Ullamutham Kannamma - 2

Advertisement

Kundavi

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் தோழமைகளே,

எல்லோருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே. UK-வின் இரண்டாவது அத்தியாயத்தை பதிந்து விட்டேன் படித்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள். நேற்று லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


உங்கள் குந்தவி....
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
i5.jpg

அவனுக்கு, இந்த வள்ளி பாட்டியை நன்றாக தெரியும் அவன் சிறு வயது முதல் அவன் வீட்டில் வேலை பார்க்கிறார். அம்மாக்கு வள்ளி பாட்டி என்றால் மிகவும் பிடித்தம் ,

"உன் அப்பா இறந்த பின் , வள்ளி பாட்டி தான் எனக்கு துணை" இருந்ததாய் சொல்லுவார். அவர் வீட்டில் தூரத்து சொந்தம் ஒரு பேத்தி இருப்பதாக அம்மா சொல்லி கேட்டிருக்கிறான், ஆனால் இப்படி ஒரு அழகை அவன் எதிர்பாராதது.

அவள் காபியை நீட்டவும் தான் தன் நிலைக்கு வந்தான். பாட்டியிடம் திரும்பி நலம் விசாரித்து கொண்டு இருந்தான். சுமி அவனை பற்றி தான் சிந்தித்து கொண்டு இருந்தாள். பாட்டி "கவி தம்பி "என்று ஆரம்பித்து விட்டாள் நிறுத்த மாட்டார் ஒரே அவன் புரணாம் தான்.

அவரிடமே கூறி உள்ளாள் "பாட்டி பணக்கார வீட்டு பிள்ளைகள் ரொம்ப திமிரு பிடித்தவர்கள் உங்கள் கவி தம்பியும் அப்படித்தான் " என்று அந்த கவி தம்பியில் ஒரு அழுத்தம் கொடுத்து சொன்னாள். அவர் ஆனால் அவன் புராணத்தை நிறுத்தாது கூறுவார்.

அவளும் இப்படி ஒரு ஆண் அழகனை ஏதிர்பார்க்கவில்லை. பாட்டி
கவி தம்பி என்று சொல்லும் பொழுது , என்ன பெரிய தம்பி பணக்கார வீட்டு பிள்ளை ஊதாரி தனமாக இருப்பான் என்று நினைத்தாள். பாட்டியிடம் பேசிவிட்டு அவளிடம் திரும்பினான் அவள் முகத்தில் ஓடிய யோசனை ரேகை வைத்து அவள் தன்னை பற்றி தான் சிந்திக்கிறாள் என்று அறிந்து 'என்ன' என்று புருவம் உயர்த்தினான் .


அவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை முகம் சிவந்து 'ஒன்றும் இல்லை' என்று தலை குனிந்து கொண்டாள். அவனும் முகத்தில் தோன்றிய மந்தகாச புன்னகையோடு பாட்டியிடம் விடை பெற்று வாசல் வரை வந்தான் , வந்தவன் அவளை திரும்பி பார்த்து

முகத்தில் தோன்றிய புன்னகையுடன் "நான் ஊதாரி தனமாக சுற்றுவது இல்லை" என்று விட்டு சென்றான். அவளுக்கு தான் குப்பென்று வியர்த்து விட்டது, தன் எண்ணத்தை கண்டு கொண்டான் என்று முகம் சிவக்க நின்றாள்.

கார் ஒரு குலுங்களோடு நின்ற பொழுது தான் கண் திறந்து பார்த்தாள். தன் கண் முன்னாடி ஓரு மாளிகை இருப்பதை பார்த்து அசையாது சமைந்து போய் இருந்தாள் சுமி .

அவளுடைய அதிர்ச்சியை உள்வாங்கி கொண்டு , அவள் கண்களை கூர்ந்து நோக்கி "இறங்கு சுமி...." என்றான்.

