UVVP 12

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அத்தியாயம் – 12



"ஒளச்", என்றவாறே நெட்டி முறித்த ஷானு-வ பார்த்திருந்தான், கணேஷ்..



"என்ன ஆச்சு ?"



"லைட்-ஆ முதுகு வலி, கார்ல உடம்பை குறுக்கி உட்கார்ந்து இருந்தேன்-ல்ல, அதான்.."



"ஆமா .., இந்த forensic டெக்னிக், டீடெயில்ஸ் -ல்லாம் எங்க தெரிஞ்சுக்கிட்ட?



"அடப்போங்க சார்.. எந்த காலத்துல இருக்கீங்க.. இப்போல்லாம் கூகிளாசார்யா கிட்ட கேட்டா பாயாசத்துல இருந்து பாம் வைக்கிற வரை சொல்லி குடுக்கும்.. இதெல்லாம் ஒரு மேட்டரா?", பதிலுரைத்தாள்...



"ஓகே அக்ரீட், வா.. எனக்கு பசிக்குது... சாப்டுட்டே பேசலாம்"



"சாரி பாஸ்... வேலை இருந்தா சாப்பாடு மறந்து போகும் எனக்கு...".



ஹோட்டல் பார்க்கிங் - ல் நிறுத்தி காரிலிருந்து இறங்கியவாறே, "நானுமே அப்படித்தான்... என்ன ஒன்னு .... எனக்கு 2 மணிக்கு ஒரு முறை பசிக்கும். எதையாவது வயித்துல தள்ளனும்... இல்லன்னா... சுத்தி இருக்கறவங்கள சாப்பிட ஆரம்பிச்சுடுவேன்..", என்று நிறுத்தியவன் ... அவள் திகைத்த முகம் கண்டு.., முறுவலித்த வாறே.., "நமக்கு முக்கியம் சோறு டாட்...," காரிலிருந்து இறங்கி அவளிடத்தில் நெருங்கி இருந்தான்...அது ஒரு பேஸ்மெண்ட் வளாகம், அரையிருளும், சிறு வெளிச்சமும், தனிமையும் போட்டி போட, விலக மனமில்லாமல், "யூ ஆர் வெரி பிரில்லியண்ட்... ஐ லவ் யு சோ மச்", என்று கூறி கன்னத்தில் ஒரு முத்திரை பதித்து..."என்னால ரொம்ப நாள் காத்திட்டு இருக்க முடியும்-னு தோணலை.... உங்க வீட்ல நம்ம விஷயத்தை சொல்லி கல்யாணத்துக்கு பர்மிஷன் வாங்கிடு.."என்றான்.. தலையை உருட்டிய ஷண்மதிக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை... அவன் முகம் பார்க்க வெட்கி, தலை குனிந்திருந்தாள்.



"ஹேய் , வெக்கப்படறியே ?, தெரியாதோ-ன்னு நினச்சேன்....:,", பேசி இலகுவாக்கினான்...



"ஏன் அப்படி ?", சற்றே தெளிந்து கேட்டாள் ..



"ம்ம்ம்.. ரொம்ப அறிவு வாளியா இருக்கியா? வெக்கமெல்லாம் மூட்டை கட்டி போட்டுடியோ-ன்னு..", ஒரு முறைப்பை பதிலாய் பெற்று நிறுத்தினான்...



ஹோட்டல் உள்ளே நுழைந்து , தனியாய் ஓரமாய் இருந்த டேபிளை அணுகி... மெனு புக்-கை அவளிடம் கொடுத்து, :எனக்கும் சேர்த்து பண்ணிடு ", என்றான்...



அவ்வாறே செய்து முடிக்க , ஷானு-வின் போன் அழைக்க, "அம்மா ...", சொல்லி, ஆன் செய்தாள்.



"சொல்லும்மா.."



"ஷானுமா... எப்படி கண்ணா இருக்க?"



"நல்லா இருக்கேன், சொல்லு.. விஷயமில்லாம கூப்பிட மாட்டியே?"



