UVVP 05

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Friends....

Sorry for the delay in UpDates...

Occupied with Office Work.. [ Didn't find time.. even to post the Re-run Story...]

Kindly excuse me.. will come with UDs soon..

1.jpgஇது என் தோழி ஷாந்தினிதாஸ் , இந்த கதைக்காக போட்ட அட்டைப்படம்...
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

UVVP 05

உற்சாகமாய் இருந்தான் ஷிவா .....நினைத்தாற்போல் வெளிநாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது.... அவர்களை வழியனுப்பி வைத்து விட்டே, தற்போது ஆசுவாசமாய் அமர்ந்திருந்தான்.... இடம் : ஓரகடத்தில் உள்ள அவனது அலுவலகம்.

இப்பொழுதான் அவனுக்கு வீட்டு ஞாபகம் வந்தது.. அலைபேசியை எடுத்தவன், அதில் வந்திருந்த பதிவுகள் ஏராளமாய் இருக்க..., அவைகளை பார்வையிடலானான்.... நிறைய செய்திகள் அமைச்சர் கைதாதனத்தை பற்றி, மாயாவை பற்றி, மேலும் கீர்த்தியும் , ஸ்ருதியும் rhymes பாடி பதிவு செய்து, மங்கையின் அலைபேசியில் இருந்து அனுப்பி இருந்தனர்... "ஓ.. குட்டிஸ் பெரிய வீட்டுக்கு போயாச்சா."., என்று நினைத்தபடி , அன்னைக்கு அழைத்திருந்தான்...

"ஹாய் மாம்..”

"சொல்லுப்பா",

"ம்மா .. என்ன பண்றாங்க, குட்டிஸ்?.. இங்க வந்துட்டாங்களா?", ஷிவா வினவ,

இது அடிக்கடி நிகழும்.. மாயா வீட்டுக்கு செல்ல தாமதமானாலோ , பிள்ளைகள் உடல் நலம் சரியில்லையென்றாலோ , மங்கை அங்கே செல்வதும், அவ்வப்போது பிள்ளைகளை, சரஸ்வதி இங்கே அழைத்து வருவதும் வழமையே.... ஏதோ ஒரு கோபத்தில் முன்பு மாயாவை பேசினாலும்... காலப்போக்கில் சரஸ்வதியுடன் தோழமை ஏற்பட .. மங்கையும் அவரின் குத்தல் பேச்சுக்களை குறைத்து சமரசமாக போகவே.. இருவருக்குள்ளும் எந்த பிரச்னையும் பெரிதாய் எழவில்லை...

"ஆமாடா... உங்கப்பா.. உன் பொண்டாட்டியோட பேசிட்டு இருக்காரு, நான் பசங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருக்கேன்.. நைட் இங்க வந்துடு.. மணி ஏழாகுது...கிளம்பிட்டியா? இல்லையா?"

"இதோ.. கிளம்பிட்டே இருக்கேன்.. இப்போதான் வேலை முடிஞ்சுது, ஓகே. வைக்கிறேன் மா"

"சரி சரி சீக்கிரம் வந்து சேர் ", என்று முடித்தார்.

"என்னங்க... ஸ்ருதிக்கு கொஞ்சம் கை அலம்பி விடுங்க..", மங்கையின் குரல் கேட்க, வாசுவாசன் பேரபிள்ளைகளுடன் நேரத்தை செலவிட சென்றார்.. அதே நேரத்தில் மாயாவின் அலைபேசி ஒலி எழுப்ப ஆரம்பித்தது...

அம்மாவுடன் பேசி முடித்த உடனே , மாயா-வை அழைத்திருந்தான், ஷிவவாசன்.

வீட்டிலோ, "அத்தை ஒரு வார்த்தை கூப்பிட்டோடனேயே ஓடறாரே இந்த மாமா ?"என்று மத்திம வயது தம்பதியின் கெமிஸ்டரி -யை யோசித்து கொண்டிருந்த மாயா, பேசியை காதில் வைத்து,"ஹலோ, சொல்லுங்க.. எப்படி போச்சு மீட்டிங்?"

"சூப்பர் ... MOU & அக்ரீமெண்ட் சைன் ஆகிடுச்சு.. இன்னும் ஒரு அஞ்சு வருஷத்துக்கு AMC - ம் சேர்த்தே கொடுத்துட்டாங்க... ,சிம்பிளா உன்னை மாதிரி சொல்லணும்-ன்னா ... ஒரு மைல் கல்.. தொட்டிருக்கோம் ."

