Uyirin ularal -episode 26

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 26

மறுநாள் காலை பொழுது இனிமையாக விடிந்தது. தோட்டத்தில் இருந்து குயிலின் சத்தம் காதில் தேனாக பாய, ரிஷி உறக்கத்தில் இருந்து விழித்தான். தன்னை கொடியாக சுற்றி படர்ந்து இருந்த அபியை பார்த்தவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

எப்படித்தான் இத்தனை நாள் தன்னைவிட்டு இருந்தாலோ என்று நினைக்க தோன்றியது அவனுக்கு. இத்தனைக்கும் தான் வெளிநாட்டில் இருந்து வந்த நாள்முதல் இவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகும் வரை தன்அருகில் நிற்க கூட மாட்டாள். ஆனால் கல்யாணம் ஆகி இந்த மூன்று நாளில் தங்களுக்கும் ஏகப்பட்ட வாக்குவாதம் வந்த போதும் இமை பொழுதும் தன்னை நீங்காமல் இருக்கும் அபியை பார்த்தவனுக்கு சிறுவயது அபி நினைவு வந்தாள். எப்போதும் இவனை பிடித்துக்கொண்டே அலைந்த அபி.

அபியை இமைக்காமல் பார்த்தவனுக்கு சலிக்கவே இல்லை. அவளை விலக்க தோணாமல், அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டான்.. அவன் மனம் முழுவதும் அவனின் அம்மு நிறைந்து நின்றாள். அவனின் இறுகிய பிடியில் அசைந்தவள் அவனில் ஆழமாக புதைந்தாள்.

" நேஹா " என்றான் ரிஷி அவள் காதோரம்.

" ம் " என்றாள் அபி.

"நேஹா " என்றான் அழுத்தமாக.

" என்ன ? தூங்கவிடேன் நந்து " என்றாள் சினிங்கிக்கொண்டே.

" நேஹா " என்றான் ரிஷி மறுபடியும்.

இந்த முறை அவள் பதில் சொல்லவில்லை.

" நேஹா " என்றான் அவள் காதருகில் கிசுகிசுத்த குரலில்.

" சொல்லித்தொலையேன் எருமை, தூங்க விடுறியா மனுஷியை. என்ன ஷேக்கன் கொடுக்க வேண்டுமா, இந்தா தொலைந்து போ, இன்னும் சரியாக விடிய கூட இல்லை, அதற்குள் எங்கே போக போகிறாய் ?" என்று ஒரு அவசர முத்தத்தை அவன் இதழுக்கு கொடுத்துவிட்டு அவனிடம் இருந்து விடுபட்டு கட்டிலில் மறு பக்கம் போய் படுத்தாள்.

அவள் அருகில் வந்த ரிஷி "மணி என்னன்னு தெரியுமாடி கும்பகர்ணி ? மணி 6ரை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது, இன்றைக்கு ஆபீஸ் போகவேண்டும் என்ற நியாபகம் இருக்கா ?" என்று அவள் காதை கடித்தான்.

" என்ன மணி 6ரை தாண்டிவிட்டதா ?" என்று அவனை தள்ளிவிட்டு எழுந்து அமர்ந்தாள் அபி.

" ஐயோ நேரமாகிவிட்டதே சீக்கிரம் எழுப்பினால் என்ன ?" என்று அவனிடம் சாடினாள் அபி

"காலையிலேயே என்னிடம் வாங்கிகட்டாதே, நானா உன்னை எழுப்பவில்லை, ஐந்து மணியில் இருந்து அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன், நீதான் என்னை விடாமல் பிடித்துவைத்திருந்தாய் " என்றான் ரிஷி எழுந்து கட்டிலில் சாய்ந்து இருந்தபடி.

" ஆமாம் இவர் பெரிய ரோமியோ இவரை கட்டிக்கொண்டாலும் " என்று முகத்தை திருப்பி கொண்டு உடையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் சென்றாள்.