"ஆமாடா கண்ணா... இங்க அப்பாக்கு கொஞ்சம் முடியல... இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கோம்.."



"என்னாச்சு ? நா உடனே கிளம்பி வர்றேன்....",



"எப்போவும் வர்றதுதான் .. ஹை பி பி .... திடீர்னு தல சுத்தி விழுந்திட்டாரு....முடிஞ்சா ஒரு எட்டு.. வாடா..., ஆனா நீ ஜாக்கிரதை மா , ", என்றார் அம்மாக்களுக்கே உண்டான வாத்சல்யத்துடன்.



போனை வைத்துவிட்டு, "கணேஷ் .. இன்னிக்கு நான் ஊருக்கு போறேன், ஒரு ரெண்டு மூணு நாள் அங்க ஸ்டே பண்ணிட்டு வர்றேன்..., அப்பாக்கு உடம்பு சரியில்லை.. என்னான்னு இருந்து பாத்துட்டு வர்றேன்"..



"ஓகே.. நோ டென்ஷன்.. ஒன்னுமாகாது... ", என்றவன் தொடர்ந்து, "போறது போற... நம்ம விஷயமும் சொல்லிடேன்", சிறிது தயக்கமுடன் கேட்ட கணேஷை, முறுவலுடன் பார்த்து, "டன் ", என்றாள்.



**************************



சொன்னவாறே ஷானுவை ஊருக்கு அனுப்பி, இன்றோடு மூன்று நாட்கள் ஆகி இருந்தது... மணிவேல் வழக்கில் எந்த முன்னேற்றமும் பெரிதாய் இல்லை... பூபேஷ் மரணம் விபத்தல்ல, மயக்கமருந்தினை ஏ சி யின் வழியாய் உள்ளே செலுத்தி இருப்பது தெரிந்து, கொலை என முடிவானது... கணேஷ் அவரின் மெயில்-களை துருவியதில் நவ. 7 தேதிக்கு, ஒரு தனி விமானம், அமைச்சரின் பெயரில் புக் செய்யப் பட்டு இருந்தது.. அபுதாபி வரை சென்று வருவதாய் அதில் விவரங்கள் இருந்தது... எத்தனை முறை கேட்டும் அவ்வாறு முன்பதிவு செய்திருப்பதே தனக்கு தெரியாது என்றார் விநாயக மூர்த்தி.... அவர் கண்கள் உண்மை கூறியது..



ஏனெனில், அவர் தளர்ந்திருந்தார். பூபேஷின் இறப்பு அவர் எதிர்பாராதது... பூபேஷின் இறுதி காரியங்களை செய்வதற்காக ஜாமீன் கேட்க, அரசு அவரை எந்நேரமும் கண்காணிப்புடன் வீட்டுக் காவலில் வைத்தது.



அமைச்சர் வீடு எரிந்தது, அவரது தம்பி மகனான[ ? ] பூபேஷின் மரணம், இறுதி சடங்கு இவையே பிரதான செய்தியாய் இருக்க.... பலரும் அவரவர் இரங்கல்களை ஜாமீனில் வெளிச்சென்றிருந்த அமைச்சருக்கு[வி. மூர்த்தி] கூறிக் கொண்டு இருந்தனர்... ஒருவன்[பெயர் சந்திரகுமார், பூபேஷின் பார்ட்னர்-என கீழே போட்டிருந்தது] ஆறுதலாய் தழுவி, "பூபேஷ்க்கு இந்த வயசுல இப்படி ஆகும்னு நினைக்கலையே மூர்த்திப்பா, உங்களுக்கு யாரும் இல்லன்னு நினைக்காதீங்க.. நான் இருக்கேன், உங்க புள்ளையா நான் இருப்பேன், கவலைப் படாதீங்க...", என்று மேலும் பல இரங்கல் வசனங்கள்.. உஷ்..... பார்த்துக்கொண்டிருந்த கணேஷ் , பெருமூச்சுடன்...இப்போதைக்கு DCP-யை பார்க்க செல்லலாம், என்ற முடிவுடன், அவரை தொலைபேசியில் அழைத்தான்....



