unnil naan thozhiyae...!!!-3

Advertisement

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புக்களே,

இதோ அடுத்த 3வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...
depositphotos_72648603-stock-photo-silhouette-of-two-friends-with.jpg


அத்தியாயம்-3

பேருந்தில் இருந்து இறங்கி வகுப்பிற்க்கு வந்த ஹனி,ஏன் இன்னும் நித்தி வரல என்று புவனாவிடம் கேக்க, இன்னுமா அந்த குட்டச்சி வரல,இந்த நேரம் வந்திருக்கனுமே என்று சொல்ல காலையில் பார்த்த விபத்து நினைவுக்கு வந்தது.

நித்திக்கு போன் போட அது நாட்ரிச்சபுல் என்று வர, குழப்பமான மனநிலையில் இருக்க அடுத்தடுத்த வகுப்புகளும் முடிய அப்பொழுது ஒரு தெரியாத நம்பரில் இருந்து போன் வந்தது ஹனிக்கு.ஹலோ யார் பேசுறது என்று கேட்க....உங்க பிரெண்ட் நித்திக்கு ஆக்ஸிடன்ட் ஆச்சு,ஹனி, எந்த ஹாஸ்பிட்டல் என்று கேட்டுக்கொண்டு போனைவைத்து விட்டு அழ ஆரம்பித்தாள். அவளின் உயிராக இருக்கும் தோழிக்கு ஒன்னு என்றாள் மனம் உடையதான் செய்தது.மற்ற தோழிகளுக்கு செய்தி தெரியவர ஹனிக்கு ஆறுதல் சொல்ல வழிதான் தெரியவில்லை.

ஹாஸ்பிட்டலுக்கு ஹனி,புவனா,சுதா,ரம்யா சென்று காலையில விபத்து நடந்துச்சினு சொல்லி ஒருத்தவங்கள இங்கு அட்மிட் பண்ணிருக்காங்கள அவங்க எங்கு என்று கேட்க்கும் போது அந்த நர்ஸ் ,அவங்களை ஐ.சி.யுல வச்சிருக்காங்க,அடுத்த நொடி அனைவரும் ஐ.சி.யூ .முன்னாடி இருந்தனர்.

ஐ.சி.யு. ரூம்மை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைய ,ஹனி மட்டும் அழுதுக்கொண்டே சேரில் அமர்ந்திருந்தாள்.ரம்யா,ஏய் ஹனி ஏன்டி அழுகுற ஐ.சி.யு வந்து பார் என்று சொல்ல ஐ.சி.யுவை பார்த்த ஹனி அதிர்ந்து திரும்ப அங்கு ஜாலியா ஜீஸ்ஸை குடித்துக்கொண்டு வந்தாள் நித்தி.

அவளை பார்த்தா சந்தோஷத்தில் அவளை வந்து அனைத்துக்கொண்டா தோழிகளை பார்த்து ஏய்,ஹனி,புல்டோஸ்சர்,இரும்புகுதிரை, ஏன்டி அழுகுறிங்க என்ன ஆச்சி என்று கேட்க,புவனா,உனக்கு ஆக்ஸிடன்ட் ஆச்சுனு சொன்னாங்க ஆனால் நீ என்னனா ஜாலியா ஜீஸ் குடிச்சுக்கிட்டு வார என்று சொல்ல,அதுவா நான்தா இப்ப அந்த ரூம்ல படுத்துகிடக்க வேண்டிது.ஆனா பாவம் எனக்கு பதிலாதா அந்த அண்ணா படுத்துக்கிடக்காரு நான் அந்த ஆக்ஸிடன்ட பார்த்து மயங்கி மட்டும்தான் விழுந்தேன் அதான் ஜீஸ் குடிச்சுக்கிட்டு இருக்கேன் என்று பாவமாக சொன்னவளை பார்த்து அனைவரும் சிரித்தனர்.

ரம்யா சரிவிடுங்க தெரியாம நடந்திருக்கும் வாங்க போலாம் என்றாள்.பாவம் இது ஹனிக்காக நித்தியா மீது வச்ச குறி என்று யாருக்கும் தெரியவில்லை...இதை அனைத்தையும் இரு கண்கள் பாசத்தோடு பார்த்துக்கொண்டிருந்ததை யாரும் பார்க்கவில்லை.., சரி ஹனி இது எங்க வீட்டுக்கு தெரிய வேண்டாம்.அப்புறம் ரொம்ப பயப்புடுவாங்க என்றாள் நித்தி கூற அனைவரும் ஏன் என்று கேக்க..ஐய்யோ அதான் ஆக்ஸிடன்ட் ஆகலைல எதுக்கு அவங்கள பயப்புடுத்தனும்.அவள் சொல்வதில் நியாயம் இருந்ததாள் .அனைவரும் ஒகே சொல்லிவிட்டனார்.



