Ullamutham Kannamma - 4

Advertisement

Kundavi

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் தோழமைகளே,

UK-வின் அடுத்த அத்தியாயத்தை பதிந்து விட்டேன் படித்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள். நேற்று லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


உங்கள் குந்தவி.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
UK - 4

சுமி அதிர்ச்சியில் சமைந்து நின்றாள், அவனுமே அதிர்ச்சியில் தான் இருந்தான் 'நானா அவளிடம் உரிமையோடு பேசினேன், எனக்கு அந்த உரிமை இல்லையே பின்னே நான் எப்படி அவ்வாறு நடந்து கொள்ள முடியும்' இவ்வாறு பலது யோசித்து சாப்பிடாது சென்று விட்டான்.

அவளும் எதுவும் கேட்கும் நிலைமையில் இல்லை.... பாத்திரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அறையை நோக்கி சென்றாள், அங்கு அவள் வரும் முன்னமே அவன் படுத்து விட்டான், படுக்கையில் இருந்து போர்வை, தலையணை எடுத்து கீழ் விரித்து படுத்து கொண்டாள்.
இருவரும் படுத்தார்களே தவிர உறங்க வில்லை, அவள் தன் அருகில் படுக்காது கீழே படுத்ததும் அவனுக்கு வருத்தத்தை தந்தது ' தன் மீது நம்பிக்கை இல்லை என்பதுதான் முக்கியம் காரணம்' என்று அவன் நினைத்து கொண்டான். ஆனால் அவளோ ' நாம் இவனுக்கு ரொம்ப இடம் கொடுத்து விட்டோம் , இனி இவனிடம் இருந்து தள்ளியே இருக்க வேண்டும்’ என்று முடிவு எடுத்துவிட்டு தூங்கிவிட்டாள்.

ஆனால் பாரதிக்கு தூக்கம் வந்த பாடு இல்லை தான்...... ஏன், அவளிடம் அப்படி நடந்து கொண்டோம் என்று யோசித்து கொண்டு இருந்தான். அவனுக்கு தெரியவில்லை அவன் மனதில் அவள் மீது காதல் இருப்பது, அதை அவன் இன்னும் உணரக்கூட இல்லை. ஒரு இனிமையான அதிர்ச்சி சமயத்தில் அவள் மீது உள்ள காதலை அவன் உணரப்போகிறான் என்று அவனுக்கு தெரியவில்லை.


காலையில் அவளுக்கு முன்பே எழுந்து ஆபீஸ் சென்று விட்டான். அவளுக்குதான் நிம்மதியாக இருந்தது அவன் முகத்தை பார்க்க வேண்டாமே என்று..... வழக்கம் போல் அவளுடைய காலை வேலையில் தன் கவனத்தை திருப்பி கொண்டாள்..... அவனை பற்றியே மறந்து விட்டாள், மதியம் அவள் அத்தை கேட்டதற்கு ஆஃபீஸ்ல் வேலை அதிகம்.....வந்தாலும்தான் வருவார் என்று சொல்லி விட்டாள்...இரவு ஒரு ஏழு மணிக்கு வந்தவன் தன் அம்மாவை காண சென்றான்.

"அம்மா நாளைக்கு காலையில் கனடா செல்கிறேன்....” என்றான்.

"ம்ம்... போயிட்டு எப்போ வருவ கோவிலில் ஒரு நாள் உனக்கும், சுமிக்கும் சடங்கு செய்து விட்டு சீக்கிரம் வரவேற்பு வைக்க வேண்டும்" என்றார்.

"அம்மா இப்பொழுது அதற்கு என்ன அவசரம் ஒரு ஆறு மாதம் கழித்து வைத்து கொள்ளலாம்" என்றான்.

"அதற்கு இல்லை கண்ணா.... கல்யாணம் அவசரமாக முடிந்து விட்டது, சடங்கு பண்றதாவது சம்பிருதாயம் படி நடக்க வேண்டும்... இல்லை கண்ணு பட்டு விடும்..." என்றார்

"அம்மா எனக்கு இதில் எல்லா நம்பிக்கை இல்லை, அவளையும் கஷ்டபடுத்தாதீர்கள்"

"இல்லடா நான் சுமிமாகிட்ட கேட்டு விட்டேன்" என்றார்.

கண்களில் ஒரு ஒளியுடன் "அதற்கு உங்கள் சுமிமா என்ன சொன்னாள்" என்றான் அந்த சுமிமாவில் ஒரு அழுத்தத்துடன்.

