Advertisement

நெஞ்சம் 10:

 

துவாரகேஷ் – நிகழினி திருமணம் இனிதே முடிந்திருந்தது. அதைத் தொடர்ந்த சம்பிரதாயங்களும் முடிந்திருக்க, நிகழினியின் வீடு இருந்த தெருவிற்கு இரண்டு தெரு தள்ளி துவாரகேஷ் கட்டியிருந்த புது வீட்டிற்குச் கிரகப்பிரவேசம் செய்ய அழைத்துச் சென்றனர்.

 

இது எல்லாம் துவாரகேஷின் முடிவு தான். திருமணம் முடிந்த அன்றே தன் குடும்பமாகி விட்ட தன்னவளுடன் சேர்ந்தே புது வீட்டில் குடிபுக வேண்டும் என்று… ஆனால் ஹோமங்களும் கோ பூஜையும் செய்யாமல் இருக்கக் கூடாது என்று சொல்லவும் பூஜைகளை மட்டும் முன்னரே முடித்த கையோடு வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் வாங்கிச் செட் செய்திருந்தான் துவாரகேஷ்.

 

ஆதவன் இருளென்னும் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு நிலவாகிய தன் காதலிக்கு போக்கு காட்டி ஊடல் செய்து கொண்டிருந்த முன்னிரவில், துவாரகேஷும் தன் காதலியின் வரவை எதிர் நோக்கி காத்திருந்தான். சில மணித் துளிகள் அவனைக் காத்திருக்க வைத்துவிட்டு, மனமிரங்கி கணவனை ஏமாற்றாமல் தரிசனம் தந்திருந்தாள் நிகழினி.

 

அவனருகில் வந்து அமர்ந்தவளிடம் ” ஃபர்ஸ்ட் டைம் உன்னை இன்னைக்குப் புடவையில் பார்க்குறேன்… எவ்வளவு அழகா இருக்கத் தெரியுமா..?” அவளைப் பார்வையால் தழுவி கொண்டே செல்ல,

 

நிகழினியோ “அப்படியா… ஃபர்ஸ்ட் டைமா.. அப்போ சுகன்யா மேரேஜ்ல பார்த்தது” எனச் சொல்லி கேட்க,

 

“ஏன்டி..! இப்போ கரெக்ஷன் பண்றது ரொம்ப முக்கியமா…? எதாச்சும் பெர்பாஃர்ம் பண்ண விடுறியா.. இடக்கு மடக்காவே சொல்லிகிட்டு” எனச் சலித்துக் கொள்ள,

 

வந்த சிரிப்பை லாக் போட்டு அடக்கியவள் , “சரி சாரி… நீங்க கன்டினியூ பண்ணுங்க” என்று சொல்ல,

 

அவள் சிரிப்பது துடித்த உதடுகளில் தெரிய “முடியாது போடி… நான் எதும் சொல்ல மாட்டேன்…” என முறுக்கிக் கொள்ள, சிறுபிள்ளை போலான அவனது கோபம் அவளுக்கு அவன் மேலான பிடித்தத்தை மேலும் பிடிக்க வைத்தது.

 

“நீங்க சொல்ல வேண்டாம்… நான் சொல்றேன்” என்றவள் அவன் எதிர் பார்க்கும் முன்னரே கன்னத்தில் இதழ் பதித்து,

 

“எனக்கு உங்களைப் பிடிச்சுருக்கு” என்று சொல்லி அவனைப் பார்த்து கண்சிமிட்ட,

 

அவளது இதழொற்றலில் கிறங்கியவன் , “அப்போ நானும் சொல்றேன்..” என அவள் கையைத் தனக்குள் எடுத்துக் கொண்டு அவள் புறமாய்த் திரும்பி மேலும் நெருங்கி அமர,

 

“அதான் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டிங்கல்ல அப்புறம் என்ன..?” என்றதும்,

 

“சரி ஒகே சொல்லலை.. வாயை மூடிக்கிறேன்..” என்றவன் தன் இதழால் அவள் இதழை அணைத்தோடு அவளையும் அணைத்துக் கொண்டான்.

