Uyirin ularal - episode 18

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 18

அபியை ரிஷி திருமணம் செய்ய போவதாக அறிவித்தவுடன் அபியின் அண்ணன்களுக்கு சந்தாஷமாக இருந்தது, ஆனால் அண்ணிகளுக்கு ?

" இது அநியாயம். நீங்கள் என் தங்கைக்கு முடிவானவர் " என்று கத்தினாள் பானு.

" அதை யாரு முடிவு செய்தது, நீங்கள் தானே ? நான் இல்லையே ? உண்மையான காதலுக்கும், பணகணக்கு போட்டு வரும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அதுவும் இல்லாமல் நான் உங்கள் தங்கையை காதலிப்பதாக ஒருபோதும் கூறியது கிடையாது. அவளிடம் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக நான் உணர்ந்தபோதே நான் ஒதுங்கி போய்விட்டேன். என் அம்மாவிடம் உங்கள் பெற்றோர் சம்பந்தம் பேசிய மறுநாளே நான் உங்கள் அப்பாவிடம் எனக்கு இதில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டேன், அவர்தான் என்னுடைய பெண்கள் இதை தாங்கமாட்டார்கள், தாங்கமுடியாமல் இன்னும் கொடுமைகாரியாக மாறிவிடுவார்கள். அதனால் இப்போதைக்கு அவர்களிடம் இதை கூற வேண்டாம் என்று கூறினார் " என்றான்.

" இனி நீங்கள் செய்யவேண்டியது ' நம் குட்டு வெளிப்பட்டுவிட்டது, அதனால் இந்த கல்யாணம் நடக்காது, உன்மேல் கொலை வெறியில் அனைவரும் இருக்கிறார்கள். உடம்பில் உயிர் வேண்டும் என்றால் இந்த திசை பக்கம் வராதே' என்று நீங்கள் பார்த்த மாப்பிள்ளையிடம் எடுத்து கூறி இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும்" என்றான் அம்பிகாவை பார்த்து.

" செய்யாவிட்டால் இவன் என்ன செய்துவிடுவான் என்று நினைக்க வேண்டாம். என் பிரெண்ட் அசிஸ்டன்ட் கமிஷனர். உங்களையும் சேர்த்து உள்ளே வைக்கும் அளவுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அப்புறம் அண்ணா, நான் மாப்பிளை என்பதால் என்னால் எல்லா வேலையும் செய்ய முடியாது. நீங்கள் கல்யாண வேலையை பார்த்துக்கொள்ளுங்கள். நான் என் வருங்கால மனைவியுடன் போய் அவளுக்கு தாலியும், முகூர்த்த புடவையும் வாங்கிவருகிறேன் " என்று கிளம்பினான் ரிஷி.

" ஒரு நிமிடம் " என்று அவனை நிறுத்தினாள் பானு.

ரிஷி திரும்பாமலே நின்றான்.

" அபிக்கு இதில் சம்மதமா என்று எங்களுக்கு தெரிந்தாக வேண்டும் ? ஏனென்றால் நாங்கள் பார்த்த மாப்பிளை கெட்டவர் என்று நீங்கள் கண்டுபிடித்துவிட்டு, நீங்களே அபியை திருமணம் செய்துகொள்வதாகவும் சொல்வதால் இதில் திருட்டு வேலை இருப்பதாக எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது அதனால்தான் " என்றாள் பானு குரோதமாக.

ரிஷி திரும்பி அவளை ஒரு நிமிடம் பார்த்தான். " நம்மிடம் எது உள்ளதோ அதைத்தான் நாம் அடுத்தகவர்களிடமும் தேடுவோம் இல்லையா ? இப்படிப்பட்ட சந்தேகம் உங்களுக்கு தோன்றும் என்பது எனக்கு தெரியும், அதனால்தான் அம்முவை அம்மாவின் ரூமுக்கு வரும்படி கூறினேன். இப்பொழுது அவள் அங்கேதான் இருப்பாள், நீங்கள் அனைவரும் உங்களின் சந்தேகத்தை அவளிடம் கேட்கலாம், ஆனால் எக்காரணத்தை கொண்டும் உங்களின் சதி திட்டங்கள் என் அம்மாவிற்கோ, அம்முவுக்கோ தெரியக்கூடாது.

