Uyirin ularal - episode 23

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 23

" சின்னத்தான் திஸ் இஸ் டூ மச், நீ உன் மனதில் என்னதான் நினைச்சிருக்க ? காலையில் இருந்து என்னிடம் வம்பு செய்துகொண்டே இருக்கிறாய். குளிக்க பிரச்சனை, சாப்பிடும் போதும் பிரச்சனை. நான் தெரியாமல் தான் கேட்கிறேன் உன் நெட்டை காலை வைத்துக்கொண்டு உன்னால் சும்மா இருக்க முடியாதா ? இவர் அப்படியே காதல் மன்னன், டேபிளிளுக்கு அடியிலே காலால் ரொமான்ஸ் செய்கிறார். அப்போது எனக்கு வந்த கோபத்திற்கு கரண்டியாலேயே நாலு போட்டிருப்பேன், அதிர்ச்சியில் எனக்கு புரை ஏறிவிட்டது " என்றாள் அபி.

"என்ன என்னால் உனக்கு புரை ஏறியதா ?" என்றான் கோபத்தில், அவ்வளவுநேரம் அபி பேசுவதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தவன்.

" பின்ன " என்றாள் அபி

" அடி பாவி, அந்த ப்ரியா என் தட்டில், அதாவது உன் கணவன் தட்டில் எச்சி உணவை வைத்ததனால், அந்த அதிர்ச்சியில் உனக்கு புரை ஏறியது என்று நினைத்தேனே " என்றான்.

" ஆமாம் ஆமாம் போ, உங்கள் இருவருக்கும் இடையில் நடப்பதை பார்த்து எனக்கு ஒவ்வொரு முறையும் புரை ஏறினால் நான் ஒரேடியாக போய் சேரவேண்டியதுதான், மேலே " என்று கையை காட்டினாள்.

" ஏய் நீ என் பொண்டாட்டி" என்றான் ரிஷி

" அதான் எல்லோருக்கும் தெரியுமே, நான் உன் பொண்டாட்டி என்று, அப்புறம் என்ன ? அவள் எச்சியை வைத்தால் என்ன ? இச்சு கொடுத்தால் என்ன ? அவளும் பாவம் இல்லையா ? இத்தனை நாள் உன்னையே நினைத்துக்கொண்டிருந்தவள் இல்லையா ? மறக்க ரொம்ப கஷ்டமாகத்தானே இருக்கும்" என்றாள் சாதாரணமாக.

" அப்படின்னா ஒன்று செய், பேசாமல் எனக்கு டிவாஸ் தந்துவிட்டு, நீயே தலைமைதாங்கி அவளுக்கும் எனக்கும் கல்யாணம் செய்துவைத்துவிடு " என்றவன் தன் கோபத்தை கதவில் காட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

அவன் பேசியதில் உறைந்து போய் நின்றாள். திருமணம் நடந்து ஒரு நாளில் டிவோஸ் என்று பேசிவிட்டு போகும் ரிஷியை பார்த்து.

அன்று மதியம் வரையில் ரிஷி அபி கண்ணில் படவே இல்லை. ஏதோ கோபத்தில் இருக்கிறான், வருவான் என்று காத்திருந்து அபி சோர்ந்து போனாள். அன்னம்மாள் வந்து வைத்துவிட்டு போன மதிய உணவை பெயருக்கு கொறித்தவள் அவனை காணாமல் தவித்தாள், அதற்கு மேல் அவளால் ப்ரெஸ்ஸரை தாங்கமுடியவில்லை, மனம் எதிலும் செல்ல மறுத்தது. தேவையா எனக்கு இந்த கல்யாணம் என்று நினைத்தவள் நீச்சல் குளத்தை நோக்கி சென்றாள்.

மாலை நெருங்கும் நேரம் ரிஷி அறையை நோக்கி வந்தான். இப்போதும் அவனுக்குள் இருந்த கோபம் போகவில்லை, ஆனாலும் வீட்டில் உள்ள வில்லிகளின் பார்வையில் இருந்து தப்பவே தன் அறைக்குள் வந்தான். அங்கே அபியை காணாமல் தேடியவன் அவள் அறை, தாயார் அறை என்று யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் தேடினான். கடைசியாக நீச்சல் குளத்திற்கு சென்றான்.