அதன் பிறகு ஆபீஸ் கிளம்பும் வரை அபியை அவன் பார்க்கவில்லை...அவன் ஜாகிங் முடித்து வரும்போது அவனுக்கு தேவையான அனைத்தும் கட்டிலில் இருந்தது.

நேற்று இரவு நடந்தது அவளுக்கு நியாபகம் வந்து தன்னை தவிர்க்கிறாளோ என்று எண்ணினான் ரிஷி. அதனால் அவனும் அவளை அழைக்கவில்லை.

ப்ரியாவை நேற்றே அவள் தந்தை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார், அவள் அக்கா இன்னும் அறையை விட்டு வெளியே வரவில்லை. அதனால்தான் என்னவோ வீடே அமைதியாக இருந்தது.

ரிஷி காலை உணவுக்காக டைனிங் டேபிளிலில் போய் அமர்ந்தான். அவன் பார்வையோ வீடெங்கும் சென்றது அபியை தேடி.

அப்போது " ஏய் சின்னத்தான் இவ்வளவு சீக்கிரம் ரெடியாகிவிட்டாயா ? நீ என்னை தேடவே இல்லையா ? " என்று பின்னே இருந்து கழுத்தை கட்டிக்கொண்டு அவன் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்து இழைத்தாள்.

" நீ ஏதோ கோபத்தில் இருக்கிறாய் என்று நினைத்தேன் " என்றான் அவன்.

" உன் மேல் நான் ஏன் கோபப்பட போகிறேன், உனக்காக சமைப்பதற்காக கிச்சனுக்கு வந்தேன், சின்னத்தான் நான் இன்று உனக்காக வேரெட்டி தோசை செய்திருக்கிறேன், அப்புறம் சிம்பிளா லஞ்ச் செய்தேன். நாளைக்கு அலாரம் வைத்து எழுந்து உனக்கு பிடிச்சதை எல்லாம் லஞ்சுக்கு செய்து தருகிறேன் ஓகேவா ?" என்றாள் அபி.

" உனக்கு எதுக்கு அபி சிரமம், நீயும் ஆபீஸ் போகவேண்டும், மார்னிங் டிபன் மட்டும் ரெடி பண்ணு, லன்ச் வெளியே பார்த்துகொள்கிறேன் " என்றான் ரிஷி.

" நோ வ்வே, நான்தான் உனக்கு சமைத்து தருவேன், நீ அதைத்தான் சாப்பிடதான்வேண்டும்" என்றாள் அபி கராலாக.

" ஓகேவிடவா போகிறாய் " என்று சிரித்துக்கொண்டு நிமிர்ந்து அவளின் கழுத்தை வளைத்து ஒரு வெளிநாட்டு ஷேக்கன் கொடுத்தான்.

அப்போது க்கும் என்று சத்தம் எழுப்பிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான் ராம். அபி ரிஷியைவிட்டு சட்டென்று விலகி ஓடிவிட்டாள்.

அனைவரும் வந்து சேர ரிஷிக்கு தான் செய்த தோசைகளை பரிமாறிவிட்டு தானும் சேர்த்து சாப்பிட அமர்ந்தாள் அபி.

சிறுவயது முதல் ரிஷிக்கு விதவிதமான சாப்பாட்டை ருசிப்பதில் அலாதி பிரியம். கற்பகம்மாள் எதையாவது புதிதாக செய்தால், கருணாகரன் கிண்டல் செய்வார், " உனக்கு சோதனை எலி நாங்கள்தானா ?" என்று. ஆனால் ரிஷியோ அதிலும் ஒரு புது ருசியை கண்டுபிடித்து விரும்பி உண்பான். அவனின் உணவு அளவு குறைவுதான்.

