uyirai tholaithaen UD 19 & 20

Advertisement

preethi sri

Well-Known Member
hi friends likes and comments potta anaivarukkum nanri :love::love::love:

silent readers give one like (y)(y)

regular readers indha padhivukkum comments sollunga pa :D:D:love::love:


அஜய் காலையில் அபியின் அறைக்கு வர அவள் தூங்கிக்கொண்டிருப்பது குழந்தை தூங்கி கொண்டிருப்பது போல் இருந்தது சிறிது நேரம் அவளை பார்த்தவன் பின் அவளை எழுப்பி தான் கொண்டுவந்த காபியை கொடுத்தான் அஜி பிரெஷ் ஆகிவிட்ட வந்து காபி அருந்த இருவரும் பேசிக்கொண்டிருந்த விட்டு பின் அலுவலகத்திற்கு செல்ல தயாராகினர் அஜய் தான் கோவை கிளைக்கு செல்ல வேண்டும் என்றும் வேலை நிமித்தமாக ஜெர்மன் செல்ல வேண்டும் என்று கூற அபிக்கு மனம் பிசைந்தது

அவள் முகம் அதை பிரதிபலிக்க அஜிம்மா நா உன்கூட தாண்டி இருக்கன் நீ ஏன் பயப்படற சீக்கரம் வந்துருவேன் டி வேணும்னா நீ வென கோவைல இருக்கியா நா வர்றவரைக்கும் என்று அக்கறையுடன் கேற்க இல்ல ஜெய் பரவாயில்ல நா தனியா இருந்து பழகரேன் நீங்க போயிட்டுவாங்க என்று மனதை தேற்றி கொண்டு கூறினாள்

அஜய்க்கு அவளை விட்டு செல்ல மனமில்லை இந்த ஆறு மாதமாக விக்ரம் தான் அவனின் கோவைகிளையையும் வெளிநாட்டு பயணங்களையும் பார்த்து கொண்டான் அபியை பற்றி அஜய் விக்ரமிடம் கூறியிருக்கிறான் ஆனால் நேரில் பார்த்ததில்லை

இம்முறை அபவ் பிப்டி ஒன்னு பெர்ஸன்ட் ஷரோஹோல்டராக அஜய் இருப்பதால் அவன் தான் அக்ரீமெண்ட்டில் கையெழுத்திடவேண்டும்
விக்ரம் ஒர்கிங் பார்ட்டராக இருந்தாலும் அஜய் இங்கு முக்கியம் என்று அவர்கள் கம்பெனி (மெமோரண்டும் ஒப்ப அசோசியேஷன் இல் MOA)குறிப்பிட்டு இருப்பதால் அவனும் தன் மனதை மாற்றி அல்ல தேற்றி கொண்டு சென்றான்

இரவு எட்டு முப்பதுக்கு பிலைட் என்று கூற சரி ஜெய் பார்த்து போட்டு வாங்க என்று மனதில் இருக்கும் வலியை மறைத்து கொண்டு கூறினாள்

அஜய் சென்னையில் இருந்து கோவை சென்று மீட்டிங் சார்ந்த ஆவணங்களை எடுத்து கொண்டு ஜெர்மனியை நோக்கி பயணத்தை மேற்கொண்டான் இந்த ப்ராஜெக்ட் அவன் வளர்ச்சிக்கு மிக முக்கியம் ஒரு மைல் கல் என்று கூட சொல்லலாம் அவன் மித்த தொழிலில் வெற்றி கொடி நாட்டினாலும் இந்த துறையில் அவன் காலடி எடுத்து வைத்து வெறும் இரண்டு வருடங்களே ஆகி இருந்தது அதனால் தான் அவனால் இந்த பயணத்தை தவிர்க்க முடியாமல் போனது

அஜய் ஜெர்மன் சென்றவுடன் அபிக்கு தொடர்பு கொண்டு பேசினான் பின் இருவருக்கும் வேலை சரியாக இருக்க பேச முடியாமல் போனது
அஜய் சென்று ஒரு வாரம் ஆகி இருந்தது