 

******************************************

 

“டேய்..! உன் பொண்டாட்டி என்ன தான்டா நினைச்சிட்டு இருக்கா..?” என எடுத்தவுடன் பொரிய ஆரம்பித்த அன்னையை நினைத்து நொந்து கொண்டவன்,

 

“அம்மா…! மாசம் ஆன சம்பளம் வருதோ இல்லையோ ஆனா உங்க பஞ்சாயத்து வந்துடுது… சொல்லுங்க இப்போ என்ன ஆச்சு?” என்று கேட்க,

 

” என்ன ஆச்சாவா…? முதல்ல *** நியூஸ் சேனல் பாரு..?” என்று சிடு சிடுக்க,

 

“இன்னைக்கு என்ன பண்ணியிருக்கா…? என்கிட்ட ஒண்ணும் சொல்லலையே” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டு, தனது லேப்டாப்பில் லைவ் டிவியில் குறிப்பிட்ட நியூஸ் சேனலை பார்த்தான்.

 

அதில் நதி நீர் பிரச்சனைக்காக விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்க, நிகழினியும் நின்றிருந்தாள் உடன் சந்திரனும், சுந்தரமும்… கூட்டத்தைக் கலைக்க வேண்டி அனைவரையும் காவல் துறை பேருந்தில் ஏற்றிக் கொண்டிருந்த காட்சி ஓடிக் கொண்டிருந்தது.

 

அன்னையின் பிபி எகிறியதற்கான காரணம் புரிய, “ம்ம் ஏதோ போராட்டம் போல” என்று சொல்லவும்,

 

“அவ போறதே எதுக்குத் தேவையில்லாத பிரச்சனைனு சொல்லிட்டு இருக்கேன்… வயசான இதுக ரெண்டும் அவளுக்குச் சப்போர்ட் பண்ணிட்டு கூடப் போயிருக்குங்க பாரு…” என்று சொல்ல,

 

“சரிம்மா.. நான் சொல்றேன் அவகிட்ட … நீங்க டென்ஷன் ஆகாதீங்க..” என்றதும்,

 

“நீயும் ஒவ்வொரு தடவையும் சொல்றேன் சொல்றேன்னு சொல்ற.. என்னத்தை தான் சொல்லுவியோ?? அவ ஒண்ணும்  கேட்குற மாதிரி தெரியலை…” என்று சலித்துக் கொள்ள,

 

தன்னிடம் புகார் சொல்லும் அன்னை தன் மனைவியின் முன்னால் எதையும் காட்டிக் கொண்டதே இல்லை.. அவள் சொல்கையில் சரி சரி என்று கேட்டுக் கொள்வாரே தவிர மறுத்து எதும் சொல்ல மாட்டார்.. நிகழினிக்கும் அது தெரியும் அவளும் தனக்கு எதும் தெரியாது என்பது போலவே நடந்து கொள்வாள். ஆக மொத்தம் அவர்களின் இந்த உறவு புரியாத புதிராக இருந்தாலும் சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றே…! அதை நினைத்த துவாரகேஷின் இதழ்களில் சொல்லாமலேயே புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது…

 

அன்னை அழைப்பை துண்டித்ததும் தன் மொபலை எடுத்து வாட்ஸப்பை ஒபன் செய்து ” வாவ்வ்வ்வ் கிரேட் நினி… கீப் அட் அப்… லவ் யூ… யும்மா” என முத்த ஸ்மைலிகளை அனுப்பி விட்டு, வேலையைத் தொடர்ந்தவனின் முகமோ காதலிலும், மனைவியைப் பற்றிய கர்வத்திலும் மின்னி மிளிர்ந்தது.

