Uyirin ularal - episode 22

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
#1
உயிரின் உளறல் - அத்தியாயம் 22

காலை எட்டு மணியாகியும் கீழே வராதா அபியை நினைத்து கொதித்துக்கொண்டிருந்தாள் பானு.

"மணி எட்டாகிவிட்டது, இன்னும் கீழே வராமல் என்னதான் செய்கிறாளோ இந்த அபி "என்றாள் கணவனிடம்.

" எட்டுதானே ஆகிறது, நாம் பத்துமணியாகியும் வெளியே வராமல் இருந்த நாளும் உண்டே " என்றான் அவள் கணவன்.

" போதுமே உங்கள் மலரும் நினைவுகள், நாமும் அவர்களும் ஒன்றா ? நாம் முறைப்படி பேசிமுடிக்கப்பட்டு, கல்யாண நாளுக்காக காத்திருந்து திருமணம் செய்தவர்கள், இவர்கள் இன்ஸ்டன்ட் காஃபி மாதிரி இன்ஸ்டன்ட் கல்யாணம், அப்புறம் என்ன ?" என்று பொரிந்தாள்.

" நீ எதற்கு இப்போது அபியை தேடுகிறாய் ? வீட்டுவேலை, சமையல் வேலை என்று சகலத்தையும் பார்த்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள், அப்புறம் அவள் எப்போது வந்தால் உனக்கென்ன ?" என்றவன் எழுந்து சென்றுவிட்டான்.

பானு போகும் அவனையே முறைத்துகொண்யிருந்தாள்.

ஜன்னல் திரைசீலைகள் இழுத்து மூடப்பட்டிருந்ததால் துளி வெளிச்சம் கூட அறைக்குள் எட்டிப்பார்க்கவில்லை. இரவு சரியாக தூங்காத களைப்பு, ஓடி ஓடி ஓய்ந்து ஒரு இடத்தில் சேர்ந்த களைப்பு என்று இருவருக்கும் தூக்கம் கலையவில்லை. எப்போதும் போல தூக்கம் கலைந்த அபி லேசாக புரண்டபோது

" எங்கடி போற " என்று அவள்புறம் புரண்டு அவளை தன்னோடு இழுத்து தன் மேல் போட்டுகொண்டு தூங்கிக்கொண்டிருக்கிறான் ரிஷி. இது தெரியாமல் அங்கே என்னவோ நடந்துவிட்டது என்று நினைத்து பொறுக்கமுடியாமல் பொங்கிகொண்டிருக்கிறாள் பானு.

" சின்னத்தான் விடு என்னை" என்று அபி அவன் கைக்குள் நெளிய

" ஆபீஸ் போகப்போறியா ?" என்று கேட்டான் ரிஷி கண்ணை திறக்காமல்.

" இல்லை, அத்தை இரண்டுநாள் கழித்தபின்புதான் போக வேண்டும் என்றார்கள் " என்றாள்.

" எனக்கும் அதே ரூல்ஸ் தான், பிறகு கீழே போய் அந்த பேய்களின் முகத்தை பார்க்க ஏன் இந்த அவசரம் " என்றான்.

" அதற்காக இப்படியே இருக்கணுமா ? அவர்கள் என்ன நினைப்பார்கள் ?" என்றாள்.

இப்போது கண்ணை திறந்தவன் "எல்லோருக்கும் அனுபவம் உண்டு, அதான் ஆளுக்கு இரண்டு குழந்தை பெற்று வைத்திருக்கிறார்களே, நாமும் அதற்கு முயற்சி செய்வதாக நினைத்துக்கொண்டு இருப்பார்கள் " என்றான் சிரித்துக்கொண்டு.

" ச்சீ எருமை அசிங்கமாக பேசாதே " என்று அவனுக்கு ஒன்று போட்டாள்.

"அட இது என்னடா கொடுமையாக இருக்கு ? காலங்காலமாக நடப்பதுதானே ?" என்றான் அடித்த அவள் கையை பிடித்து முத்தமிட்டபடி.

" எல்லோரும் அப்படி என்றால் நாமும் அப்படிதான் இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம் ?" என்றாள் அபி.

