Uyirin ularal - episode 30

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 30

ஒருமணி நேரம் என்று சென்ற மீட்டிங், போக, வர, டீ பிரேக் என்று முழுதாக மூன்று மணி நேரத்தை விழுங்கியது. ரிஷி அங்கே இருந்தாலும் அவன் நினைவு முழுவதும் அபியை சுற்றி இருந்தது.

அவனை புரிந்து கொண்ட மனோ எல்லாவற்றையும் தானே ஏற்று செய்தான். ரிஷி வீடு வந்து சேர இரவு பத்துமணியை நெருங்கியது.

ரிஷி வீடு வந்து தன் தாயாரை காண சென்றான். மகனின் முகத்தில் சூழ்ந்திருந்த கலக்கம், அதையும் மீறி அவன் கண் அங்கே இங்கே செல்வதை பார்த்தவர் மகன் சொல்லாததையும் புரிந்து கொண்டார்.

தன் அருகில் நின்ற மகனை அமரவைத்தவர்
" ரிஷி அம்முவிடம் மனம்விட்டு பேசிவிடு, கணவன் மனைவிக்கு இடையில் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது, அப்படியிருந்தால் சில வேண்டாத விச ஜந்துக்கள் உள்ளே புகுந்துவிடும். அம்மு சின்ன குழந்தை இல்லை. ஒரு குழந்தைக்கு தாயாகும் வயது அவளுக்கு வந்து நாளாகிறது. " என்றார் மகனின் தலையை தடவியபடி. ரிஷி தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு கிளம்பினான்.

இவனை கண்டவுடன் எழுந்த அன்னம்மா ப்ரியா இரண்டு முறை அபியை தேடி வந்ததாகவும், ஒரு முறை தான் ரிஷி சொல்லியிருப்பதாக கூறி பார்க்க விடவில்லையென்றும், மற்றொரு முறை அபியே தனக்கு டயர்ட்டா இருப்பதாக கூறவும் ப்ரியா கோபத்தில் சென்றுவிட்டதாக கூறினார். கொண்டு போன சாப்பாட்டை வைத்துவிட்டு போகுமாறு அபி கூறிவிட்டதாகவும் அன்னம்மா கூறிவிட்டு தன் கடமையை முடித்துவிட்டு கிளம்பினார்.

கதவை திறந்த ரிஷி அதிர்ச்சியாகி நின்றான். அறை முழுவதும் இருளில் மூழ்கி இருந்தது. ஸ்விட்சை போட்டு அறைக்கு வெளிச்சத்தை கொடுத்தவன் அடுத்து அபி படுத்திருந்த கோலத்தை பார்த்து சிலையாகி நின்றான்.

அபி கட்டிலில் ஒருபக்கமாக ஒருக்களித்து காலை சுருட்டிக்கொண்டு படுத்திருந்தாள். அவளின் கை.... அந்த கை ரிஷி தொட்டு கோலமிட்ட இடமான வயிற்றில் இருந்தது. ஏதோ தன்னை விட்டு சென்றுவிடாமல் பிடித்துவைத்திருப்பதை போல இருந்தது அந்த கையின் பிடி.

ரிஷியின் எண்ணங்கள் எங்கேல்லாமோ சென்று வந்தது. " குழந்தையையா ? குமரியா ? இந்த பெண்ணை எப்படி கையாளுவது என்று மலைத்து போய் நின்றான்.

மெல்ல அவள் அருகில் சென்று பார்த்தான். அழுதுகொண்டே தூங்கியிருப்பாள் போல. கன்னத்தில் கண்ணீரின் சாயல். தூங்கும் போதும் சற்று இடைவெளி விட்டு விட்டு வந்த ஏக்கம் அவளின் நிலையை காட்டியது. உடையை கூட இன்னும் மாற்றவில்லை. வைத்திருந்த உணவு அங்கேயே இருந்தது.

" அம்மு " என்றான் ரிஷி மெதுவாக.

முதல் அழைப்பிலேயே கண்ணை திறந்தவள் அவனை பார்த்து முறைத்தாள். " அம்மு பசிக்கிதிடீ, காலையில் சாப்பிட்டது என்றான் கெஞ்சும் குரலில்.

