unnil naan thozhiyae...!!!!-4

Advertisement

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புக்களே,

இதோ அடுத்த 4வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...
images (2).jpg
அத்தியாயம்-4


அடுத்து வந்த 2 மாதங்களும் முடிவடைய மும்பை போவதற்க்கான நாளும் வந்தது.டிக்கெட் எடுத்து வந்த நாளில் இருந்து இந்த 2 மாதங்ளும் விஸ்வா இருவரையும் கண்காணித்துக்கொண்டு இருந்ததில் இருந்து அவனுக்கு மும்பை இருவருக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிந்தது.அதனால் இருரையும் காலேஜில் உள்ள ஹாஸ்டலில் தங்க வேண்டாம் என்று சொல்லி அவனுக்கு தெரிந்த, கார்த்திக் ஐ.பி.ஸ் அவர்களின் வீட்டில் தங்க ஏற்ப்பாடு செய்திருந்தான்.

இதனால் மற்றவர்கள் அனைவரும் இருவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நிம்மதியுடன் இருந்தார்கள்.ஹனி மற்றும் நித்திக்கு அது சுத்தமாக பிடிக்கவிலை.என்னென்றால் மும்பையை நன்றாக சுத்த வேண்டும் என்று ப்லான் போட்டு வைத்திருந்தனர். ஆனால் கார்த்திக் ஐ.பி.ஸ் ரெம்போ ஸ்ட்ரிக்ட் ஆனா ஆபிஸ்சர் நம்மளாள இங்கயும் போக முடியாது என்று நினைத்து கவலையில் இருந்தனர்.



அனைத்தையும் பேக் செய்து விட்டு அனைவரும் இரயில் நிலையத்திற்க்கு வந்தனர்.பார்வதியும் சுமதியும்,நித்தி மற்றும் ஹனியிடம் அங்க போய் எங்கயும் சுத்தக்கூடாது. அது ஒன்னும் மதுரை கிடையாது.எதுனாலும் கார்த்திக் சார் கிட்ட சொல்லிட்டுதான் போகனும் புரியுத என்று கூற ஹனி.ஐய்யோ இதையே எத்தனை தடவை சொலுவிங்க.நித்தி,கவலைப் படாதிங்க.நாங்க எங்க போனாலும் அந்த தாத்தாகிட்ட சொல்லிட்டுதான் போவோம் போதுமா என்றுசொல்ல.



சுபா, மும்பையில் இருந்துவரும் போது எனக்கு எதாவது வாங்கிட்டுவங்க என கூற ஒகே என்றாள் ஹனி.. விஸ்வா,நித்தி இங்க வா இந்த லக்கேஜ்ல சரியா இருக்கானு பாரு என கூற அண்ணா எல்லா லக்கேஜ்யும் சாரியாதான் இருக்கு அண்ணா என்று கூற அங்க போய் அமைதியா இருக்கனும்.அவங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்ககூடாது.எதாவது பிரச்சனைனா கார்த்திக் சார்கிட்ட சொலுங்க புரியுதா என்று கேக்க, புரியுது அண்ணா என்று சொல்ல,ஒகே நித்தி செல்லம் என்று விஸ்வா கூற நித்தி மற்றம் ஹனி அனைவரிடமும் விடைபெற்று இரயிலில் ஏறி தங்களது மும்பை பயணத்தை தொடர்ந்தனர்.



இரண்டு நாள் பயணம் முடிந்து மும்பைக்கு வந்து சேர்ந்தனர்.ஹனி,கார்த்திக் சார் வருவங்கனு அண்ணா சொன்னாங்க.ஆனால் இங்க யாரும் இல்லை என்று கூற எங்கயாவது நடக்கமுடியாம சிட் பண்ணிருக்காரானு பாரு அப்படியும் யாரும் இல்லைனா வா அப்படியே ஹாஸ்ட்டால் போய்ருவோம் என்று நித்தி கூறியதை பார்த்த ஹனி ,இந்த அண்ணாக்கு அறிவு இல்லை அவரு எப்படி இருப்பாருனு ஒரு போட்டோ அனுப்பி இருந்துருக்கலாம்.