காரணம் வேறொன்றும் இல்லை, என் தாயார் இந்த அசிங்கத்தை எல்லாம் தாங்கமாட்டார், அவர் இதுவரை தன் மூன்று மருமகள்கள் குணக்கேடு உள்ளவர்கள் என்று மட்டும்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார், நீங்கள் இதை பற்றி வாயை திறந்தால் நான் உங்களின் இதில் உங்கள் பங்கை பற்றியும் கூறவேண்டியிருக்கும், அதன் பிறகு இப்படி ஒரு பொறுக்கியுடன் கைகோர்த்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்க நினைத்த உங்களை என்னவென்று நினைக்கத்தோன்றும் என்று நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.

அப்புறம் அம்முவுக்கு ஏன் தெரியக்கூடாது என்று கூறினேன் என்றால் ஏற்கனவே நீங்கள் போட்ட ஆட்டத்தில் உறவுகள் மீதான நம்பிக்கையே அவளுக்கு போய்விட்டது, இதில் நீங்கள் போட்ட இந்த ஆட்டம் தெரிந்தால்......

அதுமட்டுமல்ல அவளிடம் உங்கள் பேச்சு எல்லைக்குள் இருக்க வேண்டும். என்றவன் வழியை விட்டு விலகி, அவர்களை போகும் படி செய்கை செய்தான்.

அனைவரும் அங்கு படையெடுத்தனர்.

தன் அத்தையுடன் பேசிக்கொண்டிருந்த அபி, இவர்கள் அனைவரும் சேர்ந்து வருவதை பார்த்து புரிந்துகொண்டாள்.

அவர்களை பார்த்து எழுந்து நின்றாள்.

" அபி உண்மையில் உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா ? என்றாள் அம்பிகா.

இல்லை என்பதுபோல அவள் தலையை ஆட்ட,

" இப்படித்தான் மாப்பிளை பிடித்திருக்கிறதா என்று கேட்ட போது பிடித்திருப்பதாக தலையை ஆட்டினாய், நாங்களும் வெட்கத்தில் பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்து அத்தனை ஏற்பாட்டையும் செய்தோம், ஆனால் இப்போது பிடிக்கவில்லை என்று தலையை ஆட்டுகிறாய், உனக்கு வாய் இல்லையா என்ன ? வாயை திறந்து சொல்லி தொலை " என்றாள் அம்பிகா கோபமாக.

மூன்று பேரில் அபி பெரிதும் பயப்படுவது அம்பிகாவுக்குத்தான், இப்போது அவள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் வார்த்தை வாயுக்குள் சிக்கியது. அவளின் பார்வை ரிஷியை தேடியது. இறுக மூடிய கையை பின்னால் கட்டியபடி வாசல் அருகில் நின்றிருந்தான் அவன்.

அவனை பார்த்தவள் அவன் கண்ணை பார்த்தாள், அது தைரியம் சொன்னது, அது இவளுக்கா? இல்லை அவனுக்கேவா ?என்று தெரியாத ஒரு சிறு குழப்பம் அபிக்கு.

" பிடிக்கவில்லை " என்றாள் அபி ரிஷின் கண்ணை பார்த்துக்கொண்டே.

" ஏன் ? ஏன் பிடிக்காமல் போய்விட்டது ? உன்னிடம் கேட்டுதானே எல்லாம் ஏற்பாட்டையும் செய்தோம், ஒரு கல்யாணம் என்றால் அதை கெடுக்க நாலு பேர் கிளம்பத்தான் செய்வானுங்க, அதற்காக கண்டவன் பேச்சை கேட்டுக்கொண்டு மாறி மாறி பேசிவியா ? " என்றாள் அம்பிகா. சத்தம் கூடியிருந்தது.

