Advertisement

 பகுதி – 17
என்ன சொல்கிறான் உங்கள் மகன்?” என்று வினவினார் ரேகா முகத்தை தன் தோளில் இடித்துக்கொண்டு. 
அவன் வர மாட்டான்…” என்று கோபால் சொல்லி முடிப்பதற்குள் ரேகா குறுக்கிட்டார், “அதானே பார்த்தேன்… அவன் பெண்டாட்டி தான் அவனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாளே. போதாகுறைக்கு நீங்களும் நேற்றிலிருந்து அவள் புராணம் பாடுகிறீர்கள்.” தன் பேச்சை யாரும் கேட்க மறுக்கிறார்கள் என்ற கோபத்தில் அனுவை வசை பாடி மாமியார் வழக்கத்தை செவ்வென செய்தார்.
சும்மா குறை சொல்லவேண்டும் என்று பேசாதேஅவன் தான் இரண்டு நாட்களாக இங்கு வந்துக்கொண்டு தானே இருக்கிறான்புதிதாக திருமணம் ஆனவர்கள் ஒன்றாக இருக்க ஆசை படுவார்களா இல்லை தெரிந்தே பாம்பு பொற்றில் கை விடுவார்களா. இன்று சமாளிக்கலாம் நாளை நானே அவனை போய் பார்க்கிறேன்.” என்று மகனுக்கு செலவின்றி வக்கீல் தொழில் பார்த்தார்.
என்னவோ செய்யுங்கள் நீங்களும் உங்கள் மகனும்.” என்று சலித்த ரேகா தீடிரென சத்தம் கேட்கவும் அவ்விடம் நோக்கி ஓடினார். கோபாலும் அவர் பின்னே ஓட அங்கு கண்ட காட்சி அவர்களை எப்போதும் போல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
***
நக்கல் பண்ணாமல் ஒழுங்காக சொல்லுங்கள்.” என்று அவனை இடித்து அவள் முணுக அவனோ, “நிஜமாகவே பசிக்கிறது. உணவருந்திவிட்டு சொல்லவா?” என்றவனை அதிர்ச்சியாக எறிட்டவள், “என்ன இன்னும் நீங்கள் சாப்பிடவில்லையா? நேற்று போல் இன்றும் வரமாட்டீர்கள் என்று நினைத்து குறைவாக தான் உணவு செய்தேன்.” என்றாள் கையை பிசைந்தபடி.
வேறு ஏதாவது இருந்தால் கொடு. மதியம் சரியாக  சாப்பிடவில்லை.” என்றான் நெட்டி முறித்து. அவன் சரியாக சாப்பிடவில்லை என்று உரைக்க அவளின் இளகிய மனம் பதறியது, “கொஞ்சம் மாவு இருக்கிறது தோசை ஊற்றி தருகிறேன்.” என்றபடியே கிச்சனுக்கு செல்ல அவனும் பின் தொடர்ந்தான்.
அனு தன்னவன் பட்டினியாக இருக்கிறான் என்ற கவலையில் வேகமாக தன் வேலையை செய்ய அவள் மணாளனோ இந்த இடத்தை தனக்கு சாதகமாய் எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று யோசிக்க அவன் பசி இருந்த இடம் தெரியாமல் காற்றில் பறந்தது.
சிறிது நேரத்தில் அவள் ஒரு தட்டில் தோசையுடன் நீட்ட அதை வாங்காமல் வாயை மட்டும் திறந்தான்.
என்ன இது சிறுபிள்ளை போல்நான் அடுத்து ஊற்ற வேண்டும் இதை பிடியுங்கள்.” என்று சிணுங்கி அவன் கையில் தட்டை திணித்தாள் அவன் பாவனைகளை கண்டு கொள்ளாதவாறு.