அங்கே நீரின் சத்தம் காதை பிய்ந்தது, அந்த வேகத்தில் நீந்தி கொண்டிருந்தாள் அபி.

"சை, என்ன காரியம் செய்தேன், அம்மா சொல்வது போல நான் முரடன்தான், அவள்தான் பேசினால் என்றால் பதிலுக்கு பதில் கொடுத்துவிட்டேன். ஏதோ என் பதிலுக்கு அவார்ட் கிடைப்பது போல " என்று எண்ணிக்கொண்டே அவள் நீந்திக்கொண்டிருந்த திசையை நோக்கி சென்றான்.

ஆள் அரவம் கேட்டு தலையை தூக்கி பார்த்தவள் அங்கே ரிஷியை காணவும் முகத்தை திருப்பி கொண்டு தண்ணீருக்குள் சென்றுவிட்டாள் எதிர்திசையை நோக்கி.

முகத்தை திருப்பி கொண்டு போகிறவளை ஒரு முறை அழைத்துப்பார்த்தான் அவள் நின்றபாடில்லை.

"போச்சுடா " என்றவன் உடை மாற்றும் அறையை நோக்கி சென்றான். நீந்துவதற்கு தயாராக வந்தவன் உள்ளே இறங்கி அவளை நோக்கி நீந்தி சென்றான். ரிஷி உள்ளே இறங்கியதை பார்த்த அபி அவன் கையில் சிக்காமல் எதிர்புறம் சென்றாள். இருவரும் நீரிலே ஓடிப்பிடித்து விளையாடினர். கடைசிவரையில் அவன் கைக்கு அவள் சிக்கவே இல்லை. ரிஷி நீருக்குள் சென்றான்.

தன்னை துரத்திவந்தவனை காணாமல் ஒரு நிமிடம் நின்றாள் அபி, அந்த கேப்பில் பின்னே வந்து அவளை கட்டிப்பிடித்தான் ரிஷி. அதிர்ச்சியில் திரும்பியவள் அவன் பிடியிலிருந்து விடுபட திமிறினாள்.

" அம்மு அமைதியாக இரு" என்றவன் அவளை விடாமல் அணைத்துக்கொண்டு நீரை விட்டு வெளியே அவளை தூக்கி வைத்தான். அவள் பார்வையை அங்கும் இங்கும் அலையவிட்டு அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.

ரிஷி அவளையே பார்க்க அபி அவனை தவிர்க்க முடியாமல்
"இப்போ உங்களுக்கு என்ன வேண்டும் " என்று பேச தொடங்குகையில் ரிஷி அவன் உதட்டில் விரல் வைத்து தடுத்தான் சுற்றி கண்ணை காட்டியபடி.

அபி வாயை மூடிக்கொண்டாள், அவன் நினைப்பதும் சரிதான், இங்கே வைத்து நான் எதுவும் பேச, அவனும் பதில் கொடுக்க அதை யாராவது கேட்க தேவையா இது? என்று எண்ணி அமைதியானாள்.

ரிஷி எதுவும் பேசாமல் ( அதான் பேசினாலே பிரச்சனை ஓடிவருகிறதே ) அமைதியாக அவள் முகத்தில் படிந்திருந்த நீரை கையால் துடைத்தான். அபி கையை தட்டிவிட்டாள், மீண்டும் அவன் அதையே தொடர்தான், இப்படியே நடக்க அபி சிரித்துவிட்டாள். பின்பு அவளும் அவனின் முகத்தில் இருந்த நீரை துடைத்துவிட்டு டவலால் அவன் தலையை துவற்றினாள். இருவருமே நீச்சல் உடையில்தான் இருந்தனர் ஆனால் இருவரின் கண்ணும் முகத்தை பார்ப்பதை தவிர வேறு பக்கம் திரும்பவில்லை.

" போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிவிட்டு வா " என்றான் ஹஸ்கி வாய்ஸ்ஷில். அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உடை மாற்ற சென்றாள் அபி. ரிஷி மீண்டும் நீச்சல் குளத்தில் குதித்தான்.

திரும்பி பார்த்தவளிடம் " ஜஸ்ட் 10 மினிட்ஸ்" என்றான் பர்மிஷன் கேட்பதுபோல. அபி உடையை மாற்றிகொண்டு வரவும் ரிஷியும் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்து விட்டான்.
அவனும் உடை மாற்ற இருவரும் வீட்டை நோக்கி சென்றனர்.

