Ullamutham Kannamma - 5

Advertisement

Kundavi

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் தோழமைகளே,

UK-வின் அடுத்த அத்தியாயத்தை பதிந்து விட்டேன் படித்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள். நேற்று லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


உங்கள் குந்தவி.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
IMG_20180515_121517.jpg



எதிர்பாரா இந்த இதழ் முத்தத்தில் சுமி சுயம் இழந்து நின்றவள்.... பின், தன் கரத்தை அவனிடம் இருந்து விடுவிக்க போராடி தோற்று போனாள். எங்கே,அவன்தான் இதழ் முத்தத்தில் மூழ்கி போய்விட்டானே.... அதனால் அவள் எதிர்ப்பு ஒன்றும் அவனக்கு பெரிதாக தெரியவில்லை. அவள் மூச்சுக்காக போராடிய பின் தான் அவளை விட்டு விலகி நின்றான்.

"என் உரிமை அளவை என்னால் காட்ட முடியும்... ஆனால், நீ அதை தாங்க மாட்டாய், இனி வாழ்நாள் முழுவதும் நீ என் மனைவி தான் அதில் எந்த மாற்றமும் இல்லை, உன் அத்தான் பேச்சை மறுதரம் எடுத்தால் இதை விட வன்மையாக என்னால் நடந்துக்க முடியும் ஒழுங்காக போய் படு, நாளை காலை பேசிக்கலாம்" என்று முடித்து விட்டு வெளியே சென்று விட்டான். பித்து பிடித்தவள் போன்று கட்டிலில் வந்து அமர்ந்தவள் எத்தனை மணி நேரம் அழுது கரைந்தாளோ......, பின் அழுதபடியே தூங்கி விட்டாள்.


ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவன் தன் அறையை நோக்கி சென்றவனை, இருட்டு அறை தான் வரவேற்றது......அங்கு, சோக சித்திரம் போல் தூங்குபவளை பார்த்தவனுக்கு ஏனோ மனம் முழுவதும் வலித்தது. அவள் அருகில் சென்று, தலை முடியை கோதிவிட்டவாறு ,

" நான் உன்னை ஏமாற்றவில்லை தாரா பேபி, நான் நிஜமா உன்னை காதலிக்கிறேன்..... இனி யாருக்காகவும் உன்னை என்னால் விட முடியாது பேபி நீ எப்பவும் என் கூடவே இருக்க வேண்டும் " என்று விட்டு நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்து விட்டு அருகில் உள்ள சோபாவில் சென்று படுத்து விட்டான்.

காலையில், பூஜை சத்தத்தில் கண் விழித்தவன் எழுந்து உடற் பயிற்சி செய்ய தோட்டம் சென்று விட்டான். பயற்சி முடித்து வந்தவன் தன் அம்மா அறைக்கு சென்றான், அங்கு சுமி இருப்பதை கண்டவன் மனதில் எழுந்த உற்சாகத்துடன் தன் அம்மாவிடம்

"குட் மோர்னிங் அம்மா.." என்றவனின் பார்வை இருந்தது என்னமோ சுமியிடம் தான்.

"குட் மோர்னிங் கண்ணா, ஏன் நேற்று இரவு நீங்க ரெண்டு பேரும் சாப்பிடவில்லை, பொம்மி சொன்னாள்..."

சுமியை பார்த்து கொன்டே "அதுவா அம்மா நாங்க ரெண்டு பேரும் ரொம்ப முக்கியமான விஷயம் பேசிக்கொண்டு இருந்தோம் இல்ல தாரா" என்றவனின் பார்வை அவள் உதட்டின் மீது படிந்து விலகியது.


அவள் முகம் சிவந்து பதட்டத்தில் "ஐயோ இல்லை அத்தை நான் போனதும் அசதியில் நன்றாக தூங்கி விட்டேன்.... இவர் பொய் சொல்கிறார் "என்றாள்.

"ஐயோ, இதற்கு என்னமா இவ்வளவு பதட்டம் அவன் கிடக்கிறான், ஆனால் இனி ஒரு தரம் இப்படி சாப்பிடாமல் படுக்க கூடாது சரியா" என்றார். அவளும் சரி அத்தை என்று விட்டு அவனை காணாது சென்று விட்டாள்.


“ஏண்டா அவளை இப்படி மிரட்டுகிறாய்.. பாவம் பிள்ளை பயந்து போய் விட்டது"

"அம்மா போதும் உங்கள் மருமகளுக்கு பரிந்து பேசினது"

"சரிடா, அதை விடு வரவேற்பு எப்போ வைக்க வேண்டும் நீ சொன்னால் நான் நல்ல நாள் பார்க்க ஆரம்பித்து விடுவேன், இனியும் தள்ளி போட வேண்டாம்".


