uyirai tholaithaen UD 21

Advertisement

preethi sri

Well-Known Member
hi friends thank u all for supporting and encouraging me chellams ; darliessss; baby maaasssss:love::love::love::love:

likes potta and comments anaivarukkum nanri friends:D:D(y) indha padhivukkum comments sollunga nanbargalae:):)

கொசுவத்தி சுருள் ஓட்டுனது போதும்னு நிகழ் காலத்துக்கு வந்துட்டோம் பா

தன் மொபைல் போன் இல் பதிவு செய்யப்பட்ட அவள் முகத்தை பார்த்தவன் அஜி ஐ லவ் யு டி நீ எனக்கு வேணும் டி திரும்ப வேணும் டி ப்ளீஸ் கண்ணம்மா என்று கூற ஓர் மனம் தன்னை தன் காதலை அசிங்க படுத்திவிட்டு சென்றவள் என்று கூற இன்னொரு மனமோ அவள் பக்கம் ஏதேனும் காரணம் இருக்குமோ என்று நினைத்தது

காலை விடிந்து எழுந்தவன் மணி பார்த்தல் மணி ஆரை காட்டியது இந்த இரண்டு ஆண்டுகளில் நிம்மதியான உறக்கமே இல்லாமல் இருந்தவன் இன்று நன்றாக உறங்கியிருந்தான் காலையில் ஏதோ
புது உற்சாகத்துடன் எழுந்தான் பழைய அஜயாக முகத்தில் பொலிவுடன் தன் நாளை தொடங்கினான் ஏதோ அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று மனதில் ஒரு பட்சி சொல்லியது

தயாராய் கண்ணாடி முன் நின்றவன் பழைய கம்பிரத்துடன் இருந்தான் அவன் மனசாட்சி டேய் அஜய் இன்னைக்கு கொஞ்சம் அழகா தெரியற என்று கூற இப்போது தாடி வைத்து முறுக்கு மீசையுடன் இருந்தான் இதுவும் அவனுக்கு தனி அழகை கொடுத்து இருந்தது
அன்று அஜி சொன்னது நினைவு வந்தது என்னோட husband handsome
charming good looking majestic என்று அவன் கன்னத்தை பிடித்து கொஞ்ச போதும் டி கல்யாணத்துக்கு முன்னாடியே கன்னத்தை பிச்சு எடுத்துறாத என்று கூறியது நினைவு வர பெருமூச்சு ஒன்றை விடுத்தான் அவனின் உஷ்ணம் அந்த எ சி அறையிலும் வெப்பம் ஏற்றியது

ஆமா என்னோட அஜிக்கு மட்டும் நா அழகா தெரிஞ்ச போதும் வேற யாருக்கும் தெரிய வேண்டாம் போடா நீன்னு மனசாட்சியை துரத்திவிட்டான்
கீழ இறங்கி வந்தவன் தன் பெற்றோர் ஏதோ சீரியஸ் ஆகா உரையாடி
கொண்டிருக்க என்ன பட்ஜெட் மீட்டிங் போடுறீங்க இவ்ளோ சீரியஸ் ஆ என்று கலாய்க்க

அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம் என்னடா வீடு கொஞ்சம் வெளிச்சம் அதிகமான மாதிரி இருக்கு என்று விசுவநாதன் அவனை வாற


இல்லடா என்னோட தங்கச்சி ஓட பொண்ணுக்கு கல்யாணம் உங்க அப்பா வழக்கம் போல வரமாட்டேன்கிறாரு ஏதோ வேலை இருக்குன்னு சொல்றாருட நீ கொஞ்சம் கன்வின்ஸ் பண்ணு

அம்மா உனக்கு தான் தங்கச்சியே கெடையாதே

அப்டி சொல்லுடா மகனே எப்படி பாயிண்ட் ஆஹ் புடிக்கறான் பாரு
உங்க அம்மாவோட பெரியம்மா பொண்ணு அதோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுது அதுக்கு நா கூட வரணும்னு அடம் புடிக்கற

என்னமா

டேய் கல்யாணம் காட்சின்னு போனாதாண்ட நமக்கு நாளைக்கு நாலு பேர் வருவாங்க
கோக்கி என்ன இது சந்தடி சாக்குல நமக்குன்னு சொல்ற

உங்க அப்பாவுக்கு வாலிபம் திரும்புதுன்னு நெனப்பு
கூறுகெட்ட குக்கர் நமக்குன்னா நம்ம பையன் கல்யாணத்துக்குன்னு அர்த்தம்