"வாவ்... வெரி நைஸ் .. "

"சரி அங்க என்ன லேட்டஸ்ட் நியூஸ்?", எந்த சேனலை மாத்தினாலும் உன் முகம் தான் தெரியுதாம்..., என் மொபைல் வாட்ஸ்சாப் நிறைஞ்சு வழியுது .. Friends , family எல்லாம் கேள்வி கேட்டு அனுப்பி இருக்காங்க..."

"நான் மேம்போக்கா பேசி மேனேஜ் பண்ணிட்டேன்.... நீங்க எந்த விஷயத்தையும் வெளில சொல்லாதீங்க..."

"எஸ் மேம்.. நீ சொல்லி நான் எதை நோ சொல்லி இருக்கேன்?", என்றான் வழக்கம் போல்.

"ஆமா, எல்லாத்தயும் கேக்கறா மாதிரிதான்?", இவள் சாதாரணமாய் கூற......

"அடிப்பாவி... நீ சொல்றா மாதிரி தானே எல்.....லா...மே பண்றேன்.", என்று அவன் அழுத்திக் கூற... குரலிலோ குறும்பு கூத்தாடியது..... கேட்ட இவள் முகம் செம்மையுற்றது..

."நான் எதை பத்தி பேசினா நீங்க எதை பத்தி சொல்றீங்க?" ,

"நீ எதை நினைக்கிறயோ அதை தான்டீ நானும் கேக்கறேன்... எதை மாத்தணும்-னு சொல்லு மாத்திடலாம்", என.. மேலும் உல்லாசமாய் தொடரவே ,

சிரித்துக் கொண்டே, "என்கிட்ட அடி வாங்கி ரொம்ப நாளாச்சு. அதான் இப்படிலாம் பேசறீங்க ?",

அவள் வார்த்தையின் குழைவை ரசித்தபடியே.."ஏய், உண்மையா சொல்லு, இப்படி பேசினா உனக்கு பிடிக்காதா?", என குரலை குறைத்து காதோடு ரகசியமாய் பேச.. ....

தாறுமாறாய் எகிறிய மூச்சை கட்டுக்குள் கொண்டு வந்து ,"ம்ப்ச்.. ஷிவா...வீட்டுக்கு வாங்க ,பேசலாம்.", என்று மாயா கிசுகிசுக்க....

"யாஹூ....சிக்னல் கிடைச்சாச்சு.. இப்பவே அப்ளை பண்றேன் , எனக்கு இன்னோரு ட்வின்ஸ் .."

"ஷ்ஷிவ்வா .... வீட்டுக்கு வாடா.. உன்னை வச்சுக்கறேன்", என்று பல்லை கடித்தாள் ..

"ஒகே. ஓகே...வச்சுக்க.. வச்சுக்க”,... என்று சிரிக்க....

"வாட்?, ஏய்..!!!!"...., இவள் போலியாய்...உஷ்ணமாக...

"போடி போடி ...உன் உட்டாலக்கடி வேலையெல்லாம், என்கிட்டே வேணாம், மூச்சு விடறதை பாத்தே நைட் ஷோ உண்டா இல்லையானு சொல்லிடுவோமாக்கும்", என்று இவளை ஓட்ட ...

இதற்கு மேல் தாங்க முடியாதவளாய்....

"நான் போனை வைக்கிறேன், நீங்க பேசிட்டே இருங்க.."

"அடியேய் .... இங்க பேசிட்டு இருக்கவா இவ்ளோ நேரம் ஜொள்ளினேன்?",

"பின்ன கிளம்பவே இல்லையே?",

"அவ்ளோ அவசரம்?"

"உஷ்.... ஷிவா.... ப்ளீஸ்..", கண்டிப்பாய் சொல்லத்தான் நினைத்தாள்.... குரல் ஹஸ்கியாய் வந்து காலை வாரியது....

ஷிவாவும் "ஓகே கிளம்பிட்டேன். .பை ", என்று சிரித்துக்கொண்டே காரைக் கிளப்பினான்...

காரில் சரோஜ் நாராயணசாமி-யை ஒத்த குரலில் ஒருவர் செய்தி வாசிக்க, அதுவும் அமைச்சர் மணிவேல் கைது குறித்தே.... இளநகை ஓடியது சிவாவின் முகத்தில்..

இரு வாரங்களுக்கு முன்... ஷிவா மாயா வின் வீட்டில்..[ பிளாஷ் பாக் -க்கு போடற கொசுவர்த்தி ப்ளீஸ்..]

