uyirai tholaithaen UD 8

preethi sri

Well-Known Member
#1
makkalae likes and comments potta anaivarukkum nanri friends ..... silent readers oru varthai comment pannittu ponga paa ..... namma 10 nimisam kadhai padikarom oru 30 second oru smilie button thatradhukku ..... adhaiyum oru amukku amukkittu ponga makkaa .... :):)அங்கே அஜயும் படுக்கையில் ஏன் பேபி நீ என்ன எப்படி கூப்பிட்ட ஜெய் இன்னா நைஸ் இதுவும் அழகா தன் இருக்கு ஏன் செல்லம் நா கொஞ்சம் கோவப்பட்டாலும் உன்னால தாங்க முடியல புஜ்ஜு இனிமே நா எப்பவும் உன்கிட்ட கோவப்படமட்டன் டா நீ நல்லா நெனஞ்சு நடுங்கிட்டு இருக்கறத பார்த்தா எனக்கு எப்படி டீ கோவம் வராம இருக்கும் என்று கூறி சண்டை போட்டான் மனதில் ( விதி யாரை விட்டது நடக்க போகும் விபரீதம் அறியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து கொண்டு இரவை கழித்தார்கள் ) அடுத்த நாள் ஞாயிற்று கிழமை என்பதால் அபி வழக்கம் போல் காலை 8 மணிக்கு எழுந்து குளித்து விட்டு வெளியே வந்தால் அம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என்று தன் கேள்வி கணைகளை தொடுக்க போதும் அபி கொஞ்சம் ரெஸ்ட் குடு இந்த வாய்க்கு வீட்லயும் வந்து கேள்வியை கேட்டு தள்ற எப்படி தா உன் ஸ்டுடென்ட்ஸ் உன்ன சமாளிக்கறாங்களோ தெரியல பாவம் இப்டியே போச்சுன்னா அப்புறம் ஒருத்தரும் உன் கிளாஸ் ல இருக்க மாட்டாங்க ஆளே இல்லாத கடையில நீ டி ஆத்தா வேண்டி தான் பாத்துக்கோ என்று கலாய்க்க அம்மா வர வர நீ ரொம்ப பேசுறஆமாடி உனக்கு பதில் சொல்ல தெரியல ண்ணா ரொம்ப பேசுறேன்னு சொல்லி என்னஅமைதியா இருக்க சொல்லி சொல்லுவ பின் திருமண நாள் விழா அரேஞ்ச்மெண்ட்ஸ் பற்றி மூவரும் ஹாலில் அமர்ந்து பேச பாலகிருஷ்ணன் இந்த விழா இப்ப எதுக்கு மா அடுத்த வருடம் பார்த்துக்கலாம் என்று கூறி விட்டு திட்டுக்களை சரமாரியாக வாங்கி கட்டிக் கொண்டார் இறுதியாக சரி அபி மா உன் விருப்பப்படி எல்லாமே செய் ஆனால் சிம்பிளா செஞ்சா போதும் என்று கூறினார் சரி என்று கூறிவிட்டு மூவரும் அமர்ந்து காலை உணவை முடித்தனர்.


அப்பா என்னோட கூட வேலை செய்றவங்க உங்க கூட வேலை செய்றவங்கclose relations இவங்கள மட்டும் கூப்பிட்டாபோதும் தானே
என்று ஒரு பேப்பரை நீட்டினாள் அதுவே மிகவும் நீளமாக இருந்தது சரி ஓகே இன்னும் ஒரு மாதம் தான்இருக்கு நான் ஏற்கனவே ஹால் புக் பண்ணிட்டேன் கால் பண்ணி எல்லாத்தையும் இன் வெயிட் பண்ணனும் அம்மா அப்பா அந்த உங்க பிரண்டு மிஸ்டர் கிருஷ்ணகுமார் அவர் போன் நம்பர் தாங்க பா நானே நாளைக்கு எல்லாத்தையும் inviteபண்ணி விடுகிறேன் என்று கூறி போன் நம்பர் வாங்கிக்கொண்டாள்

'சரி அப்படின்னா நம்ம ரிலேஷன் ஒருத்தன் கல்யாணம் ஊட்டியில நானும் அம்மாவும் போயிட்டுவந்துவிடுகிறோம்'
எதுல போறீங்க
நம்ம கார்ல தான்
இது என்ன புதுசா இருக்கு நீங்க டாக்ஸி புக் பண்ணி போயிட்டு வாங்க
இல்லடா அப்படியே இன்னும் சில இடங்களுக்கு போக வேண்டி இருக்கு நானே டிரைவ பண்ணிக்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல நாளைக்கு ஒரு நாள் மட்டும் நீயே manage பண்ணிக்கோ என்று கூறிவிட்டு வெளியில் சென்றார்