அன்னம்மாள் இருவருக்கும் காப்ஃபியும் ஸ்னாக்ஸ்சும் தர அதை கற்பகம்மாவின் அறையில் இருந்து உண்டவர்கள் அவரிடம் பேசிவிட்டு தங்கள் அறையை நோக்கி சென்றனர்.

முதலில் ரிஷி உள்ளே சென்றுவிட அபி அறை வாசலில் தயங்கிநின்றாள்.

திரும்பியவன் " என்னாச்சு " என்றான்.

" சின்னத்தான் வாஸ்துப்படி எனக்கும் இந்த ரூமுக்கு ராசி சரியில்லை என்று நினைக்கிறேன், இந்த ரூமை விட்டு வெளியே நீ நன்றாகத்தான் இருக்கிறாய், உள்ளே வந்தால் ஏதோ போல பேசதொடங்கிவிடுகிறாய் " என்றாள் வெளியே நின்றபடி.

அவள் அருகில் வந்தவன் " இதுவரை சரியாகத்தான் யோசித்து இருக்கிறாய், குறையும் யோசி. ஏன் ? என்று மட்டும் !" என்றவன் அவளை கைபிடித்து உள்ளே அழைத்து சென்றான்.

அதன் பிறகு அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான், லேசாக ஈரம் படிந்திருந்த அவளின் முடியை டவலால் துவற்றிவிட்டவன், மெல்லிய இசையை அறை எங்கும் பரவவிட்டான். பேசினால்தான் பிரச்சனை, பேசாமல் இருந்தால் ? என்று நினைத்திருப்பானோ என்னவோ, இசை காதுக்கு இனிமை சேர்க்க அவளை தோளோடு அணைத்தபடி சோபாவில் அமர்ந்துகொண்டு கண்மூடினான். மெல்லிய இசை மனதை லேசாக்கி, இதயம் அதில் கரைய தொடங்கியது போல அபிக்கு, தோளில் இருந்த அவன் கையை விலக்கிக்கொண்டு அவன் மார்பில் தஞ்சம்கொண்டாள்.

அவளின் செயல் ரிஷிக்கு யோசனையை கொண்டுவந்தது, ஆனாலும் அவளை அணைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். இருவருக்குமே இரவு உணவை உண்ண கீழே போகும் எண்ணம் இல்லை.

" அம்மு சாரி, ஏதோ கோபத்தில் டிவோஸ் அது இது என்று பேசிவிட்டேன். சாரிடா " என்றான் ரிஷி.

" உனக்கு ஏன் சின்னத்தான் இப்போல்லாம் அடிக்கடி கோபம் வருது. கோபத்தில் என்னல்லாம் பேசுற. நீ ரொம்ப மோசம் " என்றாள் அபி. அவள் பேசியதிலிருந்து அபி ரிஷியை இன்னும் மன்னிக்கவில்லை என்று தெரிந்தது.

" ஐ அக்ரீ, கண்டிப்பா என்னை மாத்திக்க ட்ரை பண்றேன், ஆனால் நீ உன்னை ஐ மீன் உன் தவறை எப்போது திருத்திப்ப ?" என்றான்.

அப்பியிருந்த அவன் மார்பில் இருந்து மெல்ல விலகியவள் கண்ணை சுருக்கிக்கொண்டு, உதட்டை குவித்துக்கொண்டு மேல்மூச்சு கீழ்முச்சு வாங்கினாள்.

" மறுபடியும் நீ ஆரம்பிக்கிற இல்ல ?" என்றாள்.

" இல்ல நான் எதையும் ஆரம்பிக்கல, உனக்கு புரியவைக்க முயற்சிபண்றேன், இதை பற்றி இப்போது வேண்டாம் பிறகு பேசலாம் என்று நினைத்தேன், பட் உடனே பேசியாகணும். ஏன்னா நான் உன்னிடம் கேட்டது போல நீ என்னிடம் மன்னிப்பு கேட்டாலும் நான் உன்னை அப்படியே விடப்போவதில்லை. ஏன்னா நான் அப்படி ஹர்ட் ஆகியிருக்கிறேன் உன்னுடைய அலட்சியத்தால். ஸோ கண்டிப்பா நீ என்னை இன்னொருமுறை யாரும் கையில் பொம்மையாக கொடுக்ககூடாதில்லையா ?அதற்காக உனக்கு ஒரு சின்ன பனிஷ்மென்ட்." என்றான் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்.