" யாருடைய பேச்சையும் கேட்டும் அவசியம் எனக்கில்லை, எனக்கே நல்லது எது ? கெட்டது எது என்று யோசிக்க தெரியும், லூசுப்பய, பொறுக்கி நாய், அவனை எல்லாம் நிற்க வைத்து அறு.... வெட்ட வேண்டும்." என்று பல்லை கடித்தாள் அபி.

அவளிடம் இருந்து திடீரெண்டு வெளிப்பட்ட கோபத்தின் வேகத்தை பார்த்த அம்பிகா கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தாள்.

" சரி அவன் பொறுக்கி, அதனால் இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம், அதோடு நிற்க வேண்டியதுதானே, என் தங்கைக்கு பேசிவைத்திருப்பவர் என்று தெரிந்தும் ரிஷியை திருமணம் செய்து கொள்ள எப்படி சம்மதம் சொன்னாய், நீயாக சம்மதித்தாயா ? இல்லை யாராவது உன்னை கட்டாயபடுத்தினார்களா ? " என்று கேட்டாள் பானு.

" என்னை யாரும் கட்டாயப்படுத்தி எதையும் செய்யவைக்க முடியாது, நான் சின்ன குழந்தை கிடையாது " என்றவள் நின்ற அத்தனை பேரையும் தான்டி போய் வாசலில் கையை பின்னுக்கு கட்டிக்கொண்டு நின்றிருந்த ரிஷியின் கையை பிடித்து தன் கையை அவன் கையோடு இணைத்து கொண்டு நின்றாள்.

எங்கே இவர்களின் பேச்சில் பயந்து கல்யாணத்திற்கு மறுத்து விடுவாளோ என்று பயந்து மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு நின்ற ரிஷி அபியின் செய்கையில் நிம்மதி அடைந்து பெரிதான புன்னகையுடன் அவனும் அவள் கையையை அழுத்தமாக பிடித்தான்.

" என்ன உங்கள் சந்தேகம் எல்லாம் தீர்ந்ததா ?" என்றான் ரிஷி.

" ரிஷி எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு, கேட்கலாமா ?" என்றான் கண்ணன் திடீரெண்டு.

தன் அண்ணிகளிடம் இருந்து மட்டுமே எதிர்ப்பை எதிர்பார்த்த ரிஷிக்கு கண்ணனின் கேள்வி குழப்பத்தை தந்தது.

" ம் கேள் " என்றான் ரிஷி புருவத்தில் விழுந்த முடிச்சுடன்.

" நம் வீட்டின் பாகபிரிவினை பற்றி பெண்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் நம் அனைவருக்கும் தெரியும், குறிப்பாக உனக்கு நன்றாக தெரியும், ஏனென்றால் அவளுக்கு மட்டும் இல்லை, அவள் சொத்துக்கும் நீ தான் கார்டியன், அப்படியிருக்க நீ இவளை திருமணம் செய்ய நினைப்பது அவள் பணத்துக்காக இருக்கலாம் இல்லையா ?" என்றான் கண்ணன்.

ரிஷி அவன் கேள்வியில் அதிர்ந்து நிற்க
" வாயை கழுவுங்கள் கண்ணன் அத்தான், எல்லாவற்றையும் பணத்தோடு முடிச்சி போட கூடாது. யாரை பார்த்து என்ன கேள்வி கேட்டிர்கள் ? சின்னத்தான் அப்படிப்பட்டவர் இல்லை, கடவுளே வந்து சொன்னாலும் அவரை நான் நம்புவேன்.

ஏற்கனவே எனக்கு நன்றாகவே தெரியும் நீங்கள் சொல்லும் சொத்து கணக்கை பற்றி. நான் பைனான்சியல் அட்வைஸ்சர் கம் சார்ட்டட் அக்கவுண்ட்டர் , எனக்கு தெரியாமல் இருக்குமா என் வீட்டின் சொத்துக்கணக்கை பற்றி." என்றாள் அபி.

