்பதை அவர்களின் கரவொலி பறை சாற்றியது.

வரவேற்பு நடனம், கல்லூரியைப் பற்றிய காணொலி காட்சி என அடுத்த ஒரு மணி நேரமும் சிறகடித்துப் பறந்தது. அனைவரும் கலைந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்றனர். வருடத்தின் முதல் நாள் ஆகையால் பாடம் ஏதும் நடத்தாமல் பாடத் திட்டத்தின் அறிமுக வகுப்பாகவே ஒவ்வொரு பாட வேளையும் கழிந்தது.

கணிப்பொறித் துறை இரண்டாம் வருட வகுப்பில் விடுமுறை முடிந்து நண்பர்களைச் சந்திக்கும் தருணத்தின் உற்சாகம் அங்குக் கரை புரண்டு ஓடியது.

பாட வேளை ஆரம்பித்தற்கான மணி ஓசை ஒலிக்கப்பட அனைவரும் தங்களது இருப்பிடத்தை அடைந்தனர். மதியும் ஸ்வேதாவும் மணமகள் பெஞ்சில் அமர (அதாங்க கடைசிப் பெஞ்ச். பசங்க உட்கார்ந்தா அது மாப்பிள்ளை பெஞ்ச் இதுவே பொண்ணுங்க உட்கார்ந்தா அது மணமகள் பெஞ்ச்).

“ஹேய் ஸ்வேதா…! இப்போ எந்தச் சப்ஜெக்ட் பீரியட் டி..?” என மதி ஸ்வேதாவிடம் கேட்க

“ஏன்டி இன்னையிலருந்து படிக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா..? ரொம்பச் சந்தோஷமா இருக்கு டி…” என கேட்க,

“அடிப்பாவி…! உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதாடி..?”

“அதான பார்த்தேன்..! நீ திருந்தவே மாட்டடி…” என இவர்கள் சல சலத்துக் கொண்டிருக்க

“ப்ரெண்ட்ஸ் புதுசா வந்திருக்க லெக்சரர் தான் நமக்கு இனிமே கிளாஸ் இன்சார்ஜ். அவர் நமக்கு டேட்டா ஸ்ட்ரக்ச்சர் (data structure) பாடம் எடுக்கப் போறாரு….” வகுப்புத் தலைமை மாணவியாக அனிதா தன் அறிவிப்பை முன் வைக்க மதியும் ஸ்வேதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“மது..! என்னடி இன்னைக்கு ஆப்புக்கு மேல ஆப்பா இருக்கு..? எனக்குப் பயமா இருக்குடி…”

“நீ வேற ஏன்டி படுத்துற… இந்தப் பிரின்சிக்கு தலையில தான் ஒண்ணும் இல்லனு பார்த்தா தலைக்குள்ளையும் ஒண்ணும் இல்லை போல… இவனைப் போய் நமக்குக் கிளாஸ் எடுக்கப் போடலைனு யார் அழுதா..? இதுல கிளாஸ் இன்சார்ஜ் வேற கிழிஞ்சிரும்…” எனக் கூறி முடிக்கவும் கௌதம் உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.

“ஹாய் ஸ்டூடண்ஸ்..!  நான் கௌதம் இனி உங்களுக்கு டேட்டா ஸ்ட்ரக்ச்சர் பாடம் எடுக்கப் போறேன்… கிளாஸ் நாளையிலருந்து ஸ்டார்ட் பண்ணலாம்… இப்போ உங்களை அறிமுகப் படுத்திக்கோங்க… “ மாணவர்களிடம் இருந்து ஆரம்பித்த அறிமுகப் படலம் மாணவிகளிடம் வந்து நின்றது.

முதல் வரிசையில் அமர்ந்திருந்த அனிதா “ நான் அனிதா…! எனத் தொடங்கித் தன் பொழுது போக்கு, லட்சியம் எனத் தன்னை உயர்வாய் காட்டும் அனைத்து செயல்களையும் பட்டியலிட கடைசி முத்தாய்ப்பாய் தனது முதல் வருட மதிப்பெண்ணையும் குறிப்பிட தவறவில்லை (ஏனென்றால் அவள் தான் கிளாஸ் ப்ர்ஸ்ட்).”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கௌதமிற்கு அவளின் குணம் புரிய மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு “குட்” என்றான்.

மதிக்கோ டென்சென் ஏகத்துக்கும் எகிறியது. ஆம் அனிதா ஆரம்பித்த பிறகு அனைவரும் தங்களது மதிப்பெண்னை குறிப்பிட்டுக் கொண்டுயிருந்தனர்.