" கட்டாயம் என்று இல்லை, நேற்று அம்மா ஏதோ பத்து மாதம் என்று கணக்கு சொல்லும் போதே நீ இதையெல்லாம் சொல்லியிருக்க வேண்டாமா ? ஏன்னா 10 மாதத்தில் ஒரு நாள் குறைந்துவிட்டது பார்" என்றான் அவன் குறையாக.

" உனக்கு வேற வேலையே இல்லையா ? காலையிலேயே இப்படி பேசிக்கொண்டிருக்கிறாய் ? பஸ்ட் மனசு சேரனும் அப்புறம் தான் மற்றது, கடைசி நேரத்தில் கல்யாணம் நின்றுவிடக்கூடாதே என்று பதறிப்போய் நீ இந்த தாலியை கட்டினாய். இதில் 10மாத கணக்கு வேறு உனக்கு, பேசாமல் என்னை விடு " என்றாள்.

அவன் அதற்கு சிரித்தானே தவிர பதில் ஏதும் சொல்லவில்லை மாறாக அவள் முகத்தில் விழுந்திருந்த முடியை தன் விரலால் விலக்கினான்.

அப்போது அவன் கண்ணின் பார்வையை இதுவரை அபி கண்டதில்லை. வித்தியாசமாக இருந்த அந்த பார்வையில் விழுந்தவள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல பார்த்தாள்.

மெல்ல அவன் விரல் அவள் முகத்திலிருந்து அவளுடைய பின்கழுத்துக்கு சென்று அவளின் பின்கழுத்தின் முடியில் எதையோ தேடியது.

அபி அவஸ்த்தையாக உணர்ந்து அவனை பலம்கொண்டு தள்ள முயற்சித்தாள்.

" ஸ்ஸு " என்றவன் அவளின் தலையை தன் புறமாக சாய்த்து அவளின் முகத்தில் முத்தமிட ஆரம்பித்தான்.

நெற்றி, கண், கன்னம் என்று கடைசியில் உதட்டை குறிவைத்தது அவன் உதடு, அதற்குள் சுதாரித்துக்கொண்ட அபி அவளின் உதட்டுக்கு அவனின் உதட்டுக்கு இடையே இருந்த அந்த சிறு இடைவெளியில் தன் கரத்தை கொண்டு வைத்தாள். உடனே அவன் கண் சிரித்தது.

" எருமை காலையில் என்ன வேலை பார்க்கிறாய் ? இரு உன்னை அத்தையிடம் சொல்லிக்கொடுக்கிறேன், என் சம்மதம் இல்லாமல் நீ என்னிடம் எப்படி இப்படி நடக்கலாம் ?" என்றாள் அபி கோபத்தில்.

" போ போய் சொல்லு, அத்தை அத்தை என் கணவன் கல்யாணம் முடிந்த அன்றே என்னை என் அனுமதி இல்லாமல் முத்தமிட்டார் என்று. உன் அத்தை சிரிப்பார்கள் " என்றான் அவளை விடுவித்துவிட்டு.

" ஏன் சிரிப்பார்கள், அவர்கள் பெற்று வைத்திருக்கும் ரவுடி பையனை நாலு போடுவார்கள் " என்றாள் அவனை விட்டு எழுந்து கூந்தலை முடிந்தபடி.

" ஆமாம் ஆமாம் நாலு போடத்தான் செய்வார்கள், பத்து மாதத்தில் இரட்டை சந்தோசத்ததை தா என்றால் நீ இப்போதுதான் உன் பொண்டாட்டிக்கு ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு அடி வாங்கிக்கொண்டிருக்கிறாயா ? என்று " என்று அவளை மறுபடியும் தன் புறம் இழுத்தவன்

" மண்டு மண்டு அதான் உன் அத்தை நேற்றே சொல்லி அனுப்பினார்களே உன்னிடம், மீதியை உன் சின்னத்தான் சொல்லி தருவான் என்று "என்று நினைவு படுத்தினான்.

" ஓஒ " என்றாள் அவள்.

" ஆமாம் ஓஒதான், ஆனால் நான் உனக்கு எதையுமே இப்போது சொல்லித்தர போவது கிடையாது.