"சரி அம்மா நீங்கள் நாள் பார்த்து சொல்லுங்கள் சீக்கிரம் வைத்து விடலாம்"

"சரி கண்ணா பின் சுமியின் சொந்தம் ஒரு அத்தான் இருப்பதாக வள்ளி பாட்டி முன்பு ஒரு தரம் சொன்னார், அந்த தம்பியையும் வர சொல்ல வேண்டும்"
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
" வேண்டாம் அம்மா , அவர் இப்போ இங்கு இல்லை.... வேலை விஷயமாக வெளிநாட்டில் இருக்கிறார், அதனால் அவரால் வேலையே போட்டு வர முடியாது " என்றான் இறுக்கமாக.

"அப்போ சரிடா நான் நாள் பார்த்து சொல்கிறேன்".

அவன் அம்மா ரகு பற்றி பேசியதும் அவனுக்கு கோபம் வந்துவிட்டது, அந்த கோபத்துடன் தன் அறை கதவை திறந்து உள்ளே சென்றவன் உதட்டில் தோன்றிய புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தான்....

அங்கு சுமி இரு கையையும் இடுப்பிற்கு கொடுத்து பாரதி போட்டோ முன் நின்று கொண்டு இருந்தாள்.

"என்ன.....? அத்தை முன் அப்படி ஒரு பார்வை, நாம் பேசி கொண்டா இருந்தோம் சண்டை போட்டு கொண்டு இருந்தோம், அதை சொல்ல பயம் உங்களுக்கு..." என்றாள் உதட்டை சுழித்து

அவள் பேச்சில் கவரப்பட்டு கதவை மெதுவாக சாத்திவிட்டு கைக்கட்டி நின்று அவளை அணு அணுவாக ரசித்து கொண்டு இருந்தான்.

"என்ன சிரிப்பு..... அத்தை முன்பும் இதே சிரிப்புதான், இனி இப்படி சிரித்தாள் வாயை கடித்து வைத்து விடுவேன் ஜாக்கிறதை" என்றாள் விரல் நீட்டி.

அவனுக்குத்தான் ஆச்சரியமாக இருந்தது 'என் பேபி இப்படி கூட பேசுவாளா' என்று..... பின், நிதானமாக அவள் பின்புறம் நின்று

" நிஜம் உன் பின்னாடி நிற்கிறது பேபி, உன் தண்டனையை ஏற்க காத்துகொண்டு இருக்கிறேன்" என்றான்.

அவன் குரலை கேட்டு அதிர்ச்சியில் திரும்பி இரண்டடி பின்னே சென்று சுவற்றில் மோதி நின்றாள். அவன் நிதானமாக, அவளை சிறை பிடித்து கண்களை நோக்கி,

"ஏன் தாரா டியர் , நாம் நேற்று சண்டை மட்டுமா போட்டோம், வேறு எதுவும் நான் உனக்கு கொடுக்கவில்லை" என்றான் அவள் உதட்டின் மீது பார்வை செலுத்தி.

அவளுக்கு கன்னம் சிவந்து பேச்சே வரவில்லை. " நா..ன் கீழ...போக..னும் வழி... விடு..ங்க"என்றாள் திக்கி திணறி.

சுவற்றில் இருந்த அவனின் ஒரு கை இப்பொழுது அவள் வெற்று இடையில் விளையாடி கொண்டு இருந்தது. அவளுக்கு மூச்சே நின்றுவிட்டது.

" போகலாம் பேபி நீ ஒரு தண்டனை வழங்கபோவதக சொன்னாயே அதை கொடு நான் உன்னை அனுப்பி விடுகிறேன்"என்றான்.

அவள், பயத்தில்” நான் ஒன்றும் சொல்ல...வே இல்...... “ என்ற முடிக்கையும் அவள் இடையை அழுத்தினான்.... அவளுக்கு பேச்சே வரவில்லை.

"நீ கொடுக்க வில்லை என்றாள் என்ன பேபி நான் உனக்கு தருகிறேன்.." என்றான்.


அவள் பயந்து கண்களை மூடி கொண்டாள். அவன் அவள் முக பாவனையை ரசித்து கொண்டு இருந்தான். எதுவும் நடக்காது இருக்கவே என்ன என்று கண்கள் திறந்து பார்த்தாள். அவன் , "என்ன பேபி தண்டனை வாங்க ஆர்வமாக இருக்கிறாய் போல்" என்றான் புருவத்தை உயர்த்தி. அவள் வெட்கத்தில் கன்னம் சிவந்து அவனை தள்ளிவிட்டு வெளிய செல்ல போனவளின் சேலை பிடித்து, அருகில் இழுத்தவன்.........