" அவள் உன்னிடம் கேட்க சொன்னாள், உனக்கு சம்மதம் என்றாள் அவளுக்கும் சம்மதம்மாம்.. அதான் உன்னிடம் கேட்டேன்"

இந்த பதிலை கேட்டு அவன் எப்படி உணர்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை 'அவள் எனக்கு முக்கியத்துவம் தருகிறாள்' என்று எண்ணினான்.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
" சரி அம்மா நான் கனடா போயிட்டு வந்து சடங்கு வைத்து கொள்ளலாம், வரவேற்பு பற்றி நான் யோசித்து விட்டு சொல்கிறேன்..." என்றான். அவரிடம் சிறுது நேரம் பேசி விட்டு எழுந்து தன் அறைக்கு செல்ல திரும்பவும் சுமி அவள் அத்தைக்கு சாப்பாடு கொண்டு வரவும் சரியாக இருந்தது. அவள் உள்ளே வரவும் இவனும் வெளியே போகாது அங்கே தேங்கி நின்றான், சுமி மறந்தும் அவன் முகத்தை பார்க்க வில்லை...... ஆனால் , அவன் மறந்தும் அவள் முகத்தில் இருந்த பார்வையை திருப்பவில்லை. அவளுக்கு ரொம்ப கூச்சமாக இருந்தது. குமரியம்மாவும் இவர்கள் நாடகத்தை கண்டும் காணாது இருந்தார்.

"என்னடா போகணும்னு சொல்லிட்டு இங்கேயே நிற்கிற" என்றார் அவன் அம்மா கண்களில் கேலியுடன்.

அதை புரிந்துகொண்டு "ஹ்ம்ம் இதோ போகிறேன் அம்மா " என்று அவளை பார்த்துக்கொன்டே சென்றான். அவன் சென்ற பின் சுமியிடம் திரும்பி

" போதும் சுமிமா நான் சாப்பிட்டதும் குரல் கொடுக்கிறேன் பாத்திரத்தை எடுத்து கொண்டு செல்ல, இப்போ போய் என் பிள்ளையை கவனி" என்றார். அவளும் எதுவும் சொல்லாது தலை அசைத்து விட்டு வந்துவிட்டாள். அவள் வெளியே வரவும் பாரதி சாப்பிடகீழே இறங்கி வந்தான்..... அவன் உட்கார்ந்ததும் அவனுக்கு பரிமாறிவிடு நகர போனவளை போக விடாது.... அது வேணும், இது வேணும் என்று படுத்தி எடுத்து விட்டான். அவன் சாப்பிட்டுவிட்டு சென்ற பின்னர் தான் அவளுக்கு மூச்சு சீராக வந்தது பின் அவளும் சாப்பிட்டுவிட்டு அவள் அத்தைக்கு இரவு வணக்கம் சொல்லி விட்டு மேலே சென்றாள்.

அவள் அறைக்கு வரவும் எதுவும் பேசாது தன் மடிக்கணினியில் மூழ்கி இருந்தான். அவள் குளியறை சென்று உடை மாற்றி வந்ததும்

"உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் சுமி" என்றான் வேலையை பார்த்து கொண்டே.

"என்ன பேச வேண்டும், என்னிடம் பேச உங்களுக்கு என்ன இருக்கிறது நான் உங்களுக்கு அளவுக்கு அதிகமாக இடம் கொடுத்து விட்டேன். போதும் இன்னும் ஒரு வருடம், பின் உங்களுக்கும் எனக்கும் ஒத்து வரவில்லை என்று விவாகரத்து வாங்கி விட்டு நான் செல்ல போகிறேன்.... என்ன அத்தையை நினைத்து மட்டும் கஷ்டமாக இருக்கிறது அவர் அன்புக்கு நான் துரோகம் செய்து விட்டு செல்ல போகிறேன்" என்று கண்ணீர் வடித்தாள்.

"இங்கு பாரு சுமி ஏன் பிரிவை பற்றி இப்பொழுதே பேசுகிறாய் அதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது அதனால் அப்போ அதை பார்க்கலாம், இப்போ நான் சொல்வதை கேள்...
நாளை காலை நான் கனடா போகிறேன்.. வர ஒரு வாரமாகும் அது வரை அம்மாவை பத்திரமாக பார்த்து கொள் அம்மாக்கு சந்தேகம் வரும்படி ஏதும் செய்து விடாதே.... என்ன புரிந்ததா என்றான்" ஒரு அழுத்தத்துடன்.

"நீங்க வர ஒரு வாரமாகுமா அதற்கு முன் வர முடியாதா" என்றாள் கொஞ்சம் கலவரத்துடன்.