அபியை நார்மலாக்கும் ஒரே ஆயுதம். உடனே எழுந்தவள் முகத்தை கழுவிக்கொண்டு பிரெஷ்ஷாகி வந்து ரிஷிக்கு உணவை பரிமாறினாள். தட்டை எடுத்தவன் இரண்டு வாயை உண்டபின் ( அப்போதுதான் பசித்து உண்கிறான் என்று நம்புவாள் ) அவளுக்கும் ஊட்ட வாயருகே கொண்டு சென்றான். வாயை திறக்காமல் அவனையே பார்த்தவள் பின்பு என்ன நினைத்தாளோ வாயை திறந்தாள்.

இருவரும் சாப்பிட்ட பின் அபி பால்கனியில் போய் வெளியே பார்த்தபடியே நின்றாள். அவளின் தனிமையை கலைக்க விரும்பாமல் ரிஷி அடுத்து அவளை எப்படி அனுக என்று பெட்டில் சாய்ந்தபடி யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது அவன் வீசி எறிந்த பேப்பர்ஸ் அவன் கண்ணில் பட்டது. அதில் சில இடங்களில் மார்க்கரால் மார்க் செய்யப்பட்டிருக்க அது அவனது கவனத்தை ஈர்த்தது. அது என்ன என்று எடுத்து பார்த்தவன் அதிர்ந்து போனான்.

அது அபியின் படிப்புக்கு ஏற்ற வேலைக்கான விளம்பரம்.. எதுவும் சென்னையில் இல்லை. பிற மாநிலங்கள் மற்றும் பிற தேசத்தில். சிலது ஆதரவு அற்ற இல்லத்தின் விளம்பரமும். ரிஷிக்கு தலையே சுற்றியது.

" அட லூசுகளா, உங்கள் அறிவை உருப்படியாக எதிலாவது செலவிடக்கூடாதா. கணவன் மனைவிக்கு இடையில் போதிய பிரச்சனையை ஏற்படுத்தியாச்சு, அத்தோடு விடாமல் மனைவியை இண்டரெக்டா வெளியே போகவும் வழிகாட்டியாகுது.

ஆனால் அந்த பிசாசுகளுக்கு தெரியாதே, பழகியவர்களுக்காக இந்த பெண் உயிரையும் கொடுப்பாள் என்று. அவளால் மற்ற யாருக்கும் துன்பம் வரக்கூடாது என்று நினைத்தே அனைத்தையும் தன்னில் புதைத்தவள் ஆயிற்றே. அதற்கு பயம் என்று அவர்களாகவே ஒரு பெயர் வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள். இவளிடம் வாங்காமல் அவர்கள் அடங்கப்போவது இல்லை. என்னை பார்க்காவிட்டாலும் தன் அத்தை வேதனை படும்படி எந்த காரியத்தையும் அவள் செய்யப்போவதில்லை, பின்பு ஏன் வீண் கவலை என்று நினைத்தவன் அந்த பேப்பரை குப்பையில் போட்டுவிட்டு

" அம்மு வந்து தூங்கு " என்று அழைத்தான்.

அவனை திரும்பி பார்த்தவள் போய் இரவு உடைக்கு மாறிவிட்டு தன் இடத்தில் ஒதுங்கி படுத்தாள்.

" என்னடி மறுபடி ஆரம்பிக்கிறாய், உன் கோபத்தை எதில் வேண்டுமென்றாலும் காட்டு, ஆனா இப்படி தள்ளி படுக்கும் வேலை மட்டும் வேண்டாம். இரண்டு மாதமாக சேர்ந்தே தூங்கி பழகிவிட்டு, மனுஷன் ஐந்து நாள் தனியாக படுத்து தவித்து காய்ந்து நொந்து போய் வந்திருக்கிறான். அரிச்சந்திரனின் தங்கச்சி அந்த ப்ரியா, ஏதோ கூறினாள் என்பதற்காக என்னிடம் பாய்கிறாய். பிரச்சனை என்ன ? நான் என்ன தப்பு செய்தேன் என்று வாயை திறந்து சொல்லி தொலை, அதைவிட்டுட்டு கண்ணை உருட்டி உருட்டி முறைச்ச என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது " என்றான் கோபத்தில்.