அனைவரும் காலேஜிக்கு வந்து சேர்ந்தனர்.உனக்கு ஆக்ஸிடன்ட் ஆச்சுனு யாரோ போன் பண்ணி சொன்னங்க அது யாரு என்று கேக்க.. அப்படியா யாரு சொன்னா என்று நித்தி குழப்பமாக சொல்ல,தெரில என்று ஹனி சொன்னாள். எப்படி அச்சிடேன்ட் நடந்துச்சு என்று கேட்க..நான் இன்னைக்கு பஸ்ல வராம என்னோட வண்டிலதான் வந்துகிட்டு இருந்தேன்.அப்போ ஒரு கார் ரெம்ப பாஸ்ட்டா வந்துச்சு நான் வண்டில மெதுவாதான் வந்தேன் ......தீடீரென்று எனக்கு முன்னாடி ஒரு கார் நிக்க அந்த கார் இந்த காரை இடிக்க நான் மயங்கி வீழ....அப்புறம் என்ன ஆச்சு னு தெரியல .... கடைசியா நான் கண்ணை திறக்கும் போது என் கைல ஜூஸ் இருந்துச்சு என்று சொல்ல...ஹனி, ஹ்ம்ம் அப்புறம் என்று கேக்க,கெட்டதுலயும் ஒருநல்லது என்று நித்தி கூற, ஹனி என்ன ,அது எனக்கு ஓசியா ஜூஸ் கிடைச்சது என்று சொன்ன நித்தியை ஹனி அடிக்க.என்ன ஹனி எப்ப பார்த்தாலும் என்ன அடிக்கிற என்று பாவமாக சொல்ல.



உன்னால இன்னும் இந்த உலகம் நல்லவனு நம்புது பாரு ...என்று தலையில் அடித்துக்கொண்ட ஹனியை பார்த்து...நித்தி, உன்னைய நம்பும்போது என்ன நம்புறதுல என்ன பேபி தப்பு என்று கேட்டவளை பார்த்து ஆமா நித்தி சொல்ல மறந்துட்டேன் உனக்கு அச்சிடேன்ட்னு சொன்ன உடனே உன்னோட ஆளு ரெம்போ பீல் பண்ணான்டி என்று ரம்யா சொல்ல,நித்தி, எனக்கு லேப்ல ஒரு ஒர்க் இருக்கு டாடா, நான் கிளம்புறேன். நீ இல்லாதவன் கூட வச்சு ஒட்டிக்கிட்டே இரு என்று சொல்லி சென்றவளை பார்த்து அனைவரும் சிரித்தனர்.

மும்பை போவதற்க்காக ஹ.ச்.ஒடிகிட்ட சென்று கேக்க, முத்துசாமி,எப்ப போறிங்க,எவ்வளவு நாள் ஆகும், எங்க தங்க போறிங்க. என்று பல கேள்விகளை அடுக்க,ஹனி,சார் இவங்க அண்ணா வீடு அங்க இருக்கு அங்கதான் தங்க போறோம் என்று சொல்ல.நித்தி ஹனியின் கால்லை மிதித்துக்கொண்டு ஆமா சார் ,இவங்க மாமா வீடுக்கூட அங்கதான் இருக்கு என கூற ஹனி அடிப்பாவி எப்படியா பொய் சொல்லுவ என்று நினைத்துக்கொண்டு ஆமா சார் எங்க மாமா வீடு அங்கதான் இருக்கு.ஒகே நீங்க மும்பை போறதுக்கான பார்மாலிட்டிஸ் முடிச்சுட்டுங்க..ஓகே சார்,முத்துசாமி,இரண்டு மாதம் நல்ல என்ஜாய் பண்ணுங்க அதே மாதிரி போட்டிலயும் விண் பண்ணிட்டு வாங்க என்று கூற, நன்றி சார் என்று சொல்லி விட்டு சந்தோசமாக வந்து அனைவரிடமும் சொல்லி கொண்டாடினர்.

அதன்பிறகு மதியம் உள்ள இரண்டு வகுப்புகளை கட் அடித்து விட்டு கடைசி வகுப்பை மட்டும் அட்டென்ட் செய்து விட்டு வீட்டிற்கு சென்றனர்...