ஆனால் என்று அவன் வெளிநாட்டு படிப்பு என்று சென்றானோ அன்றே அவன் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நினைத்தான். படிப்பு முடிந்து திரும்பி வந்தவன் கேட்பார் இல்லாதவனாகி போனான். தன் கணவன் மறைவுக்கு பிறகு ஒரு அறைக்குள் தன்னை அடக்கிக்கொண்ட தாயிடம் அவன் எதையும் எதிர்பார்க்கவில்லை. அபியோ மீட்டெடுக்க வேண்டிய நிலையில் இருந்தாள். தட்டில் விழுவதை விழுங்குவான், வீட்டுசாப்பாட்டை பெரிதும் விரும்பியத்தால் ஹோட்டல் சாப்பாடு கஷ்டப்பட்டுதான் உள்ளே இறங்கும் அவனுக்கு.

இன்று அபி மறுபடியும் அவனின் பழைய நிலையை கொண்டு வரபார்க்கிறாள், பார்க்கலாம்.

" அபி அந்த தோசை உள்ள தட்டை இங்கே மாற்று" என்றாள் பானு.

அபி " நான் உங்களுக்கு வேற சுட்டுத்தருகிறேன் அக்கா, எல்லாம் ரெடியாகத்தான் இருக்கு " என்று எழ போனாள்.

" எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை, ஏதாவது செய்தால் அதை எல்லோருக்கும் சேர்த்து செய்வதற்கென்ன ? " என்று பானு ஆரம்பிக்க

" பரவாயில்லை அம்மு நான் அப்புறம் சாப்பிட்டுக்கொள்கிறேன் " என்று எழுந்தான் ரிஷி ஒரு இட்டலியோடு.

" நீ சாப்பிடட ட " என்று ஆரம்பித்தவள் கற்பகம்மாள் தன்னை பார்ப்பதை கண்டு.

" நீங்கள் சாப்பிடவே இல்லையே" என்று வாக்கியத்தை முடிக்காமல் அவன் தட்டை கையில் எடுத்துக்கொண்டு அவனை கிச்சனுக்கு இழுத்து சென்றாள்.

" அம்மு உனக்கு நேரமாகிவிட்டது, கிளம்பு. நீயும் சாப்பிட வேண்டாமா ? " என்ற ரிஷியிடம்

" நேரம் ஆனால் பரவாயில்லை, நீ இன்று நான் சமைத்ததை சாப்பிடாமல் தப்பிவிடலாம் என்று நினைக்கிறாய் அது என்னிடம் நடக்காது, ஒழுங்கா சாப்பிட்டு " என்று தோசை கல்லை அடுப்பில் ஏற்றினாள். உதவிக்கு வந்த வேலையாளிடம் நானே பார்த்துப்பேன் என்று அபி கூறியதும் அவர்கள் வெளியே சென்றுவிட்டனர்.

" ஸோ விடமாட்ட " என்றபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்தான் ரிஷி தட்டுடன்.

அபி சுட சுட தோசை வார்த்து கொடுக்க ரிஷி அவளுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டே சாப்பிட்டான். மனைவியை தன் அருகில் கொண்டுவந்து காலால் அவளை லாக் செய்துகொண்டு கடைசி தோசையை அவளுக்கு ஊட்டிக்கொண்டிருக்க பானு உள்ளே வந்தாள். இருவரும் தோசை உண்ணும் அழகை பார்த்தவளுக்கு உள்ளே எறிந்தது, ஆனால் அதை அணைக்கும் முயற்சியை அபி விலகி எடுக்க நினைத்தபோதும் தன் காலில் பிடியை இன்னும் பலமாக்கினான் ரிஷி. அபி அவஸ்த்தையாய் உணர்ந்தபோதும் முகத்தில் அதை காட்டவில்லை.

தன்னை பார்த்தபிறகாவது விலகுவார்கள் என்று நினைத்த பானு அவர்கள் அப்படியே நின்றதும், " அபி ஒரு நான்கு தோசை சுட்டு எடுத்துட்டு வா, பேப்பர் ரோஸ்ட் " என்றாள் அதிகாரத்துடன்.

