UVVP 03

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
UVVP - 3

இன்னமும் மாயாவின் அலுவலகத்தில், அமைச்சருடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருந்தது.

" ஹா ஹா ஹா , மக்களா? ஒரு பொய்யை பத்து தரம் திருப்பி சொன்னா.. உண்மையா இருக்குமோன்னு சந்தேகப்படுவாங்க... 20 தரம் சொல்லும்போது,, அவங்களே அதை உண்மையா , பொய்யான்னு ஊர் பூரா கேட்டு அதை பரப்ப ஆரம்பிச்சிடுவாங்க.... இன்னும் அழுத்தமா சொன்னா, அதான் உண்மைன்னு நம்பிடுவாங்க, 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ...அவங்களோட எதிர்கால அஞ்சு வருஷத்தை எங்களை மாதிரி ஆளுங்ககிட்ட அடகு வைக்கிற செம்மறி ஆட்டு கூட்டம் தானே?.", அத்தனை திமிர் இருந்தது அவர் பேச்சில்....

" நீங்க குடுக்கறதினாலதானே அவங்க வாங்கறாங்க.."

" அவங்க வாங்க மாட்டேன்-ன்னு ஒரே பிடியா நின்னா, நாங்க எப்படிம்மா.. கட்டாயப்படுத்த முடியும்?, என்று நிறுத்தியவர்..."but அதை பத்தி பேச நான் இங்க வரல"

“ம்ம்... கரெக்ட் தான்.”, சின்ன பெருமூச்சுடன்.. டப்ளீஸ்.. காஃபி ஆறிப்போகும்.. குடிங்க”, என்று கூறி.. இவளுடைய கப்பையும் கையிலெடுத்து, ஆழ்ந்து யோசிப்பது போல.. நிறுத்தி நிதானமாய் காஃபியை குடித்தவளின் பார்வையோ அலைபேசியில்... அவளுக்கான சிக்னல் வர...“என் தம்பிய கன்சல்ட் பண்ணாம நான் எந்த முடிவும் எடுக்கறதில்ல", என்று இழுக்க ....

"சரி... ஈவினிங்குள்ள எனக்கு நல்ல பதிலா தர்ற.. பாத்து பதவிசா இருந்துக்கோ, ஓகே?", என்றவாறே எழுந்து வெளியே செல்ல துவங்கினார்...

அவர் வெளியேறிய அடுத்த நொடி.. "கிளம்பியாச்சு...", என வாட்சப்ப , DCP யின் அலைபேசியில் இருந்து , " உயர்த்திய கட்டை விரல் " பதிலாய் பெற்றாள்.

அமைச்சரின் கார், மாயா அலுவலகம் விட்டு வெளியே சென்ற 5 நிமிடத்துள், DCP ரகோத்தமன் & டீமினால் மறிக்கப்பட, அமைச்சர் காரிலிருந்து இறங்கி,

"என்னப்பா உங்களோட தொல்லையா போச்சு?, இந்த செக்யூரிட்டி ப்ரோடோகால் வெங்காயமெல்லாம் வேணாம்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறீங்க.., இங்க பாரு முன்னாலயம் பின்னாலயும் போலீஸ் கார்...". , என பொரிய ஆரம்பிக்க..... அமைச்சர் செல்வதென்னவோ, அவருக்கு செண்டிமெண்ட்-டான காரில், கூடவே அந்த பிரத்யேகமான ஓட்டுனருடன் மட்டும் தான்...ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக... முன் பின் கார்கள்... மற்றும் காவலர்கள். அனைவரும் இவரின் சிபாரிசால் அல்லது ஜாதியால் , இவரிடம் பயன் பெற்றவர்களே... சுருங்க கூறின்.. கைப்பாவைகள்...

“சாரி சார், நான் பந்தோபஸ்துக்கு வரலை... உங்களை கைது பண்ண சொல்லி உத்தரவு ", அமைச்சரை இடையிட்டார்

சொன்ன DCP -யை குழப்பமாய் பார்த்து, “யோவ் ... என்னய்யா உளர்ற? "

மேல்நோக்காய் பார்த்தபடி.. , " இது வாரண்ட்...."