அபியும் சரி ஓகே பட் மெதுவாதான் drive பண்ணனும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டால் பிறகு அம்மா நானும் போய் என்friends i invite பண்ணிட்டு வந்துடறேன் என்று கூறிவிட்டு ரெடியாகி வந்தவளை பார்க்கும் பொழுது இன்றைக்கும் அவளைக் கண்டு பெருமையாக இருந்தது நேர்த்தியாக உடை அணிந்திருந்தாள் அந்தச் சுடிதாரின் ரெட் பிளாக் நிறத்தில் அழகான வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது அடர்த்தியான முடியை ஒரு சென்டர் கிளிப் குத்தி பின்னி இருந்தாள் பிறை போன்ற நெற்றியில் நடுவே பொட்டு வைத்து அதன்மேல் சிறு கீற்றாக திருநீறு வைத்து மிகவும் அழகாக இருந்தாள். அபி மா எப்படி போற உன்னோட வண்டி தான் மெக்கானிக் செட்ள இருக்கே. ஆமாம்மா உன்னோட கார் சாவி தா செல்லம் ஒரு மூணு நாள் உன்னோட கார் வேணும் ..
சரி எடுத்துக்கோ பாதுகாப்பா drive பண்ணுடா என்று கூறிய தாயை பார்க்கும்போது தாய் பாசம் என்று மனதில் நினைத்துக்கொண்டு
அம்மா நான் அப்பாவை விட சூப்பரா drive பண்ணுவ நீங்க பயப்படாதீங்க பை பை என்று கூறிவிட்டு சென்றாள்....

முதலில் தன்னுடன் படித்த தன் தோழிகளில் வீட்டிற்கு சென்று அழைத்து விட்டு காரில் வந்து அமர்ந்த போது அக்கடா என்று ஆகிவிட்டது சரி இனி யாரை invite பண்ணனும் என்று யோசிக்கும் போதுதான் ஐயோ
என்னோட ஜெய் வீட்ல போய் சொல்லனும் இல்ல ரொம்ப சீக்கிரம் ஞாபகம் வந்துருச்சு என்று அவள் மனசாட்சி அவளை கொட்டியது .கால் செய்து பார்த்தால் கடைசி ரிங் சத்தத்திற்கு தான் போனை எடுத்தான் ஹாய் அஜி என்றான் உடனேயே ஹாய் அஜய் என்றாள் அவனுடைய போனில் அஜி டார்லிங் என்று save செய்தது அவனுக்கு நினைவு வந்தது. நீங்க இன்னிக்கு பிரியா அஜய் அப்பா அம்மா முப்பதாவது திருமண விழா சொல்லியிருந்தேன் இல்லையா அதுதான் வீட்டுக்கு வந்து invite பண்ணலாம்னு......

நான் ஆபீஸ்ல இருக்கேன் உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லன்னா ஆபீஸ்க்கு வாங்க என்றான்
இல்ல நான் ஆபிஸ்க்கு வர i will be there with in a hour என்று கூறினாள் பிறகு எங்கு வேலை செய்வது அவனுடைய அஜிக்காக காத்திருந்தான் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலுவலகத்தில் யாரும் இல்லை முக்கியமான வேலை என்பதால் ஆஃபீஸ்க்கு வந்திருந்தான்.


அஜய் அவளுக்காக காபின்க்கு வெளியே நின்று காத்திருக்க முதன் முதலில் அவனை casual உடையில் பார்த்த பொழுது அபிக்கு மனதில் ஜில்லென்று ஒரு குளிர் பரவியது அஜயின் பாடோ இன்னும் திண்டாட்டம் ஆனது

புடவையில் கம்பிரமாக தெரிபவள் இன்று சுடிதாரில் சின்ன பெண் போல தெரிந்தால்
வெல்கம் மிஸ் அபிஜித்ரா என்று கூற சாரி அஜய் சார் வீட்டுல தா வந்து invite பண்ணனும் பட் ஆபீஸ்ல வந்து invite பண்ற மாதிரி ஆயிடிச்சு கமிங் 15 தேதி விஜயா paradise சாயந்தரம் 6 மணிக்கு சார்
சார் என்ற வார்த்தை கேட்டவுடன் அஜய் கடுப்பாகி விட்டான் அவனும் கண்டிப்பா மேடம் i
will come என்று கூற அஜி அவளுடைய சுட்டி தனத்தை காட்டுகிறான் பேர்வழி என்று ஒகே
அஜய் சார் கண்டிப்பா உங்க மனைவியையும் கூட்டிட்டு வாங்க உங்க குடும்பத்துல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க சார் நா அப்போ கெளம்பரன் என்று சென்றுவிட்டாள் (அவனை கடுப்படிப்பதற்காக )
அஜய்க்கு தலையே சுழன்றது இவ்ளோ நாலா நா கல்யாணம் அனவன்னு நெனெச்சா பழகிட்டு இருந்தா அயோ காதலிக்க ஆரம்பிச்சு முழுசா மூணு மாசம்

கூட அகளையே அதுக்குள்ள என் காதலுக்கு சங்கு ஊத்திட்டாளே அடியேய் என்று அஜய் உள்ளுக்குள் கொதித்து கொண்டிருந்தான் அஜியோ காரில் விழுந்து விழுந்து சிரித்துகொண்டிருந்தாள் அஜய் செம அஜய் உங்க மூஞ்சிய பாத்தா செம காமெடியா இருக்கு சாரி பா உங்கள கலாய்க்கலாம்னு நெனச்சு தா அப்டி சொன்ன பட் யு ஆர் அமேசிங் அஜய் என்று அவன் முகத்தை நினைக்க நினைக்க அவளுக்கு சிரிப்பாக இருந்தது.

அங்கு அஜய் நீ என்ன எப்படி வேணும்னாலும் நெனச்சுக்கோ உங்க அப்பா அம்மா கிட்டயே நா பேசிக்கிறன் டீ என் மாமா அத்தை எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க ( பாவம் டா நீ இவளை கல்யாணம் பண்ணி என்ன பாடு படப்போறியோ தெரியல )
 
Advertisement

New Episodes