பாரதியோடு இறங்கி வீட்டின் முன் வந்து நின்றாள். கார் சத்தம் கேட்டு வெளிய வந்த வேலைக்காரி இவர்களை பார்த்து முகம் முழுவதும் புன்னகையோடு வரவேற்று , சுமியை பார்த்து "வா கண்ணு" என்றார் . அவளும் ஒரு புன்னகையோடு உள்ளே வந்தாள்.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
வீட்டிற்குள் நுழைந்ததும் வராண்டாவில் ஆளுயர ஒரு போட்டோவில் ஒருவர் புன்னகை முகமாக காற்றி புரிந்தார், அதை பார்த்ததும் அவளுக்கு புரிந்தது ' அது பாரதியின் அப்பா படம்' என்று. அவனிடம் இருக்கும் கம்பிரம் எங்கு இருந்து வந்தது என்று விளங்கிற்று. பக்கத்து அறையில் வந்த இருமல் சத்தம் கேட்டு அந்த அறையை நோக்கினாள்.

"அந்த அறையில் தான் அம்மா இருக்கிறார்.... வா" என்று கூட்டி சென்றான். அவன் பின்னோடு சென்றவள், அங்கு அவன் அம்மாவை கண்டதும் தான் எப்படி உணர்கிறோம் என்று அவளுக்கு விளங்கவில்லை. அவள் இந்த வீட்டிற்கு வந்தது இல்லை, பாட்டி சொல்லி இவர்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறாள். பாரதியை மட்டும் இரண்டு முறை பார்திருக்கிறாள். அவன் அம்மாவை இன்று தான் முதல் முறையாக காண்கிறாள். தெய்விகமான முகம், அவர் இவர்கள் இருவரையும் பார்த்து 'வா' என்று தலையசைத்தார் இருவரும் முன்னே சென்றதும் , அவர் இவளை கூர்ந்து நோக்கினாரோ என்ற எண்ணம் தோன்றியது.

"வாமா உன் பெயர் சுமிதான, உன் பாட்டி வள்ளி அடிக்கடி சொல்லுவார், அப்பொழுதே உன்னை காண வேண்டும் என்று ஆசை இருந்தது . என் பிள்ளை உன்னை விரும்புவதாக சொல்லும் பொழுது நான் முதலில் நம்பவில்லை , பின் நீங்கள் கோவிலில் கல்யாணம் செய்த போட்டோவை பார்த்த பின் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. .." என்றார்.

"அம்மா நீங்கள் இப்பொழுது பேசியது போதும், உங்கள் மருமகள் இனி இங்குதான் இருப்பாள் எப்பொழுது வேண்டுமானாலும்
அவளிடம் நீங்கள் கதை பேசலாம்..."என்றான்.
இவர்கள் உரையாடலை கேட்டு வெறும் பார்வையாளராக மட்டுமே சுமி இருந்தாள். அவளுடைய மௌனம் எதுக்கு என்று பாரதிக்கு புரிந்தது, அவன் இறுகிபோய் நின்றான். ஆனால், அவன் அம்மா,
"பாட்டி உன்னை விட்டு சென்று விட்டார் என்று வருந்துகிறாயா சுமிமா" என்றார்.


அவருடைய 'சுமிமா' அவளை அசைத்து பார்த்தது என்று சொல்லலாம். 'அம்மா' என்று அவருடைய பாதம் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். அவர் அவள் கையை ஆதரவாக பிடித்து "இனி கவலை வேண்டாம் சுமிமா. என் பையன் இருக்கிறான் உனக்கு இனி பயம் இருக்க கூடாது என்ன" என்றார்.

அவர்க்கு தெரியவில்லை அவள் பயப்படுவதே அவனை பார்த்துதான். பின், அவன் அம்மாவிடம் ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு அவளுடன் தன் அறைக்கு சென்றான்.