அவள் காதில் ரகசியமாக "கவலை படாத பேபி கண்டிப்பா அந்த தண்டனை உனக்கு கொடுத்து விட்டு தான் நான் ஆபீஸ் செல்வேன்" என்று விட்டு அவள் காதில் ஒரு முத்தம் வைத்து அவளை விட்டான்.

அவளும் விட்டாள் போதும் என்று விட்டு வெளியே சென்று விட்டாள்.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
அவள் சென்றதும் "சீக்கிரம் உன் காதலை நீ ஒத்துகொள்வாய் பேபி" என்று விட்டு குளிக்க சென்றான்.

கீழ் இறங்கி வந்த சுமிக்கு அப்பொழுதுதான் மூச்சு சீராக வந்தது. அவளுக்கு அவனுடைய நடவடிக்கை புரிய வில்லை. அதற்கு மேலாக தனக்கு என்ன ஆகிவிட்டது என்று சுய அலசலில் இடுப்பட்டுக்கொண்டு இருந்தாள். அவனுடைய பார்வைக்கு தான் ஏன் முகம் சிவக்குறோம், எதுக்கு எனக்கு கோபம் வரவில்லை. அவள் ரகு பற்றி சொன்னால் தன்னை விட்டுவிடுவான் என்று நினைத்தாள். ஆனால், அவனுக்கு அப்போதுதான் கோபம் அதிகமாக வந்தது. இப்போ, அவன் தொட்ட போதும் குழைந்து தான் நின்றேன். இப்படி பலவாறு யோசித்து சரியான தீர்வு கிடைக்காது நின்றாள்.

"சுமிமா இங்கு வா, பாரதி வந்து விட்டான் அவனுக்கு சாப்பாடு ஏடுத்து வை"

அவர் அழைத்த பின் சமையல் அறையில் இருந்து எல்லாம் எடுத்து வைத்தாள். இன்று பொம்மி சொந்தத்தில் விசேஷம் இருப்பதாய் சொல்லி விடுமுறை எடுத்து விட்டாள்.

" கண்ணா இன்று ஜோசியரை அழைத்து வரவேற்புக்கு நாள் குறித்து கொடுக்க சொல்லியிருகிறன்."


" நான் தான் நீங்கள் பார்த்து சொல்லுங்க என்று விட்டேனே அம்மா"

"சரி அம்மா நான் ஆபீஸ் போயிட்டு வருகிறேன்..." என்று விட்டு சாப்பிட்டு எழுந்து சென்றான்.

அவன் கை சுத்தம் செய்து விட்டு மாடிக்கு சென்றான். சென்றவன், "தாரா, தாரா" என்று கத்தினான்.

"அம்மா சுமி போமா என்ன காரணம் என்று கேளு" என்று விட்டு அவர் அறைக்கு சென்று விட்டார்.
இப்போ என்ன வேணும் அவனுக்கு என்று கோபமாக சென்றாள். அவள் உள்ளே செல்லவும் அவன் ஏதோ பத்திரம் பார்த்து கொண்டு இருந்தான். அதை பார்த்ததும் அவளுக்கு முகம் இறுகிவிட்டது. அமைதியாக அவன் முன் நின்றாள்.


"வா தாரா, இது உன் பாட்டி உன் பெயரில் போட்டு வைத்த பணம், அவர் இறந்ததும் உனக்கு வரும்படி ஏற்பாடு செய்துவிட்டு சென்றிருக்கிறார்.." என்றான் அவளிடம் நீட்டியவாறு.

அவள் அதை கைகளில் வாங்கி கொண்டு மார்போடு அணைத்து கண்களில் நீருடன் "உங்களுக்கு எப்படி கிடைத்தது"

"பாட்டி, அம்மாவை தான் உனக்கு அடுத்த பாதுகாவலரா சொல்லி இருக்கிறார் அதனால் பணம் அம்மாவிடம் ஒரு வார முன்பே வந்து விட்டது"
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
சுமிக்கு தன் பாட்டியை நினைத்து பெருமையாக இருந்தது, தனக்கு என்னவெல்லாம் செய்த்திருக்கிறார். ஆனால் நான் அவருக்கு ஒன்றுமே செய்யவில்லையே என்ற ஏக்கம் வந்தது.

"இதை நீங்களே வைத்து கொள்ளுங்கள் , எனக்கு தான் இங்கு எல்லாமே இருக்கிறதே" என்றாள்.

"இல்லை தாரா உன் பாட்டி உனக்காக கஷ்ட பட்டு சேர்த்தது, அவருடைய கடைசி ஆசை இது உன்னிடமே இருக்கட்டும்..." என்றான். அவளுக்கும் இது சரி என்று பட்டது, அவனிடமும் அதை சரி என்று ஒப்புக்கொண்டாள்.