அன்று அபிக்கு உடல் நிலை சேரியில்லாமல் இருந்தது இரவே மாத்திரை போட்டும் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை காலை எழும்போது இன்னும் மோசமாகி இருந்தது உணவும் சாப்பிடமுடியாமல் குமட்டி கொண்டு வர தலை வெடித்து விடுவது போல் வழித்ததது முன்னாலும் இந்த மாதிரி வலித்திருக்கிறது தான் ஆனால் இந்த அளவு இல்லை அஜய் எண்ணுக்கு தொடர்பு கொண்டவள் அவன் நன்றாக உறங்கி கொண்டிருப்பான் என்பது நினைவு வர போன் செய்யாமல் அப்படியே விட்டு விட்டால் அவள் கெட்ட நேரம் அன்று ஜானு அம்மாவும் வேலைக்கு வராமல் விடுமுறை எடுத்து தன் நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சென்றிருக்க அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவமனைக்கு சென்று வந்தாள்

அடுத்து சில தினங்கள் வழக்கம் போல் கழிய அஜய் வேலை பளுவில் அவளை அலைக்கவும் இல்லை
அவன் சீக்கிரம் இந்த வேலையை முடித்து கொண்டு நாடு திரும்பும் முனைப்புடன் இருந்தான் அதற்க்கு முக்கிய காரணம் அபி

அன்று மதியம் தான் அஜய் ஜெர்மனில் இருந்து பெங்களூரு வந்து அங்கிருந்து சென்னை வந்திருந்தான் அபி அலுவலகத்திலிருந்து மாலை விட்டுக்கு திரும்ப அஜய் ஹாலில் அமர்ந்து இருந்தான்

ஒரு நிமிடத்தில் அவள் கண்ணில் மின்னல் வந்து போக அடுத்த நிமிடம் அந்த முகத்தில் தான் கண்ட மின்னல் பொய்யோ என்ற வகையில் வாடி இருந்தது
நா பிரெஷ் ஆயிட்டு வர்றேன் என்று தன் அறைக்கு சென்றால் அவளெற்கனவே எடுத்த முடிவு தான் இருந்தாலும் அவனை விட்டு பிரிவது எத்தனை கடினம் என்பது இந்த ஒரு வாரத்தில் நன்றாக உணர்ந்திருந்தால்


மனதில் என்ன மன்னிச்சிடுங்க அஜய் என்னால நீங்க எந்த கஷ்டமும் பட வேண்ட திரும்பி நா உங்கள பாபனான்னு தெரியல
உங்கள விட்டு எப்படி இருக்க போறன்னு தெரியல என்ன மன்னிச்சிடுங்க ஜெய் என்று கதற முடிஞ்சா என்னமறந்துடுங்க என்று கூறும் பொது இத்தனை நேரம் இருந்த உறுதி உடைந்து தரையில் சரிந்து அழுதாள்

மறக்க கூடிய நினைவா அது தன்னவனின் தீண்டலும் ஸ்பரிசமும் அவன் அன்பையும் காதலையும் பறைசாற்ற தன் அருகாமையில் அவன் சுற்றம் மறந்து தன்னில் மாத்திரம் மூழ்கி தவித்த தருணங்கள் தோன்ற ஆயுளுக்கும் வேண்டும் என்று உடலின் ஒவொரு அணுவும் கெஞ்ச அது நடக்காது அதற்கு தானே காரணமான இருக்க போகிறோம் என்ற எண்ணம் கொள்ளாமல் கொன்றது

கூடியும் கூடாமல் இருந்த அந்த நள்ளிரவில் தன்னவனுடம் ஒரு நாலாவது சந்தோசமாக இருந்து இருக்கலாமோ தனக்காக ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து செய்தவன் தன்னை வேண்டினானே அப்போது தன்னை அவனிடம் கொடுத்திருக்க வேண்டுமோ ஒரு நாலாவது அவனுக்கு அந்த சந்தோசத்தை அளித்திருக்க வேண்டுமோ என்ற என்ற எண்ணம் இப்போது வந்தது



இல்லை தன்னவன் பரிசுத்தமானவன் அவன் மனைவியை தவிர வேறு எந்த பெண்ணையும் அவன் தீண்ட மாட்டான் என்ற எண்ணம் மனதில் நிம்மதியை தோற்றுவிக்க தன்னவனை பரிசுத்தமாக இன்னொருத்தியிடம் ஒப்படைக்க இருக்கும் தன் நிலையை வெறுத்தாள்

ஒருவாறு தன்னை தேத்தி கொண்டு

முகத்தில் நன்றாக தண்ணீரை அடிக்க அவள் அழுத தடம் தெரியாமல் கொஞ்சம் மட்டு பட்டது நன்றாக மனதை திடப்படுத்திக்கொண்டாள்