உள் நுழைந்ததும் "இங்கு பார் சுமி , என்னால் உனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இந்த கல்யாணம் அம்மாவுக்காக மட்டும்தான் , அதனாலதான் கோவிலில் வைத்து நடந்த பொய் கல்யாணம் போட்டவை பார்த்த பின்னர் தான் ஆபரேஷன் செய்யவே ஒத்துகிட்டார்."

ஆம், பொய் கல்யாணம்தான் என் கழுத்தில் நானே கட்டிக்கிட்டு தாலி. அவள் இதற்கு முதலில் முடியாது என்றாள், ஆனால் நாம் சொன்னா கேட்கிற மனிதனா இவன் அவனுக்கு அவன் வேலை முடிய வேண்டும். அவளுக்கும், முதலில் நீ சொல்வதை நான் கேட்கிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு..... பின் அதில் இருந்து பின் வாங்குவது அவளுக்கும் பிடித்தம் இல்லைதான் மற்றும் அது நல்ல பண்பும் கூட இல்லை, ஆனால் இதனால் இவள் வாழக்கை அல்லவா கேள்விகூறி ஆகிறது .
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
"உங்களால் என்னை நெருங்கவே முடியாது , அது மட்டும் அல்லாது இன்னும் ஒரு வருடம் தான நான் கொடுத்த வாக்குகாகவும், என் பாட்டிக்கி நீங்கள் செய்த உதவிக்காகவும் நான் கண்டிப்பா உங்கள் மனைவியாக நடிப்பேன். நீங்கள் கவலை படதேவை இல்லை" என்றாள்.

அவளுடைய முகத்தை கூர்ந்து நோக்கியவன் "நான் முழுவதுமாக சொல்லி முடித்த பின் நீ பேசலாம், எனக்கு இப்படி குறுக்கே பேசுவது பிடிக்காத ஒன்று இதை உன் மூளையில் நன்கு பதிந்து கொள். பின், அம்மாவுக்கு நம் போலி திருமணம் பற்றி எப்போதும் தெரிய கூடாது, அம்மா முன்னாடி நீ என்னுடன் என் மனைவியாக உரிமையுடன் நடந்து கொள்ள வேண்டும் " என்று அழுத்தமாக சொல்லி முடித்தான்.

அவன் சொல்ல சொல்ல கோபம் கனன்று கொண்டு வந்தது அவளுக்கு. இவனுக்கு நான் என்னமோ அடிமை சாசனம் எழுதி கொடுத்தது போல் பேசுகிறான். இருந்தும் அவன் அம்மாக்காக அவள் இவன் சொல்லுவதுக்கு எல்லாம் ஒத்து கொண்டாள்.

பின், அவனிடம் திரும்பி "வந்து நான் வேலைக்கு போகவா, எப்படியும் நான் ஒரு வருடம் தான் இங்கு இருப்பபேன் அதன் பின் வேலைக்கு தேடி அலைய வேண்டும், அதனால் இப்பொழுதே நான் செல்கிறேன்" என்றாள்.

அவன் அழுத்தமாக ஒரு பார்வையுடன் " இங்கு பார் சுமி நீ இங்கு வந்திருப்பது என் அம்மாக்காக அவர்களை நீ நன்றாக பார்த்து கொண்டாள் போதும், உன் எதிர்காலத்துக்கு நான் கண்டிப்பா ஒரு வழி செய்வேன் என்ன புரிந்ததா" என்றான். அவளுக்கும் அவன் இப்படி சொல்வான் என்று ஒருவாறு யூகித்து வைத்திருந்தால்.

பின் அவனிடம் "நான் இந்த அறையில் தான் தங்க வேண்டுமா" என்றாள். அவன் அவளிடம், "ஆம், சுமி நீ என்னுடன் இந்த அறையில் தான் இருக்க வேண்டும் , வேலைக்காரர் யாராவது பார்த்து அம்மாவிடம் சொல்லிவிட்டால் அம்மாக்கு சந்தேகம் வரும், பின் நம் திட்டம் பயன் இல்லாது போய் விடும்." என்றான்.