(நம்ம ஹீரோயின் +2 லயே அப்படிக் காலேஜ்ல கேட்கவா வேணும். அதான் மேடம் ரொம்ப டென்சன் ஆகிட்டாங்க)

கடைசிப் பெஞ்ச் வரும் போது தான் கௌதம் அவர்களைப் பார்த்தான். வரிசையாக அனைவரும் அறிமுகப்படுத்திக் கொண்டே வர, ”ஹோ தைரியசாலிகள் எல்லாம் இங்க தான் இருக்கீங்களா..?” எனக் கேலிக் குரலில் வினவ,

மதியின் முறை வர “நான் மது…!” எனச் சொல்லிவிட்டு நிற்க

“வேற எதுவும் சொல்றதுக்கு இல்லையோ..?” என்றவனின் குரலில் நக்கல் தெறிக்க,

“அய்யோ..! விட மாட்டான் போலயே… வெளிய சொல்ற அளவுக்கா என் மார்க் இருக்கு…வேற என்ன சொல்ல கடுப்பேத்துறார் மை லார்ட்…” என முணு முணுக்க

கௌதம் “என்ன சொல்றதுனு தெரியலையோ? காலையில அந்தப் பேச்சு பேசுன வாய் இப்போ எங்க போச்சு..?  எந்த ஊரு உனக்கு..?”

“கோயம்புத்தூர்…”

“ஓ கோயம்புத்தூர் குசும்பு… அதான் அந்த வாய் பேசுற…?” என்று சொன்னாலும் ஒரு நிமிடம் அவனது அத்தை வீடு நியாபகம் வந்து சென்றது. அந்த நினைவில்

“உங்க அப்பா பேரு என்ன..?” என வினவ

“ரா…”  என இழுக்க அதற்குள் பாட வேளை முடிந்ததற்கான மணி ஒலித்தது.

“ஓகே ஸ்டூடண்ஸ் நாளைக்குப் பார்க்கலாம்…” என்றவன் பதில் வாங்காமலேயே போய்விட்டான்…

கௌதம் அவளிடம் சரிக்கு சரியாய் பேசியதை இரு கண்கள் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததை இருவரும் அறியவில்லை. இதைப் பார்த்திருந்தால் பின் விளைவுகளைத் தடுத்திருக்கலாமோ?

அடுத்த நாள் பொழுதும் அழகாக விடிய விடுதியில் ஸ்வேதா மதியிடம் போராடிக் கொண்டிருந்தாள். எதற்கா? வேறு என்ன மதியின் துயிலை கலைத்து கல்லூரிக்கு கிளப்ப தான்.

“ஹேய் எழுந்திரு டி..!  காலேஜ்க்கு டைம் ஆயிடுச்சு… ப்ர்ஸ்ட் ஹவர் கௌதம் சார் கிளாஸ் டி… சீக்கிரம் எழுந்திரு டி எருமை..!” எனக் காட்டு கத்தலாய் கத்திக் கொண்டிருக்க

”ஏன்டி..! காலங்காத்தால ஸ்பீக்கரை முழுங்குன மாதிரி கத்திட்டு இருக்க…”

“ஏன் சொல்ல மாட்ட மணி என்ன தெரியுமா…? இது உனக்குக் காலங்காத்தாலயா…? கடுப்பேத்தாம எழுந்திரு டி…”

ஒவ்வொன்றுக்கும் ஸ்வேதா போராடி மதியை கிளப்பி ஒரு வழியாக இருவரும் 9 மணிக்கு கல்லூரியை அடைந்தனர். முதல் பாட வேளை ஆரம்பிக்கக் கௌதம் வகுப்பிற்கு வந்தான். பார்மல் உடையில் நேர்த்தியாய் இருந்த கௌதமை அனைவருமே இமைக்க மறந்து பார்த்தனர்.

“இன்னைக்கு நாம பார்க்க போறது டேட்டா ஸ்ட்ரக்ச்சர்…” என அதைப் பற்றி விளக்கி கொண்டிருக்க

“ஏய் ஸ்வேதா எதாவது பேசேன்டி…?”

“மது ப்ளீஸ் டி..!  அப்புறம் பேசலாம்… இப்போ சார் சொல்றதை கவனி…”

“ச்ச போடி…! “என அவளும் கௌதம் சொல்வதைக் கவனிக்க முயல ‘ம்ஹீம்’ அவன் சொல்வது மண்டையில் ஏறுவேனா என்றது.

“ஸ்வேதா என்னடி ‘கா’ங்குறான் ‘கி’ங்குறான் ஒரு இளவும் புரியமாட்டேங்குது….” என தோழியின் காதை சுரண்ட,

“ஏன்டி எவ்ளோ அழகாக எக்ஸாம்பிள் வச்சு சொல்லி குடுக்குறாங்க… நீ இப்படிச் சொல்ற..?”

“எங்க அப்பா அப்பவே சொன்னாங்க…? அங்கேயே படினு என் கிரகம் இங்க வந்து மாட்டிக் கிட்டேன்…” என கோவை சரளாம்மாவின் டோனில் சொல்ல,

“அங்கேயே இருந்திருந்தா ஒரு சீட் வேஸ்ட் ஆகி இருக்காதுல…?” என ஒரு குரல் கேட்க

“எவ அவ..!” என மதி குரல் வந்த திசையை நோக்கி திரும்ப அங்குக் கௌதம் நின்று கொண்டிருந்தான்.