" என்ன பனிஷ்மென்ட் ?" என்றாள் அபி.

" நேஹா ஸோ பேட். நீ இப்போது என்னிடம் கேட்கவேண்டிய கேள்வி நீ என்ன தப்பு செய்தாய் என்று. பஸ்ட் சேன்ஞ் யுவர் கொஸ்டின் " என்றான் ரிஷி.

"அதான் நான் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டேன் என்று முத்திரை குத்திவிட்டாயே பிறகென்ன ? பனிஷ்மென்ட் என்ன என்று மட்டும் சொல். " என்றாள் அபி பிடிவாதமாக.

" நீ திருந்தமாட்டாய், நானே திருந்திக்கொள்கிறேன். ஓகே அன்சர் மை கொஸ்டின். ஐ ஹோப், யூ க்நோவ் பேஸிக்ஸ் டூட்டி ஆப் இண்டியன். இந்தியனுடைய அடிப்படை கடமைகள்."என்றான்.

அவன் அப்படி கேட்க காரணம் அபியுடைய மைண்டை டைவர்ட் செய்யத்தான். அவளுக்கு ஹிஸ்ட்ரி, பாலிடிக்ஸ் என்றால் அவ்வளவு விருப்பம்.

" எஸ் ஐ க்நோவ் " என்றாள் அபி.

" தெரியுமா ? இல்லை அதை பின்பற்றுவதும் உண்டா ?" என்றான் உதட்டில் முறுவலுடன்.

" ஹலோ நான் ஒரு உண்மையான இந்திய பெண். கடமைகள் எல்லாம் வேறு ஏட்டோடு இல்லாமல் அதை இம்மி பிசகாமல் கடைபிடிப்பவளாக்கும் நான் " என்றாள் பெருமையாக.

" ஓஒ, தட்ஸ் குட், அப்படின்னா நீ கடமையில் இருந்து தவறுவதே இல்லை ரைட் " என்றான் அழுத்தமாக.

" யா " என்றாள் அபி.
" ஸோ ஒரு இந்திய நாட்டு பிரஜையா உனக்கு அடிப்படை கடமையை நன்றாக தெரியும், அதை இம்மி பிசகாமல் கடைபிடிக்க வேறு செய்கிறாய், ஆனால் " என்று இழுத்தான்.

" ஆனால்... " என்றாள் அபி

" ஆனால் ஒரு கணவனுக்கு இந்திய மனைவி ஆற்ற வேண்டிய கடமையை பற்றி உனக்கு தெரியாது போல ?" என்றான்.

" சும்மா காதை சுற்றி மூக்கை தொடாதே, டரெக்ட்டா சொல்லு நான் என்ன கடமையில் இருந்து தவறினேன். நேற்றுதான் நமக்கு கல்யாணம் முடிந்திருக்கிறது. இனிதான் நான் உனக்கு தேவையான அனைத்தையும் ஒவ்வொன்றாய் கவனிக்க முடியும். ஐ மீன் உன் ட்ரெஸ், சாப்பாடு etc. அதற்குள் உனக்கு என்ன அவசரம் ?" என்றாள் அபி சலிப்புடன்.

" ஸோ கணவன், மனைவி என்றால் ட்ரெஸ், சாப்பாடு etc என்பது மட்டும்தான் இல்லையா ?" என்று கேட்டு வெடுக்கென்று கோபத்துடன் எழுந்தவன், இரண்டு கை முஷ்டியும் இறுக்கி மூடி திறந்தான். அங்கேயும் இங்கேயும் நடந்தான்.

" ஓகே லாஸ்ட்டா பிரங்கா உனக்கு புரியும் படி கேட்கிறேன். நீ என் மனைவி. உன்னை என் கண்முன்னே ஒருவன் தொட்டு பேசுவதுமாக, கட்டிப்பிடிப்பதுமாக, ஒட்டிக்கொண்டு அலைவதுமாக, சாப்பிடும் இடத்தில் அவன் எச்சு சாப்பாட்டை உன் தட்டில் வைப்பதுமாக இருந்தால் நான் அதை பார்த்துக்கொண்டு என்ஜாய் பண்ணு என்று விட்டுக்கொண்டு இருந்தால் உனக்கு எப்படியிருக்கும் ?" என்று ரிஷி கேட்டு முடிக்கும் போது அபியின் கை ரிஷியின் கன்னத்தை பளார் என்ற சத்ததோடு உரசி சென்றது.