வீட்டிற்க்கு வந்த நித்தி, அம்மா நாங்க மும்பை போவதற்க்கு காலேஜில் ஒகே சொல்லிட்டாங்க என்றுசொல்ல அவர் ஒரு நிமிடம் தனது கண்ணில் அதிர்ச்சியை காட்ட,மறுநிமிடம் அதை மறைத்து எனக்கு தெரியாது உங்க அப்பா விட்டால் போ என்றார் பார்வதி.நித்தி ராஜனிடம் இதை பற்றி சொல்ல அவர் வேண்டாம் என்று சொல்லுவாரு என்று எதிர்பார்த்த பார்வதி ராஜன் ஒகே சொல்ல அவர் மேலும் அதிர்ந்தார்..இதை எதையும் கவனிக்காத நித்தி,தாங்க்ஸ் அப்பா என்று சொல்லி விட்டு ஹனியின் விட்டிற்க்கு சென்றாள்.பார்வதி,மாமா ஏன்?? நித்தியை மும்பை போறதற்கு சரினு சொன்னிங்க ராஜன்,நித்தியோட சந்தோசம் தான் நமக்கு முக்கியம். எது நடக்கனும்மோ அதை அந்த ஆடவன் பார்த்துப்பான். நி எனக்கு இப்ப ஒரு டீ போட்டு எடுத்துட்டு வா என்று கூற அவரும் சரி என்று சென்றுவிட்டார். அங்கு நித்தி ஹனி வீட்ல சுமதியிடம் அம்மா 2 மாதம் தான் என்று ஹனி மற்றும் நித்தி கேட்டுக்கொண்டிருந்தனர்..

சுமதி,மும்பை எவ்ளவு பெரிய ஊரு அங்க நீங்க எங்க என்ன பண்ணுவீங்க,ஹனி,அம்மா அங்க நாங்க போற காலேஜ்ல எங்களுக்கு எல்லா ஏற்பாடு பன்னிருவங்க. சுபா,அம்மா ஹனி மட்டுமா போற,அவள்க்கூட நித்தி அக்கா அப்புறம் அவங்க கிளாஸ்ல எல்லாரும்தான் போறாங்க,இந்த ஹனிக்கு அவ்வளவு சீன்ல இல்ல அவள அனுப்புங்க அம்மா என்று சொன்னால், சுமதி,எனக்கு இதுல உடன்பாடுஇல்லை நீங்களாச்சு உங்க அப்பாவாச்சு என்று சொல்லிட்டு விட்டு செல்ல ,சிவா எனக்கு ஓகே என்று சொல்லிக்கொண்ட வீட்டிற்க்குள் நுழைய ,ஹனி அப்பா நிஜமாவ என்று கேட்க சிவா ஆமா போய்ட்டுவாங்க நீ அங்க இருத்த அப்பா அங்க வந்து உங்கள பார்த்துட்டு அப்படியே மும்பை சுத்தி பார்பேன் என கூற ஹனி தாங்க்யூ அப்பா என கூறி விட்டுஅடுத்து இருவரும் இருந்த இடம் டிக்கெட் எடுக்கும் இடம்.டிக்கெட் எடுத்து வெளியில் வந்த நித்தி வண்டியை ஓட்ட போக ஹனி, எவ்வளவு நேரம் நீதான் ஒட்டுன இப்ப நான் ஓட்டுவேன் என கூறி சாவியை வாங்கினாள்.நித்தி,தெய்வமே என்னுடைய உயிர்க்கு எந்த ஆபத்தும் வராம கொண்டு போய் எங்க வீட்டில் விட்டுவிடு என கூற வாய் முடிக்கிட்டு வா இல்லைனு பார்த்துக்கோ வண்டியை உன் மேல ஏத்துவேன்.நித்தி,தனது வலதுகையை வாய்யின் மீது வைத்து அமைதியாக வண்டியின் பின்னால் அமர்ந்தாள்.ஹனி அது என்று ஒரு பார்வை பார்த்து விட்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள்.மிதமான வேகத்தில் சென்றவள்.பின்னால் ஒரு கார் தங்களை பாலொவ் பன்னி வருவதை பார்த்து வண்டியின் வேகத்தை அதிகரிக்க,நித்தி என்னடி வேகமாக ஓட்டுற மெதுவ ஓட்டு நான் போன் யூஸ் பண்ணுறேன்ல என கூற அட..!! ஆறிவு கெட்டவளே..!! நம்மளா ஒரு கார் இரயில்வே நிலையத்தில் இருத்து பாலொவ் பண்ணிக்கிட்டு வருது.ஐய்யோ ஒகே சிக்கிரமாக போ என்று கூறிவிட்டு முன்கண்ணாடி வழியாக பின்னால் வரும் காரை பார்த்தாள்.ஹனி வண்டியை ஒரு சந்தில் விட்டு ஓட்ட.அந்த காரில் இருந்த நபர்கள் வண்டி செல்வதை பார்த்து விட்டு சென்று விட்டனர்.
வண்டியை ஹனி அவள் வீட்டில் நிறுத்தி விட்டு நித்தி நீ இன்னைக்கு எங்க வீட்டில் தங்கு என கூற என்ன ஹனி புரியாம பேசுற நான் பத்திரமதான் போவேன்.நீ இதை யாருடையும் சொல்லாத அப்பறம் எல்லாரும் பயந்துடுவாங்க.அதுக்கு இத எப்படி சொல்லாம இருக்குறது நாளைக்கு எதாவது பிரச்சனை வந்தால் எல்லாரும் ஏண் சொல்லலானு கேப்பாங்க என் கூற ஏய் நான் என்ன சொல்லவே வேண்டாம் அப்படி சொல்லலா இப்ப வேண்டாம்னு தான் சொல்லுறேன்.புரியாம பார்த்த ஹனியை பார்த்து அதிகம யோசிக்காத நான் கிளம்புறேன் என்ற நித்தியை பார்த்து ஏய் இரு ஒரு நிமிடம் என்றவள் வீட்டிற்க்குள் சென்று விஸ்வா அழைத்து வந்தாள்.நித்தி அவளை பார்த்து ஏண் ஹனி எப்படி பன்னுற அண்ணாவ ஏண் தொந்தரவு பண்ணுற என கூற,விஸ்வா, ஏய் வாயாடி என் தங்கச்சியை ஏன திட்டுற என கூற நித்தி,எங்க உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க அண்ணா நான் அவளை திட்டுவேனா இல்ல அவள் என்னை திட்டுவளா என்று கேக்க ,கை எடுத்து கும்பிட்டு சாமி தெரியாம கேட்டுடேன் ஆள விடு என் கூற வேட்டியா பேசாம போய் அவள வீட்டுல விடு என்று ஹனி கூற இவளுக்காகவ என்ன பாடிகாடா போக சொன்ன என்று தலையில் அடிக்க,நித்தி, அண்ணா நீ எப்ப வாரிய இல்ல நான் போகவா என கூற ஐய்யோ சும்மா சொன்னேன்டா வா போகலாம் என்று கூறி வண்டியை எடுத்து கிளம்பினர். நித்தி வீடு வரவும் நித்தி விஸ்வாவை பார்த்து நீ கிளம்பு அண்ணா என கூற நித்தி எதாவது பிரச்சனையா என கூற நித்தி இல்லை அண்ணா அதலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல என்றாள்.எதாவது பிரச்சனை நா சொல்லுமா.ஐய்யோ அண்ணா எதுவ்வும் இப்ப பிரச்சனை இல்ல,ஒருவேளை பிரச்சனை வந்தா உங்ககிட்ட சொல்லுறேன் என கூற,ஒகே டா டாடா என கூறி விட்டு சென்று விட்டான்..