" சும்மா சும்மா ஐந்து நாள் ஐந்து நாள் என்று புலம்பாதீர்கள், நானா உங்களை என்னை விட்டுட்டு போக சொன்னேன். போகும் போதே தடுத்தேன், போகவேண்டாம் என்று. போயே தீர வேண்டும் என்று போய்விட்டு இப்போ தனியே படுத்தேன் படுத்தேன் என்று என்ன பேச்சு. நீங்கள் மட்டும்தான் தனியே தூங்கினீர்களா ?" என்று கேட்டுவிட்டு திரும்பி படுத்தவளின் முதுகை முறைத்தவன்

" ஆமா நான் தான் போனேன் உன்னை விட்டுட்டு, ஆனா இப்போ உன் அருகில் தானே இருக்கிறேன். இப்போதும் ஒதுங்கி போனா என்ன அர்த்தம் " என்றவன் அவள் மேல் கையை போட்டான்.

கையை ஒரு வேகத்தில் தட்டிவிட்டவள்
" சின்னத்தான் நான் உனக்கு வேண்டாம், நீ என்னை விட்டு போயிடு " என்றாள் அழுது கொண்டே.

" என்ன ?" என்று ஆத்திரத்தில் அவளை தன் புறம் திரும்பியவன் அவள் கண்ணீரை கண்டு அவளை நெருங்கினான்.

" சின்னத்தான் ப்ளீஸ், என்னிடம் வராதே, என்னை.... என்னை தொட்டு பேசாதே, ப்ளீஸ் " என்று எழுந்து முழங்காலில் முகத்தை புதைத்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.

கோபத்தில் அபி என்ன செய்தாலும் அதை எளிதாக கையாளுபவனுக்கு அவளின் கண்ணீரை எப்போதுமே கையாள தெரியாது.

" ஏய் அழாதே, ஓகே ஓகே உன்னை தொடல. ஐ அம் சாரி. மாலை உன்னிடம் அப்படி நடந்துகொண்டதற்கு. தப்புதான் உன் சம்மதம் இல்லாமல், என்னை உனக்கு பிடிக்குமா, பிடிக்காதா என்று தெரிந்துகொள்ளாமல் நான் அப்படி நடந்துகொண்டது தப்புதான். உன் உணர்வோடு நான் விளையாடியது பெரிய தப்பு. சாரிடி செல்லம். அழாதேடா " என்றான் வருத்தத்தோடு.

அவன் வருந்துவதும் பொறுக்காமல் "இல்லை சின்னத்தான், நான் உன்னை தப்பு சொல்ல, என் மனதில் ஏற்கனவே ஏக குழப்பம் அதில் இதை எப்படி எடுத்துக்கொள்ள என்று எனக்கு புரியல, ஆனால் நான் தப்பானவ, நான். . நான் மோசமான பெண். உனக்கு கொஞ்சமும் தகுதியில்லாத மனைவி நான்." என்று தலையை தூக்காமலே கேவி கேவி அழுதாள்.

" அம்மு என்ன பேசுற?" என்றான் ரிஷி கோபமாக.

அவள் பதில் சொல்லாமல் அழுதுகொண்டே இருக்க

" என்னடா உன் பிரச்சனை, என்னை ஏன் இப்படி கொல்லுற " என்றான் அதே கோபத்தில்.

பதில் சொல்லாதவள் திடீரெண்டு தலையை தூக்கி அவனின் டீஷர்ட்டை பிடித்து உலுக்கினாள்.