அந்தி மயங்கிய நேரத்தில், அலுவலகத்தில் இருந்து வந்தவன், மிக தீவிரமான சிந்தனையில் இருந்தவளை பார்த்து, "மாயா.. , என்ன உன் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு? எதுக்கு பிரைவேட் செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணியிருக்க?எனி சீரியஸ் ப்ராப்ளம்?", என வினவ,

சற்றே பெருமூச்சுடன்..." யா...சீரியஸ் தான். இப்போ, கொஞ்ச நாளா, யாரோ ஃபாலோ பண்ற மாதிரி தோணுது."

"வாட் ?", சற்று அதிர்ந்தவன், "என்ன விஷயம்ன்னு வாய தொறக்கிறாயா?." நறநறத்தான். விஷயம் அவளின் பாதுகாப்பு குறித்தது அல்லவா? ....

மாயாவோ , இதெல்லாம் நாங்க எவ்வளவு பாத்துட்டோம் என்ற பாவனையுடன், அலட்டலில்லாமல் இவர்களின் புலன் விசாரணையை பற்றி கூற ஆரம்பித்தாள்..

“ யா... ஒரு ஆள், அவர் சம்பந்தப்பட்ட விஷயங்கள், அவர் கூட லிங்க்-ல இருக்கிற மத்தவங்களைப் பத்தின விவரங்களை ஸ்டடி பண்ணிட்டு இருக்கோம். இன்னும் கொஞ்சம் டீடைல்ஸ்க்கு காத்திட்டு இருக்கோம், நாம அவரைப் பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணறது, அவருக்கு தெரிஞ்சிருக்குமோ-ன்னு ஒரு டவுட்..., அதனாலதான் நமக்கு பிரைவேட் செக்யூரிட்டி கார்ட்ஸ் போட்டேன்..",

"ஓ , ஆளு யாரு? பெரிய ஆளா?"

"அமைச்சர் மணிவேல்"...

“வாட்.???!!!.... பவர்-ல இருக்கிறவரையே-வா ? ஏன்? எனக்கு தெரிஞ்சு அவர் எந்த வம்புக்கும் போகாத மனுஷன்.. infact, அவரோட கல்வித்துறை-ல நிறைய நல்ல மாற்றங்கள் பண்ணி இருக்காரே?”

"எஸ், அதெல்லாம் அவருக்கு உடம்பு சரியில்லாம போறதுக்கு முந்தி..."



"ஆமா... நடுல ஒரு நாலு மாசம், கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்து வந்தார்.. இப்போதான் அப்பப்போ அரசு விழா-ல தலை காட்டிட்டு இருக்காரே?, என்ன பிரச்சனை?"

"பெரிசா ஒண்ணுமில்ல..அமைச்சர் மணிவேல்-ன்ற வேஷத்துல இருக்கிறது, அவரோட தம்பி விநாயக மூர்த்தி..", பட்டென உடைத்தாள்.

"வாட்? ", ஹை டெசிபலில் அவனை அறியாது அலறியவன், "அப்போ மினிஸ்டர்?"

"அது மில்லியன் டாலர் கேள்வி"

"இந்த ஆள் மாறாட்டத்துக்கு உண்டான ஆதாரங்களை தேடி தான் கணேஷ் இப்போ ஊர் ஊரா போய்ட்டு இருக்கான்"

"எங்க?"

"மில்ஸ்டவுன், நியு ஜெர்சி"..

"மாயா.. .. இப்படி மணி ரத்னம் பட வசனம் மாதிரி பேசாம, எனக்கு கிளியர் பிக். கொடு...", என்றான் பொறுமை இழந்தவனாய்...

"ஓகே.. நான் முதல்லேர்ந்து வர்றேன்.. ஏழு மாசம் முன்னால, கோயமுத்தூர்ல ஒரு கார் விபத்து நடந்தது..ஞாபகம் இருக்கா? அதுல ட்ராவல் பண்ணின மூணு பொண்ணுங்க, டிரைவர் எல்லாருமே இறந்துட்டாங்க.... பொண்ணுங்களுக்கு 13 டு 15 yrs தான் இருக்கும்... வண்டி எது மேலயும் மோதலை. அவிநாசி மெயின் ரோட்ல கிட்டத்தட்ட ½ மணி நேரமா கேட்பாரில்லாம அனாமத்தா நின்னிட்டு இருந்தது... நைட் நேரம்ங்கிறதினால, போலீஸ் சந்தேகப்பட்டு பாத்தப்போ.... உள்ள இருந்த யாருமே உயிரோடஇல்லை.. அவங்க உயிர் போக காரணம்.. இன்டெர்னல் லீக் ஆப் கார்பன் மோனாக்சைடு. அதாவது காரோட கரும்புகை வெளியே போகாம , காருக்குள்ள போய் எல்லார் உயிரையும் வாங்கி இருக்கு..