"என்ன சார், மொத்தமா ஆபீஸ்லதான் குடி இருக்கீங்களா?", என்றான் கொஞ்சமாய் சிரிப்புடன்...



" ஓ .. கணேஷா ?, எஸ் எஸ்.. இது ஆளும் கட்சி மேட்டர்-ல்ல... . மேலிடத்துலேர்ந்து ப்ரெஷர்...

கேசைக் கூட ஈஸியா ஹாண்டில் பண்ணிடலாம்.. ஆனா இந்த அரசியல்வாதிங்க தொல்லை இருக்கே?, அரை மணிக்கு ஒரு கால்...எங்கயாவது காவி கட்டி ஓடிலாமான்னு இருக்கு..",



வாய் விட்டு சிரித்து , "அண்ணி தாளிக்கறாங்களோ?"



"அதெல்லாம் எப்பவும் உள்ளது தான்" என்றார் அவரும் சிரித்தவாறே... தொடர்ந்து "UV ரிப்போர்ட் இன்னும் ரெண்டு மணி நேரத்துல வரும் . free -யா இருந்தா வா..."



"எஸ் சார், மதியம் வர்றேன்", பேசி முடித்தவன், அலுவலகம் சென்றான்... இரண்டு மூன்று நாட்களாக குறைவான நேரமே அலுவலகத்தில் இருந்ததால்.. பல வேலைகள் அணிவகுத்து நிற்க... அவற்றுள் மூழ்கினான்... முழுதாய் இரண்டு மணித்துளிகளை தொலைத்த பின் .. அவன் அறையில் இருந்த டீ.வி.-யை உயிர்ப்பித்தான்..



வேறு வேறு கோணத்தில், வேறு வேறு சானல்களில் அதே செய்திகள், அதே நேரலை.... மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள்... போர் அடிக்கவே... ரிப்போர்ட்களை பார்ப்போம், என்ற முடிவுடன்... காரில் கிளம்பினான்..



எங்கோ எதுவோ நெருட மீண்டும் ஆழ்ந்து யோசித்தான் . சட்டென தலையில் பல்ப் எரிய, ஒரு கால் செய்து பேசி மெல்ல நிமிர்ந்தான்....சீட்டி அடித்துக் கொண்டே.... இப்போது உற்சாகமாய்... DCP அலுவலகம் நோக்கி...



உள்ளே நுழைந்த கணேஷின் பிரைட்-டான முகத்தை கண்டு.. "என்னப்பா ஏதாவது புதுசா கண்டு பிடிச்சியா?"...



"ம்ம்.. கரெக்ட்....ஓரு மாதிரி விடையை நெருக்கிட்டோம்-னு நினைக்கிறேன். வெல் , அதுக்கு முன்னால இதுவரை நமக்கு தெரிஞ்சதை, ஒரு முறை ரீகால் பண்ணலாமா?", என்றவன்...



"ம்ம். ப்ரொஸீட் "..
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
"விநாயக மூர்த்தி ..அமைச்சர் மணிவேல கொன்னு அவர் மாதிரி வேஷம் போட்டது, அக்கா ஆபீசுக்கே வந்து மிரட்டியது , ஸ்கேனர் உதவியோட அவரோட ஆள் மாறாட்டத்தை கண்டு பிடிச்சது, தொடர்ந்து அவர் கைது..., அவரோட ட்ரைவர், மகன் பூபேஷ் விபத்துல கொல்லப்பட்டது, இதெல்லாம் நமக்கு தெரிஞ்ச விஷயம்..."



"ம்ம். ஆமா"



"இப்போ நம்ம முன்ன இருக்கிற விடை தெரிஞ்சுக்க வேண்டிய கேள்விகளை பாக்கலாமா?"



"ட்ரைவரை, பூபேஷை கொன்னது யாரு ?"

"இந்த கொலைகளுக்கான காரணம் என்ன?"



"தெரியலையே , அது தெரிஞ்சுக்கலாம்னு ...", அவர் ஆரம்பிக்க..