ரிஷியின் பொறுமை எல்லையை கடந்தது.
அபியின் கையை பிடித்து இழுத்து அவளை அவன் முகத்தருகே கொண்டுவந்தவன்
" எப்படி இருக்கு ? சும்மா வாயால் நான் சொல்லும் போதே உன் கட்டிய கணவனை, உன் சின்னத்தானை அடிக்கும் அளவுக்கு உள்ளே எரிகிறதே, ஆனா உன் புருஷனை ஒருத்தி கட்டிப்பிடிக்கிறா, ஒட்டுறா, உரசுரா. உனக்கு அதை பார்த்து இப்படி உள்ளே கொதிக்கல. ஏன் கொதிக்கல? கொதிக்காது ஏன்னா இன்னும் நான் உன் கணவன் என்று உன் மனசுல பதியல.
ஒரு கல்யாணம் என்பது ஒரு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் வேலியாக இருக்க.

இங்கே அப்படியா நடக்கு. வாங்க, யாரெல்லாம் வாறீங்களோ வாங்க, என் புருஷன் பொது சொத்து. யாருவேண்டும்என்றாலும் அவரை கட்டிபிடிக்கலாம், முத்தம் கொடுக்கலாம். நான் கேட்க மாட்டேன் ஏன்னா நான் உங்கள் அடிமை என்று சொல்லிக்கொள்கிறாய். அப்படித்தானே. என்னை ஒருத்தி தொட நினைக்கையில் அவள் மனதில் உன் உருவம் தோன்றி அவள் நாலடி தள்ளி நிற்க வேண்டாமா ? இதே உன்னை எவனாவது வந்து நெருங்க சொல் பார்ப்போம். உனக்கு நிச்சயம் செய்திருந்த அந்த ஜெய், கல்யாணத்தை நிறுத்திய பிறகும் அதை பற்றி உன்னிடம் பேசவோ, உன்னை பார்க்கவோ முயற்சித்தானா ? இல்லை, ஏனென்றால் அவனுக்கு தெரியும் அவன் உன்பக்கம் திரும்பினால் நான் என்ன செய்வேன் என்று. " என்று உறுமினான் ரிஷி.

அபி அவனின் பேச்சிலும் செயலிலும் வெடவெடத்து போனாள். அவள் முகம் வலியில் சுருங்க அவளை விடுவித்தான் ரிஷி. ஆனாலும் அவன் ஆத்திரம் அடங்கவில்லை. அபி சும்மா இருக்காமல்

" சின்னத்தான் நீ வெளிநாட்டில் படித்தவன், இதெல்லாம் உனக்கு சகஜம் என்று நினைத்தேன், நான் உன் சுதந்திரத்தில் தலையிட வேண்டாம் என்று நினைத்தேன்." என்றாள் மெதுவாக.

ரிஷிக்கு அவளின் காரணம் எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றியது போல இருந்தது.
ஆத்திரம் தலைக்கேற அவளின் தோளை அழுத்தி பிடித்தான்.

" என்னடி சொன்ன இதெல்லாம் சகஜம் என்றா ? என் அப்பா என்னை வெளிநாட்டிற்கு அனுப்பியது படிக்க ? என் கலாச்சாரத்தை குழிதோண்டி புதைக்க இல்லை. நான் தொட்டு கட்டிப்பிடித்து முத்தமிட்ட பெண் நீ மட்டும் தான். நீ இதை நம்பியோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் அதுதான் உண்மை." என்றவன் அவளை விட்டுவிட்டு பால்கனியில் போய் நின்றான்.

அபிக்கு குழப்பமாக இருந்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடமாக காதலர்கள் என்று எண்ணப்பட்டவர்கள் இருவரும். ஆனால் அவளின் நிழல் இவன் மேல் பட்டாலும் குதறிவிடுகிறான் இவன். என்னய்யா நடக்குது இங்கே. ஒருவேளை சந்தர்ப்பவசத்தால் எனக்கு தாலி கட்டிவிட்டு, கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யக்கூடாது என்று இப்படி நடக்கிறானா ? இல்லை அவளின் அருகாமை இவனை இப்படி பதற செய்கிறதா ? கேள்விகள்தான் பெருகுகிறது, இப்போது அவன் இருக்கும் கோபத்தில் நான் போய் இந்த கேள்விக்கு பதில் கேட்டால் அடி நிச்சயம். போதாதகுறைக்கு அவனை அறைய வேறு செய்தாகிவிட்டது என்று எண்ணியவள், மெல்ல அவன் அருகில் சென்றான்.