"நான் யாருன்னு தெரியுமில்ல?"

“தெரியுமே!!”, என்றார் DCP கூலாக..

“எனக்கு சல்யூட் அடிச்சு செக்யூரிட்யா நிக்க வேண்டியவன், என்னயே கைது செய்யறியா?, நான் ஆளுங்கட்சி அமைச்சர். .. ?”, அவர் எகிறிக் கொண்டிருக்க.....

DCP, " .ம்ம்ம் ", ரகோத்தமனின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு... அவர் கை தானாய் தாடையை தடவியது...

“என்னைக் கைது பண்ணனும்-னா முதலமைச்சர் உத்தரவு வேணும்.”, என்று சத்தம் போட...”அதுவும் தெரியும். இது கூட தெரியாமலா நான் DCP ஆயிருப்பேன்?”, என்று எதிர் கேள்வி கேட்க.. மேலும் டென்ஷனானார்.. அமைச்சர்.

“என்ன கேஸ்?, எதுக்கு அவரை கைது பண்றீங்க?”, கூடியிருந்த கும்பலில் இருந்த கட்சி விசுவாசி கேள்வி கேட்க, இனி அமைதியாய் இருந்தால் கலவர சூழல் வரலாம். “யாருய்யா நீ? அவரோட அல்லக்கையா? வா ஸ்டேஷன்ல வந்து தெரிச்சுக்கோ..., என்றவாறே , கான்ஸ்டபிள்ஸ், இவரையும் தூக்கி கார்-ல போடுங்க....சாருக்கு என்ன கேஸுன்னு தெரியணுமாம் ..."என்று கூறி முடிக்கும் முன் கேள்வி கேட்டவன் காணாமல் போயிருந்தான்.

“அது!!”, கீழ்க் கண்ணால் அவன் கும்பலில் இருந்து நழுவி செல்வதை நோட்டமிட்டு...

அமைச்சரை நோக்கி “சார் நீங்க கொஞ்சம் கோ-ஆப்பரேட் பண்ணுங்க”, என்று கண்டிப்பாய் கூறி …. அவரை அரசு வாகனத்தில் ஏற்றினார்.. “ஒ.கே.. எல்லாரும் கலைஞ்சு போங்க.. கான்ஸ்டபிள் ட்ராஃபிக்-கை க்ளியர் பண்ணுங்க..”, சராமாரியாய் உத்தரவிட்ட பின் தானும் கிளம்பினார், மாயாவின் அலுவலகம் நோக்கி....

அங்கு சென்ற DCP– யை வரவேற்ற மாயா, “வாங்கண்ணா... வேலை இருந்தாதான் இங்கல்லாம் வருவீங்க?", “நீங்க கேட்ட..எல்லாம் எதிர்பார்த்ததைவிட வேகமாவே ரெடியாச்சு .”, என்று ஒரு காகித உறையை கொடுத்தாள். அதில், அவள் தயாராய் வைத்திருந்த கம்பளைன்ட் லெட்டர் , ஒரு சிறிய மெமரி கார்டு (அதில் அமைச்சர் பேசிய அனைத்தும் பதிவாகி இருந்தது.)..., மேலும் கணேஷ் இதுவரை சேகரித்து வைத்திருந்த ஆதாரங்கள் இருந்தன. " நாங்க ரெண்டு பேரும் பேசின conversation , அப்பறம் நீங்க கேட்ட எவிடன்ஸ்: இனி அமைச்சர்.. சாரி .. அவர் ... உங்க பொறுப்பு...",என்றாள் மாயா.

இதைத் தவிர, இருவர் உரையாடலும் லைவ்- ரிலே யாய்.. போலீஸ் கண்ட்ரோல் ரூமில் ஒளிபரப்பி இருந்தாள், மாயாவின் செயலாளர் வைதேகி. நாளை நீதிமன்றத்தில், நான் அவன் இல்லை… என் குரலை மிமிக் செய்து விட்டனர் , என்ற வாதத்திற்கும் முன் யோசனையுடன் வேட்டு வைத்திருந்தாள், மாயா....