"டிஸ்கஷன் அப்பறமா பாக்கலாம் ...இப்போ நம்ம கைல கிடைச்ச ஆதாரங்கள்..."



"ஹலோ.. நான்தாம்பா இங்க போலீஸ்.."



சிரித்துக் கொண்டே "இருந்துட்டு போங்க.. யார் வேணாம்னு சொன்னா?, நான் பத்திரிக்கைக்காரன்.உடம்பு முழுக்க கண்ணும் காதும் இருக்க பழகினவன்", என்று நிறுத்தியவன், "மோரோவர், உங்களுக்கு வயசாயிடுச்சு..."



"ஹா ஹா ஹா .. இதை உங்க அண்ணி இருக்கும் போது சொல்லிடாதே....", என்று சற்று கலகலத்து சிரித்து "ஓகே மேட்டருக்கு வா.." என..DCP கூற... அவரை ஆமோதித்து . கணேஷ் தொடர்ந்தான்..



"நவம்பர் 7 ஆம் தேதி, அமைச்சரும், பூபேஷும் அபுதாபி போறதுக்கு புக் பண்ணின சார்ட்டர் பிளைட்-டோட நம்பர் IX - 537", என்றவனை இடையிட்டு,



"சரிப்பா, இதெல்லாம் தான் ஏற்கனவே தெரியுமே?"



"எஸ்.. ஆனா இதை யாரு புக் பண்ணிருக்கா-ன்னு தெரியுமா?"



"பூபேஷ் தானே பண்ணி இருக்கணும் ?"



"நாம அப்படித்தான் நினைச்சோம், அல்லது அப்டி யோசிச்சோம்"



"இந்த நம்பரை சொல்லி, யாரு புக் பண்ணினா, பேமெண்ட் யாரு பண்ணினா-ன்னு கேளுங்க...", கணேஷ் துள்ளலுடன் சொல்ல...



"நீ கேட்டுட்டே தானே?"



"கண்டிப்பா..,சந்திர குமார் , சி.கே. இண்டஸ்ட்ரீஸ் , சிங்கப்பூர்"



"இவன் யாருப்பா புதுசா..."



"புதுசெல்லாம் இல்ல, ரெண்டு மூணு நாளா பாத்துட்டே இருக்கோம் .. தெரிஞ்ச ஆளு தான்.. பாக்கறீங்களா?", சொல்லிக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்பித்தான்..



"ஹேய்... இங்கதான் இருக்கானா ?"



"ஆமா , நம்ம மூக்குக்கு கிழேயே,",



டிவி யில், இரங்கல் வசனம் ஓடிக்கொண்டிருந்தது...."பூபேஷ்க்கு இந்த வயசுல இப்படி ஆகும்னு நினைக்கலையே மூர்த்திப்பா, உங்களுக்கு யாரும் இல்லன்னு நினைக்காதீங்க.. நான் இருக்கேன், உங்க புள்ளையா நான் இருப்பேன், கவலைப் படாதீங்க...",



"ம்ச் .. இவன்தான்-னு....... ", என்றவர் சட்டென நிறுத்தி... விழி விரித்தார்... "மூர்த்திப்பா "



"ய்யா ....புடிச்சிடீங்க.... நாம யாருக்கும் சொல்லாம இருக்கிற விஷயம் ... இவனுக்கு எப்படி தெரியும் ?", அத்தனை உற்சாகம் கணேஷ் குரலில்...



அடுத்தென்ன??



சந்திர குமாரை கைது செய்ய உத்தரவு வாங்க... அரை மணி நேரம் பிடித்தது..



அந்த நேர இடைவெளிக்குள், UV ரிப்போர்ட் வந்தது... அந்த எரிந்த காகிதத்தில் , கன்டைனர் ஒன்றை, திருவனந்தபுரத்தில் இருந்து அபுதாபிக்கு அனுப்பிய தகவலும் , மேலும் அனுப்பியது பூபேஷ், சென்று சேர்வது சி.கே. இண்டஸ்ட்ரீஸ்-க்கும் என்பதாய் கூறியது....