" அப்படின்னா இப்போது எதற்கு நீ என்னை" என்று வாக்கியத்தை முடிக்காமல் குனிந்துகொண்டாள்.

"அது மூச்சுக்கு மூன்று முறை சின்னத்தான் சின்னத்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கும் உன் மனதில் நான் எப்போது நந்துவாக அதாவது உன் கணவனாக பதிவாகிறேனோ அப்போதுதான் உனக்கு பாடம் ஆரம்பமாகும்" என்றான் அவன்.

" போ உன் பொல்லாத முத்தம்" என்றாள் இவள்.

" ஊகும் பொல்லாத முத்தம் இல்லடி என் பொண்டாட்டி இது ஒரு சீயரப் முத்தம், உன்னை ஒருமுறை பாரின் கூட்டிட்டுப்போறேன், அப்புறம் நீயே தெரிஞ்சிப்ப இந்த முத்தத்தை பற்றி, இது அங்கே ரொம்ப காமன், அதாவது இங்கே நாம் நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று கை குலுக்கி கொள்வதில்லையா ? அதுபோல " என்றவன்

அவள் முகத்தை சுழித்த நேரம் அவன் இதழை அவள் இதழோடு ஒட்டினான். அடுத்த நொடியே விட்டுவிட்டான்." இது மிக தெரிந்தவர்களுக்கு கை கொடுப்பது போல" என்று விளக்கம் வேறு கொடுத்தான்.

தலையணையால் நாலு போட்டவள் " அடேய் என் அத்தை பெற்ற உத்தமபுத்திரா வெளிநாட்டில் போய் படித்துவிட்டு வா என்று அனுப்பினால், விதவிதமாக கை கொடுப்பது எப்படி என்றா படித்துக்கொண்டு வந்திருக்கிறாய் ? என் மாமா இருந்திருக்கணும், இப்படி கைகொடுக்கும் உன் கையை உடைத்திருப்பார் ஐ மீன் உதட்டை. இப்போ என்ன கெட்டுப்போச்சு வா உன்னை அத்தையிடம் சொல்லிக்கொடுக்கிறேன் " என்றாள் அபி சிரித்துக்கொண்டு.

" சொல்லிராதடி ராட்சசி, ஏற்கனவே நான் வெளிநாட்டிற்கு போய் மாறிட்டேன் என்று ஒருநாள் டோஸ் விழுந்திச்சு, சத்தியமா சொல்றேன் இதெல்லாம் தியேரியாக தான் எனக்கு தெரியும், பராக்டிகளா நான் ட்ரை பண்ணியதே இல்லை, இப்போதான் உன்னிடம் ட்ரை பண்ணினேன் " என்றான் பதறியபடி.

" நம்பிட்டேன், நம்பிட்டேன், அத்தையிடம் இதை சொல்லாமல் இருக்கனும் என்றால் உன் வாலை சுருட்டிக்கொண்டிரு, இனி என்னிடம் இப்படி வாலாட்டின " என்று வெட்டிவிடுவதுபோல் செய்கை செய்தாள்.

" ஹே இந்த கதையெல்லாம் என்னிடம் நடக்காது, உன்னிடம் இல்லாமல் நான் யாரிடம் போய் இதை ப்ராக்டிஸ் பண்ணுவது.
நீ அம்மாவிடம் வேண்டுமென்றால் சொல்லிக்கொள், நீ என்னை நம்பாமல் இருக்கலாம், ஆனால் அம்மு மேல் சாத்தியமா நான் எதுவும் செய்யலன்னு அம்மாவிடம் சொன்னால் கண்டிப்பாக அவர்கள் என்னை நம்புவார்கள் " என்றவன் மறுபடி அவளை இழுத்து இதழை ஒற்றிவிட்டு சட்டென்று விலகினான்.

" பொறுக்கி, ரவுடி பயலே, உன்னை " என்றவள் கட்டிலிலிருந்து எழும்பி சென்றுவிட்டாள்.

" போ, போ இதுக்கெல்லாம் நான் அசரமாட்டேன் " என்றவன் அவள் குளியலறைக்குள் செல்வதற்குள் அவன் சென்றுவிட்டான்.