[ஓரொரு வண்டிலயும், சைலென்சர் வழியா கருப்பா வெளியேர்ற புகை தான் CO - ங்கிற கார்போன் மோனாக்சைடு. இதுக்கு கலர் கிடையாது, வாசனையும் கிடையாது, அதைவிட அது லீக்-ஆனாலுமே , நாம அதை சுவாசிச்சிகிட்டே இருந்தாலும், நாம அதுதான் சுவாசிச்சிட்டு இருக்கம்னு் கூட நமக்கு தெரியாது...]

கண் எரிச்சல், தலை சுத்தறது இந்த அறிகுறி-லேயே , நாம அந்த இடத்தை விட்டு வெளில வந்துட்டா, நாம safe .. இல்லன்னா... மயக்கமாகிடுவோம்... தொடர்ந்து புகை உள்ள போச்சுன்னா... கத்தியின்றி ரத்தமின்றி எந்த ஒரு கத்தலும் வலியும் இல்லாம மோட்சம் தான்..."

http://www.hse.gov.uk/gas/domestic/co.htm]

"சரி அது எதிர்பாராம நடந்த விஷயம், அதுக்கும் ..." ஷிவா குறுக்கிட...

அவனை நேர்பார்வையாய் பார்த்து, "பொறுமை பாஸ்...பொறுமை.."

"அந்த கார் மினிஸ்டர் மணிவேல் .. தம்பி விநாயக மூர்த்தியோட.. பையன் பூபேஷோடது ... கார் இம்போர்ட்டட், விநாயகம் பேர்லதான் எல்லா பண பரிவர்தனையும். நடந்துருக்கு... ஆனா பாருங்க.. அந்த காருக்கு, எந்த சேதாரமும் இல்ல."

“இதை பாத்த போலீஸ், வண்டி ஓனர் யாரு ன்னு பாத்து , அவரை காண்டாக்ட் பண்ணிருக்காங்க.. இது போலீஸ் அந்த ஸ்பாட் க்கு போய் , பத்து நிமிஷத்துல நடந்தது.. அடுத்த 15 நிமிஷத்துல , கார் ஓனரை மாத்திட்டாங்க..”,

“வாட்?.. இதென்ன கதையா இருக்கு?, போலீஸ் கிட்ட போனா காரோட பார்ட்ஸ் மாறும்-ன்னு கேள்விப் பட்டு இருக்கேன்.. எப்படி ஓனரை மாத்தினாங்க?”

“ரொம்ப ஸிம்பிள். ஒரு லஞ்சம் வாங்கற RTO , ஒரு போலியான அட்ரஸ், எப்பவோ செத்துப்போனவனோட வோட்டர் ஐடி.. சார் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்ஸ்... இருந்தா ஈஸி-யா பண்ண முடியும்... பணக்காரராச்சே...? காசு கொடுத்து ரொம்ப சுலபமா முடிச்சுட்டார்."

"காரோட ஓனர் இல்லாததால, அந்த காரை ஒட்டி இறந்து போன ட்ரைவர்தான் , வண்டியை திருடிட்டு வந்ததா சொல்லி அந்த பொண்ணுங்க கேஸை ஊத்தி மூடிட்டாங்க... காரையும் பெங்களூரு-க்கு கொண்டு போய்ட்டாங்க..."

“ஒரே நேரத்தில காரையும் காப்பாத்தி, பொண்ணுங்க கேசும் அவர் மேலயும், பையன் மேலும் விழாம காசை குடுத்து சரி பண்ணிட்டார். விநாயகம் தப்பிச்சிட்டாரு.. அல்லது அப்படின்னு நினைச்சார்...”

"ஆனா ஒரு பொண்ணு மறைவா இருந்து இதையெல்லாம் கவனிச்சு, அந்த RTO வோட, போலீஸ் பேரம் பேசறதையம், பணம் கொடுக்கறதையும் போட்டோவும் எடுத்துட்டா.... அவ ஷண்மதி , நம்ம ஷானு ....."

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)

பொன்னயே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்!..
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!..... (நின்னையே!)

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா! ...... (நின்னையே!)

யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்!
மேவுமே!, இங்கு யாவுமே கண்ணம்மா..... (நின்னையே!)[/QUOTE]

- மகாகவி சுப்ரமணிய பாரதியார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top