" உனக்கு வேற பெண்ணே கிடைக்காமலா என்னை திருமணம் செய்தாய்? என்னை எதற்காக திருமணம் செய்தாய்? உலகத்தில் எத்தனையோ நல்ல பெண் இருக்க என்னை... என்னை ஏன் கல்யாணம் செய்துக்கிட்ட. என்னால முடியல. என்னை நினைக்கும் போது எனக்கே அருவருப்பாக இருக்கிறது. நான் உயிரோட இருக்கவே கூடாது. நந்து.... நந்து ப்ளீஸ் எனக்கு நிறைய தூக்க மாத்திரை தாயேன், ப்ளீஸ் நான் ஒரேடியாக தூங்கி போய்விடுகிறேன் " என்றாள் அபி கதறியபடி.

அவள் பேசிய பேச்சை கேட்டவனுக்கு அவளை அடிக்கவேண்டும் போல ஆத்திரம் தலைக்கேறியது, ஆனாலும் அது ஒரு நல்ல ஆண் மகன் செய்யும் செயல் இல்லை என்று நினைத்தவன் மெதுவாக அவளது கையை தன்னிடமிருந்து விலக்கினான்.

"நீ இன்னும் பிரச்சனையை சொல்லவே இல்லை " என்றான் அமைதியாக.

" சொன்னா நீ மாத்திரை தருவியா ?" என்று கேட்டாள் கண்ணில் எதிர்பார்ப்புடன்.

" ம் "என்றான் அவன்.

உடனே " வந்து சின்னத்தான், சின்னத்தான் எப்படி சொல்வேன், வந்து... என் மேல் உள்ள பெரிய குற்றச்சாட்டே நான்.... நான் அடக்க ஒடுக்கம் இல்லாமல் எல்லா... எல்லா " என்று திணறியவள், அவன் தன் முகத்தையே பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்பதை உணர்ந்து அவன் மடியில் தன் முகத்தை புதைத்துகொண்டு பேசினாள்.

" நான் உ... உ... பிஸிக்கல் நீட்ஸ்க்காக அலைகிறேன் என்பதுதான். அப்போ எல்லாம் எனக்கு அவர்கள் என் மேல் வீண் பழி சொல்கிறார்கள் என்று நினைத்து வருந்தினேன். ஆனா இப்போ, இப்போ " என்று சொல்லவந்ததை சொல்ல முடியாமல் தவித்தாள்.

ரிஷியின் கண்ணில் கோபம் ரத்தமென பாய்ந்தது, ஆனால் அவன் கையோ அவளின் தலையை கோதியது.

"நீ என்னிடம் உண்மையாக இல்லை. அதனால் நான் உன்னை பிரிந்துவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். அவ்வளவு கோபம் உன் மேல் எனக்கு. ஆனால்.. ஆனால் நீ என்னிடம் அப்படி நடந்துகொண்ட போது உன்னிடம் இருந்து விலகாமல், உன்.... உன்... கையிலேயே.... எனக்கு விலக தோன்றாமல் என்னை அறியாமலேயே உன் தொடுகை எனக்கு வேண்டும் போல.... " என்று முடிக்க முடியாமல் திணறினாள் அபி.

அவளை சட்டென்று தூக்கியவன் " முட்டாள் " என்றான் ஆத்திரத்தோடு. அவளை தன் மார்போடு அணைத்தவன்
" நான் உனக்கு தாலி கட்டிய புருஷன், நீ என் மனைவிடீ முட்டாள் பெண்ணே" என்றவன் அவள் உச்சந்தலையில் அழுத்த இதழ் பதித்தான்.

" தப்பு என் மேல்தான். நொடிக்கொரு முறை என்னை தொட்டுக்கொண்டு போகும் என் அம்மு, ஐந்து நாள் கழித்து பார்த்த போது என்னைவிட்டு தள்ளி நிற்கிறாள் என்றால் அவள் மனதில் எத்தனை குழப்பம் இருந்திருக்கும். அதை முதலில் சரி செய்யாமல் அவசர குடுக்கையாய், அறிவாளி என்று நினைத்துக்கொண்டு ஆத்திரம் கண்ணை மறைக்க உன் உணர்வோடு விளையாடிவிட்டேன். பிசினஸில் சாதித்து என்ன பயன் ? ஒரு பெண்ணின் மனதை புரிந்துகொள்ளாத முட்டாளாக இருந்துவிட்டேன் சாரிம்மா " என்றான் குரல் கரகரக்க.