“ஷ்… படம் எல்லாம் பார்த்தது இல்லையா? கணவன் தட்டை கையில் வாங்காமல் வாயை திறந்தால் அவனுக்கு ஊட்ட வேண்டும். இப்படி நீ எல்லா வழியையும் அடைத்தால் நான் எப்படி தான் ரொமான்ஸ் செய்வது.” என்று அசடு வழிந்தவனை பார்க்க அவன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தோன்றினாலும் அவனைக் கொஞ்சம் சீண்ட வேண்டும் என்ற குறும்பு எட்டிப் பார்க்க அவனைக் கண்டு கொள்ளாதது போல் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
எனக்கு தூக்கம் வருகிறது. சீக்கிரம் சாப்பிடுங்களேன்…!” என்றாள் பொய்யாக ஒரு கொட்டாவியை வெளியேற்றி.
எல்லாம் என் நேரம்இப்போது தான் உனக்கு தூக்கம், தலைவலி எல்லாம் வரும்.’ என்று சலிப்புடன் முணுமுணுத்துக் கொண்டே டைனிங் டேபிளில் அமரலாம் என்று நினைத்து திரும்பியவனை அவள் இழுக்க அதை சற்றும் எதிர்பாராதவன் நிலை தடுமாறி அவளை அழுந்த பிடித்து தன்னை நிலைப்படுத்தியவன், அனுவின் அதிர்ச்சியான விரிந்த கண்களை பார்த்து குழம்பினான்.
என்னவென்று கேட்பதற்குள், கண்கள் அவர்கள் நிலையை உணர்த்த அவள் உடையை சரி செய்து விட்டு சத்தம் இல்லாமல் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தான்.
என்னதான் அவன் தன் கணவனாக இருந்தாலும், காதலனாக மாறியும், தன்னுள் சரி பாதி என்றாலும் தெரியாமல் நடந்த அந்த தவறில் அவள் பெண்மை விழித்து வெட்கத்தில் அவன் பின் போக மறுத்தது.
அமைதியாய் அவன் இரவு உணவு உண்ண, சற்று நேரத்தில் அவர்கள் அறையில் இன்னும் அந்த நிகழ்விலிருந்து வெளி வராமல் தவித்தாள் அனு. அதை கண்டவன் அவள் கூச்சத்தை போக்க அவன் பாதியில் நிறுத்திய உரையாடலை கையில் எடுத்தான்.
நான் சொல்வதை தெளிவாக கேட்டுக் கொள் அனு. குறுக்கே எதுவும் பேசாதே.” என்று தீர்க்கமாக உரைத்து  அவளை தன் பக்கத்தில் அமர வைத்து கையை தன்னுள் சேர்த்துக் கொண்டான்.
என் வீட்டில் நான் ஒரே பையன். அம்மாவிற்கு சொல்லிக் கொள்ளும்படி நெருங்கிய உறவுகள் இல்லை. அப்பாவுடன் பிறந்த ஒரு தங்கை இருக்கிறார். அப்பா ரிடையர்ட் ஐ.ஏ.ஸ் ஆஃபீஸர். அம்மா பேங்க் மானேஜர். நான் சிட்டியில் உள்ள பெரிய மெட்ரிக் பள்ளியில் படித்தேன். நான் விரும்பிய எல்லா வசதிகளும், விருப்பங்களும் எனக்கு கிடைத்ததுநிறைவேறியது…  ஒன்றைத் தவிரஅது எனக்கு ஒரு உடன் பிறந்தவர் வேண்டுமென்பது. ஸ்கூலில் என் வகுப்பு தோழர்களை அவர்கள் தம்பியோ, தங்கையோ அண்ணன் என்று கூப்பிடும் பொழுது எனக்கும் ஆசையாக இருக்கும். வீட்டில் வந்து மிகவும் அடம் பிடிப்பேன். அவர்கள் ஏதாவது சொல்லி சமாளிப்பார்கள். அப்படி ஒரு நாளில் என் அத்தை