அவளுக்கும் அவன் சொல்லுவது சரி என்று தான் பட்டது, இருந்தும் அவன் கூட ஒரே அறையில் இருப்பது அவளுக்கு கொஞ்சம் தயக்கம் வந்தது,

நெருக்கமாக வந்த மூச்சுகாற்றில் நிமிர்ந்தவள், இரண்டடி பின் சென்று சுவறொடு ஒட்டி நின்றாள். அவள் கண்களை பார்த்து கொண்டே அவளை நெருங்கி அவள் இருபுறமும் கையை சுவத்தோடு வைத்து, அவள் முருண்டு விழித்த கண்களை பார்த்து " பயப்படாதே உன் கூட குடும்பம் நடத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை, சோ நீ அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை பேபி" என்றான்.

அவளும் பயத்தோடு சரி என்று தலை அசைத்தாள். அவளுடைய முகத்தை கண்டு சிறு சிரிப்புடன் வலக்கினான். அவன் விலகிய பின் தான் அவளுக்கு சுவாசம் சீரானது.

பின் இயல்பாக ஒன்றும் நடவாது போன்று அவளிடம்" இந்த
வாங்க, போங்க இப்படி எல்லாம் அழைப்பதை விடுத்து, என் பெயர் சொல்லி அழை" என்றான்.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
அவளும் சரி என்று தலை ஆட்டினாள். அவள் இன்னும் அவன் குடுத்த அதிர்ச்சில் இருந்து மீண்டு வர வில்லை. அவனும் அதை புரிந்து கொண்டு சரி "சுமி நான் ஆபீஸ் போயிட்டு இனி இரவுதான் வருவேன், ஏதாவது ஒரு தேவைனா எனக்கு போன் பண்ணு" என்று சொல்லி விட்டு போய் விட்டான். அவன் போன பின் ரொம்ப தனிமையாக இருப்பது போல் உணர்ந்தாள்.
வேலைக்காரன் வைத்து விட்டு சென்ற பெட்டியில் இருந்து தன் துணியை எடுத்து கபோடில் அடுக்கியவள்.... பின் , குளித்து முடித்து மஞ்சள் வண்ண பூ போட்ட புடவை கட்டி, மாடிவிட்டு இறங்கி சென்றாள். அவள் வருவதை பார்த்து வேலைகாரா பெண் 'பொம்மி' வந்தாள். அவளை பார்த்து சிரித்து " வாங்க அம்மா என் பெயர் பொம்மி , உங்களுக்கு என்ன வேண்டுமானலும் என்னிடம் கேளுங்க " என்றாள்.

அவளும் சிறு புன்னகையுடன் "என்னை நீங்க சுமி என்று சொன்னாலே போதும் , இப்போ எனக்கு ஒரு கப் காபி வேண்டும் என்றாள்". அவரும் சிரிப்புடன் சரி என்று விட்டு உள்ளே சென்று இரண்டு காப்பியோடு வந்தாள், சுமி. கேள்வியாக நோக்கவும் "அம்மாவும் இப்போ காபி குடிக்கிற நேரம்" என்றாள்.

"அப்போ சரி அத்தைக்கு நானே கொண்டு போகிறேன்" என்றாள், கதவை தட்டி விட்டு உள்ளே சென்று குமரிம்மாவிடம் காபியை நீட்டினாள். அவரும் ஒரு புன்னகையுடன் அவளிடம் இருந்து வாங்கினார்.

"இப்படி உட்கார் சுமிமா உன்னிடம் நிறைய விஷயம் கேட்க வேண்டும்" என்றார்.

"என்ன விஷயம் அத்தை, நீங்கள் தான் என்னை பற்றி சொல்ல வேண்டும்.... என் பாட்டியிடம் என்னை குறித்து கேட்டதாக கூறினீர்கள் , பாட்டி என்ன சொன்னார்" என்று சிறு பிள்ளை போன்று கேட்ட சுமியை பரிவாக பார்த்து "நீ ஒரு குழந்தை " அப்பிடின்னு சொல்லுவார் .