வீட்டிற்க்குள் நித்தி செல்ல,மித்திரன், எருமை மாடு மாதிரி வளர்ந்துருக்கேள சிக்கிரம் வீட்டுக்கு வரனும்னு தெரியது,ஏய் என்னை விஸ்வா அண்ணாதான் எப்ப வந்து விட்டாங்க.அண்ணா அப்பவே எனக்கு போன் போட்டு சொல்லிட்டங்க லேட் ஆகும் அப்படி தெரிந்தா எனக்கு போன் போட வேண்டிதான என கூற ஒகே அடுத்த டைம் லேட் ஆனது அப்படினா உன்னை கூப்புடுறேன் என கூறி விட்டு அம்மா எனக்கு சாப்பாடு வேண்டம் நான் தூங்க போறேன் என்று கூறிக்கொண்டே தனது ரூம்க்குள் நுழைந்துக்கொண்டாள்.மித்திரன் மற்றும் விஸ்வா இவள் முகமே சரியில்லை என்று யோசித்துவிட்டு அவர் அவர் வேளை பார்க்க சென்று விட்டனார்.வீட்டிற்க்குள் சென்ற ஹனியின் முகம் சரியில்லை என்பதை பார்த்த சுபா,ஹனி எதாவது பிரச்சனையா என்று கேக்க,இல்லை அது நித்தி கூட சண்டை அதான் என்று கூறி விட்டு தூங்க சென்றாள்.ஆனால் தூக்கம்தான் இருவரிடமும் நெருங்கவில்லை.காலையில் இருந்து நடந்ததை நினைத்து யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே காலையில் தான் தூங்கினார்.....



 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top