" சின்னத்தான் உன்னை என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது. ஒழுங்கா வெளியே வா, மணியை பார் எட்டை தாண்டிவிட்டது, கீழே எல்லோரும் என்னை வறுத்தெடுக்க போறார்கள் " என்றாள் அபி.

" சாரி அபி இப்போது என்னால் வெளியேவரமுடியாது, அப்புறம் நீ பாவம், ஒரு 10 மினிட்ஸ் கொடு வந்துவிடுகிறேன் "என்று தலையை வெளியே நீட்டியவன் மறுபடி உள்ளே தலையை இழுத்துக்கொண்டான்.

வேறு வழியில்லாமல் அபி காத்திருந்தாள்.
இடுப்பில் ஒரு டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்தான் ரிஷி.

திரும்பி அவனை பார்த்த அபி " எருமை எருமை " என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.

" ஏய் என்ன சும்மா சும்மா என்னை காலையில் இருந்து திட்டிகிட்டுஇருக்க ? காலையில் இருந்து எத்தனை எருமை போட்டுவிட்டாய் ? இப்போ எதுக்கு என்னை திட்டின ?"என்றான் கோபத்தில்.

" எதுக்கு திட்டினேன்னா ? உனக்கு கொஞ்சமாவது வெட்கம், கூச்சம் இருக்கா ? ஒரு பெண் இருக்கும் அறையில் இப்படி டவலோடு வந்து நிற்கிற ?" என்றாள் அவளும் கோபத்தில்.

" யாரது பெண் என் அறையில் ? அவளுக்கு இங்கே என்ன வேலை ஒரு ஆண் இருக்கும் அறையில் ? என்றான் அவன் எடக்காக.

வெடுக்கென்று திரும்பியவள் " என்ன செய்ய அந்த ஆண் என் கணவனாகி போனானே, அவன் இருக்கும் அறையில் தான் நானும் இருக்க வேண்டுமாம் " என்றாள் மறுபடியும் முகத்தை திருப்பிக்கொண்டு.

" ஓஒ அப்படியென்றால் அந்த பெண் என் மனைவியா ? பிறகு எனக்கு எப்படி வெட்கம், கூச்சம் எல்லாம் வரும் " என்றான் அவளை தன் புறம் திருப்பி நெருக்கமாக நின்று கொண்டு.

அவனின் ஈரம் படிந்த வெற்று உடலும், சோப்பு மனமும் அவளின் மூளையில் சென்று ஏதோ மாற்றத்தை உணர செய்தது. இது என்னடா சோதனை?என்று யோசித்துக்கொண்டு அவனை தள்ளி விட்டாள்.

" சும்மா ஆர்கியூ பண்ணாதே சின்னத்தான், அதான் அவ்வளவு பெரிய ட்ரெஸ்ஸிங் ரூம் கட்டிவைத்திருக்கிறியே, அதற்குள் சென்று டிரஸ் சேன்ஞ் செய்தால் என்ன ?" என்றாள் அவளுடைய உடையை கையில் எடுத்தபடி.

" எனக்கு அது கம்பர்ட்டப்புலா இல்லை. இதுவே பழக்கமாகிவிட்டது" என்றான் அவன் தலையை துவட்டி கொண்டு

" நல்ல பழகின போ, நான் குளிக்க போகிறேன், வெளியே வரும் போது நீ இங்கே நின்ற நான் கொலைகாரியா ஆகிவிடுவேன். ட்ரெஸ்ஸை சேன்ஞ் பண்ணிட்டு ஓடிரு இங்கே இருந்து " என்றவள் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

சென்ற அவளையே இமைக்காமல் உதட்டில் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான், தான் சரியாகவே அவளை கையாள்வதாக நினைத்தான். ஆனாலும் அவனின் நெற்றியில் சிந்தனையின் ரேகைகள் வந்து அமர்ந்துகொண்டது.

திருமணத்திற்கு வந்த உறவுகாரர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். இரண்டு அண்ணன்களின் குடும்பம் காலை உணவை முடித்துவிட்டு கிளம்புவதாக இருந்தது.