அடியேய் என்ன டி புருஷன்னு ஒரு மட்டு மரியாதை இல்லாம இப்டி பொசுக்குண்ணு சொல்லிட்ட

என்ற சொந்தக்காரங்கள போய் எதாவதுகலயாணம் காட்சிநாத பாக்க முடியுது அப்பவும் உங்க முஞ்சியவே பாக்க சொன்னா கோவம் வருமா வராதா

நீனா ஒன்னும் வர வேண்ட நா என் தம்பிய வர சொல்லி போய்கரன் என்று தடாலடியாக கூற

இப்போ எதுக்கு அவன் நானே கூட்டிட்டு போரேன் போமா போய் ரெடி ஆகு

என்ன பா இப்டி ஜக வாங்கிட்டீங்க என்று அவர் காதில் கிசுகிசுக்க டேய் உன் மாமா வந்தார்னு வை உங்க அம்மா அவங்க வீட்டுல டேரா போற்றுவாடா அப்புறம் ராத்திரி தனியாத்தான் தூங்கணும் உங்க அம்மா இல்லனா எனக்கு தூக்கம் வராதுடா அதுனாலதான் பாக் அடிச்சுட்டேன்

கணவனை சம்மதிக்க வைத்துவுடன் தன் பார்வையை மகனை நோக்கி திருப்ப

இந்த அம்மா என்ன என்ன பாக்குறாங்க

டேய் நம்ம வீட்டுக்கு எல்லா வந்திருக்காங்க ட உனக்கு கூட அவங்கள தெரியும்
பேரு சௌந்தர்யா

சேரி மா எங்க கல்யாணம்

மேட்டுப்பாளையத்துல டா

எப்ப கல்யாணம்

வர்ற சனிக்கிழமை

மா.......


சனிக்கிழமைக்கு ரொம்ப நாள் இருக்கற மாதிரி சொல்றிங்க நாளைக்கு தான் சனிக்கிழமை

சாரி டா மறந்துட்டேன்

சேரி ஒகே விடுங்க என்னோட பிரண்டு விக்ரம் இருக்கான் ல அவனோட தங்கச்சிக்கு கல்யாணம் சனிக்கிழமை சாயந்தரம் வரவேற்பு நியாயத்து கிழமை காலைல கல்யாணம்

டேய் நிறுத்து டா விக்ரம் ஒரே பையன் என்று சந்தேகமாக கேற்க

அம்மா அவன் பெரியம்மா பொண்ணுமா ஹர்ஸஷவர்தினி அவங்க வீட்ல தான் வளந்தா ரொம்ப நல்ல பொண்ணுமா
அவ என்னோட ரொம்ப கிளோஸ் மா கண்டிப்பா நா போகணும்

நம்ம குடும்பத்தோட வெளிய போய் ரொம்ப நாள் ஆச்சு சோ கல்யாணம் முடிச்சுட்டு நம்ம வெளிய எங்கயாவது போயிட்டு வரலாம் என்னப்பா சொல்றிங்க

அஜய் நீயாடா சொல்றது
இந்த இரண்டு வருசத்துல எதுக்காவுது வந்திருக்கியா அதனால தான் டா நா வேண்டான்னு சொன்ன நீயே போலாம்னு சொல்லிட்ட சோ போகலாம் என்று ஒரு வழியாக முடிவெடுத்தனர்


அம்மா முதல்ல நீங்களும் அப்பாவும் கல்யாணம் அட்டென்ட் பண்ணுங்க நா வந்து உங்கள பிக் அப் பண்ணிக்கறேன் அப்புறம் உங்கள எஸ்டேட் ல ட்ரோப் பண்ணிட்டு சாயந்தரம் ஹர்ஷ ஓட வரவேற்பு போய் நா அட்டென்ட் பண்ணிட்டு வரன் அதுவரைக்கும் நீங்க ரெஸ்ட் எடுங்க ஒகே வா

இல்லடா உனக்கு ரொம்ப அலைச்சலா

ஒரு அலைச்சலும் இல்ல மா மேட்டுப்பாளையம் வரைக்கும் நா டிரைவ் பண்ண போறது இல்ல டிரைவர் தான் ஓட்ட போறாரு
அங்க இருந்து அப்பா ஓட கார் அ ஓட்டிட்டு கோவை வந்துடுவார் அவ்ளோ தான்


இட்ஸ் சோ சிம்பிள் கோகிலா

என்ன டா என் பொண்டாட்டிய பேர் சொல்லி கூப்புடுற

இவ்ளோ நேரம் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போட்டுட்டு இப்போ வந்து உரிமை கொண்டாடுறிங்களா