குடும்பத்துடன் வந்திருந்தார். அவருக்கு ஒரு மகள் என்னை விட நான்கு வயது சிறியவள். நான் அடம் பிடிப்பதை பார்த்து இரண்டு வயதுள்ள அவள் அண்ணா என்று கூப்பிட்டாள். எனக்கு அவ்வளவு சந்தோசம்… வீட்டில் எல்லோரும் என்னை அப்படி கூப்பிடக் கூடாது, அத்தான் என்று தான் கூப்பிட வேண்டும் என்று சொன்னதும் அவள் மாத்திக் கொண்டாள்… என் ஆசை மட்டும் தீரவே இல்லை. யாரும் இல்லாத போது அவளை அண்ணா என்று கூப்பிட சொல்லி கெஞ்சுவேன். ஆனால் அவள் கேட்க மாட்டாள். காலப்போக்கில் அவள் அதை மறந்து விட்டாள். நானும் மறந்து விட்டேன் என்பதைவிட வீட்டில் கண்டித்ததால் விட்டு விட்டேன். அவள் அந்த ஒரு முறை அண்ணா என்று கூப்பிட்டதிலிருந்து அவளை நான் என் தங்கையாகவே பார்த்தேன்… அடம் பிடித்து அவளையும் நான் படிக்கிற ஸ்கூலில் சேர்க்க வைத்தேன். எப்போதும் அவளுடன் ஒட்டிக்கொண்டு பாதுகாப்பாக சுற்றினேன். அப்படியே பள்ளி நாட்கள் செல்ல நான் காலேஜில் சேர்ந்ததும் கஷ்டமாய் இருந்தது, எப்படியோ சமாளித்து விட்டேன். நான் படித்த அதே கல்லூரியில் அவளும் சேர்ந்தாள் அதே போல் தான் ஆபீஸும். என் அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாள். நாங்கள் இருவரும் சேர்ந்து நிறைய ஊர் சுற்றி இருக்கிறோம்பாதி நாள் அவளுடனும் முரளியுடனும் தான் இருந்திருக்கிறேன். அத்தான்… அத்தான் என்று என் பின்னாலே சுற்றுவாள்நான் தான் கற்பனையில் அதை அண்ணன் என்று எடுத்துக் கொள்வேன்…” என்றவனை அமைதியாய் பார்த்தவள் மனதினுள் எதற்கு தன் சுயசரிதையை சம்பந்தம் இல்லாமல் கூறுகிறான் என்று குழம்பினாள்.
இப்பொழுது பிரச்சனையே அது தான். நான் அவளை தங்கையாய் நினைப்பதை அவளிடம் தெளிவுப்படுத்த தவறி விட்டேன். என் வீட்டில் உள்ளவர்களும் அதை புரிந்து கொள்ளவில்லை…” என்று பெருமூச்சை வெளியேற்றியவன் மீண்டும் தொடங்க அனு கூர்ந்து கவனிக்கலானாள்.
அத்தை அவளிடம் சிறு வயதிலிருந்தே நீ உன் மாமா வீட்டிற்கு தான் மருமகளாகப் போகிறாய். ஆதி தான் உன்னை மணக்கப் போகிறவன். உனக்கு அவன் அவனுக்கு நீ…’ என்று அவர்கள் ஆசையை அவள் மேல் திணித்து வளர்த்திருக்கிறார்கள். இன்று அது ஆலமரமாய் வளர்ந்து கிளைகள் ஊன்றி, விழுதுகள் விட ஆரம்பித்துவிட்டது. போதாகுறைக்கு என் அம்மாவிற்கு வேறு அவளை எனக்கு மணம் முடிக்க வேண்டும் என்று ஆசை.”
நம் திருமணத்தால் இப்போது  பிரச்சினை ஆகிவிட்டதா?” என்று கேட்டவளை நெற்றியில் முட்டியவன், “நீ புத்திசாலி என்று நிரூபிக்கிறாய் பேபி…”
ம்ம்… தெரிந்தால் சரி. முதலில் முழுவதும் கூறுங்கள். எனக்கு இடைவேளை எல்லாம் பிடிக்காது.” என்றாள் முகத்தை சுளித்து.