“நல்ல வேளை சந்திரா…! சாப்பாடும் மாத்திரையும் எடுத்துட்டு போகலாம்னு சொல்லும் போது கூட எதுக்குச் சாப்பாடெல்லாம்னு நினைச்சேன்…திரும்பத் திரும்பச் சொன்னதால தான் எடுத்துட்டு வந்தேன்… இல்லனா ரொம்பக் கஷ்டமா போயிருக்கும்… எவ்வளோ நேரம் பஸ்லயே உட்கார வச்சுட்டானுங்க” என வீட்டிற்குள் நுழைந்து வரவேற்பரையில் அமர்ந்து கொண்டு சுந்தரம் சந்திரனிடம் பேசிக் கொண்டிருக்க,

 

கணவனின் பேச்சைக் கேட்டவாறே அந்தப் பக்கம் வந்த கீதா, ” எதோ பிக்னிக் போயிட்டு வந்த மாதிரி பேச்சைப் பாரு… அவளுக்குனு வாய்ச்சுருக்காங்க பாரு நல்ல அப்பா.. நல்ல மாமனாரு” எனச் சொல்லிக் கொண்டு சென்றார் மனதிற்குள் தான்…!

 

அன்று வாரக் கடைசி… ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு விடுமுறைகளில் துவாரகேஷ் ஊருக்கு வந்துவிடுவான்.. வாரம் முழுதும் தனக்காகச் சென்னையில் தனியே கிடக்கும் கணவனுக்கு இந்த இரண்டு நாட்களும் நேரம் ஒதுக்கி விடுவாள் நிகழினி.

 

” Dk…! மணி பத்து ஆகிடுச்சு எழுந்திருங்க…” எனத் துவாரகேஷின் தோள் தொட்டு எழுப்ப,

 

அவனோ ” நோ நினி..! ஐ ம் சோ டயர்ட் .. நல்லா தூங்கப் போறேன்” என்று படுத்துக் கொண்டே சொல்ல,

 

“காலையில் சாப்பிடாம இருக்கக் கூடாது… ப்ரேக் பாஸ்ட் முடிச்சுட்டு வந்து தூங்குங்க” என்று மீண்டும் எழுப்ப,

 

“என்னடி ..! நை நைன்னுட்டு இருக்க” எனப் பெட் அருகில் நின்று கொண்டிருந்தவளின் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் படுக்க வைத்துக் கொண்டவன்,

 

“ஷ்ஷ்… அப்படியே நான் எழுந்துக்குற வரை இரு..” எனக் கண்களைத் திறக்காமலே சொன்னவன் அடுத்த நொடியில் தூங்கியிருந்தான்.

 

அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் கணவனையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, எதோ ஒரு உள்ளுணர்வில் விழி திறந்தவன் நிகியைப் பார்த்து , ” என்ன?” என்பதாய் புருவம் தூக்க,

 

“ஒன்றுமில்லை” என்றவளின் கண்களில் கண்ணீர் கோர்த்து பள பளக்க,

 

பதறியவன் ” ஹே ..! என்னாச்சு..? ஏன் கண் கலங்கியிருக்கு” என அவள் கன்னத்தைக் கைகளால் தாங்கிக் கொள்ள,

 

“எல்லாம் எனக்காகத் தானே DK.! ஒவ்வொரு வாரமும் சென்னைக்கும் வீட்டுக்கும் அலைஞ்சுட்டு இருக்கீங்க… ரொம்பக் கஷ்டப்படுத்துறேன்ல.. ஐம் சாரி DK” என்றவாறு அவன் நெஞ்சத்தில் முகம் புதைத்துக் கொள்ள,

 

“நீ சொன்னதுல ஒண்ணு மட்டும் தான் சரி எல்லாமே உனக்காகத் தான்..மத்தபடி எனக்குக் கஷ்டம்லாம் இல்ல.. லூசு மாதிரி பேசக் கூடாது…” என்றவன் தன்னை அணைத்துக் கிடந்தவளின் நெற்றியில் இதழ் பதித்தவன் அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

 

சில வருடங்களுக்குப் பிறகு:

 

“ஏன் DK..! கண்டிப்பா நான் தான் வரணுமா…? வேற பெரிய ஆள் யாரையாச்சும் இன்வைட் பண்ணலாம்ல” எனக் கம்பெனியின் வாசல் வரை வந்து விட்டிருந்த காரின் உள் இருந்து இறங்காமல் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் நிகழினி.