சரி பை பை எனக்கு வேல இருக்கு

டேய் சாப்டுட்டு போடா இல்ல இன்னைக்கு client மீட்டிங் இருக்கு எப்படியும் பிரேக் பாஸ்ட் அவங்க கூட தான் சாப்பிடணும் நா கெளம்பரன்

ஏன் மா அஜய் ஏதோ பழைய மாதிரி பேசறான் என்னாச்சு ஒருவேளை அபியோட சமாதானம் ஆயிட்டானோ

தெரியலையேங்க அப்டினா சொல்லி இருப்பானே

சரி மா நானும் கெளம்பரன் என்று விஸ்வநாதன் கிளம்பினார்

அடுத்த நாள் காலையில் கோகிலாவும் விஸ்வநாதனும் காலையில் நேரமாகவே முகுர்த்தத்திற்கு கிளம்ப அஜய் சாயந்தரம் வரவேற்புக்கு வந்து சேர்ந்தான் என்ன மா கெளம்பலாமா

டேய் இப்போ தாண்டா வந்த அதுக்குள்ள கெளம்பலமாவ

இரு ஒரு வார்த்தை எல்லார்கிட்டயும் பேசு

அவனும் சென்று மண மக்களை வாழ்த்திவிட்டு வந்தான்
மனதில் நானும் அபியும் கூட இப்படி தான் கல்யாணம் பண்ணி இருப்போம் என்ற நினைவு வர

மனதின் ஓரத்தில் ஒரு வலி எழுந்தது இப்போ அபி வந்தா நீ எதுக்குவியா என்ற கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை ஆனால் அவளை தவிர வேறு யாரையும் தன் மனைவியாக நெனைக்க அவன் மனம் மறுக்கிறது

அவர்கள் மூவரும் குன்னூரில் உள்ள அவர்கள் எஸ்டேட்க்கு சென்றனர்
கோகிலா விசுவநாதன் வந்த காரை டிரைவர்ஐ வீட்டில் நிறுத்தி விடும் படி கூறினான் அவர்கள் எஸ்டேட் ஐ அடைய மணி ஏழு ஆகிவிட்டது

நீங்க ரெஸ்ட் எடுங்க நா போயிட்டு வரன் என்று விடை பெற்றான்

அஜய் மண்டபத்தை அடைய விக்ரம் சென்று அஜயை வரவேற்றான்
இவ்ளோ லேட்டா ஆவா வருவ
சரி வந்தியே அதுவே போதும் வா உன் தங்கச்சி தான் கேட்டா என்று ஹர்ஷவர்த்தினியிடம் கூட்டி சென்றான் இருவரும் பாச மழை பொழிய அஜய் மாப்பிள்ளையிடம் போர்மலாக பேசிவிட்டு கீழ் இறங்கினான்


பிறகு சிறிது நேரம் அஜயும் வரவேற்க

பார்ரா இவன எந்த கல்யாணத்துக்கும் வராதவன் தங்கச்சி கல்யாணத்துல வரவேற்புக்கு நிக்கிறான் என்று வாற

டேய் தங்கச்சி கல்யாணத்துக்கு தாண்ட வரணும் மித்த கல்யாணம்லாம் முக்கியம் இல்ல

எனக்கு தங்கச்சி இல்லாத குறைய நீக்க வந்தவடா என்று மனதிலிருந்து கூற
சரி டா
உனக்கு லேட் ஆயிட போகுது இப்பவே டைம் 8 :30 ஆச்சு சாப்பிடுடா என்று கூறி கொண்டிருக்க அஜய் ஏதோ தோன்ற நிமிர்ந்தான்

அவன் காலடியில் பூமி நழுவியது


வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே
பாவை தெரியு தடி!


பாவை தெரிவாள்.......


 

banumathi jayaraman

Well-Known Member
இந்த ஹர்ஷவர்த்தினியோட
கல்யாணத்துக்கு அஜிமித்ரா
வந்திருக்காளா?
சூப்பர், ப்ரீத்தி டியர்
சரி பரவாயில்லை
அவளோடு சேர்ந்து சாப்பிடு,
அஜய்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும் ரொம்பவே அநியாயம் பண்ணுறீங்க, விஸ்வநாதன்
உங்களை கோகி திட்டுவதில்
தப்பே இல்லை
உங்க ரொமான்ஸை கொஞ்சம்
நிப்பாட்டுங்க
"ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்......."-ன்னு
இவரை நினைத்துத்தான்
டி எம் எஸ் பாடினாரோ,
ப்ரீத்தி டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top