“தானும் கவனிக்கிறது இல்ல… அடுத்தவங்களையும் கவனிக்க விடுறது இல்ல…. கெட் அவுட் ஆப் மை கிளாஸ்…” என்று கடுமையாக கூற,

“சாரி சார்” என்றபடி வெளியேற கௌதம் தன் விளக்கத்தைத் தொடர்ந்தான்.

வெளியே வந்த மதி கடைசிப் பெஞ்ச் அருகில் இருக்கும் வெளிப்புற ஜன்னல் ஓரம் நின்று கொண்டு,

பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்

தெரு தெருவாகத் தொரத்துது நொலேஜ்

அடுத்தது booksu வளருது டீனேஜ்

சீக்கிரம் நமக்கு வந்திடும் ஓல்டேஜ்” எனப் பாட அவளின் தோழிகள் சிரித்துவிடக் கௌதம் அதைக் கண்டு கொண்டான். அதை வெளிக்காட்டாமல் அவன் வகுப்பிற்கு வெளியே வர அதை அறியாத மதியோ தன் பாடலை தொடர்ந்து கொண்டிருந்தாள்.

சிங்கக் குட்டிய புடிச்சு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்

வந்த வரைக்கும் நீ booksa

அட எடைக்குப் போடுடா லாபம்

நா டென்ஷ ன் ஆகிட்டேன் பக்கேட்டு பக்கேட்டு

டூருக்கு எடுங்கடா டிக்கெட்டு டிக்கெட்டு

“எங்க டிக்கெட் போடணும் சிம்லாவுக்கா? இல்லை ஊட்டிக்கா?” எனக் கேட்க

பாட்டு பாடிக் கொண்டிருக்கும் குஷியில் அங்கெல்லாம் ஹனிமுனுக்குத் தான் போகணும். டூருக்கு பெங்களூர், ஆக்ரா டபுள் ஓகே” எனக் கூற

அவளின் பதிலில் கௌதமிற்கே சிரிப்பு வர அதை அடக்கி கொண்டு “மிஸ்.மது..! “ என அழைக்க

“ஹையோ அவன்கிட்டயா உளறிக் கொட்டினோம்…? இன்னைக்கு எனக்கு நேரமே சரி இல்லை..!” எனப் புலம்பிக் கொண்டே கௌதமின் புறம் திரும்ப

“இன்னைக்கு எடுத்த டாபிக் பற்றி நாளைக்கு ஒரு அசைன்மென்ட் சமிட் பண்ற… அது தான் உனக்குப் பனிஷ்மென்ட்…! “ என்று விட்டு நகர்ந்து விட்டான்.

இவ்வாறு நாளொரு கூத்தும், பொழுதொரு பனிஷ்மென்ட்டுமாய்ச் சென்று கொண்டிருந்தது. அந்த ஒரு நாள் வரும் வரை… அதைப் பற்றி யோசிக்கப் பிடிக்காதவனாய் தன் நினைவுகளில் இருந்து மீண்டு வந்தான் கௌதம்.

மதி, பிரசன்னா, கவி என அனைவரும் தூங்கி கொண்டிருக்கக் கௌதமும் தூங்க தொடங்கினான்… என்றும் இல்லா திருநாளாய் அந்த அதிகாலை வேளையில் மதிக்கு முழிப்பு வர ஏதோ தன்னை அழுத்துவது போல் தோன்ற திரும்பியவளின் கண்களில் தன் தோள் மேல் சாய்ந்திருந்த கௌதமின் முகம் தெரிந்தது.

அவன் தலையை விலக்குவதற்காக அவள் நெளிந்து குடுக்க முற்பட்டதில் அவன் அவள் கழுத்தினில் முகம் புதைத்தவாறு சரிந்து விட அவன் மீசை ஏற்படுத்திய குறுகுறுப்பில் மது மூச்சடைத்து நின்றாள்.

உன் பனித்துளி பனித்துளி பனித்துளி

என்னைச் சுடுவது சுடுவது ஏனோ

என் சூரியன் சூரியன் சூரியன்

அதில் உருகுது உருகுது ஏனோ

இது நனவாய் தோன்றும் கனவு

இது காலையில் தோன்றும் நிலவு

இது கண்ணைக் கண்ணைப் பறித்து

வெளிச்சம் தரும் இரவு

காதலா காதலா எண்ணவும் கூசுதே..

ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே..

தூரத்தில் சென்னை மாநகராட்சி உங்களை இனிதே வரவேற்கிறது எனும் பலகை மினு மினுத்துக் கொண்டிருந்தது.

 

Advertisement