இவள் ஒளிபரப்பிய நேரடி காட்சிகளை, DCP, முதலமைசரின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்ப..., அவர் அமைச்சருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்க... அதைத் தொடர்ந்தே அமைச்சரின் இந்த கைது நடவடிக்கை... வாரண்ட் வரும்வரை, அமைச்சரின் கவனத்தை ஈர்த்த, நேரம் கடத்திய மாயாவிற்கு ப்ரத்யேகமாய் நன்றி கூறி,

“மாயா, அமைச்சர் விஷயம் எதுவும் வெளிய தெரிய விடக் கூடாதுன்னு மேலிடத்து உத்தரவு”,

“ஆனா , ஏன்?, சாட்சி இருக்குங்கிறப்போ அதை சொல்ல என்ன தயக்கம் ?”

“இவருக்கு பின்னால யாரெல்லாம் இருக்காங்க-னு தெரியனும்...அதோட கட்சி-ல தேவையில்லாத குழப்பங்கள் வரும்-னு CM feel பண்றார்., So... matter very confidential.”, என்று கூற,

“ம்ம்ம்... இதிலேயும் அரசியலா?, சரிண்ணா....இப்போ அவரை எந்த கேஸ்-ல புக் பண்ணி இருக்கீங்க?”, என்ற் மாயா வினவ...

“இருக்கவே இருக்கு குட்கா.. கூடவே ஹவாலா, ஏதாவது ஒண்ணு.., நீ இதுல எதையும் தெரிஞ்சா மாதிரி காமிக்காதே”, என்றவாறே விடை பெற்றார் டெபுடி கமிஷனர்.

சற்றே துள்ளலுடன் மாயாவின் அறைக்குள் நுழைந்த வைதேகியின் கையில்...சூரியக்கதிரின் தலையங்கமாய் , "அமைச்சர் மணிவேல் கைது" மின்னியது..

ஈரம் உலராத அந்த தாளினை கையில் வைத்துக் கொண்டு "நல்லா இருக்கா மேம்...?", "நாளைக்கு ஹெட்லைன்ஸா கொடுத்துடலாமா?", ஆர்வமாய் கேட்ட வைதேகியை பார்த்து முறுவலித்தாள்.

"அமைச்சர் மணிவேல் கைது "-தலையங்கம் பார்த்து , பெருமூச்செறிந்தாள் , மாயா.... இந்த சூழ்நிலையை , இவள் எதிர் பார்க்கவில்லை., கைது மற்றும் அதன் பிண்ணனி குறித்து எதுவும் வெளியிட முடியாத சந்தர்ப்பம்.. ஆனால் கணேஷின் தகவல் பொய்யாய் இருக்க வாய்ப்பில்லை. இவை அனைத்திற்கும் மேலாக சாட்சி பிறழ்வதற்கு முன், இந்த கைதை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயமும் ..

நிமிடத்தில் செய்தி தீயாய் பரவி இருக்கும்.. இனி நிருபர்களைக் காண, அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

கணேஷ் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அலைபேசியை எடுத்து அவனக்கு அழைக்க நினைக்க, ஷிவாவிடமிருந்து அழைப்பு வந்தது.

அடடா, இன்னும் இவரை கூப்பிட்டு சொல்லவில்லையே?, மனதுள் நினைத்தபடி.... "சொல்லுங்க", என்று ஆரம்பிக்கும் முன், அவன் படபடத்தான் ..

" மாயா....எனி ப்ராபளம் ?, "

"நத்திங் டு ஒர்ரிபா, நேர்ல வாங்க சொல்றேன்...",

"இங்க வர்ற மாதிரி சிச்சுவேஷன் இல்ல.., இப்போதைக்கு நகர முடியாது. ஜெர்மன் டெலிகேட்ஸ் வந்துருக்காங்க.... MOU இன்னிக்கே கையெழுத்தாகணும்.. ஆனா, வரணும்-ன்னா சொல்லு GM -ஐ மேனேஜ் பண்ணிக்க சொல்லிட்டு வர்றேன்... அங்க ரிப்போர்ட்டர்ஸ் குவிஞ்சிட்டு இருக்காங்க-னு நியூஸ் வருது...”, என்று வேகமாய் கேட்டவன்.... "கணேஷ் கூட இருக்கானா?"... என்றவன் டென்ஷன் மிகுந்திருந்தது...