குளித்துவிட்டு அபி வெளியே வரும் போது தான் அங்கே இருந்தால் கண்டிப்பாக திட்டிதீர்ப்பாள், அதுமட்டும் இல்லாமல் இந்த அளவு பயிற்சியே அவளுக்கு போதும் என்று நினைத்தவன் கீழே இறங்கி வந்தான்.

டைனிங் டேபிளில் குடும்பம் மொத்தமும் அமர்ந்து இருந்தது, எக்ஸ்ட்ரா பிட்டிங்காக ப்ரியா சோபாவில் அமர்ந்து இருந்தாள்.

" பேய் சென்றுவிட்டது என்று பார்த்தால் காலையிலேயே ஆஜர் போட்டுவிட்டதே! " என்று நினைத்துக்கொண்டே டைனிங் டேபிளை நோக்கி சென்றான்.

அங்கே மூன்று சேர் காலியாக இருந்தது, இரண்டு பக்கத்தில் பக்கத்தில் இருக்க அதற்கு நேராக எதிர்புறம் ஒரு சேர் இருந்தது. ரிஷி இரண்டு சேர் இருந்ததில் ஒன்றில் போய் அமர்ந்தான். அபி வருவாள் என்று.

அவன் அதில் அமர்ந்தவுடன் ப்ரியா எழுந்து வந்து அவன் அருகில் இருந்த சேரில் வந்து அமர்ந்தாள்.

அவளை ஏன் அங்கு அமர்ந்தாய் என்று யாரும் கேட்கவில்லை நாகரிகம் கருதி. ரிஷிக்கு உள்ளே எரிச்சல் எழுந்தாலும் அவன் அதை வெளியே காட்டாமல் அவள் புறம் திரும்பாமல் இருந்தான்.

" ரிஷி அம்மு எங்கேப்பா ?" என்றார் தாயார்.

" குளிக்க சென்றாள் அம்மா, இப்போது வந்துவிடுவாள் " என்றான் ரிஷி.

" பின்னே நீ இங்கே என்ன செய்கிறாய் ? அவள் குளித்தால் என்றாள் அவளுடைய கேசத்தை துவற்றவே ஒரு ஆள் வேண்டுமே? இனியும் அன்னமாவே அதை செய்ய வேண்டுமா ? நீ அவளை நன்றாக பார்த்துக்கொள்வாய் என்று நினைத்தால் இப்படி தனியே வந்து அமர்ந்திருக்கிறாய். உன் முரட்டு குணத்தை அவளிடமும் காட்டிவிடாதே. போய் அவளை அழைத்துக்கொண்டு வா" என்றார் அவர். ஏதோ அவரால் முடிந்தது.

அந்த குட்டிச்சாத்தான் அங்கே இருந்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறது, இங்கே அம்மா யாருமேலோ உள்ள கோபத்தை என் மேல் காட்டுகிறார்கள், என்னடா சோதனை இது என்று நினைத்தான் ரிஷி.

" அத்தை இது என்ன பழக்கம் ? சாப்பிட இருந்தவரை எழுப்புவது. அபி என்ன சின்ன குழந்தையா ? அவளால் தனியே முடியை பராமரிக்க முடியாவிட்டால் அதை வெட்ட வேண்டியதுதானே. இவர் போய் கூப்பிட வேண்டுமா ? அதெல்லாம் தனியே வருவாள், இரண்டு பேரும் சேர்த்துதான் வரவேண்டும் என்று கட்டாயமா என்ன ? நீங்கள் சாப்பிடுங்கள் கொழுந்தனாரே " என்றாள் பானு.

கற்பகம்மாள் மகனை ஒரு பார்வை பார்த்தார், " உனக்கு திருமணம் முடிந்து எத்தனை வருடம் ஆகிறது, இதுவரை ஒருநாளாவது என் மகன் தனியே சாப்பிடவந்திருக்கானா ? அல்லது நீதான் விட்டுவிடுவியா ? அப்படியென்றால் நீ குழந்தை என்று அர்த்தமா மருமகளே ?" என்றார் கற்பகம்மாள்.