அதில் அவன் முகம் மென்மையுற "சீக்கிரம் வர முடிந்தால் வருகிறேன்.." என்றான்.
அவளும் சரி என்று சொல்லி விட்டு கீழ் போர்வை விரித்து படுத்து கொண்டாள். அவன் எதுவும் சொல்லாது படுத்துவிட்டான். இப்போ ஏதாவது சொல்ல போய் மறுபடியும் மலை ஏறிவிட்டால் அதுக்கு இதுவே நல்லது என்று கண் மூடி விட்டான். அவனுக்கு அவளை புரிந்து கொள்ள முடியவில்லை, இப்போதான் கோபப்பட்டாள், உடனே கலவரமாகி விட்டாள் என்று சிந்தித்து கொண்டே உறங்கி விட்டான்.


காலையில் அவள் எழும்போது ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல் இருந்த கடிதத்தில் அவன் சென்று வருவதாக எழுதி வைத்து சென்று விட்டான். அவன் சென்ற பின் அவளுக்கு ரொம்ப வெறுமையாக இருந்தது, தான் ஏன் இப்படி உணர்கிறோம் என்று அவளுக்கு தெரியவில்லை. வழக்கம் போல் பூஜைக்கு உண்டான பூக்களை தோட்டத்தில் இருந்து பறித்து பூஜை முடித்துவிட்டு சமையல் மேற்பார்வை பார்த்து விட்டு காலை உணவை அத்தையோடு முடித்து விட்டாள். அவள் முகத்தின் வாட்டத்தின் காரணம் அறிந்து குமரியம்மா எதுவும் கேட்டக வில்லை.

இங்கு பாரதியின் நிலை மிக மோசமாக இருந்தது சுமியின் மதி முகமே அவன் கண்களுக்கு எங்கும் தெரிந்தது. இங்கு வந்ததும் அவனுக்கு , ' தனக்கு சுமி மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று' புரிந்தது ஆனால் காதல் என்று அவன் உணரவில்லை.

எப்படியோ ஒரு வாரம் முடிந்து அவன் ஊருக்கு வரவும் அவன் அம்மா தாங்கள் எல்லாம் கோவிலில் இருக்கும் அவன் குளித்து பட்டு வேட்டி கட்டி வர சொன்னார். அம்மா சடங்கு என்று சொன்னார் அதுவாக தான் இருக்கும் என்று நினைத்து குளித்து முடித்து கோவிலுக்கு கிளம்பினான்.

அங்கு சென்றதும் சுமி எங்கே என்று தான் அவன் கண்கள் தேடியது , ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிறம் சேர்ந்த புடவை கட்டி இருந்தாள். அது அவள் நிறத்தை இன்னும் தூக்கி காட்டியது அவளை கண்டதும் இமைக்க மறந்து அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் அம்மா

" வா பாரதி எதுக்கு அங்கே நின்றுவிட்டாய்... இப்படி வா" என்று அழைத்தார். அவர் பாரதி என்றதும் பூ கட்டி கொண்டு இருந்தவள் கண்களில் ஒரு மின்னலுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
அதை பார்த்தவன் முகம் புன்னகை புரிந்தது 'நம்மை போல் அவளும் என்னை தேடிருக்கிறாள்' என்று சந்தோஷம் கொண்டது அவன் மனம்.

பின் குமரி அம்மா இருவரையும் அருகே உட்கார வைத்து பூஜையில் அமர சொன்னார். முதலில் ஒருவருக்கு ஒருவர் மாலை இட தயங்கினாலும்..... பின், அணிவித்து கொண்டு பூஜையில் அமர்ந்தனர். ஒரு மணி நேரம் கழித்து, காரில் வைத்து இருந்த ஒரு பொருளை பொம்மியை விட்டு எடுத்து வர சொன்னார்.

அவள் எடுத்து வந்த அந்த பொருளை பார்த்து இருவருமே அதிர்ச்சியில் சமைந்து நின்றனர்.

அவள் எடுத்து வந்தது புது தாலி. அதை கையில் எடுத்து, ஐயரிடம் சொல்லி பூஜை செய்ய சொன்னார்,


பூஜை முடிந்ததும் பாரதியிடம் திரும்பி " இந்தா தம்பி இந்த தாலியை அவள் கழுத்தில் கட்டு" என்றார்.

இருவரும் ஸ்தம்பித்து நின்றனர்.
" அம்மா நான் தான் அவள் கழுத்தில் ஏற்கனவே கட்டி விட்டேன் மறுபடியும் எதற்கு அம்மா இது" என்றான் ஆற்றாமையுடன்.

"நான் தான் சடங்கு என்று சொன்னேனே.. இந்தா கட்டு ம்ம்" என்றார்.