" நான் உனக்கு வேண்டாம் நந்து " என்றாள் அபி.

" நீதாண்டி எனக்கு வேண்டும், நீ மட்டும் தான் எனக்கு வேண்டும். என்னை தாயாக, குழந்தையாக, ஒரு நண்பனாக உணர வைத்த பெண் நீ. எப்படி நீ உன்னை தரைகுறைவாக பேசலாம், யாரு தந்தார்கள் உனக்கு அந்த உரிமையை. நீ என் அம்மு, இந்த நந்துவின் அம்மு. கருணாகரன், கற்பகம்மாள் தம்பதியின் வளர்ப்பில் உருவான தங்கம் நீ, நீ எப்படி தப்பான பெண்ணாக இருப்பாய். என்னவெல்லாம் பேசிவிட்டாய் பாவி. ஏண்டி இப்படியெல்லாம் யோசிக்கிறாய். என்றுதான் உன் மனது தெளிந்த நீரோடையாக மாறப்போகிறது. முன்புதான் உனக்கு ஆயிரம் பிரச்சனை.

ஆனால் இப்போதோ என்னால் முடிந்த அளவு, என்னிடம் இருக்கும் அத்தனை அன்பையும் கொட்டி உன்னை பார்த்துக்கொள்கிறேனே, ஆனாலும் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறாய், எதில்தவறினேன் நான் உன்னை காப்பதில்." என்று தவிப்பாய் கேட்டான் ரிஷி.

" நான் நல்ல பெண் என்றால் நீ என்னை தொட்டவுடன் நான் விலகி போயிருக்க வேண்டாமா ? ஆனா எனக்கோ நீ அப்படியே இருந்தால் நன்றாக இருக்கும் போல இருந்ததே " என்றாள் அபி.

" நான் தொட்ட பிறகும் உனக்கு அப்படி தோன்றவில்லை என்றால் அதற்காக ஒரு டாக்டரை போய் பார்க்க வேண்டியதிருந்திருக்கும் முட்டாள் பெண்ணே. உன் அத்தை என்னமோ உனக்கு குழந்தை பெற்று எடுக்கும் வயது என்றார்கள், நீ என்னவென்றால் ஒரு சின்ன விஷயத்தை புரிய முடியாதவளாய் இருக்கிறாய் " என்றவன் அவளை நிமிர்த்தி அமர வைத்தான்.

"சரி சொல்லு, அந்த வேலைக்காரன் உன்னிடம் தப்பாக நடக்க பார்த்த போது நீ எப்படி உணர்ந்தாய் ?"என்று.

" இப்போ அதை ஏன் கேட்குற " என்றாள் எரிச்சலில்.

" காரணமாய் தான். சொல்லு " என்றான் ரிஷி.

" அருவருப்பாய் இருந்தது, அவனை அப்படியே கொல்லவேண்டும் போல ஆத்திரம் வந்தது." என்றாள்.

" அப்புறம் அந்த ஜெய் ?

" அவனை பற்றி பேசாதே, அவன் கண்ணை நோண்டாமல் விட்டுவிட்டேனே என்று இருக்கிறது " என்றாள் எரிச்சலில்.

" அப்புறம் உன் காலேஜில் யாராவது, அந்த அமிதாப் அண்ணன் " என்று ரிஷி கேட்க

" வழியில் போகிற எருமை மாடுகள் " என்றாள் அவள்.

" அப்புறம் நான்" என்றான் ரிஷி

"அடிவாங்கி விடாதே, கேட்கிறார் கேள்வி. உனக்கு என்ன ? நீ என் சின்னத்தான். நீயும் அந்த பொறுக்கிகளும் ஒன்றா ? இந்த கேள்வியே உனக்கு அபத்தமா தெரியல " என்றாள் முறைத்துக்கொண்டு.

" அப்படின்னா நீ பேசியது உனக்கு அபத்தமா தெரியல ?" என்று கேள்வியை அவள் புறம் திருப்பினான்.