நமக்கும் கண்டுபிடிக்க ஈசியா இருந்துருக்கும்.நித்தி, ஏய் ஹனி நீ என்ன அவர கல்யாணமா பண்ண போற உன் கிட்ட போட்டோ காட்ட என கூற, ஏய் எருமமாடு வாய் பேசாத கொண்ணுடுவேன் என கூறி ஹனி முறைக்க நித்தி, அமைதியாக சிரிக்க,எப்ப எதுக்கு சிரிக்கிற என்று கூறிய ஹனியை பார்த்து அது ஒன்னும் இல்லை செல்லம் உனக்கும் அந்த கார்த்திக் தாத்தாக்கும் கல்யாணம் நடந்த எப்படி இருக்கும்னு நினைத்து பார்த்தேன்.வாயை மூடிக்கிட்டு வா இல்லைனுவை சேவுலு பிஞ்சுரும் என்ற ஹனியை பார்த்து ஐய்யோ டார்லிங் கோவப்படதிங்க என்று நித்தி கூற இரண்டு பேரும் சிரித்துக்கொண்டே இரயில் நிலையத்திற்க்கு வெளியில்வந்து ஆட்டோவை கூப்பிட நின்றனர்.



அவர்கள் முன் ஒரு கார் வந்து நின்றது.காரில் இருந்து இறங்கிஆறடி உயரத்தில் கம்பிரமாக வந்தவன்.வண்டில ஏறுங்க என்று கூற ஹனி,நீ யாரு கார்த்திக் சாரோட ட்ரைவரா என்று கூற, ஆமா மேடம் வண்டில ஏறுங்க என்று சீற,நித்தியும்,ஹனியும் ட்ரைவரே எப்படி சிடுபெஸ்ஸா இருக்கான்.வீட்டில இருக்குற கார்த்திக் சார் எப்படி இருப்பாரோ என்று நினைத்துக்கொண்டுக் காரில் அமர்ந்தனர்.



அவர்கள் அமர்ந்தவுடன் கார் வேகமாக சென்றது.ஹனி, டிரைவர் மெதுவா போங்க இல்லைனா நாங்க கார்த்திக் சார் கிட்ட சொல்லிடுவோம் என்றாள்.ஆனால் அவள் சொல்வதை காதில் வாங்காம வண்டியை ஒட்டினான்.



கார் ஒரு பெரிய வீட்டின் முன் வந்து நின்றது. அந்த வீடே அவர்களின் செல்வாக்கை சொன்னது.கார் வரவும்,முத்தையா வேகமாக வந்து கேட்டை திறந்துவிட்டார்.காரை நிறுத்தி விட்டு இருங்குங்க என்று சொல்லி விட்டு சென்றவனை பார்த்து ட்ரைவர் லக்கேஜ்ல யாரு எடுப்பா என்று கூறி நித்தி அவனை சீண்ட.மதுலா உள்ளே இருந்து ஆராத்தி தட்டுடன் வந்தாள்.



ராமசாமி இங்க வந்து கார்லஇருக்குற லக்கேஜ்ல எடுத்துட்டு வாங்க என்று கூற அவர் அனைத்தையும் உள்ளே எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்ல.மதுலாஆராத்தி எடுக்க ஹனியிடம் நித்தி,கண்பாம் என்று கூற ஹனி, அவளை உள்ள வாடி உனக்கு இருக்கு என்று கண்ணால் மிரட்ட. மதுலா, என்ன தேன்மொழி நித்தியாவை ஏண் முறைக்கிற என்று கூற அதலாம் ஒன்னும் இல்லை சும்மா என்று கூறி சிரித்தனார் இருவரும்.