நான் என்ன கதையா சொல்கிறேன்?” என்று பொய்யாய் முறைக்க அவளும் அவனை முறைக்க, “தயவு செய்து சீரியஸாக பேசும் போது முறைக்காதீர்கள்எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வருகிறது.” என்றவள் தன் வாய் பொற்ற அவளை கீழே தள்ளி சரிந்தான்.
இப்போது சிரி பார்க்கலாம்…” என்று அவள் முகம் நோக்கி குனிய அதை வேகமாக தடுத்தவள், “நீங்கள் பிரச்சனையை சொல்லி முடிக்கும் வரை இதெல்லாம் கிடையாது.” என்றாள் ஸ்ட்ரிக்டாக.
மோன நிலைக்கும் நிகழ் காலத்திற்கும் இடையில் சிக்குண்டு தடுமாறியவன் ஒரு வழியாய் தன்னை சமன் படுத்தினான்.
நம் திருமணம் பற்றி தெரிந்ததும் அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நானே அவளிடம் நம் திருமணம் பற்றி நேரடியாக சொல்லி இருக்க வேண்டும் மறந்து விட்டேன். நான் ஏதோ அவளை ஏமாற்றி விட்டேன் என்று நினைக்கிறாள். நீயே சொல் அவளை என் தங்கை ஸ்தானத்தில் வைத்து இவ்வளவு வருடம் பழகிய பின்பு அவள் வந்து உன்னை காதலிக்கிறேன்உன் மனைவியை விட்டுவிட்டு வா நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்…’ என்று கூறினால்எனக்கு இடி விழுந்தது போல் இருந்தது. அவளுக்கு துணையாக என் அத்தை, மாமா, அம்மா என்று எல்லோரும் அவள் புறம் தான். அப்பா தான் எனக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். எனக்கு இல்லை நமக்கு. அவளுடைய காதல் இன்று ஆப்சஸனாக மாறி விட்டது. பைத்தியம் போல் நடந்து கொள்கிறாள். எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவள் செயல் எங்களை பயமுறுத்த டாக்டரிடன் காண்பித்தோம். சிறு வயதிலிருந்தே அவள் மனதில் நான் தான் அவளை மணக்க போகிறவன் என்பது ஆழமாக பதிந்ததால் அவளை கொஞ்சம் கொஞ்சமாக தான் மாற்ற முடியும் அதுவரை நான் அவளுடன் இருப்பது அவசியம் என்று ஸ்ட்ரிக்டாக கூற வேறு வழியின்றி இரண்டு இரவுகளாக அங்கு இருந்தேன். அவள் உறங்கிய பின் இன்று இங்கு வரலாம் என்று எண்ணியிருந்த சமயத்தில்… இன்று அவள் எல்லை மீறி விட்டாள். என்னால் இனி ஒரு நிமிடம் கூட  அவள் இருக்கும் இடத்தில் இருக்க முடியாது…” என்றவன் கண்களை இறுக மூடி தலையை இருபுறமும் ஆட்டி தன் வாழ்வில் நடந்த அந்த சங்கடமான சில நொடிகளை மறக்க முயற்சித்தான்.
அவன் தோளில் கை வைத்து அவனை நிமிர்த்தியவளை நோக்கியவன் அவள் கன்னங்களை கைகளில் ஏந்தி, “அதே நினைப்பில் இருந்ததால்… நீ அப்படி செய்யும் போது அவள் மேல் வந்த ஆத்திரத்திலும்என் மேல் எனக்கு வந்த வெறுப்பிலும் உன் மேல் கோபப் பட்டுவிட்டேன். அவள் செய்ததை என்னால் சகிக்க முடியவில்லை…” என்றவன் அவளுள் முகம் புதைத்து அந்த நினைவுகளை அழிக்க முயற்சித்தான்.
காலையில் அவர் கூட தான் இருந்தீர்களா?” என்ற கேள்விக்கு ஆமாம் என்று தலை ஆட்டினான் அவள் அணைப்பிலே இருந்து கொண்டு.
அவர்கள் பெயர் என்ன?”
நிலா…”

Advertisement