பானு கோபத்தில் கணவனை பார்த்தாள், தன் தாயுக்கு பதில் சொல்வான் என்று, அவனோ தன் வேலையை பார்ப்பதிலேயே கவனமாக இருந்தான், அங்கே இப்படி ஒரு பேச்சு நடக்கிறது என்பதை கூட உணராதவன் போல.

ரிஷி தாயின் பேச்சில் மலைத்து போனான், பொறுமையின் மருவுருவமான தாயாருக்கு இன்று ஏன் இந்த கோபம் என்று நினைத்துக்கொண்டு இருக்கையை விட்டு எழுந்தான். அதற்குள் அபி வந்துவிட்டாள். அவளின் கொண்டையும், பெரிய சைஸ் கண்ணாடியும் காணாமல் போய், கரெக்ட் சைசில் தைக்கப்பட்டிருந்த சுடிதாரும் இடையை தான்டி நீண்டு அடர்த்த கருங்கூந்தலும் அவளை வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல காட்டியது.

அணைத்து பெண்களின் கண்ணும் அவள் கூந்தலில் தான் இருந்தது.நேற்று பின்னடிடப்பட்டிருந்த போதும், மாலை கொண்டையிலும் தெரியாத அவளின் கூந்தல் அழகு விரிந்திருந்த போது அழகாக தெரிந்தது.

அபி " எங்கே போறீங்க சின்னத்தான் ?" என்று கேட்டாள் அவன் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தபடி.

" ஆங் போருக்கு " என்றான் ரிஷி நக்கலாக.

" சரி வெற்றியோடு திரும்பிவாருங்கள் " என்றாள் அபியும் நக்கலாக.

" அபி உன் கண்ணாடி எங்கே ? அதை போடாமல் உன் தட்டு என்று பக்கத்து தட்டில் கையை வைத்துவிடப்போகிறாய்" என்றாள் ப்ரியா சிரித்துக்கொண்டு.

" அது குப்பைத்தொட்டிக்கு போயிட்டு, அது பவர் கிளாஸ் இல்லை, என் கண்ணை யாரும் கண் வைத்துவிட கூடாது என்பதற்காக சும்மா நான் போட்டிருந்தேன், இப்போ எனக்கு தேவைப்பட குப்பையில் போட்டுவிட்டேன் " என்றாள் அபியும் சிரித்துக்கொண்டே.

இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கற்பகம்மாள் அபி ப்ரியாவை எழும்ப சொல்லுவாள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனார்.

" அபி ரிஷி பக்கத்தில் வந்து உட்கார். ப்ரியாவை அவளின் அக்கா பக்கத்தில் இருக்க விடுமா. ப்ரியா போம்மா" என்றார்.

ப்ரியா மறுக்க வாயை திறக்கும் முன் " பரவாயில்லை அத்தை நான் இங்கேயே இருக்கிறேன் " என்றாள் அபி.

அபியின் பதிலில் தாயின் மகனின் பார்வை சந்தித்துக்கொண்டது. " பாருங்கள் உங்கள் மருமகளை " என்பது போல பார்த்தான் ரிஷி தாயாரை.

அனைவரும் உணவை சாப்பிட தொடங்கினர். சாப்பிட்டு கொண்டிருந்த ப்ரியா தன் தட்டில் இருந்த பாதி இட்டலியை எடுத்து ரிஷியின் தட்டில் வைக்க போனாள்.

" ப்ரியா என்ன செய்கிறாய் " என்று அவள் கையை பிடித்து நிறுத்தினான் ரிஷி.

" சாப்பிட முடியவில்லை ரிஷி" என்றாள் சினிங்கி கொண்டு.

" சாப்பிட முடியவில்லை என்றால் சாப்பிடாமல் உன் தட்டிலே வை, அதை எதற்கு என் தட்டில் வைக்கிறாய், இது என்ன குப்பை தொட்டியா ? எனக்கு அடுத்தவர்கள் எச்சியை சாப்பிட்டால் வாமிட் வரும் " என்று அவள் கையை விட்டான்.