" அப்புறம் தாரா நான் உன்னிடம் முன்னமே சொன்னதுதான், இனி என் வாழ்நாள் முழுவதும் நீ ஒருத்திதான், என் மனதிலும் நீ மட்டும் தான் இருக்கிறாய்... அதனால் தேவை இல்லாததை மனதில் போட்டு குழப்பிக்கொண்டு இருக்காதே" என்றான் அவள் சமையல் அறையில் யோசித்து கொண்டு இருந்ததை மனதில் வைத்து சொன்னான்.

பின் அவளிடம் கூறி விட்டு அலுவலகம் சென்று விட்டான். அவன் சென்றதும் சோர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தவள்..... . அவன் தன்னை கட்டாயத்தின் பெயரில் திருமணம் செய்து கொண்டவன் பின் எப்படி இப்போ அவன் மனதில் தான் இருப்பதாக சொல்கிறான்.... மனதில் எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியாது அமர்ந்து இருந்தாள் சுமி...


இங்கு அலுவலகத்தில், பாரதிக்கு முழுவதும் அவள் நினைப்புதான்..... தான் தொட்டதும் குழைந்து நின்றவளின். சிவந்த முகம் அவன் கண் முன் வந்து சென்றதும் கண் மூடி சாய்ந்து
"பேபி என் மனதில் நீ இருப்பது போன்று உன் மனதில் நான் இருக்கிறேன், ஆனால் நீ அதை உணரவில்லை சீக்கிரம் உணர்ந்து உன் காதலை என்னிடம் சொல்லுவாய் தாரா' என்றான் மனதுடன். கதவு தட்டும் சத்தத்தில் தன் சுயம் வந்தவன் "எஸ் கமின்" என்றான்.


உள்ளே வந்த பிரியா, "குட் மோர்னிங் சார், சார் நீங்க கனடா போயிட்டு வந்த பயணத்தின் ரிப்போர்ட்" என்று நீட்டினாள்.

அவன் அதை வாங்கி பார்த்து கொண்டு இருந்தான், பிரியாவும் அவனை பார்த்து கொண்டுதான் இருந்தாள். அவளுக்கு இன்னும் கோபம் அடங்க வில்லை , இவன் தன் கட்டுக்குள் வர மாட்டான் என்று தெரிந்த பின் அவன் அம்மாவை வளைத்து போடலாம் என்று நினைத்தாள். ஆனால், அந்த கிழவி முகம் குடித்து கூட பேசாது, சரி சமாளித்து வரலாம் என்று பார்த்தாள், இவன் ஏதோ பிச்சைக்காரிய மணந்து கொண்டு வந்துவிட்டான் இருந்தும் அவனை விட அவளுக்கு மனம் வரவில்லை சரியான சந்தர்பத்துகாக காத்து கொண்டு இருந்தாள்.

"இந்தாங்க மிஸ்.பிரியா எல்லாம் சரியாக இருக்கிறது, பின் இரண்டு புதிய ஒப்பந்தம் போட்ட அலுவலகம் பற்றிய முழு விவரம் என் மெயில்கு அனுப்பி வைத்து விடுங்கள்" என்று விட்டு தன் கணினியில் கவனம் செலுத்து விட்டான்.

"ஓகே சார் நான் அனுப்பி வைக்கிறேன் " என்று விட்டு சென்றாள். அவன் அலுவலகம் தவிர்த்து வேறு எதுவும் அவளிடம் பேச மாட்டான், அவளை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும், அவள் அப்பாவுக்காக பார்க்கிறான் இல்லை என்றோ வேலை விட்டு அனுப்பி இருப்பான். ஒரு விபத்தில் தன் கால் ஒன்றை இழந்து நின்ற அவர் இவனிடம் வருந்தி கூறியதால் அவர் பார்த்த வேலையை அவர் பொண்ணுக்கு கொடுத்தான்.

புதிதாக போட்ட ஒப்பந்தம் என்று அவன் முடிக்க வேண்டிய வேலை அதிகமாக இருந்தது. மாலை 6 மணிக்கு அவன் அம்மா அவனுக்கு அழைத்த பின், தன் பிஏ விடம் முடிக்க வேண்டிய வேலையை சொல்லிவிட்டு சென்றான்.

வீட்டிற்கு வந்தவன் தன் அறைக்கு சென்று குளித்து உடை மாற்றி விட்டு வந்தான்..... அவன் வந்ததும் அவனுக்கு காபியும், பலகாரமும் வைத்து விட்டு சென்றவளின் கை பிடித்து தன் அருகில் அமர வைத்து, அவள் காதில்

"என்னடி நான் ஒன்று கொடுப்பதாக சொன்னது உனக்கு மறந்து விட்டதா என்றான்" அவள் காதில் ரகசியமாக.

உள்ளம் தொடரும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top