அனைவரும் அமைதியாகிவிட, ரிஷி அவளின் முகத்தை கையில் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டு " தட்ஸ் மை ஏஞ்சல்" என்றான் பெருமையாக. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர் சந்தோசமாக. பிறகு

" உங்கள் அனைவரின் சந்தேகம் தீர்ந்தது என்று நினைக்கிறேன் " என்றான் ரிஷி.

" இல்லை, எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருக்கு, பார்ப்பவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அழகை கொண்ட என் தங்கையிடம் இல்லாத எது, இந்த அபியிடம் உள்ளது. அவளும் அவளின் உடையும், ஜோடாபுட்டி கண்ணாடியும், கொண்டையும். எது உங்களை ஈர்த்தது கொழுந்தனாரே " என்றாள் பானு நக்கலாக.

" என் குழந்தையை பற்றி இப்படி பேச யாருக்கும் உரிமை இல்லை " என்றார் கற்பகம்மாள் பட்டென்று.

இவ்வளவு நேரம் நிமிர்ந்து நின்ற அபி இப்போது கொஞ்சம் சோர்வடைந்தாள். பானுவுக்கு அனுபவம் பேசியது.. ரிஷியை பற்றி ஏதாவது கூறினாள் இவள் இப்படித்தான் கொதிப்பாள், ஆனால் அவளை பற்றி பேசினால் ?" என்று அப்படி தாக்கினாள்.

சிரித்துக்கொண்ட ரிஷி "இப்போதுதானே கூறினேன் அம்முவை ஏஞ்சல் என்று. என் அம்மு என் தேவதை. அப்புறம் அண்ணி நல்லபாம்பு கூட பார்க்க மிக அழகாக இருக்கும், அதற்காக அதனுடன் வாழ்க்கை நடத்த முடியுமா ? என்னண்ணா ?" என்று கேட்டான் ரிஷி பானுவின் கணவனை பார்த்து.

அவன் பதிலேதும் கூறாமல் வேறுபக்கம் திரும்பி கொள்ள பானு அவனை முறைத்தாள்.

" என்னை ஏன் முறைக்கிறாய் ? நான் தான் ஏற்கனவே சொன்னேனே, அவனிடம் வாய் கொடுக்காதே என்று, இத்தோடு விட்டானே என்று சந்தோசப்படு, வா போகலாம் " என்றவன் முன்னே நடந்தான், அனைவரும் அவன் பின்னே சென்றனர்.

" அம்மா நாங்கள் போயிட்டுவருகிறோம் " என்ற மகனையும், மருமகளையும் உச்சி முகர்ந்து வாழ்த்தி அனுப்பினார் கற்பகம்மாள். இருக்காதே பின்னே அவரின் இத்தனை வருட ஆசை அல்லவா இது.
***********

அணைத்து விதமான பொருட்களும் விற்கப்படும் நகரின் பிரபல கட்டடத்தின் முன் ரிஷி காரை நிறுத்தினான்.

" அம்மு உன் பிரெண்ட் ஜானுவை வேண்டும் என்றால் உனக்கு துணைக்கு வரச்சொல், இப்போது வேண்டாம் ஒரு ஒருமணி நேரம் கழித்து. இப்போது நான் உனக்கு என் தரப்பில் இருந்து கொடுக்கவேண்டியதை வாங்கப்போகிறேன். புடவை etc.. " என்றான்.

உடனே அபி தன் போனில் நம்பரை டயல் செய்வதை பார்த்தவன் " அம்மு இப்போது ஏன் போன் செய்கிறாய், நான் உனக்கு எடுக்க போகும் அனைத்தையும் நான்தான் செலக்ட் பண்ணுவேன், சாரி எடுக்கும் போது மட்டும் நீ என்னுடன் வரலாம், அதுவரை உனக்கு தேவையான பொருட்களை வாங்கு "என்றான்.

" நீங்கள் எல்லாம் வாங்கி வரும் வரை நான் தனியேவா சுற்றிக்கொண்டிருப்பேன், அதுமட்டும் இல்லாமல் அவளுக்கு இப்போது போன் செய்தால்தான் ஒருமணி நேரத்திற்குள் கிளம்பவே செய்வாள் " என்றாள் அபி.

" சரி சரி செய். நீ உனக்கு தேவையான உடையை பார், நான் ஒரு அரைமணிநேரத்தில் வந்து விடுகிறேன் " என்றவன் அவளை டிரஸ் செக்சனில் விட்டுட்டு அவன் கோல்ட் செக்சனுக்கு சென்றான்.

சொன்னமாதிரி அரைமணி நேரத்தில் வந்தவன் அங்கே குவிந்து கிடக்கும் டிரஸ் வகைகளை பார்த்து " என்ன கடையை காலி செய்ய போகிறாயா?" என்றான் கிண்டலாக.

" ம் ஆமாம், நான் என் ட்ரெஸ்ஸுப் ஸ்டைலை ச்சேன்ஞ் பண்ண போகிறேன். " என்றாள் அவள் ஒரு உடையை தன் மேல் வைத்து பார்த்தபடி.

" ஏன் இந்த மாற்றம் ?" என்றான் ரிஷி சிரித்தபடி.

" நான்தான் ஏற்கனவே கூறியிருந்தேனே, எனக்கு திருமணம் நடக்கும் போது நான் என் ஸ்டைலை மாற்றிக்கொள்வேன் என்று " என்றாள்.

" ஆனால் உனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இரண்டு வாரம் ஆகிவிட்டதே, நீ இன்று டிரஸ் எடுக்கிறாய் ?" என்றான் ரிஷி கேள்வியாக.

"ஆங் அவன் மூஞ்சிக்கு இந்த ஸ்டைலே போதும் என்று நினைத்தேன், அதை விடு சும்மா கேள்வி கேட்காதே, நீ ஒன்றும் பில் பெ பண்ண வேண்டாம், நானே பார்த்துப்பேன்" என்று கண்ணாடி பக்கம் சென்றாள் அதே வேகத்தில் திரும்பி வந்தவள்

" சின்னத்தான் இனி நீ எனக்கு ஹஸ்பன்ட் ஆக போகிறாய், அதனால் ஏதாவது ரூல்ஸ் போடுவாயா ? எப்படி சொல்ல ஆங், இந்த டிரஸ்தான் போடணும், இப்படித்தான் இருக்கனும் என்று. ஏன் கேட்கிறேன் என்றால் நான் இப்போ ட்ரெண்ட்ல இருக்கும் ட்ரெஸ்ஸும் எடுத்து வைத்திருக்கிறேன் " என்று கேட்டாள்.

பதில் சொல்லாமல் அவளையே பார்த்தவன் அவளை சற்று ஆள் நடமாற்றம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றான்.

" உனக்கு ஏன் என்னிடம் இந்த கேள்வி கேட்க தோன்றியது அம்மு. நான் என்றுமே உன் சின்னத்தான் தான். நீ சிறுவயதில் செய்தது போல என்ன செய்தாலும், எப்படி இருக்க நினைத்தாலும், இந்த எட்டுவருடத்தில் எதையெல்லாம் நீ இழந்தாயோ ? அதை எல்லாம் ஆசை தீர நீ அனுபவித்து கொள்ளலாம்." என்றான் அவள் கன்னத்தை தடவியபடி.

அவன் கூறியதற்கு அவள் சந்தோசம் அடையவில்லை மாறாக " சின்னத்தான் இன்னும் நீ என் கழுத்தில் தாலி கட்டவில்லை, உனக்கு இன்னும் நேரம் இருக்கிறது. என் ஆசையை எல்லாம் நான் அடைவதற்காக, நான் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக என்று கிறுக்கு தனமாக எதையாவது யோசித்து இந்த திருமணத்திற்கு நீ ஏற்பாடு செய்திருந்தால் அதை உடனே நிறுத்திவிடு " என்றாள் எச்சரிப்பது போல.

" உனக்கு என்னுடன் வாழ விருப்பம் இல்லை என்றால் மட்டுமே இந்த திருமணம் நிற்கும், தவிர நீயாக எதையாவது யோசிக்காதே, வா உனக்கு என்ன வேணுமோ அதை எல்லாம் எடு " என்று முன்னே நடந்தான் அவன்.

அபி மனதில் சிறு குழப்பம் அஸ்திவாரம் போட்டது.

அதன் பிறகு அவள் ஷாப்பிங் கொஞ்சம் டல் அடித்தது.

" என்னாச்சு ? பயப்படாதே நானே பெ பண்றேன் " என்றான் ரிஷி.

" ஒன்றும் வேண்டாம், வா பில் போடலாம், எடுத்ததை எல்லாம் தைக்க கொடுக்கவேண்டும் " என்று பில் போடும் செக்சனுக்கு செல்ல திரும்பினாள்.

அவள் கையை பிடித்து நிறுத்தியவன்
" இன்னும் ஷாப்பிங் முடியவில்லை, உனக்கு முகூர்த்த புடவை வாங்க வேண்டும் வா " என்று அழைத்துசென்றவன்

" உனக்கு பிடித்ததை எடு " என்றான்.

"இல்லை " என்றாள்
" என்ன இல்லை " என்றான் அவன் கண்ணை சுருக்கி.

" நான் எடுக்க மாட்டேன், உனக்கு பிடித்ததை எடு " என்றாள் முகத்தை திருப்பிக்கொண்டு.

" என்னாச்சு உனக்கு ? " என்றான் எரிச்சலாக.

" உனக்கு பிடித்ததை எடுத்து தா என்றேன், ஏதோ புரியாத பாஷையிலா பேசுகிறேன், தமிழில் தானே பேசுகிறேன்." என்றாள் அபி.

" ஓஒ நீ அப்படி வரியா? நான் நீ கோபத்தில் ஏதோ சொல்கிறாய் என்று நினைத்தேன் " என்றவன் தேவையான சாரியை எடுத்தான்.
அதே நேரத்தில் காட்டனில் இவளும் சில புடவைகளை எடுத்து எல்லாவற்றையும் இவனிடம் வந்து கொடுத்தாள்,

" இந்தா இதையும் சேர்த்து பில் போடு, அப்போதான் நீ அடங்குவ ? அதுமட்டும் போதாது எல்லாவற்றுக்கும் சரியான பிளவுஸ் தைக்க கொடுத்துவிடு, அளவு கொடுக்க மட்டும் நான் வருகிறேன். பர்ச்சஸ் முடிந்துவிட்டதா ? ஜானு பக்கத்தில் வந்துவிட்டாள், நாங்கள் இருவரும் பார்லர் போக போகிறோம்." என்றாள் அபி.

" ஏன்டி உனக்கு நான் ப்ளவுஸ் தைக்க கொடுக்கணுமா ? எல்லாம் நேரம்தான்டி, போ, பார்லர் போய் நல்லா இருக்க முகத்தை கெடுத்து வைக்காதே. சீக்கிரம் வந்து சேரும் வழியை பார்" என்றான் ரிஷி.

" இந்தா கார்ட். பில் பெ பண்ணு, நான் கேஷ் வைத்திருக்கிறேன் " என்று கார்டை நீட்டினாள்.

" ஒன்றும் தேவையில்லை, அம்மா உனக்கு என்று பணம் தந்தார்கள் " என்றான்.

கார்டை கைப்பைக்குள் வைத்துவிட்டு ஜானுவை தேடி போனாள் அபி.

ஜானுவுக்கு நம்பவே முடியவில்லை " உண்மையாகவா ? என்னால் நம்பவே முடியவில்லை " என்று அபியை கிள்ளி பார்த்தாள். அவள் அலற

" உண்மைதான், அபி நம் பிரெண்ட்ஸ் எல்லோரும் நைட்தான் வந்து இறங்குவார்கள், நாம் இதை சர்ப்ரைஸா வைக்கலாம்." என்றாள் ஜானு.

" அவர்களுக்கு மட்டுமா சர்ப்ரைஸ், யாரெல்லாம் என்ன பேசப்போகிறார்களோ ? ஏன் ஜானு எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?" என்றாள் அபி.