ஆராத்தி எடுத்து முடித்து இருவரையும் உள்ளே அழைத்து சென்றாள் மதுலா.உள்ளே சென்று அந்த வீட்டை பார்க்க அது மிகவும் அழகாகவும் பிரம்பாண்டமாகவும் இருந்தது.சோபாவில் சூரியா மடியில் கவிநாயா இருக்க ஹனி மற்றும் நித்தி சூரியாவை பார்த்துவணக்கம் கார்த்திக் சார் என்று சொல்ல அங்கு வந்த வசந்தா பாட்டி சிரித்துக்கொண்டு நித்தியாம்மா கார்த்திக் இப்பதான் மேலே போனான்.இவன் சூரியா கார்த்திக் ஒட அண்ணண் என்று சொல்ல சாரி சார் என்று ஹனி சொல்ல, சூரியா ,சார்ல வேண்டாம் அண்ணண்னு சொல்லுங்க என்று சொல்ல,மேலே இருந்து கார்த்திக் யுனிப்பாம்மில் வர இருவரும் ஐய்யோ இவர்தான் கார்த்திக்கா நம்மா ட்ரைவர் நினைத்து நிறைய திட்டிடோமே.இப்ப என்ன பண்ணுறது என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, திடிரென்று இருவரும் சூரியா பின்னால் சென்று நின்றுகொண்டானர்.அதை பார்த்த கார்த்திக் சாய்ங்காலம் வந்து உங்கள பார்த்துக்கிறேன் என்ற ஒரு பார்வையை பார்த்தான்.



கார்த்திக் சூரியாவை பார்த்து அண்ணா நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு செல்ல மதுலா கார்த்திக் சாப்பிடு போ என்று கூற, அண்ணி ஆல் ரெடி டைம் அகிடுச்சு நான் கிளம்புறேன் என்று சொல்லிக்கொண்டு போனவனை பார்த்து அமைதியாக அமர்ந்திருந்த கௌதம் , டேய் கார்த்தி சித்து அம்மா தான் சொல்லுறங்கள வா சாப்பிட அப்பதான் நானும் சாப்பிடுவேன் .கார்த்தி அடிங்க என்று கூறிக்கொண்டு அடிக்க கையை ஓங்க கௌதம் ஒடி சென்று நித்தி பக்கத்தில் நின்று கொண்டான்.



நித்தி கௌதமுடன் சேர்ந்துக்கொண்டு அதான் அண்ணி சொல்லுறாங்கல கார்த்திக் சாப்புட வா என்று சொல்ல கார்த்திக் அவளை முறைக்க,இல்லை சாப்புடவாங்க அண்ணானு சொல்ல வந்தேன் என்று சொல்ல,ஹனி சும்மா இரு நித்தி என்று சொல்ல.அண்ணி என்க்கு டைம் இல்ல நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு வண்டியில் பறந்தான்.சூரியா, ஹனி மற்றும் நித்தியை பார்த்து இது உங்க வீடு நீங்க எத செய்யனும்னாலும், எங்க போனும்னாலும் காரை எடுத்துக்கிட்டு போங்க.தனியா எங்கயும் போகாதிங்க டா என்றார்



கவி போய் ஆண்டிக்கு ரூம் காட்டு என்று கூற கௌதம் நானும்போவேன் என்று சொல்லி பெரிய மனுசனாக முன்னால் செல்ல,கவி உக்கு என்று மழழை மொழியில் சொல்ல ஹனி அவளை தூக்கிக்ககொண்டு மாடி ஏறினாள்.வசந்தா, சூரியா இப்பதான் இந்த வீடு அழகா இருக்குப்பா. சூரியா, ஆமா பாட்டி இப்ப நான் ரெம்போ சந்தோஷமா இருகேன்.நான் போய் விருந்துக்கு ஏற்ப்பாடு பண்ணுறேன் என்று சொல்லிக்கொண்டு சென்ற மதுவை பார்த்து நிறையா வேலை பார்க்கத மது என்று சொன்ன சூரியாவை பார்த்து சாரிங்க என்று சொல்லிவிட்டு சென்றாள்.சூரியாயும் கம்பெனிக்கு சென்று விட்டான்.