"சார், என்னிக்கு புக் ஆகி இருக்கு?", கணேஷ் வினவ..



"ப்ரோ, இந்த ஷிப், ஸீ ரூட் பாருங்க...", பக்கத்தில் இருந்த அதிகாரிக்கு கன்டைனர் எண்ணினை கொடுத்து, தெரிந்து கொள்ள சொன்னான் .



"சார் நாலு நாள் முன்னால புக் ஆகி இருக்கு.. கப்பல் KANDLA போர்ட்-க்கு நாளைக்கு போகும்..." [kandla போர்ட், gulf of kutch, குஜராத்]



கணேஷ் நிமிர்ந்து DCP யை பார்த்தான்..., அவரோ உதடு பிதுக்கி.. " கிளியரன்ஸ் கிடைக்கறது ரொம்ப கஷ்டம் .."



"பாம் வச்சிருக்காங்கன்னு சொல்லுங்க சார், உடனே டெக் ஆகும்... ", கூலாக கூறினான்... கணேஷ் , "அந்த கன்டைனர், குஜராத் தாண்டக் கூடாது..."



"கான்ஸ்டபிள்..சமீபத்துல தொலைஞ்சு போன குழந்தைங்க, தோராயமா ஒரு மாசத்துக்குள்ள தொலைஞ்சு போன குழந்தைங்க லிஸ்ட் ரெடி பண்ணுங்க...", DCP பாயின்டை பிடித்தார்...



அதே நேரம்..அவரின் .தொலைபேசி அலறியது... "சார் சந்திரகுமார் மிஸ்ஸிங்"....



"எதிர்பாத்தேன்... ஏர்போர்ட்டுக்கு அந்தாளோட பாஸ்போர்ட் அனுப்பி உடனே பிளாக் பண்ணுங்க.., சிட்டி போலீசுக்கு அவன் முகத்தை அனுப்பி வைங்க.. பாட்ரோல அலெர்ட் பண்ணுங்க...", DCP கேஸ் முடிப்பதில் மும்மரமானார்...



"எஸ் சார்"



ஜீப்பில் ஏறிக்கொண்டே "நானும் தேடறேன், ஹை வேஸ்...பாட்ரோல் கூட., ", DCP செல்ல,



அவரை அனுப்பி விட்டு, ஷானு-விற்கு தகவல் சொல்ல அழைத்தான்... "தி நம்பர் ஈஸ் நாட் ரீச்சபில் அட் தி மொமண்ட்.." , பதிலாய் வந்தது....



குழம்பினான்..., சென்னை வந்திருப்பாளே ?, தொலைபேசியில் அப்படித்தான் சொல்லி இருந்தாள்..



அலைபேசி அலற, "சார், நீங்க தானே கணேஷ் ?"



"ஆமா",



"எங்க டிபார்ட்மென்ட்-கு உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணோட மொபைல்லேர்ந்து SOS சிக்னல் வந்துருக்கு",



கணேஷின் இதயம் ரிக்டர் அளவு கோலில் ஒன்பதில் அதிர... "சார் அவங்க நம்பர் சொல்ல முடியுமா?"



ஷானுவின் அலைபேசி எண்ணை, தப்பில்லாது கூறினார், அக்காவலர்.



&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்

அங்குமிங்கு மெங்குமுள வாகும் -- ஒன்றே

யாகினா லுலகனைத்தும் சாகும் -- அவை

யன்றியோர் பொருளுமில்லை, அன்றியொன்று மில்லையிதை

ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் -- இந்த

அறிவுதான் பரமஞான மாகும்.

நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்

நீண்டகாலம் வாழ்வர்தரை மீது -- எந்த

நெறியுமெய்து வர்நினைத்த போது -- அந்த

நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத

நீழலடைந் தார்க்கில்லையோர் தீது -- என்று

நேர்மைவேதம் சொல்லும் வழி யீது.



மகாகவி சுப்ரமணிய பாரதியார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top