வெகு நேரமாகியும் அவள் வெளியில் வராமல் இருக்க தன் மீது கோவமா இருக்காளா ஒரு வாரம் போன் ல கூட பேசல இதுதானோ செரி ட அஜய் நீ பொய் சமாதான படுத்து என்று அவன் அபியின் அறைக்கு சென்றான்

அங்கு அவள் அமர்ந்திருக்க ஏன் கண்ணம்மாவுக்கு என்ன ஆச்சு என்று பின்னாலிருந்து அவளை அணைக்க சுயநினைவுக்கு வந்தவள் வழக்கம் போல் அவனிடம் மயங்கும் மனதை அடக்கும் வழி தெரியாமல் தவித்தாள்

சாரி டி நான் கால் பண்லான்னு தான் நினைச்சன் ஆனா வேல டி மாமா என்ன பண்ணுவேன் சொல்லு ட்ரை டு understand மீ டி ஏன் செல்லக்குட்டி என்று குறி அவள் இதழ்களை சிறை செய்ய ஒரு வார பிரிவை அந்த ஒற்றை இதழ் முத்தத்தில் காட்டிட நினைத்தான் அந்த நிமிடம் அவளுக்கும் இது தேவையாக இருக்க ஒரு நிமிடம் அந்த முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தவள் அவனிடம் இருந்து திமிர

முற்றிலுமாக அவன் மோக நிலை அறுபட என்ன தொடாதிங்க என்று அவனிடமிருந்து விலகி நின்றாள் சாரி டி என்று அவன் கூற யாருக்கு வேணும் உங்க சாரி என்ன சொன்னிங்க வேலைக்கு நடுவுல கூப்பிட முடியல சரி தான் எப்படி நியாபகம் இருக்கும் காதலிச்சு இருந்த நியாபகம் இருக்கும் நீங்க விரும்பினது இதை தன என்று உடலை தொட்டு காட்ட

அவன் முகம் இறுகி இருக

இப்ப என்னை சொல்ல வர

ம்ம்
சரி தெளிவாவே சொல்ரேன் நீங்க ஆசைப்பட்டது என் உடம்பு மேல தான் உங்களுக்கு நா முக்கியம் கெடையாது நீங்க என்னை ஏமாத்திட்டீங்க மிஸ்டர் அஜய் என்று வார்த்தைகளில் அம்பை எய்ய

அவன் வலி சுமந்த விழிகளில் அவளை பார்க்க எத்தனை அன்பையும் காதலையும் அவள் மீது வைத்திருந்தவன் அவளுக்காக அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தன் உணர்வுகளை மறைத்து எத்தனை முறை

ஒரு தடவை கூட தன் தீண்டலில் இருக்கும் காதலை அவள் உணரவில்லையா இல்லை தான் உணர்த்தவில்லையா என்ற கேள்விகள் மனதில் எழ அவன் துடிப்பின் வலி அவளை தாக்கிய போதும் அவள் இளகினால் இல்லை

இதுக்கு எதுக்கு இந்த ட்ராமா என்று அவனை நோக்கி ஒரு பார்வையை வீச அதில் மனதளவில் அவன் காதல் மறித்து போயிற்று அவள் அடுத்து கூறிய வார்த்தையில் அது மரணித்து போயிற்று

இட்ஸ் நோட் எ லவ் இட்ஸ் எ லஸ்ட்

என்று அவள் கூறி முடிக்கும் முன் அவள் கன்னத்தில் அவன் கரம் பதிந்தது அவன் அரை தாங்காமல் கிலே விழ அவள் உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது

அதை அவன் சிறிதும் பொருட்படுத்தினான் இல்லை அவள் கூந்தலை கொத்தாக பற்றி உண்மைய சொல்லு நா உன் உடம்புக்கு ஆசைப்பட்டேன்னு சொல்ல உனக்கு எப்புடி டி மனசு வந்துச்சு என்று கேற்க உண்மையான காதல காமம்னு சொல்லி கலங்க படுத்திட்ட
ஒவ் ஒரு முறையும் நீ முகம் சுருங்கும் பொது எல்லாம் நா புரிய வெச்சு இருக்கேன் அப்போ இருந்த அன்பு தான் அதுக்கு காரணம் இப்ப சொன்ன பாத்தியா காமம்னு இதுக்கு மேல நீ என்னோட காதல அசிங்க படுத்த முடியாது
என்று அழுத்தமாக அவன் உச்சரிக்க அவள் முதுகு தடம் சில்லிட்டது கனல் கக்கிய அவன் விழிகளை பார்க்கையில்