 

“இதுக்குப் பதில் நான் அல்ரெடி சொல்லிட்டேன் நினி… வா போகலாம் நேரம் ஆகிட்டே இருக்கு..” என்று ஒரு கையில் தன் ஒரு வயது மகன் ப்ரீதனை தூக்கியபடி மறு கையால் நிகழினியின் கை கோர்த்து உள்ளே அழைத்துக் கொண்டு சென்றான். விஷயம் இது தான்.. ! துவாரகேஷ் புதிதாய் ஆரம்பித்திருக்கும் என்.டி.பி சொல்யூஷ்னிற்கு முக்கிய விருந்தினராக நிகழினியை அழைத்திருந்தான்.

 

“குத்து விளக்கேற்றி இன்றைய நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்குமாறு சிறப்பு விருந்தினர். திருமதி. நிகழினி அவர்களை அழைக்கிறோம்” என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அழைப்பு விடுக்க,

 

“என்ன Dk..? இதுக்காச்சும் அத்தையைக் கூப்பிட்டு ஏத்த சொல்லலாம்ல” எனத் துவாரகேஷின் புறம் சாய்ந்து அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற,

 

“நீ சொன்ன அத்தை தான் உன்னை ஏத்த சொல்லி சொல்லணும்னு அல்ரெடி ஆர்டெர் போட்டாச்சு” என்று சொன்னதும்,

 

நிகழினி திரும்பி கீதாவை பார்க்க, மருமகளின் பார்வையை வைத்தே அவளது கேள்வி என்னவாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொண்டவர் ‘போ’ என்பதாய் தலையசைக்க, நிகழினி சரி என இதழசைத்து விட்டு எழுந்து கொண்டாள்.

 

இவை அனைத்தையும் மௌனமாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்த நிகழினியை பெற்றவர்களின் மனம் நிறைந்திருந்ததைச் சொல்லவும் வேண்டுமோ..?!

 

தன் ஒரு வயது மகனுடன் விளையாடிக் கொண்டிருந்த துவாரகேஷ், ” நினி…! உன் போன் அடிக்குது பாரு..” எனக் குரல் கொடுக்க,

 

“நான் தான் குளிச்சிட்டு இருக்கேன்ல Dk! நீங்க எடுத்து என்னனு கேளுங்க” எனக் குளியலறையில் இருந்து சத்தமிட,

 

“நான் வேணா உள்ளே கொண்டு வந்து தரவா..?? நீ பேசி முடிக்கிற வரை வெயிட் பண்ணி திரும்ப வாங்கிட்டு வந்துடுறேன்” எனக் குறும்பு கூத்தாடும் குரலில் சொல்ல,

 

அவனது பேச்சில் இருந்த விஷமத்தைக் கண்டு சிரித்துக் கொண்டவள், “ஆணியே *** வேணாம்.. நான் வந்து பார்த்துக்குறேன்” என்று சொல்லி விட,

 

“ச்ச இதான் ஒவர் ஸ்மார்ட்டா இருக்க பொண்ணைக் கல்யாணம் பண்ணக் கூடாது” என்று முனக,

 

அதற்குள் வெளியே வந்தவள், “ஹோ இப்போவும் ஒண்ணும் கெட்டுப் போகலை..ட்ரை பண்ணுங்களேன்” என இடுப்பில் கை வைத்து முறைத்தபடி சொல்ல,

 

“உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்லை.. உன்னை விட என்னைச் சரி வர புரிஞ்சுக்க யாருமில்லை… எவளுமில்லை” எனப் பாடியபடி அவளை இழுத்து தன் நெஞ்சில் விட்டுக் கொள்ள,

 

அந்நேரம் அவர்களின் பிள்ளை செல்வம் அழத் தொடங்க “அப்பா.. உன்னைக் கண்டுக்கலைனு அழறீங்களா செல்லக் குட்டி… ம்ம்ம் என் பட்டுக் குட்டியை மறப்பேனா” எனச் செல்லம் கொஞ்சியபடி மகனை தூக்கிப் போட்டுப் பிடித்துச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்க,

 

துவாரகேஷின் மேல் துளிர் விட்ட காதல் மெல்ல மெல்ல விருட்சமாய் வேரூன்றி தலையசைத்துக் கொண்டிருப்பதைத் தன்னவனின் காதல் மழையில் நனைந்தபடி ரசித்துக் கொண்டிருந்தாள் நிகழினி.

 

Advertisement