" அடுத்தவர்கள் எச்சை சாப்பிட்டால் வாமிட் வருமா ? அன்று ஒருநாள் ஹோட்டலில் அபி சாப்பிட்டதை சாப்பிட்டிர்கள் ? அப்போது வரவில்லையா உங்களுக்கு வாமிட் ?" என்றாள் ப்ரியா.

ப்ரியாவுக்கு ஏற்கனவே அவர்களுக்கு இடையே கனெக்ஷன் இருந்தது, பொய்யான காரணம் சொல்லி கலயாணத்தை நிறுத்திவிட்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம்.

ப்ரியா அப்படி கூறியதும் சாப்பிட்டுக்கொண்டிருந்த அபிக்கு புரை ஏறியது, அவள் சமாளிக்க முடியாமல் இரும
" தண்ணீரை குடி அம்மு " என்றான் ரிஷி.
அன்னம்மாள் வந்து அபியின் தலையில் தட்டினார். அபி நார்மல் ஆக

" என்ன கேட்டாய் ப்ரியா ? அப்போது ஏன் வாமிட் ஆகவில்லை என்றால் அவள் என் அம்மு. கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு மேலாக இருவரும் ஒரே தட்டில் தான் சாப்பிட்டிருக்கிறோம், இடையில் கொஞ்சம் கேப் விழுந்துவிட்டது, திருமணம் முடிந்த பிறகு மறுபடியும் அதை தொடரலாம் என்று நினைத்திருந்தேன் நீ இப்படி நந்தி மாதிரி என் அருகில் வந்து அமர்ந்து கொண்டாய் " என்றான் போலி சிரிப்புடன்.

ரிஷியின் நேரடி குற்றச்சாட்டில் ப்ரியாவின் முகம் கறுத்து சிறுத்தது. ஆனாலும் அந்த இடத்தை விட்டு அசையாமல் இனிப்பை எடுத்துவைத்து சாப்பிட தொடங்கினாள் ப்ரியா.

அபி ரிஷியை பார்த்து முறைத்தாள். ரிஷி அவளை கண்டுகொள்ளவே இல்லை. அபியின் பக்கத்தில் இருந்த பானுவின் ஸ்பூன் கீழே விழுந்தது அதை எடுக்க கீழே குனிந்த பானு அதிர்ந்து, நிமிர்த்து தங்கைக்கு ஜாடை காட்டினாள் கீழே பார்க்கும் படி.

அக்காவின் ஜாடையை புரிந்துகொண்டவள் தானும் ஸ்பூனை தவறவிட்டு அதை எடுப்பது போல கீழே குனிந்தாள்.

உடனே எரிச்சலில் நிமிர்த்தவள் " ரிஷி என்ன வேலை பார்க்கிறீர்கள், கொஞ்சமாவது மேனஸ் இருக்குதா உங்களுக்கு, இப்படி எல்லோரும் இருக்கும் போது அவள் காலை இப்படி பிடித்து வைத்திருக்கிறீர்கள் ?" என்றாள் ரகசியமாக.

" யார் காலை, ஓஒ என் மனைவி காலையா? ஆனாலும் நீ மிகவும் அநியாயமாக பேசுகிறாய், நேற்று திருமணம் முடிந்த என் மனைவியின் பக்கத்தில் இருக்கவிடாமல் இப்படி வந்து அமர்ந்துகொண்டு மேனஸ் பற்றி பேசுகிறாய். எங்களுக்குள் ஒரு போட்டி, அதான் அவள் காலை கிடுக்கிப்பிடி போட்டுவைத்திருக்கிறேன், நீ இப்போதுதான் பார்த்தாய் நான் அவள் வந்ததுமுதல் அவளை பிடித்துவைத்திருக்கிறேன், அவள் அதை வெளியே காட்டினாளா பார்த்தாயா ? உனக்கு இதெல்லாம் புரியாது, நீ சின்ன பெண், போ போய் லாலிபாப் சாப்பிடு"
என்றான் ரிஷி அவளுக்கும் மட்டும் கேட்டும் குரலில்.

ப்ரியா கொதித்துப்போய் அங்கிருந்து எழுந்து சென்றாள்.
 
#7
"முத்தே முத்தம்மா முத்தம் ஒண்ணு தரலாமா?
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா?......."
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement