Uyirin ularal - episode 10

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 10

" அம்மும்மா, பெரியம்மா உங்களை கூப்பிட்டாங்க " என்று அழைத்தார் அன்னம்மாள்.

" இதோ வருகிறேன் " என்று கற்பகம்மாள் அறைக்குள் சென்றாள் அபி. அவள் காலின் காயம் எல்லாம் ஆறிவிட்டது.

அங்கே ரிஷியும் இருந்தான், ஆனால் அவன் கவனம் முழுவதும் அவன் கையில் இருந்த போனில் இருந்தது.

" அத்தை " என்று அருகில் போனவளை தன்னுடன் அமரவைத்துக்கொண்டார் கற்பகம்மாள்.

" அம்மு, உனக்கு நாங்கள் மாப்பிளைப்பார்ப்பது தெரியும் இல்லையா ?" என்று கேட்டார்.

" ம் தெரியும் அத்தை " என்றாள் அபி.

" தரகரிடம் உன் போட்டோவை கொடுத்தோம் செல்லம், ஆனால் அவர் கொஞ்சம் நல்ல போட்டோ இருந்தால் கொடுக்க சொன்னார்" என்றார் அவர்

" ஏன் அந்த போட்டோவுக்கு என்னவாம் ? என்னிடம் உள்ளதிலேயே பெஸ்ட் போட்டோ அதுதான் " என்றாள் அபி.

போனை பார்த்துக்கொண்டிருந்த ரிஷி சத்தம் இல்லாமல் ஊமை சிரிப்பு சிரித்தான்.

அதை பார்த்த அபி கட்டிலில் இருந்த தலையணையை எடுத்து அவன் மேல் வீசினாள்.

அதை தடுத்தவன் அந்த தலையணையை பிடித்து முதுவுக்கு பின் வைத்துக்கொண்டான்.

" சும்மா இரேண்டா, அம்மு அவனை விடு, இங்கே பார்... நீ எவ்வளவு அழகு என்று எனக்கு தெரியும், எதுக்கு உனக்கு இப்படி ஒரு முகமூடி. உன் உண்மையான அழகை நீ வெளிக்காட்டினால்தான் நல்ல மாப்பிளையை பார்க்கலாம். " என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே குறிக்கிட்டாள் அபி.

" போங்கத்தை இல்லாத அழகை எங்கேயிருந்து வெளிக்கொண்டுவருவது. அதுமட்டுமில்லை என்னை என் குறைகளோடு ஏற்றுக்கொள்ளும் ஒரு துணைதான் எனக்கு வேண்டும், அழகுக்கு முக்கியம் கொடுக்கும் யாரும் எனக்கு வேண்டாம் " என்றாள் அபி.

" வாயிலேயே போடுவேன், ஆரம்பிக்கும் முன்பே அபசகுனமாக பேசாதே. உங்கள் இருவருக்கும் இடையில் எதில் ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ ? இப்படி பேசுவதில் மற்றும் 100% இருவருக்கும் பொருத்தம். அவனும் இதையேதான் சொல்கிறான். ரிஷி உங்கள் சண்டையை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு இவளை இந்த கண்ணாடி, கொண்டை எல்லாம் இல்லாமல் ஒரு போட்டோ எடு, சீக்கிரம் உன் அண்ணி வெளியே போயிருக்கிறாள். அவள் திரும்பி வருவதற்குள் எடுத்து முடி, அபி போம்மா இதில் பிடிவாதம் பிடிக்காதே " என்றார் அவர் கண்டிப்புடன்.

மனமில்லாவிட்டாலும் ரிஷியுடன் கிளம்பினாள் அபி. அவளுடைய அறைக்கே அழைத்துச்சென்றான் ரிஷி.

அவன் எதுவும் சொல்லாமல் போனை வைத்துக்கொண்டு போட்டோ எடுக்க ரெடியாக நின்றான். இவளும் அசையாமல் அப்படியே நிற்க,

" என்ன, இப்படியேவா போட்டோ எடுக்க ? போய் ரெடியாகி வா " என்றான் ரிஷி அழுத்தமாக.

" முடியாது போடா " என்றாள் அபி.

" ஏய் என்னை டா போட்டு பேசாதே, அப்புறம் நானும் பேசுவேன் " என்றான் ரிஷி.

" அப்படிதான் பேசுவேண்டா, என்ன பண்ணுவ, போட்டோவும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், அத்தையை நீயே சமாளி. ரொம்ப நல்லவன் மாதிரி பேசுற, என்னை அன்னைக்கு நீ டீ போட்டு பேசினல்ல, மாமாவிடம் வாங்கியது மறந்துபோயிட்டு உனக்கு. " என்றாள் கோபத்தில்.

"நீ மட்டும் ரொம்ப நல்லவள் பார், முதலில் டா போட்டு பேசிவிட்டு, பதிலுக்கு நான் பேசியதும், என் அப்பாவிடம் சொல்லிக்கொடுத்து அடிவாங்கி தந்தவள் தானே" என்றான் அவனும் பழையகோபத்தில்.

" பொய் சொல்லாதே, அடிக்கும் முன்பே நான்தான் முதலில் தப்பு பண்ணினேன் என்று சொல்லி அடிக்கவிடாமல் தடுக்கல " என்றாள்.

" ஆமாம் தடுத்துட்டாலும், அவள் சின்ன குழந்தை, பச்சை மண் அப்படிதான் பேசுவா, நீ தாழ்ந்து போனா என்ன ? என்று என்ன திட்டுவாங்கினேன், அந்த திட்டுக்கு பேசாமல் இரண்டு அடி வாங்கியிருக்கலாம், சரி விடு இப்போ எதுக்கு பழசை போட்டு கிண்டுற, உன்னை டீன்னு கூப்பிட்டது தப்புதான், ஸாரி. ஆனா மகளே இனி எப்பவாச்சும் வா, போன்னு பேசு அப்புறம் இருக்கு உனக்கு. ம் சீக்கிரம் ரெடி ஆகு. உன் ஆசை அருமை அக்கா வந்திட போறாங்க, அப்புறம் மேடம் என்னிடம் பேச கூட மாட்டிங்க " என்றான் ரிஷி.

"க்கும் " என்று முகத்தை திருப்பிக்கொண்டு போனவள் ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தாள். மற்றோரு தொழ தொழ உடைக்கு மாறியிருந்தாள். முகத்தை கழுவி கொஞ்சம் பவுடரை ' இதுதான் பவுடர் ' பார் என்று முகத்திற்கு காட்டியிருந்தாள். ஒரு சின்ன பொட்டும் வைத்திருந்தாள்.

" என்ன இது " என்றான்.

" நீ ஸாரி நீங்கதானே ரெடி ஆகு என்றிர்கள்" என்றாள்.

" கடவுளே " என்று தலையில் அடித்தவன் அவளை நெருங்கி சென்றான்.

அவள் புரியாமல் விழிக்க அருகில் சென்றவன் அவள் முகத்தை மறைத்திருந்த கண்ணாடியை கழற்றினான்.

" என்ன செய்யுற ஸாரி செய்யுறீங்க " என்றாள் அவனை முறைத்தபடி.

" ஸ்ஸு " என்றவன் அவள் இறுக்கமாக முடிந்துவைத்திருந்த கொண்டையை தளர்த்தினான்.

" என் முடியை ஏன் தொடுறீங்க, திரும்ப அதை கட்ட எவ்வளவு கஷ்டம் தெரியுமா ?" என்றாள் சலிப்பாக.

" எதுவுமே கஷ்டப்படாமல் கிடைக்காது அம்மு " என்றான்.

" எனக்கு ஒரு மண்ணும் வேண்டாம் " என்றாள் அவள் எரிச்சலாக.

" உன் அத்தையிடம் யார் சொல்வது இதை. அம்மு உன் முடி முன்புக்கு ரொம்ப அதிகமாக வளர்ந்திருக்கிறது. உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு முடி வளர்கிறது. உன் பிரியமான பானுக்கா இதை மட்டும் எப்படி விட்டுவைத்தார் " என்றான் சிரித்துக்கொண்டே.

" கண்ணை வைக்காதிங்க, அவர்களிடம் நான் எப்போது என் முடியை காட்டினேன், அப்படியே பார்த்து அவர்கள் இதை வெட்ட சொல்லியிருந்தாலும் வெட்டியிருக்க மாட்டேன். வெட்டினால் மாமாவுக்கு பிடிக்காது " என்றாள்.

" உன் மாமாவுக்கு இது மட்டுமா பிடிக்காது, நீ இப்படி பெண்ணுக்குள்ள எந்த அலங்காரமும் இல்லாமல் ஒரு சன்னியாசி மாதிரி இருப்பதுவும்தான் பிடிக்காது " என்றான்.

" மாமா இருந்திருந்தால் நான் ஏன் இப்படி ஆக போகிறேன் " என்றாள் அவள் பதிலுக்கு.

" அப்பா, ' எனக்கு அப்புறம் அவளை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் 'என்றார். ஆனால் நான் அவருக்கு கொடுத்த வாக்கில் இருந்து தவறிவிட்டேன். எல்லாமே எனக்கு தெரியாமல் என்னை மீறி நடந்துவிட்டது. அம்மு எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரமாட்டியா உன் வாழ்க்கையை கலர்புல்லா மாற்றி அமைக்க" என்று கேட்டான்.

" ரொம்ப பீல் பண்ணாதீங்க சின்னத்தான், நான் எப்போதும் இப்படியே இருக்க மாட்டேன். எனக்குன்னு ஒரு பார்ட்னர் அமையும் வரைதான் இப்படி இருப்பேன். அப்புறம் நான் எல்லோரையும் போல மாறிப்பேன்." என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.

அவளிடம் பேசிக்கொண்டே அவளின் சிகையை பின்னிவிட்டவன் " பார் நீ இப்போதே மாறிவிட்டாய் " என்று கண்ணாடி பக்கம் அவளை அழைத்துச்சென்றான்.
" நீ இப்படி சந்நியாசியாக இருப்பதும் நல்லதுதான், இல்லையென்றால் உன் பின்னாடி ஒரு பெரும் கூட்டமே அலையும் " என்றான் சிரித்துக்கொண்டே.

" போதும் போதும் கிண்டல் " என்றாள் அபி முகத்தை திருப்பிக்கொண்டு எரிச்சலுடன்.

ரிஷி அருகில் இருந்த போனை எடுத்து அதை பின்னாடி மறைத்து வைத்துக்கொண்டு " கோபப்படாதே அம்முக்குட்டி கொஞ்சம் சிரி " என்றான்.

முகத்தை திருப்பிக்கொண்டு நின்ற அபி அவன் கையில் போன் இருந்தது தெரியாமல் நேராக பார்த்தாள். உடனே அவள் கழுத்தருகே தன் முகத்தை கொண்டுவந்தவன் அவள் எதிர்பாராத வண்ணம் க்ளிக் செய்தான். அபி கண்ணில் மிரட்சியுடன் இருந்த அந்த இருவரின் செல்ப்பி பார்க்க மிக அழகாக இருந்தது.

" ரொம்ப அழகா இருக்குல்ல " என்றான் ரிஷி ரசனையுடன்.

" எங்கே பார்ப்போம்" என்று போனை அவன் கையிலிருந்து ஆர்வத்துடன் வாங்கியவள்
" ஆமாம் ரொம்ப அசிங்கமா இருக்கு " என்று அவன் எதிர்பார்க்காத நேரம் அதை அழித்துவிட்டாள்.

" ஏய் அபி எருமை என்ன பண்ணின, உன்னை " என்று பதறியவன் அவள் தலையில் தட்டினான்.

ரிஷி அவள் பெயரை சொல்லி அழைக்கவேமாட்டான். அவனுக்கு எப்போதும் அவள் அம்முதான், கோபம் அதிகமானால் மட்டும் அபி என்று அழைப்பான்.

" என்ன அபி? அபியாம் அபி. செல்ஃபீ எடுக்கிறார். இருக்கும் சிக்கல் போதாது என்று இது வேறு. " என்றாள் அபி.

" குரங்கே, உனக்கு எல்லாம் சிக்கல்தான். செல்ஃபீ எடுப்பது ஒரு தப்பா ? யார் யாருடனும் எடுக்கலாம். அழகான ஒரு செல்ஃபீயை அழித்துவிட்டு பேசுகிறாள் பேச்சு. என்னுடன் ஒரு செல்ஃபீ எடுத்தால் குறைந்துவிடுவாயா? போ, போய் போஸ் கொடு, போட்டோ எடுக்கிறேன். அதை பார்த்து நல்ல மாப்பிளையை எவனாவது வருவான். கல்யாணம் செய்து அவனுடனே செல்ஃபீ எடு. நான் யார் உனக்கு ? எவனோ தானே." என்று பொரிந்தான் ரிஷி கோபத்தில்.

" உங்களை போய் போட்டோ எடுக்க அனுப்பினாங்களே அத்தை, அவர்களை சொல்லணும். நீங்கள் போட்டோ எடுக்கவும் வேண்டாம், நான் எவனையும் கட்டவும் வேண்டாம். போங்க போய் வேறு வேலை இருந்தால் பாருங்க." என்றாள் அவளும்.

" என் வேலையைதான் பார்க்கிறேன், சரியாக நில் "என்றவன் அவளை இழுத்து ஒரு இடத்தில் நிறுத்தி அங்கிள் பார்த்தான். அவள் திரும்ப,

" உன் அருமை அக்கா வரும் கார் சத்தம் கேட்கிறது, சீக்கிரம் " என்றான்.

கோபத்தில் அவள் இவனை முறைத்தாள்.
" சும்மாவே உனக்கு முட்டை கண், இதில் முறைக்கிறேன் என்று என்னை பயங்காட்டாதே, சீக்கிரம். நான் என் பிரியாவுடன் வெளியே போகவேண்டும் " என்று அவளை சீண்டினான்.

அவளுக்கு கோபம் வந்தாலும், உண்மையில் அவன் பிரியாவுடன் வெளியேதான் போகிறான் போல, என்று நினைத்து நேரத்தை கடத்தாமல் நேராக ஒரு சன்ன முறுவலுடன் நின்றாள்.

அவளை தன் போனில் சிறைபிடித்தவன் அங்கிருந்து செல்ல திரும்பினான்.

" சின்னத்தான் ஒரு நிமிஷம் " என்றாள்
திரும்பாமல் நின்றான் ரிஷி.

" ஏன் அப்படி பேசினீங்க ?" என்று கேட்டாள் அவள்.

" என்ன பேசினேன், உண்மையை பேசினேன். நீ என்ன நினைத்துக்கொண்டு என்னை ப்ரியாவை கட்டிக்க சொல்கிறாய்? அப்புறம் நீ யாரையோ கட்டிக்க சம்மதமும் சொல்லியிருக்கிறாய் ? இது இரண்டில் எது நடந்தாலும் அப்புறம் என்ன ஆகும் தெரியுமா ? நான் சொன்னதுதான் நடக்கும், அதான் 'நான் எவனோ' என்றேனே அதுதான் நடக்கும். உனக்கு சொன்னால் புரியாது, பட்டால்தான் தெரியும்." என்றான்.

" எதுக்கு பட்டுத்தான் தெரிஞ்சுக்கணும் ? அதான் எனக்கு அதெல்லாம் பழகிபோயிட்டே. ஏற்கனவே மூன்று அத்தானும் யாரோ போலத்தானே என்னிடம் நடந்துகொள்கிறார்கள் அது போலதான் நீங்களும் " என்றாள் அவள்.

" அப்படியா ? சரி உன் மூன்று அத்தானும் மாறியதுபோல நானும் மாறினால் தாங்குவியா என்று பார்ப்போம், அப்புறம் தெரியும்." என்றவன் நில்லாமல் சென்றுவிட்டான்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது அபிக்கு சற்று குழப்பமாக இருந்தது.

***********

மறுநாள் தரகரிடம் அபியின் போட்டோவை கொடுக்க தயாராக இருந்தார் கற்பகம்மாள். அப்போதுதான் தரகர் அபியை பற்றி தவறாக கேள்விப்பட்டதாக கூறினார். அபி மனநிலை சரியில்லாதவள் என்று கூறிய அந்த தரகரிடம் அவளின் போட்டோவை கொடுக்க கற்பகம்மாள் விரும்பவில்லை.

மகனை அழைத்தவர் " நேரமே சரியில்லை, அம்முவும் போட்டோ எடுக்கும் போதே மறுத்தாள், நீயோ ஏதோ வேண்டா வெறுப்பாக எடுத்தது போல கொண்டுவந்து தந்தாய், இப்போது பார் அந்த தரகர் என்னென்னமோ பேசிவிட்டுப்போகிறார், இந்த போட்டோவே வேண்டாம். அவளுக்கு என்று இனியா யாரும் பிறக்கப்போகிறான். எங்கேயாவது இருப்பான்." என்றார் வருத்ததுடன்.

தாயின் வருத்தத்தை பார்த்த ரிஷி, அபிக்கு வரன் தேட முழுமூச்சில் இறங்கினான். மேரேஜ் வெப் சைடில் பதிந்துவைத்தான், நண்பர்கள் முலமாக தேடினான், பலன் மீண்டும் மீண்டும் தோல்வியில் முடிந்தது.

ஒரு ஆறுமாதம் பெரிதாக அலட்டிக்கொள்ளாம் இருந்த அபி "உன்னால் தான் என் தங்கையின் வாழ்க்கை கெடுகிறது " என்ற பானுவின் ஏச்சிலும், பேச்சிலும் அபி நொந்து போனாள்.

எங்கேயாவது போய்விடலாம் என்று பார்த்தால் வளர்த்த குடும்பத்தின் மானம் தன்னால் கெடக்கூடாது என்று நினைத்தாள். சொல்லிக்கொண்டு போகலாம் என்று பார்த்தால் யார் அவளை விடுவது.

அபிக்குள் அடங்கியிருந்த மனப்போராட்டம் மறுபடி மேலோங்கியது. தான் எல்லோருக்கும் பாரமாக இருக்கிறோம் என்ற எண்ணமே அவளுள் வலுக்க அடிக்கடி நெகடிவாகவே பேச ஆரம்பித்தாள். நீச்சல் பயிற்சி அதிகமானது. ரிஷியை பார்த்தாலே எரிச்சல்பட்டாள். டாக்டர் அபி அடுத்த ஸ்டேஜ்க்கு போய் கொண்டிருக்கிறாள் என்று கூறியபோது ரிஷி செய்வதறியாது நின்றான்.

அவள் சின்ன குழந்தை இல்லை வீட்டில் பூட்டிவைக்க. ஒரு கம்பெனியை நடத்துபவள், நாலு இடத்திற்கு போவாள் வருவாள், போகும் இடமெல்லாம் அவளை பின் தொடர்ந்து அவளின் மனதில் நஞ்சை கலக்கும் உறவுகள் ஒருபுறம் இதை எப்படி கையாள என்று யோசித்தபடி கையில் இருந்த ஆல்பத்தை மூடிவைத்தான் ரிஷி பெருமூச்சியுடன்.
 

Srd. Rathi

Well-Known Member
அபியை ஏன் இப்படி டார்ச்சர் செய்ற பானு, பாவம் அபி, எப்பொழுது அவளுக்கு நிம்மதியா இருக்க முடியும்
 

wasee

Well-Known Member
Avala unnai thavira yaarum sariya purinjukka mudiyathu..

Ava kitta sollaama thali kattidu..

Appurama yelathukkum serthu adi vangiko;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top