" சாரித்தான், இனிமே நான் என் கடமையை உன்னைப்போல சரியாக செய்வேன் " என்றாள் பொடிவைத்து.

அவளின் பேச்சில் இருக்கும் குத்தலை புரிந்து திரும்பி அவளை முறைத்தான் ரிஷி.

" சும்மா சும்மா முறைக்காதே, நான் செய்த தப்புக்கு பனிஷ்மென்ட் என்ன என்று மட்டும் சொல் " என்றாள் முகத்தை திருப்பிக்கொண்டு. ( பின்னே முறைத்தால் பயமாக இருக்குதல்லவா, பயந்தாலும் கெத்தை விடக்கூடாதில்லையா )

" நீ உன் கடமையை சரியாக செய்யும் வரையில் நீயும், நானும் தனியாகத்தான் தூங்கவேண்டும் " என்றான்.

ஆஹா இதுதான் விஷயமா ? சார் தனியாக தூங்க ஆசைப்படுகிறார், டிஸ்டன்ஸை மெய்ன்டன்ட் பண்ண வழிதேடுகிறார். என்று எண்ணியவள்

" எங்கே அடித்தால் எனக்கு வலிக்கும் என்று தெரிந்து அடிக்கிறாய் நந்து " என்றார் சிரித்துக்கொண்டே. அந்த சிரிப்பின் பின்னே இருக்கும் வேதனையை ரிஷி புரிந்து கொண்டானோ இல்லையோ ?

" பனிஷ்மென்ட் உனக்கு மட்டும் இல்லை, என்னை உனக்கு புரியவைக்க தவறிய எனக்கும் சேர்த்துதான், வா அம்மா தேடுவார்கள். டின்னரை முடித்துவிட்டு வரலாம்." என்று முன்னே நடந்தான்.

" எனக்கு பசிக்கவில்லை " என்றாள் அபி நகராமல்.

" உன் அத்தையிடம் என்னால் பதில் சொல்ல முடியாது. நீ எது செய்தாலும் அதுக்கு காரணம் நான் தான் என்பார் அவர். பேசாமல் வா, நீ உண்ணாவிரதம் இருந்தாலும் பனிஷ்மென்ட் பனிஷ்மென்ட் தான், நோ சேன்ஜ் " என்றான் அவன்.

" உன் பனிஷ்மெண்ட்டில் நான் ஒன்றும் கரைந்துவிடமாட்டேன். இத்தனை நாள் நான் ஒன்றும் உன்னை கட்டியணைத்து கொண்டு தூங்கவில்லையே? அதற்காக தூங்காமலா திரிந்தேன், நன்றாகத்தான் தூங்கினேன்." என்றாள் அபி.

" உனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையென்றால் சாப்பிடவா " என்றான் கையை நீட்டியபடி.

நீண்ட அவன் கையை தட்டிவிட்டவள் அவனை சுற்றிக்கொண்டு அவனுக்கு முன் சென்றாள்.

" நேகா என்னை போலவே கடமையை செய்வேன் என்று எனக்கு வாக்கு கொடுத்திருக்கிறாய் " என்றான் ரிஷி.

நின்றவள் திரும்பி வந்து தன் கையை அவன் கையோடு கோர்த்துக்கொண்டு சேர்த்து நடந்தாள்.

அபி ரிஷிக்கு கொடுத்த வாக்கின்படி ஒரு மனைவியின் கடமையை சரியாக செய்வாளா என்பதை அறிய நீண்ட நேரம் காத்திருக்கும் அவசியம் இல்லாதபடிக்கு பானுவும், ப்ரியாவும் ஒரு கோரிக்கையோடு கீழே காத்திருந்தனர் ரிஷியை எதிர்பார்த்து.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஷ்வபூமி டியர்

அக்காலளும் தங்கச்சியும் என்ன ஏழரையை இழுத்து விடக் காத்திருக்காங்களோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top