ரிஷி பதில் சொல்வதற்குள் அபி முந்திக்கொண்டாள், " சாரிக்கா, எனக்கு லேட்டாகிவிட்டது, சமையல்கார அம்மாவிடம் சொல்லுங்கள், ரிஷி போகலாமா." என்றாள் பிசிறின்றி. அப்போது ரிஷி தன் காலை விலக்கிக்கொண்டான்.

" ஒரு நாலு தோசை சுட உனக்கு நேரமில்லை, ஆனால் சமையல் அறை என்று கூட பாராமல் ஒட்டிஉரச உனக்கு நேரமிருக்கிறதா ? " என்று ரிஷி இருக்கிறான் என்று தெரிந்தும் தனக்கு எழுந்த ஆத்திரத்தை அடக்கமுடியாமல் கொட்டினாள் பானு.

அபி இப்போது பதில் கூறாமல் முகம் மாறி நின்றாள்.

" அண்ணி என்ன பேச்சு இது, அதான் அவள் கூறினாளே நேரமாகிவிட்டது என்று. அதனால் ஒரே தட்டில் சாப்பிட்டோம், மற்றபடி இங்கே யாரும் கண் கூசும் படி ஒட்டிவுரசவில்லை, அப்படியே நாங்கள் நடந்துகொண்டாலும் அதில் எந்த தப்பும் இல்லை, தேவையான லைசன்ஸ் எல்லாம் வாங்கிவிட்டோம், புதிதாக திருமணம் முடிந்த ஒரு தம்பதியர் இருக்கும் எந்த இடத்திற்கு சென்றாலும் சத்தம் கொடுத்துக்கொண்டு வருவதுதான் மேனஸ்" என்றான் ரிஷி சூடாக.

பானு அமைதியாக நின்ற அபியை முறைத்தாள். ரிஷி கையை கழுவிக்கொண்டு அபியின் கையை பிடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான். அப்புறம் என்ன அபி ஆபீஸ் போகும் வழியெல்லாம் ரிஷியிடம் வாங்கிக்கட்டினாள்.

" போதும் விடு சின்னத்தான், அது எப்படி யார் இருந்தாலும் என் கணவன்தானே என்று இஷ்டத்திற்கு நடந்துகொள்ள முடியுமா ?" என்று தன் ஆபீஸ் வந்ததும் இறக்கி ஒரு தலையசைப்புடன் சென்றுவிட்டாள் அபி.

ஆபிஸில் ஒழுங்காக வேலை பார்த்து ஒருவாரத்திற்கு மேலாகிவிட்டதால் முடிக்க வேண்டிய வேலை அபியை இழுத்து சென்றது வேறு எதையும் பற்றி நினைக்கவிடாமல், நினைவு வந்த போது அபி " இது என்னடா சோதனை, திருமணம் முடிந்த நாளிலிருந்து சின்னத்தானிடம் இருந்து திட்டுவாங்கிக்கொண்டே இருக்க வேண்டியதுள்ளது. வீட்டில் உள்ளவர்களையும், இவரையும் சமாளிப்பது
கஷ்டமாக இருக்கிறதே " என்று நினைத்தாள்.

ரிஷியோ அவர்களை விட்டேன்னா பார் என்று நினைத்தான்.

இனிமையாக தொடங்கிய நாள் கடைசியில் சண்டையில் போய் முடிந்ததே என்று யோசித்த அபி அன்று மாலை முதலில் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். ரிஷி வர தாமதமாகவே தனது சின்ன சின்ன வேலைகளை முடித்துக்கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தாள். மதியம் இரண்டு மூன்று முறை ரிஷிக்கு போன் செய்த போதும் அவன் எடுக்கவில்லை, வேலை இருந்திருக்கும் என்று நினைத்தபோதும் அவளின் இன்னொரு மனது அதை ஏற்க மறுத்தது. ப்ரியாவை பார்க்க பானு சென்றுவிட்டாள்.

ரிஷியின் காரின் சத்தம் கேட்டவே அபி ஆவலுடன் ஓடி சென்றாள் ரிஷியை வரவேற்க.