"ம்ம்.. கணேஷ் க்கு இனிமே தான் போன் பண்ண போறேன்., அவன் வர்றானான்னு தெரியல."

"மாயா.., கணேஷ் இல்லன்னா, அப்பாவை வர சொல்லட்டுமா?"

“நான் பார்த்துக்கறேன் பா., முடிச்சுட்டு நேரா மாமாவைத்தான் பார்க்க போறேன்... சும்மா டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் பண்ணாதீங்க.” கொஞ்சம் குரல் உயர்த்தினாள்...

“ சரி..சரி. போகும்போது ஸெல்ப் டிரைவிங் வேண்டாம். டிரைவர் கூட போ . டேக் கேர் ", சற்றே கவலையோடு பேசினான்....

"இன்னும் அரை மணி நேரத்துல நம்ம வீட்ல இருப்பேன்", என்றவள்... அடுத்து தம்பியை அழைத்தாள். இரண்டாவது ரிங் கில் எடுத்தவன், "சொல்லுக்கா" என்றான். " எங்க இருக்க, கணேஷ்?, இங்க நம்ம ஆபிஸ்-ல ரிப்போர்ட்டர்ஸ் வந்திருக்காங்க... அவங்களை பாத்து பேசிட்டு நான் வாசு மாமா-வை பார்க்க போறேன். இங்க வர்றியா?",

"இல்லக்கா, இப்ப நான் வர முடியாது.. நாம தொட்ட விஷயம் டீப்பா போகுது. நான் இங்க DCP சார் கூட, அவரோட ஆஃபிஸ்-ல இருக்கேன்....", என்று தொடர்ந்தவன் "நீ சமாளிச்சுடுவியாக்கா?", என்றான் கேள்வியாக....

இன்னும் சிக்கலா? என்னவாக இருக்கும், மனம் வேகமாய் கணக்கு போடஆரம்பித்தது. "நான் பாத்துக்கறேன்.. நீ கொஞ்சம் அலெர்ட் ஆ இரு...".

"ஓகே க்கா.. "

வேக நடையுடன் பார்க்கிங் வந்தவள்..., வாசலில் இருந்த நிருபர் கூட்டத்தை கண்டதும், சற்றும் பின் வாங்காமல், நேரடியாக அவர்களிடம் சென்றாள் .. "பிரண்ட்ஸ்..", சிறிது நிறுத்தியவள். "yes yes ...எங்க ஆபிஸ் வந்துட்டு போனதுக்கு பின்னாடி தான் அமைச்சர் மணிவேலை கைது பண்ணினாங்க....ஒரு சின்ன வாக்குவாதம்.. சாதாரனமா அதிகார துஷ்ப்ரயோகம் அண்ட் மிரட்டல் –nnu ஒரு புகார் கொடுத்திருக்கேன்.. ஆனா, அதுக்குத்தான் இந்த கைதான்னு எனக்கு தெரியாது... ", சிறிது நிறுத்தி....

"அதுவும் இவ்வளவு வேகமா நம்மள மாதிரி சாதாரண ஆளுங்களோட புகாருக்கெல்லாம் நடவடிக்கை எடுப்பாங்களா-ன்னு உங்களை போலவே நானும் குழப்பமாதான் இருக்கேன்... நாம இப்போ கேள்வி கேட்க வேண்டியது போலீஸ் டிபார்ட்மெண்ட், & கவர்ன்மென்ட். இதைத் தவிர விஷயங்கள் ஏதாவது தெரிஞ்சா கண்டிப்பா சக பத்திரிகை ஆசிரியரா.. உங்க கிட்ட ஷேர் பண்றேன்.". என்று மிக தெளிவாக உரைத்து.."இப்போதைக்கு பை.. ", சொல்லி கிளம்பினாள்...


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.

மகாகவி சுப்ரமணிய பாரதியார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top