அவள் பதில் சொல்லாமல் விழிக்க அவளை தோளோடு அணைத்தவன் அவளை அழைத்துக்கொண்டு பால்கனிக்கு சென்றான். நின்றுகொண்டே இருவரும் அமைதியாக இருந்தனர்.

"நேஹா நம் நாட்டில் அரேன்ஜ் மேரேஜ் அதிகம். யாரென்றே தெரியாமல் பெற்றோர்கள் காட்டிய மனிதரை கணவனாக ஏற்றுக்கொண்டு, நம்மை போல இல்லாமல் அன்றே இல்லறவாழ்வை தொடக்கி, குழந்தை பெற்று வாழவில்லையா ? அவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்று சொல்வாயா ? உன் கழுத்தில் நான் கட்டிய தாலி வெறும் தங்கத்தினால் ஆனது கிடையாது. உன்னையும் என்னையும் உணர்வோடு, உள்ளத்தோடு, உடலோடு இணைக்கும் ஒரு புனிதமான பந்தம்." என்றான்.

" அப்படின்னா உனக்கு மட்டும் ஏன் அப்படி தோனவில்லை " என்றாள் வெடுக்கென்று.

" எப்படி தோனவில்லை ?" என்று கேட்டான். அவன் கண்ணில் இப்போது கேலி மின்னியது.

" அதான் எனக்கு தோன்றியது போல " என்று சொல்லும் போதே அவளை மீறி அவள் கன்னத்தில் செம்மை பரவியது.

அதை ரசித்து பார்த்தவன் " அப்படி எனக்கு தோன்றும் வண்ணம் நீ எப்போது நடந்துகொண்டாய், அத்தோடு அப்படி எனக்கு தோன்றவில்லை என்று உனக்கு எப்படி தெரியும் ?" என்று கேட்டு சிரித்தான்.

" அதெல்லாம் எனக்கு தெரியும், உனக்கு அப்படி என்னிடம் நடந்துகொள்ள பிடிக்காது என்றும் தெரியும். இன்று உனக்கு ஏதோ பேய் இறங்கி இருந்திருக்கு "என்றாள் அபி.

அவள் கூறியதை பற்றி ரிஷி விவரமாக கேட்கவில்லை. அவனுக்கு ஏற்கனவே தெரியும் அவன் அன்று செய்த கிறுக்கு தனம்.

" சரி அம்மு ஏற்கனவே லேட்டாகிவிட்டது, ஆனாலும் உனக்கு என்னவெல்லாம் தெரியவேண்டும் என்று நினைக்கிறாயோ அதை எல்லாம் ஒன்றும் விடாமல் இன்றே கேட்டுவிடு " என்றான் ரிஷி.

" நான் எது கேட்டாலும் உன்னிடம் பதில் உள்ளதா ?" என்று கேட்டாள் அபி அவனிடம்.

" கண்டிப்பாக, மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்? மீண்டும் சொல்கிறேன் நம் கல்யாணத்தின் முலம் நான் யாருக்கும் கெடுதல், துரோகம் எதுவும் செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல் நீ என்னை முழுவதாக நம்பியதாக நியாபகம்" என்றவன் அவளை கட்டிலில் அமரவைத்துவிட்டு ட்ரெஸ்ஸிங் டேபிள் மோடாவை போட்டுகொண்டு அவளை விட்டு தள்ளி அமர்ந்தான்.

" நான் இன்றும் சொல்கிறேன் யார் வந்து சொன்னாலும் உன்னை நான் சந்தேகிக்க மாட்டேன். என் கோபம் எல்லாம் தாலிகட்டி மனைவி எனக்கு தெரியாமல் உன்னிடம் ஏகப்பட்ட ரகசியம் இருக்கு, அதில் பாதி அந்த ப்ரியாவுக்கு தெரிந்திருக்கிறது " என்றாள் அபி.

" சில விஷயங்களை நான் உன்னிடம் இருந்து மறைத்திருக்கலாம், ஆனால் அதற்கு சரியான காரணம் கண்டிப்பாக இருக்கும் " என்றான் ரிஷி.