உள்ளே வந்தவன் ஓடிவந்த மனைவியை கண்டு இருக்க கட்டிக்கொண்டான்.
" சாரி, சாரி " என்றான் திரும்ப திரும்ப அவள் காதில்.

பதிலுக்கு அபி எதுவும் பேசவில்லை. அன்பு என்பது அள்ள அள்ள குறையாது, அது இருவரிடமும் கொட்டிக்கிடக்கும் போது. அது இந்த ஜோடியிடம் நிறையவே இருந்தது.

பல நேரம் அவர்களுக்குள் வாக்குவாதம், மனதில் சில குழப்பம் இருந்த போதும் இருவரின் அன்பும் அதை ஈடுசெய்தது.

காலை சமையல் அது இது என்று பரபரப்பில் ஓட, பகல் எல்லாம் வேளையில் மூழ்கி இருக்க அந்த மாலை பொழுதை இருவரும் ஏக்கத்துடன் எதிர்பார்த்தனர்.

இருவரும் மஞ்சத்தில் கட்டிப்புரண்டு தங்கள் காதலை கூடலாக மாற்றுவதெல்லாம் கிடையாது, ஆனால் தன்னை விட்டு இம்மியும் நகராமல் தோளிலும், கழுத்திலும், மார்பிலும் புரளும் மனைவியின் அருகாமைக்காக அந்த நொடி சாவை கூட ஏற்க தயாராக இருந்தான் ரிஷி.

சதா குத்தல் பேச்சு, பழிச்சொல், வேதனை என்று எட்டுவருட வாழ்க்கையை தொலைத்த அபிக்கு ரிஷியுடன் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் அந்த எட்டுவருடத்தை ஈடு செய்து கொண்டிருந்தது. அவன் திட்டினானா? பேசவில்லையா ? எதை பற்றியும் அவளுக்கு கவலை இல்லை. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவன் மடியில் படுத்து கொஞ்சிக்கொண்டிருப்பாள். இந்த விஷயத்தில் அவளின் தன்மானம், கோபம், பிடிவாதம் எல்லாம் எங்கோ சென்று மறைந்து கொள்கிறது, ஏனோ ?

மூன்று நாட்கள் மாலை பொழுது மனைவியின் ஆவலாக வரவேற்பிலும், கணவனின் இறுகிய அணைப்பிலுமாக சென்றது. எல்லாம் மூன்று நாள்தான் ஏனென்றால் அந்த மூன்று நாள் மாலையும் பானு வீட்டில் இல்லை.

நான்காவது நாள் அதே போல அபிதான் முதலில் வந்தாள். ஆனால் ரிஷி வரும் போது அவள் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை, பானு அங்கே இருந்ததுதான் காரணம்.

ரிஷி உள்ளே வந்ததும், அமைதியாக எழுந்து சென்று பூனை நடை போட்டு அவன் கையில் இருந்த பேக்கை வாங்க கையை நீட்டினாள் நாலடி தள்ளிநின்று. ரிஷி பேக்கை அவளிடம் கொடுக்காமல் தலையை ஆட்டினான். விறுவிறுவென்று மேலே சென்றுவிட்டான். அவன் போகும் போது பானுவின் நக்கல் சிரிப்பு அவனை பின் தொடர்ந்தது. அபி அவனின் கோபத்தை உணர்ந்தாலும் மேலே செல்லாமல் கிச்சனுக்குள் நுழைந்தாள். அவனுக்கு ஸ்னாக்ஸை எடுத்துக்கொண்டு போனாள்.

தன் அறைக்குள் சென்ற அபி பெரிய பூகம்பத்தை எதிர்பாத்தாள், ஆனால் ரிஷி உடையை கூட மாற்றாமல் சோபாவில் சாய்ந்து இருந்து கொண்டு கண்ணை மூடி நெற்றியை நீவி விட்டுக்கொண்டிருந்தான்.