அவன் எதுவும் சொல்லாது தாலியை வாங்கி அவள் கண்கள் நோக்கி பார்த்தான் , அவள் ஒரு வெறுமையான பார்வை அவன் பார்த்தாள்..... அதில் அவன் மனம் முழுவதும் வலி பிறந்தது என்னமோ உண்மை தான்.
அவன் அம்மா வலியுறுத்தவும் அவள் கண்களை நோக்கி அவள் கழுத்தில் முதல் முறையாக தாலி கட்டி முடித்தான்.
பின், சாமி கும்பிட்டுவிட்டு அவள் வகிட்டிலும், தாலிலும் குங்குமம் வைத்தவனின் மனம் நன்றாக அவனுக்கு தெரிந்து விட்டது..... ‘தான் அவளை காதலிக்கிறோம்' என்று.... அதன் பின் தான் அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.


வீட்டிற்கு வந்ததும் அவளை பூஜை அறையில் விளக்கு ஏற்ற சொன்னார் குமரியம்மா. அவர் சொன்னதை எல்லாம் சுயமே இல்லாது செய்து முடித்தாள்.

பின் அவள் அறைக்கு சென்றதும், பாரதி அவன் அம்மாவை காண சென்றான்.

அவன் அம்மாவின் கையை பிடித்து கொண்டு "ரொம்ப தேங்க்ஸ் மா" என்றான் முகத்தில் தோன்றிய புன்னைகையுடன். அவரும் இதை எதிர் பார்த்தார் போன்று "போடா , போய் என் மருமகளை சமாளி.." என்றார் கிண்டலாக. அவனும் அவருக்கு சாப்பாடு எடுத்து கொடுத்து விட்டு சுமியை காண சென்றான் ரொம்ப ஆவலாக.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
அவள் பால்கனியில் வானத்தை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள். அவனும் ஒருவாறு இதை எதிர் பார்த்து தான் வந்தான். பின், குளித்து முடித்து அவள் அருகே சென்றவன்.

"சுமி இங்கு பார், நீ இப்படி சோகமே வடிவாக இருக்கும் அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை.... இதை நானும் எதிர்பார்கவில்லை தான் .....” என்று அவன் கூறி முடிமதற்குள்......

அவள் கோபத்துடன் அவன் டீஷிர்ட் காலரை பிடித்து "பொய் ...... இது நீங்க போட்ட திட்டம் தான், நான் உங்களை நம்பி வந்திருக்க கூடாது, என் ரகு அத்தான் துபாயில் இருந்து வந்ததும் உங்கள் பணத்தை திருப்பி கொடுக்க சொல்லி விட்டு நான் உங்களை விட்டு பிரிந்து விடுவேன்..." என்றாள் ஆவேசத்துடன்..... என்ன பேசுகிறோம் என்று தெரியாமல்.

அவள் சொன்னதை ஒரு வலியுடன் கேட்டு கொண்டு இருந்தவன் அவள் ரகு என்று சொன்னதும் அவனுக்கு கோபம் வந்துவிட்டது

" இங்கு பார்டி நீ இனி வாழ்நாள் முழுவதும் என்னுடன் தான் இருக்க வேண்டும் அதுவும் என் மனைவியாக , உன் ரகு அத்தானால் ஏதுவும் செய்ய முடியாது அவனை பற்றி இனி நீ பேச கூடாது புரியும் என்று நினைக்கிறேன்" என்றான் கட்டளையுடன்.

"முடியாது நான் கண்டிப்பாக செல்லதான் போகிறேன், என் அத்தான் கண்டிப்பாக வந்து என்னை கூட்டி செல்வார்” என்றாள்.
" வேண்டாம் தாரா என் கோபத்தை அதிக படுத்தாதே, உள்ளே போய் தூங்கு.." என்றான் கோபத்தை கட்டுபடித்து கொண்டு.

"என்ன செய்து விடுவீர்கள்.... உங்களை நம்பி வந்த என்னை நீங்க ஏமாற்றி கல்யாணம் செய்துவிட்டு.... இப்பொழுது ரொம்ப உரிமையைக மிரட்டல் வேறு.....” என்றாள் கோபத்துடன்.

அவள் உரிமை என்றதும் அவனுக்கு மூளையில் மின்னல் வெட்டியது, அவளை பார்த்து மந்தகாசமாக சிரித்து கொண்டு,

"ம்ம் பேபி என்னோட உரிமை கோபத்தை மட்டும் தான பார்த்துருக்க, உரிமை செயலை நீ பார்க்க வேண்டும் தாரா பேபி ...."
என்று சொன்னான்.... அவள் ‘இவன் என்ன சொல்கிறான்’ என்று யோசித்து கொண்டு இருக்கும் பொழுதே......
அவளை பால்கனி கதவோடு சாய்த்து அவள் இரு கையையும் சிறை பிடித்து தன் முரட்டு இதழ் கொண்டு அவள் இதழ் மூடினான் அந்த கள்வன்..





உள்ளம் தொடரும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top