" இருந்துவிட்டு போகட்டும், என்னுடைய முதல் கேள்வி, நம் கல்யாணத்திற்கு முந்தய இரவில் ப்ரியாவும் நீங்களும் தோட்டத்தில் சந்தித்திருக்கிறீர்கள், அதுமட்டும் இல்லை அவளிடம் ஒரு பொய்யான காரணத்தை சொல்லி அவளை திருமணம் செய்ய மறுத்திருக்கிறீர்கள் இது உண்மையா ? இல்லையா ?" என்று கேட்டாள் அபி.

" அம்மு நீ லாயருக்கு படித்திருக்கலாம், இப்போது ஒன்றும் தாமதமில்லை, நீ இந்த வருடம் சேர்ந்துவிடு " என்று சிரித்தவன் மீண்டும் பேசினான்.

" அவள் ஏதாவது கலகம் செய்ய வருவாள் என்று நாம் இருவரும் எதிர்பார்த்ததுதானே, அவள் என்னிடம் தனியாக பேச அழைத்தாள், சென்றேன் " என்றான்.

" அந்த பொய்யான காரணத்தை சொல்லவேண்டிய அவசியம், அதுவும் அவளிடம் போய் " என்று முகத்தை சுளித்தாள் அபி.

" அம்மு தமிழ் எந்த அளவுக்கு அழகான மொழியோ அந்த அளவுக்கு ஆபத்தான மொழியும் கூட. ஒரு வார்த்தையில் ஒரு எழுத்து மாறினாலோ, சேர்ந்தாலோ பெரிய கலவரமே ஆகிவிடும், நீ நண்பன் படம் பார்த்திருப்பாய் என்று நினைக்கிறேன், அந்த ப்ரியா உன்னிடம் கண்டிப்பாக சரியாக நாங்கள் பேசியதை சொல்லியிருக்கவாய்ப்பு இல்லை " என்று அன்று தங்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை பற்றி கூறினான்.

" அவள் நீ இப்படியா ? என்றாள், என் தகுதியை பற்றி அவளிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன ? எனக்கு. அதனால் நானும் ஆமாம் என்றேன், இதில் தப்பு என்ன. அடுத்த நொடியே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிவிட்டாள், நீயே சொல் கல்யாணத்திற்கு முன் எனக்கு அப்படி ஒரு குறை இருக்கிறது என்று உனக்கு தெரிந்தால் நீ என்ன செய்திருப்பாய் ? " என்று கேட்டான்.

" இரண்டு உடல்கள் மட்டும் சேருவது வாழ்க்கை இல்லை " என்றாள் அபி.

" ஆனால் அவள் அப்படி நினைக்கவில்லையே, அவளை கட்டிக்கொண்டு நான் என்ன செய்வது ? அதுமட்டும் இல்லாமல் நான் அவளை காதலியாக ஒரு நொடி கூட நினைத்ததில்லை " என்றான் ரிஷி.

" அதான் தெரிகிறதே, சரி உன்னை ஏன் மாமா வலுக்கட்டாயமாக வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பி வைத்தார், நீ முன்பு கூறிய காரணம் மட்டும் இல்லை, வேறேதோ காரணம் இருக்கிறது அது என்ன ? " என்று கேட்டாள் அபி.

ரிஷி அவள் கேள்வியில் அதிர்ந்து நின்றான். இது எப்படி இவளுக்கு தெரிந்தது என்று. கண்டிப்பாக ப்ரியா இதை சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அப்படின்னா யார் அம்மாவா?
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஷ்வபூமி டியர்

அடடா
ரிஷி எதுக்கு வெளிநாட்டுக்கு படிக்கப் போனான்ங்கிற காரணம் வரப் போகின்றது
பூனைக் குட்டி வெளியே வரப் போகிறதா?
வாவ் சூப்பரான ஸீன்ஸ் காத்திருக்கிறதோ?
 
Last edited:

Nasreen

Nice ud
Abi oru lawyer than
Paavam rishi evlo question
But he should answer no other go
But y abi want to believe banu and priya...
She must not listen to those idiotic person.
She must believe in herself as a step daughter of karpagam
She may.
 
Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
ஏன் வெளிநாட்டுக்கு போனான்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top