கவியை பார்த்த ஹனி,நித்தி கவிநயா உன்னமாதிரி இருக்கலா,நித்தி ஆமா அப்படியே என்னை மாதிரி அழகா என்று சொல்ல ஹனி, தெரியாம சொல்லிடேன்.கவி உன்னை விட அழகு என்று சொல்ல, இல்ல கவி எங்க ஜோதி பாட்டி மாதிரி னு அப்பா அடிகடி சொல்லுவாங்க என்றான் கௌதம்.நித்தி, ஆமா கீழ இருந்தாங்களே அவங்கதான் உங்க ஜோதி பாட்டியா என்று கேக்க ,இல்லை அவங்க வசந்தா பாட்டி,எங்க ஜோதி பாட்டி சாமிக்கிட்ட இருக்காங்க என்றான் கௌதம்.அதன்பிறகுநித்தி, பயங்கர யோசனையில் இருப்பதை பார்த்த ஹனி, என்ன ஆச்சு நித்தி எதாவது பிரச்சனையா என்று கேக்க,இல்லை உன்ன பத்திதான் யோசிக்கிறேன் என நித்தி கூற,என்னை பத்தி என்ன யோசிக்க வேண்டிக்கிடக்கு,அது ஒன்னும்இல்லை ஹனி என்று சொல்ல போனவளை கௌதமும்,கவியும் பார்க்க,நித்தி ஹனியின் காதில் சொல்ல அடுத்த நொடி ஹனி காளி அவதாரம் எடுத்திருந்தாள்.......



ஜோதி- கிருஷ்ணன்க்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.முதல் மகன் சூரியா,2வது மகன் கார்த்திக்.சூரியா கிருஷ்ணனின் தொழிலை பார்த்து வருகிறார்.வளர்ந்து வரும் தொழிலதிபர்களுக்கு சூரியா முன் உதாரணம்.சூரியா அவனுடைய எதிரிகளை யாரையும் சாதாரணமாக விட்டதில்லை.



கார்த்திக், எவ்வளவு சொத்து இருந்தாலும் தனக்குனு ஒரு அடையாளம் வேண்டும் என்றும்,சமுதாயத்திற்க்கு எதாவது செய்யனும் என்று சூரியாவிடம் கூறி ஐ.பி.ஸ்.க்கு படித்து முதல் தடவையில் பாஸ் செய்து ஐ.பி.ஸ். ஆனான். பார்க்கும் பார்வையில் அனைவரையும்அடக்குபவன்.குற்றவாளிகளை பார்க்கும் இடத்தில் சுட்டுதள்ளுபவன்.

ஜோதி-கிருஷ்ணன் இறந்தபிறகு கிருஷ்ணனின் அம்மா வசந்தா சூரியாவையும கார்த்திக்கையும் பார்த்துக்கொள்கிறார்.அம்மா இல்லை என்ற குறை இல்லாமல்,நல்லது,கெட்டதை சொல்லி வளர்த்தவர்.



மதுலா சூரியாவின் அன்பு மனைவி,அனைவரிடமும் பாசத்தையும் சமமாக காட்டுபவள்.சூரியாவை காதலித்து மணந்துக்கொண்டவர்.மிகவும் அமைதியானவர்.கௌதம், சூரியா-மதுலாவின் முதல் மகன். 7வயது இளவரசன் பயங்கரமான புத்திசாலி.படிப்பில் படுசுட்டி.அப்பவை போல் கோவம் டண் கணக்கில் வரும். கவிநயா இந்த வீட்டின் செல்ல இளவரசி.3 வயது தேவதை.ஜோதியை போல் இருப்பதால் அந்த வீட்டின் கண்மணி.





 
Last edited:

Chittijayaram

Well-Known Member
Mumbai ku vandutamgala namba vaalumga, inga Enna panramgalo, is sir rumba kovakari pola erukare, is sir ivamgala parthupara terialaye, nice reading mam. Thanks
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top