அதை கேட்டு அவளுக்கு தொண்டை அடைத்தது அவளிடமும் இதையேதான் சொல்லுவார், அவ்வளவு ஏன் ....அவர் இல்லை என்கிறதை இப்பொழுது கூட அவளால் நம்ப முடியவில்லை. பின், தன்னை சரி செய்து கொண்டு அவரிடம் சிறுது நேரம் பேசிவிட்டு வெளியே சென்றாள்.

அவள் சென்றதும் குமரியம்மா, அவளை நினைத்துத்தான் யோசித்து கொண்டு இருந்தார். அவருக்கு முதலில் இந்த திருமணத்தில் முழுவதுமாக நம்பிக்கை இல்லை , அவருக்கு பாரதியை பற்றி நன்றாக தெரியும் கல்யாணம் செய்ய விருப்பம் இல்லை என்று சொல்லி கொண்டே இருந்தான். ' நீ கல்யாணம் செய்ய ஒப்புக்கொண்டாள் தான் நான் ஹார்ட் ஆபரேஷன் செய்ய ஒப்பு கொள்வேன்' என்றார். அவனும் முதலில் இதுக்கு மறுப்பு தெரிவித்தான் பின் ஒரு நாள் நான் ஒரு பெண்னை விரும்புகிறேன் என்று வந்து நின்றான்..... அவர் நம்பாத பார்வை பார்த்த பொழுது கோவிலில் செய்த திருமண போட்டவை காண்பித்தான்.

அதை பார்த்து கோபம் கொண்டவர் "எதுக்குடா இப்படி அவசர திருமணம்.... இங்கு கூட்டி வந்தாள், என் ஆபரேஷன் முடிந்த பின்,
ஒரு நாள் பார்த்து பெரிய அளவில் முடிக்கலாமே" என்று கோபத்தோடு கேட்டு முடித்தார்.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
அதற்கு அவன் " அம்மா அவளின் பாட்டிக்கு உடம்பு சரியில்லை, அதனால் இந்த அவசர திருமணம். அவள், பாட்டியோட உடல் நிலை கணக்கில் கொண்டு தான் நீங்க திருமணதுக்கு கேட்ட போது நான் தயங்கினேன் " என்றான்.

அப்பொழுதும் அவர் முழுதாக நம்பவில்லை அவர் பிள்ளை பற்றி அவருக்கு தெரியாத என்ன. பின் அவன் அவள் வள்ளி பாட்டி பேத்தி , அன்று அவரை காண சென்ற பொழுது இருவருக்கும் பிடித்து விட்டது என்றான். அதன் பிறகு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. பின் தன் கணவனிடம் அவர்களை பற்றி வேண்டுதல் விடுத்த விட்டு படுத்து கொண்டார்.

இரவு உணவை குமரியம்மாவோடு முடித்து விட்டு , அசதியில் நன்றாக உறங்கி விட்டாள். ஆபீஸ் வேலை முடித்து, வீட்டிற்கு வந்தவன் தன் அம்மாவின் அறையை பார்த்து அவர் உறங்கி விட்டார் என்று உறுதி செய்து விட்டு மாடிக்கு சென்றான். அங்கு தன் அறையில் உறங்கி கொண்டு இருந்தவளை பார்த்தான்.

அவன் நினைத்தால் , அவள் கேட்ட பொழுது பக்கத்து அறையில் நீ இருக்கலாம் என்று சொல்லி இருக்கலாம், ஆனால் அதை அவன் செய்ய வில்லை . ஏன், என்று அவனுக்கு தெரியவில்லை .

ஒரு பெறுமூச்சை வெளிவிட்டு, குளித்து பின் இரவு உணவு உண்டு விட்டு , அவளை பார்த்தவாறு உறங்கி போனான்.


உள்ளம் தொடரும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top