அவளுக்கு தான் தெரியுமே என்ன சொன்னால் அவன் எப்படி நடந்து கொள்வான் என்று

அவள் கண்ணில் தெரிந்த வழியில் அவன் கரங்களை தளர்த்த எப்போ என்னை கைநீட்டி அடுச்சிங்களோ இனி எப்பவுமே என் மூஞ்சில முழிக்காதீங்க நீங்க மனுஷனே கிடையாது என்று வெறுப்புடன் கூற அஜய் அவ்விடத்தை விட்டு அகன்றான்

அபி வீட்டை விட்டு சென்றாள்

பாவம் அஜய்க்கு உலகமே சுழன்றது அவ ஒரு நிமிசத்துல எப்படி அவளால இவ்ளோ கேவலமா என்னை நினைக்க முடிஞ்சுது என்று மனதில் பொருமினான் அவன் மனம் உளைகளமாக கொதித்தது

இரண்டு வருடங்கள் கடந்து விட்டது இன்று வரை அவன் அபியை பார்க்க வில்லை ஒரு நாளில் அவன் வாழ்க்கையே மாறிவிட்டது அவள் மட்டும் சென்றிருந்தாள் பரவாயில்லை அவன் உயிரையும் அவனிடமிருந்து எடுத்து சென்று விட்டாள்
அன்று அவள் அலுவலகத்திலிருந்து வரும் போதே வேலை ராஜினாமா செய்தது தெரிய வந்தது

இந்த இரண்டு வருடங்கள் அஜய் தொழிலில் நல்ல வளர்ச்சி அடைந்திருந்தால் அவன் அபியின் மீது வைத்து இருந்த அன்பும் காதலும் பின் அவளை பிரிந்தது அவனை மரணிக்க செய்தது உடல் அளவில் அவன் உயிர் வாழ்ந்தான் அதில் இருந்து வெளிவருவதற்காக
அதிகமாக தொழிலில் கவனம் செலுத்தினான் அவனுக்கு புடித்த அனைத்தையும் வெறுத்தான் வீட்டில் இருப்பதை தவிர்த்தான் வேறு எந்த பெண்ணையும் அவன் பார்க்கவில்லை ஒரு நாள் கூட அவளை நினைக்காமல் அவன் இருந்ததும் இல்லை
அபிஜித்ரா அவளுக்கென வாழ்ந்தவன் அவனை மரணிக்க செய்து சென்று விட்டாள்
இந்த இரண்டு வருடங்களில் அவன் பலமுறை அவளை பற்றி யோசித்திருக்கிறான் ஏன் அவள் அவ்வாறு கூறினாள் எப்படி அவள் சண்டைபோட்டு தன்னை விட்டு செல்வதற்கு முன்னையே வேலையை விட்டிருக்கிறாள் அன்று அவள் முகம் தன் தாய் தந்தையாய் இழந்த அன்று இருந்தது போலவே இருந்தது இந்த ஆறு மாதத்தில் இருந்த பொலிவு ஒரு வாரத்தில் எப்படி அவளிடமிருந்து மறைந்தது பல முறை அவளை தொடர்பு கொள்ள முயட்சித்த போதும் பயன் இல்லை சிம்மை டி activate செய்திருந்தாள்

கடைசியாக அவன் மனதில் தோன்றியது அந்த ஒரு வாரத்தில் தான் ஏதோ நடந்திருக்க வேண்டும் என்று யூகித்தான் அந்த ஒரு வாரத்தில் அவள் ஒரு நாள் விடுப்பு எடுத்திருந்ததும் தெரிய வந்தது

அவளை தேடியும் எங்கு இருக்கிறாள் என்பது தெரியவில்லை தன் பெற்றோரிடம் சமாளித்து இருக்கிறான் அவர்களும் ஏதோ சண்டை என்பதை உணர்ந்து இருந்தனர்
அஜயிடம் கேட்டால் ஆரம்பத்தில் சின்ன சண்டை மா சரியாயிடும் சீக்கிரம் வந்துடுவா என்று அவர்கள் சமாதானப்படுத்தினான் பின்னர் அவராலும் கேர்ப்பதை நிறுத்திவிட்டனர்

இப்படியே இரண்டு ஆண்டுகள் கந்து விட்டது


இதில் இருந்து அவன் அறிந்தது ஒன்று மட்டும் தான் அவள் வேண்டுமென்ரே அவ்வாறு பேசி தன்னை விட்டு பிரிந்திருக்கிறாள் என்பது மட்டும் தான் என்ன காரணம் என்பதை அவன் அறியவில்லை


காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)





 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top