" ஏன்னா உனக்கு மூளை இருக்கும் அளவுக்கு அதை பயன்படுத்த தெரியவில்லை, யாரை பார்த்தாலும் பயம். வீட்டில் ஹன்சமா ஒரு ஆளை வைத்துக்கொண்டு யாரையோ கல்யாணம் செய்ய சம்மதித்தாயே அதுக்குதான் உனக்கு மட்டும் இப்படி நடக்கிறது, சரி விடு அதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பாய், வா போகலாம்" என்றாள் ஜானு.

பியுடிசின் என்ன என்ன செய்ய வேண்டும் என்று லிஸ்ட் போட " நோ நோ எனக்கு அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், என் ஸ்கின்னுக்கு ஏற்ற சில நச்சுரல் கிரீம், அப்புறம் சில பேசிக் மேக் அப் பற்றி சொல்லித்தந்தால் போதும் " என்றவள் அவர்கள் சொன்ன டிப்ஸை கேட்டுக்கொண்டு கிளம்பினாள்.

" டீ வந்ததற்கு கையில் மெஹந்தியாவது போட்டுக்க " என்றாள் ஜானு.

" மானு அழகாக போடுவாள், நைட் போட்டுக்கொள்ளலாம் " என்றாள் அபி.

" இல்ல, இல்ல, அவள் வர விடியக்காலை ஆகிவிடும், மெசேஜ் போட்டா, நீ வா" என்று இழுத்து போனவள்

" இவளுக்கு மணமகள் மெஹந்தி போட வேண்டும், அதாவது கை முழுவதும் மெஹந்தி, அதில் இவளுடைய வருங்கால கணவனின் பெயர் ஒளிந்திருக்க வேண்டும் " என்றாள் ஜானு.

" சீரியல் பார்த்து வந்த ஐடியாவா ?" என்று சிரித்த அந்த பெண்மணி பெயரை கேட்டாள்.

" ரிஷி " என்றாள் ஜானு.

" இல்லை, ரிஷி இல்லை, நந்து " என்றாள் அபி சிறு வெட்கத்துடன்.

பார்லர் பெண்மணி விழிக்க அவர் முழு பெயர் " ரிஷிநந்தன் " என்றாள் அபி.

" ஒன்று செய்யலாம் இப்போழுது போட்டால் உங்களுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும், நைட் வீட்டில் வந்து போட்டுவிடுகிறேன், அட்ரெஸ்ஸை தந்துவிட்டுப்போங்கள் " என்றாள் பார்லர் பெண்மணி.

ஒருவழியாக அனைத்து பர்சேசிங்கையும் முடித்துவிட்டு ஜானுவை வீட்டில் இறக்கிவிட்டு விட்டு வீட்டுக்கு போய் காரை அனுப்புவதாகவும், இன்றே கல்யாணதிற்கு வர வேண்டும் என்றும் இருவரும் அவளை அழைப்பு விடுத்துவிட்டு தங்கள் வீட்டிற்கு சென்றனர்.

அபி ஜானுவை அழைத்தது நட்பில், ஆனால் ரிஷி அழைத்தது வேறு காரணத்திற்காக, அவனுக்குள் ஒரு படபடப்பு இருந்துகொண்டே இருந்தது இந்த திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிய வேண்டும் என்று.
 

banumathi jayaraman

Well-Known Member
யப்பா இவளுகளுக்கெல்லாம் இருப்பது வாய்தானா?
இல்லை சாக்கடையா?
ரிஷியின் பயம் நியாயமான ஒன்றுதான்
எங்கே வித்யாவை இந்த கூட்டணியில் காணோம்?
இவ புருஷனுக்குத்தான் அபி முதலில் ஹெல்ப் பண்ணப் போறாள்ன்னு முன்னாடியே தெரிஞ்சு வித்யா அடக்கி வாசிக்கிறாளோ?
 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
ஒரு வழியா அபி தைரியமாக
பேசிட்டா
ஆனாலும் கொஞ்சம் குழப்பம் இருக்கோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top