அபி " சின்னத்தான் " என்று அழைத்தாள். அப்போது கண்ணை திறந்தவன் தன் எதிரே நிற்கும் அவள் கண்ணில் இருந்த பயத்தை பார்த்து தன்னை நிதானபடுத்திகொண்டான்.

" அம்மு ப்ளீஸ் எனக்கு தலைவலிக்கிறது, இப்போது என்னிடம் எதுவுமே பேசாதே. அப்புறம் எனக்கு இருக்கும் கோபத்தில் நான் உன்னை காயப்படுத்திவிட போகிறேன்." என்றவன் டேபிளில் எடுத்து வைத்திருந்த தன் பர்ஸையும் போனையும் எடுத்து தனது பாண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்.

அபி செல்லும் அவன் கரத்தை பிடித்து நிறுத்தினாள்.

" அம்மு விடு, என்னை பேச வைக்காதே, போகவிடு அதுதான் உனக்கு நல்லது " என்றான் அமர்த்த குரலில்.

அந்த குரல் அவளுக்குள் குளிரை பரவச்செய்தது, ஆனாலும் பேச முடியாமல் வறண்ட தன் நாக்கை இழுத்துக்கொண்டு வந்து பேசினாள்.

" எங்கே போற " என்று.

அவள் கையை சட்டென்று உதறியவன் " எங்கேயோ போரேன்டீ , நேரத்திற்கு ஒருவிதமாக, ஒவ்வொருவரின் முன்பாக நடிக்கும் யாரையும் பார்க்க முடியாத தூரத்திற்கு போகிறேன் " என்று மறுபடியும் முன்னேறினான்.

அபி அவன் வெளியே செல்லாத முடியாதபடி வாசலை அடைத்தபடி நின்றாள்.

" சின்னத்தான் உனக்கு என் மேல் கோபன்னா திட்டி தீர்த்துவிடு இல்லன்னா இரண்டு அடி வேண்டும் என்றாலும் அடித்துவிடு " என்றாள்.

" எதுக்கும்மா நான் உன்னை திட்ட வேண்டும், அடிக்க வேண்டும். நான் யாரு உனக்கு. நான் காயப்பட்டால் உனக்கு என்ன ? நாலு பேர் முன்னாடி கேவலப்பட்டால் உனக்கு என்ன ? நீ எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருந்தால் போதாதா. உனக்கு உன் அன்பு அக்காவின் பாசம் ரொம்ப முக்கியம், நான் எப்படி போனா உனக்கு என்ன ? அப்படியிருக்க நான் யார் ?உன் மேல் கோபப்பட ?" என்றான் ரிஷி விட்டெறியாக.

" சின்னத்தான் ப்ளீஸ் இப்படி பேசாதே, என்னை புரித்துக்கொள். உங்கள் இருவரின் போட்டியில் என்னை இடையில் போட்டு நசுக்காதே " என்றாள் குரல் கறகறக்க.

" என்ன சொன்ன இருவரின் போட்டியா ? நான் யாரிடம் போய் போட்டிபோட்டேன் உன்னை நசுக்குவதில். என் அன்பு அன்று போல இன்றும் உண்மையானது. உன்னது போல நேரத்திற்கு ஒரு விதமாக மாறாதது." என்றான் ரிஷி.

" என் அன்பை பற்றி எனக்கு தெரியும், நான் ஒன்றும் நடிக்கவில்லை, அவர்களுடன் போராடி போராடி என் மனதில் அவர்கள் மேல், அவர்கள் நாக்கின் மேல் ஒருவித பயம் வந்துவிட்டது, அதனால் அப்படி நடந்துகொண்டேன். நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும் " என்றாள் அபி.

" ஆமாம் நீ கஷ்டப்பட்டாய், ஆனால் நான் ராஜ வாழ்க்கை வாழ்ந்தேன் இல்லையா ? நானும் உன் வயதை தாண்டித்தான் வளர்ந்தேன். என் அப்பா அது இது என்று காரணம் சொல்லி என்னை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தாரே அன்றோடு முடிந்துவிட்டது எல்லாம் எனக்கு. வழியனுப்பிவைத்த அப்பாவையும், பாட்டியையும் அப்புறம் நான் உயிருடன் பார்க்கவே இல்லை . அம்மா, என் அம்மாவின் அக்கறை, பாசம் அத்தனையும் இழந்து கேட்பாரின்றி அனாதையாக கிடந்தேன் வெளிநாட்டில். நான்கு அண்ணன்களில் கடைக்குட்டி தம்பி நான். இப்போது என் அண்ணன்களுக்கு நான் தம்பி என்பது நினைவு இருக்கிறதோ இல்லையோ. ? அப்புறம் நீ,.... நீ என்னை கண்டாலே பேயை கண்டது போல ஒதுங்கினாய். அத்தனையும் இழந்து நின்றேன். நான் இந்தியா வந்த அன்று நீ எப்படி நடந்துகொண்டாய் என்று உனக்கு நினைவிருக்கிறதா? ஏதோ வேண்டாதவன் வீட்டிற்குள் வந்ததுபோல. நானாக அழைக்கும் வரை நீ வெளியே எட்டிக்கூட பார்க்கவில்லை. எப்படி இருந்திருக்கும் எனக்கு. நான் மார்பிலே போட்டு வளர்த்த பெண் நீ. நீ என்னை பார்த்து கேட்டாய் 'நீயும் ஆண்தானே' என்று. அன்றே.. அந்த நொடியே செத்துட்டேன்டீ நான்.

ஆனாலும் என்னால் உன்னை விட்டு விலக முடியல. ஏன்னா நீ இருந்த நிலை அப்படி. உன்னை மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டுவருவதை தவிர மற்ற எந்த எண்ணமும் என் மனதில் அந்த ஐந்து வருடமும் இருந்தது கிடையாது. அந்த ஐந்து வருடத்திலும் நீ என்னை என்ன பாடு படுத்தினாய். பூனேவில் வந்து உன்னை பார்க்க நாய் போல காத்துக்கிடந்தேன். எத்தனையோ நாள் நீ என்னை பார்க்க விரும்பல என்று கூறிவிடுவாய். இத்தனையும் தாங்கிக்கொண்டுதான் நானும் வெளியே சிரித்துக்கொண்டு திரிந்தேன்.

இப்போது எல்லாம் பழையது போல திரும்பாவிட்டாலும், நீ எனக்கு முழுவதுமாக கிடைத்துவிட்டாய் என்று நான் சந்தோசப்படுவதற்குள், உன் அக்கா இருக்கிறார்கள் என்று ஏதோ தீண்டத்தகாதவனை நாலு எட்டு தள்ளி நின்று பார்ப்பது போல நிற்கிறாய். என்னை கட்டிப்பிடிக்க வேண்டாம். பக்கத்தில் வந்து ஒரு சிறு புன்னகை கூட நீ செய்யவில்லையே. இதில் உனக்கு என் மேல் பாசம் இருக்கிறது என்று வேறு கூறிக்கொள்கிறாய். ஏதோ செய், நீ எப்போது, யார் முன்னே எப்படி நடக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் ரெடி பண்ணு, நானும் உன்னை போலவே நடித்து தொலைக்கிறேன்." என்றவன் குறுக்கே நின்ற அவளின் கையை விலக்கிக்கொண்டு சென்றுவிட்டான்.

அபி செய்வதறியாது திகைத்து நின்றாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
ரிஷி பொறிஞ்சு தள்ளிட்டான்
அபி அந்த பானு கழுதைக்கு
பயப்படலாமா
நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பானுவின் விஷக் கொடுக்கு பேச்சுக்களை வருஷக் கணக்கில் கேட்டு மனம் தளர்ந்து போன அபிநேஹா பயப்படாமல் பாவம் வேறென்ன பண்ணுவாள்?
பானுவை விட அவள் தங்கை ப்ரியா பயங்கர டேஞ்சரான ஆளு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top